🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதனின் உண்மையான ஊனம் எது...?

வணக்கம் நண்பர்களே... முதலில், உயர்திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், எனக்கு விருது வழங்கியதற்கு Sunshine Blogger Award எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்... வழக்கமாக சமீபத்திய பதிவுகளில் பாட்டோடு பதிவை முடிப்பேன்... அதற்குப் பிறகும் எழுத வைத்த ஐயாவிற்கு நன்றி... இன்று நாம் அலசப் போவது மனிதனின் உண்மையான ஊனம் எது ? என்பதைப் பற்றி "பேசப்" போகிறோம்...


"வாப்பா... முந்தைய பதிவான மனித உறுப்புகளில் சிறந்தவை எது? என்பதைத் தெரிந்து கொண்டோம். (இந்தப் பதிவைப் படிக்காதவர்கள் பதிவின் தலைப்பு மேல் சொடுக்கிப் படிக்கலாம்) மனித உறுப்புகளின் பயனைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்... கைகளோ, கால்களோ, கண்களோ, காதுகளோ, இல்லை ஏதோ ஒரு உறுப்பு ஊனமானால் கூட, அது எவ்வளவு பெரிய கஷ்டம்...? மனசாட்சியே... பாட்டு படிக்காம, யோசித்துச் சொல்லு..."

"ஓஹோ... முயற்சி செய்றேன். உலகத்தில் மிகப்பெரிய ஆயுதம்-நாக்கு ? ..ம்ஹும்.. எல்லாத்துக்கும் தலைவன் ஒருவன் இருக்கானே மூளை. அவன் கட்டளை இல்லாம எதுவும் நடக்காதே... மூளை வளர்ச்சி குறைபாடு...? இல்லையா ? சரி... நீ சொல்றதைப் பார்த்தா... வெளி உறுப்புகள் எதுவும் இல்லேன்னு தெரிஞ்சு போச்சி. தைராய்டு சுரப்பி... நாம உடம்பு குண்டாவது, ஒல்லியாவது, வளர்வது எல்லாமே இதனால் தானாமே... ஓ ஓ இது இல்லையா... இப்ப சரியா சொல்றேன்... இவ்வளவு உறுப்புகளையும் பல மனிதர்கள் சரிவரப் பயன்படுத்தாதலால், இந்தியாவையே... ம்ஹீம்... உலகத்தையே பயமுறுத்துகிற நீரழிவு நோய் அல்லது சர்க்கரை நோய்... நோய்களின் தாய் என்று சொல்வார்களே... இது வந்து விட்டால் வரிசையாக ஒவ்வொரு நோயும் வந்து விடுமே... முதலில் சர்க்கரை நோய் என்பதே தவறு, சர்க்கரை குறைபாடு... கணையம் ஊனம் ஆவதால் தானே...?"

"டேய்... நிப்பாட்டு... போதும்...! ஆயிரத்தெட்டு நோய் இருக்கு... இப்படியே இன்னும் நிறையச் சொல்லிப் பதிவின் போக்கையை மாற்றாதே... ஏதாவது ஒரு ஊனம் இருக்கிறவர்கள் கூட, இன்று ஊனத்தையே உதறித் தள்ளி விட்டு வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள்; வெற்றி அடைகிறார்கள்; முக்கியமாக மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள்... இவர்களைப் பார்த்து எந்த ஊனமும் இல்லாதவர்கள் எப்படி வாழ்கிறார்கள்...? பெற்றோர்களால் முடியாததைக் குழந்தைகள் மேல் திணித்து... இன்று எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்; இறந்து போகிறார்கள்; தற்கொலை செய்து கொள்கிறார்கள்; எதனால்...? நல்லா இருக்கிற உடம்பை 'குடி'யால் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் சீரழித்துக் கொண்டு இருக்கிறானே, எதனால் ? இதிலே, மற்றவர்களையும் அரசாங்கத்தையும் பற்றி உளறல் வேற... நாளுக்கு நாள் விவாகரத்து, சண்டை, சச்சரவு, ஏமாற்றுதல், கொலை, கொள்ளை, இன்னும் பல தப்புகள் அதிகமாகி, இந்தச் சமூகம் கெட்டுச் சீரழிகிறதே... என்ன காரணம்...? யோசிடா...! "

"ரொம்ப டென்சனா இருக்கியே, இரத்தக் கொதிப்பு (ப்ளட் பிரஷர்) வந்துடப் போகுது, ('Sugar'-ரும் 'BP'-யும் ஒரு வாட்டி வந்தா, அது பேச்சை அதே கேட்காதே...) உடல் ஊனமுள்ளவரைப் பார்த்தால்... (1) ஊனம் ஊனமாகிப் போகிறது. (2) தோல்வி தோல்வியடைகிறது. (3) சோம்பேறித்தனம் சுறுசுறுப்பாகிறது. (4) கோபம் தன் மேல் கோபம் கொள்கிறது. (5) தன்மானம் பெருமை அடைகிறது. (6) பொறுமை பொறாமை கொள்கிறது. (7) தத்துவம் மகத்துவம் ஆகிறது. (8) திருப்தி திருப்தியடைகிறது. (9) உண்மையான காதல் உண்மையாகவே மகிழ்ச்சி அடைகிறது. (10) முடிவாக முயற்சியும், தன்னம்பிக்கையும், மன உறுதியும், மனித நேயமும், இவர்களிடம் பாடங்கள் கற்றுக் கொள்கிறது. ஹிஹிஹி கவிதை மாதிரி இல்லை (?)"

