சபாஷ் சரியான போட்டி..!
வணக்கம் நண்பர்களே... ரூபனின் தீபாவளி சிறப்புக் கவிதைப் போட்டி பற்றிய ஒரு சிறிய தொகுப்பு எனது பார்வையில்...
40 வலைப்பூ பதிவர்களின் கவிதையை ஒவ்வொரு பெயருக்கும் முன்னே உள்ள எண்ணைச் சொடுக்கினால் அந்தந்த பதிவரின் தளத்திற்குச் சென்று ரசிக்கலாம்... வலைப்பூ இல்லாதவர்களின் கவிதைகளையும், அவர்களின் பெயர்களை அடர்த்தியான எழுத்துக்களில் கொடுத்துள்ளேன்... அவற்றைச் சொடுக்கி வாசித்துவிட்டு மீண்டும் பெயரைச் சொடுக்கினால் சுருங்கி விடும்...
40 வலைப்பூ பதிவர்களின் கவிதையை ஒவ்வொரு பெயருக்கும் முன்னே உள்ள எண்ணைச் சொடுக்கினால் அந்தந்த பதிவரின் தளத்திற்குச் சென்று ரசிக்கலாம்... வலைப்பூ இல்லாதவர்களின் கவிதைகளையும், அவர்களின் பெயர்களை அடர்த்தியான எழுத்துக்களில் கொடுத்துள்ளேன்... அவற்றைச் சொடுக்கி வாசித்துவிட்டு மீண்டும் பெயரைச் சொடுக்கினால் சுருங்கி விடும்...
முதல் பத்து :
01. PSD பிரசாத் ഽ 02. E.S.சேஷாத்ரி ഽ 03. சுகப்பிரியன் ഽ 04. பி.தமிழ் முகில் ഽ 05. P.V.பத்மபிரியா
நாம் சிரித்தால் தீபாவளி
பிறந்து விட்டோம் வளர்ந்து விட்டோம்
சிரிக்க நாமே மறந்து விட்டோம்...!
பறந்து நின்றோம் பசித்து நின்றோம்
பணியில் ஊறிப் பணத்தைத் தொட்டோம்...!
உறக்கம் மறந்தோம் உவகை மறந்தோம்
உழைப்பில் போட்ட முதலில் இழந்தோம்...!
வருந்தும் துன்பம் வலையில் விழுந்தோம்
வறுமை பற்ற சிரிப்பை இழந்தோம்...!
தாயைக் கொண்டோம் தமிழைக் கண்டோம்
தாக்கும் நோயைத் தகர்த்தே வென்றோம்...!
ஆய கலைகள் அனைத்தும் கற்றோம்
அண்டும் சிரிப்பை அய்யோ விற்றோம்...!
பேயாய் உலகில் ஆடித் திளைத்தோம்
பெண்ணை அடிமையாக்கி வளைத்தோம்...!
நாயாய் இன்றி நன்றி மறந்தோம்...!
நகையைப் பூட்டி நகைப்பில் தளர்ந்தோம்...!
திருநாள் மட்டும் சிரிக்க முயன்றோம்
தீபா வளிக்கே சிரிப்பை உதிர்த்தோம்...!
ஒருநாள் இல்லை பலநாள் இல்லை
ஒருவாய் சிரிக்க முயல்வாரில்லை ...!
பெருநாள் எல்லாம் திருநாள் ஆகா
பெரிதாய் சிரித்தால் அந்நாள் ஆமாம்...!
மறுப்பார் உண்டோ...? முன்னே வருவீர்
மலர்வாய் சிரிப்பின் உண்மை தெரிவீர்...! ഽ 06. சு.அய்யப்பன்
நாம் சிரித்தால் தீபாவளி
தாயால் பிறக்க வைத்தான்; எங்களை
தீயால் பிழைக்க வைத்தான் !
தலைமேல் எழுதி வைத்தா எங்களை
தணலில் உழைக்க வைத்தான் ? (தாயால்)
விதவித மாக சமைக்கும் நெருப்பை
விதவித மாக சமைப்போம் !
வேள்விக்கு மட்டும் உதவிய நெருப்பை
வேட்டு வெடிகளில் அமைப்போம் ! (தாயால்)
புதுப்புது ஓலையில் குறளா வடித்தோம்
ஓலை வெடிகள் மடித்தோம் !
பொடி பொடித் துகளை அணுகுண்டாக்க
உயிரைப் பணயம் வைத்தோம் ! (தாயால்)
ஒருநாள் மக்கள் திருநாள் காண
ஒவ்வொரு நாளும் உழைப்போம் !
ஒருசாண் வயிற்றை வளர்ப்பதற்காக
உயிரைப் பணயம் வைத்தோம் ! (தாயால்)
கந்தக துகளில் விந்தைகள் செய்து
கனலுக்கும் நிறங்கள் கொடுப்போம் !
கனல்பட்டெழும்பும் கருநிறப் பாம்பை
மாத்திரைக்குள்ளே அடைப்போம் ! (தாயால்)
கந்தகம் நுணுக்கவும் வெடி திரி திரிக்கவும்
எங்களிடம்தான் கொடுப்பார் !
எந்திரம் வெடித்தால் நட்டம் என்று
எங்களைப் பணயம் வைத்தார் ! (தாயால்) ഽ 07. வி. நடராஜன் ഽ 08. கவி நாகா ഽ 09. கிரேஸ் ഽ 10. பவி சேஷ்
பெயர்களின் அகர வரிசைப்படி :
11. அபயாஅருணா ഽ 12. இராஜராஜேஸ்வரி ഽ 13. இளமதி ഽ 14. இனியா ഽ 15. கவியாழி கண்ணதாசன் ഽ 16. கீத மஞ்சரி ഽ 17. கீதா M ഽ 18. குட்டன் ഽ 19. குருச்சந்திரன் ഽ 20. கோவை ஆவி ഽ 21. சியாமளா ராஜசேகர்
ஒளி காட்டும் வழி
அசுரனாம் நரகன் அழிந்த நாளே
அகத்தில் மகிழ்ச்சி நிறைக்கும் தீபாவளி !
