🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



திருக்குறள் கணக்கியல் பயிற்சி இரண்டு (2) - னி❌ ன்✔

அனைவருக்கும் வணக்கம்,,, "எழுத்துக்களை எளிதாகக் கணக்கிட உதவும் கருவி என்ன...?" என்பதை இந்தப் பதிவில் அறிவோம்...


முந்தைய திருக்குறள் கணக்கியல் பயிற்சி ஒன்று (1) பதிவில் சொன்னபடி, ஒரு முதன்மை விரிதாள் கோப்பை (Excel File) உருவாக்கி, திருக்குறளில் ஒருமுறை பயன்படுத்திய எழுத்துக்கள் ங, ளீ என்பதைக் கண்டுபிடித்து, அவற்றின் அதிகாரங்களையும் குறள்களையும் தெரிந்து கொண்டோம்... "வேறு ஏதேனும் எழுத்துக்கள் ஒரு முறை இருந்தால்...?" எனும் கேள்வி மனதிற்குள் எழுந்து, கண்டுபிடித்தது தவறாகி விடும் எனவும் எண்ணினோம்...! அதனால் எழுத்துக்களை எளிதாகக் கண்டுபிடிக்க ஒரு கருவியை எளிதாகக் கண்டுபிடித்து, 'எண்ணிய எண்ணத்தை உறுதிப்படுத்த முடியுமா...?' என்று பார்ப்போம்...

ஒரு பெயர் சொன்னால் கருவி தெரிந்து விடும்... நம் தமிழ்க்கணினியன் அவர்கள்... அவரின் சுளகு எனும் சொல்லாய்வுக் கருவி...! நீச்சல்காரன் அவர்களுக்கு நன்றி... 1330 குறள்களும் கொண்ட பதிவின் →இணைப்பு மற்றும் சுளகு கருவியின் இணைப்பு இரண்டு தளத்திற்கும் சென்று விட்டீர்களா...? நன்றி... சுளகு பெட்டியில் தமிழிங்கிலீசில் தட்டச்சு செய்துவிட்டு நகர்ந்தால் (space bar) தமிழாக மாறும்... எண்களும் அவ்வாறே... அதனால் கவனம் தேவை... அதை மாற்ற Ctrl-G சொடுக்க வேண்டும்... ஆனால் பெட்டியில் நாம் இடப்படுவதில் எண்கள் இருந்தாலும் அவற்றை கணக்கில் எடுத்துக் கொள்ளாது...!

1330 குறள்களையும் எடுத்து, இங்குச் சுளகு பெட்டியின் உள்ளே போட்டவுடன் கண்ணிமைக்கும் நொடிக்குக் குறைவான நேரத்தில் "மொத்த எழுத்துக்கள்" என்று ஒரு எண்ணிக்கையைக் காட்டி விடும்...! இடதுபுறம் மேலே "எழுத்து" என்பதிலுள்ள "ஓரெழுத்து" என்பதைச் சொடுக்கினால், ஆகா...! ஒவ்வொரு எழுத்தையும் பிரித்து, அது எத்தனை முறை வந்துள்ளது என்பதையும் கணக்கிட்டுக் காண்பிக்கும்...! என்ன இது...? முடிவில் ஒருமுறை பயன்படுத்திய ங, ளீ என்று இரண்டு (2) எழுத்துக்கள் தானே வரவேண்டும்...? அதனுடன், றீ, டெ, யூ, ளெ, லெ, ளூ, றெ ஆகிய எழுத்துக்களும் அல்லவா வருகிறது...! என்ன தவறு செய்தேன்...? வாருங்கள் தாத்தா - உதவி :

68. வினைசெயல்வகை
673. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

என்னது, முடிந்தவரைச் செயலை செய்; முடித்துக் கொண்டால் நல்லது... வேறு வேலையைப் பார்... ஐயகோ பதட்டத்தில் தவறாகச் சொல்கிறேனே... ஒரு செயலை செய்து கொண்டு இருக்கும் போது, அதை எப்படி முடிப்பது என்று தானே சிந்திக்க வேண்டும்...? நூற்றுக்கு நூறு ஒரு செயலைப் பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு தான், எந்த ஒரு செயலையும் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும் என்றால், அதற்குக் காலமும், நம் சிந்தனையும் கூட அனுமதிக்காதே... ம்... சிந்திப்போம்...

