என்றும் துணை எது...?
இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க... எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க... நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க... நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க... நம் பூமி மேலே புது பார்வை கொள்க... நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க... கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க... பாறைக்குள் வேரைப்போலே வெற்றி கொள்க... மெட்டுப் போடு... மெட்டுப் போடு... என் தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு... மெட்டுப் போடு மெட்டுப் போடு... அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு...
⟪ © டூயட் ✍ வைரமுத்து ♫ A.R.ரகுமான் 🎤 S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா @ 1994 ⟫
இன்றைக்கு என்ன கற்பனையோட வந்திருக்கே மனசாட்சி...?
பேனா, பேப்பர் இல்லாமல் மனதிலேயே ஓவியங்கள் வரைய முடியாதா...?
ஓ...! கனவுகள் போல மறைந்து விடும்...! பேப்பரோ, சுவரோ - அவைகள் அடிப்படைகள்... எப்படி அஸ்திவாரம் இல்லாமல் வீடு கட்ட முடியாதோ, வீடு இல்லாமல் மனிதன் வாழ முடியாதோ, வலைத்தளம் மூலமும் நம் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள முடியாதோ - அது போல் தான் இதுவும்...! எதற்கும் அமைப்பு ரீதியான ஒரு அடிப்படை இருந்தால் தான், அந்தப் பின்னணியில் எதையும் உருவாக்க முடியும்....
அமைப்பா? அடிப்படையா? ஒன்னும் புரியலே, கொஞ்சம் விளக்கம் தேவை...
ஒரு நிறுவனம் என்றால் அதில் வேலை செய்ய ஒரு கட்டடம் தேவை... பள்ளி என்றால் மாணவ மாணவியர்கள் சென்று கல்வி கற்க ஒரு கட்டடம் தேவை... வழிபாடு செய்ய வேண்டுமென்றால், கோயிலோ, மசூதியோ, தேவாலயமோ தேவை... வலைத்தளம் உட்பட இன்னும் பலவற்றுக்கும்...
கட்டடங்களே இல்லையென்றால் அலுவலகங்கள் இயங்காதா...? கட்டடங்கள் இல்லையென்றால் கல்வியே வளராதா...? கட்டட அமைப்பு இல்லையென்றால் பக்தி செழிக்காதா...? அப்படியென்றால் கட்டடம் தான் அலுவலகமா...? அதில் உள்ள மனிதர்கள் இல்லையா...? கட்டடம் தான் கல்வியா...? படிப்பு கிடையாதா...? கோயிலோ, மசூதியோ, தேவாலயமோ அங்கும் கட்டடம் தான் பக்தியா...? கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால் இவையெல்லாம் எதற்கு...? ஸ்ஸ்ஸ்.... ப்பா...!
எதுவும் இல்லையென்றாலும் எதனையும் வளர்த்து விடலாம் சிந்தனையின் மூலமாக... ஆனால் அமைப்பு என்பது இல்லாமல் போய் விடும்... புள்ளிகள் இல்லாமல் கோலமிட முடியாது... அப்படியான கோலங்கள் வரைபடம்... வரைபடங்கள் இல்லாமல் அழகான கட்டடங்கள் எழுப்ப முடியாது... அப்புறம் கடவுள் எங்கும் இருந்தாலும், அவருக்கான ஒரு இடம் எழுப்பி வழிபட்டால் தான் நமக்குள் அமைப்பு ரீதியான ஒரு ஒழுங்கு உண்டாகும்... தியானம் மூலமாகக் கூட வழிபாடு நிகழ்த்தலாம் என்றாலும், அதற்கும் சில முன்னேற்பாடுகள் தேவை... எங்கோ எப்போதோ படித்த ஒரு கதை :
