🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



வாழ்ந்து கெட்டவர்கள்...!

வணக்கம் நண்பர்களே : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் வாடா நைனா... வாழ்வு யார் பக்கம் ? - அது நல்லவர் பக்கம்...! வாழ்வு யார் பக்கம் ? - அது நல்லவர் பக்கம்...! அட ஆடியில் செய்தவன் - ஆவணி வந்ததும் அனுபவிப்பானடா...! அவன் தேடிய வினையை வீட்டுக்கு வரலாம் பின்னால் பாரடா...!



© காளி கண்ணதாசன் இளையராஜா 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1980 ⟫


வாப்பா மனசாட்சி நைனா... இன்னைக்கு என்ன சொல்லப் போறே...?

இல்லே, ஒரு சந்தேகம்... அவரவர் முன்னோர்கள் சொத்தை எல்லாம் வச்சிக்கிட்டு, கூடப் பிறந்தவர்களையும் ஏமாத்திட்டு, பணம் இருக்கிற வரைக்கும் சுகவாசியா இருந்திட்டு, கடைசிக் காலத்திலே கஷ்டப்படுபவர்களைத் தான் வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்றாங்களோ...?

அட... அழியும் பணத்தை விடு... தாங்க முடியாத இழப்புகளைக் கூட தாங்கிக் கொண்டு, தவறான வழியில் செல்லாமல், தனக்கென வாழாத தியாக உள்ளங்களும் இருக்கத்தான் செய்கின்றன... நீ சொல்றது உழைக்காத சோம்பேறிங்க நிலை... அவர்களுக்குச் சுயநலமே பிரதானம்... அந்த சுயநலத்தை ஒரு நாள் அவர்களின் வாரிசுகளின் மூலம் உணர்வார்கள்... ஆனால் அவர்கள் தான் பலரின் முன்னேற்றத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் முதல் வழிகாட்டிகள்...! தொடர்ந்து ஏழு தலைமுறையாகச் சிறப்பாக வாழ்ந்த / வாழும் குடும்பங்களைச் சொல்ல முடியுமா...?

அப்பன் சொத்தை, பாட்டன் சொத்தை தூக்கிப் போடுடா; சொந்தக் காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாருடா; ஆயுள் ரேகை தேயும் வரை உழைப்போமடா; உழைச்சு நாம ஆயுளத்தான் வளர்ப்போமடா; வாழும்வரை மத்தவன மதிப்போமடா-மதிச்சுப்புட்டா வாழ்ந்தபின்னும் இருப்போமடா.! வாடா வாடா தோழா; நாம வாழ்ந்து பார்ப்போம்; வாழ்ந்து பார்ப்போம் வாடா...



© சிவகாசி பேரரசு ஸ்ரீகாந்த் தேவா 🎤 சங்கர் மகாதேவன் @ 2005 ⟫

ம்... பதிவின் விசயத்திற்கு வந்துட்டே...! எல்லோரின் வாழ்விலும் வளமும் வறுமையும் மாறி மாறித் தான் வரும்... வறுமையிலே இருக்கிறவங்க திடீரென்று பணக்காரங்க ஆயிட்டா, அவங்க குணத்திலும் நடவடிக்கையிலும் திடீர் மாற்றம் நடக்கும்... நல்லா பரம்பரை பரம்பரையாக பணக்காரர்களாக இருந்தவங்க திடீரென்று ஏழையாயிட்டாங்கன்னு வைச்சிக்கோ, அவங்ககிட்டே திடீரென்று குணநலம் மாறாது... பெருந்தன்மையாகவே இருப்பாங்க... ஆனா அவங்களை வாழ்ந்து கெட்டவங்கன்னு அடையாளைப்படுத்துறோம்...

திடீர் பணக்காரனுக்கு திடீர் டாம்பீகம் வர்ற மாதிரி, திடீர் ஏழைக்கு ஏதாவது குணநலம் திடீரென்று மாறாதா ? அல்லது எதுவுமே வராதா ? அது எப்படி...?