தவறாகக் காண்பதையெல்லாம் சரியாக எடுத்துக்கொள்ள வேண்டுமா...? அப்படி இல்லையே... "என்ன தவறு..?" என்பதை ஆய்வு செய்து உண்மையில் தவறு என்றால் மனதார ஏற்றுக்கொண்டு திருந்த வேண்டும்... இல்லையெனில் தவற்றைத் திருத்தி, திருந்தி வாழ வேண்டும்... என்ன இது, கணக்குப் பாடத்தில் வாழ்க்கைப் பாடத்தைப் பேசுகிறோம்...! இருக்கட்டும் ஆனால், தவறாக உள்ளதை எதையுமே சிந்திக்காமல் ஏற்றுக்கொண்டு விடுகிறோமே ஏன்...? முட்டி போட்டு தொழுது, முட்டுக் கொடுத்து, அடிமையாகி... என்ன இது, இன்றைய அரசியல் பாடமும் வந்து விட்டதே...! ம்... இதோ இங்கு ஏற்றுக் கொண்டது கண்முன்னே :

என்றோ ஒரு நாள் கணினியில் ஒருவர் 'ன்' என்று தட்டச்சு செய்வதற்குப் பதிலாக 'னி' என்று அடித்து விட்டார்; அது இன்றைக்கு வரை "திருக்குறளில் அதிகம் பயன்படுத்திய ஓரெழுத்து" 'னி' (1705 முறை) என்றே இணையம் முழுக்க அடித்து விடப்படுகிறது...! படியெடுக்காத (Copy & Paste) வலைத்தளங்களைத் தவிர...! திருக்குறள் சிறப்புகளை அப்படியே பகிர்கிறவர்களுக்கு, 1705 முறை என்பதில் கூடவா ஐயம் வராது...? முருகா... சுளகு கருவியில் ஓரெழுத்து என்பதைச் சொடுக்கியவுடனே முதலில் 'ன்' என்று வருவதை நாம் காணலாம்...

கணக்கிடும் எளிதான கருவி கிடைத்தாலும், எதைத் தேடி வந்தோமோ, (ங, ளீ) அதை இன்னமும் நாம் உறுதியாகச் சொல்ல முடியாது... ஆனால் நினைத்துப் பார்க்காத தவறான ஒன்றிற்கு (னி), சரியான விடை (ன்) என்று உறுதியாகச் சொல்ல முடியும்... ஒப்பீடு செய்யாமல் சுயமாக நாமே எதையும் ஆராய்ந்து செயலை மேற்கொண்டால், புல்லறிவாளனாக மாறாமல் இருப்பதோடு, பல உண்மைகள் வெளிப்பட்டு, உண்மையை உணர்ந்து மகிழ்வாக வாழலாம்... இது வாழ்க்கைக்கும் அரசியலுக்கும் பொருந்தும்... அவற்றில் ஆய்வு...? வேண்டாம் அணு அளவு ஐயம் வந்தாலும் குறள் கற்றல் ஒன்றே வழி...

சட்டியில் இருப்பது தான் அகப்பையில் வரும்...! அகப்பையில் தவறில்லை; சட்டியில் தான் ஏதோ தவறு உள்ளது...! அதனால் அதை நோக்கி (ங, ளீ) அடுத்ததாக "செல்லும்வாய் நோக்கிச் செயல்" - செல்வோம்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வாழ்க தொழில்நுட்பம்...   எளிதாக்கி விடுகிறது வேலையை..  ஆனாலும் உங்கள் அயராத உழைப்பும் தேடலும் இன்றியமையாதது.

    பதிலளிநீக்கு
  2. தங்களது தேடுதல் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  3. தங்களின் வள்ளுவத் தேடலும், கணினிப் புலமையும் வியக்க வைக்கிறது ஐயா

    பதிலளிநீக்கு
  4. வள்ளுவத்தைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டுள்ளீர்கள். சிறப்பு.

    பதிலளிநீக்கு
  5. வாசகம் மிக அருமை. அனைத்து பிரச்சனைகளுக்கு தீர்வு உண்டுதான்.

    எவ்வளவு உழைப்பு ! மீண்டும் சொல்கிறேன் நீங்கள் சொல்வதை பெரியவர்களை விட சிறியவர்கள் பள்ளி குழந்தைகள் எளிதாக கற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கு எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது.

    சிறிய வயதில் படிப்பது பசுமரத்து ஆணி போல் மனதில் பதியும்.
    நல்லவர்களாக, வல்லவர்களாக, வாழ்வார்கள். பள்ளிகளில் போய் சிறப்பு வகுப்புகள் நடத்தலாம்.

    இப்படி சிறப்பு வகுப்பு நடத்த யாராவது அழைக்க வேண்டும் உங்களை என்று வாழ்த்துகிறேன்.

    //குறள் கற்றல் ஒன்றே வழி//

    ஆமாம் ., சுயமாக சிந்திக்க உதவும்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.