🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பதிவும் கடந்து போகும்...!

வணக்கம் நண்பர்களே... மின்னஞ்சல் மற்றும் வலைத்தளம் ஆரம்பித்தவுடன் முக்கியமாகச் செய்ய வேண்டிய சில மாற்றங்களையும், தேவையான Gadgets-களையும் இணைத்து விட்டோம்...

1) மின்னஞ்சல் மற்றும் வலைப்பக்கம் உருவாக்கம் : → இங்கே சொடுக்கவும்
2) தேவையான உபகரணங்கள் (Gadgets) இணைத்தல் : → இங்கே சொடுக்கவும்

மேலுள்ள முந்தைய பதிவுகளை "முடித்து" விட்டு தொடர்ந்தால் நன்று... நன்றி...


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 18.10.2019

இந்தப் பதிவிலும் Δ எனும் சிம்பல் - சொடுக்கவும் (Click) என்று அர்த்தம்...!

வலைத்தளத்தில் எந்த gadget-ம் இல்லாவிட்டாலும் முக்கியமாக இருக்க வேண்டியது Follow by Email Gadget. ஆனால் அது தான் பிரச்சனையே ! (1) சில தளத்திலே இது இருக்கிறதே இல்லை...! காரணம் : திரட்டிகளில் மட்டும் புதிய பதிவை இணைத்தால் போதுமா...? திரட்டி என்றால் கூட என்னவென்றே தெரியாத வாசகர்கள் நம் தளத்திற்கு வர வேண்டாமா...? (2) பல தளத்திலே வலது அல்லது இடது பக்கம் ஒன்னு, பதிவு முடிந்தவுடன் ஒன்னு...! தப்பில்லை, ஆனா அது வேலை செய்யணுமில்லே...? ம்... நம் தளத்தில் email subscription செய்தவர்களுக்குப் பதிவு செல்வது முக்கியம் தானே...? வாங்க இரண்டையும் தீர்த்துக் கொண்டே பேசுவோம்...!

1)Google feedburner பயனுள்ள மாற்றங்கள் : உங்கள் தளத்தில் Layout பகுதியை சொடுக்குங்கள்... புதிய பதிவுகளைப் பெறுவதற்கு (Follow by Email) Gadget-க்கு வலது ஓரத்திலுள்ள Edit என்பதை Δ »» Feed Address-ல் உள்ளதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... மற்றொரு tab-ல் https://feedburner.google.com (←இங்கேயும் சொடுக்கலாம்) என்று தட்டச்சு செய்து என்டர் (↵) தட்டுங்கள்... இப்போது தெரியும் உங்கள் தளத்தின் பெயர் மீது சொடுக்கி சில பயனுள்ள மாற்றங்களைச் செய்வோம்...

1.1) Edit feed details Δ »» Feed Address-ல் நீங்கள் எழுதி வைத்தது இங்கே இருக்கும்... blogspot/ உட்பட மற்ற எழுத்துக்களையும் முழுவதுமாக நீக்கி விட்டு உங்களின் தளப்பெயரை ஆங்கிலத்தில் இடவும் »» Save Feed Details Δ முக்கியம் : புதிய பதிவர்கள் : இதை ஆரம்பத்திலேயே செய்து விட்டால், ஞாபகம் வைத்துக் கொள்ளச் சுலபமாக இருக்கும்... மற்றவர்கள் இதைச் செய்தால், உங்கள் கணக்கில் முன்பே மின்னஞ்சல் சந்தா செய்த வாசகர்களை இழந்து விடுவீர்கள்...!

1.2) Analyze Δ »» Configure Stats Δ »» 1) Item views 2) Item link clicks 3) Item enclosure downloads (podcast downloads) இந்த மூன்றிலும் உள்ள -யை எடுத்து விட்ட பின், இப்படி இருக்க வேண்டும் → »» Save Δ

1.3) Optimize Δ »» Convert Format Burner Δ »» Convert feed format to: என்பதைச் சொடுக்கி RSS 2.0 என்றிருப்பதை Atom 0.3 என்று தேர்வு செய்து »» Save Δ