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே...! என்று இதற்காகத்தான் அந்தக் காலத்திலேயே சொல்லி வைச்சாங்க ! ஒரு உண்மை சம்பவத்தைக் கேளு :

சுவாமி விவேகானந்தர் பாரீஸ் நகரிலிருந்த போது, ஒரு கோச் வண்டியில் ஏறி நகரை உலா வரக் கிளம்பினார்... அவருடன் ஒரு ஐரோப்பியப் பெண் சிஷ்யையும் பயணம் செய்தார்... குதிரைகள் பூட்டிய அந்த கோச் வண்டியை ஓட்டிச் சென்றவர் வழியில் வசதியான உடை அணிந்த இரண்டு குழந்தைகளையும், அவர்களை அழைத்து வந்த பெண்ணையும் பார்த்து வண்டியை நிறுத்தினார்... வண்டியிலிருந்து இறங்கிச் சென்று, அந்த இரண்டு குழந்தைகளிடமும் பேசி விட்டு, தட்டிக் கொடுத்து விட்டுத் திரும்பினார்...

சுவாமி விவேகானந்தரும், சிஷ்யையும் ஆச்சரியப்பட்டனர்... வண்டி ஓட்டுநரிடம் கேட்டனர், "வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களைப் போல உடை அணிந்த அந்தச் சிறுவர்களுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு...?" அதற்கு அவர், "அவர்கள் என் குழந்தைகள் தான்... அவள் என் மனைவி" என்று கூறி விட்டு, பாரீசில் உள்ள ஒரு பிரபலமான வங்கியின் பெயரைச் சொல்லி, "கேள்விப்பட்டிருக்கிறீர்களா.."? என்று கேட்டார்... "ஓ... நன்றாகத் தெரியுமே...! அந்த வங்கி தான் பாரீசிலேயே பெரிய வங்கி ஆயிற்றே... எனக்குக் கூட அந்த வங்கியில் கணக்கு உண்டு... ஆனால் அந்த வங்கி திவாலாகி விட்டதாகக் கூறுகிறார்களே !" என்றார் ஐரோப்பிய சிஷ்யை...

"அந்த வங்கியின் உரிமையாளன் நான் தான்... வங்கி இப்போது இக்கட்டில் உள்ளதும் உண்மை தான்... கடன்களை வசூல் செய்து சீர் செய்வதற்கு சில மாதங்கள் ஆகும்... அதுவரை அடுத்தவர்களுக்குச் சுமையாக இருக்க விரும்பாமல், சொந்த வீட்டை விற்றேன்... ஆனால் வசதியான ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, எனது குடும்பத்தைத் தங்க வைத்துள்ளேன்... வீட்டிலுள்ள சில பொருட்களையும், எனது மனைவியின் நகைகளைச் சிலவற்றை விற்றும் இந்த குதிரை வண்டியை வாங்கினேன்... இப்போது இந்த வண்டியை ஓட்டி ஓரளவு சம்பாதித்து வருகிறேன்... எனது மனைவியும் அவரின் திறமைக்கேற்ப சிறிதளவு சம்பாதிக்கிறார்... இருவரும் சம்பாதித்து குழந்தைகளுக்கு நல்ல கல்வியைக் கொடுத்து வருகிறோம்... நிலைமை கொஞ்ச நாளில் சீராகி விடும்... அதுவரை யாருக்கும் சிரமம் தராது நாமே உழைத்து, நிலைமையைச் சமாளித்து விடலாமே" என்றார் அவர்...

என்னோட ராசி மட்டும் எல்லாத்துக்கும் சேரும்... என்னால ஆன மட்டும் எல்லாருக்கும் லாபம்...2 எட்டு மட்டும் வச்சிப்புட்டா கீழிறங்கி வாறதில்லே... புள்ளி மட்டும் வச்சிப்புட்டு விட்டுப்புட்டு போறதில்லே... ஆகாயத்தைத் தேடி நான் போறதில்லே பாரு... ஆண் பிள்ளை சிங்கம் அட என்னைப் போல யாரு... நான் உள்ளதைச் சொல்லுறேன்... சொன்னதைச் செய்யுறேன்... ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு ஒதுங்கு...