"ஹா..ஹா.. இல்லை... மனிதனின் உள் உறுப்புகளோ, வெளி உறுப்புகளோ ஊனம் இல்லை. இதற்கு உருவம் இல்லை. அரூபம்... அதாவது கடவுள் மாதிரி. அது தான் நம் மனம். இன்றைய காலத்தில் பல மனிதர்களின் மனம், ஊனம் ஆகிக் கொண்டு வருகிறது. அது மாற வேண்டுமென்றால், அவரவர் மனதை முதலில் ஊனம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அது தான் மிகவும் முக்கியம்... இந்தக் காலத்துக்கு ஏற்ற சிந்தனையை, அந்தக் காலத்திலேயே நம்ம திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் பாரு...

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.
(குறள் எண் 618)

பொருள் : உடல் உறுப்புகள், செயலற்று இருப்பது குற்றம் ஆகாது. அறிய வேண்டியவற்றை அறிந்து, முயற்சி செய்யாது இருப்பதே ஒருவனுக்குக் குற்றம் ஆகும். என்ன வியப்பா இருக்கா மனமே...? தெய்வம் இருப்பது எங்கே ? என்பதையும் தெரிஞ்சிக்கிட்டியா ? இப்ப பாட்டு பாடு !"

மனிதனின் உண்மையான ஊனம் : மனம் தான்

ஊனம் ஊனம் ஊனம்... இங்க ஊனம் யாருங்கோ...? உடம்பில் உள்ள குறைகள் எல்லாம் ஊனம் இல்லீங்கோ... உள்ளம் நல்லாருந்தா... ஊனம் ஒரு குறை இல்லே... உள்ளம் ஊனப்பட்டா... உடம்பிருந்தும் பயனில்லே... ரெண்டு காலு உள்ளவனோ கெடுக்குறான்... சிலர் ஒத்த காலில் நல்ல வழி நடக்குறான்... ஊனம் என்னடா ஊனம்... அட.. ஞானம் தானே வேணும்... அந்த ஞானம் வர வேணுமுன்னா... மனசு மாற வேணும் !


© பொற்காலம் வைரமுத்து தேவா 🎤 தேவா @ 1997 ⟫


நன்றி மனசாட்சி... அந்தப் பொற்காலம் வரட்டும். தன் மனதில் வருத்தங்கள் இருந்தாலும், மற்றவரின் மன வருத்தத்தை நீக்கும் அல்லது ஆறுதல் அளிக்கும் மனித உள்ளங்கள் இருக்கின்றன. மற்றவர் மனம் எனும் விளக்கில், இருட்டை நீக்கும் திரியைப் பற்ற வைக்கும் தீக்குச்சியாக இருக்க முடியாவிட்டாலும், திரி எண்ணெய்யில் மூழ்காமல் இருக்க, அவ்வப்போது தூண்டி விடும் அணைந்த (தீக்)குச்சி போலாவது இருக்க வேண்டும்.

ஒலியின் வேகத்தை விட அதிக வேகமுள்ள ஒளி, நம் மனதில் இருக்கும் இருளை ஒழிக்கட்டும்...

அப்படி உடல் ஊனமுற்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள வேண்டிய பல விசயங்களில் ஒன்று இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மனிதனின் உண்மையான ஊனம் மனம்தான் என்பதை மிகவும் அழகாக பதிவிட்டுள்ளீர்கள். சில ஆண்டுகளுக்கு முன்னர் திருச்சி, அள்ளூரிலுள்ள, திருவள்ளுவர் தவச்சாலைக்குச் சென்று பெரும்புலவர் இரா.இளங்குமரனார் ஐயா அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.அவரது வீட்டின் மாடியில் தமிழறிஞர்களைப் பற்றிய ஒரு கண்காட்சி அரங்கம் வைத்திருக்கின்றார்.இவ்வரங்கில் சுவற்றில் எழுதியிருந்த வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது.
    உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம், உள்ளம் சுருங்கினால் உறவும் பகையே.

    பதிலளிநீக்கு
  2. உண்மையான ஊனத்தை விளக்கும் வகையில் அழகான, இதுவரை கேள்விப் படாத, திருக்குறள் ஒன்றை உதாரணம் காட்டியது அருமை
    த.ம. 2

    பதிலளிநீக்கு
  3. குறள் விளக்கத்துடன் நல்ல பதிவு. இந்தப் பதிவில் குரல் இல்லை (பாடல்கள் இணைப்பு!) 'தெய்வம் இருப்பது எங்கே' என்பது உங்கள் பழைய பதிவு, பார்த்தேன்... அதே வரிகளில் டி எம் எஸ் குரலில் ஒரு பாடல் இருக்கிறது!!

