விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...! (பகுதி 13)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12) - படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்... வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

இவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கவிதைகள், நகைச்சுவைகளை ரசியுங்கள்... அதற்கு முன் மீண்டும் அதிரடி ஆரம்பம் :

பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைத்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி...


தீபாவளி தினத்தை முன்னிட்டு மாபெரும் கவிதைப்போட்டி நடத்தி அதில் வெற்றியும் அடைந்துள்ளோம்... தணியாத தாகத்துடன் மீண்டும், உழவர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டி நடத்த உள்ளோம்... போட்டியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் இந்தத் தகவல்... போட்டிக்கான தலைப்பு (இந்த முறை புதுமையாக : தலைப்புகளை நீங்களும் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்... எது சிறந்த தலைப்பு என்பதை நடுவர்கள் இறுதியில் எடுத்துக் கொள்வார்கள்; மற்றும் போட்டிக்கான நிபந்தனைகள் அடங்கிய விபரங்கள் மிக விரைவில் பதிவாக ரூபன் மற்றும் எனது வலைத்தளத்திலும் வெளிவரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்... மீண்டும் ஒருமுறை : போட்டியாளர்கள் தங்களை தயார் செய்து கொள்ளுங்கள்... பரிசுகள் சிறப்பாக...!

முயற்சி அசைந்தால்...?

கடல் அசைந்தால் அலை...!
கற்பனை அசைந்தால் தான் கவிதை...!
சிறகு அசைந்தால் தான் பறவை...!
சிந்தனை அசைந்தால் தான் மனிதன்...!
உளி அசைந்தால் தான் சிலை...!
உள்ளம் அசைந்தால் தான் உறவு...!
விதை அசைந்தால் தான் மரம்...!
குருதி அசைந்தால் தான் உடல்...!

ஆம் தோழர் தோழியரே...!
எதிலும் முயற்சி அசைந்தால் தான் வெற்றி...!
கல்வி

கல்விக்கு ஏது ஈடு இணை-அது
வாழ்க்கைப் பாதையின் வழிகாட்டி...!
கற்றது நாளும் வீணாகாது அதை நீ
உணர்ந்து கற்றால் இல்லை இடர்...!
வாழ்வில் நீ எல்லாம் பெறலாம் -
ஈடாகுமா கற்ற கல்விக்கு...?
கல்வி-இல்லாதவையும் இவ்வையம்
எல்லாம் உடைய செல்வந்தன் ஆக்கிவிடும்...!
கல்விக்கு ஒருநாளும் இல்லை ஓய்வு...!
முயன்றால் அதை நீ பெறலாம்...!
இல்லானை இல்லாளும் மதியாள்
கல்லானை ஒருவரும் மதியார்-எனவே
கல்வியை உனதாக்கிக் கொள்...!
எது அழகு...?

ஈடில்லை இச்சொல்லுக்கு
ஏனெனில் இச்சொல்லே அழகு...!

அழகு - தோலின் நிறம் என்பார் மூடர்
அழகு - நாம் நினைக்க நினைக்க
இன்பம் ஏற்படுத்துவது என்பர் அறிஞர்.
அழகு ஒவ்வொரு இதயத்திலும்
ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துவது
என்பர் கவிஞர்.

இளைஞரின் உள்ளத்தில் -
ஒரு யுவதியையும்,
கவிஞனின் உள்ளத்தில் -
ஒரு சோலையையும்,
கலைஞனின் உள்ளத்தில் -
ஒரு சித்திரத்தையும்,
பறவை நேசனின் உள்ளத்தில் -
ஒரு பறவையையும்,
ஆசிரியரின் உள்ளத்தில் -
ஒரு மாணவனையும்,
தோட்டக்காரனின் உள்ளத்தில் -
ஒரு பூந்தோட்டத்தையும்,

ஏற்படுத்தும் ஆற்றலுடையது -
அது தான் அழகு...!
விழிப்புணர்வு

வல்லரசு என்று சொல்லி
ஆயிரம் கோடி
செலவில்
அணு ஆயுதச் சோதனை
இன்றும் பல பட்டினிச் சாவுகள் !