© மாவீரன் கங்கை அமரன் இளையராஜா 🎤 மலேசியா வாசுதேவன் @ 1986 ⟫

"சபாஷ்...! இவர் தான் சரியான வேதாந்தி...! எந்த நிலை வந்தாலும், சூழ்நிலைக்கு இரையாகி விடாமல், தொடர்ந்து மனத்திடத்தோடு உழைத்துக் கொண்டிருக்கிறார்... வாழ்க...!" என்று வாழ்த்தினார் சுவாமி விவேகானந்தர். குதிரை வண்டிக்காரர் மாவீரன் தான் மனசாட்சி...!

உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா - கெடுக்கிற நோக்கம் வளராது... மனம் கீழும் மேலும் புரளாது... திருடாதே பாப்பா திருடாதே... வறுமை நிலைக்குப் பயந்துவிடாதே... திறமை இருக்கு மறந்து விடாதே...→அப்படின்னு சொல்றே...!



© திருடாதே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் S.M.சுப்பையா நாயுடு 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫

ஆம்... வாழ்ந்து கெட்டவர்கள் என்றால், வறுமைக்குப் பலியாகாமல், தொடர்ந்து அயராது உழைத்து, மீண்டும் வாழ்க்கையைத் தனது மனதளவில் திருப்தியாக வடிவமைத்துக் கொண்டு, எல்லோரிடமும் பெருந்தன்மையாக நடந்து, சிறப்பாக வாழ்பவர்கள்...!
மனதில் கனம் இருந்தால்...? அறிய இங்கே சொடுக்கித் தொடரலாம். அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வாழ்ந்து கெட்டவர்கள் என்னும் வார்த்தையின் பொருளினை முழுமையாய் இன்றுதான் அறிந்தேன் ஐயா. நன்றி ஐயா. இரண்டுகால் குதிரை அருமை.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    தனபாலன்(அண்ணா)

    இந்தப் பதிவின் மூலம் மனித வாழ்க்கையின் யதார்த்தம் உணரவைத்தது பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. அருமையான செய்தி...!
    //வறுமை நிலைக்கு பயந்துவிடாதே... திறமை இருக்கு மறந்து விடாதே...//
    பொன்வரிகள்...!
    வாழ்த்துக்கள்...
    த.ம.+1

    பதிலளிநீக்கு
  4. மிக அருமையான கருத்துள்ள பதிவு! அதுவும் சரியாக திரைப்படத்திலிருந்து மேற்கோள்கள்!! பணம் இருக்கிறதோ இல்லையோ, உழைக்கும் கரங்களும், மனமும் உள்ளவருக்கு வாழ்வில் தாழ்வு என்பதே கிடையாது. இறைவனின் வாழ்த்தும் உண்டு. "உழைப்பவன் வீட்டுக்குள் வறுமை எட்டிப் பார்க்காது. உழைப்பவனுக்கு எந்த வேலையும் இழிவல்ல; சோம்பல்தான் இழிவு".

    பதிலளிநீக்கு
  5. வாழ்ந்து கெட்டவர்கள் மீண்டும் முயன்று வாழ்வில் வளம் சேர்ப்பவர்கள். அருமையான பதிவு.
    பாடல் பகிர்வு மிக பொருத்தமாய் தேர்வு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  6. சோர்ந்து போகாமல் துவண்டு விழாமல் உழைத்து மீண்டும் முன்னுக்கு வர வேண்டும்... நல்லதொரு பகிர்வு....

    பதிலளிநீக்கு
  7. உழைக்கற நோக்கம் உறுதியாயிட்டா கெடுக்கற நோக்கம் வளராது! மிக அருமையான, ஆழமான வரிகள்! உங்களின் பயனுள்ள பகிர்வுகஅகு மனம் நிறைந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும் டி.டி.! (சூப்பரா ஓடற ரெண்டுகால் குதிரையை ரொம்பவே ரசிச்சேன்!)