ஒரு குருவிடம் சீடர் கேட்டார், "வீட்டில் பறவைகள் வளர்க்க வேண்டும், அவற்றை வளர்க்கக் கூண்டுகள் அவசியமா...?" "கூண்டு என்பது ஒரு அடிப்படைத் தேவை... கூண்டுகளை ஏற்பாடு செய்தால் தான் பறவைகளை அங்கு வரவழைக்க முடியும்..." என்றார் குரு... "வெறும் கூண்டு, பறவைகளை வரவழைத்து விடுமா...?" குருவிடம் கேட்டார் சீடர்... "முதலில் ஒரு வெறும் கூண்டை வாங்கி வீட்டில் வை, கொஞ்ச நாள் கழித்து என்னிடம் வா...!" என்றார் குரு... சீடர் வீட்டில் வெறும் கூண்டை வாங்கி வைத்தார்... வீட்டிற்கு வரும் நண்பர்களும் உறவினர்களும், "கூண்டு அழகாக இருக்கிறதே, இதிலிருந்த பறவைகள் எங்கே...? பறந்து போய் விட்டனவா...?" என்று நாள்தோறும் விசாரிக்கத் தொடங்கி விட்டனர்... நாளடைவில் அவர்களின் நச்சரிப்பு தாங்க முடியாமல் பறவைகள் வாங்கிக் கூண்டில் வைத்து வளர்க்கத் தொடங்கி விட்டார் சீடர்... கேள்விப்பட்ட குரு சொன்னார், "எதற்கும் கூண்டு அவசியம், பறவைகள் தாமாக வந்து விடும்...!"
ஆக பறவைகளுக்குச் சுதந்திரம் போச்சி...! இதற்குப் பதில் வீட்டில் மரங்கள் வளர்க்கலாமே... பறவைகள் தாமாக வரும்...! எதற்கும் ஒரு அடிப்படை அமைப்பு தேவை என்பதற்காகச் சொல்லப்பட்ட கதை தானே...?! கல்வி வளர்க்க, பக்தி வளர்க்க, தியானம் வளர்க்க, அலுவலகம் இயக்க, குடும்பம் நடத்த - எல்லாவற்றுக்கும் அடிப்படைகளை அமைத்துக் கொண்டால் போதும்... எல்லாவற்றிலும் வெற்றி காணலாம் என்பதெல்லாம் சரி... இந்த ஒழுங்கு → ஆசிரியர்கள் இல்லாத வகுப்பு நேரம் இல்லையென்றால் மாணவர்களுக்கு மகிழ்ச்சி... மேலதிகாரிகள் இல்லாத அலுவலகமென்றால் அலுவலர்களுக்குச் சந்தோசம்... அம்மா அப்பா வெளியே சென்று விட்டால், வீடுகளில் பிள்ளைகளுக்குக் கொண்டாட்டம்... வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனையோ அறிவுரையோ சொல்லும் மூத்தோர் வீட்டில் இல்லையென்றால் ஹைய்யா... எல்லோருக்கும் மகிழ்ச்சியாக இருக்கு...!
இது நடைமுறை வாழ்வில் நாம் காணும் மனிதர்களின் மன இயல்புகள்... இந்த மாதிரியான கட்டுப்பாடற்ற வாழ்க்கையில் களிப்புறும் மனோபாவம் நமக்குள் எப்படி வந்தது...? யோசிக்க வேண்டாமா...?
இதுதான் சுதந்திரம்... கட்டுப்பாடற்ற ஜகஜக ஜாலி சுதந்திரம்...!
சுதந்திரம் கட்டுப்பாடின்றிக் கண்டபடி இருப்பது தான் என்று கருதி விட்டால், வாழ்க்கையின் நிலைமையை என்னவென்று சொல்லுவது...? யாராவது வேகமாகச் செல்ல வேண்டும் என்பதற்காக, பிரேக் இல்லாத வாகனத்தில் பயணம் செய்வோமா...? கதவில்லாத வீடுகளில் குடித்தனம் புகுவோமா...?
அப்படியானால் கட்டுப்பாடு என்றால் என்ன? சுதந்திரம் என்பது தான் என்ன?
