🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉நான் + துன்பம்

வணக்கம் நண்பர்களே... அன்புச் சகோதரியும் துணைவியும் நலமடைந்து வருகிறார்கள்... அன்பையும் ஆறுதலையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகள் பல... அந்தப் பகிர்வு : சிரிச்சிட்டு போய்கிட்டே இருப்பேன்...! (படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கிப் படித்து விட்டுத் தொடர வேண்டுகிறேன்) அதன் தொடர்ச்சியாக இந்த பகிர்வு :

திருவள்ளுவரின் (63) இடுக்கணழியாமை அதிகாரத்தை ஒரு உரையாடல் மூலமும், குறளுக்கேற்ப-எண்ணங்களைச் சீர்படுத்தும் பாடல்களை, அதில் பிடித்த வரிகளை அடர்த்தி படுத்தியும், ஓரளவு சொல்லியுள்ளேன்... வாசிப்பவர்கள் பாடலை கேட்க, ஒவ்வொரு குறளுக்கு பின்னுள்ள இதயத்தை சொடுக்கவும்...
(படம் : அபூர்வ ராகங்கள்) காலை எழுந்தவுடன் நாளைய கேள்வி - அது கையில் கிடைத்த பின்னும் துடிக்குது ஆவி... ஏனென்ற கேள்வி ஒன்றே என்றைக்கும் தங்கும் - மனித இன்பதுன்பம் எதிலும் கேள்விதான் மிஞ்சும்... ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி...? காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவரது கவனம்... ஆரம்பத்தில் பிறப்பும் உன் கையில் இல்லை... இதில் அடுத்தடுத்த நடப்பும் உன் கையில் இல்லை.. பாதை வகுத்த பின்பு பயந்தென்ன லாபம் - அதில் பயணம் நடத்திவிடு மறைந்திடும் பாவம்...

பயணத்தை மாத்துறேன்; நிறைய வளத்தைக் கொடுத்து கவுக்கிறேன் பாரு...!

ஏகப்பட்ட பணம் இருக்கும் போதே, மனசிலே கஞ்சத்தன்மை இல்லாம மத்தவங்களுக்கு கொடுத்த எனக்கு, பணம் இல்லாததாலே வர்ற துன்பத்திலே வருத்தப்படுவேன்னு நினைச்சிட்டியா...? இந்த நிலை மாறும்...!

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர் (626)

© இது சத்தியம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன...? தன்னை நம்பும் தைரியம் இருந்தால் நாளென்ன பொழுதென்ன...?2 விலைக்கு மேலே விலை வைத்தாலும் மனிதன் விலை என்ன...? உயிர் விட்டு விட்டால், உடல் சுட்டுவிட்டால் - அதில் அடுத்த கதை என்ன...? என்ன...? அதில் அடுத்த கதை என்ன...? எல்லாம் வல்ல இறைவனின் ஆணை... சொல்லப் போவது யாவதும் உண்மை... சத்தியம் இது சத்தியம்... பஞ்சைப் போட்டு நெருப்பை மறைப்பவன் பைத்தியக் காரனடா... பாவம் தீர்க்கப் பணத்தை இறைப்பவன் பச்சை மடையனடா... நெஞ்சுக்கு நீதியை ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா - நல்ல நேர்மையிலும் தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா...! ஆ... தினம் வாழ்பவன் தெய்வமடா...!

பணத்துக்கு அப்படியா...? அப்போ உடம்புக்கு நான் வந்தா என்ன செய்வே...?

உடம்புக்கு வர்றது சகஜம் தானே...? இதுக்கெல்லாம் மனம் சஞ்சலப்பட்டாலோ அல்லது கலக்கம் அடைந்தாலோ, உடம்பு என்னத்துக்கு ஆகும்ன்னு தெரியும்... எனக்கானாலும் சரி... மற்றவர்களுக்கானாலும் சரி... நாம முதல்லே தைரியமா இருக்கணும்கிறதிலே தெளிவா இருக்கேன்...!

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல் (627)

© கிச்சா வயது 16 பா.விஜய் தினா உன்னி மேனன் @ 2005 ⟫

வானம் தலையில் மோதாது - பூமி நகர்ந்து போகாது... நடுவில் இருக்கும் உந்தன் வாழ்க்கை - தொலைந்து ஒன்றும் போகாது... சோகம் என்றும் முடியாது - கவலை என்றும் அழியாது... இரண்டையும் தான் ஏற்றுக் கொண்டால் - வாழ்க்கை என்றும் தோற்காது... நெஞ்சே பொன் நெஞ்சே - தடை யாவும் துரும்பு... தீயாய் நீயானால் - மெழுகாகும் இரும்பு... தோல்வி அவை எல்லாம் சில காயத் தழும்பு... ஏறு முன்னேறு - ஒளியோடு திரும்பு... பறவை அதற்கும் இறகு சுமையா...? தோல்வி ஒரு தடையா...? சில நேரம் சில பொழுது, சோதனை வரும் பொழுது - நம்பிக்கையால் மனம் உழுது... வானில் உன் பெயர் எழுது...