    பதிலளிநீக்கு
  4. பொற்காலம் வர வாழ்த்துக்கள்.
    குறள் விளக்கம் அருமை.
    உடல் ஊனத்தை விட மன ஊனம் கொடியது.
    முதலில் அது களையப்படவேண்டும்.
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  5. பாராட்டுக்கள் DD

    பதிவு அருமை

    அதற்க்கு மேற்கோள் காட்டிய திருக்குறளும் அருமை
    .
    உம்மால் தமிழுக்கு பெருமை
    .
    கரந்தை நாராயணன் அவர்கள் பதிவு செய்துள்ள . உள்ளம் விரிந்தால் உலகமே சொந்தம், உள்ளம் சுருங்கினால் உறவும் பகையே.என்ற கருத்து அற்புதம் .அவருக்கு என் பாராட்டுக்கள்

    உள்ளம் கிணற்று தவளை போல் உள்ளேயே உள்ளதால் உலகம் தெரியாமல் அறியாமையில் கட்டுண்டு கிடக்கிறது.

    அது கடலை பார்த்ததில்லை. எனவேதான் அது கடலிலிருந்து கிணற்றில் விழுந்த தவளையின் பேச்சை நம்ப மறுக்கிறது.

    அதைபோல்தான் இன்று பெரும்பாலான மனிதர்களும் இருக்கிறார்கள்
    என்ன செய்வது
    மனது விரிவடைய தன் முயற்சியும் வேண்டும் அல்லது பிறர் முயற்சிகளுக்கு செவியாவது சாய்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  6. தலைப்பைப் பார்த்தவுடனே பொற்காலம் பாட்டுத்தான் ஞாபகத்துக்கு வந்தது.....

    மிகச சரியாகவும் துள்ளியமாகவும் சொல்லியுள்ளீர்கள் சார்
    (த.ம 4)

    பதிலளிநீக்கு
  7. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள். மனது ஊனமில்லாமல் இருந்தால் எதும் ஊனமில்லை.

    பதிலளிநீக்கு
  8. மனிதனின் ஊனம் மனதில் தான்...

    அருமையான பகிர்வு. பொற்காலம் படப்பாடல் எனக்கும் பிடித்த நற்கருத்துள்ள பாடல்.

    த.ம. 5

    பதிலளிநீக்கு
  9. மன ஊனத்திற்கு செயற்கை மனம் ஒன்று பொருத்த முடியாது .
    நல்ல கருத்துள்ள பதிவு.

    பதிலளிநீக்கு
  10. மனதை தெளிவுபடுத்தி ஊக்கம் விதைக்கும் கருத்துக்கள் அடங்கிய பதிவுக்கு மிகவும் நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  11. Unam patri arumaya solliyirukkinka. Ippa enda phonila unka bloggera vasikka kudiyatha irukku . Nanri

    பதிலளிநீக்கு
  12. ஊனம் ஊனமென்று
    உடல் ஊனத்தை மட்டுமே
    கணக்கில் கொள்ளாதீர்கள்
    மனதில் ஆயிரமாயிரம்
    புரைகள் ஊறிய ஊனத்தை
    வைத்திருந்தால்தான்
    உண்மையான ஊனமென
    அழகாய் உரைத்தீர்கள் நண்பரே..

    பதிலளிநீக்கு
  13. ஆக இறுதியாக உள்ளம் - மனம் - அன்பு காட்டுதல் - அனைத்து ஜீவ ராசிகளிடமும் அன்பு காட்ட வேண்டும் - நல்லதொரு சிந்தனை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு
  14. சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  15. பரந்த மனம் இல்லாத மனிதன்தான் உண்மையில் ஊனமானவன்..அருமையான பதிவு சகோ.

    பதிலளிநீக்கு
  16. மன இருளை ஒழிக்கும் அருமைக் கருத்து. நன்றி.

    பதிலளிநீக்கு
  17. அருமையான பதிவு

    பகிர்வுக்கு நன்றி தனபாலன் சார்

    பதிலளிநீக்கு
  18. ஊனம் - உங்களின் பார்வை - விளக்கமாக அறிந்து கொண்டேன்

    பதிலளிநீக்கு
  19. விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.அருமையான பதிவு

    ஆட்டோமொபைல்?

    பதிலளிநீக்கு
  20. ரொம்ப பேசி இருக்கிர்கள் சார் பரவயில்ல நல்ல பதிவு வெளியீடு செய்ததால் மன்னித்து விடுகிறேன்

    நல்ல பதிவு அனைத்தும் சிரிக்கவும் வைக்கும் சிந்திக்கவும் வைக்கும்

    sunshine அவார்ட் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  21. மனிதனின் எல்லா பிரச்சனைக்கும் அவன் மனம் தான் காரணம்...
    நீங்கள் போன பதிவுல சொன்ன மாதிரி "மனிதனின் எதிரி கூட மனம் தான்"....

    பதிலளிநீக்கு
  22. அவரவர் மனதில் உள்ள ஊனத்தை கலைந்தால் போதும் .

    சரியா சொல்லி இருக்கீங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  23. மனிதனின் மனம் ஊனம் என்பதோடு அருமையான தத்துவங்களாக பத்து வரிகள் கூறியது அருமை சார்

    பதிலளிநீக்கு
  24. சிந்தனைக்கு சிறந்த விருந்து.... என்ன பாஸ் ? நம்ம பதிவு பக்கம் ரெண்டு நாள் காணோமே? உங்க வருகைக்காய் காத்திருக்கிறேன்......