இயற்கை சுதந்திரமானது தான்... மலைகளில் காடுகளில் உலவும் உயிரினங்களும் சுதந்திரமானது தான்... ஆனாலும் பூமியில் பிறந்த அனைத்தையும், இயற்கையின் ஈர்ப்பு விசை ஒழுங்கு ஒன்று இழுத்துப் பிடித்துக் கொண்டுதான் இருக்கிறது... ஏதோ ஒரு ஒழுங்குக்குள் தான் இந்த உலக நடப்பே இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்...
⟪ © சாமுராய் ✍ வைரமுத்து ♫ ஹாரிஸ் ஜயராஜ் 🎤 ஹரிஹரன், திப்பு @ 2002 ⟫
உப்புக் கடலோடு மேகம் உற்பத்தி ஆனாலும், உப்புத் தண்ணீரை மேகம் ஒரு போதும் சிந்தாது...! மலையில் விழுந்தாலும் சூரியன் மரித்துப் போவதில்லை, நிலவுக்கு ஒளியூட்டி தன்னை நீடித்துக் கொள்கிறதே...! மேகமாய் நானும் மாறேனோ...? அதன் மேன்மை குணங்கள் காண்பேனோ...? சூரியன் போலவே மாறேனோ...? என் ஜோதியில் உலகை ஆளேனோ...? ஜனனம் மரணம் அறியா வண்ணம் - நானும் மழைத்துளி ஆவேனோ...? மூங்கில் காடுகளே - வண்டு முனகும் பாடல்களே... தூரச் சிகரங்களில் - தண்ணீர் துவைக்கும் அருவிகளே... இயற்கை தாயின் மடியில் பிரிந்து, எப்படி வாழ இதயம் தொலைந்து...? சலித்துப் போனேன் மனிதனாய் இருந்து, பறக்க வேண்டும் பறவையாய் திரிந்து... திரிந்து...பறந்து... பறந்து... நம்முடைய சராசரி நடைமுறை வாழ்க்கைக்கு...
இதோ நானே வர்றேன்... எப்போதும் வகுப்பறையில் கண்டிப்பாக இருக்கும் ஆசிரியர், எப்போது அலுவலகத்தில் உத்தரவுகளையே போட்டுக் கொண்டிருக்கும் மேலதிகாரி, எப்போதும் வீட்டில் அறிவுரைகளை மட்டுமே வழங்கி அலுப்பை உண்டுபண்ணும் மூத்தோர்கள் - இவர்களிடமிருந்து விடுபட வேண்டுமென அகப்பட்டவர்கள் நினைப்பதில் தப்பில்லையே... ஆனால் ஒழுங்குக்குள் சிக்காமல் எப்போதும் நினைத்தது நினைத்தபடி இருக்க வேண்டுமென்று நினைக்கிற "விடுதலை" மனோபாவத்திலும் தவறேதுமில்லையே... ஹேஹே... எப்பூடி...?
ஒழுங்குக்குள் இல்லாமல் நாசமாகப் போவதென்றால் தவறில்லை தான்... உலகத்திலுள்ள அனைத்து கட்டுப்பாடுகளிடமிருந்தும் வெளியேற வேண்டும் என நம் மனது நினைத்தாலும், நமக்குள் நாமே அடிப்படையான அமைப்புடன், ஒரு ஒழுங்குக்குள் இயங்குகிறோமா என்று அடிக்கடி நினைத்துப் பார்த்து இயங்கினால், நம் மனக்கட்டுப்பாட்டை மீறி, வேறு புற கட்டுப்பாடுகள் எவையும் நம்மை ஏதும் செய்து விட முடியாது... எத்தகைய துன்பம் வந்தாலும் கட்டுப்பாடு எனும் ஒழுக்கம் தவறினால், கடமையும் கண்ணியமும் தவறி விடும்... ஒழுக்கமான கட்டுப்பாடே என்றும் துணை...!
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. (குறள் 132)
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?
வளர்ந்து வராத பிறை இல்லை, வடிந்து விடாத நுரை இல்லை, திரும்பி வராத பகல் இல்லை, திருந்திவிடாத மனம் இல்லை, ஒரு நாள் சுவைப்போம் என்று நினைத்தால்...2 உயிரைச் சுவைக்கும் பொய் இல்லை - இதை இன்பம் என்பது இழுக்காகும்... நீ குளித்தால் கங்கை அழுக்காகும்... ஒரு பண்பாடு இல்லையென்றால் பாரதம் இல்லை... நம் பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை...