1.4) Publicize Δ »» Email Subscriptions Δ »» அதற்குக் கீழே Delivery Options Δ »» Select Timezone: -ல் உங்கள் நாட்டின் நேரத்தை தேர்வு செய்து விட்டு, Schedule Email Delivery: -ல் வழக்கமாக எந்த நேரத்தில் பதிவைப் பகிர்ந்து கொள்வீர்கள் என்று உங்களுக்குத் தெரியும்... Email Subscription செய்தவர்களுக்கு உங்கள் பதிவு எந்த நேரத்தில் செல்ல வேண்டும் என்று தீர்மானித்து + தேர்வு செய்து விட்டு (Best-1:00pm-3:00pm) »» Save Δ அடுத்து அதற்கு மேலுள்ள Communication Preferences Δ »» Confirmation Email Subject: -ல் "மின்னஞ்சல் ஒப்புதலை செயற்படுத்த:" என்று எழுதி விட்டு, கீழுள்ள Confirmation Email Body:-ல் ஆங்கிலத்தில் இருக்கும்... அதைத் தமிழில் மாற்றலாம் இப்படி :

வணக்கம்... தாங்கள் எனது திண்டுக்கல் தனபாலன் தளத்திலிருந்து வெளியாகும் பதிவுகளை உடனுக்குடன் தங்களுடைய மின்னஞ்சலில் பெற பதிவு செய்துள்ளீர்கள்... மிக்க மகிழ்ச்சி...

${confirmlink}

மேலுள்ள இணைப்பை சொடுக்கி உறுதி செய்தால் மட்டுமே தாங்கள், இந்த வசதியை பெற முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்... திண்டுக்கல் தனபாலன் தளத்திற்கு இணைந்தமைக்கும், நேரம் கிடைப்பின் பதிவுகளை வாசித்து விட்டு தங்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் நன்றி...

அன்புடன் உங்கள் DD
https://dindiguldhanabalan.blogspot.com


இவ்வாறு சில மாற்றங்களோடு எழுதி விட்டு Save Δ கவனம் ${confirmlink} இது அப்படியே இருக்க வேண்டும்... இதற்கு மேலும் கீழும் உள்ள வரிகளை உங்கள் விருப்பம் போல் எழுதலாம்...

மேலே சொன்னதின் (1.1 to 1.4) விரிவான விளக்கம் : Feedburner சென்றவுடன் உங்கள் தளத்தின் பெயர் அல்லது வேறு பெயரில் ஒன்றிக்கும் மேல் இருந்தால், Follow by Email Gadget-யை பலமுறை நீக்கி விட்டு, மீண்டும் சேர்த்துள்ளீர்கள் என்று அர்த்தம்...! 0 [zero] இருக்கும் தளத்தின் feed-யை சொடுக்கி, மேலுள்ள Delete feed என்பதைச் சொடுக்கி நீக்கி விடவும்... 1.1) RSS Feed Gadget உருவாக்கும் போது ஞாபகம் வைத்துக் கொண்டு, மாற்றுவதற்கு எளிதாக இருக்கும்... 1.2 & 1.3) அனைத்து திரட்டிகளிலும் எளிதாக நம் பதிவு இணையும்... 1.4) பல தளங்களில் நாம் subscribe செய்து இருப்போம்... நாம் கொடுத்த மின்னஞ்சலுக்கு confirmation mail வந்திருக்கும்... மறந்து + ஏதோவென்று நினைத்து delete-ம் செய்து விடுவோம்... (எல்லாம் அனுபவம் தான்...!) தமிழில் இருந்தால் நம் கவனத்தை ஈர்க்கும் அல்லவா...?

பல தளங்களில் Email Subscription செய்தால் The feed does not have subscriptions by email enabled ↔ இப்படி வரும்... அவர்களின் புதிய பகிர்வுகளைப் பெறவும் முடியாது... மேலே சொன்னவாறு செய்து விட்டால் Problem solved...!

என்னது...! அப்படியும் பதிவை பெற முடியவில்லையா...? எனது பதிவை விட நீண்ண்ண்டு இருந்தால் இப்படித்தான் ! ஹிஹி... (FeedBurner Limit - 512K) என்ன செய்யலாம்...? அனைத்துப் பிரச்சனைகளிடமிருந்து பதிவும் கடந்து போகும்...!

