வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - மதுரை - 26.10.2014
தமிழ்ப் பதிவுலக நண்பர்களுக்கு வணக்கம்... கடந்த வருடம் 2012 ஆகஸ்டு மாதம் 26-ம் நாள் அன்றும், 2013 செப்டம்பர் மாதம் 1-ம் தேதி அன்றும் சென்னையில் நடந்த மாபெரும் பதிவர் சந்திப்பை, அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது. அதே போல்.....
மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...
நாள் : அக்டோபர் 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.
வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்...
படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014
ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :-
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981 - thaiprakash1@gmail.com
நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்க்கண்ட நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெறப் பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்த பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
மூன்றாம் ஆண்டு பதிவர் சந்திப்பிற்கான வேலைகள் ஆரம்பித்து விட்டன...
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை
இடம் : மாரியம்மன் தெப்பக்குளம் மேலவீதியிலுள்ள கீதா நடனகோபால நாயகி மந்திர், மதுரை.
வாருங்கள் வலைப்பதிவர்களே... வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவில் பங்கேற்கும் பதிவர்கள் அனைவரும் கீழுள்ள படிவத்தை நிரப்பி எங்களுக்கு அனுப்பினால் போதும்...
படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் 15.10.2014
ஏதேனும் சந்தேகங்கள், விவரங்கள் தேவைப்பட்டால் :-
திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
தமிழ்வாசி பிரகாஷ் - 9080780981 - thaiprakash1@gmail.com
நூல் வெளியீடு : பதிவர்கள் தங்களின் நூல்களை இந்த மாபெரும் நிகழ்ச்சியில் வெளியிடலாம். அவ்வாறு நூல் வெளியிட விரும்பும் பதிவர்கள் வரும் 10.10.2014 க்குள் விவரங்களை கீழ்க்கண்ட நண்பர்களைத் தொடர்பு கொள்ளுங்கள். சீனா ஐயா (வலைச்சரம்) cheenakay@gmail.com திண்டுக்கல் தனபாலன் - 9944345233 - dindiguldhanabalan@yahoo.com
அன்பளிப்பு : இந்தச் சந்திப்பு மிகவும் சிறப்பாக நடைபெறப் பொருளாதாரம் மிக முக்கியமானது. எனவே நன்கொடை கொடுக்க விருப்பப்படும் உள்நாட்டு, வெளிநாட்டுப் பதிவர்கள், திண்டுக்கல் தனபாலன் மற்றும் தமிழ்வாசி பிரகாஷ் அலைபேசி எண்ணிலோ அல்லது மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ளவும். பணத்தை அனுப்பும் வழிமுறைகள் குறித்துத் தனி அஞ்சலில் தெரிவிக்கப்படும்.
மேலும் தகவல்கள் / விபரங்கள் அடுத்த பதிவில் வெளியாகும். பதிவர்கள் இந்த விபரங்கள் குறித்து தங்களது வலைப்பதிவில் எழுதி அனைத்து பதிவர்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி. சந்திப்போம்.
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
ஆஹா ,மதுரையில் சந்திப்பா ?இப்பவே ஜிகர்தண்டா குடிச்சமாதிரி ஜில்லுன்னு இருக்கே ...என் தளத்திலும் வலைத்தள உறவுகளை வரவேற்று பேனரை உடனே வைத்து விடுகிறேன் !
பதிலளிநீக்குத ம 2
மகிழ்ச்சிகரமான செய்தி! நமக்கு கிட்டாத தாகிவிட்டதே ம்.. ம்... திருவிழா இனிதே நடைபெற என் இனிய வாழ்த்துக்கள் ...!
பதிலளிநீக்குவலைப்பதிவர் திருவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துகள்.!
பதிலளிநீக்குநல்ல செய்தி....எங்க ஊருக்கு வர்ரீங்க வாங்க சந்திக்கலாம்....