ம்...எப்படி வந்தாலும் பயப்பட மாட்டேன்கிறானே...! துன்பத்துக்கு மருந்து சிரிப்பு தான்கிறதே முழுசா புரிஞ்சிகிட்டான் போலிருக்கு...! நான் என்ன செய்வது...?

அதுக்குள்ளே அசந்து போனா எப்படி...? சந்தோசம் இருக்கிற போதே அதை கண்டுக்கிறது கிடையாது... துன்பம் வந்தா மட்டும் துவண்டு போய் விடுவேனோ...?

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன் (628)

© அவன் தான் மனிதன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1975 ⟫

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்... அந்த பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்... நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்...? : இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்... நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்... கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்... அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்... உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா... இதை உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா... உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா...

என்னையே இன்பமா நினைக்கிற உன்னை நினைச்சா, எனக்கே சந்தோசமா இருக்கு...! நான் உன்னை பாராட்டுகிறேன்...!

துன்பத்தின் உச்சியான "நான்" என்ற இறுமாப்பு, ஆணவம், அகங்காரம் கொண்டவனே...! தப்புக் கணக்குப் போடாதே...! இன்பமான காலத்திலேயே மனசிலே ஆட்டம் போடாதவன், வாட்டம் அடைய மாட்டான் கஷ்ட காலத்திலே...! இதுவும் / எதுவும் கடந்து போகும்...!

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன் (629)

© மௌனம் பேசியதே சினேகன் யுவன் சங்கர் ராஜா கார்த்திக் @ 2002 ⟫

ஹேய்... கருவறைக்குள் தானாகக் கற்றுக்கொண்ட சிறு ஆட்டம்... தொட்டிலுக்குள் சுகமாகத் தொடரும் ஆட்டமே...! பருவம் பூக்கும் நேரத்தில் - காதல் செய்யப் போராட்டம்... காதல் வந்த பின்னாலே - போதையாட்டமே...! பேருக்காக ஒரு ஆட்டம்; காசுக்காகப் பல ஆட்டம்; எட்டு காலில் போகும்போது - ஊரு போடும் ஆட்டமே...! ஆடாத ஆட்டமெல்லாம்... போட்டவங்க மண்ணுக்குள்ள... போன கதை உனக்குத் தெரியுமா...? நீ கொண்டு வந்ததென்ன...? நீ கொண்டு போவதென்ன...? உண்மையென்ன உனக்குப் புரியுமா...? வாழ்க்கை இங்கே யாருக்கும் சொந்தமில்லையே...! வந்தவனும் வருபவனும் நிலைப்பதில்லையே...! ஹேய்... ஏன் - நீயும் நானும் நூறு வருசம் இருப்பதில்லை பாரு...!

ஒன்னும் சரிப்பட்டு வராது போல;வேறு இடத்துக்குப் போக வேண்டியது தான் ! அதனால் :-
நான் + துன்பம்

அப்படிக் கீழே விழுந்தாலும் துன்பத்தை இன்பமாகக் கருதும் மனவுறுதி இருக்கிறவங்க கிட்டே போவதற்குள் மறைந்து போவாய்...! எந்தச் செயலிலும் மனந்தளராதவர்களைப் பார்த்து, அவர்களின் எதிரி கூட ஆச்சரியப்பட்டு மதிக்கும் சிறப்பு இருக்கு...! ஹா... ஹா...

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு (630)

© சுமைதாங்கி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்... வாசல் தோறும் வேதனை இருக்கும்... வந்த துன்பம் எதுவென்றாலும் - வாடி நின்றால் ஓடுவதில்லை... வாடி நின்றால் ஓடுவதில்லை... எதையும் தாங்கும் இதயம் இருந்தால்... இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்... மயக்கமா...? கலக்கமா...? மனதிலே குழப்பமா...? வாழ்க்கையில் நடுக்கமா...? ஏழை மனதை மாளிகை ஆக்கி, இரவும் பகலும் காவியம் பாடு... நாளை பொழுதை இறைவனுக்கு அளித்து, நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு... உனக்கும் கீழே உள்ளவர் கோடி; நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...!

