🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பட்டாசு இல்லாத தீபாவளி (பகுதி 12)

நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளின் முந்தைய பதிவை தன்னலம் தகர்த்துப் பிறர்நலம் பேணு...! (பகுதி 11) வாசித்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள் பல...

இவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! அவர்களின் சமூகப் பார்வைகள், ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கவிதைகள் சிலவற்றை ரசியுங்கள்...

கவிதைகளுக்கு ஏற்றது போல் ஞாபகம் வந்த பொன்மொழிகளை இந்த முறை திரைப்படப் பாடலை கொடுத்துள்ளேன்... ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சுட்டியைக் கொண்டு சென்று ரசித்து விட்டு, √ (டிக்) செய்வது போல் நகர்த்தி விடவும்... இந்தப் பதிவைக் கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் வலைநுட்பத்தை அனுபவிக்கலாம்... இருந்தாலும் கைப்பேசியில் வாசிப்பவர்கள், ஒவ்வொரு கவிதையின் தலைப்புக்கு மேலே சொடுக்கி ரசித்து விட்டு, உடனே அருகில் எங்கேனும் சொடுக்கி விட்டுத் தொடர்ந்தால் நன்றாக இருக்கும்... நன்றி...
தாயை மட்டுமே பார்த்தேன்...
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி - திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா... அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம் - புரிகின்ற சிறு தொண்டன் நான்தானம்மா... பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன் அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே... அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன் மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே... அதை நீயே தருவாயே... (படம் : மன்னன்)

தாஜ் மஹாலைப் பார்க்கவில்லை
தாயின் முகத்தை மட்டுமே பார்த்தேன்...

பிரமிடைப் பார்க்கவில்லை மறுபிறவி எடுத்த
என் தாயை மட்டுமே பார்த்தேன்...

சீனப் பெருஞ்சுவரைப் பார்க்கவில்லை
என்னைச் சிற்பியாய் வளர்த்த
தாயை மட்டுமே பார்த்தேன்...

ஈபில் டவரைப் பார்க்கவில்லை
இல்லை என்று சொல்லாமல் அள்ளித் தந்த
தாயை மட்டுமே பார்த்தேன்...

பத்து மாடிக் கட்டிடத்தைப் பார்க்கவில்லை
பத்து மாதம் சுமந்த
தாயை மட்டுமே பார்த்தேன்...

ஏழு அத்தியாங்களைப் பார்க்கவில்லை
ஏழு ஜென்மமும் என்னைத் தாங்கிய
தாயை மட்டுமே பார்த்தேன்...

நூலகம்
கல்லூரி பள்ளி இல்லாத ஊரை கையோடு இன்றே தீ மூட்டுவோம்; கல்லாத பேர்கள் இல்லாத நாடு நம் நாடு என்றே நாம் மாற்றுவோம்... இருக்கிற கோவிலை எல்லாம் படிக்கிற பள்ளிகள் செய்வோம்... அறிவென்னும் கோபுரம் அங்கே நாம் காணுவோம்... வானம் உங்கள் கைகளில் உண்டு; ஞானம் உங்கள் நெஞ்சினில் உண்டு...2 நான் என்று எண்ணாமல் நாம் என்று உறவு கொள்ளணும்...! (படம் : உன்னால் முடியும் தம்பி)

வீட்டுக்கு வீடு
நூலகம் அமைப்போம் !
நல்ல அறிஞர்களின்
நூலைச் சேமிப்போம் !

சிந்தனை நூலைப் படித்து
நம் சிந்தனை வலமாய்ச்
செழித்திடச் செய்வோம் !
பறந்து விரிந்த மனப்பான்மையை
வளர்த்தெடுப்போம் !

பற்பல அறிய
தகவல்களைத் தெரிந்திடுவோம் !
நூலை வாசிக்கும்
நடைமுறைகளை கற்று
கல்வி அறிவை ஊட்டிடுவோம் !

வீட்டில்
நூலகம் அமைத்திடுவோம் !

வெற்றிப் பாதையில்
விரைந்து நடந்திடுவோம் !