    பதிலளிநீக்கு
  8. விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் குதிரையின் வேகத்தோடு இரண்டு கால்களில் தான் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. இந்தக் கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்குமா? குறுக்கு வழியில் சேர்க்கும் செல்வம் நிலைக்காது. உழைப்பைப் போலே வேறே தெய்வம் கிடையாது.

    பதிலளிநீக்கு
  10. வாழ்ந்து கெட்டவர்களுக்கான புதிய விளக்கம் கண்டேன். அருமையான பாடல்களை தந்தும், சுவாமி விவேகானந்தருடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுபற்றி சொல்லியும் அசத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. இதுவரை பதிந்த பதிவுகளில் ஆக சிறந்த ஒன்று...அருமை.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. உண்மையில் இரு கால்களில் வாழும் நாயை இங்கே காணுங்கள்.
    http://www.youtube.com/watch?v=7f1ovurzU2s
    விவேகானந்தர் நிகழ்வு கேள்விப்பட்டதில்லை. பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. கோச் வண்டிக்காரர் நம் எல்லோருக்கும் சிறந்த வழிகாட்டி.

    இப்பதிவும், பதிவாளர்களுக்கு நல்ல வழிகாட்டி.

    பதிலளிநீக்கு
  14. ஆஹா அருமையான பதிவு....வாழ்ந்து கேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே....!

    எழு தலைமுறை எதுக்குய்யா ரெண்டு தலைமுறையிலேயே வித்தியாசம் தெரிகிறது இப்போ.

    பதிலளிநீக்கு
  15. வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் என்ற சூழல் அறிந்து எந்த நிலையிலும் பண்பிழ்க்காமல் வாழ்வது சிறந்தது. of course, சொல்வதெளிது.

    பதிலளிநீக்கு
  16. மேல் சாதி கீழ் சாதி பார்த்து, கல்யாணத்தன்னைக்கு அண்டர் ஷேவ் பண்ண வந்தாங்க அப்போ....

    இப்போ அதே மேல் சாதி'காரங்க சலூன் வச்சிருக்காங்க பெயர் பியூட்டிஷன்....

    இப்போ கீழ் சாதி'காரங்க அங்கே போயி முடி வெட்டுராங்கன்னு நண்பன் ஒருத்தன் சொன்னான் உண்மைதான் போல...

    ஸோ சொல்ல வந்தது என்னன்னா உலகம் உருண்டை....!

    பதிலளிநீக்கு
  17. அயராது உழைத்தால்
    எந்தப் பாதிப்புகளிலிருந்தும்
    மீண்டு வளமாக வாழலாம்.
    நல்ல கருத்து
    விவேகனந்தர் வாழ்க்கைச் சம்பவத்துடன் தொடர்பு படுத்தி அழகாகச் சொன்னீர்கள்
    நன்றி

    பதிலளிநீக்கு
  18. உண்மைதானே!..

    எந்த நிலை வந்த போதும் சூழ்நிலைக்கு இரையாகி விடாமல் மனதிடத்துடன் உழைத்துக் கொண்டிருப்பவர்களைத் துன்பம் எந்நாளும் நெருங்குவதில்லை!.

    கருத்துச் செறிவுடன் கூடிய நல்ல பதிவு!..

    பதிலளிநீக்கு
  19. அற்புதமான பதிவு
    எதிர்பாராது வீழ்ந்தவர்களுக்கும்
    சந்தர்ப்ப சூழ் நிலையால்
    தாழ்ந்து கிடப்பவர்களுக்கும்
    நம்பிக்கையூட்டிப் போகும்
    அற்புதமானப் பதிவு தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  20. arumaiyaana thiraippaadal varigaludan ezhuthappattulladhu ippadhivu. Nalla karuththukkal endha nilaiyilum manam thalaraamal vaazha vazhi kattum padhivu.

    பதிலளிநீக்கு
  21. மிகச்சிறந்த பதிவு.