அடர்ந்த இருட்டில் அகல்விளக்கின் ஒளியால்
அகலும் இருளும் வழியும் தெரியும் !
அறிவின் ஒளியால் அகலப் பார்த்தால்
அஞ்ஞான இருளும் முற்றிலும் விலகும் !
அகவொளி பூத்து தவஒளி சிறக்க
அவநெறி அழிந்து சிவநெறி தழைக்கும் !
அவதூறு சுமந்து துடித்த உளத்தில்
அருட்சோதி நிறையப் பழிச்சொல் தீரும் !
அழிவுக்கு வித்திடும் அழுக்காறு அகல
அற்புத ஒளியால் இதயம் சிரிக்கும் !
அனலியின் ஒளியால் மலரும் கமலமாய்
அருந்ததி அருளால் கற்பும் சிறக்கும் !
அகண்டம் ஏற்றி அசலன்தாள் பணிய
அண்டத்தில் அமைதி என்றும் நிலைக்கும் !
அகிலம் முழுதும் வன்முறை அடங்கி
அழகு மத்தாப்பின் ஒளியாய் அன்பு பெருகும் !
அசுர குணமும் அரக்க மனமும்
அமைதியின் வடிவாய் மாறியே ஒளிரும் !
அற்புத மகிமை கொண்ட நன்னாளில்
அளவிடற் கரியது ஒளி காட்டும் வழி...!!! ഽ 22. சிவக்குமார் ഽ 23. சுகந்தி S
நாம் சிரிக்கும் நாளே திருநாள்(மறுமணம்)
பட்டாடை உடுத்தி
பலவகை மலர்களைத் தலையில் சூடி
பலரும் குழுமி இருக்கும் மேடையில்
பண்பாடு, பாரம்பரிய முறைப்படி
பலதரப்பட்ட உணவுகளும் நிறைந்திருக்க
பக்கத்தில் மேள தாளங்கள் முழங்க
பகலில்கூட கனவுகளோடு வாழும் அந்த குழந்தை
பயத்தோடு எடுத்து நீட்டுகிறது அவனிடம்
பரவசமாய் காத்து இருக்கின்றனர் மக்கள் அதைக் காண
பக்கபலமாய் நான் இருப்பேன் எனக் கூறி
பக்கத்தில் இருக்கும் பெண்ணுக்குக் கட்டுகிறான் தாலி
பரவசத்தில் மிதக்கிறாள் அந்த பேதை
பலியான கணவனை மறந்து
பல வண்ண கனவுகளைக் காணுகிறாள்
தன் பெண் பிள்ளையோடு சேர்ந்து அவள்
பலமுறை சிரிக்கிறது...
சந்தோஷத்தில் திளைக்கிறது அந்தக் குழந்தை
பல நாட்கள் கழித்து தனக்கு அப்பா கிடைத்ததை எண்ணி
பரவசம் அடைகிறான் அவன் -
தான் இனி அநாதை இல்லை என எண்ணி... ഽ 24. சுரேஷ் S ഽ 25. சுரேஷ் சுப்ரமணியன் ഽ 26. சுவாதி ഽ 27. இராய.செல்லப்பா ഽ 28. செல்விஷங்கர் ഽ 29. Dr. கோ.தனசேகரன்
நாம் சிரிக்கும் நாளே திருநாள்...!
இரும்பெனவே இற்ற வாழ்க்கை ! - துன்ப
இருள் பிடியில் கூனும் யாக்கை !
வரும்படிக்குப் பற்றா உணவு ! - கண்ணீர்
வகையெனப் பாயும் தினவு !
மருள்கண்ட மாறா முகமே ! - இறைவன்
மனம் வைத்தால் குளிரும் அகமே !
ஒருகுறையா நினைத்துச் சொல்ல ! - எளிய
ஓவியமா தீட்டி வெல்ல !
எழுத்தாணி மங்கிப் போனால் - எந்த
ஏடேனும் கிழிந்தே போகும் !
கொளுத்தும் தீ வெய்யில் பட்டால் - உடலும்
குளிர் வேண்டி வெந்தே நோகும் !
பழுத்ததெல்லாம் இனிப்புக் கனியா ? - உள்ள
பாரத்தால் துவள்வோம் தனியாய் !
கழுத்தளவு வாழ்க்கை இன்னல் ! - இன்பம்
காட்டானோ இறையென் செம்மல் !
வேட்டெல்லாம் வெடித்தும் என்ன ? - ஏழ்மை
வீட்டுக்குள் எதைத்தான் தின்ன ?
வாட்டமுடன் கிளிஞ்சல் ஆடை ! - திருநாள்
வரவுக்கோ இல்லை சீடை !
மாட்டுக்கோர் ஈடாய்ப் போனோம் ! - சிரிப்பை
மாயத்தேநாம் பிணமாய் ஆனோம் !
காட்டும் முகச் சிரிப்பே திருநாள் ! - வறுமை
களையட்டும் ! அன்றே பெருநாள் ! ഽ 30. தேனம்மை லஷ்மணன் ഽ 31. நிலவை.பார்த்திபன்
நாம் சிரிக்கும் நாளே திருநாள்
வெதும்பிப்போன மனதிற்கு
வெள்ளையடித்துப் போவதுதான்
பண்டிகைகளின் பணி...!
ஆனால்...
பணமெனும் நீர் உறிஞ்சியே
பண்டிகைப் பயிர்கள் வளர்வதால்
அதை நட்டுவைத்த பாவத்திற்காய்
நடுத்தெருவில் நிற்கிறது நடுத்தர வர்க்கம்...!
ஆண்டவனுக்குப் படையல் வைக்க
அடகுக்கடையில் வளையல் வைக்கும்
அவல நிலையில் அவர்கள்...!