நாடு சுடுகாடாய்
இருப்பதால் என்னவோ
உலக அதிசயமாய்
ஒரு கல்லறை !

வாசலில் இருக்கும்
குருடனைக் கடந்து
கோயில் உண்டியலில்
பணம் போடுவது -
என்ன புண்ணியமோ...?

மதசார்பற்ற நாட்டில்
மதவெறியால்
மாண்டொழியும் மனிதர்கள் !
எப்போது மலரும் -
இந்த புதிய பாரதம்...?
வெற்றியின் விலாசம்

விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல...!
வெற்றியைக் கைக்கொள்ளச்
செய்யும் மந்திரம்

நாணல் வளைந்து கொடுப்பது
வெட்கத்தினால் அல்ல
முறியாமல் இருக்கக் கையாளும் தந்திரம்

சமாதானம் செய்வது
சரணடைவதற்காக அல்ல
சண்டையைத் தவிர்க்கச் செய்யும் யாகம்

மவுனம் காப்பது தாழ்வதற்காக அல்ல
தடைகளைத் தவிர்த்து வாழ்வதற்காகச் செய்யும் தியாகம்
அர்த்தங்கள்

ஒவ்வொரு விடியலுக்கும் ஓர் அர்த்தமுண்டு
துன்பத்தின் முடிவு மகிழ்ச்சி என்று.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஓர் அர்த்தமுண்டு
வீழ்ச்சியெல்லாம் தோல்வியில்லை என்று.

இயற்கை இத்தனை அர்த்தங்களைக் காட்ட முடியும் என்றால்
ஏன்
ஒரு மனிதனால் அது முடியாது ?

நாம் வாழ்வது ஒரு முறை...
நம்மை வாழ்த்தட்டும் தலைமுறை...!

கொஞ்சம் ஹா... ஹா... + ஹிஹி...

தயாரிப்பாளர் : படத்தோட பெயரை கேட்டதும் பள்ளி, கல்லூரி உட்பட எல்லோருக்கும் அதிரணும்... அப்படி ஒரு தலைப்பு சொல்லுங்க...
இயங்குனர் : "SUNDAY - WORKING DAY"

எங்க அப்பாவுக்கு நான் கதவு மாதிரி...!
ஏன்டா, அவ்வளவு பாதுகாப்பா இருக்கியா...?
அதெல்லாம் இல்லைடா, என்னை அடிக்கடி சாத்துவாரு...!

உங்க பையனும் அவன் பரிட்சை பேப்பரும் ஒண்ணு...!
ஏன் அப்படி சொல்றீங்க...?
இரண்டையும் திருத்தவே முடியாது...!

ஏன் சார் அடிக்கிறீங்க...?
நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன், கேள்வி கேட்டால் சந்திரனுக்கும் சூரியனுக்கும் வித்தியாசம் தெரியலே...!
யோவ்.. அவனுக்காவது அதைப் பற்றி வித்தியாசம் தெரியலே... உனக்கு என் பையனுக்கும், உன் பையனுக்கும் வித்தியாசம் தெரியலே...!

சாதிப்பதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை

1) மேரிகியூர் ரேடியத்தை கண்டறிந்த போது வயது 26
2) பகத்சிங் சரித்திரத்திற்கே ரத்ததானம் செய்த போது வயது 23
3) நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவிலிருந்து பூமியை ரசித்த போது வயது 28
4) இயேசு பெருமான் சிலுவை சுமந்து முள் மகுடம் தரித்த போது வயது 33
5) பாரதி தன் சாதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கொண்டபோது வயது 39
6) ஹெர்பர்டென்சிங் இமயத்தில் நின்று இந்தியாவைக் கண்ட போது வயது 28
7) காமா அம்மையார் தேசியக் கோடியை உலகிற்கு முதன் முதலில் அறிமுகப்படுத்தியபோது வயது 24

உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்கு பதிவிட வாய்ப்பளித்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சேரட்டும்...