⟪ © ராஜா சின்ன ரோஜா ✍ வைரமுத்து ♫ சந்திரபோஸ் 🎤 K.J.யேசுதாஸ் @ 1989 ⟫

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
ஒருவன் ஒழுக்கமாக இருந்தால்தான், சுதந்திரம் கிட்டும். சுதந்திரமாக இருப்பதால் ஒருவனின் ஒழுக்கம் கெட வாய்ப்புண்டு.
பதிலளிநீக்குஆஹா ! டி.டி பாட்டுல தப்பா? முதல் பாட்டு டூயட் படம்னு நினைக்கிறேன். தெரியும். நாங்க சரியா படிக்கிறோமான்னு கண்டுபிடிக்கத்தான் தப்பா எழுதியிருகீங்க !
பதிலளிநீக்குஉண்மைதான். கட்டுப்பாடில்லாத சுதந்திரம், அளவுக்கு மிஞ்சினால் அமிர்தம் நஞ்சாகும் கதையாகிவிடும். அகத்திலோ, புறத்திலோ கட்டுப்பாடு தேவைதான்.
அருமையான பதிவு.
நன்றி... மாற்றி விட்டேன்...
நீக்குயானைக்கும் அடி சறுக்கிவிட்டதா?
நீக்குசுய கட்டுப்பாடு இருந்தால் அனைத்தையும் வெல்லலாம்.
அருமையான பதிவு ஐயா
பதிலளிநீக்குஅளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே
தம 4
பறவைகள் தானாக வந்து தங்கினால் கூட்டுக்கழகு. வெறும் கூடு மட்டும் இருக்கிறதே என்று பறந்து திரியும் பறவைகளை வாங்கி அங்கு அடைக்கலாமோ...!
பதிலளிநீக்கு//ஜகஜக ஜாலி சுதந்திரம்//
:)))))
கனமான பதிவு.
மனக்கட்டுபாடுதான் ஒழுக்கமான வாழ்விற்கு வழி என்பதை மிக அழகாகச் சொன்னீர்கள் தனபாலன் அண்ணா. அருமை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஒழுக்கமான கட்டுபாடே என்றும் துணை!
பதிலளிநீக்குஉண்மை. எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒழுக்கத்தை கடைபிடிக்கவேண்டும் நமக்கு மனக்கட்டுபாடு வேண்டும் என்பதை அழகான பாடல்., குறள் வழியும் சொன்னமுறை அருமை.
வாழ்த்துக்கள்.
குரு சிஷ்யன் கதை நல்ல பாடம்.. வழக்கம் போல் நல்ல பதிவு DD..!
பதிலளிநீக்குமனவெளியிலேயே கற்பனையில் ஒருவர் ஒரு கோவில் எழுப்ப அதன் கும்பாபிஷேகத்துக்கு முன்னுரிமை கொடுத்து இறைவனே வந்திருந்ததாகப் படித்திருக்கிறேன் , DDயின் பதிவு என்றால் திரைப்பாடல்களும் திருக்குறளும் நிச்சயம் இருக்கும் . அதுவே அவரது ட்ரேட் மார்க்...! நானுமொரு பறவையின் கூட்டை ஒரு மரத்தில் வைத்திருக்கிறேன். பறவைகள் வருவதில்லை...!
பதிலளிநீக்குஆஹா, அந்த குரு, சீடர் கதை நல்ல நகைச்சுவை. ஆனால் உண்மையும் கூட.
பதிலளிநீக்குதனி மனித ஒழுக்கத்தைப் பற்றி மிக அழகாக எடுத்துரைத்தீர்கள்.
//பாறைக்குள் வேரைப் போல வெற்றி கொள்க//
பதிலளிநீக்குநெஞ்சிக்குள் ‘சக்’ என்று ஒட்டிக்கொண்டது.
மரங்கள் வளர்க்கலாமே ,பறவைகள் தாமாக வரும் ...உண்மைதான் !