முந்தைய பதிவில் சொன்னது போல்... படிக்காதவர்கள் → இங்கே சொடுக்கி, ← சென்று, 6) அமைப்புகளை தீர்மானித்தல் - என்கிற தலைப்பை சொடுக்கி, அதன் முடிவில் உள்ள பத்தியை வாசிக்கவும்... உங்களின் தளத்திலேயே ஒருமுறை, உங்களின் வேறு மின்னஞ்சல் கொடுத்து Subscribe செய்து, செய்த மாற்றங்களின் படி உங்களின் வேறு மின்னஞ்சலுக்குச் சென்று, "சரியாக வருகிறதா...?" என்று சோதனை செய்து பாருங்கள்...! Reader-ல் யாரும் படிக்க முடியாது உட்பட, Until Jump Break-யை பதிவு எழுதும் போது மறக்காமல் பயன்படுத்துவது பல விதங்களில் உதவுகிறது என்றும், Follow by Email Gadget எந்தளவு முக்கியம் என்பதையும் புரிந்து கொண்டீர்கள்...

அதெல்லாம் சரி...! என்னமோ அனைத்து தளத்திலும் Email Subscription செஞ்சிட்டு, அவங்க எல்லாம் பதிவு போட்டு, குறைந்தபட்சம் ஏழெட்டு மணி நேரம் கழித்து, உன் மெயிலுக்குப் பதிவின் தகவல் வந்து, அந்த நேரத்திலே மின்சாரம் இருந்து, நீ மெயிலை திறந்து, அந்தப் பதிவை சொடுக்கி படித்து, கருத்து சொல்றயாக்கும்ன்னு நான் கேட்கலை...! இது எந்தக் காலத்து குழந்தைன்னு, குட்டிச் செல்லம் ஆச்சரியப்படுது பார்...! ஹிஹி...

ஹா... ஹா... Subscription செய்தவர்கள் வலைப்பதிவர்கள் அல்லாதவர்களும் இருப்பார்கள் மனமே... அவர்களுக்கு(ம்) உதவும் இந்தப் பகிர்வு...! வரும் பதிவில் "HTML Mode-ல் பதிவுகளை எழுதுவது எப்படி...?" என்று, நாம் எழுதுகையில் இலவசமாக HTML-யை கற்றுக் கொள்ளப் போகிறோம்...!

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. தங்களின் இத்தொடர் நிறைவடைந்தவுடன், பதிவிடுதல் தொடர்பான கட்டுரைகளை எல்லாம் ஒன்று சேர்த்து ஒரு மின்னூலாக வெளியிடுவீர்களேயானால், அனைவருக்கும் மேலும் பயனுள்ளதாக இருக்கும் என்பது எனது கருத்து.
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
  2. feed burner பற்றி விரிவான விளக்கங்கள் உண்மையில் பயனுள்ளவை
    HTML நிரல்கள் பற்றியும் அறிய ஆவல்

    பதிலளிநீக்கு
  3. பயனுள்ள பல விஷயங்களாகத் தான் தெரிகின்றன. ஒவ்வொன்றையும் தனியே செய்து பார்க்கத்தான் பயமாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  4. அவசரமாக ஒரு பார்வை பார்த்து விட்டேன். அப்புறமா வந்து மறுபடி கவனமாகப் படிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  5. ஹஹஹா.. இத நான் முன்னாடியே படிச்சுட்டனே.. :) :)

    பதிலளிநீக்கு
  6. கொஞ்சம் குழப்பமாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது.

    நிதானமாய் இரண்டு மூன்றுமுறைகள் படித்தால் முடியும் போலிருக்கிறது.

    நன்றிகள்.
    God Bless You.

    பதிலளிநீக்கு
  7. கரந்தை ஜெயக்குமார் அவர்களை வழிமொழிகிறேன் சகோ...

    பதிலளிநீக்கு
  8. திரு கரந்தை ஜெயக்குமார் அவர்கள் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன். தொடர் முடிந்ததும், அனைத்தையும் ஒருசேர இணைத்துத் தந்தால் உபயோகமாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  9. பயனுள்ள தொடர் பதிவு
    பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. நானும் அந்த குழந்தையைப்யோசித்துக் கொண்டிருக்கிறேன் ,தளத்தில் செய்ய வேண்டியது இவ்வளவு இருக்கிறதா ?ஒன்று மட்டும் தெரிகிறது ,என்னிடம் சொல்லாமலே என் தளத்தில் செய்துக் கொடுத்து உள்ளீர்கள் !உங்கள் உதவியை என்றும் மறவேன் !
    மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள பதிவு. இருந்தாலும் செய்து பார்க்க பொறுமை வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  12. அன்பின் - கரந்தை ஜெயக்குமார் அவர்களின் இனிய கருத்து - வரவேற்கத்தக்கது.

    பதிலளிநீக்கு
  13. செல்லமே.. செல்லம்!.. செல்லத்தின் வியப்பு. அழகிய கவிதை!..
    தங்களின் பதிவைப் போல!..