நடக்கப் போகும் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற விட்டுக் கொடுக்காமல் கலந்து கொண்டு சிறப்பியுங்கள்... மிக்க நன்றி நண்பர்களே...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வணக்கம்
  தனபால்(அண்ணா)

  பள்ளிக்குழந்தைகளின் படைப்பு.. மிக அருமையாக உணர்சி மிக்க கருத்துக்கள்.
  விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல
  நல்ல தலைப்பு.....சூப்பர்...
  கட்டுரைப்போட்டிக்கான பதிவையும் வெளிட்டமைக்கு மிக்க நன்றி வாழத்துக்கள் அண்ணா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. இப்பவே இப்படி அசத்தும் எதிர்க்கால பதிவர்களின் கருத்து ஓவியங்கள் அனைத்தும் அருமை !

  பதிலளிநீக்கு
 3. அன்பின் திரு தனபாலன்,

  ’விட்டுக்கொடுப்பது வீழ்வதற்காக அல்ல’ தலைப்பே ஆயிரம் கவிதைகளும், கதைகளும் சொல்கிறதே.. ’விழிப்புணர்வு - விறுவிறுப்பு! அர்த்தங்கள் ஆயிரம், ஆயிரம்!!ஜோக்ஸ் எல்லாமே சூப்பர். சாதிப்பதற்கு வயதில்லை - உற்சாகம், ஊக்கம்! நீல வண்ணத்தில் பெயர்கள் பளிச்சிடுவதால், லிங்க் கொடுத்திருப்பதாக நினைத்து தேடினேன்..

  அனைத்தும் அருமை! வாழ்த்துகள்.
  அன்புடன்
  பவள சங்கரி

  பதிலளிநீக்கு
 4. குழந்தையின் படத்தில் ஆரம்பித்து, கவிதையை கொட்டி, முடிவில் நகைசுவையாய் முடித்து இருந்தது அருமை சார் ! கட்டுரை போட்டி என்று சொன்னவுடன் எனக்கு ஸ்கூல் யாபகம் வந்து விட்டது :-)

  பதிலளிநீக்கு
 5. அனைத்து பதிவுகளும் மிகவும் அருமை... குறிப்பாக விழிப்புணர்வு.. பள்ளிக் குழந்தைகளிடம் இருந்து வரும் இப்படியான படைப்புகள் மனதிற்க்கு மகிழ்வை தருவதாக அமைகின்றது... :) கட்டுரை போட்டி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் சார்...

  பதிலளிநீக்கு
 6. கட்டுரை தலைப்பு நகர் வாழ் குழந்தையின் பார்வையில் விவசாயம்

  பதிலளிநீக்கு
 7. குழந்தைகளின் படைப்புகள் அபாரம் .
  'குருதி அசைந்தால்தான்ன உடல்'
  அருமை. கட்டுரைப் போட்டி மகிழ்ச்சி அளிக்கிறது. நகைச்சுவை அருமை

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் சகோதரா...! என்னால் நம்பவே முடியவில்லை பெரிய ஞானிகள் மேதைகள் மாதிரியல்லவா எழுதியிருக்கிறார்கள். ஒவ்வொன்றும் அற்புதம் நிச்சயம் அவர்களுக்கு நல்ல எதிர் காலம் உண்டு. தமிழையும் காப்பாற்றி விடுவார்கள்.
  வாழ்த்துக்கள்...!
  கட்டுரை போட்டி அறிய தந்தமைக்கும் நன்றி. வாழ்த்துக்கள் ....!

  பதிலளிநீக்கு
 9. என் மின்னஞ்சல் கிடைத்ததா? நீங்கள் கட்டுரை போட்டியில் ஈடுபட்டிருப்பதால் நேரம் இருக்காது பறவாய் இல்லை அவசரம் இல்லை நேரம் இருக்கும் போது பார்த்து கொள்ளலாம். சகோதரா சரி தானே.

  பதிலளிநீக்கு
 10. ’விட்டுக்கொடுப்பது வீழ்வதற்காக அல்ல’ அருமை. மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 11. முயற்சி அசைந்தால் ?

  மிகவும் ரசித்தேன் இதை எல்லாமே பொன் மொழிகள்....!

  பதிலளிநீக்கு
 12. குழந்தைகளின் முயற்சி அருமை. அவர்களின் பெயரையும் , பள்ளி, வகுப்பையும் குறிப்பிட்டிருந்தால் இன்னம் நலமாக இருந்திருக்குமே... முயற்சி கவிதை முக நூலில் பகிருங்களேன்....