    இரண்டு கால்களில் மட்டுமே எழுச்சியுடன் ஓடும் குதிரைப் படத்தேர்வு இந்தப்பதிவுக்கு மிகவும் பொருத்தம். ;)

    பாராட்டுக்கள், பகிர்வுக்கு நன்றிகள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. வாழ்ந்து கெட்டவர்களுக்கான உதாரணக்கதை அருமை பொருத்தமான பாடல்களை இணைத்தது சிறப்பு.

    பதிலளிநீக்கு
  23. தன்னையும் தன் வருமானத்தையும் உணர்ந்து அதற்கேற்ப வாழ்ந்து கொண்டு திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் வெகு சிலரே. அவர்கள் எந்த நிலையிலும் ஒரே மாதிரி இருப்பவர்கள் சித்திரை என்று சிறுக்கவோ, பங்குனி என்று பருக்கவோ மாட்டார்கள். எப்பவும் ஒரே மாதிரியான குணத்தோடும் பெருந்தன்மையோடும் வாழ்வார்கள்.
    அகம்பாவம் கொள்ள மாட்டார்கள்.

    அருமையான பதிவு வழமை போல நன்றி வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  24. வாழ்வு யார் பக்கம் ? - அது நல்லவர் பக்கம்...!

    சங்கு சுட்டாலும் வெண்மை தரும் ..

    அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  25. அந்த வங்கி உரிமையாளரின் மனநிலை எல்லோருக்குமிருந்தால் உலகில் பிரச்சினை இல்லை.

    தனபாலன் பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  26. இரண்டு கால்கள் போனாலும் குதிரையின் ஓட்டம் குறையாது. அருமையான கருத்து ஓட்டம்

    பதிலளிநீக்கு

  27. dd, சிறப்பான பதிவு.. சுழலும் வாழ்க்கை வட்டம் நிச்சயம் மேலே வரும்.. பொறுத்திருப்போம்..

    பதிலளிநீக்கு
  28. அருமையான கட்டுரை .
    சொந்த காலில் நிற்க வேண்டும்.
    நம் நாட்டில் சிலர் தன் குடுபத்தையும் தன் பேரன் குடும்பத்தையும் நிலைக்கு தள்ளப் படுகிறார்கள். வளர்ந்த நாட்டில் படிக்க வைப்பதோடு சரி .பின்பு பொருள் ஈட்டி அவன் தன் வாழ்க்கையை தொடர முயல்வான் .விடுமுறை நாட்களில் ஒன்று கூடி மகிழ்வார்கள்

    பதிலளிநீக்கு

  29. நான் வாழ்ந்து கெட்டவன் இல்லை!
    பிறரை(உறவு) வாழவைத்து கெட்டவன்! ஆனால் ஆண்டவன் என்னை கைவிடவில்லை!

    பதிலளிநீக்கு
  30. வாழ்ந்து கெட்டவர்களுக்கு அடையாளமாய் சிம்பாலிக்கான
    அந்த ரெட்டைக் கால் குதிரை ரொம்ப பொருத்தம். இருந்தாலும்
    அது முன்னைப் போலவே வேகம் சிறிதும் குறையாமல் ஓடுது
    பாருங்க அங்க இருக்கு விஷயம். அருமை.

    பதிலளிநீக்கு
  31. அருமையான பதிவு... நன்றி நண்பரே .....

    பதிலளிநீக்கு
  32. வெகு நாட்களாக வேலை பளுவினால் பதிவை எழுதவும் படிக்கவும் முடியவில்லை, ஆனால் இன்று இந்த பதிவு படித்தது மனதுக்கு இதமாக இருந்தது..... மிகவும் நன்றி சார் !

    பதிலளிநீக்கு
  33. பணம் மட்டுமில்லை வாழ்கையில் எத்தனை இழப்புகள் வந்தாலும் நம்பிக்கையும் நாணயமும் துணையாகத் தலை நிமிரலாமென உணர்த்திய
    அருமையான பதிவு தனபாலன்!

    படமும் பாடல்கள் தெரிவும் கூடுதல் சிறப்பு!