அடுத்தடுத்து வரும் பண்டிகைகளால்
அடகுக்கடைக்காரர்களுக்கே இங்கு
அதிக மகிழ்ச்சி...!
விழாக்கால வேட்டுச் சத்தங்களின்
விரிவான பின்னணியில்
ஒன்று சீட்டுக்கடை இருக்கும்...!
அல்லது சேட்டுக்கடை இருக்கும்...!
பற்றாத குறைக்கு
மொத்தமாய் வாங்கிய கடன்
புத்தாடைக்குள் புகுந்த பின்னும்
புத்திக்குள் உறுத்தி நிற்கிறது...!
செயற்கையாய் சிரிக்கும் கலையை
இயற்கையாய்ப் பெற்றவர்கள் இந்தியர்கள்...!
நாம் இயற்கையாய் சிரிக்கும் இனிய நாளையே
இனி பறைசாற்றுவோம் பண்டிகை நாளென...! ഽ 32. ப்ரியா ഽ 33. பானி ஜி ഽ 34. பாஸ்கர் S ഽ 35. புதுவைப்பிரபா ഽ 36. பூர்ணிமா.ம-கவி பூர்ணி
ஒளி காட்டும் வழி
வழிகளை விழிகளின் வழியாக
வரிசைப்படுத்த
ஒளிகளின் உணர்ச்சி போராட்டம் !
தேடல்களின் தேசம் உன்னால்
விவரிக்கப்பட்ட வினோதம்...
இருளை மறைக்கும் இரும்பு
நிசப்தம்...
தொட்டு உணரத்துடிக்கும்
தொலைதூர கனவு...
நெளிந்தவனை நெறிப்படுத்தும்
நேர்மை களஞ்சியம்...
கலியுகத்தைக் கண்டுணரச் செய்த
கண்ணிய கட்டுப்பாடு...
தீமையை எரிக்கத் திரியாலே
பிறந்த தீப ஒளி !
காற்றோடு வழி அமைத்து
கப்பல்களைக் கரை சேர்த்தாய்...
புதருக்குள் புதைத்திருக்கும் ஒளியின்
ஊடகம் மின்மினிகள்...
ஏதிரவனை அளிப்பதற்கே எரிமலையாய்
எரியும் திருவண்ணாமலை தீச்சுடர்...
வழிகள் ஆயிரம் காண
உலகிற்கு விழிகளால் வெளிச்சம்
தந்த வெண்ணிலவு ! ഽ 37. ரவிஜி ரவி ഽ 38. ரமணி பா.
ஒளி காட்டும் வழி
சிந்தனையே இயக்க மின்றி
செல்லாத காசாய் வாழும்
எந்தமிழன் இருந்தி றந்தான் !
இருள்கொண்ட முகம்நி லைத்தான் !
கன்றுக்கே தாய்ப்பா லில்லை !
கறக்காமல் விட்டா னில்லை !
துன்பத்தைத் தொடராய்ப் பெற்றான் !
துளிர்க்கும்நல் இன்பம் விற்றான் !
கல்தோன்றி முன்தோன் றாத
கதைசொல்லக் கற்றுக் கொண்டான் !
கைவண்டி இழுப்ப தற்கு
காளைபோல் உரத்தால் நின்றான் !
வளமெல்லாம் இருந்தும் வாழ்வை
வகையாகத் தெளிந்தா னில்லை !
நிலஒளியில் குடும்பத் தோணி
நீரின்றி ஓட்டி நொந்தான் !
இழிவாக இனத்துக் குள்ளே
இனச்சண்டை போட்டே தேய்ந்தான் !
கலிகாலக் கொடுமைப் பொறுப்பை
கைநீட்டி ஏற்றுக் கொண்டான் !
தெளிவில்லாச் செய்கை மாய
திருநாளும் வந்த திங்கே !
ஒளிகாட்டும் வழியை மேய
உன்னதநாள் சுடர்ந்த திங்கே ! ഽ 39. ரியாஸ் அஹமத் ഽ 40. ரீகன் ஜோன்ஸ் ഽ 41. விஜயகுமாரி ഽ 42. ஜமிலாபேகம்
நாம் சிரிக்கும் நாளே திருநாள்
சிரிக்கும் நாளாய் இருக்கும் இத்திருநாளில்
அனைவரையும் தீண்டும் துன்பமெல்லாம்
தூளாகிப் போகும் இத்திருநாளில் !
சிரிப்பை உருவாக்கும் திருநாளிலே...
கடவுளை கரம் குவித்து வணங்குவோம் !
இதழ் மலர்ந்த கதிரவனை வரவேற்போம் !
அன்பை வளர்ப்போம் ! இன்பத்தை உருவாக்குவோம் !
உள் அருந்தும் மதுவை மறந்து மக்களைத் திருந்தச் செய்வோம் !
உள்ளத்தில் உயரச் செல்ல அரியவராய் திகழ்ந்திடுவோம் !
அகமெல்லாம் மலர்ந்து இறையருளை நாடி
தூய உள்ளத்தில் வைகம் முழுவதும்
வாழ்ந்துவிடுவோமே இத்தீப ஒளித் திருநாளிலே !
திறம்படப் புரிந்துகொள்வோம் ! தீபங்கள் ஏற்றுவோம் !
தித்திக்கும் இனிப்பை உண்டு மகிழ்ந்திடுவோம் !
சிரித்தால் சிரிப்பு ஒலி ! ஏற்றினால் தீப ஒளி இந்நாளிலே !
தீப ஒளி போல் பிரகாசமான எதிர்காலம் உருவாக...
அனைவருடைய கனவு கற்பனைகள் நிறைவேறிட..
படபடவென சிரிப்பு பட்டாசு வெடிக்க…
விண்மீனாய் தீபங்கள் ஜொலிக்க…
இனியாவது இனிமை வரட்டும் இத்திருநாளில் !