  பதிலளிநீக்கு
 13. கட்டுரைப் போட்டி, மாணவர்களுக்கு மட்டுமா, அல்லது பதிவர்களுக்கு மட்டுமா, அல்லது யார் வேண்டுமானலும் பங்கெடுக்கலாமா?

  பதிலளிநீக்கு
 14. வழக்கம் போல், சிந்தனையைத் தூண்டும் பதிவுகள். எப்படித்தான் விதம் விதமாக படைப்புகளைத் தர உங்களால் முடிகிறது?

  பதிலளிநீக்கு
 15. முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் திரு.தனபாலன்.
  தமிழின் அடுத்த நிலை எப்படியிருக்கும்? - கட்டுரையின் தலைப்பு.

  பதிலளிநீக்கு
 16. வெற்றி விலாசம் அருமை. சிரிக்கக் கொடுத்துள்ள ஹாஹா ஹிஹி அதை விட அருமை. இந்த மாதிரி பதிவு போட்டவுடனே ஒரு சுட்டி அனுப்பிடுங்க. கட்டாயமா வந்துடுவேன். நன்றி. :))))

  பதிலளிநீக்கு
 17. பொதுவா நான் போட்டியிலே கலந்துக்கறதே இல்லை. என்றாலும் கட்டுரைகளுக்குத்தலைப்பு வரட்டும், பார்ப்போம். :)))

  பதிலளிநீக்கு
 18. வெற்றியின் விலாசம் மாணவ்ர்களிடம் கிடைத்தது ...பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 19. அருமையான பகிர்வு அண்ணா...

  கட்டுரைப் போட்டி குறித்து அறிந்தேன்.

  குழந்தைகளின் படைப்புக்கள் அருமை...

  நகைச்சுவை நகைக்க வைத்தது...

  பதிலளிநீக்கு

 20. சிந்தனை முத்துக்கள் சிந்திய குழந்தைகள்! அனைத்தும் அருமை!

  பதிலளிநீக்கு
 21. உணர்ச்சிமிக்க கருத்துக்கள்..
  தொடரட்டும் தங்கள் பதிவுகள்..

  பதிலளிநீக்கு
 22. சிறந்த பதிவு . வாழ்த்துகள்
  கட்டுரை தலைப்பு
  பொங்கல் பண்டிகை ஏன் கொண்டாடுகிறார்கள்!

  பதிலளிநீக்கு

 23. சிறார்கள் சிந்திக்கிறார்கள். எண்ணியதைப் பகிரவும் செய்கிறார்களென்பது வளமான எதிர்கால இந்தீயாவை உருவாக்கும் பணி தொய்வடையாது என்னும் நம்பிக்கையைத் தருகிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. குழந்தைகள் பதிவு மிக ஊக்குவிக்கும் முயற்சி.
  அனைத்துக் குழந்தைகளிங்கும் இனிய வாழ்த்து.
  அடுத்த பொங்கல் அறிவிப்பு அவர்களிற்கு ஆர்வம் தரும் ஊக்குவிப்பே.
  முயற்சிக்கும் இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 25. குழந்தைகளின் பகிர்வு அருமை... கட்டுரைப் போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 26. கொஞ்சமில்ல நிறையவே சிரிச்சாச்சு!! சாதனை எந்த வயசுலயும் நடத்தலாம்ன்னு தெரியும். ஆனா, சாதித்தவர்களை பற்றி இன்னிக்குதான் தெரிந்துக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 27. குழந்தைகளின் முயற்சி அனைத்தும் நன்று. பகிர்வுக்கு நன்றி அண்ணா!

  பதிலளிநீக்கு
 28. அருமை தோழர்

  மலர்தரு தளம் மூலம் வந்தேன்.

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 29. ’விட்டுக்கொடுப்பது வீழ்வதற்காக அல்ல’ மிகமிக அருமை!
  பள்ளிச் சிறார்களின் படைப்புகள் உள்ளம் கவர்ந்தன.
  ஒவ்வொன்றும் ஒன்றையொன்று மிஞ்சுகிறதே...

