🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன...?

நண்பர்களே...! இன்று நாம் தெரிந்து கொள்ளப் போவது மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன? என்பதைப் பற்றி...! கடந்த பதிவில் "மனிதனின் வாழ்க்கையில் கஷ்டமான விசயம் என்ன...?" என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டோம்... அதைப் படிக்காதவர்கள் இங்கே சொடுக்கிப் படித்து விட்டு வரலாம்... ஏனென்றால் அந்தப் பதிவிற்கும், இன்று நாம் படிக்கப் போகும் பதிவிற்கும் தொடர்புண்டு... சரி இப்போது...


மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்ன?

நண்பர்களே..... என்னுடைய முந்தைய பதிவுகளில் நான் சந்தித்த நண்பர்கள் மூலம் அறிந்து / தெரிந்து கொண்ட கருத்துகளை எழுதி விட்டு, முடிவாக என்னுடைய கருத்தோடு முடித்திருப்பேன். ஆனால், இந்தத் தலைப்பைப் பற்றி என் நண்பர்கள் பல பேரிடம் ஆலோசித்த போது, அதிகம் பேர் சொன்ன ஒரே பதில், "மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் - நம்பிக்கை துரோகம் தான்" என்று கூறினார்கள். இனி என் சொந்த கருத்துக்கள்.....தவறு இருந்தால் அல்லது உங்களின் கருத்துக்கள் வேறு மாதிரி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

நண்பர்களின் கருத்துக்கள் படி இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளேன். முதல் பிரிவினர் கூறியது. "நான் யாருக்கும் எந்த துரோகமும் செய்யவில்லை. அதே போல் எனக்கும் யாரும் துரோகம் செய்யவில்லை...ம்...அப்படி யாராவது செய்த கெடுதல்களையும், பழித்துப் பேசினவற்றையும், துரோகமாக எடுத்துக் கொள்ளாமல், அதை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு, அவர்கள் முன்பு தலை நிமிர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன்." ஆம். நண்பர்களே... இவர்களைப் போல நிறைய நண்பர்கள் எனக்கு உள்ளார்கள். ஆனால், நான் இந்த முதல் பிரிவினரைப் பற்றி அலசப் போவதில்லை.

இரண்டாவது பிரிவினர் கூறியது : "மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் - நம்பிக்கை துரோகம் தான்" என்று கூறினார்கள். அவர்களின் கருத்துக்கள் படி, நம்பிக்கை துரோகம் செய்வது யார்? யார்? என்று பெருவாரியாகப் பார்த்தால் (1) கூடப் பிறந்தவர்கள், (2) நண்பர்கள், (3) உறவினர்கள்/மற்றவர்கள்... ஆனால், நான் இந்த இரண்டாவது பிரிவினரைப் பற்றியும் விரிவாக அலசப் போவதில்லை. ஏனென்றால், இது அவரவர் குடும்பத்திற்கேற்ப, நண்பர்களுக்கேற்ப, உறவினர்களுக்கேற்ப, செய்யும் தொழிலுக்கேற்ப மாறுபடும்.

வழக்கமாக என் பதிவில் ஒரு கதை எழுதுவேன். அதற்குப் பதில் கீழே குறிச் சொற்களை மட்டும் எழுதி உள்ளேன். நீங்களே உங்களுக்கு ஏற்றவாறு கதையாக மாற்றிக் கொள்ளுங்கள்.

நல்ல நண்பர் --> (1) / (2) / (3) மீது நம்பிக்கை --> எதிர்பார்ப்பு --> அவசரம் --> ஏமாற்றம் --> பொறுமையின்மை --> சின்னதாக எரிச்சல் --> பயம் --> கோபம் --> பொறாமை --> பழி வாங்கும் எண்ணம் --> பேராசை --> கெட்ட பழக்கம் (குடி, புகை, சூது, இன்னும் பல) --> மனச் சோர்வு --> கெட்ட பழக்கம் தினமும் வழக்கமாகுதல் --> அடுத்தவர்களைக் கஷ்டப்படுத்துதல் --> பொறுப்பின்மை --> பிடிவாதம் --> மதிப்பு குறைதல் (வீட்டிலும் வெளியிலும்) --> எதற்கும் கவலைப்படாமை --> பணம் குறைதல் --> பொய் பேசுதல் --> கடன் வாங்குதல் --> ஏமாற்றுதல் --> இன்னும் பல கெட்ட குணங்கள் --> உடல் நலம் குறைதல் --> திடீர் மரணம் --> குடும்பம் ???

