🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனதில் கனம் இருந்தால்...

எனக்கொரு சந்தேகம் : மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...?

மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும் - மனித மானாபிமானந்தன்னை மறைவாக்கும் - நல்ல மாண்புடைய மக்களை மடையராக்கும்... வீணான யோசனைக்கே இடமாக்கும்...2 - பல விபரீத செயல்களை விளைவாக்கும்... தன்னைத் தானே நம்பாதது சந்தேகம் - அதற்குச் சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்...2 தானே நம்பாதது சந்தேகம்...!

© தெய்வப்பிறவி உடுமலை நாராயண கவி R.சுதர்சனம் C.S.ஜெயராமன் @ 1960 ⟫

நல்ல சந்தேகம்...! எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நேர்முகத் தேர்வுக்குப் போனால், எந்தவிதமான பயமும் இல்லாமல் பதில்களைச் சொல்லலாம்... நடப்பதெல்லாம் நன்மைக்கே... இல்லேல்லே... நடப்பதெல்லாம் நம்மளாலே என்று, எல்லா பாரத்தையும் கடவுள் (நம் மனதின்) மீது போட்டு விட்டால், துக்கமில்லாத தூக்கத்தை அனுபவிக்கலாம்... எதாவது ஒரு விசயத்தை மனதில் போட்டு மறைத்து விட்டு, ஒன்றும் தெரியாது போல நேர் எதிரான காரியங்களைச் செய்தாலும், பயம் பற்றிக்கொண்டு தோல்விகளும் துன்பங்களும் பரிசாக வாங்கியும் கொள்ளலாம்; எப்படி வசதி மனசாட்சி ?!!!

ஆக, மடியில் கனம் என்பதை மனதில் கனம் என்று சொல்லலாமா...?

திருமாலின் அடியவர்களாகத் திகழ்ந்தவர் மச்சேந்திரர். அவருக்குச் சீடர் கோரக்கர். ஒரு நாள் இருவரும் காட்டு வழியே பயணம் செய்து கொண்டிருந்தனர்... அடர்ந்த காடென்பதால் பகற்பொழுது கூட இருட்டாக இருந்தது... இருவர் மட்டுமே நடந்து சென்று கொண்டிருந்தனர்... வழியில் எந்த மிருகமும் தென்படவில்லை... பறவைகளின் ஒலிகள் கூட கேட்கவில்லை... மச்சேந்திரர் தன் சீடரைப் பார்த்து, "இந்தக் காட்டில் திருடர்கள் பயம் ஏதும் உண்டா...? என்று கேட்டார்... இருவரும் துறவிகள்; இவர்களுக்கு எந்த பயமும் ஏற்பட வாய்ப்பேயில்லை... தன் குரு ஏனிந்த கேள்வியைக் கேட்டார் என்று யோசித்துக் கொண்டே நடந்தார் கோரக்கர்... சிறிது நேரத்தில் ஒரு குளக்கரை வந்தது... மச்சேந்திரர் தனது கையிலிருந்த துணி மூட்டையைச் சீடர் கோரக்கரிடம் கொடுத்து விட்டு, சிரமபரிகாரம் செய்து கொள்ள மறைவான இடத்திற்குச் சென்றார்... உடனே கோரக்கர் துணி மூட்டையை அவிழ்த்துப் பார்த்தார்... உள்ளே ஒரு தங்கக்கட்டி இருந்தது... இதனால் தான் குருநாதருக்கு அச்சம் வந்ததோ என்று கருதித் தங்கக்கட்டியைக் குளத்திற்குள் தூக்கி எறிந்து விட்டார்... பிறகு இருவரும் பயணத்தைத் தொடர்ந்தனர்... "சீடரே, இந்தக் காட்டில் திருடர்கள் பயம் ஏதும் உண்டா...? என்று நான் கேட்ட கேள்விக்குப் பதிலே சொல்லவில்லையே..." என்று கேட்டார் மச்சேந்திரர்... "குருநாதரே, திருடர் பயம் அந்தக் குளக்கரையிலேயே நீங்கி விட்டது" என்று அமைதியாகப் பதில் சொன்னார் கோரக்கர்...