  ரூபன் - பாண்டியன் சகோதரர்களின் கட்டுரைப் போட்டி
  சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துக்கள்!

  நல்ல பதிவும் பகிர்வும்! உங்களுக்கும்
  நல் வாழ்த்துக்கள் சகோ!

  பதிலளிநீக்கு
 30. விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல

  தலைப்பும் தகவல்களும் படமும் அருமை.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 31. ஒவ்வொரு கவிதையும் சிந்திக்க வைக்கிறது..அருமை! நகைச்சுவையும் நன்றாய்ச் சிரிக்கவைத்தது..ஞாயிறு பள்ளி என்றால் எனக்கே ரொம்ப அதிர்ச்சிதான். :)
  போட்டி வெற்றிபெற வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 32. பகிர்வுக்கு நன்றி. வழக்கம் போல் அசத்தல்.

  பதிலளிநீக்கு
 33. அற்புதமான பதிவு\
  ஆழமான கருத்துடன் கூடிய
  கவிதைகளும் பழமொழிகளும்
  உள்ளம் கவர்ந்தது\
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 34. கருத்துக்களும் அருமை. நகைச்சுவையும் அருமை. இரண்டையும் இரசித்தேன். கடைசி நகைச்சுவையில் ‘உனக்கு என் பையனுக்கும் உன் பையனுக்கும் வித்தியாசம் தெரியலே.’ என்றிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 35. வலைப்பதிவர்களுக்கு புத்தாண்டு செய்தியாக கட்டுரைப் போட்டி அறிவிப்பு. நன்றி! சுவையான பல தகவல்கள் அடங்கிய பதிவு.

  பதிலளிநீக்கு
 36. சிறந்த முயற்சியான
  தீபாவளிக் கவிதைப் போட்டி
  வெற்றிக்கு வாழ்த்துவதோடு
  பொங்கல் நாள்
  கட்டுரைப் போட்டி வெற்றி பெற
  எனது வாழ்த்துகள்!
  "முயற்சி அசைந்தால்..." என்ற பதிவு
  எனக்குப் பிடித்திருக்கிறது.
  தங்கள் பணி தொடர
  வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 37. அனைத்து கவிதைகளும் அருமை. போட்டியில் பங்குபெறவிருக்கும் அனைவருக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 38. கட்டுரைப் போட்டி தகவலுக்கு நன்றி தனபாலன்.

  கவிதைகள் அருமை.

  பதிலளிநீக்கு
 39. அனைத்துமே அருமை.. தொகுத்தளித்த தனபாலன் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..

  +++++++++

  வணக்கம்...

  நீங்க செல்போன் வச்சிருக்கீங்களா?

  அப்போ கண்டிப்பா ஆண்ட்ராய்ட் போனாதான் இருக்கும்..

  சரியா...?

  உங்களோட செல்போனை மத்தவங்க அநாவசியமா பயன்படுத்த கூடாதுன்னு நினைக்கிறீங்களா?

  அப்போ தொடர்ந்து படிங்க...

  ஸ்மார்ட் போன்களை பாதுகாக்க புதிய சாப்ட்வேர்..!

  பதிலளிநீக்கு
 40. விட்டுக் கொடுப்பது -
  வீழ்வதற்காக அல்ல!..
  முத்தான வாசகம்!..
  பள்ளிக் குழந்தைகளின் படைப்புகள் அனைத்தும் அருமை.
  நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 41. விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல

  தலைப்பும் அதில் இடம்பெற்றுள்ள தகவல்களும் அருமை

  வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 42. அருமைய◌ான படைப்புக்கள்...நன்றி இப்பகிர்வுகளுக்காய்ஃமுயற'சி வெற்றி பெறவாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 43. கவிதைகள் தொகுப்பு அருமை...

  கட்டுரைப்போட்டியா.. ரைட்டு...

  துணுக்குகளும் அருமை...

  பதிலளிநீக்கு
 44. அனைத்துமே அருமை. அசத்துகிறார்கள் குழந்தைகள்.

  பதிலளிநீக்கு
 45. குழந்தைகளின் முயற்சி அருமையானவை.... ஹா ஹா ஹி ஹி கொஞ்சம் சிரிக்கவைத்தது..
  தலைப்பு - யோசிக்கிறேன்......

