🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறளில் தொடரும் தவறான சிறப்புகள்...

வணக்கம் நண்பர்களே... திருக்குறள் எழுத்துக்களின் கணக்கியலை மேற்கொண்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக சில பதிவுகளை கணக்கியல் எனும் குறிச்சொல்லில் (Label) பதிவு செய்துள்ளேன்... மேலும் இதை எனது வாழ்வின் ஆய்வாக "எண்ணி" தொடர்ந்து கொண்டிருக்கிறேன்... இதுவரை செய்த ஆய்வின்படி :


ஐயனே வணக்கம்... 2000 ஆண்டுகளுக்கு மேலாகத் திருக்குறள் சிறப்புகள் என்று, இன்று வரை அனைவரும் பகிர்வதைச் சொல்கிறேன்... அவையெல்லாம் சரியா என்று சொல்லுங்கள்...

1) திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் - குறிப்பறிதல்
2) திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-ல், இடம் பெறாத எழுத்துக்கள் - 37
3) திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஓரெழுத்து - னி
4) திருக்குறளில் இல்லாத ஒரே உயிரெழுத்து -
5) திருக்குறளில் கொம்பு எழுத்துக்கள் இல்லாத குறள்கள் - 17


அனைத்துமே தவறு...!

என்னது தவறா...? 'சரி' என்று சொல்லும்படி இன்னொரு சிறப்பையும் சொல்கிறேன்...
6) திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் - கடவுள், தமிழ்

கடவுள் என்று தான் முதல் அதிகாரத்தைத் தொடங்கியுள்ளேன்... தமிழில் தான் முப்பாலை படைத்துள்ளேன்... இருந்தாலும் கடவுளையும் தமிழையும் முப்பால் கணக்கியலில் காண்பாய்....!

ஓஒ...! அதென்ன கணக்கு...? சரி, இதோ உதடு ஒட்டாத குறள்களின் எண்ணிக்கையைச் சொல்கிறேன்... 26 குறள்கள்... இல்லை 28, இல்லை 29 குறள்கள்... இல்லை இல்லை இது வேண்டாம்... உதடு ஒட்டும் குறள்கள் நான்கைச் சொல்கிறேன்...

7) துப்பார்க்குத் துப்புஆய துப்புஆக்கத் துப்பார்க்குத் துப்புஆய தூஉம் மழை | மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன் நன்கலம் நன்மக்கள் பேறு | பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு | இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு இடும்பை படாஅ தவர்


"விடற்கு, தவர்" ஆகிய ஏழாவது சீர்களைச் சொல்லும் போது எனக்கு உதடுகள் ஒட்டவில்லையே... பதம் பிரித்தாலும் பிரிக்காவிட்டாலும் குறள்களின் எண்ணிக்கை மாறக்கூடாது என்றால், என்ன ஆய்வு என்பதை எண்ணுக... எண்ணிக்கையும் எண்ணிப் பார்க்க... இதழுறல், இதழகல் - குறள்களில் மட்டுமா உள்ளது...? அப்புறம் நீ சொன்ன நான்கு குறள்களும் இல்லை...!

என்ன தாத்தா, அடியேன் சரியாகச் சொல்வது போல் ஒரு கேள்வியாவது கேட்கக்கூடாதா...?

அப்படியா சரி. ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்களின் குறள்களையும், அதன் அதிகாரத்தையும் சொல்...

ஒருமுறை பயன்படுத்தப்பட்டுள்ள எழுத்துக்கள் - ங, ளீ அப்பாடா...! ஒன்றையாவது சரியாகச் சொல்லி விட்டேன்...! ஆனால் அதன் குறள்களும் அதிகாரமும்... அது வந்து... அது வந்து...

இப்போது தான் முப்பால் நூலைக் கையில் எடுக்கிறாயா...? தேடுதல் தொடங்கட்டும்... முப்பால் எழுத்துக்களின் கணக்கியலும் செய்தால் தான், மேலே சொன்னதெல்லாம் தவறு என்று உறுதியாகச் சொல்ல முடியும்... உலகில் கணக்கை யார் செய்தாலும் விடை ஒன்று தான்...! சரி,

ஆரம்பிக்கலாமா...?



புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மீண்டும் ஒரு இனிய ஆரம்பமா? வருக... தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. வித்தியாசமான கணக்கெடுப்பு. தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. தங்களது குறள் ஆய்வு பிரமிக்க வைக்கிறது.

    மேலும் தொடர எமது வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  4. முதல் படத்திலிருக்கும் "தமிழ் நாடு" எழுத்து சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. ‘ங’ இடம் பெற்ற குறள் தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்

    ளீ - சூது - பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ

    கீதா

    பதிலளிநீக்கு
  6. உதடுகல் ஒட்டும் குறள்கள் - ஓ எலலச் சொற்களும் ஒட்ட வேண்டுமோ....

    கீதா

    பதிலளிநீக்கு
  7. தனபாலன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள். பொங்கல் பொங்குவது போல மனதும் மகிழ்ச்சியில் பொங்க வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்

    பதிலளிநீக்கு
  8. பதில்கள்
    1. நம் தமிழ் வலைப்பதிவகம் குழுமத்தில் முதலில் பார்ததது தாங்கள் தான்... ஆனால் அப்போதே கருத்துரை சரி பார்த்தேன் - வரவில்லை... இப்போது தான் வந்துள்ளது... மேலும் எனது வலைப்பதிவு தொகுப்பில், அதாவது Reader-ல் இன்னமும் வரவில்லை...!?

      நீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    தாங்கள் பதிவுலகத்திற்கு மீண்டும் தொடர்ந்து வந்து திருக்குறள் பற்றிய ஆராய்ச்சி செய்து பதிவுகளை தருவதற்கு மிகவும் மகிழ்ச்சி. தங்களின இப்பணி தொடரட்டும். மனம் நிறைந்த வாழ்த்துகள். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்
    திருக்குறள் பதிவுடன் மீண்டும் வந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதினின் அதினின் இலன்


    நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள் , அப்படியாவது குறள் படிக்கலாம். தின ஒரு குறள் படித்து கொண்டு இருந்தேன். கொஞ்ச காலமாக படிக்கவில்லை. இனி தொடர வேண்டும்.
    தேடுதல் தொடர வாழ்த்துக்கள்.
    ஆரம்பிக்கலாம்.

    திருவள்ளுவர் தினத்தில் ஆரம்பித்து இருப்பது மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  11. வெகு நாட்களுக்குப் பிறகு தங்களுடைய பதிவு..

    சிறப்பு..

    வாழ்க குறள்..

    பதிலளிநீக்கு
  12. திருக்குறள் அறிஞரின் தொடர் மறுபடி ஆரம்பம் ஆவதில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள் ஐயா . நன்றி. எனது நண்பர்கள் குழுமங்களில் பகிர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  13. நானும் google ல் தேடித்தேடி சலித்துப்போய் விட்டேன்.

    அனைத்து பதிவுகளிலும் "திருக்குறளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ள இரு எழுத்துக்கள் – ங,ளீ" என்று மட்டும்தான் குறிப்பிட்டிருக்கிறார்களே ஒழிய அந்த குறளைப்பற்றியோ அந்த குறள் இடம்பெற்றுள்ள அதிகாரத்தை பற்றியோ யாருமே குறிப்பிடவில்லை... அடுத்த பதிவில் நீங்களாவது சொன்னால் நன்றாக இருக்கும்!!!...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாகக் கண்டுபிடிப்பதற்கான வழிமுறைகளுடன் அடுத்த பதிவை எழுதுகிறேன்... நன்றி...

      நீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.