🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஐயன் கட்டமைத்தபடி முடியாது...!

அனைவருக்கும் வணக்கம்... வழிப்போக்கனது உலகம் எனும் வலைப்பூவில் ஓர் பதிவு திருக்குறளும் எண் ஏழும்... இங்குச் சுருக்கமாகப் படத்தில் :-


இணைப்பு பதிவில் கூறும் முடிவான கருத்து என்னவென்றால், "இடைச்செருகல் செய்ய முடியாது..." ஆம் உண்மை தான்... திருக்குறள் முழுவதும் உள்ள எழுத்துக்களையும் திருவள்ளுவர் கணக்கிட்டே கட்டமைத்துள்ளார்... அது ஏன்...? என்பது தான் கணக்கியல் ஆய்வு... அவற்றைப் பற்றிய விளக்கம் வரும் பதிவுகளில் தொடரும்... சரி, இவற்றை வெறும் எண்களாக மட்டும் எடுத்துக்கொண்டு, இதே போல் வேறு எண்களைக் கொண்டு கணக்கிட முடியும்... கூட்டுத்தொகையும் ஏழால் வகுக்க முடியும் என்பதையும் கவனத்தில் கொண்டு முயன்று பாருங்கள்...

கணக்கிடுவதற்கு உதவும் எண்களும், அதற்கு ஊக்கம் தரும் குறளின் குரலும் :- முதல் குறிப்பு : திருக்குறளில் 9 என்ற எண் கூறப்படவில்லை... இரண்டாம் குறிப்பு : 63-வது இடுக்கணழியாமை அதிகாரத்தின் கடைசி குறள் 630. இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு - குறளின் குரல் : வாழ்நாள் முழுவதும் ஆர்வம் அணு அளவுகூட குறையாமல், தேடல் உள்ள ஒருவருக்கு இடையூறுகள் வந்தால், செய்கின்ற முயற்சியில் தடைக்கற்களைப் படிக்கற்களாகவும் காணலாம்; அப்போது மனக்கண்ணில் எழும் மிகப்பெரிய சோம்பல் எனும் பகைவனை, அவ்வப்போதும் வெளியேற்றிக் கொண்டே இருந்தால், 'இடையூறுகளும் இன்பமே' என்ற மனப்பக்குவம் பெற்று, தொடங்கிய செயலை முடித்து விடும் ஆற்றல் பெறலாம்; இதனால் தன்னுடன் போட்டிப் போட்டவர்களும் விரும்பத்தக்கச் சிறப்புப் பெறுவதோடு, பலவீனத்தைப் பலமாக மாற்றிக் கொண்ட மனத்திண்மையை அறிந்த பகைவரும் கூட, தம்மைப் பெருமதிப்புக் கொள்ள வைக்கும் மேன்மையையும் உண்டாக்கலாம்...! நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அதனால்தானே ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும் அவர் பேசப்படுகிறார்.

    பதிலளிநீக்கு
  2. பிரமிப்பாக இருக்கிறது ஜி
    இந்த எண்களின் கூட்டுத்தொகை.

    சுட்டிகளுக்கு செல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. பதிவின் கடைசியில் சொன்னது போல் சோம்பல் எனும் பகைவனை அவ்வப்போது விரட்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.

    "இடையூருகளும் இன்பமே " என்று நினைக்க மனபக்குவம் பட வேண்டும் என்பது உண்மைதான்.
    கணக்கு எனக்கு பிணக்கு. யோசித்து பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
    விடைகளை தெரிந்து கொள்ள ஆவல்.

    பதிலளிநீக்கு
  4. நாம் ஒரு படைப்பை உருவாக்குகின்றோம். பல நூறு பேர்கள் பலவிதமான விமர்சனங்கள் தரும் போது நாம் இந்த எண்ணத்தில் எழுத வில்லையே என்று நான் யோசித்ததுண்டு. அதே போல திருவள்ளுவர் ஒருவேளை உயிரோடு இருந்தால் அவரே இது போன்ற விசயங்களை யோசித்தால் எப்படியிருக்கும்?

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்குமா இங்கே எதிரிகள் இருக்கின்றார்கள்? ஏன் கதவை திறந்து வைக்கலாமே?

    பதிலளிநீக்கு
  6. பொருட்பாலில் மட்டும் 70 அதிகாரங்களா...!!!! பொருளே! முதன்மை என்கிறாராஃ?? அய்யன்...

    பதிலளிநீக்கு
  7. 'சோம்பல் என்னும் பகைவனை அவ்வப்போது வெளியேற்றிக் கொண்டே வந்தால்..' ஆகா! இதைக் கடைபிடித்தால் வெற்றி மேல் வெற்றி தான். சிறப்பு அண்ணா.
    ஐயன் கட்டமைத்த விதமும் அறிந்து கொண்டேன். நன்றி அண்ணா.
    திருக்குறளில் முனைவர் பட்டம் பெறலாம் நீங்கள் :)

    பதிலளிநீக்கு
  8. குறளில் நீங்கள் செய்யும் ஆராய்ச்சி பிரமிக்க வைக்கிறது.

    பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் சகோதரரே

    அருமையான பதிவு. திருக்குறள்களின் அதிகார வாயிலான எண்களின் தொகுப்பை குறித்த ஐயனின் திறமைகளையும், சிந்தனைகளையும் புரிந்து கொள்ளும் வகையில் பதிவு மிக அருமையாக உள்ளது. நீங்கள் தந்த சுட்டிக்கும் சென்று படித்து வந்தேன். திருக்குறள் ஆராய்ச்சியில் நீங்கள் மிகவும் சிறந்தவர். உங்கள் அளவுக்கு எனக்குத் திறமையில்லை. எனினும் நீங்கள் பொறுமையாக விளக்கித் தரும் நல்லதோர் பகிர்வுகளுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  10. விளக்கம் அருமை ஆனாலும் எனக்குப் பெரிதாகப் புரியவில்லை😬

    பதிலளிநீக்கு
  11. இடையூறும் இன்பமே என்ற மனநிலையில் இப்போது நான் இல்லை!

    பதிலளிநீக்கு
  12. அன்பு தனபாலன், வள்ளுவர் திறமை பேச எனக்கெல்லாம் தமிழ் போதாது.
    ஆனால் உங்கள் எண் திறமையைப்
    பாராட்ட முடியும்.
    அதிசயிக்கத் தக்க விஞ்ஞானமும் கருத்தும்
    உள்ளடக்கிய பொக்கிஷத்துக்கு நீங்கள் நற்காவலன்.

    பதிலளிநீக்கு
  13. தங்களின் திருக்குறள் ஆராய்ச்சி மிகவும் பாராட்டுக்குரியது நண்பரே. இன்னும் இது போன்ற பல பதிவுகள் நிச்சயம் தங்களின் வலை பூவில் வெளி வர வேண்டும் என்ற ஆவலை வெளியிடுகிறேன் உங்களிடம்.

    பதிலளிநீக்கு
  14. திருக்குறள் பற்றி புதிய தகவல்களை அறிந்து கொண்டோம்.  ஐயனின் மதி நுட்பம் வியக்க வைக்கிறது. பகிர்வுக்கு நன்றி.  திருக்குறளை பற்றி ஆழமான உங்கள் ஆராய்ச்சிக்கு தலை வணங்குகிறேன். 

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.