  பதிலளிநீக்கு
 46. சகோதரருக்கு வணக்கம்
  அற்புதமான தலைப்போடு பள்ளிக்குழந்தைகளின் படைப்புகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. பிஞ்சுகளின் கொஞ்சு தமிழில் அனைத்தும் அருமையாக வந்துள்ளது அவர்களுக்கு எனது அன்பான பாராட்டுகள்
  ============
  பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டிக்கான தங்கள் பதிவுக்கு நன்றி.அனைத்தும் சகோதரர் ரூபன் அவர்களின் முயற்சி தான். எனது பங்கு மிகச் சிறியதே. தங்கள் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்போடு போட்டி சிறப்பாக அமையும் என்பதில் பெருமகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்..

  பதிலளிநீக்கு
 47. அருமையான விஷயம் டிடி.. மேலதிக தகவல்களுக்காக காத்துள்ளேன்

  பதிலளிநீக்கு
 48. விட்டுக்கொடுப்பது வீழ்வதற்கு அல்ல! அருமையான வார்த்தை! பள்ளிக்குழந்தைகளின் படைப்புக்கள் அனைத்தும் அருமை! பகிர்வுக்கு நன்றி! பொங்கல் போட்டிக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 49. குழந்தைகளின் படைப்புகள் அருமை...இந்த பதிவின் தலைப்பே அசத்தலா இருக்கு!!வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 50. முத்து முத்தாக இனிய நற் கருத்துக்களுடன் நகைச்சுவைகளும்
  மனதைக் கவர்ந்து செல்கிறது அருமை ! உங்களுக்கு என் நன்றி
  கலந்த வாழ்த்துக்கள் சகோதரரே கட்டுரைப் போட்டித் தகவலிற்கும் பகிர்விற்கும் .

  பதிலளிநீக்கு
 51. தங்களோடு இணைந்து ஒரு கவிதைப்போட்டி வைக்க ஆசை , தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு
 52. போட்டியில் கலந்து கொள்ளப்போகும் அனைவருக்கும்,இதை நடத்த இருப்பவர்களுக்கும் ,நடுவர்களுக்கும் வாழ்த்துக்கள் ! போட்டிக்கான தலைப்புக்காக காத்திருக்கிறேன் :)

  பதிலளிநீக்கு
 53. கட்டுரைப் போட்டி இனிதே நடைபெற வாழ்த்துக்கள்.
  விட்டுக் கொடுப்பது வீழ்வதற்காக அல்ல என்கிற தலைப்பில் குழந்தைகளின் கருத்துக்கள் அத்தனையும் முத்துக்கள்.
  பகிர்விற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 54. பள்ளி மாணவர்களது ஆக்கங்கள் அனைத்தும் மிக அருமை.அவர்களிற்கு வாழ்த்துக்கள்.
  நல்லதொரு பகிர்வுடன் அமைந்த பதிவு.

  பதிலளிநீக்கு
 55. அருமையான படைப்புக்கள் பகிர்வுக்கு நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 56. வெற்றியின் விலாசம்..... அருமை அருமை.
  அனைத்தும் அருமையாக இருந்தது தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 57. பள்ளிக் குழந்தைகளின் படைப்புக்கள் அத்துனையும் அருமை. அந்த இளம் படைப்பாளிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.
  வழக்கம் போல தாங்கள் இதைப் படைத்த விதம் மிக மிக அருமை.
  த.ம.+1

  பதிலளிநீக்கு
 58. சிந்தனையைத் தூண்டும் பதிவு ந்ன்றி ஐயா. கட்டுரைப் போட்டி வெற்றி பெற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 59. அனைத்துமே அருமை! எதிர்கால சிப்பிகளின் படைப்புகள் அருமை! வியக்க வைக்கிறது!.ஹா ஹா super!போட்டி வைத்து இப்படி எல்லோரையும் ஊக்குவிப்பதற்கு எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே!