பார்த்தாயா மனசாட்சி...? துறவிகளுக்குக் கூட மனதில் கனம் இருந்தால் மடியில் கனம் வரும்... மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் வரும்... சுவாமி விவேகானந்தர் : 'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்பது வேண்டாம்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன... பயமில்லை... பயமில்லை என்று எப்போதும் முழங்கு; "பயம் கொள்ளாதே" என எல்லாரிடமும் சொல்; பயமே மரணம், பயமே பாவம், பயமே நரகம்... பயமற்றவனே இளைஞன்...!

அடடா... பிரமாதமா சொல்லிட்டே... பரிசோதனை செய்த மச்சேந்திரை பாராட்டுவதா...? ஆசைக்கு அடிமையாகாத சீடர் கோரக்கரைப் பாராட்டுவதா...? இல்லை இல்லை... உன்னை பாராட்டிடே இருக்கணும்...!

போச்சுடா...! இது ஆசை, சூது, வஞ்சகம் - இன்னும் பல கெட்ட குணங்களை விட மோசமாக மனதில் கனமாக இருந்து, நம்மைக் கெடுத்து விடுமே...! உண்மையான செயல் வீரர்களுக்குப் பாராட்டு என்பது தங்கக் கிரீடம் இல்லை, முள் கிரீடம் என்று எங்கோ படித்த ஞாபகம்... பாராட்டுவது என்பது ஒரு எளிய பண்பும், மனிதனுக்கு வேண்டிய முதன்மை குணமும் தான்... திட்டி வளர்க்கப்படும் குழந்தைகளை விட, பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதித்து வளருகிறார்கள்... பொதுவாக செயற்கரிய செயல்களைப் பாராட்டியே ஆக வேண்டும்... பல நல்ல குணநலம் வாய்த்தவர்கள் பாராட்டை ஒரு பொருட்டாகவே மதிப்பது கிடையாது... அதே போலத் தான் ஏச்சு பேச்சுகளும், குற்றச்சாட்டுகளும்...! இருந்தாலும் பாராட்டை ஏற்றுக் கொள்வதும் தவிர்ப்பதும் சாதனையாளர்களின் தனிப்பட்ட பண்பு குணநலன்... ஒரு சிறப்பான சம்பவத்தைக் கேள் :

ஆச்சார்யா வினோ பாபாவே காந்திய கோட்பாடுகளில் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளவர்... அவருக்கு ஒரு நாள் காந்தியிடமிருந்து ஒரு கடிதம் வந்தது... ஆர்வத்தோடு பிரித்துப் படித்த வினோபாபாஜி , படித்த வேகத்திலேயே அந்த கடிதத்தை சுக்கல் சுக்கலாகக் கிழித்துப் போட்டார்... பக்கத்திலிருந்த நண்பர்கள் திகைத்துப் போய் ஏனென்று கேட்டனர்... அதற்கு அவர், "எனது மதிப்பிற்குரிய மகாத்மா அவர்கள், இந்தக் கடிதத்தில் என்னை அளவிற்கு அதிகமாகப் புகழ்ந்து, பாராட்டி எழுதி உள்ளார்கள்... அந்தப் புகழ் வார்த்தைகளுக்கு நான் தகுந்தவனா...? என்று எனக்குத் தெரியாது... இந்தக் கடிதத்தைக் கிழிக்காமல் வைத்திருந்தால், அவ்வப்போது எடுத்துப் படிக்கும் போதெல்லாம் ஆணவம் தலைக்கேறி விடும் என்பதில் எனக்குச் சந்தேகமேயில்லை... அதனால் கிழித்தெறிந்தேன்" என்றார்... ஆக, பாராட்டைப் பொருட்படுத்தாதவர்கள் பெருமைக்குரியவர்கள் - வினோ பாபாஜியைப் போல...! பாராட்ட மறக்காதவர்களும் பெருமைக்குரியவர்களே - மகாத்மாஜியைப் போல...!