    பதிலளிநீக்கு
  14. வழக்கம் போலவே மிகவும் பயனுள்ள தகவல்களைப் பதிவிட்டுள்ளீர்கள். புதிய பதிவர்கள் அனைவர் சார்பிலும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  15. தகவல்களை இவ்வளவு விளக்கமாகக் கொடுத்த பின்னும், மீண்டும் வந்து ஒருமுறை பொறுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும். தகவலுக்கு நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  16. இவ்வளவு மெனக்கெட்டு முயற்சி எடுத்து எல்லோரும் பயன் பெரும் வகையில் இன்போர்ம் பண்ணியதற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  17. திரு வை..கோபால கிருஷ்ணன் சொன்னது போல் தனியாக செய்ய பயமாக உள்ளது.
    முன்பு ஒரு முறை உங்கள் பதிவுக்கு காமெண்ட் போடப் போய் நான் எதைக் கிளிக் செய்தேனோ தெரியல அது என்னடான்னாக்க நீங்கள் எழுதிய பதிவு என் பிளாக்கில் என் புதிய பதிவு போல ஆகிவிட்டது. (கட் & காப்பி பேஸ்ட் மாதிரி )அதை இன்று வரை எனக்கு சரி செய்யவும் தெரியவில்லை . அதை டெலீட் செய்யவும் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  18. மிகவும் பயனுள்ள தகவல்கள், நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  19. பலருக்கும் உதவும் அவசியமான பதிவு டிடி

    பதிலளிநீக்கு
  20. உபயோகமான நல்ல கட்டுரை தந்தமைக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  21. பதிவுகளை இமெயிலில்பெறுவதை விட அந்தப் பதிவின் ஃபாலோவராக மாறுவது நல்லது என்று நினைக்கிறேன் இப்போதெல்லாம் follow by e mail இல்லாமலேயே in boxல் நிறையவே பதிவுகள் வருகின்றன. நிறையத் தகவல்கள். புரிந்து செயல்பட முடியுமா தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  22. புதிய பதிவர்களுக்கு உபயோகமான தகவல்களை தொடர்ந்து எழுதிகிறீர்கள் நன்றி

    பதிலளிநீக்கு
  23. மிகவும் பயனுள்ள பதிவு.
    இருந்தாலும் எங்களைப் போன்ற ஆட்களுக்கு கொஞ்சம் மெதுவாகத்தான் புரியும்.
    வாழ்த்துக்கள்.
    ஆச்சிரியப்படும் குழந்தை மிக அழகு.

    பதிலளிநீக்கு
  24. மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றி. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. அடேயப்பா இவ்வளவு விஷயம் உள்ளதா. பதிவு எழுதி வெளியிடுவதோடு நம் வேலை முடிந்துவிட்டது என்றல்லவா நினைத்திருக்கிறேன். தகவல்களுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இந்த மாதிரியான தொழில்நுட்ப பதிவுகளைப் படித்து அதை எங்கள் தளத்தில் செய்துபார்ப்பதற்கு இன்னும் எத்தனை நாளாகுமோ! சிலசமயம் இருப்பது போதும் என்றும் தோன்றிவிடுகிறது. எதையோ செய்யப் போய் இருப்பதும் போய்விட்டால் என்ற பயம் வேறு.

    நி.........தா......ன........மாக....ப் படித்து செய்ய வேண்டும்.

    உங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

    பதிலளிநீக்கு
  27. நான் தொடர்ந்தும்
    ஓர் உண்மையைத் தான்
    சொல்கிறேன் - அது
    பலருக்குப் பயன்தரும் பதிவு
    இதுவென்றே!
    பதிவிட்ட அறிஞர்கள் சொல்வது போல
    இப்பதிவுத் தொடரை
    மின்னூல் ஆக்கி வெளியிடுங்கள் - அதனை
    எனது மின்னூல் களஞ்சியத்தில் இட்டு
    அறிமுகம் செய்வேன்!

    பதிலளிநீக்கு
  28. feed burner பற்றிய விரிவான தகவல்கள்! செய்முறைகள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  29. மிகவும் பயனுள்ள ப்திவு DD! சரி DD,ஏன் நீங்கள் இதை எல்லாம் சேர்த்து , நீங்கள் வகுப்பு எடுத்தது போல ஒரு புத்தகமாக வெளியிடக் கூடாது! ஏனென்றால் நாங்கள் ஒரு டம்மி வலைப்பூ ஆரம்பித்து அதில் பல ஆரய்ந்து கொண்டிருக்கின்றோம்! ஏனென்றால் இதில் செய்யப்போய் ஏதாவது ஆகிவிட்டால் என்ற பயம் காரணமாக ஒரு டம்மி! கினி பிக் நு வைச்சுக்கங்களேன்!