  பதிலளிநீக்கு
 60. மாணாக்கரின் அனைத்து படைப்புகளும் அருமை ஐயா. அனைத்து செல்வங்களுக்கும் இனிய வாழ்த்துகள்.கட்டுரை போட்டி குறித்து அறியத் தந்தமைக்கு நன்றிகள் பல.

  பதிலளிநீக்கு
 61. அனைத்தும் அருமை. அதிலும் நகைச்சுவைகள் மிக அருமை. பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 62. பதிவு அருமை.... கட்டுரை போட்டியில் கலந்து பங்கேற்கிறேன்..

  பதிலளிநீக்கு
 63. நிறையவே ஹாஹா.
  குழந்தைப் படம் பிரமாதம்.
  தலைப்பு: பின்பார்வை பலமா?

  பதிலளிநீக்கு
 64. குழந்தைகளின் படைப்பு படிக்கப் படிக்க ஆச்சர்யமூட்டுவதாக இருக்கிறது. விட்டுக் கொடுப்பதும், வளைந்து கொடுப்பதும் வீழ்வதற்கு அல்ல; சாதனைக்கு வயது ஒரு பொருட்டல்ல என்ற வார்த்தகைகள் ரொம்பவும் நிஜம்.
  'கதவு' ஜோக் ரொம்பவும் ரசித்தேன். எல்லா 'ஹா ஹா' க்களும் சிரிக்க வைத்தன.

  குழந்தைகளுக்குப் பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 65. முயற்சி அசைந்தால் கவிதை அருமை..குழந்தைகளா இந்த அளவுக்கு எழுதுகிறார்கள் என்று வியப்பாக இருக்கிறது..கட்டுரைப்போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 66. என்னாது போட்டியா... ?
  பொருத்திருந்து பார்ப்போம் என்னா நடக்குதென்று

  பதிலளிநீக்கு
 67. சாதிப்பதற்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை என்று உதாரணங்களுடன் காட்டியமை நன்று.போட்டிக்காக காத்திருக்கிறேன்

  பதிலளிநீக்கு
 68. போட்டி குறித்த விபரங்களை தெரிவிக்கவும். என் மின்னஞ்சல் duraidanielraj@gmail.com

  பதிலளிநீக்கு
 69. சாதாரண குழந்தைகளின் படைப்புகள் போலன்றி மிக சிறப்பாகச் செய்துள்ளார்கள். தொகுப்பிற்கு நன்றி
  'நல்ல காலம் அடிக்கடி சாத்தப்படும் கதவாக நான் இருந்ததில்லை.
  மறைந்த என் அப்பாவிற்கு நன்றிகள்

  பதிலளிநீக்கு
 70. குழந்தைகளின் உலகம்தான் பெரியவர்களின் உலகத்தைவிட அழகானது என்பதை வாய்ப்புக்கிடைக்கும்போதெல்லாம் அவர்கள் செய்துகொண்டே இருக்கிறார்கள்.. அதைப் பதிவிட்ட உங்கள் திறனும் அருமை அய்யா.
  கட்டுரைப் போட்டியா...? கலக்குங்க... நடத்துவோர்க்கு முதலில் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 71. மாணவர்களின் திறமை அபாரம், அதைத் தொகுத்து வெளியிட்டு அவர்கள் மத்தியில் உயர்ந்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 72. குழந்தையின் புகைப்படமும் கட்டுரையும் அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 73. தொன்றுதொட்டு வாழ்ந்திட
  விட்டுக்கொடுத்தல் நலம்
  என்று நெஞ்சில் உறையும்படி அழகிய
  புனைவினைக் கொடுத்தீர்கள் நண்பரே.

  கவிப்போட்டி வெற்றியுற நடத்தி
  மீண்டும் கட்டுரைப்போட்டி நடத்தும் நண்பர் ரூபனுக்கு
  நன்றிகளும் வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
 74. கவிதைகள் மிக அருமை. இறுதியில் நகைச்சுவையும் மிக மிக அருமை

  பதிலளிநீக்கு
 75. தமிழ் பதிவர்கள் இணைந்து நடத்தும் மாதமிழ் தளத்தில் தங்களின் பதிவுகளையும் இணைத்து உதவுமாறு அன்போடு வேண்டுகிறோம்

  http://maatamil.com

  நன்றி

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.