    பதிலளிநீக்கு
  25. ஆம் உண்மைதான் ஊனம் உடலுக்கில்லை! (TM 7)

    பதிலளிநீக்கு
  26. 200 follower கடந்தமைக்கு வாழ்த்துக்கள் தனபாலன் ஜீ! :)

    அதுபோல மின்னஞ்சல் வாசகர்களின் எண்ணிக்கையும் 300 தொட்டுக்கொண்டிருக்கிறது போல வாழ்த்துக்கள் :)

    Keep rocking :)

    பதிலளிநீக்கு
  27. அருமையான பதிவு சகோ. ஊனத்திற்கு நம்முடைய மனமே என்று கூறுவது உண்மைதான். நல்ல பதிவு. விருதுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் சகோ அவர்களே.

    பதிலளிநீக்கு
  28. நம்பிக்கையும், தூய உள்ளமும் இல்லாதவரே ஊனமுடையவர்கள் - நல்ல ஆக்கம்

    பதிலளிநீக்கு
  29. மனத்துக்கண் மாசிலன் ஆதல்னு வள்ளுவர் சொன்னது இதுதான்.

    எல்லா இழப்பும் இழப்பல்ல. நல்ல மனத்தை இழப்பதே பேரிழப்பு.

    ஒரு சிறிய கருத்து. உங்கள் வலைப்பூவில் ஒரு பதிவைப் படிப்பதற்கும், அதன் பின்னூட்டங்களைப் படிப்பதற்கும், பிறகு மறுமொழி இடுவதற்கும் நிறைய கிளிக்க வேண்டியிருக்கிறது. மற்ற வலைப்பூக்களில் இருப்பது போல ஒரு கிளிக்கில் இவைகளைச் செய்ய முடிந்தால் நன்றாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  30. கடைசி வரிகள் செம பஞ்ச்...

    பதிலளிநீக்கு
  31. மன ஊனமே உண்மையான ஊனம் என்பதில் தங்களோடு உடன்படுகின்றேன். பதிவுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  32. மனிதனின் உண்மையான ஊனத்தை
    அடையாளம் காட்டும் நல் பதிவு சார்

    பதிலளிநீக்கு
  33. ஆழமான கருத்தை அழகாக பதிவு செய்து உள்ளீர்கள்..நன்றி

    பதிலளிநீக்கு
  34. "பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
    ஆள்வினை இன்மை பழி." அதிகம் பேசப்படாத குறளை சிறப்பாகப் பயன்படுதிச் சொல்லியுள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
  35. உங்கள் சுறுசுறுப்பையும் அழைப்பையும் கண்டு பொறாமைப் படுகிறேன்.

    பதிலளிநீக்கு
  36. தெளிவாக அழுத்தம் திருத்தமாக பதிவு பகிரப்பட்டுள்ளது. வாழ்த்துக்களும் பாராட்டுதல்களும்!
    http://www.krishnaalaya.com
    http://www.krishnalayaravi.com

    பதிலளிநீக்கு
  37. சரியாக சொன்னீர்கள்..மனம் ஊனமானால் மார்க்கம் இல்லை!

    பதிலளிநீக்கு
  38. ஊனமனம் தான் உண்மையான ஊனம் என்பதை அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
    அருமையான கருத்துள்ள பதிவுங்க தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  39. சரியாக சொன்னீர்கள் நன்பரே,மனிதனிடம் உள்ள ஒரே ஊனம் மன ஊனம் மட்டுமே..சிந்திக்க வைக்கும் பதிவு.

    பதிலளிநீக்கு
  40. மன ஊனத்தோடுதான் இங்கு எல்லாருமே.அவர்களுக்கு மருந்தோ வைத்தியமோ கிடையாது.நிறைவான தேடல்.வாழ்த்துகள் தனபாலன் !

    பதிலளிநீக்கு
  41. மிகச்சரியாக சான்னீர்கள்.வாழ்த்துக்கள்.இந்த ஊனத்தை சரிசெய்யத்தான் நானும் போராடுகிறேன்.

    பதிலளிநீக்கு
  42. கிருஷ்ணாலையா ரவி அய்யா அவர்கள் தங்களைப்பற்றி என்னிடம் சொல்லியிருந்தார்கள். தங்களின் உறவு கிடைத்ததற்காக அவர் மிகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். அவர் மூலமான தங்களின் உறவு கிடைத்ததற்காக நானும் மகிழ்கிறேன். நம்மை இணைத்த அவருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

    மேலும் பகிர்ந்துகொள்வோம் அய்யா. இப்போதைக்கு விடைபெறுகிறேன். மீண்டும் சந்திப்போம்! நன்றி அய்யா!

    பதிலளிநீக்கு
  43. ஒலியின் வேகத்தை விட அதிக வேகமுள்ள ஒளி, நம் மனதில் இருக்கும் இருளை ஒழிக்கட்டும்...

    அருமையாக முடித்துள்ளீர் நண்பரே, எனது நெட்வொர்க்கில் ஏற்ப்பட்ட சிறு தொந்தரவு காரணமாக என்னால் இத்தனை நாள்களாக தங்கள் தளத்திற்கு வர இயலவில்லை என்பதை மிகவும் வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்...