முடிவாக

© மாயாவி பழனி பாரதி தேவி ஸ்ரீ பிரசாத் கல்பனா, S.P.B.சரண் @ 2005 ⟫

நாம் எல்லாம் சுவாசிக்கத் தனித் தனி காற்று கிடையாது... மேகங்கள் மேகங்கள் இடங்களைப் பார்த்துப் பொழியாது... கோடையில் இன்று இலையுதிரும்... வசந்தங்கள் நாளை திரும்பி வரும்... வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்... குயில்களின் பாட்டுக் காற்றில் வரும்.. முடிவதும் பின்பு தொடர்வதும், இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே கேளடி... அழகே... பூமியின் வாழ்க்கையை அன்பில் வாழ்ந்து விடை பெறுவோம்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வணக்கம் அய்யா. தங்களது தேடல் என்னை அசர வைக்கிறது. வள்ளுவன் வடித்த குறளுக்கு பொருந்தும் கருத்துக்களையும் இட்டு அசத்தியிருக்கிறீர்கள். உண்மையில் தமிழாசிரியர் கூட செய்யாத பணியை நீங்க்ள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். எனது அன்பான வாழ்த்துக்களும் நன்றிகளும். தொடரட்டும் தங்கள் பணி. உங்களையும், உங்கள் எழுத்தையும் தொடர நாங்கள் இருக்கிறோம். பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

  பதிலளிநீக்கு
 2. எல்லா குறள்களுக்குமான திரைப்படப் பாடல்கள் மிகப் பொருத்தம். ஒவ்வொருதடவையும் கருத்துக்களை வித்தியாசமாகத் தருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. துயரங்கள் மறைந்து வாழ்க்கையிலும் மேன்மை பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 4. நல்லதோர் பதிவு. ஒரு சின்ன கேள்வி? குறளை தேர்ந்தெடுத்து பதிவு எழுதினீர்களா ? அல்லது பதிவு எழுதியபின் குறளை தேர்ந்தெடுத்தீர்களா? எப்படியோ ஒரு நல்ல விஷயம் படிக்க வைத்தமைக்கு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. துன்பத்துக்கு என்ன காரணம்னு தெளிவா சொல்லியிருக்கீங்க.. அதுக்கும் தீர்வு (மருந்து)தந்திருக்கீங்க... !

  நான் தெரிஞ்சுகிட்டேன். நன்றி...!

  பதிலளிநீக்கு
 6. பொருத்தமாய் சினிமா பாடல்கள் எப்படித்தான் உங்களுக்கு கிடைக்கிறதோ ?
  நான் துன்பம் கீழே விழுவதை ரசித்தேன் !

  பதிலளிநீக்கு
 7. வர வர உங்க பதிவுக்குள்ள வரும் பொழுதே பயமாக இருக்கு. எந்த இடத்தில இருந்து என்ன வருமோ? எப்படி இருக்குமோ என்று படித்துக் கொண்டே நகர்த்திக் கொண்டே வரும்படி இருக்கு(ம்).

  வலைதளங்களை ஆராய்ச்சிப் பார்வையில் முனைவர் பட்டம் வாங்க முயற்சிப்பவர்கள் நிச்சயம் உங்கள் தளத்தைப் பார்த்தால் அவர்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 8. ..அபூர்வ ராகங்கள்..

  துன்பம் வரும் நேரத்துல சிரிங்க. ன்ற ராஜபாட் ரங்கதுரை பாடல் எனக்கு துன்பம் வரும்போது நினைத்துக் கொள்வேன்.. உங்க வரிகளும், எடுத்தாண்ட குறளும் ஊக்கமளிப்பதாய் உள்ளன..

  பதிலளிநீக்கு
 9. இன்பம் துன்பம் இரண்டையும் எதிர்கொள்ளுதலை திருக்குறள் மூலம் விளக்கிய அருமையான கருத்துக்கள்.... அதிலும் அபூர்வராகங்கள் படப்பாடலையும், அதற்கு இணையான திருக்குறளையும் எழுதி ஆச்சர்யப்படவைத்தீர்கள்...
  ரத்தினச்சுருக்கமாய் மனர் கவர்ந்தது...

  பதிலளிநீக்கு
 10. வியக்கவைத்த அருமையான கருத்துகள் வித்தியாசமான வடிவமைப்பில் வழங்கியமைக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 11. தமிழ் தேன் பொங்கி நிறைந்து வழிகிறது தனபாலன், அருமை....!

  பதிலளிநீக்கு
 12. எதைச் சொல்வது எதை விடுவது என்று புரியவில்லை. எல்லாமே இருக்கு ரொம்ப நல்லாவே இருக்கு. பொருத்தமான திரைப்பாடல்கள், ஆழமான கருத்துக்கள். மொத்தத்தில் வழக்கம் போலவே மிக அருமையாக அமைந்துள்ளது பதிவு. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 13. அருமை .. பயனுள்ள பதிவு . நாம் அனைவரும் ஒவ்வொரு நாளும் படித்து கடைப்பிடிக்க வேண்டிய குறள்கள் ,நன்றி

  பதிலளிநீக்கு
 14. திருக்குறளும் அதற்கு பொருத்தமான பாடல்களும் மிக அருமை.கணனியில் புதிய நுட்பங்களை புகுத்தி பதிவை மேலும் சிறப்பாக்கியிருக்கிறீங்க. பாராட்டுக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 15. நான் + துன்பம் டபக்கென்று கீழே விழுந்து காணாமல் போய்விட்டது.:) !