பதிலளிநீக்குமனதில் ஒழுக்கத்தை வளர்த்தால் வாழ்க்கை ஜாலிதான் !
த ம 10
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
ஒருவருடைய நடத்தையே அவரைப்பற்றிய தகவல்சொல்லும்...மிக அருமையாக நல்ல விளக்கத்துடன் சொல்லியுள்ளீர்கள் வள்ளுவர் கூட ஒழுக்கம் பற்றி சொல்லியுள்ளார்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
த.ம 11வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கட்டுபாடுகளும் வரமுறைகளும் அவசியம் தான் ஆனால் அதுவும் ஒரு ஒரு அல்லைக்குள் இருக்க வேண்டும்... அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆகாததுதானே அண்ணா.... நீங்கள் கூறியதுபோல் மனக் கட்டுப்பாடு என்று ஒன்று இருந்து விட்டால் வேறு எதுவுமே தேவை இல்லைதான்
பதிலளிநீக்குசுதந்திரம் கட்டுப்பாடின்றிக் கண்டபடி இருப்பது தான் என்று கருதி விட்டால், வாழ்க்கையின் நிலைமை வல்லரசாக மாறாது..
பதிலளிநீக்குவளரும் நாடாகத்தான என்றும் இருக்கும் ..
கட்டுப்பாடு அவசியம்..!
உண்மைதான்.
பதிலளிநீக்குFREEDOM IS RESPONSIBILITY.
இது பலருக்குப் புரிவதில்லை.
உண்மைதான் மரங்கள் வளர்த்தால் பறவைகள் தானாக வரும்... பறவைகளின் சுதந்திரமான வாழ்க்கைக்கும் மனித தொடர்புக்கும் ஒருபாலமாக அமையும் என்ற நிதர்சனமான உண்மையை அழகாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்..
பதிலளிநீக்குஆனால் ? இன்றைய மனிதன் மரத்தையும் அழிக்கிறான்...
பறவைகளின் சுதந்திரத்தையும் (சிறகொடித்து) பறிக்கிறான்...
ஒழுக்கமான கட்டுப்பாடே என்றும் துணை! என்ற கோட்பாட்டிற்கு நீங்கள் தந்த சின்னச் சின்ன தத்துவங்கள் நல்ல விளக்கம்!
பதிலளிநீக்குத.ம.12
தனிமனித் ஒழுக்கம் என்பது ஒரு தவம் போன்றது.சுதந்திரம் என்பது தவப்பலனாக கிடைக்கும் வெகுமதி
பதிலளிநீக்குஎப்போதும் போலவே அருமை. இம்மாதிரியெல்லாம் உங்களால்தான் எழுத முடியும் :)
பதிலளிநீக்குஒழுக்கமும் சுய கட்டுப்பாடும் இரண்டு கண்களாக வாழப் பழக வேண்டும்.
பதிலளிநீக்குஅருமையான பாடல்களும் குறள்களும் மிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள் சகோதரரே!
என்னே ஓரு அருமையாக எழுதியுள்ளீர்கள் டிடி.
பதிலளிநீக்குஅப்பப்பா நல்ல சொற்பொழிவாளர் போங்க!
மிக மிக ரசித்து வாசித்தென் இனிய நன்றியுடன் வாழ்த்தும்.
வேதா. இலங்காதிலகம்.
பதிலளிநீக்குதங்கள் பதிவை "வெற்றி பெறப் படிப்போம் வாங்க…" என்ற தலைப்பில் அறிமுகம் செய்துள்ளேன்.
http://mhcd7.wordpress.com/2014/07/24/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5/
சிறந்த வழிகாட்டல்
பாராட்டுகள்
//ஒழுக்கமான கட்டுப்பாடே என்றும் துணை//
பதிலளிநீக்குஉண்மையானது, சிறக்கச் சொன்னீர்கள். நன்றி.
வாழ்வியல் நுட்பங்களை அழகாக உரைத்தீர்கள் நண்பரே.