இது தேவையா? இதைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே தெரியும். நான் இவர்களை மட்டும் சொல்லவில்லை. அந்தக் கெட்ட பழக்கமே இல்லாதவர்கள் கூட நாக்குக்கு அடிமையாக உள்ளார்களே... அளவுக்கு மீறிச் சாப்பிடுவது, கண்டதையெல்லாம் எல்லாம் சாப்பிடுவது-இவை கூட நம் உடலுக்குக் கேடு தானே. உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது, அதிக கோபம், பேராசை, பொறாமை, வஞ்சகம், என்னும் பல கெட்ட குணங்கள் கூட உடலுக்குக் கேடு தானே.

நண்பர்களே... நாம் நம் மீது நம்பிக்கை வைக்காமல் பிறர் (1) / (2) / (3) மீது நம்பிக்கை வைத்து விட்டு, அவை நடக்காமல் போனால், அடுத்தவர்கள் (1) / (2) / (3) நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு நம்முடைய உடம்பை கெடுத்துக் கொள்வதில் என்ன பிரயோசனம்? நாம் நம் மீதே நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கையைப் பற்றிப் பல திரைப்படப் பாடல்கள் இருந்தாலும் ஆட்டோகிராப் படத்தில் பா.விஜய் எழுதிய பாட்டைக் கேட்டுப் பாருங்கள். இப்போது ஒரு முறை எனக்காகப் படியுங்கள்.

ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...
ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே...
இரவானால் பகல் ஒன்று வந்திடுமே...
நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்...!
லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...!
மனமே ஓ மனமே... நீ மாறிவிடு...!
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு...!

உள்ளம் என்றும் எப்போதும் உடைந்து போகக் கூடாது...
என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக் கூடாது...
எந்த மனித நெஞ்சுக்குள்... காயம் இல்லை சொல்லுங்கள்...?
காலப்போக்கில் காயமெல்லாம்... மறந்து போகும் மாயங்கள்...!
உளி தாங்கும் கற்கள் தானே மண்மீது சிலையாகும்...!
வலி தாங்கும் உள்ளம் தானே நிலையான சுகம் காணும்...!
யாருக்கில்லை போராட்டம்...? கண்ணில் என்ன நீரோட்டம்...?
ஒரு கனவு கண்டால் அதைத் தினம் முயன்றால்... ஒரு நாளில் நிஜமாகும்...

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு...!
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு...!

வாழ்க்கை கவிதை வாசிப்போம்...வானம் அளவு யோசிப்போம்...
முயற்சி என்ற ஒன்றை மட்டும்...மூச்சு போலச் சுவாசிப்போம்...
லட்சம் கனவு கண்ணோடு...லட்சியங்கள் நெஞ்சோடு...!
உன்னை வெல்ல யாருமில்லை உறுதியோடு போராடு...!
மனிதா உன் மனதைக் கீறி விதைப் போடு மரமாகும்...
அவமானம் படுதோல்வி எல்லாமே உறவாகும்...
தோல்வி இன்றி வரலாறா...? துக்கம் என்ன என் தோழா...?
ஒரு முடிவிருந்தால்...அதில் தெளிவிருந்தால்...அந்த வானம் வசமாகும்...

மனமே ஓ மனமே... நீ மாறிவிடு...!
மலையோ அது பனியோ... நீ மோதிவிடு...!


© ஆட்டோகிராப் பா.விஜய் பரத்வாஜ் K.S.சித்ரா @ 2004 ⟫

ஒவ்வொரு வரியும் எவ்வளவு உன்னத வரிகள்..! நண்பர்களே... நம்பிக்கை தான் வாழ்க்கை. உங்கள் உடல் தான் உங்களுக்குக் கோவில். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்று நமது பெரியவர்கள் சொல்வார்கள். உங்கள் உடலைப் பேணி காப்பாற்றுங்கள். அதை விட மனதைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு அறிவுரை அல்லது ஆலோசனை சொல்வதை விட நாம் அந்த அறிவுரை அல்லது ஆலோசனைகளை முதலில் பின் பற்றுவோம். ஆக, என்னைப் பொறுத்தவரை,

மனிதன் செய்யும் மிகப் பெரிய துரோகம் தன் மனதிற்கும் உடம்பிற்கும் தானே தீங்கிழைத்துக் கொள்வது தான்.

அவ்வாறு துரோகம் செய்ததை எப்போது அறிவான் ? தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. நேரமின்மையால் முழுகையாக படிக்க இயலவில்லை சிறப்பான மிகவும் பாராட்டக் கூடிய பதிவு பாராட்டுகள் மீண்டும் வருவேன்

    பதிலளிநீக்கு
  2. சரியான பாடலுடன் சுட்டியுள்ளிர்கள் நன்றி சகோ...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    கடவுள்களை தொலைத்து விட்டோம்

    பதிலளிநீக்கு
  3. பாடல் தேர்வு அருமை!...பகிர்வு கொஞ்சம் வித்தியாசமான
    சிந்திக்க வைக்கும் பகிர்வாக அமைந்துள்ளது .தொடர வாழ்த்துக்கள் .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  4. பாடல் வரிகள் நல்லா இருக்கு. முதல்ல நம்மை நம்ப தெரிஞ்சுக்கலாமே/ யாரிடமும் எந்த எதிர்பார்ப்பும் வைக்காமல் வாழப்பழகலாமே.