    பதிலளிநீக்கு
  44. அருமை.ஊனம் எனும் இருள் நீங்கினால்,இன்பம் எனும் வெளிச்சம் வாழ்வில் வரும்,உடல் ஊனம் ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  45. மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் எல்லா அறங்களுக்கும் மேலானது என்று வள்ளுவர் சொன்னதும் இதனால்தான்..


    நல்ல பதிவு..நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  46. அருமை.ஊனம் எனும் இருள் நீங்கினால்,இன்பம் எனும் வெளிச்சம் வரும்.உடல் ஊனம் ஒன்றுமில்லை.

    பதிலளிநீக்கு
  47. "நில்லு.... நில்லு..... சொந்தக் காலில் நீயும் நில்லு.....
    தள்ளு....தள்ளு.... தலைவிதியக் கையால் தள்ளு......
    எத்தன பேர் வந்தாங்கடா... எத்தன பேர் போனாங்கடா......
    சாதிச்சவர் மட்டும் இங்கே சிலையா நின்னாங்கடா...."
    (திரைப்படம் : காஞ்சனா)

    பதிலளிநீக்கு
  48. மிகச்சிறப்பானகருத்துக்கள்! உடல் ஊனம் ஒரு குறையே அல்ல! மன ஊனம் தான் தவிர்க்க வேண்டும். காலத்திற்கேற்ற பதிவு! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

    பதிலளிநீக்கு
  49. அருமையான பதிவு அண்ணா...உண்மையிலேயே ஊனம் உடலுக்கில்லை..

    பதிலளிநீக்கு
  50. very very sensitive and nice article.. really i m proud of your social consciousness. thank you

    பதிலளிநீக்கு
  51. வாழ்த்துக்கள் ஐயா,உண்மை தான் மனம் ஊனம் தான் கொடியது. அருமையான பதிவு. பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  52. ***அவரவர் மனதை முதலில் ஊனம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.**

    எனக்கு பிடித்த கண்ணதாசன் வரிகள்..

    உல்கம் ஆயிரம் சொல்லட்டுமே
    உனக்கு நீதான் நீதிபதி
    மனிதன் எதையோ பேசட்டுமே
    உன் மனதைப் பார்த்துக்கோ நல்லபடி!

    ----------
    நல்ல பதிவுங்க, தனபாலன் :)

    பதிலளிநீக்கு
  53. ரொம்பச் சரி.

    பல கஷ்டங்களும் இந்த மனக்குரங்காலேதான்:(

    பதிலளிநீக்கு
  54. எல்லாத்துக்கும் காரணம் மனசுதான்ய்யா....வால்வானாலும் சரி தாழ்வானலும் சரி, ஊனமானாலும் சரி...மனம் இருந்தால் எல்லாவற்றுக்கும் மார்க்கமும் உண்டு...சிறப்பான பதிவு...!

    பதிலளிநீக்கு
  55. பொதுவாகவே உங்கள் கட்டுரைகள் முழுக்க மனித மனத்தைச் சுற்றியே வருகின்றன. மனத்தின் ஊனம் பற்றி நன்றாகச் சொன்னீர்கள். வெளியே கண்டு பிடிக்க முடியாத ஊனம்.

    தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    தரத்தினில் குறைவதுண்டோ உங்கள்
    அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
    அன்பு குறைவதுண்டோ?
    - பாடல்: கண்ணதாசன் (படம்: பாகப் பிரிவினை)

    பதிலளிநீக்கு
  56. தீக்குச்சியின் பணி திகைக்க வைக்கிறது .........

    நிறைய சொல்லியிருகிறீர்கள் அனைத்தும் அறிந்த விசயங்கள் என்றாலும் மீண்டும் திரி தூண்டும் தீ குச்சியை உங்கள் எழுத்துக்கள் ......

    பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  57. நல்ல ஆக்கபூர்வமான சிந்தனைகள். பதிவும் அருமை. கருத்துகளும் அருமை. கொஞ்சம் படிக்கவும், பின்னூட்டம் கொடுக்கவும் சிரமமாக இருக்கிறது. நாளாவட்டத்தில் பழகிடும்னு நினைக்கிறேன். வேர்ட் ப்ரஸோனு நினைச்சேன். ப்ளாகர் தான் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
  58. அவார்ட் வாங்கியதற்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  59. நன்றி சொல்ல உனக்கு

    வார்த்தையில்லை எனக்கு.

    என்னை பிரம்மிக்க வைத்தவர்களின் (நல்ல விஷயங்களில்தான்) பட்டியலில் உங்கள் தரம் உயர்ந்தது.

    மனதின் ஊனம் மனிதனை மட்டுமல்ல கடவுளையும் கெடுக்கிறது.

    நானும் இரண்டு வரி சினிமா பாடல் தருகிறேன்.

    கடவுள் ஏன் கல்லானான்

    மனம் கல்லாய் போன மனிதர்களாலே.

    பதிலளிநீக்கு
  60. பதிவை படித்ததும் "ஊனம் ஊனம் ஊனம் இங்கே ஊனம் யாருங்கோ " என்ற பாடல் தான் நினைவுக்கு வந்தது!