  பதிலளிநீக்கு
 16. துன்பம் தொலையட்டும். தனபாலன் மன் உறுதிக்கு முன்னால் துன்பம் ஒரு தூசு.
  ''வருந்தாதே மனமே
  ஒருபோதும் அவனன்றி
  ஓர் அணுவும் அசையாதே....இன்பம் துன்பம் மாறிப்போகும் நிலையை எண்ணிப்பார்.//இது பழைய பாட்டு.
  காலமகள் கண் திறப்பாள் சின்னையா
  நாம் கண்கலங்கிக் கவலைப் பட்டு என்னய்யா.//

  பதிலளிநீக்கு
 17. துன்பத்தை விரட்ட புன்னகை என்ற ஆயுதம் போதும்...

  பதிலளிநீக்கு
 18. அருமையான பகிர்வு. மனமார்ந்த பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 19. உங்கள் மனைவியும் சகோதரியும் குணமடைந்து வருகிறார்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி! மேலும் முழு குணம் அடைய இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

  உங்களுக்கு மனதில் ஏற்பட்ட வலியின் தாக்கத்தினை வலைப்பதிவில் உண்ரமுடிகிறது. ஒவ்வொருவர் வாழ்விலும் ஒரு பிரச்சினை. ( THIS TOO SHALL PASS)

  பதிலளிநீக்கு
 20. அருமை அண்ணா

  அதிக நுட்பமாய் தளம் இருப்பதால் வாசித்தல் தடைபடுகிறது

  பதிலளிநீக்கு
 21. மிக மகிழ்ச்சி தங்கள் துணைவி, சகோதரியார் உடல் நிலையையிட்டு.
  குறள் - பாடல் பொருத்தம் சொல்ல வேண்டியதில்லை. மிகப் பொருத்தம் .
  வியப்பு.
  - நான் பிளஸ் துன்பம்
  - கருத்து எண்ணிக்கை
  இப்படிப் பல.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 22. சூப்ப.. சூப்பர் நண்பரே! அதுவும் அந்த நான் + துன்பம் உடைந்து விழுகிற கான்செப்ட் இருக்கு பாருங்க... ஆகா... உங்களை அடிச்சிக்க ஆளே இல்லைங்க.... அருமை!

  அன்புடன்
  பவளா

  பதிலளிநீக்கு
 23. இந்தப் பதிவிற்கான தங்களது உழைப்பு அசரவைக்கிறது, பாராட்டுகள் நண்பா..

  பதிலளிநீக்கு
 24. நான் + துன்பம் மிக மிகச் சிறப்பாக இனிச் சொல்வதற்கு
  என்ன உண்டு என்னும் பதிவாகத் தந்துவிட்டீர்கள்.
  ஒவ்வொரு குறளையும் அதற்குத் தகுந்த விளக்கமுடம்
  அதனோடு பொருத்தமான பாடல்வரிகளும் என அற்புதம் சகோ!.

  மனதைச் சோரவிடாது நிறுத்த உங்கள் பதிவு மகா மருந்து!
  அவசியமான அனைவருக்கும் மிகத்தேவையான ஒன்று!

  உங்கள் துணைவியும் சகோதரியும் நலனடைந்து வருவதையிட்டு மிக்க மகிழ்ச்சி!
  பகிர்விற்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!

  பதிலளிநீக்கு
 25. எப்பொழுதும் போல அருமையாய் மனம் கவரும் பதிவு. உங்கள் துணைவியாரும் சகோதரியும் நலமடைந்து வருவதில் மகிழ்ச்சி. விரைவில் பூரண குணமடைய இறைவனை வேண்டுகிறேன்.
  குறள் விளக்கத்தோடு இயைந்து செல்லும் பாடல்கள் என கலக்குகிறீர்கள். பல பாடல்களை அறிந்துகொள்கிறேன் உங்கள் பதிவின்மூலம், நன்றி!