(படம் : சந்திரமுகி) உன்னைப்பற்றி யாரும்... அட என்ன சொன்னால் என்ன...? இந்த காதில் வாங்கி அதை அந்த காதில் தள்ளு... மேகம் மிதந்தாலும் காகம் பறந்தாலும் - ஆகாயம் தான் அழுக்காக ஆகாதுன்னு சொல்லு... பூப்பந்தை யாரும் நீரில் பொத்தித்தான் வெச்சாலும் - பந்து வரும் நீரில் மிதந்து... அட உன்னை யாரும் ஓரம் கட்டித்தான் வெச்சாலும் - தம்பி வாடா வந்து தொடத்தான்... மூணாம் பிறை மெல்ல மெல்ல வெண்ணிலவாய் மின்னுவதை மின்மினிகள் தடுத்திடுமா...?

ரீப்பிட்டே மனசாட்சி...! எந்த விதத்திலும் கனமில்லா எளிமையான மனம் பெற்றால் சகலமெல்லாம் சந்தோசத்துடன் சிறகடித்துப் பறக்கலாம்...

வாழ்ந்து கெட்டவர்கள்...! யார் என்று அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வணக்கம்
    தனபாலன்(அண்ணா)

    பல எடுத்துக்காட்டுக்கள் மூலம் பதிவை அழகாக விளக்கியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்...
    தொடருகிறேன் .

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. மனதில் பதியும் நல்ல நிகழ்வுகளை உள்ளடக்கிய சிறந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  3. களங்கமில்லா உங்களின் மனதும் கடவுள் தந்த பரிசுதான்.ஆம் உங்கள் மனதில் கனமில்லை என்பது எல்லோருக்குமேத் தெரியுமே

    பதிலளிநீக்கு
  4. தலைவர்களின் சொற்படி வாழ்ந்தால் சாந்தோசமாக இருக்கலாம்.. உண்மைதான்!!

    பதிலளிநீக்கு
  5. முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன.. பயமில்லை.. பயமில்லை என்று எப்போதும் முழங்கு. "பயம் கொள்ளாதே.." என்ன எல்லோரிடமும் சொல்; பயமே மரணம்.. பயமே பாவம்... பயமே நரகம்.. பயமற்றவனே இளைஞன்...!

    எத்தனை மகத்துவம் வாய்ந்த கருத்துக்கள்... யாராக இருந்தால் என்ன? எவையாக இருந்தால் என்ன அவையும் நம்மைப்போல பூமியில் படைக்கப்பட்டவேயன்றி வேறேதுமில்லை...

    எதற்கும் அஞ்சாது நிற்பவனே...
    நின்று ஜெயிப்பவனே...
    ஆரோக்கியமான இளைஞன்..!
    அற்புதமானவன்....!

    பகிர்வனிற்கு மிக்க நன்றி.

    என்னுடைய வலைத்தளத்தில் ஒரு சிறந்த பதிவு:

    தமிழில் எழுத மென்பொருட்கள்

    பதிலளிநீக்கு
  6. சரியாச்சொன்னீங்க சகோ,நல்ல உதாரணங்களுடன் விளக்கம்.உங்கள் பகிர்வுகள் எப்பொழுதும் சிந்திக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா...? இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழிபயனுள்ளது..

    பாராட்டுக்கள் மனிதனை தூங்கச்செய்து விடும்..!

    பதிலளிநீக்கு
  8. சரியாக சொன்னீர்கள் - "//எந்த விதத்திலும் கனமில்லா எளிமையான மனம் பெற்றால் சகலமெல்லாம் சந்தோசத்துடன் சிறகடித்து பறக்கலாம்//"
    அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. மடியில் கனமில்லை என்றால்
    வழியில் பயமில்லை என்று சொல்வார்கள்
    அதுபோல..
    எதற்கெடுத்தாலும் மனதிற்குள் எதையோ போட்டு
    சிந்தித்து, விளைந்ததை மென்று விழுங்கி
    மனதிற்குள்ளேயே போட்டு புதைத்து நாம் படும்பாடு
    அப்பப்பா..
    மனதில் கனமில்லை என்றால்
    வாழ்வில் பயமில்லை என்றே சொல்லலாம்...
    அருமையான பதிவு நண்பரே.