    பதிலளிநீக்கு
  5. உண்மையான , உபயோகமான பதிவுக்கு நன்றி ...

    பதிலளிநீக்கு
  6. நண்பர்களே... நாம் நம் மீது நம்பிக்கை வைக்காமல் பிறர்மீது நம்பிக்கை வைத்து விட்டு, அவை நடக்காமல் போனால், அடுத்தவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டார்கள் என்று புலம்பிக் கொண்டு நம்முடைய உடம்பை கெடுத்துக் கொள்வதில் என்ன பிரயோசனம்


    அழகான கருத்து கொண்ட பதிவு நண்பரே

    அருமை நண்பரே

    எனது தளம் வந்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி நண்பரே

    தொடர்ந்து வாருங்கள்

    படித்து கருத்து சொல்லுங்கள் பிடித்திருந்தால் வாக்களியுங்கள்

    பதிலளிநீக்கு
  7. தங்களின் அன்பிருக்கும் ,பாராட்டுதலுக்கும் நன்றி !

    பதிலளிநீக்கு
  8. உண்மையான கருத்து விரிவான விளக்கம் மிக்க நன்றி புத்துணர்வு பெறுபவர்களுக்கு இது ஒரு நல்ல பாடம் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. உங்கள் உடலை பேணி காப்பாற்றுங்கள். அதை விட மனதை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுக்கு ஆலோசனை சொல்வதை விட நாம் அந்த ஆலோசனைகளை முதலில் பின் பற்றுவோம். >>
    >>>
    மிகசரி சகோ. நல்ல கருத்துக்களை சொல்லியிருக்கீங்க நன்றி

    பதிலளிநீக்கு
  10. அட மாப்ள இது ஜூப்பரா இருக்குய்யா!

    பதிலளிநீக்கு
  11. எனக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

    பதிலளிநீக்கு
  12. நல்ல கருத்து. நிறைய பேர் தங்கள் மனதையும், உடலையும் அதிகம் கெடுத்துக்கொள்கிறார்கள். மனதை மேம்படுத்த வாசிப்பையும், பயணத்தையும் அடிக்கடி மேற்கொண்டால் நல்ல பலன்கள் கிடைக்கும். பகிர்விற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே...
    வாழ்வென்றால் போராடும் போர்க்களமே
    ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே...
    இரவானால் பகல் ஒன்று வந்திடுமே
    நம்பிக்கை என்பது வேண்டும் நம் வாழ்வில்...!
    லட்சியம் நிச்சயம் வெல்லும் ஒரு நாளில்...!/

    பூக்களாய் மனம் கவர்ந்த ஆக்கத்திர்குப் பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  14. உண்மை தான்..

    தன்னை இந்த உலகிற்கு வெளிப்படுத்தும் உடலுக்குத் தீங்கிழைப்பதை விட வேறு பெரிய துரோகம் இல்லை!

    பதிலளிநீக்கு
  15. இந்த பாடல் கேட்டால் நமக்கும்
    நன்றாக வாழ வேண்டும் என்ற ஆவல் வரும்.
    ஆம். உன்னத வரிகள் தான் . நீங்கள் இறுதியில்
    குறிப்பிட்டுள்ள உங்களின் வரிகளும் தான் .
    உடல் / மனம் + ஆரோக்கியம் பேணல் தான்
    என் கொள்கையும் கூட. உங்கள் தளம் மிக
    அருமையான வாழ்வியல் கருத்துக்களைக் கொண்டுள்ளது.
    அட்டகாசம்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி ஆனால் இன்னூம் ஆழ்ந்த பிரனைக்கு வழிதேடுங்கள்

    பதிலளிநீக்கு
  17. ஒரு வரிக்குள் நுழைந்தால் ஏழெட்டு பதிவுகளை படிக்க வாய்ப்புள்ளது. இந்தப் பாடலை வரிகளாக படிக்கும் போது உணரும் தாக்கம் அதிகம்.

    பதிலளிநீக்கு

  18. அருமை ஜி அற்புதமாக சொல்லி இருக்கிறீர்கள்.

    பொருத்தமான பாடலும்கூட...

    இதைப்படித்தவுடன் நான் எனது மனசாட்சிக்கு துரோகம் செய்கிறேனோ... என்று சிந்திக்க வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.