  பதிலளிநீக்கு
 26. எங்கள் கருத்து எப்பொழுதும் போல் இப்பொழுதும் உங்கள் பதிவு உயர்ந்த பதிவு அத்துடன் மாயா ஜால வித்தைகள் பட விளையாட்டுகள் .திருக்குறளும் அதற்கு பொருத்தமான பாடல்களும் மிக அருமை.
  பல கலைகளை பெற்று வைத்திருகிறீர்கள்.சொல்லிக் கொடுத்தால் நாங்களும் அப்படி செய்ய முடியும் .Recommended for you இதுவும் தெரியவில்லை இன்னும் பல நுணுக்கங்கள் அறிந்துக் கொள்ள முடியவில்லை .படம் விரிந்து சுருங்குகிறது கண்களுக்கு ஒரு காட்சி .ஒரு படம் ஓராயிரம் கருத்துகளை சொல்லி நிற்கின்றது . கணினி பொறியாளர் படிப்பு படித்தவர்கள் கூட இந்த அறிய கலைகளை அறிந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கட்டுரைகளிலும் ஒரூ புதுமை. மிகவும் சுறு சுறுப்பானவர் நீங்கள் .அடத்தவரை அவர் இடத்தில சென்று தொடர்ந்து நீங்கள் ஊக்கு விப்பதைக் கண்டு நான் வியந்து மகிழ்வேன்

  பதிலளிநீக்கு
 27. குடும்பத்தார் நலம் பெற்று வருவது கேட்க மகிழ்ச்சி.

  நான் + துன்பம் பொத்தென்று கீழே விழுவது அருமையோ அருமை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. துணைவியும், சகோதரியும் நலமடைந்து வருகிறார்கள் என்பது குறித்து மகிழ்ச்சி. சிறப்பான பகிர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 29. முந்தைய பிந்தைய பதிவுகள் வழக்கம்போல் அருமை !

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 30. இதுவும் கடந்து போகும் என்பதே நான் சொல்ல விரும்பியது.

  பதிலளிநீக்கு
 31. மிகவும் தேவையான கருத்துக்களை வழக்கம்போல சுவைபட தந்துவிட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு

 32. இருவரும் முழு நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்! வள்ளுவர் இருந்தால் உங்கள் பதிவு கண்டு வியந்து வாழ்த்துவார்
  துயர் கண்டு துவளாத மனம் கொண்டீர்
  வாழ்க

  பதிலளிநீக்கு
 33. "ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப்பாடல்!"
  எனக்கும் மிகவும் பிடித்த பாடல்!

  இதைக்குறிப்பிட்டு, உவமைகளாக திருக்குறள்களை துணைக்கழைத்து இறுதியில் துன்பத்தை கீழே விழ வைத்த உங்களின் மனத்திண்மை வியக்க வைக்கிறது!

  மிக அருமையான பதிவு!

  இல்லத்தரசியும் சகோதரியும் குணமடைந்து வருவது குறித்து மிகவும் மகிழ்ந்தேன். அவர்களின் இன்னல்கள் தீர்ந்து முழுமையாக குணமடைந்து தங்கள் மனம் நிம்மதியடைய என் பிரார்த்தனைகள்!!

  பதிலளிநீக்கு
 34. நான் + துன்பம்..../////

  கண்டு பிடிச்சிட்டேன்ன் கண்டு பிடிச்சிட்டேன்ன்ன்ன்.. அப்போ “நீ + இன்பம்”.... எண்டுதானே வரும்??:)).. எப்பூடி என் கண்டுபிடிப்பூ?:) எங்கிட்டயேவா:))... ஏன் எல்லோரும் முறைக்கீனம்ம்ம்ம்?:))).

  பதிலளிநீக்கு
 35. நான்+துன்பம் பொத்தென்று விழுவது போல உங்கள் துன்பங்களும் மறைந்து போகட்டும் DD.
  திருக்குறளுக்கும், சினிமா பாடல்களுக்கும் நீங்கள் கொடுக்கும் தொடர்பு வியப்பளிக்கிறது.
  தொடருங்கள். நானும் உங்களைத் தொடர்ந்து படிக்கிறேன்.
  பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 36. தங்கள் சகோதரியும், துணைவியும் நலமடைந்து வருவது அறிந்து, மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன். மிக அருமையாகப் பதிவிட்டு இருக்கிறீர்கள். தங்கள் மனோபாவம் மிகுந்த பாராட்டுக்குரியது. மிக்க நன்றி!!

  பதிலளிநீக்கு
 37. வள்ளுவன் வகுத்த வாழ்வு நெறியை
  வழி வழியாய் வந்த கவிஞர்கள்
  பாடலாய் அளித்தனர் திரைப்படங்கள்
  வாயிலாக .இசைஅமைப்பாளர்கள்
  இசைவடிவம் கொடுத்து நம்மையெல்லாம்
  கேட்க வைத்தனர்.அதையெல்லாம்
  தொகுத்து வலையில் நடமிட
  வைக்கும் திண்டுக்கல் தனபாலனே
  நீ வாழி.பல்லாண்டு . .