    பதிலளிநீக்கு
  10. மடியில் கனம்-புதிய விளக்கம்.சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. பாராட்டைப் பொருட்படுத்தாதவர்கள் - பெருமைக்குரியவர்கள்
    வினோபாஜியைப் போல!..

    பாராட்ட மறக்காதவர்களும் -
    பெருமைக்குரியவர்கள்
    காந்திஜியைப் போல!..

    இதைத்தான் சொல்வார்கள் கொள்வதும் கொடுப்பதும் என்று!..

    அழகான கருத்துக்களை விதைத்து இருக்கின்றீர்கள்.. சிறப்பான பதிவு!..

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரா
    அத்தனையும் உண்மையே மடியில கனம் இருந்தால் தான் வழியில் பயம்
    முதுகில புண் இருந்தால் தான் காடு நுழைய வருத்தம். இல்லையேல் இல்லை என்பது போல....

    ஆசையும் பயமுமே மனிதனுக்கு கேடு இரண்டையும் நீக்கினால் கூடும் நல் வாழ்வு.
    ரசித்தேன் அழகாக விளக்கியிருக்கிறீர்கள் நன்றி தொடர வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  13. அன்பின் திரு தனபாலன்,

    சிந்திக்க வைக்கும் பல விசயங்களை உள்ளடக்கிய பதிவு. பாராட்டை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், நம்மைப் பாராட்டி ஊக்கப்படுத்தியவர்களை மறக்காமல் இருப்பதோடு அவர்களுக்கு நன்றி பாராட்ட வேண்டியதும் கடமைதானே.. நல்ல கதை.

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  14. அந்த கோரக்கர்
    அந்த தங்க கட்டியை
    எந்த குளத்தில்
    எறிந்தார் ?

    சீக்கிரம் சொல்லுங்க..அதை
    சீக்ரெட்டா என்கிட்டே மட்டும்
    சொல்லுங்க...

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  15. இங்கே வீட்ல வந்து பாருங்க. பாராட்டி சுதந்திரத்தோடு வளர்ப்பதால் நம்ம சுதந்திரம் அனைத்தும் இழக்க வேண்டியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  16. // படிக்கும்பொழுதெல்லாம் ஆணவம் தலைக்கேறிவிடும் //

    அருமையான கதைகள். விளக்கங்கள். பாராட்டுக்கள்.

    Comments-ஐ delete பண்ணிடமாட்டிங்கதானே?

    பதிலளிநீக்கு
  17. மூத்தோர் சொல் கேட்டு நடந்தால் மடியிலும் கணம் சேராது. நாமும் பயமில்லாம வாழ்க்கைப் பயணத்தை தொடரலாம். பகிர்வுக்கு நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  18. தெம்பளிக்கும் பதிவு. என்ன இருந்தாலும் அவருக்கே தெரியாமல் குருவின் பொருளைத் தூக்கி எரிந்து விடுவது நியாயமா!!!

    பதிலளிநீக்கு
  19. பல எடுத்துக்காட்டுகள்.
    மேகம் அழுக்காகாது_
    பந்து தள்ளி வரும். மின்மனி தடையாகாது.
    மிக மிகச் சிறப்புப்பதிவு டி.டி.
    இனிய வாழ்த்து தங்கள் பணிக்கு.
    வேதா.இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் சொல்வதுதான் சரி. மடியில் என்பதற்கு பதில் மனதில் கனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

    மனதில் கனம் என்றால் அது ஒரு நெகட்டிவ் கண்ணோட்டத்தை ஏற்படுத்துகிறது. மனதில் எது இருந்தாலும் அது சந்தோஷமோ, துக்கமோ, கெடுதலான எண்ணமோ எதுவானாலும் அது நம்மை சும்மா இருக்க விடாது.

    பதிலளிநீக்கு
  21. மிகவும் அழகான ரஸிக்க வைக்கும் உதாரணங்களுடன் கதைகளை எடுத்துச்சொல்லி சிந்திக்க வைத்துள்ளீர்கள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  22. மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம். பாராட்டி வளர்க்கப்படும் குழந்தைகளே சாதிக்கிறார்கள் - உண்மை என்றாலும், கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பதும் பெற்றோரின் கடமை.
    @ஜோதிஜி உங்களின் சுதந்திர இழப்பும் பெருமைப்பட வேண்டியதே, இல்லையா?

