🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



உலகம் சிரிக்கிறது...!



முந்தைய பதிவுகள் : சிரிக்க சிரிக்க... மானிட லீலை...! துன்பம் நேர்கையில்... கிசுகிசு...! அகநக... நகைவகையர்...


86. இகல் : 860. இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம் நன்னயம் என்னும் செருக்கு

நட்புடன் பழகிச் சிரித்து உறவாடி துன்பத்தை நீக்குக... இகலுக்கு மாறாக முகமலர்ந்து, நல்லெண்ணங் கொண்டு நட்போடு பழகினால், வாழ்விற்கு நன்மையான அமைதி, மகிழ்ச்சி, இணக்கமான உறவுகள் என்னும் பெருமையான நிலை உண்டாகும்... நகுதலால் அதாவது மகிழ்வைக்காட்டி உறவு பாராட்டுவது என்றுமே நன்மையே தரும்...

முள்ளில் ரோஜா மலர்ந்ததாலே முள்ளுக்கு என்ன பெருமை...? சிப்பிக்குள்ளே பிறந்ததாலே முத்துக்கு என்ன சிறுமை...? எங்கே நன்மை இருந்த போதும் ஏற்றுக் கொள்ளும் உலகம் - அங்கே வந்து தழுவிக் கொண்டு போற்றும் நல்ல இதயம்... சிரித்து வாழ வேண்டும் - பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே... உழைத்து வாழ வேண்டும் - பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே...

© உலகம் சுற்றும் வாலிபன் புலமைபித்தன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1973 ⟫


88. பகைத்திறந்தெரிதல் : 871. பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன் நகையேயும் வேண்டற்பாற்று அன்று

சிலர் வேண்டுமென்றே மற்றவரைச் சீண்டிப்பார்த்து நகைத்து விளையாடுவார்கள்... 'சும்மா' ஆரம்பித்து 'அம்மா' என்று அலறும் வலி(ழி)யில் முடிவதுண்டு...! 'விளையாட்டுச் சண்டை வினையில் முடியும்' என்பது முதுமொழி... இந்த பகை விளையாட்டெல்லாம் வேண்டாம் - விரும்பாதே என்கிறார் தாத்தா... நகை 8-ல் ஊக்கமும் நெஞ்சுரமும் கொண்ட படை வீரனின் பெருமித சிரிப்பை அறிந்தோம்... அதே அதிகாரத்தில் 78. படைச்செருக்கு : 773. பேராண்மை என்ப தறுகண்ஒன்று உற்றக்கால் ஊராண்மை மற்றதன் எஃகு : பகைவரை எதிர்த்து அஞ்சாமல் போர் புரியும் வீரச்செயல் பேராண்மை... தன்னிடம் சண்டையிட்ட அப்பகைவனுக்கு ஊறு உண்டானபோது அவனை வெல்ல எண்ணாமல் அவனுக்கு உதவிநிற்கும் ஆண்மையோ வீரத்தின் வீரம்...! பகை என்பது வேடிக்கைப் பொருளும் அல்ல... அது பண்பும் கிடையாது... "பகைமையிடத்தும் நல்ல பண்புகளே உள்ளன" என்பதை வரப்போகும் நகை 18-ல் மேலும் அறிவோம்...

அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு...? தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு...? கொடுமையைக் கண்டு கண்டு பயம் எதற்கு...? நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு... ஹேய்... // உண்டு உண்டு என்று நம்பி காலை எடு - இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு... இரண்டில் ஒன்றைப் பார்ப்பதற்குத் தோளை நிமிர்த்து - அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து...

© என் அண்ணன் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫


93. கள்ளுண்ணாமை : 927. உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும் கள்ளொற்றிக் கண்சாய் பவர்

கள்ளுண்டு மகிழ்தல் → களிப்பு தலைக்கேறி அறிவு மயங்கி உளறல் → நகைக்கத் தகும் செயல்கள் → நிலைதடுமாறி கீழே விழுந்து விடல் → இச்செய்திகள் ஊரெங்கும் பரவுதல் → இழிவான நடத்தை குறித்துச் சிரித்தல் → இவை அனைவரும் அறிவர்... உள்ளொற்றி :- கள்ளுண்டவன் மறைபொருள்களைக் காக்க முடியாது... தன் மனதில் உள்ள எல்லாவற்றையும் சொல்லி விடுவான்... 'கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்வான்' என்ற பழமொழிக்கேற்ப சில நகைவகையராகிய நட்பு வஞ்சகர்கள், குடிக்கவிட்டு தம் வாயாலேயே அவர்கள் உள்ளத்திலுள்ள மறைபொருள்களை வெளிக்கொணர்ந்து அதன் மூலமும் சிரித்து மகிழ்வதோடு, தனக்கு வேண்டியதைச் சாதித்தும் கொள்(ல்)வார்கள்... மேலும் விளக்கமாக முந்தைய கள்ளுண்ணாமை அதிகாரத்தின் இரு குறளின் குரல் பதிவுகளில் அறியலாம்...

உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது... உன் செயலைப் பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது... பாடும் பறவை - பாயும் மிருகம். - இவைகளுகெல்லாம் பகுத்தறிவில்லை... ஆனால் அவைகளுக்குள்ளே சூழ்ச்சிகள் இல்லை... உன்னைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது... சேவல் கூட தூங்கும் உலகைக் கூவி எழுப்பும் குரலாலே... ஏவல் செய்யும் காவல் காக்கும் - நாய்களும் தங்கள் குணத்தாலே... இரை எடுத்தாலும் இல்லை என்றாலும் - உறவை வளர்க்கும் காக்கைகளே... இனத்தை இனமே பகைப்பது எல்லாம் - மனிதன் வகுத்த வாழ்க்கையிலே...

© அடிமைப்பெண் வாலி K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫

நகை தொடரும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பகைமையிடத்தும் நல்ல பண்பு வேண்டும் என்பது நல்ல நெறி.  இராமாயண காவியத்தில் இன்று போய் நாள் வா என்றான் ராமன், ராவணனிடம்!  இந்தக் குறளுக்கு நல்ல பாடல் தெரிவு.


    சிலர் கூடப் பழகுபவரை திட்ட வேண்டும் என்பதற்காகவே போதையேறியிருப்பதுபோல் நடித்து கூட பேசி இருக்கிறார்கள்.  எனக்கே அனுபவம் இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. திருக்குறள் ஓவியம் அருமையாக இருக்கிறது.

    பகிர்ந்த பாடல்களும் , பகிர்ந்த விளக்கும் அருமை.
    பகைமையிடத்தும் நல்ல பண்புகளே உள்ளன என்பதை
    சொல்லபோகிற விளக்கத்தை படிக்க ஆவல்.

    பதிலளிநீக்கு
  3. பாடல்கள் அழகாக பொருந்துகிறது ஜி

    நகைப்பூ தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  4. திருக்குறளுக்கான ஓவியம் அருமை.

    பகைமையிடத்தும் நல்ல பண்புகளே உள்ளன//

    அதே அதே. நமக்குத்தான் நல்லதை எடுத்துக்கொள்ளும் பழக்கம் கிடையாதே. பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது. பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே பகைவனுக்கருள்வாய் ..புகை நடுவினில் தீயிருப்பதை....பகை நடுவினில் அன்புருவான நம் பரமனும்....சிப்பிக்குள்ளே நல்ல முதத்துமிருப்பதை ....குப்பையிலே மலர்க் கொஞ்சும் குருக்கத்திக் கொடி....மிகவும் பிடித்த பாடல்...
    பகுத்தறிவில்லாத ஜீவன்களுக்குள் சூழ்ச்சியில்லை....உறவை வளர்க்கின்றன...மனிதனைப் போலில்லாமல்....அந்த நீல எழுத்துகள் அருமை...

    கருத்துகள் சிறப்பு டிடி

    கீதா

    பதிலளிநீக்கு
  5. நல்ல குணங்களும் சில வேண்டாத குணங்களும் கலந்ததுதானே மனிதப் பிறவி. எனவே பகைமையிலும் நல்ல பண்புகள் இருக்கத்தான் செய்யும். அன்பு என்பது இருந்தால், கெட்டதை விலக்கி நல்லதை மட்டும் பார்க்கக் கற்றால் பகைமை என்பதும் இருக்காதுதான். நல்ல கருத்து. அதைப் பற்றி அடுத்து என்ன என்று அறிய தொடர்கிறோம்.

    விளக்கங்கள் எல்லாமே அருமை

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  6. நல்ல குறள் வளங்கள் நம் வாழ்வை வளப்படுத்தட்டும்.
    பாடல்களும் நம் வாழ்வை மேம்படுத்தும்.

    நம்மை வேண்டுமென்றே காயப்படுத்துபவர்களை

    இறைவன் தான் கேட்க வேண்டும்.
    அருமையான பதிவுக்கு நன்றி தனபாலன். நற்செயல்கள் நமக்கு
    மருந்து.

    பதிலளிநீக்கு
  7. அன்று கள்ளு...இன்று சாராயம்....எதுவொன்றாலும்.. உண்ணாமையே சிறந்தது... அன்றே பாடிவச்சார் வள்ளுவர்.. பாட்டும் அருமை...

    பதிலளிநீக்கு
  8. ரசித்து அனுபவிக்கவைத்த நகைச்சுவை. நீங்கள் கூறிய விதம் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. வழக்கம் போல் அருமையான விளக்கம். நன்றி

    பதிலளிநீக்கு
  10. வழக்கம் போல ரசித்தேன் நண்பரே. பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. நீங்கள் சொல்வதுபோல விளையாட்டு சண்டைகள் சில நேரங்களில் வினையில் போய் முடிந்துவிடும் என்பது உண்மை...
    சும்மா என ஆரம்பிக்கும் சில சீண்டல்கள்தான் பலநேரங்களில் "அம்மா" என அலறவும் வைத்துவிடுகிறது..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.