    இப்பொழுது நீங்கள் கொடுத்திருக்கும் பாடங்களையும் அதில் பயன்படுத்டி பார்க்கின்றோம்

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  30. என்னால் இதெல்லாம் இயலாது தனபால்!

    பதிலளிநீக்கு
  31. அம்மாடியோ1இம்புட்டு விசயம் இருக்கா?எவ்வளவு அழகாச் சொல்லிப்புட்டீங்க!இதை எல்லாம் என்னக்கி நான் செஞ்சு.........?!

    பதிலளிநீக்கு
  32. வணக்கம் தனபாலன் அண்ணா.

    நல்ல நல்ல விசயங்களைத் தான் கற்றுத் தருகிறீர்கள். ஆனால் இந்த மரமண்டைக்குத் தான் ஏறவே மாட்டேங்கிறது.
    மீண்டும் முயற்சிக்கிறேன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  33. super sir.. naanum change pannanum,, but enaku .. exam nadakuthu,, 21.4.2014 than mudiyuthu.. ungal padivi ellam padikanum,, nandri...

    பதிலளிநீக்கு
  34. காலையில் முதல் ஆளாக விமர்சனம் எழுத முயற்சித்த போது முடியவில்லை.

    மற்றொரு ஆசை. யாராவது இதை எழுதுவார்களா? என்று காத்திருக்கின்றேன்.

    பெரும்பாலும் தமிழ்மணம் இன்ட்லி இந்த இரண்டு திரட்டிகளில் தான் அதிகமான பேர்கள் பயன்படுத்துவதாக நான் பார்த்தவரையிலும் கவனித்து வருகின்றேன்.

    தமிழ்வெளி கூட சொல்லக்கூடிய வகையில் உள்ளது. காரணம் என் தளத்திற்கு வருபவர்கள் இதன் மூன்றின் வழியாக வருகின்றார்கள். பாதிப்பேர்கள் கூகுள் மூலம் வருகின்றார்கள்.

    மற்ற திரட்டிகளின் நிலைமை எப்படி உள்ளது? அதைப்பற்றி எழுத முடியுமா? நிச்சயம் திரட்டிக்குச் சொந்தக்காரர்கள் நிச்சயம் அவர்களின் நிலை குறித்து சொல்லப் போவதில்லை. பலருடன் பேசி இது குறித்து நீங்க எழுதப் போகும் பதிவை ஆவலுடன் பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  35. ஆஹா, இந்த வலைப்பூத் தளங்கள் பற்றி இவ்வளவு செய்திகள் இருக்கிறதா?
    பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி.

    தங்களின் இந்த பதிவுகளின் மூலம், நான் என்னுடைய வலைப்பூவை மாற்றினால் தான், நான் சொன்ன நன்றிக்கு அர்த்தம் வரும், அதனால் நானும் என்னுடைய வலைப்பூவை சீக்கிரம் மாற்றிக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. அய்யா பேச வாய் வரவில்லை, என்று சொல்வதைப்போல்? எழுதவும் கை வரவில்லை என் போன்ற கற்றுகுட்டிகளையும் கவனிக்கிறீர்கள். பதிவிடும் வழிமுறைகளைப்பற்றியும் விரிவாக விவரிக்கிறீர்கள். ஒரு விஷயத்தை பற்றி தெரிந்தாலும் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க எல்லோரும் முன் வருவதில்லை. ஆனால் மற்றவர்களும் கற்றுக்கொண்டு பயன்பெற வேண்டும் என்கிற உங்கள் ஆவல் இருக்கிறதே அன்பே சிவத்தில் குறிப்பிட்டதைப்போல "அதுதான் கடவுள்"

    பதிலளிநீக்கு
  37. மிகவும் பிரயோசனமான பதிவு, பகிர்வுக்கு நன்றி நண்பா...!