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  34. விவரமான விவரிப்பு,நல்லதொரு பகிர்வு.நன்றி.
    த.ம 20

    பதிலளிநீக்கு
  35. சூழ்நிலைகள் சரியில்லாத போதும், தளராது உழைக்கும் மனோதிடம் நிரம்பியவர்களே உன்னதமானவர்கள். அருமையான பகிர்வு. இரண்டு கால் குதிரை அருமை!.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  36. அன்பின் திரு தனபாலன்,

    வரவர பெரிய ஞானியாகிக் கொண்டிருக்கிறீர்கள்! சர்வ சாதாரணமாக சில சினிமா பாடல்களை வைத்துக்கொண்டே அருமையான தத்துவங்களை அள்ளிவிடுகிறீர்களே.. சூப்பர்.. மிகவும் ரசித்தேன்..

    அன்புடன்
    பவளா

    பதிலளிநீக்கு
  37. பிறருக்கு பாரமில்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் போதும். உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும். மற்றபடி வாழ்வும் தாழ்வும் வந்து போய் கொண்டிருக்கும். அதை நாம் கருத்தில் கொள்ளாமல் இருக்க பழகி கொண்டால் போதும் எதுவும் நம்மை பாதிக்காது. DD

    பதிலளிநீக்கு
  38. தங்கள் எழுத்தின் தரம்
    இப்பதிவில் அதிகம் என்பேன்...
    தங்கள் வளர்ச்சிக்கு
    என் பாராட்டுகள்...
    சுருங்கக் கூறின்
    வாழ்ந்துகொண்டிருப்பவருக்கு
    வாழ்ந்தவர்கள் ஒரு பாடம்!
    தொடருங்கள்
    உங்கள் வழிகாட்டலை...
    அடிக்கடி வருவேன் - அதை
    நான் படிக்கவே!

    பதிலளிநீக்கு
  39. மிக அருமையான பகிர்வு சகோ.

    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  40. மன உறுதி, சுயகௌரவம் , உழைப்பு என்பவை பற்றிய அரிய விளக்கம்,
    அரிய பதிவு.
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  41. சிந்தனை தரும் கருத்துடன் சிறந்த பதிவு !

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  42. விவேகானந்தர் - புது செய்தி ( எனக்கு ) ... நல்லதொரு பகிர்வு DD ...!

    பதிலளிநீக்கு
  43. மிகச் சரியாக சொன்னீர்கள் தனபாலன் சார், மேன்மக்கள் மேன்மக்களே !

    பதிலளிநீக்கு
  44. இன்றைய உலகுக்கு தேவையான கட்டுரை.
    "// அப்பன் சொத்தை, பாட்டன் சொத்தை தூக்கி போடுடா. சொந்த காலில் நீயும் கொஞ்சம் வாழ்ந்து பாருடா//" - உண்மையில் இந்த வரிகள் பெற்றோர்களுக்கும் பொருந்தும். நாம் தான் வாழ்கையில் கஷ்டப்பட்டோம், நம் குழந்தைகளாவது கஷ்டப்படமால் சுகமாக வாழட்டுமே என்று நிறைய பெற்றோர்கள் நினைத்து தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை பாழடித்து விடுகிறார்கள்.

    "//உழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா - கெடுக்கிற நோக்கம் வளராது... மனம் கீழும் மேலும் புரளாது ... //" - உண்மை. எவன் ஒருவன் உழைக்காமல் இருக்கிறானோ, அவன் தான் அடுத்தவனை எவ்வாறு கெடுக்கலாம் என்று சதா சர்வ நேரமும் சிந்தித்துக்கொண்டிருப்பான்.

    மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  45. அடுத்தவன் காலில் ஏறி பயணம் செய்யாமல் சொந்த காலில் பயணம் செய்தால் என்றுமே கீழே விழமாட்டோம் என்பதை அற்புதமாக சொல்லும் பதிவு.
    அருமையாக உள்ளது தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  46. அருமையான கட்டுரை ...