  பதிலளிநீக்கு
 38. அன்பு தனபாலன், எண்ணங்கள் வலிமை மிக்கவை. விளைவை கட்டுப்படுத்தக் கூடியவை. நேர்மறை சிந்தனைகள் நல்ல விளைவுகளைக் கொடுக்கும். மனதில் உறுதியோடு நான் எனும் அகந்தையை அழித்தால் துன்பம் விலகிப் போகும் அருமையாக வெளியிட்டுள்ளீர்கள்.உறவுகள் பூரண குணம் பெற வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 39. வழக்கம் போல் அருமையான பகிர்வு..வாழ்த்துக்கள் சகோ!!

  பதிலளிநீக்கு
 40. வணக்கம்
  தனபாலன்(அண்ணா)


  உங்கள் மனைவி மற்றும் சகோதரி ஆகிய இருவரும் குணமடைந்து நல்ல ஆரோக்கியத்துடன் வாழ முதற்கண் இறைவனை பிராத்திக்கிறேன்....

  -----------------------------------
  பதிவில் திருவள்ளுவரின் குறள் பாக்களின் மூலம் மனிதனின் சிந்தனை ஆற்றலை வளர்க்கும் கருத்துக்ளை கூறிய விதம் மிக மிக அருமை வாழ்த்துக்கள் ...அண்ணா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-
  ---------------21/10/2013----------

  பதிலளிநீக்கு
 41. அருமையான பதிவு தனபாலன் அண்ணா.
  வேற என்னத்தை சொல்லுறது...? எல்லாவற்றையும் எனக்கு முன் வந்தவர்கள் சொல்லிவிட்டார்கள்....(

  பதிலளிநீக்கு
 42. தங்களின் சகோதரியும் மனைவியும் நலம் பெற்று வருவதை அறிந்து மகிழ்ச்சி!.. வழக்கம் போலவே - அருமையான ஆதரவான ஆறுதலான கருத்துக்களுடன் தங்கள் பதிவு மின்னுகின்றது!..

  பதிலளிநீக்கு
 43. "துன்பம் நேர்கையில்
  யாழெடுத்து மீட்டமாட்டாயா "
  என்கிற பழைய பாடல் வரிகளுக்குப் பதில்

  "திண்டுக்கல் தனபாலன் பதிவைப்
  படிக்கமாட்டாயா "எனச் சொல்லலாம் போல உள்ளது

  படைப்பும் பகிர்ந்த விதமும் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 44. உறவுகள் விரைவில் பூரண குணமடையப் பிரார்த்தனைகள்.

  நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 45. மிக அருமையான சிந்தனையும் தொகுப்பும். கடவுள் தந்த அழகிய வாழ்வு...ரொம்பவே பிடித்த பாடல்! அதை000 வில் போட்டு மறைமுகமாக முதலாம் குறளுக்குமுன் கடவுள் தந்த வாழ்வை வைத்த விதம் பிடித்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
 46. வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
  தனபாலன் தன்னை வலையினுக்கே தந்து வான்புகழ் கொண்ட திண்டுக்கல்

  பதிலளிநீக்கு
 47. அண்ணியும், அக்காவும் நலமடைந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்வோம்.

  பதிலளிநீக்கு
 48. வணக்கம் வலைச்சித்தரே!
  தங்கள் துணைவியார் மற்றும் சகோதரி உடல்நலம் தேறியது அறிந்து மகிழ்ச்சி.
  தங்களின் குறள் விளக்கம் புதிய வடிவில் இருப்பது வரவேற்கத் தக்கது, இதில் திரைப்பாடல்கள் விளக்கம் தேவைதானா என்பதை மறுபரிசீலனை செய்க. உதாரணம்-கதை,மேற்கோள் மிக வலுவானதாக இருந்தால் அதுமட்டுமே நினைவில் பதியும். இது என் அனுபவம். மற்றொன்று, உங்கள் தொழில் நுட்ப ஜாலம் மிக அதிகமாகத் தோன்றுகிறது. படிக்கவும் தடையாகிறது. மோரில் வெண்ணெய் அதிகமாக மிதந்தால்...? எனினும் தங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 49. பதிவினைக் கண்டதும்
  மனம் மகிழ்ந்தது..
  அம்மாவும் சகோதரியும் உடல்நிலை
  தேறிவருவது நல்ல செய்தி.

  சிறந்த வாழ்வியல் கருத்துகளை கூறும்
  அழகிய பதிவுகள் தங்களுடையது..

  பதிலளிநீக்கு
 50. தங்களின் குடும்பத்தார் விரைவில் பூரண குணமடைய வேண்டுமாய் ஆண்டவனை வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 51. வள்ளூவமும் திரையிசையும் தாண்டவமாடுகிறது பதிவில்...