    பதிலளிநீக்கு
  38. அன்பின் தன பாலன் - பலப்பல தகவல்கள் - பதிவுகள் அனைத்துமே அருமை - அனைவருக்கும் உதவும் வண்ணம் தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  39. அன்பின் தன பாலன் - அருமை நண்பர்கள் கரந்தை ஜெயக் குமார், நடன சபாபதி, துரை செல்வராஜு - இன்னும் பலர் -இவர்களீன் மறுமொழிகளில் விரும்பும் படி விரைவினிலேயே அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாகவோ - அல்லது மின்னூலாகவோ வெளியிடவும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  40. நல்ல பதிவு அண்ணா... என் மண்டைல தான் ஏறவே மாட்டேங்குது அவ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
  41. ஆகா... ஆகா... ஆககககா...! எம்ம்பூட்டு தகவலு...? எம்ம்பூட்டு தகவலு...? அம்புட்டையும் புத்தகமா போடுங்க அப்பு... புத்தகமா போடுங்க...!

    பதிலளிநீக்கு
  42. நன்றி அண்ணார் அவர்களே. என்னைப்போன்றவர்களுக்கு மிக்க பயனுள்ளதாய் உங்களின் பதிவுகள் இருக்கிறது.தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  43. நெறைய கேள்விக்கு பதில் கிடைத்தது..... நன்றி அண்ணா

    பதிலளிநீக்கு
  44. கண்டிப்பாக பதிவர்களுக்கு உபயோகமானது.

    பதிலளிநீக்கு
  45. அனைவருக்கும் பயன்படக்கூடிய அருமையான பகிர்வு கூடவே
    இந்தக் குட்டி தேவதையைக் கண்டதும் என் மனமும் பறி போய்
    விட்டது சகோதரா இந்த முல்லைப் பூவினை ஈன்றெடுத்தவர்கள்
    இயற்கையின் ஒட்டு மொத்த அழகையும் தமக்கே சொந்தமாக்கிக்
    கொண்டனர் என்று உணரத் தோன்றுகிறது ! மொத்தத்தில் பகிர்வும் படமும் அருமை ! வாழ்த்துக்கள் சகோதரா .

    பதிலளிநீக்கு
  46. அனைத்தும் ரசித்தேன் ஆனாலும் ஏதோ ஒரு ஏக்கம் உடனுக்குடன் தங்கள் பதிவு பார்க்க முடியவில்லை ( நேரம் கிடைக்கணுமே )என்பதனால்

    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு

  47. வணக்கம்

    குண்டுக்கள் போன்றவரும் திண்டுக்கள் சொல்லுகின்ற
    கண்டுச்சொல் கேட்டுக் களிப்புறுவார்! - மண்டு..நான்
    மின்வலைச் செய்திகளை இன்றுவரை கற்றிலனே!
    என்னிலை மாறும் இனி!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  48. அனைவருக்கும் புரியும்படி மிக தெளிவாக எழுதியிருக்கிறீர்கள். உங்களது பணி தொடரட்டும். எனது வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  49. ஆஹா.. எதை தேடுகிறோமோ அதையே தேடித்தேடி கொடுக்கிறீர்களே தனபாலன் சார் அருமை....

    பதிலளிநீக்கு
  50. பதிவுகள் பற்றிய உங்கள் பதிவு
    பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  51. எனக்கும் பயனுள்ளதாக இருந்தது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  52. அறிந்தவற்றைப் பிறருடன் பகிர்ந்துகொள்வது என்பது பாராட்டத்தக்கவேண்டிய செய்தியாகும். தாங்கள் அப்பணியைச் சிறப்பாகச் செய்கிறீர்கள். வாய்ப்பிருப்பின் நூலாகக் கொணர முயற்சிக்கவேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  53. பதிவர்களுக்கு அவசியமான பதிவு..

    தொடருங்கள்.. நன்றி .

    பதிலளிநீக்கு
  54. முயற்சித்து கொண்டே............. இருக்கிறேன். இந்த மாதிரி தொழில் நுட்பத்தை புரிந்து கொள்ள கஷ்டமாக இருக்கிறது.எங்களுக்கான உங்கள் உழைப்பிற்கு நன்றி.....!!!ஐய்யா.புரிதல் தொடர்ந்ததால் கருத்துரைக்க நேரமாகி விட்டது.

    பதிலளிநீக்கு
  55. தலை சுத்துது.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  56. ஸாரி!..லேட்டா வர்றேன்!.. ரொம்ப பயனுள்ள தகவல்கள் தந்திருக்கிறீர்கள்.. அடுத்த பதிவுக்காக, ஆவலுடன் காத்திருக்கிறேன்!..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.