பசியாற்ற நாளும் அழித்து வந்த
நரகா சுரா நரகத்தில் புதைந்த நாள்…
நாம் சிரிக்கும் நாளாகிய இத்திருநாள் !
இனி... இத்திருநாளிலே...
நம்பிக்கை கீற்று உண்டாகட்டும் !
உலக மக்களின் வாழ்க்கை இனிக்கட்டும் !
மனிதர்களின் மனம் மணக்கட்டும் !
இயற்கையாய் இன்பம் செழிக்கட்டும் !
துன்பங்கள் யாவும் நதியாய் ஓடட்டும் !
மகிழ்ச்சியாய் உறவுகள் நீடிக்கட்டும் !
பொழுதும் தீப ஒளிபட்டு விடியட்டும் !
என்றும் இல்லா நாளாய் இத்திருநாள் இருக்கட்டும் !
நாம் சிரிக்கும் நாளாய் இத்திருநாள் மாறட்டும் ! ഽ 43. ஜீவ.காசிராஜலிங்கம் ഽ 44. ஜெய.தினகரபாண்டியன் ഽ 45. ஸ்ரவாணி ഽ 46. ஸ்ரீனி ഽ 47. ஷைலஜா ഽ 48. ஹிசாலீ ഽ 49. ஹேமா
கணினி கோளாறு காரணமாக சில நாட்கள் இணையம் வர முடியவில்லை... இந்தப் போட்டியின் மூலம் மேலும் பல நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசியதும், ஆர்வத்துடன் கலந்து கொண்டதும் மிக்க மகிழ்ச்சி... வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றிகள் பல... வலைத்தளம் இல்லாத 9 பேர்கள் உட்பட மொத்தம் கலந்து கொண்டவர்கள் 49 பேர்கள்... கடைசி 10 நாட்களில் அதிகமான பேர்கள் கலந்து கொண்டார்கள்... அதனால் தீபாவளிக்கு முன்னே முடிவை அறிவிக்க முடியவில்லை... ஒவ்வொரு நடுவரும் 10-15 கவிதைகளைத் தேர்வு செய்து, மற்றவர்களுடன் கலந்து யோசித்து, பிறகு 10 கவிதைகளைத் தேர்வு செய்து, அதில் 3 கவிதைகளைத் தேர்வு செய்ய...ம்... நடுவர்களின் பங்கு அளப்பரியது...!
முதல் மூன்று பேருக்கும் அனுப்பிய பரிசுத்தொகை முறையே ரூ.1500, ரூ.1000, ரூ.500 கிடைத்ததற்கான ஒப்புதலும் கிடைக்கப் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி...
படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணம் கொண்ட ഽഽഽ த.தவரூபன்(ரூபன்) அவர்களுக்கும், நடுவர்கள் ഽഽഽ 1. திரு. ரமணி ஐயா, ഽഽഽ 2. திருமதி. ரஞ்சனி நாராயணன் அம்மா, ഽഽഽ 3. சகோதரி திருமதி. தென்றல் சசிகலா ഽഽഽ அவர்களுக்கும், போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட ഽഽഽ திரு. டி.என்.முரளிதரன் உட்பட அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி...
மலேசியாவில் இருக்கும் தம்பி ரூபன் வேண்டுகோளுக்கிணங்க, பெயர் மற்றும் முகவரி பற்றிய விவரங்களைச் சான்றிதழில் (இந்திய மதிப்பில் ஒரு சான்றிதழ் ரூ 600) அச்சிட வேண்டுமென்பதால் முதல் பத்து பேர்களும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு விவரங்களை உடனே அனுப்பவும்...
1. rupanvani@yahoo.com 2. dindiguldhanabalan@yahoo.com
அனைத்து கவிதைகளையும் ரசித்து விட்டு என்ன சொல்லத் தோன்றுகிறது...? சபாஷ் சரியான போட்டி..! யாக இருந்திருக்கிறது என்பது...
சரி தானே நண்பர்களே...? மிக்க நன்றி...!
முதல் மூன்று பேருக்கும் அனுப்பிய பரிசுத்தொகை முறையே ரூ.1500, ரூ.1000, ரூ.500 கிடைத்ததற்கான ஒப்புதலும் கிடைக்கப் பெற்றது குறித்து மிக்க மகிழ்ச்சி...
படைப்பாளிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற சிறப்பான எண்ணம் கொண்ட ഽഽഽ த.தவரூபன்(ரூபன்) அவர்களுக்கும், நடுவர்கள் ഽഽഽ 1. திரு. ரமணி ஐயா, ഽഽഽ 2. திருமதி. ரஞ்சனி நாராயணன் அம்மா, ഽഽഽ 3. சகோதரி திருமதி. தென்றல் சசிகலா ഽഽഽ அவர்களுக்கும், போட்டி பற்றிய அறிவிப்பை வெளியிட்ட ഽഽഽ திரு. டி.என்.முரளிதரன் உட்பட அனைவருக்கும் மிக்க மிக்க நன்றி...
மலேசியாவில் இருக்கும் தம்பி ரூபன் வேண்டுகோளுக்கிணங்க, பெயர் மற்றும் முகவரி பற்றிய விவரங்களைச் சான்றிதழில் (இந்திய மதிப்பில் ஒரு சான்றிதழ் ரூ 600) அச்சிட வேண்டுமென்பதால் முதல் பத்து பேர்களும் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிகளுக்கு விவரங்களை உடனே அனுப்பவும்...
1. rupanvani@yahoo.com 2. dindiguldhanabalan@yahoo.com
அனைத்து கவிதைகளையும் ரசித்து விட்டு என்ன சொல்லத் தோன்றுகிறது...? சபாஷ் சரியான போட்டி..! யாக இருந்திருக்கிறது என்பது...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
புதிய சிற்ப்பான தொகுப்பு,,பாராட்டுக்கள்..