பதிலளிநீக்கும்ம்ம்... இந்த விண்ணப்ப பாரம் நிரப்புகிறது நல்ல ஐடியா. ஆக.... பதிவர் சந்திப்பின் ஆரம்பம் களைகட்ட ஆரம்பித்து விட்டது. அனைவரும் இணைந்து கலக்கலாம்...
பதிலளிநீக்குசந்திப்பு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகளும்.....
பதிலளிநீக்குவிழாச்சிறப்புற வெற்றிபெற வாழ்த்துக்கள்..மதுரையில் சந்திப்போம்
பதிலளிநீக்குஅன்பு தனபாலன் ,செய்தி கேட்டு மிக மகிழ்ச்சி. வலைப்பதிவர் மாநாடு மிக நன்றாக நடைபெறும்.நடைபெற வாழ்த்துகள் மா.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநானும் ஒரு வருசமாவது வரமுடியுமானு பாக்கேன்..
சிறப்பாக, பயனுள்ளதாக அமைய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஎனது வாழ்த்துக்கள் எப்போதும் உண்டு தனபால் சார். நானும் ஒரு நாள் இந்த திருநாளை சந்திப்பேன் என்று நம்புகிறேன். அக்டோபரில் தீபாவளிக்கென மிகக் குறுகிய காலம் வந்தாலும் 25ந்தேதி புறப்பட்டுவிடுவதால் வாய்ப்பை இழக்கிறேன். வாழ்க வளர்க.
பதிலளிநீக்குஇனிதே நடை பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதம.4
பதிலளிநீக்குNalla naalil arumaiyana arputhamaana arivippu_vizha sirakka vaazhththukkal6
பதிலளிநீக்குவலைப் பதிவர் சந்திப்பு திருவிழா இனிதாக நடைபெற வாழ்த்துக்கள் தனபாலன்.
பதிலளிநீக்குவலைப்பதிவர் திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு இனிது நடைபெற இனிய நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவேதா. இலங்காதிலகம்.
பதிவர் சந்திப்பு விழா சிறப்பாக நடைபெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவிழா இனிதே நடைபெற எனது வாழ்த்துக்களும் உரித்தாகுக....
பதிலளிநீக்குவிழா சிறக்கட்டும்.
பதிலளிநீக்குபடிவ உறுதி புதிய முயற்சி.
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
நிகழ்வு சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்...
த.ம7வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அப்பா துரை மட்டும் இந்த விழாவிற்கு வந்தால் அவருக்குண்டான அத்தனை செலவுகளுக்கும் நான் ஜாவப்தாரி. வருவீகளா?
பதிலளிநீக்குபதிவர் சந்திப்புக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு-அன்புடன்-
S.முகம்மது நவ்சின் கான்.
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குமீண்டும் உங்களைக் காண்பது மகிழ்ச்சியே!
நலமாயுள்ளீர்களா?
எடுத்த காரியம் யாவும் வெற்றிபெற
இனிய வாழ்த்துக்கள்!
மிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
ஒரு நல்ல சேதியுட்ன் மீண்டும் வலைப்பக்கம் வந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குத.ம.11
விழா சிறப்பாக நடைபெற நல்வாழ்த்துகள்!
பதிலளிநீக்குஇனிய செய்தி. அந்த நாள் என்று வருமோ என்ற ஏக்கத்தை தூண்டுகிறது. மூன்றாம் பதிவர் சந்திப்பு நிகழ்ச்சி இனிதே நடைபெற என்னுடைய வாழ்த்துகள்..! தகவலை பகிர்ந்த DD-க்கு சாருக்கு மிக்க நன்றி..!
பதிலளிநீக்குSir, Thappaana thethi ithu endru achapadugiren, Deepaavalikku ellorum oorukku chendru varuvathaiye virumbuvaargal.
பதிலளிநீக்குAthu mattum illamal ticket kidaippathu migavum kadinam.
Thayavu seithu veru oru thethiyai mudivu seiyungalen !
அடடா..... ஜிகிர்தண்டா குடிக்க முடியாமல் போய் விட்டதே.....