    பதிலளிநீக்கு

  23. / சரிதானே நண்பர்களெ/ சரியில்லாததை டிடி சொல்வாரா.? பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  24. உங்கள் பதிவு எனக்காகதான் போலிருக்கே ...பாராட்டுக்கு ஏங்கி கொண்டிருக்கும் என்னை யோசிக்க வைத்து விட்டீர்களே !

    பதிலளிநீக்கு
  25. மிக அற்புதமான கருத்துக்களைக் கோர்த்து ஒரு அழகிய பதிவாகவே தந்து விட்டீர்கள். மிக அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி!!

    பதிலளிநீக்கு
  26. மடியிலும் சரி, மனதிலும் சரி கனம் இருக்கக் கூடாதுதான்!!. அப்போதுதான் நிலம் முகர்ந்த உடன் கண் அயரும்!! மிக அருமையான மேற்கோள்களுடன் அழகான பதிவு!! அதுவும் சுவாமி விவேகானந்தரை மேற்கோள் காட்டியது பாராட்டபட வேண்டிய ஒன்று. அருமையான பதிவுகளைப் பாராட்டாமல் இருக்க முடியாது! " பாராட்டித்தானே வளர்க்க வேண்டும்!!!" உங்கள் எழுத்துக்கள மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  27. மனதில் கனம் இருந்தால் வாழ்வுப் பாதையில் பயம்! உண்மைதானே!

    சிந்தனை நன்று!

    பதிலளிநீக்கு
  28. //விவேகாநந்தர் சொன்னதும் நல்லா இருக்கு. விநோபாபாவே செய்ததும் அருமையா இருக்கு. நல்ல பதிவு. அருமையான சிந்தனை. வாழ்த்துகள். சுட்டிக்கும் நன்றி.//

    பதிலளிநீக்கு
  29. ஶ்ரீராம் கேட்ட கேள்வியால் கோரக்கர் சரித்திரத்தை மீண்டும் படிக்க ஆவல் ஏற்பட்டுள்ளது. படிக்கணும்.

    பதிலளிநீக்கு
  30. சிறந்த பதிவு தந்தமைக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  31. ரொம்ப ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க... மனசில கனம் இருந்தாத்தான் பயம் வழியில் பயம் இருக்கும்..

    பதிலளிநீக்கு
  32. தலைப்பும் அதற்கு விளக்கமாகச்
    சொல்லிப்போன கதைகளும்
    முடித்த விதமும் மிக மிக அருமை
    மனக் கனம் குறைப்போம்
    வாழ்த்துக்களுடன்

    பதிலளிநீக்கு
  33. மடியிலும் சரி, மனதிலும் சரி கனம் இருக்கக் கூடாதுதான்!! மிக அருமையான மேற்கோள்களுடன் அழகான பதிவு!!
    நன்றி ஐயா
    த.ம.14

    பதிலளிநீக்கு
  34. உண்மை தான் மனதில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கத் தானே செய்யும்.

    பதிலளிநீக்கு
  35. மிக நல்ல உதாரணங்களுடன், நல்லதொரு சிந்தனைக்குரிய பதிவை மிகச்சிறப்பாக எழுதியிருக்கின்றீர்கள்.பாராட்டுக்கள். மகாத்மா போலவும்,வினோபாபா போலவும் இருக்கனும் என்பது சிறப்பு. வாழ்த்துக்கள்,நன்றி.

    பதிலளிநீக்கு
  36. நல்லதொரு உதாரணத்தோடு அழகா சொல்லிருக்கீங்க..மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் வரும்!!

    சிந்திக்க வைத்த பதிவு!!