    பதிலளிநீக்கு
  61. //ஒலியின் வேகத்தை விட அதிக வேகமுள்ள ஒளி, நம் மனதில் இருக்கும் இருளை ஒழிக்கட்டும்...
    //

    இந்த வரிகளை ரசித்தேன் அன்பரே

    பதிலளிநீக்கு
  62. மிகவும் அருமையாக எழுதி இருக்கிறீர்கள் , வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  63. விருதுக்கு வாழ்த்துக்கள் தனபாலன் சார்

    மன ஊனம் கொடிது.
    களையப்படவேண்டும்.
    பதிவு அருமை

    பதிலளிநீக்கு
  64. மனதின் ஒளி வெளிச்சம் தரட்டும்.
    நல்ல பதிவு.
    பரிசு பெற்றதற்கு நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  65. sariyaga solliiirukeega, விருதுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  66. நண்பரே,
    இதனைக் குறித்து சிந்திக்கும் போது, எனக்கு தோன்றிய, அதனால் ஏற்பட்ட தேடலில் கிடைத்த கருத்துகளை உங்களுடன் பகிர ஆசைப்படுகிறேன்!!

    மனிதனின் உண்மையான ஊனம் மனம் என்று சொல்லியிருக்கிறீர்கள்.

    பிறக்கும் போது எல்லா குழந்தைகளும் தெளிவான, பிறழாத மனதுடனே பிறக்கிறன.

    "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
    செய்தொழில் வேற்றுமை யான்.”
    என்கிறார் வள்ளுவர்.

    "எந்தப் பிள்ளையும் நல்ல பிள்ளைதான் மண்ணில் பிறக்கையிலே
    அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே" என்றார் கண்ணதாசன்.

    தெளிவான நீரோடை போல இருக்கும் மனம், கலங்கிய குட்டை போல் ஆவதற்குக் காரணம் சுற்றமும், சந்தர்ப்பங்களும் தான். இவையே மனிதனின் மனதைப் பண்படுத்துகிறன, புண்படுத்துகிறன.

    எனவே, அதிகமாக ஊனப்படுவது என்று வேண்டுமானால் மனதைச் சொல்லலாம்.

    அகக்கருவிகளை மனம் (Mind), புத்தி (Memory) , சித்தம் (Thought) , மனசாட்சி (Conscience) என்று நான்காக பிரிக்கலாம்.

    மனம் ஐம்புலன்கள் மூலம் பெற்ற தகவல்களை ஒருங்கிணைக்கிறது. அதனால் கண்டதையோ கேட்டதையோ இன்னதென்று அறியாது. எனவே தான், இளகிய மனம் கொண்டவர்கள் எளிதாக ஏமாற்றப்படுகிறார்கள். கடின மனம் கொண்டவர்கள் எதையும் ஏற்பதில்லை. பகுத்து அறிவதற்கு புத்தியின் துணை வேண்டும்.

    புத்தி என்பது தான் அறிந்த மற்றும் கற்ற அனைத்தையும் பதிந்து வைத்திருக்கிறது. இதில் அனுபவம், கல்வி என அனைத்தும் உள்ளடக்கம். மனமானது புத்தியின் உதவியுடன் கருவிகள் மூலம் அறிந்ததை இன்னது என்று தெளிகிறது.

    சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் அகக்கருவி. அது மனம் அறிந்ததை புத்தியில் உள்ள தகவலின் அடிப்படையில் 'இது இப்படித்தான்' என்று நிச்சயிக்கிறது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் செயலையும்; இப்படி செய்யலாம் என்று திட்டம் போடும் வேலையையும் செய்கிறது.

    மனம், புத்தி, இத்தனை செயலும் யாருக்காக ? ஆங்காரம் என்கிற கருவிக்காகவே!!!

    மனசாட்சி இன்றி மனமோ புத்தியோ சித்தமோ செயல்பட்டுப் பயனில்லை.

    மனசாட்சி என்றால் என்ன? "நான், என்னுடையது" என்னும் உணர்வே அது!! அதுவே, மனிதனின் போக்கை நிர்ணயிக்கிறது!!

    மனம் ஒரு குரங்கு போல. தான் பார்க்கும் ஏதோ ஒன்றை விரும்புகிறது. அதற்கு நியாய, அநியாயம் கிடையாது. மனம் ஒன்றை விரும்பினால், அதை அடைய ஆசைப்படுகிறது.

    ஆனால், மனசாட்சி அப்படியல்ல! இது, நமக்குத் தேவையா, கிடைக்குமா, கிடைத்தல் நியாயமா என்றெல்லாம் ஆராய்கிறது!!

    மனதுக்கும், மனசாட்சிக்கும் இடையே போராட்டம் நடக்கும். இதில், எது வலுவாக உள் ளதோ, அது வெற்றி பெறும். தெரிந்தே ஒரு தவறு செய்தால், எல்லாரும் "உனக்கு மனசாட்சி இல்லையா?” என்று தான் கேட்பார்கள்!!

    சாதக பாதகங்களை அறியாத மனம் மனிதனின் ஊனமாக இருக்க முடியாது.