பதிலளிநீக்குதனபாலன் அண்ணா என்ன வாச்சி....? ரொம்ப நாட்களாக உங்களைக் காணவில்லை. நலமா....?
விழா அப்டோபர் மாதம்..... நலமுடன் நடக்கட்டும்.
வாழ்த்துக்கள் அண்ணா.
முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅன்பின் தனபாலன் .. தங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி..
பதிலளிநீக்குஇனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்.
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா இனிதே நிகழ நல்வாழ்த்துக்கள்..
வலைத்தளத்தில் அழைப்பிதழை வைக்க வேண்டும். எனவே படத்தில், வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் நேரத்தையும் எழுதினால் நன்றாக இருக்கும்.
பதிலளிநீக்குமீனாட்சி ஆட்சி செய்யும் மதுரையில் கள்ளழகர் கால் பதிக்கும் மதுரையில் நடைபெறும் இவ் விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅன்புச் சகோதரனின் வருகை கண்டு மகிழ்ந்தேன் !
பதிலளிநீக்குஇன்னல்கள் பறந்தோட எடுத்த காரியம் மகிழ்வூட்ட
கன்னம் புதைத்திடுவான் கணபதியும் காண் விரைந்து !
பதிவர்கள் சந்திர்க்கும் இந்நாள் விழாக் கோலம் பூண்டிட வாழ்த்துக்கள் சகோதரா .
மதுரையில் வலைப்பதிவர் திருவிழா - 2014 இனிதே நடைபெற எனது வாழ்த்துகள்! வலைப்பதிவர் சந்திபில் தமிழைப் பேணும் எண்ணங்களைப் பரிமாறுவீர்கள் என நம்புகிறேன்.
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு பெருவிழா சிறப்புற நடைபெற...
பதிலளிநீக்குநல்வாழ்த்துக்கள்!
அன்பன்,
அ. முஹம்மது நிஜாமுத்தீன்.
கலந்து கொள்ளும் யாவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குசிறப்பாக நடைபெற என் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள் ! ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்கள் !. ஏதாவது ஒரு வருடமாவது கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
அன்புடன்
பக்கிரிசாமி N
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
பதிலளிநீக்குமதுரையில் சந்திப்போம்
விழா வெற்றியடைய வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதலிரண்டு சந்திப்புகளிலும் கலந்து கொண்டேன். இந்தமுறையும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.
பதிலளிநீக்குஎல்லாப் பதிவர்களையும் சந்திக்க ஆவல்.
மருதைக்காறய்ங்களா கலக்குங்கய்யா... கூட இருக்கோம்.
பதிலளிநீக்குஇப்படிக்கி,
முன்னாள் மருதைக்காரன் :-))
அருமை,,, மீண்டும் ஒரு முறை அனைவரையும் சந்திக்க ஆவலாய் உள்ளேன். விழா சிறப்புற நடந்தேற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குவிழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஆக்கமும் ஊக்கமும் அள்ளித்தரும் தாங்கள்
பதிலளிநீக்குமுன்னின்று நடத்தும் இவ்விழா சிறப்பாக நடைபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
மிக்க மகிழ்ச்சி! ஆனால், நீங்களே இதைப் பதிவாக வெளியிட்டு விட்ட பிறகு, என்னைப் போல் நேற்று வந்த சிறுவர்கள் இதைத் தன் வலைப்பூவில் பகிர்வதால் இது புதிதாக யாருக்குப் போய்ச் சேர்ந்து விடப் போகிறது :-D ஆனாலும், பதிவன் எனும் முறையில் இந்த விழாவுக்கு நான் இதையாவது செய்ததாக இருக்கட்டும்; கண்டிப்பாக நானும் என் வலைப்பூவில் இந்தச் செய்தியைக் காட்சிப்படுத்துகிறேன். விழாவும், விழா நோக்கமும் வெற்றியடைய அன்பார்ந்த நல்வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குசந்திப்பு இனிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபதிவர்கள் கவனிக்கவும் ! : சிகரம் - வலை மின்-இதழ் - 003
பதிலளிநீக்குபதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - இப்ப என்ன சொல்வீங்க?