பதிலளிநீக்குவாழ்த்துகள்..!
மிகுந்த சிரமத்திற்கு இடையிலும் கவிதை தேர்வு பணியை சிறப்பாகச் செய்து உள்ளீர்கள் .பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குத.ம 1
உங்கள் ஒவ்வொரு பதிவும் பலருக்கும் வயித்துல புளியைக் கரைக்கும். வியப்பாக உள்ளது,
பதிலளிநீக்குமுதன் முதலாக சென்னையில்
பதிலளிநீக்குபதிவர் சந்திப்பில் ரூபன் அவர்கள்
போட்டி நடத்த பிரியப்படுவதை
அலைபேசியில்சொன்னது முதல்
இன்றைய இந்தப் பதிவு வரை தங்கள்
பணி மிகவும் அதிசயத்தக்கதாய்
பாராட்டத்தக்கதாய் இருந்தது
இல்லையெனில் இத்தனைச் சிறப்பாக
இந்தப் போட்டியை நடத்திமுடிப்பது என்பது
நிச்சயம் இயலாத காரியமே
பதிவுலகில் பதிவின் மூலம் எதையும்
செய்ய வேண்டும் எனில் அதற்கு திண்டுக்கல் தனபாலன்
அச்சகம் மூலம் என்றால் அது மின்னல்வரிகள் கணேஷ்
அமைப்பு ரீதியில் என்றால் புலவரய்யா மற்றும் மதுமதி
இப்படி ஒரு செயல்வீரர்கள் பட்டியலே
தயாரித்துவிடலாம் என நினைத்துக் கொண்டேன்
அருமையான பகிர்வுக்கு மீண்டும் என்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
tha.ma 1
பதிலளிநீக்குஉங்களின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்
பதிலளிநீக்குபரிசு பெற்றவர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
தனபாலன் சார்,கவிதைப் போட்டி பற்றிய பகிர்வுக்கு மிக்க நன்றி.இத்தனை அருமையாக யாராலும் பகிர முடியாது.
பதிலளிநீக்குஅனைத்தையும் வாசித்துப் பார்க்கிறேன்.வெற்றி பெற்ற அனைவருக்கும்,கவிதை அனுப்பிய அனைவருக்கும், நடுவர்களுக்கும், பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
வணக்கம்
பதிலளிநீக்குதனபாலன்(அண்ணா)
உங்களின் பார்வையில் கவிதைப்போட்டி குறித்து சிறப்பு பதிவாக வெளியிட்டமைக்கு மிக்க நன்றி அண்ணா….இந்தப் போட்டி நடத்துவதில் உங்களின் பங்கு மிகப்பெரியது அத்தோடு நடுவர்கள்
திரு.ரமணி(ஐயா).
திருமதி.ரஞ்சனியம்மா(அம்மா).
திருமதி.சசிகலா(சகோதரி)
கவிதைப்போட்டி விளம்பரத்தை தன்னுடைய வலைப்பூவில் பதிவிட்டு விளம்பர உதவி செய்த திரு.டி.என். முரளிதரன் (அண்ணா)அவர்கட்கும் எனது நன்றிகள்
ரூபன் எத்தனை கவிதைகள் வந்திருக்கிறது என்ற தகவல் கேட்டார் அதில் இருந்தே நான் அறிந்தேன் என் மேலும் கவிதைபோட்டி மேலும் மிகவும் அக்கறை உள்ளவர் என்பதை உணர்ந்தேன்
முரளிதரன் அண்ணாவுடன் தொலைபேசியில் பேசியது… பல விடயங்களை என்னிடம் எடுத்து சொன்னார்……..அவருடன் பல தடவைகள் பேசியுளேன்….
குறிப்பு-வெற்றி பெற்ற போட்டியாளருக்கு பணம் சென்றடைந்துள்ளது
அவர்கள் கிடைத்து விட்டதாக மின்னஞ்சலும் செய்துள்ளார்கள்..
சான்றிதழ் அச்சடிக்க வேண்டியுள்ளதால் வெற்றியடைந்த போட்டியாளர்கள் தங்களின் பெயர் முகவரி ஆகியவற்றை அனுப்பும்மாறு தயவாக வேண்டிக் கொள்கிறேன்.(தபாலில் வந்டையும்)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் அளப்பரிய பணிக்கு முதற்கண் நன்றி..!
பதிலளிநீக்குபரிசு வென்றவர்களுக்கு வாழ்த்துகள்..!
வலைத்தளமில்லாதவர்களின் கவிதையை வாசித்தேன்..!
மிக மிக அருமை..!
வலைத்தளங்களில் உள்ள கவிதைகளிலும் விரைவில் வாசிக்க வேண்டும்.
கவிதைப் போட்டியை ஆரம்பித்த நண்பருக்கும், அதை செம்மையாக முடித்து உதவிய நடுவர்களுக்கும், முடிவின் தொகுப்பை அழகான கவிதைபோல ஒரு பதிவாக்கித் தந்த "பின்னூட்டப் புயல்" திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களாகிய உங்களுக்கும் எனது நன்றி பாராட்டுதல்கள்..!
இப்போட்டியை நடத்த, விதையூன்றிய ரூபன் அவர்களுக்கு "ஸ்பெஷல்" நன்றி.! வாழ்த்துக்கள் ரூபன்..!
பதிலளிநீக்குஎனது வலை இன்று ஆஸ்க் மால்வேர் நீக்குவது எப்படி?
பதிலளிநீக்குஅற்புதமான போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள் சார் ..