    நல்லவை தீயவை அனைத்தையும் அறிந்தும், மனம் போன போக்கில் போகும் மனசாட்சியே மனிதனின் உண்மையான ஊனம்


    "கண் போன போக்கிலே கால் போகலாமா
    கால் போன போக்கிலே மனம் போகலாமா
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?"
    கவிஞர் வாலி

    என்ன எனது கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இருக்கிறதா?

    தங்களுடன் கருத்தில் சிறிது வேறுபாடு கொண்டமைக்கு வருந்துகிறேன்.

    பி.கு:
    மனசாட்சி: அவ்வ்.. அங்க சுத்தி இங்க சுத்தி கடைசியில என்னையே குத்தம் சொல்றீங்களா?

    பதிலளிநீக்கு
  67. மனிதனின் உண்மையான ஊனம் மனம்தான் என்பதை மிகவும் அழகாக பதிவிட்டுள்ளீர்கள். தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது தோழரே.

    பதிலளிநீக்கு
  68. மனிதனின் உண்மையான ஊனம் மனம்தான் என்பதை மிகவும் அழகாக பதிவிட்டுள்ளீர்கள். தங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது தோழரே. முதல் முறையாக தங்கள் தளத்திற்கு வருகிறேன். இனி தொடர்வேன். நன்றி.
    என்றும் உங்கள் அன்புடன்: அறிவுவிக்னேஷ்

    பதிலளிநீக்கு
  69. ஆளுங்க அருண் அவர்களுக்கு... தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே... நான் ஏதும் மறுப்பு தெரிவிக்கவில்லை...

    1. மனித வாழ்க்கையில் கஷ்டமான விஷயம் என்ன?

    மேலே உள்ள பதிவை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்... பதிவின் முடிவில் சொன்ன கருத்தை மனிதனால் முடியவில்லை என்றால், என்ன நடக்கும் என்பதே இரண்டாவது பதிவு...

    2. மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

    இந்தப் பதிவின் முடிவு, மனமா ? மனசாட்சியா ? என்பது தெரிய வரும்... அப்படியும் மனிதன் மாறவில்லை என்றால், என்ன நடக்கும் என்பதே மூன்றாவது பதிவு...

    3. மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?


    இந்தப் பதிவின் முடிவு மனசாட்சிக்கு தான் என்று புரிந்து விட்டதல்லவா ?


    "நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை" (கிரிமினல் நடவடிக்கைகளில் செக்ஷன் 313 இவ்வாறு இல்லை.. அது வேறு விஷயம்... பிறகு பார்ப்போம்...) என்று சாட்சிகள், குற்றவாளிகள், எல்லோரும் கோர்ட்டில் சொல்வதை (சினிமா வாயிலாக) நாம் அறிவோம்...

    அங்கு உண்மை தான் பேச வேண்டும்... மனம் பேசுமா...? மனசாட்சி பேசுமா ? பொய் பேசினால் மனம் பேசுமா...? மனசாட்சி பேசுமா ? யோசித்து பாருங்கள்... உங்கள் கருத்திலே பதில் உண்டு...

    மனதைப் பொறுத்தவரை இரண்டு வகை... உள்மனது (மனசாட்சி) வெளிமனது (அலை பாயும் மனம்) ... மனிதன் செய்யும் எந்த ஒரு தவறும் உள்மனதிற்கு (மனசாட்சிக்கு) தெரியும்... ஆனால் வெளிமனது (அலை பாயும் மனம்) அதை வென்று விடும்...


    உள்மனது தவறு செய்வதில்லை... அவ்வாறு செய்தால் அவர்கள் மனிதர்கள் இல்லை... உள்மனதையும் வெளிமனதையும் சமமாகி விட்டால்... ? (பலரால் முடிவதில்லை... சில பேர் ஓரளவு வெற்றி பெறுகிறார்கள்)

    அவ்வாறு சமமாகி விட்டால் நம் மனம் தெளிவாக, எந்தவித சலனமில்லாமல் இருக்கும்... அப்போது தான் நம் மனதை முழுவதுமாக அறிய முடியும்...

    நன்றி நண்பரே...

    பதிலளிநீக்கு
  70. நல்ல கருத்துள்ள பகிர்வு.

    ஊனம் எனும் இருள் நீங்கி மனங்களில் ஒளி பரவி இருக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  71. ஏற்றுக்கொள்ள்க்கூடிய கருத்து பகிர்விற்கு நன்றி:)

    பதிலளிநீக்கு
  72. மனிதனின் உண்மையான ஊனம் மனம்தான் .well said.
    karthik amma

    பதிலளிநீக்கு
  73. நல்ல கருத்துகள் @ திண்டுக்கல் தனபாலன்..!

    பதிலளிநீக்கு
  74. உங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன் http://blogintamil.blogspot.in/2012/08/blog-post_11.html

    பதிலளிநீக்கு
  75. எத்தனை எத்தனை விஷ்யங்கள் அருமையான பகிர்வுகள்!தளம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறதே!வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  76. ஊனத்தைப்ற்றி அருமையாக பதிந்திருக்கிறார்கள்.மனசு நல்ல இருந்தா எதுவும் ஊனம் கிடையாது.நன்றி..