    பதிலளிநீக்கு
  37. அன்பு சகோதரருக்கு வணக்கம்
    தங்கள் கலங்கமில்லா மனம் நெருங்கி பழகிய எங்களுக்கு தெரியுமே! கடினமான சூழலிலும் கலங்காமல் அதை எதிர்கொள்ளும் ஆற்றல் நீங்கள் பெற்றிருப்பது கண்டு வியப்பதுண்டு. எத்தனை எத்தனை துயரங்களைக் கடந்து வந்திருக்கிறீர்கள் இருப்பினும் இதுவும் கடந்து போகும் எனும் மனநிலை வியக்க வைக்கிறது சகோ. மிக அழகான எடுத்துக்காட்டுகளுன் பதிவை விளக்கியிருப்பது அருமை. தொடர்க. பகிர்வுக்கு நன்றி சகோதரர்...

    பதிலளிநீக்கு
  38. நேர்மையான குணமும்..
    யாருக்கும் அஞ்சாத நெஞ்சமும் இருந்தால்

    இந்த உலகம் நமக்கு பாதைகள் அமைக்கும்...
    அந்த பாதையில் யாருக்கும் பயப்படவேண்டிய அவசியமும் இல்லை...

    நல்லதொரு பதிவு....

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  39. அன்புள்ள தனபாலன், மடியில் உள்ள கனத்தை எப்போதுதான்
    இறக்குவது ? எல்லோரும் ஞானியாக விட முடியுமா?
    இருக்கின்ற கனத்தில் கொஞ்சம் பகிர்ந்து கொடுத்தாலே புண்ணியம்தான். நல்ல பதிவு.

    சரியான பாடல்களை சுட்டிக்காட்டியதற்கும்

    நன்றி

    பாடல்களை எழுதியவர்களையும்
    குறிப்பிட்டால்
    நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  40. நல்ல விளக்கம் தான். ஆனால் சுத்தி வளைத்து அதையே தான் சொல்லி இருக்கிறீர்கள்...

    மடியில் கனம் இருந்தால்
    மனத்தில் பயம் வரும்.
    மனத்தில் கனம் இருந்தால்
    வழியில் பயம் வரும் என்று!

    ஆசை பாசத்தை விட்டொழிந்தவன் பயம் இல்லாம் இருப்பான். சரி.
    இன்றைய நிலையில் தன்னிடம் எதுவும் இல்லாமல் இருந்தாலும் தவறுகளை மட்டும் செய்துக்கொண்டு பயம் இல்லாமல் வாழ்கிறார்களே...

    என்னவோ போங்கண்ணா... பதிவு என்னை எதை எதையோ சிந்திக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  41. வழக்கம் போல் அருமையான பதிவு... வினொபாபவே குறித்த தகவல் புதியது.. சந்திரமுகி படப் பாடல் முழுவதுமே ஆழ்ந்த கருத்துக்களைக் கொண்ட பாடல்... அத்திந்தோம் பாடலும் அப்படியே....:)

    பதிலளிநீக்கு
  42. பாராட்டுதல்கள்! இது பலகீனப் படுத்த அல்ல! உத்வேகத்துடன் செயல்பட! வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  43. நல்ல கருத்துக்கள். சிறப்பான குட்டிக் கதைகள். சந்திரமுகி பாடல் அருமை. எவ்வளவோ முறை கேட்டிருந்தாலும் ஊன்றி கவனித்ததில்லை .இப்போதுதன கவனிக்கிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  44. மனமதில் கனம் இருந்தால், பயம் தானாகவே பற்றிக் கொள்ளும்.நமது தன்னம்பிக்கையே நம் மூலதனம் என்பதை அழகாய் விளக்கியுள்ளீர்கள் ஐயா.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  45. நல்லதொரு பகிர்வு கருத்துக்கள் பொதிந்த விடயம்!

    பதிலளிநீக்கு
  46. கடமையைச் செய் பலனை எதிர் பாராதே
    என்பதும் இதுதானே!

    பாராட்டுகளை எதிர்பார்த்துச் செய்வதைவிடப்
    பலனுடையதை - பலருக்கும் பயன்பயக்கூடியதை
    அந்தந்த நேர காலத்திற்குச் செய்துகொண்டு போய்க்கொண்டே
    இருக்க வேண்டியதுதான்...

    அடுத்து, மனதில் சுமை அதுவும் கொடுமைதான். அதனைச் சுமந்துகொண்டு
    வாழ்க்கையை வீணாக்குகின்றோம்.
    அறிவுக் கண்களைக் திறந்து வைத்த அருமையான பதிவு!