பதிலளிநீக்குகலந்து கொண்டவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்
கவிதைகள் அனைத்தும் சிறப்பு...அனைவர்க்கும் பாராட்டுக்கள்..! நடுவர்களுக்கும் போட்டியை நடத்திய ரூபன் அவர்களுக்கும் மிக்க நன்றி!இந்த நிகழ்வை சிறப்பாக பதிவு போட்ட உங்களுக்கும் மிக்க நன்றி! இந்த போட்டி மூலம் தெரியாத பல வலைப்பக்கங்களை அறிய முடிந்தது
பதிலளிநீக்குசரியான மதிப்பீடு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமதிப்பீடு செய்த நீதிமான்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்
நல்ல முயற்சி வாழ்க தமிழ் உலகமெல்லாம், யாவருக்கும் வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குகணினி செய்த சதிக்கு எனது கண்டனங்கள்...
தொகுப்பும் தங்கள் பணியும் பாராட்டுக்குரியது!
போட்டி பற்றிய அறிவிப்பிலிருந்து நடுவர்களுக்கு கவிதைகளை அனுப்பி, ஒவ்வொருவரையும் ஊக்குவித்து இன்று அழகாகத் தொகுத்து ஒரு பதிவும் இட்ட உங்களுக்கு உளமார்ந்த நன்றிகள்! ரூபன் அவர்களுக்கும் நடுவர்கள் அனைவருக்கும் நன்றிகள்!
பதிலளிநீக்குபோட்டியில் பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அனைத்தையும் படிக்கிறேன்...இன்னும் சிலவே இருக்கின்றன,அவற்றையும் கண்டிப்பாகப் படிக்கிறேன். நன்றி!
உங்களின் முயற்சியும் இடையறாத ஊக்குவிப்பும்
பதிலளிநீக்குஇத்தனை கவிஞர்களை இப்போட்டியில்
பங்கு கொள்ளவைத்தது என்றால் மிகையில்லை.
ரமணி ஐயா சொன்னதுபோல உங்களிடம் தரப்படும்
விடயம் வெற்றியின் உச்சிக்கே போகுமென்பதில் ஐயமே இல்லை!
உங்களின் அத்தனை கடும் உழைப்பு இங்கே இருந்திருக்கிறது!
போட்டியில் வெற்றிபெற்ற அனைத்துப்
போட்டியாளர்களுக்கும் என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!
நீங்களும் இங்கே மிக அழகாகத்தொகுத்துத் தந்ததுள்ளீர்கள் .
பாராட்டுக்கள் சகோதரர் தனபாலன்!
அற்புதமாகப் பணியாற்றிய நடுவர்கள், ரூபன் மற்றும் உங்களுக்கும்
உளமார்ந்த வாழ்த்துக்கள்!
அருமையான பகிர்வுக்கு என்
பதிலளிநீக்குமனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கலந்து கொண்டவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் இனிய வாழ்த்து
இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.
வேதா. இலங்காதிலகம்.
பரிசுப் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇந்த போட்டிக்கு தொடக்கம் முதல் இறுதி வரை ஆர்வம் குறையாமல் பணியாற்றிய தங்களுக்கும் சகோ ரூபனுக்கும் நடுவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தக்கொண்டு பங்குபெற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குகலந்து கொண்டவர்களுக்கும் பரிசு பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஉங்களின் முயற்சியும் இடையறாத ஊக்குவிப்பும்
பதிலளிநீக்குஇத்தனை கவிஞர்களை இப்போட்டியில்
பங்கு கொள்ளவைத்தது என்றால் மிகையில்லை.
ரமணி ஐயா சொன்னதுபோல உங்களிடம் தரப்படும்
விடயம் வெற்றியின் உச்சிக்கே போகுமென்பதில் ஐயமே இல்லை!
உங்களின் அத்தனை கடும் உழைப்பு இங்கே இருந்திருக்கிறது!
போட்டியில் வெற்றி பெற்ற அனைத்துப்
போட்டியாளர்களுக்கும் என் மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!
நீங்களும் இங்கே மிக அழகாகத் தொகுத்துத் தந்ததுள்ளீர்கள் .
பாராட்டுக்கள் சகோதரர் தனபாலன்!
அற்புதமாகப் பணியாற்றிய நடுவர்கள், ரூபன் மற்றும் உங்களுக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
**முதலில் அனுப்பிய என் கருத்துப் பகிர்வு வரவில்லையோ?...
அதனை மீண்டும் தந்துள்ளேன்.
மிக நல்லதொரு போட்டி.அதனை சிறப்பாக செயல்படுத்தி முடித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்,நன்றி.
பதிலளிநீக்குவெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். சகோ. :)
பதிலளிநீக்குசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வலைப்பதிவில் எதைச் செய்தாலும் புதுமையாகச் செய்வார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. இந்த பதிவையும் புதுமையாகத் தந்தமைக்கு நன்றி!
பதிலளிநீக்குவெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வழக்கம்போல் அருமையாய் தொகுத்தளித்த உங்களுக்கும் எனது பாராட்டுக்கள்!
பதிலளிநீக்குஅனைவரின் கவிதைகளையும் ஒரே இடத்தில் படிக்கும் வகையில் தொகுத்து தந்தமை சிறப்பு! போட்டிக்காக மிகவும் உழைத்த உள்ளங்களுக்கு நன்றி!முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களின் கவிதைகளை வாசித்தேன்! மற்றவர்களின் படைப்புக்களையும் பிறகு வாசிப்பேன்! வாழ்த்துக்கள்! நன்றி!
பதிலளிநீக்குசிறந்த பணி
பதிலளிநீக்குரூபனுக்கு உங்கள் உதவி கிட்டியமை மகிழ்ச்சி
இருவருக்கும் மற்றும் நடுவர்கள் பரிசு பெற்றோர் அனைவருக்கும் பாராட்டுகள்
தங்களின் பங்களிப்பு பிரமிக்க வைக்கின்றது.
பதிலளிநீக்குகவிதைப் போட்டியில் பரிசு வென்றவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள்... வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுகள்
பதிலளிநீக்குஅண்ணே!