பதிலளிநீக்குமிக்க சந்தோஷம்...
பதிலளிநீக்குஅக்டோபரில் வர முடிந்தால் நானும் அங்கிருப்பேன்...
விழா சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா...
நானும் கோபாலும் வர்றோம்.
பதிலளிநீக்குஜோதிஜி, நம்ம செலவையும் பார்த்துக்குவார்தானே?
கலக்கிடுவோம் நண்பா!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
கூடல் மதுரையிலே கோலத் தமிழ்ப்பதிவர்
நாடல் நலமென்ன? நற்றமிழே! - ஆடலுடன்
பாடல் மணக்கட்டும்! பண்பு செழிக்கட்டும்!
தேடல் தொடரட்டும் தோ்ந்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம்
பதிலளிநீக்குதமிழ்மணம் 20
படிவம் பூர்த்தி செய்யப்பட்டது..... வருகையை உறுதி செய்துகொள்ளுங்கள்....
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற அனைவரது வாழ்த்துக்களுடன் அன்பனின் வாழ்த்துக்களும்.
பதிலளிநீக்குநல்ல சங்கதி...
பதிலளிநீக்குஇந்த முறை நழுவ விட்டு விடக்கூடாது என்று உறுதியாக இருக்கின்றேன்...
ஆவல்.
பதிலளிநீக்குமூன்றுமுறை விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பித்து விட்டேன். ஆனாலும் எந்தவித மறுமொழியும் இல்லாமல், படிவம் முழுக்க காப்பி கலரால் நிரம்பி நிற்கிறது இதனை படிவம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக எடுத்துக் கொள்ளலாமா?
பதிலளிநீக்குஅய்யா தமிழ்இளங்கோ அவர்களின் சந்தேகம்தான் எனக்கு. காப்பி கலர் எதுக்கு? காப்பி ஆயிருச்சுன்னு சிம்பாலிக்கா சொல்றீங்களா? எதையாவது சொல்லலாம்ல டிடி சார்?
பதிலளிநீக்குதி.தமிழ் இளங்கோ ஐயா அவர்களுக்கும், நா.முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும் - படிவத்தை நிரப்பி "Submit" என்பதை சொடுக்கியவுடன் சேமிப்பு ஆகி விடும். படிவம் முழுவதும் காப்பி கலராக மாறாது. மீண்டும் படிவத்தின் மேலே சென்று பார்த்தால் "தங்களது வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏதேனும் உதவியோ/சந்தேகமோ இருப்பின் எங்களைத் தொடர்பு கொள்ளவும். நன்றி "Edit your response" "Submit another response " என்பதை காணலாம். நன்றி ஐயா...
பதிலளிநீக்குவிழா சிறப்புற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமரியாதைக்குரியவர்களே,வணக்கம். மதுரையில் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழா அறிவை பெருக்கும்விழாவாக,புதிய நண்பர்களை இணைக்கும் விழாவாக,சமூகம் சார்ந்த பயனுள்ள பல விசயங்களை அறிந்துகொள்ளும்விழாவாக,தமிழை இணையத்தில் எளிதாக வெல்லும் விழாவாக அமையட்டும் என வாழ்த்துகிறேன்..என அன்பன் பரமேஸ்வரன் டிரைவர்-http://www.konguthendral.blogspot.com // www.facebook.com - parameswaran driver // Mobile +91 9585600733
பதிலளிநீக்குநண்பர்கள் அனைவரையும் நேரில் சந்திப்பதில் மகிழ்ச்சி. விழா சிறப்பாக நடந்தேற எனது வாழ்த்துக்கள் .. உங்கள் அனைவருடன் நானும்
பதிலளிநீக்குவிழா மிகவும் சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துகள் ஐயா!