  திரையிசையில் பல்வேறு ஆய்வுகள் செய்து தாங்கள் டாக்டர் பட்டம் வாங்கிவிடலாம் போல...

  வாழ்த்துக்கள்...

  நல்லதொரு ரசனையுள்ள ரசிக்கத்தகுந்த பதிவு

  பதிலளிநீக்கு
 52. தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 500 -ஐ தொட்டுள்ளது..

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 53. துன்பம் மறையும் படமும் குறள் விளக்கங்களும் அருமை.... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 54. தனபாலன் , உங்கள் மனைவியும், சகோதரியும் நலமாகி வருவது அறிந்து மகிழ்ச்சி. அவர்கள் இருவரும் பூரண நலம் பெற வாழ்த்துக்கள்.
  துனபத்தில் துவண்டு போகாமல் தைரியமாய் எதிர்த்து நின்று அதை எதிர் கொள்வதே புத்திசாலித்தனம்.

  நீங்கள் தைரியமாய் இருந்தால் தான் அவர்களுக்கு ஆறுதல் சொல்லி அவர்களை மீட்க முடியும். உங்கள் தைரியம் வாழக!

  நம்பிக்கை எல்லோருக்கும் வேண்டிய ஒன்று. துன்பம் விலகும், இன்பம் மலரும்.

  நம்மைவிட துன்பம் படுபவர்கள் நிறைய இருக்கிறார்கலள். இந்த துன்பங்களும் நம்மை கடந்து போகும்.

  அருமையான பாடல்கள் தொகுப்பு.
  கஷ்டபடுபவர்களுக்கு ஆறுதலும் மனத்தைரியமும் தரும் பாடல்கள்.
  துன்பம் உங்களை விட்டு ஓடுவது மகிழ்ச்சி.
  இனி
  நான்+ இன்பம் தான்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 55. உங்கள் சகோதரியும், மனைவியும் குணமாகி வருவது மகிழ்ச்சி.
  துன்பம் "தொப்" என்று விழுவது "இதுவும் கடந்து போகும் " என்று சொல்வது போலுள்ளது.
  வாழ்த்துக்கள் தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 56. வணக்கம்.திருக்குறளுடன் இணைத்து தருவது சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் சார்.

  பதிலளிநீக்கு
 57. அருமையான கருத்துப்பகிர்வு மெளனம்பேசியதே பாடலும் அதிகம் பிடிக்கும்!

  பதிலளிநீக்கு
 58. மாயாவி படப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்..தளர்வடைந்த மனதிற்கு தன்னம்பிக்கை ஊட்டும் பாடல்.

  பதிலளிநீக்கு
 59. தமிழ் ப்ளாக் எழுத்தாளர்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு.

  உங்கள் பொன்னான நேரங்களை செலவு செய்து நீங்கள் எழுதும் ஒரு ஒரு பக்கங்களுக்கும் Ad30days Network உங்களுக்கு சன்மானம் வழங்கும். நீங்கள் செய்யவேண்டியது http://publisher.ad30days.in/publishers_account.php சென்று உங்கள் ப்ளாக் மற்றும் உங்களை தொடர்புகொள்ளும் விபரங்களை அளிப்பது மட்டும்மே. மேலும் விபரங்களுக்கு http://ad30days.in பார்க்கவும்

  பதிலளிநீக்கு
 60. "துன்பத்துக்கு மருந்து சிரிப்பு" என்பதை சிறந்த எடுத்துக் காட்டுகளுடன் விளக்கிய விதம் அழகு!
  திண்டுக்கல் தனபாலன் என்றால்
  சிந்திக்க வைக்கும்
  பதிவுகளைத் தரும் பதிவர் என்பதற்கு
  நல்ல சான்று!

  "அழுதுகொண்டிருக்கும்
  எனக்கு
  உன் சிரிப்புத் தானே மருந்து!" என்று
  எழுத முனைகிறேன்!

  பதிலளிநீக்கு
 61. துயரங்கள் மறைந்து மேன்மை பெற வாழ்த்துகிறேன்

  பதிலளிநீக்கு
 62. வித்தியாசமான படைப்பு, நல்லதொரு பகிர்வு.

  பதிலளிநீக்கு
 63. துன்பத்தை கண்டு துவளக்கூடாது என்று தங்கள் பாணியில் சிறப்பாக பகிர்ந்து விட்டீர்கள்! அருமை! நன்றி!

  பதிலளிநீக்கு
 64. அருமையான பதிவு.

  உங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ எனது பிராத்தனைகள்.

  பதிலளிநீக்கு
 65. குறட்பாக்களை ஒன்றோடொன்று தொடர்பு படுத்தி அமைத்துள்ள விதம் மிகச் சிறப்பு.அருமையாக உள்ளது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 66. இருவரும் நலமுடன் இருப்பது குறித்து மிகுந்த மகிழ்ச்சி சார்...