    வாழ்த்துக்கள் சகோ!

    பதிலளிநீக்கு
  47. குழந்தையின் படம் மிக அழகு! பாராட்டை எதிர்பார்க்காது பயனை நோக்காது பணி செய்க! என்னும் கருத்தையும் திட்டுபவர்களையும் பொருட்படுத்தாது கடமையே கருத்தாக இருக்க வேண்டும் என்ற கருத்தையும் அழகாக அருமையான உதாரணங்களுடன் பகிர்ந்தமை மிகச்சிறப்பு! வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

    பதிலளிநீக்கு
  48. அருமையான நற் கருத்துக்களுடன் உருவெடுத்த சிறந்த பகிர்வுக்கு
    என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா !!

    பதிலளிநீக்கு
  49. தெளிவு இருக்கும் வரை எதுவும் எம்மை பயம்கொள்ளவைக்காது
    மடியில் கனம் இருந்தால் பயம் வந்துதானே ஆகும்

    அருமையான அர்த்தமுள்ள பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  50. மனதில் கணம் இருந்தால் மடியில் கணம் வரும்... அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  51. இதுவரை அறிந்திராத செய்திப் பகிர்வுகளோடு வாழ்க்கையில் பயமின்மையுடன் உலாவரத் தேவையான நற்சிந்தனையைத் தரும் பதிவுக்கு நன்றியும் பாராட்டும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  52. //'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்பது வேண்டாம்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை. எல்லா ஆற்றல்களும் உனக்குள்ளேயே உள்ளன... பயமில்லை... பயமில்லை என்று எப்போதும் முழங்கு;//

    செம... த.ம 27

    பதிலளிநீக்கு
  53. இன்றுதான் வலைப்பக்கம் வரும் வாய்ப்புக் கிடைத்தது. தாமதமான வருகைக்கு மன்னிச்சூ!
    பணம், அதைவிட அதிகமாகப் புகழ் என்று அலையும் மனிதர்களை ஒரு விநாடி எண்ணிப் பார்த்தது மனசு & வினோபாஜி மிகமிக உயரமாகத் தெரிகிறார். என்னே ஒரு பண்பு! சந்திரமுகி பாடல் கேட்டிருக்கிறேன். ஆயின்... இவ்வளவு உன்னிப்பாய் வரிகளைக் கவனித்ததில்லை. அதான் டி.டி.! மிகப் பயனுள்ள பகிர்வை வழங்கியிருக்கிறீர்கள். அருமை!

    பதிலளிநீக்கு
  54. தங்களது கருத்தினூடே ஒரு கதையையும் ஒரு நிகழ்வையும் எடுத்துச் சொன்ன பாங்கு பாராட்டுக்குக்குரியது. பதிவை இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  55. மற்றவர்களை பாராட்டி ஊக்குவிப்பத்தில் நீங்கள்தான் இணைய முன்னோடி!

    பதிலளிநீக்கு
  56. உங்கள் பாணி தனிப்பாணி

    நல்ல பதிவு
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  57. நல்ல உதாரணங்களுடன் விளக்கம்.உங்கள் பகிர்வுகள் எப்பொழுதும் சிந்திக்க வைக்கிறது.

    பதிலளிநீக்கு
  58. புகழ், பாராட்டு இவற்றில் மயங்கி விட்டால் பின் செயல்பட முடியாது.
    மனதில் கனம் இல்லாமல், தலையில் கனம் இல்லாமல் வாழக் க்ற்றுக் கொள்வது நல்லது தான்.
    அருமையான கருத்துக்கள் அடங்கிய பதிவு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  59. " 'இவனை நம்பு அல்லது அவனை நம்பு' என்பது வேண்டாம்... முதலில் உன்னிடமே நீ நம்பிக்கை வை." என்ற சுவாமி விவேகானந்தர் வழிகாட்டலைப் பின்பற்றுவோம்.

    பதிலளிநீக்கு
  60. அருமையான கருத்தும் அருமையான மேற்கோள்களும், நன்றி!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.