பதிலளிநீக்குநல்ல முயற்சி முதல் இரண்டு கவிகளும் அப்படியே மனதில் ஒட்டிவிட்டது.
மிக்க நன்றி!
என்னை ஊக்குவிக்கும் உறவுகளில் நீங்களும் ஒருவர்.
இணையம் பிரச்சினையால் சிலகாலம் வரவில்லை என்று சொல்லி இருந்தீர்கள்.
ஆதலால் ஒரு விசயத்தை உங்களிடம் சொல்லி கொள்கிறேன்.
நான் 1000 கவிதைகள் இறைவன் கிருபையால் எழுதியுள்ளேன்.
இனி சிறு கதைகளும் எழுதுவேன் அண்ணே!
நன்றி
சிறப்பான சரியான போட்டி தான்...
பதிலளிநீக்குபோட்டியை விட
போட்டியில் பங்கெடுத்த
போட்டியாளர்களும் சிறந்தவர்களே!
சிறப்பான சரியான போட்டி தான்...
சிறந்த போட்டியாளர்களிடையே
பரிசிற்குரியவரைத் தேர்ந்தெடுக்க
நடுவர்களும் திண்டாடியிருப்பரே!
சிறப்பான சரியான போட்டி தான்...
போட்டியை நடாத்த
ரூபன் அவர்களோடு
துணைநின்ற எல்லோருக்கும்
நன்றி!
சிறப்பான சரியான போட்டி தான்...
இவ்வாறான போட்டிகளே
சிறந்த படைப்பாளிகளை இனங்காட்டும்
போட்டியில் பரிசில் பெற்றோருக்கு
உங்கள் யாழ்பாவாணனின் வாழ்த்துகள்!
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குசெய்வதை சிறப்பாக செய்யவேண்டும் .வித்தியாசமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பவர் நீங்கள் கவிதைகளை ஒரே பக்கத்தில் படிக்க தந்தமைக்கு நன்றி. உங்களோடு இனைந்து செயல்பட்டு அற்புதமான போட்டியை தந்த நடுவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இத்தனைக்கும் மேலாக ரூபனின் ஆர்வம் ஆச்சர்யப் பட வைக்கிறது.தனிப்பட்ட முறையில் பொருட்செலவு செய்து நல்ல நடுவர்களிடம் பணியை ஒப்படைத்து அமைதியாக பணியாற்றிய ரூபனை எப்படிப் பாராட்டினாலும் தகும். நானும் கலந்து கொள்ளாமல் விட்டுவிட்டேனே என்ற ஆதங்கம் ஏற்பட்டு விட்டது.
பதிலளிநீக்குபாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
கலந்து கொண்டவர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் பாராட்டுக்கள். சிறப்பான முயற்சி. ஏற்பாடு செய்தவர்களுக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமற்றவரையும் முன்னிறுத்தும் அற்புதமான மனசு சார் உங்களுக்கு .
பதிலளிநீக்குஒரே இடத்தில் அனைத்தையும் தொகுத்துத்
பதிலளிநீக்குதந்து இருப்பது மிகவும் சிறப்பு.
படித்து மகிழ ஏதுவாக உள்ளது .
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
இந்தக் கவிதைப் போட்டி நடத்தியதில் உங்களுக்கும் மிகப்பெரும் பங்கு இருக்கிறது...
பதிலளிநீக்குவெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்....
அருமை ... அருமை...
பதிலளிநீக்குநன்றி DD
பதிலளிநீக்குநல்ல சிறப்பான தொகுப்பு...
பதிலளிநீக்குஅனைத்துத் தகவல்களையும் சிரமப்பட்டு ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளது சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பயனளிக்கும்.
பதிலளிநீக்குசபாஷ்! சரியான போட்டி/முயற்சி/உழைப்பு!!!
பதிலளிநீக்குகலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகளை வென்றவர்களுக்கும் என் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குபகிர்விற்கு மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
தங்களின் தொகுப்பு அருமை ஐயா! நன்றி!
பதிலளிநீக்குசிறப்பான போட்டியை நடத்தி முடித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபோட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கும் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்
மீண்டும் ஒரு போட்டியில் இன்னும் சிறப்பாக எல்லோரும் பங்குபற்றவேண்டும் என்று அனைவரையும் அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன்
ஊக்கப்படுத்தும் தனபாலன் அவர்களுக்கும் இனிய நன்றிகள்
வாழ்கவளமுடன்
சபாஷ் சரியான போட்டிதான்ன்ன்.. இவ்ளோபேர் போட்டியில் பங்குபற்றியிருக்கினம்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவித்தியாசமாக தொகுத்து தந்திருப்பது பாராட்டுதக்கது.
பதிலளிநீக்குவெற்றி பெற்ற - பங்குபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அற்புதமான போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்கு வாழ்த்துக்கள் ஐயா..
பதிலளிநீக்குஅருமையான பகிர்வு!!... மனமார்ந்த நன்றி!!...போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வென்றவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!!!..... தங்களது பணி மேன்மேலும் சிறந்து தொடர வாழ்த்துகிறேன்!!!!
பதிலளிநீக்குகவிதைப் போட்டியை அறிவித்து -தன்செலவில் நடத்திய- திரு ரூபன் அவர்களுக்கும், சிறப்பான கவிதைகளைத் தேர்ந்தெடுத்த நடுவர்கள் மற்றும் இதுபற்றிய செய்திகளைக் கவிஞர்கள் அறியத்தந்த தங்களுக்கும் திரு.முரளி முதலான நண்பர்களுக்கும் என் வணக்கம்.
பதிலளிநீக்குபங்கேற்றுக் கவிதைவிருந்து படைத்த கவிஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இதுபோலும் முயற்சிகள் பெருக வேண்டும். இளைஞர்கள் பெருவாரியாகப் பங்கேற்கச் செய்ய வேண்டும். இயலுமெனில் இந்தக் கவிதைகளைப் பற்றிய சிறந்த விமர்சனங்களை எழுதுவோர்க்கும் பரிசு தரலாம். நான் உதவிசெய்கிறேன். யோசியுங்கள்.