பதிலளிநீக்குவரவர உங்கள் தொல்லை தாங்க முடியவில்லை நண்பரே! எடுத்ததும் ஒரு அழகான திரைப்பதலி அறிமுகப்படுத்துகிறீர்கள். அதைச் சொடுக்கினால் எங்கோ அழைத்துக்கொண்டு போய்விடுகிறது. அடுத்த பத்தியிலுள்ள உங்கள் அழகான கருத்துக்களைப் படிக்கமுடியாமல் போய்விடுகிறது. சரி, கருத்துக்களை மட்டுமே படிக்கலாம் என்றால், ஒரு பத்தியிலுள்ள கருத்தைப் படித்ததுமே அது, மனதைச் சிந்திக்கத்தூண்டிவிடுகிறது. மற்ற பத்திகளைப் படிக்க நேரமில்லாமல் போய்விடுகிறது. 'தோள் கண்டார், தோளே கண்டார்' என்ற கதைதான் போங்கள்!
பதிலளிநீக்குகட்டுப்பாட்டுடன் கூடிய சுதந்திரமே சாலச்சிறந்தது என்பதை அருமையாக பாடல்கள் குறள் மூலம் விளக்கிய விதம் அருமை, வாழ்த்துக்களுடன் ....
பதிலளிநீக்குகட்டுப்பாடற்ற வாழ்க்கையில் மனோபாவத்தில் களிப்பேறும் என்பது உண்மை தான்.
பதிலளிநீக்குஆனால் - அது களிப்பு அல்ல!.. களிம்பு - என்பதை உணரரும் போது வாழ்க்கை வேறு திசையில் வெகு தூரத்தில் போய்க் கொண்டிருக்கும்!.
ஒழுக்கம் ஒன்றே நல்வாழ்க்கையைத் தரும்!..
இனிய பதிவு.. வாழ்க நலம்!..
கட்டுப்பாடும் சுதந்திரத்தின் எல்லை பற்றியும் அருமையான பகிர்வு சகோ..
பதிலளிநீக்குசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு. :)
நல்ல பெயர் எடுக்க நாலு வருடம் ஆகும்
பதிலளிநீக்குகெட்ட பெயர் எடுக்க நாலு நொடி போதும்!.
கட்டுரை அருமை DD!.
சிறப்பான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குபோனால் வராத உயிரைவிட ஒழுக்கம் உயர்ந்தது!
பதிலளிநீக்குமனக்கட்டுபாடுபற்றி மிக அருமையாக சொன்னீர்கள்.
பதிலளிநீக்குகட்டுப்பாடு இல்லா வாழ்க்கை வாழ்வை அழித்துவிடும்! இதை சிறந்த உதாரணங்களுடன் விளக்கியமை சிறப்பு! நன்றி! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅளவுக்கு மீறிய சுதந்திரம் மனசுக்குள் தந்திரத்தைச் சொல்லித் தரும்...
பதிலளிநீக்குசமுதாயச் சிக்கலுக்கு ஆரம்பப் புள்ளி வைக்கும்.
இறுக்கிப் பிடித்தால் இறந்து விடும்.....இளக்கிப் பிடித்தால் பறந்து விடும் சுதந்திரப் பறவை , என்றுமே
யாருக்கும் ஒரு மந்திரப் பாவை..!
வழக்கம் போல அருமையான பதிவு...!
ஜெயஸ்ரீ ஷங்கர்
a t t a g a a s a m.. dd sir..
பதிலளிநீக்குசுதந்திரமோ கட்டுப்பாடோ அளவோடு இருந்தாலே இன்பம் தான்.
பதிலளிநீக்குசுயகட்டுப்பாடு இருந்தால் சுதந்திரம் தானாகவே ஒரு கட்டுக்குள் இருக்கும்.
அருமையான பதிவு. வாழ்த்துக்கள்......
கட்டுப்பாடு அவசியம். சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும். பதிவு அருமை.
பதிலளிநீக்குசிந்திக்க வைக்கும் குட்டிக்கதையோடு, மிக அவசியமான பதிவு ! நன்னடத்தையும் ஒழுக்கமுமே ஒருவரை உயர்த்தும் என்பதை மிக தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
பதிலளிநீக்குநன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
பதிலளிநீக்குவணக்கம்!