  அழகான விளக்கங்கள்... அருமையான பகிர்வு.

  பதிலளிநீக்கு

 67. அருமை சார் ..
  புரிந்து கொள்ள குறளில் இன்னும் நிறைய விடயம் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 68. இதுவும் கடந்து போம் என்ற மனப்பாங்கு மிகவும் அவசியம். சொல்வது எளிதே எனினும்.
  சிந்திக்க வைத்தப் பதிவு. அமைதியும் நிம்மதியும் பெற வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 69. வள்ளுவன் வகுத்துத் தந்த வழியை விளக்கியது அருமை!

  பதிலளிநீக்கு
 70. குட்டிப் பெண் உள்ள ஃப்ரேம் டிஸைன் மாறுவதும், நான்+துன்பம்_______ கழன்று விழுவதுபோல் செய்திருப்பது ரொம்பவே நல்லாருக்கு. பதிவும் அருமையாக உள்ளது. உறவுகள் நலமடைந்து வருவது மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது.

  பதிலளிநீக்கு
 71. சில நாட்களுக்கு பிறகு வந்த பார்த்த முதல் தளம் தங்களுடையது அத்தனை இன்பத்தை தருகிறது. மிகவும் அற்புதம்.

  பதிலளிநீக்கு
 72. உங்கள் ஸகோதரியும்,மனைவியும் குணமடைந்து வருவது மிக்க ஸந்தோஷம். அதைவிட வேறு மகிழ்ச்சியான விஷயம் வேறொன்றுமில்லை. அன்புடன்

  பதிலளிநீக்கு
 73. அசத்திரீர்கள் சகோதரரே...!

  துன்பத்திற்கே சவாலா சபாஷ்...!சரியானபோட்டி...!
  துன்பம் துவண்டு விழுவதையும் பார்த்தேன். அற்புதம், குறளுக்கு ஏற்றபடி அழகாக எடுத்து வைத்த விடயங்கள் அதற்கேற்ப திரைப்பட பாடல்கள், அழகானகுட்டி,குட்டியின் சட்டம் மாறும் அழகு எல்லாம் அருமை அருமை.
  துன்பம் வரும் போதினிலே நகுக....!அப்படிதானே..! நடிப்புக்கு கூட சிரிப்பு வருமா தெரியவில்லை முயற்சி செய்வோம்.

  தொடர வாழ்த்துக்கள்.....!

  பதிலளிநீக்கு
 74. வணக்கம் சார்.வித்தியாசமான முயற்சி .சிறந்த பதிவு.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 75. ஒவ்வொன்றிலும் சிரத்தையுடன் அழகாக சித்தரிப்பதற்கு மிகுந்த பொறுமையும். கவனமும் தேவை! அதனைத் திறம்பட செய்து வருகின்றீர்கள்!.
  கண்ணன அருளால் மென்மேலும் சிறக்கவும், இனிய தீப ஒளித் திரு நன்னாள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 76. சகோதரியும் மனைவியும் நலம் பெற்று வருவதை அறிந்து மகிழ்ச்சி!

  பதிவு சூ.............ப்பர்

  பதிலளிநீக்கு
 77. uஉறவுகள் நலமாய் என்றும் வாழ வேண்டுதல்கள். குறளுக்கு ஏற்றபடி அழகாக எடுத்து வைத்ததும் அதற்கேற்ப திரைப்பட பாடல்கள், அழகானகுட்டிஎல்லாம் அருமை அருமை.
  ்.

  பதிலளிநீக்கு
 78. "துன்பத்திலும் மன உறுதி இருந்திட்டால... அதைவிடவும் வேறு மருந்து ஏது?" இந்தக் கருத்தையும் அழகாய் பல பாடல்களுடன் விளக்கியது சிறப்பு.

  பதிலளிநீக்கு
 79. அருமையானதோர் தொகுப்பு ஐயா. ஒவ்வோர் குறளுக்கும் பொருத்தமான பாடல்கள் அனைத்தும் அருமை ஐயா.

  பதிலளிநீக்கு
 80. எத்தகைய துன்பம் வந்தாலும் மனதைரியத்தை விடாமல் இருக்க துணிவு தந்தது தங்கள் பதிவு. இதெல்லாம் படித்து பக்குவப் பட்டிருப்பதால் தான் உடன் பிறந்தவரும் உடன் வந்தவரும் நோயுற்று இருக்கும் சமயத்திலும் இயல்பாக இருக்க வாய்த்தது உங்களுக்கு. இறையருள் நிலைக்க பிரார்த்திக்கிறேன் பாலாண்ணா.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.