வெற்றி பெற்றவர்களுக்கும் பங்கேற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநல்ல முயற்சி நண்பரே வாழ்த்துக்கள்
நடுவர்களுக்கும் நடத்தியவர்களுக்கும் வாழ்த்துக்கள்
நீங்கள் கவிஞர்களுக்கு கொடுக்கும் ஊக்கத்திற்கு பாராட்டுக்கள்.வெற்றி பெற்றவர்களுக்கும்,பங்கு கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபரிசு பெற்றவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், அழகாக அதை வெளியிட்ட தங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஅன்புடன்
பவள சங்கரி
கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள். வெற்றி பெற்றவர்கள் கவிதையை இங்கேயே கர்சரை வைத்துப் படிக்கச் செய்த DDக்கு ஒரு சல்யூட்!
பதிலளிநீக்குபோட்டியில் பங்குபெற்ற மற்றும் வெற்றி பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குசிறிய இடைவேளைக்கு பிறகு தங்கள் பதிவு கண்டு மிக்க மகிழ்ச்சி. கவிதை போட்டியின் தகவல்களை அற்புதமாத தொகுத்து தங்கள் பாணியில் கொடுத்தது அழகு. கவிதை போட்டியை அறிவித்ததில் இருந்து தங்கள் மற்றும் சகோதரர் ரூபன் அவர்களின் அக்கறையயும்,உழைப்பையும் நான் நன்கு அறிவேன். நடுவர்களுக்கும் எனது நன்றிகள். வெற்றி பெற்ற, கலந்து கொண்டபோட்டியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி..
அருமையாக நடத்தி முடிந்த ரூபனுக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஇந்தப் போட்டியப் பற்றி நான் தங்களது வலைதளத்தின் மூலம் தான் அறிந்து கொண்டேன்.
பதிலளிநீக்குபோட்டியில் பங்கேற்றது மனமகிழ்வை அளிக்கிறது. தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
போட்டியை நடத்திய திரு. ரூபன் அவர்களுக்கும், ஊக்கமும் உற்சாகமும் அளித்த நடுவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.
போட்டியில் பங்கேற்ற நண்பர்கட்கும், ஊக்கமளித்து உறுதுணையாய் இருந்த அனைத்து வலையுலக நண்பர்கட்கும், வெற்றி பெற்றவர்கட்கும், இனிய வாழ்த்துக்கள்.
நல்ல பணி அய்யா
பதிலளிநீக்குரூபனுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
வெற்றி பெற்ற பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகவிதைப் போட்டி முடிவுகளும் பதிவுகளின் இணைப்புகளும் என்று தங்கள் இப்பது, மிக்க சிறப்பு. நன்றி...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சார்.போட்டியில் கலந்து கொண்ட அனைவரையும் அறிந்து கொள்ள வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரா...! நீண்ட நாட்களின் பின்....! நல்ல சேவையை அருமையாக அனைவரும் சேர்ந்து செயல் பட்டது சிறப்பும் பெருமையே.
பதிலளிநீக்குஅத்துடன் அனைத்தும் தொகுத்து தந்ததும் அருமையே...!நன்றி ...!
ரூபனுக்கும், நடுவர்களுக்கும்,வெற்றி பெற்றவர்களுக்கும்,கலந்து கொண்டவர்களுக்கும் நன்றியும் பாராட்டும் உரித்தாகட்டும்.
ஒரு கவிதைப் போட்டியினை ஒழுங்கு செய்து அதன்மூலம்
பதிலளிநீக்குஊக்குவிப்பை அளிப்பதற்காக முன்வந்த ரூபன் அவர்களுக்கும்
இப் போட்டியினைச் சிறந்தமுறையில் நடத்திக் கொடுத்த அன்பு
உறவுகளுக்கும் பங்குபற்றிய அனைத்துக் கவிஞர்கள் ,கவிதாயினிகள் மற்றும் இப் போட்டியில் வெற்றி பெற்ற சொந்தங்களுக்கும் ஆர்வத்தோடு
பங்கெடுத்துக் கொண்டு சிரமங்களைப் பார்க்காமல் இப் போட்டியினை
மிகவும் சிறந்த முறையில் நிகழ்த்திக் கொடுத்த தங்களுக்கும் என்
நன்றி கலந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் சகோதரா .மிக்க நன்றி பகிர்வுக்கு .
பரிசு பெற்றோருக்கு வாழ்த்துக்கள் அருமையான ,கடுமையான ,
பதிலளிநீக்குசிறப்பான பணி .தங்களுக்கும்
என் வாழ்த்துக்கள் சார்!!!
பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள்.....
பதிலளிநீக்குவெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.
பரிசு கிடைக்காதவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை.கலந்து கொண்டதே ஒரு பரிசுதான்
பதிலளிநீக்குநல்லதொரு தொகுப்பு.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குபோட்டியைத் திறம்பட நடத்திய ரூபனுக்கும் நடுவர்களுக்கும் அதை அழகாய் அனைத்துப் பதிவர்களிடமும் கொண்டு சென்ற தனபாலனுக்கும் மனமார்ந்த நன்றி. போட்டியில் பங்குபெற்ற அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுகள். வெற்றிபெற்ற பதிவர்களுக்கு சிறப்பு பாராட்டுகள். வலைப்பதிவர்களை உற்சாகத்துடனும் ஊக்கத்துடனும் எழுதவைக்கும் சிறப்பான முயற்சிக்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குவெற்றி பெற்றவர்களுக்கும், போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குசிறப்பாக போட்டியை நடத்திய ரூபன் அவர்களுக்கும், ந்டுவர் குழுவுக்கும்
சிறப்பாய் தொகுத்து வழங்கிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்.