பதிலளிநீக்குவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
பதிலளிநீக்குநண்பர்களே நாம் ஒன்றாக கூடி மகிழ்வோம் அதேவேளையில் நமக்கு கல்வியும் அனுபவமும் கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் நலமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான கருத்து
தனிமனிதன் ஒருவரை அல்லது ஒரு அமைப்பை சார்ந்திருப்பது என்பது இன்று அவசியமாகின்றது காரணம் தன் தேவைகளைபெற வழிகாட்ட உதவி செய்ய என்று பல
இந்த விழாவில் ஓரிரு மணித் துளிகள் இப்படி இருக்கலாமா என்று பாருங்கள்
ஒவ்வொரு தனி மனிதனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் மத்திய மாநில அரசின் பயன்களை இருந்த இடத்தில் இருந்தே ஒரு கடிதம் மூலம் பெற தகவல் உரிமை சட்டம் இருக்கு
ஒவ்வொரு அரசுத் துறையும் அதன் செயல்பாடுகளும் பயன்பாடுகளும்
ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் நம் தேவைக்கு கோரிக்கை அல்லது புகார் விண்ணப்பம் யாரிடம் அளிக்க வேண்டும் அவ்வின்னப்பத்தின் மீது எத்துனை நாட்களுக்குள் தீர்வு செய்யவேண்டும் உத்தரவு இட வேண்டும் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் அல்லது புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் அவ்வாறு அவ்விண்ணப்பம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர் யார் மேற்ப்படி அலுவலர் நடவடிக்கை எடுக்க தவறும்போது அல்லது வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் பொது அல்லது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளபோது யாரிடம் புகார் அளிக்க வேண்டும் அவ்வாறு புகார் அளித்தால் எத்துனை நாட்களில் விசாரித்து என்ன என்ன தண்டனைகள் கிடைக்கும் என்ற விபரம்
அரசுத் துறைகளுக்கு மனுக்கள் எழுதுவது எப்படி எழுத்து பயிற்சி ?
நாம் மகிழ்வுடன் கொண்டாடி இந்த விபரங்களையும் அறிந்துகொள்ள உதவி செய்தால் இந்நிகழ்ச்சி ஒவ்வொருவருக்கும் வழிகாட்டியாகவும் வாழ்வின் அங்கமாகவும் இருந்து என்றும் போற்றப்படும் என்று நம்புகின்றேன்
முடியுமா என்று பாருங்கள் முடியும் என்றால் இது தொடர்பாக தமிழகம் முழுவதும் இலவசமாக உதவி மையங்கள் வைத்து உதவி செய்துவரும் இந்தியன் குரல் அமைப்பின் தென்மண்டல அமைப்பாளர் பயிற்சியாளர் திரு ராமகிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொள்ளுங்கள் தொடர்புக்கு 9865577021
சமூக நலன் மக்கள் நலனுக்காக சில வேளைகளில் இனிப்புடன் கலந்து சில மருந்துகளும் கொடுப்பது சமூக ஆர்வலர்களின் கடமையாகின்றது.
அன்புள்ள திருமிகு.திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களுக்கு,
பதிலளிநீக்குவணக்கம். மதுரை விழாவில் சந்திப்போம். மிகவும் பயனுள்ள பல அரிய தகவல்களைத் தருகிறீர்கள். உலகம் வாழ்த்தும் உன்னதப் பணியைச் செய்கிறீர்கள். காலத்தின் கல்வெட்டில் கணினியின் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட்டீர்கள்...உங்கள் புகழ் என்றும் அழியாமல் நிலைத்திருக்கும்...வாழ்த்துகள்.
எனது ‘வலைப்பூ’ பக்கத்தைப் பார்வையிட்டு கருத்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில்,இணையத்தில் இன்பத்தமிழ் வளர்க்கும் வலைப்பதிவர் விழா..!
பதிலளிநீக்குநினைத்தாலே இனிக்கிறது..!
சிந்திப்போம் மதுரையில்..!