கடமையும் கண்ணியமும் நற்கட்டுக் பாடும்
உடைமையாய்க் கொண்டால் உயர்வு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
கடந்த ஒருமாதமாவே என் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கும் பாடலை இறுதியில் பதிவு செய்ததை கண்டதும் இன்னும் ஆழமாகவே ஒட்டிக்கொண்டது மனதில்..
பதிலளிநீக்கு""ஒரு பண்பாடு இல்லை என்றால் பாரதம் இல்லை, பண்போடு வாழ்ந்திருந்தால் பாவமும் இல்லை""
(பெருவாரியானவர்கள் பண்பாட்டையும் மறந்து விட்டனர் பாரதத்தையும் மறந்து விட்டனர்)
மற்றவர்களுக்கு அதாவது ஒழுங்கீனமாக நடப்பவருக்கு அறிவுரை கூறுவதை விட, அவரின் செயல்களை கண்டும் காணாது இருப்பது நம் மனதிற்கு நல்லது. நாம் அக்கறையாக கூறுவதை அவர்கள் உதாசீனப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இன்றைய சமுதாயத்தில்..
குழந்தைகளுக்கு நல்லொழுக்கம் புகட்ட அவர்களுக்கு அறிவுரைகள் கூறுவதை விட்டுவிட்டு, நம் செயல்களால் அவர்களிடம் மாற்றம் கொண்டு வருவது எளிதாயிருக்கும். நாம் செய்யும் சிறு தவறுகளோ, வார்த்தை பிறழ்வுகளோ கூட அவர்களிடம் மிக ஆழாமான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்.
சிறப்பான பதிவுகளை வழங்கி வருகிறீர்கள்... உங்களுக்கு நன்றி சொல்வதை தவிர இந்த தம்பியிடம் ஒன்றும் இல்லை..
மீண்டும் நன்றி..
கட்டுப்பாடு வேண்டும்
பதிலளிநீக்குசுய கட்டுப்பாடு அதை விட வேண்டும்
பாடலும்,கருத்தும் பிரமாதமுங்கோ...
நடை நயமாய், நடந்துவருகிறது உங்கள் கைபிடித்து.வாழ்த்துக்கள்.
சகோதரி துளசி.
ஒரு மனிதனுக்கு கடமை கண்ணியம் கட்டுபாடு அவசியம் தேவை என்பதை உணர்த்திய பதிவு !
பதிலளிநீக்குகண்ணும் கருத்தும் ஒன்றுபட எங்களை இழுத்துச்செல்வது தங்களின் பதிவுகள் என்பதற்கு தாங்கள் தரும் இணைப்புகளும் உதாரணங்களுமே சாட்சி. நன்றி.
பதிலளிநீக்குஇன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியமான பதிவு. நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குசுதந்திரம் என்பது ஒரு வரையறைக்குள் என்பதை அழகாகச் சொல்லியிருக்கீங்க...
பதிலளிநீக்குஉங்கள் சகோதரி இறைவனடி சேர்ந்ததை ரூபன் பதிவு மூலம் அறிந்தேன். அவர்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த வருத்தங்கள். எல்லோருக்கும் மன ஆறுதலை இறைவன் அருள வேண்டும் .
பதிலளிநீக்குஅவர்கள் ஆதமா சாந்தி அடைய பிரார்த்தனைகள்.
சகோதரரே!
பதிலளிநீக்குதங்களின் சகோதரி இறைவனடி சேர்ந்துவிட்டதாக அறிந்தேன்...
மனதிற்கு மிகவும் கவலைதரும் செய்தி.
உங்கள் சகோதரியின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தித்து அவர் பிரிவால் துயருறும் அவர் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் ஆறுதலைத்தர எல்லாம் வல்ல இறையருளை வேண்டுகிறேன்!