    வாழ்ந்து கெட்டவர்கள் என்றால் கிடைத்த விளக்கம் ரொம்பவே ஆழமானது அய்யா

    நல்ல கட்டுரை

    பதிலளிநீக்கு
  47. விளக்கமான விரிவான பதிவு அய்யா வாழ்த்துக்கள்

    இரட்டைக்கால் குதிரை பாய்ச்சலை காட்டியதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  48. நம்பிக்கை தான் வழி ,ஒளி .வாழ்க்கையின் இந்த நிலையும் மாறும் .அருமை!

    பதிலளிநீக்கு
  49. ஆழமான அருமையான விளக்கப்பகிர்வு தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  50. வாழ்ந்து கெட்டவர்களை அருமையான கதையுடன் அழகாக புரியவைத்தமைக்கு நன்றி! தோற்றாலும் தன்னிலை இழக்க கூடாது! தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் வெற்றிக்கு என்று உணரவைத்த பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  51. நல்ல கருத்துக்களை அறிந்துகொண்டேன், இப்பதிவின்மூலம்...

    பதிலளிநீக்கு
  52. அடைய வேண்டிய இடத்தை அடைய நாலுகால் பாய்ச்சல் தேவையில்லை ,ரெண்டு காலே போதும்னு குதிரை மூலம் உணர்ந்துகொண்டேன் !

    பதிலளிநீக்கு
  53. நம்பிக்கை ஊட்டும் செய்தி.நன்றி .

    பதிலளிநீக்கு
  54. வாழ்ந்து கேட்டவர்கள் பற்றிய பதிவு வெகுசுவாரஸ்யம். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!

    பதிலளிநீக்கு
  55. அழகான் ஆழமான கருத்துக்கள்.
    தொரட்டும் பணி.....வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  56. வணக்கம் சகோதரர்..
    மிக அருமையான கட்டுரை. உள்ளத்தில் தொய்வு இல்லையென்றால் வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்படும் தொய்வுகள் ஒரு பொருட்டே இல்லை. மிக நேர்த்தியாக பழகு தமிழில் மிக கருத்தாழம் மிகுந்த பாடல்களைச் செய்தியாய் கோர்த்து தந்த விதம் ரசிக்க வைக்கிறது சகோதரரே. பகிர்வுக்கு மிக்க நன்றிகள்...

    பதிலளிநீக்கு
  57. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே !அருமை

    பதிலளிநீக்கு
  58. முன்னங்கால்கள் எனும் முன்னோர் சொத்து இழந்தாலும் இருக்கும் கால்களை நம்பி உழைப்பை நம்புகிறவன் ஓட்டம் நன்று ... இல்லையா பாலண்ணா...

    பதிலளிநீக்கு
  59. வாழ்ந்து கெட்டவர்கள் வரிசையில் நிறைய பேர் இங்கே.அதற்கு ஒருமுக்கிய காரணம் சூழலும் என நினைக்கிறேன்/

    பதிலளிநீக்கு
  60. தன்னம்பிக்கை தரும் விவேகானந்தர் கதை.சிறப்பான,ஆழமானகருத்துக்கள்,பாடல் தெரிவுகள் அருமை.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  61. அருமையான பகிர்வு. இரண்டு கால் குதிரை சூப்பர்...

    பதிலளிநீக்கு
  62. விழுவது எழுவதற்கே என்று உணர்ந்து போராடுபவர்கள். சரியா.?

    பதிலளிநீக்கு
  63. உண்மையிலேயே அந்த வங்கி உரிமையாளர் எல்லோருக்கும் எடுத்துக்காட்டு ( த.ம 31)

    பதிலளிநீக்கு
  64. தலைப்பும் அது தொடர்பான விளக்கங்களும் வெகு சிறப்புங்க.