    பதிலளிநீக்கு
  77. அருமையான தலைப்பு இதில் எந்த சந்தேகத்துக்கும் இடமில்லை .மன ஊனமே ஊனம் .மனிதன் மனிதனாய்
    வாழ்வதற்கே ஆதர சக்தி இது ஒன்றுதான் .மிக்க நன்றி
    தொடர வாழ்த்துக்கள் சகோ .

    பதிலளிநீக்கு
  78. நல்ல கட்டுரை.

    பின்னூட்டமும் நன்று - கடவுள் சாட்சியாக நான் சொல்வதெல்லாம் உண்மை என்ற சத்தியத்திலேயே உண்மை சந்தேகத்துக்கிடம் என்பதைக் கவனித்திருக்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  79. உயர்திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், விருது வழங்கியதற்கு Sunshine Blogger Award

    எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  80. ஒலியின் வேகத்தை விட அதிக வேகமுள்ள ஒளி, நம் மனதில் இருக்கும் இருளை ஒழிக்கட்டும் !

    ஊனமில்லா உலகம் உய்ய உவப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  81. தொடர்ந்து நல்ல பதிவுகளாக உள்ளன. அதற்கு வாழ்த்துகள்.. ஒரு கோரிக்கை. பதிவில் நடு நடுவே வார்த்தைகளின் நிறம் மாற்றி இருக்கீர்கள். படிக்க அது தடையாக உள்ளது

    பதிலளிநீக்கு
  82. தெளிவான கருத்து செரிவு மிக்க பதிவு.உங்களின் பதிவில் சுயமுன்னேற்ற சிந்தனை பதிவுகள் அதிகம் இருப்பது உற்சாகத்தை தருகிறது.நன்றி !

    பதிலளிநீக்கு
  83. தங்களின் பதிவு தன்னம்பிக்கை ஊட்டுவதாக அமைவது மகிழ்ச்சி தருகிறது.

    பதிலளிநீக்கு
  84. உங்கள் தளத்துக்கு முதல் வருகை இது.. இதுவரை இந்த வலை பூவை தவறவிட்டதில் மிக வருத்தம்... அருமையான பதிவு...

    பதிலளிநீக்கு
  85. வணக்கம் ,
    உங்களை எம்மோடும் இணைத்துக்கொள்ளுங்கள்.
    நன்றி.
    www.thiraddu.com

    பதிலளிநீக்கு
  86. நிறைய சிந்திக்கிறீங்க! அழகா சொல்றீங்க! உங்க ப்ளாக் டிசைன் நீங்களே செய்தீர்களா? நல்லா வகைப்படுத்தி இருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  87. ஊனமில்லா உலகம் உய்ய உவப்பான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  88. //உயர்திரு. வை.கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், வழங்கிய Sunshine Blogger Award விருது//

    விருதினை அன்புடன் ஏற்று சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

    அன்புடன்
    vgk

    பதிலளிநீக்கு
  89. அருமையான பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  90. விருதுக்கு வாழ்த்துக்கள்... அழகியக்கருத்து

    பதிலளிநீக்கு
  91. வணக்கம்
    திண்டுக்கல தனபால் (அண்ணா)

    மனிதனின் உண்மையான ஊனம் எது என்ற தலைப்பில் படைக்கப்பட்ட படைப்பானது நல்ல சுவரகசியமாய் துள்ளிய மொழி நடையில் ஆங்கங்கே கேள்வியடையாளங்களையும்.நிறுத்தல் குறியீடுகளையும் எடுத்துக்காட்டுக்கு நல்ல பாடல்களையும் அதுமட்டுமா உலகபொதுறையான திருக்குறளையும் எடுத்துக்காட்டாக பறைசாற்றியுள்ளிர்கள். பலபடைப்புக்களை படைத்து பல வெற்றி கொடியையும் நாட்டி விட்டிர்கள் (தனபால்அண்ணா) மிகச் சிறப்பாக எழுத்து துறையில் புதுயுகம் படைக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் (தனபால் அண்ணா)
    (நேரம் கிடைக்கும் போது கட்டாயம் நான் சென்று பின்னூட்டம் இடுவேன்)உங்கள் தளத்தையும் என்னுடைய வாடிக்கை தளமாக இன்றில் இருந்து....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  92. எண்ணிய எண்ணியாங்கு எய்தும் மனத்திண்மைதான் வேண்டப்பெறுவது.

    நீங்கள் சொல்வது சரிதான்.

    பதிலளிநீக்கு
  93. அருமையான பதிவு.
    'முதல் முறை உங்கள் தளத்திற்கு வந்தேன் வாயடைத்து போனேன் அவ்வளவு அருமையான கருத்துக்களை பதிவிட்டீர்கள் . சிறப்பு மிகவும் சிறப்பு.இனி நானும் உங்களின் வாசகனே.என்னையும் அரவணைத்து மேலும் மேலும் கற்க வைத்து செதுக்கி சிற்பம் ஆக்குங்கள். மேலும் உங்கள் சேவை தொடரட்டும்.மனிதனின் சுய முன்னேற்றத்லிற்கு உங்கள் தளம் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி நன்றி நன்றி

    வாழ்க வளமுடன்

    "எண்ணம் போல் வாழ்க்கை,
    மனம் போல் மனித வாழ்க்கை"

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.