கவிஞர் ரூபன் பதிவின் மூலம் உங்களது அன்பு சகோதரியின் மறைவு குறித்து அதிர்ச்சியான செய்தி! உங்களது சகோதரியின் ஆன்மா அமைதியடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்!
பதிலளிநீக்குதங்களின் சகோதரி இறையடி சேர்ந்தார் என்ற செய்தி கேட்டேன். மிகவும் கடினமான தருணங்கள். அன்னாரது ஆன்மா அமைதியடையவும், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தார்க்கு ஆறுதல் தரவும் ப்ரார்த்தனை செய்கிறேன்.
பதிலளிநீக்குபதிவர்கள் கவனிக்கவும் ! : புரட்டாத பக்கங்கள் - உங்கள் அனுபவப் பகிர்வுக்கான களம்!
பதிலளிநீக்குஉங்கள் சகோதரி இறைவனடி சேர்ந்ததை திரு.ரூபன் அவர்களின் பதிவு மூலம் அறிந்தேன். எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்
பதிலளிநீக்குஇதமாய் இங்கிதமாய் கட்டுப்பாட்டின் அவசியத்தையும் சுதந்திரத்தின் அளவையும் சொல்லிட்டிங்க!
பதிலளிநீக்குசகோதரி மறைவு அதிர்வு தந்தது. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.
பதிலளிநீக்குரசித்துப் படித்தேன்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரரே!
பதிலளிநீக்குதங்கள் பதிவினை ரசித்துப்படித்து, பதிலினை தரவந்தேன். வந்த இடத்தில் தங்கள் சகோதரியை பற்றிய தகவல் கண்டு மனம் மிகவும் வேதனையடைந்தேன். தங்கள் சகோதரியின் ஆத்மா சாந்தியடையவும், உங்களுக்கும், அவர்களின் குடும்பத்தார்களுக்கும், அவர்களின் இழப்பை தாங்கும் சக்தியை இறைவன் தந்தருள வேண்டுமென்றும், மனமாற இறைவனிடம் பிரார்த்தித்துக்கொள்கிறோம்.
கமலா ஹரிஹரன்.
பாட்டோடு நற்கதையும் பண்பாடும் கற்றுவிட்டால்
பதிலளிநீக்குஊட்டிடும் வாழ்வில் உயர்வு !
அருமையான விளக்கம் அவசியம் அறிய வேண்டியவை பகிர்வுக்கு நன்றி
வாழ்க வளமுடன்
ஒழுக்கம் தவறினால் கடமையும் கட்டுப்பாடும் கேள்விக்குறி என்பது மிகவும் சரி ஐயா ! சிறிய இடைவெளி ஆகிவிட்டது. இனி வழக்கம் போல் தொடருவேன் !! நீங்களும் பழைய படி தொடரவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் !! !
பதிலளிநீக்குஅருமையான பதிவு
பதிலளிநீக்குகடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வலைப்பக்கம் அதிகமாக வரவில்லை. அதனால் தங்கள் சகோதரி மறைவு குறித்து அறியாதவனாக இருந்துவிட்டேன். மன்னிக்கவும்.மிக்க மனக் கவலை அடைகிறேன். குடும்பத்தார்க்கு விரைவில் மன அமைதியும் ஆறுதலும் கிட்டட்டும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குhttp://blogintamil.blogspot.in/2014/08/blog-post_23.html
இன்றைய வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துகள்..
மிக அருமை
பதிலளிநீக்குஅண்ணா கண்ணைக் கட்டுது...
பதிலளிநீக்குஒழுங்கா அடுத்த பதிவை பக்க ஜாலி பதிவாக எழுதவில்லை என்றால்
திண்டுக்கல்லில் திடும் என நிற்பேன் ... ஜாக்கிரதை
கட்டுப்பாடுகளையும் வரைமுறைகளையும் விட மனக்கட்டுப்பாடே எதையும் சாதிக்கும். கட்டுரையும் குரு சீடர் கதையும் அருமை!!
பதிலளிநீக்குகட்டுப்பாடுகளில்லாத சுதந்திரம் ஆபத்தானது. அழகாகச் சொன்னீர்கள்!
பதிலளிநீக்கு