    பதிலளிநீக்கு
  65. வணக்கம் தனபாலன் சார்...எப்பொழுதும் போல அருமையான பதிவு... காளி படத்தின் லபாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று..நான் இதை நீங்கள் பதிவிட்ட அன்றே படித்து விட்டேன், உங்கள் அனைத்துப் பதிவையுமே உடனே படிக்கும் பழக்கம் உண்டு.. ஆனால் வேலைப் பளுவின் காரணமாக கமெண்ட் இட இவ்வளவு தாமதமாயிற்று... :(

    பதிலளிநீக்கு
  66. அடடா என்ன இது அநியாயம்?:)) குதிரைக்கு பின்னங்கால்களை ஆரோ களவெடுத்திட்டினம்ம்ம்:))..

    வாழ்ந்து கெட்டவர்கள் ... நல்லா இருக்கு...

    பதிலளிநீக்கு
  67. தனபாலன் எழுத்திற்கென்று ஒரு தனித்துவம் உண்டு. அருமையான கருத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  68. உண்மைதான் சங்கு சுட்டாலும் வெண்மை தரும்..அருமையான விளக்கம்..

    பதிலளிநீக்கு
  69. வாழ்ந்து கெட்டவர்கள் என்று சொல்வதை விட, 'வாழ்ந்து வீழ்ந்தவர்கள்' என்று சொல்லலாம். 'கெட்டவர்கள்' என்கின்ற போது அவர்கள் 'கெடுதல் புத்தியுள்ளவர்கள்' என்ற பொருள் வருகிறது. ஒருவன் தனது வசம் உள்ள பொருளை இழப்பது பல வகையிலும் நடைபெரும் ஒன்று. கெடுதல் பாதையிலும் மட்டும் சென்று பொன்னும் பொருளையும் இழப்பதில்லை. அதனால் 'கெட்டவர்கள்' என்ற சொல்லைத் தவிர்த்து 'வாழ்ந்து வீழ்ந்தவர்கள்' என்ற சொல்லை பயன்படுத்தலாமே...?

    பதிலளிநீக்கு
  70. வாழ்ந்து கெட்டவர்கள் என்று நினைக்காமல் வாழப் பிறந்தவர்களாய் மீண்டு வர வேண்டும் என்பதற்கு அந்த வண்டியோட்டி சாட்சி...
    அருமை தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு
  71. இரண்டுகால் குதிரை படம் சூப்பர். உண்மை சம்பவம் நல்ல உதாரணம்.

    இவ்வளவு சிறப்பான மேன்மக்களை 'வாழ்ந்து கெட்டவர்கள்' என்ற சொல்லில் அடையாளம்கொள்வதுதான் கொஞ்சம் இடிக்கிறது.

    பதிலளிநீக்கு
  72. விவேகானந்தர் வாழ்வில் நடந்த உண்மை கதையைக் கொடுத்து மனதை நெகிழ்த்திவிட்டீர்கள்.
    தாழ்வு வரும்போதும், மனம் தளராமல், உடல் அயராமல் உழைப்பவர்கள் நிச்சயம் மேன்மக்கள் தான்!

    பதிலளிநீக்கு
  73. அருமையானதோர் பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றிகள் ஐயா.

    பதிலளிநீக்கு
  74. arumai...
    naalu kaal kuthirai nallathoru paadaiyil nandraaga nadakkuthu oduthu...
    naagareegam adaintha rendukaal kuthirai nalvazhiyil nadakka thindaaduthu...
    dakkudi dakkudi chal chalo chalo...

    n s krishnan avargalin paadal varigalai ninaivupaduthum pa(a)dam
    thodara vaazthukkal.
    raviji @ mayavarathan mgr.blogspot.in

    பதிலளிநீக்கு
  75. மிகவும் சரியான கருத்து வாழ்ந்து கெட்டவர்கள் ஆனாலும்
    என்றும் தாழ்ந்து போகாதவர்கள் ,தன்னமிக்கையினாலும்
    முயற்சியினாலும் முன்னுக்கு வரத் துடிப்பவர்கள் என்றுமே
    போற்றப் பட வேண்டியவர்களும் இவர்கள் தான் .குதிரை
    வண்டிக் காரருக்கு ஒரு சலியூட் !! உங்களுக்கு என் மனமார்ந்த
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.