தன்னம்பிக்கை
உள்ளம் என்பது எப்போதும் உடைந்து போகக்கூடாது, என்ன இந்த வாழ்க்கை என்ற எண்ணம் தோன்றக்கூடாது... எந்த மனிதன் நெஞ்சுக்குள் காயமில்லை சொல்லுங்கள்... காலப் போக்கில் காயமெல்லாம் மறைந்து போகும் மாயங்கள்... உளி தாங்கும் கற்கள் தானே - மண் மீது சிலையாகும், வலி தாங்கும் உள்ளம் தானே - நிலையான சுகம் காணும், யாருக்கில்லைப் போராட்டம்...? கண்ணில் என்ன நீரோட்டம்...? ஒரு கனவு கண்டால் - அதைத் தினம் முயன்றால், ஒரு நாளில் நிஜமாகும்...! மனமே ஓ மனமே... நீ மாறிவிடு... மலையோ - அது பனியோ - நீ மோதிவிடு... ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே, வாழ்வென்றால் போராடும் போர்க்களமே...! (படம் : ஆட்டோகிராப்)

வானத்தை எட்டிப் பிடிக்க
பூமியைக் கட்டிப்பிடிக்க
தோல்வியைத் தூளாக்க
வெற்றியை வசமாக்க
வாழ்வை வரலாறாக்க
சோதனைகளைச் சாதனைகளாக்க
வேதனைகளை வேரோடு அறுக்க
முடியாதது என்பதை முடிவாக்க
வேண்டும் வேண்டும் ஒன்றே வேண்டும்
தன்னம்பிக்கை நிறைந்த
தலைமுறை வேண்டும்...!

இழக்காதே...!
அழுகிப் போனால் காய்கறிகூட சமையலுக்காகாது... அழகாய் இருக்கும் காஞ்சிரம் பழங்கள் சந்தையில் விற்காது... உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது... உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது... காலம் போனால் திரும்புவதில்லை.. காசுகள் உயிரைக் காப்பதும் இல்லை... ஓஹோஹோஹோ மனிதர்களே...! ஓடுவதெங்கே சொல்லுங்கள்...! உண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்... (படம் : படித்தால் மட்டும் போதுமா)

அறிவை இழக்காதே !
பதவி என்ற ஆசையில்
பண்பை இழக்காதே !
உறவு என்ற நேசத்தில்
உண்மையை இழக்காதே !
ஆதலால் மாணவனே,
கல்வி என்னும் சோலையில்
காலம் இழக்காதே !
இழந்த காலத்தை எண்ணி
மனம் வருந்தாதே !

பட்டாசு இல்லாத தீபாவளி
சித்திரப் பூபோலே சிதறும் மத்தாப்பு... தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு...2 முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்த சிரிப்பு...?2 முகமோ மலரோ இது என்ன ரசிப்பு...! மின்னொளி வீசும்... உன் எழில் கண்டால்... வேறென்ன வேணுமடா...? ஆ...ஆ...ஆ... வேறென்ன வேணுமடா...? உன்னைக் கண்டு நானாட... என்னைக் கண்டு நீ ஆட... உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி... ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து உறவாடும் நேரமடா...! ஆ...ஆ...ஆ... உறவாடும் நேரமடா...! (படம் : கல்யாணப் பரிசு)

புதிய உலகம் அமைத்திடுவோம்.
பட்டாசு இல்லாத தீபாவளி கொண்டாடிடுவோம்.
இல்லை இல்லை...
எங்கள் கையில் பட்டாசு இல்லை...
இல்லை இல்லை
ஓசோன் படலத்தில்
இனிமேலும் ஓட்டை இல்லை

நிலத்தில் பாதங்கள் ஓடுவது போல
எங்கள் மனதில் -
பட்டாசு வெடிப்பதை விட்டுவிட்டு
வறியவர்களுக்கு
உதவி செய்ய வேண்டும்
என்ற எண்ணமே ஓடுகிறது

நான் கடவுளிடம் வானொலி கேட்டேன்
அவர் எனக்குத் தொலைக்காட்சியையே தந்தார்
அது போல நான் பட்டாசைக் கேட்டேன்
அவர் எனக்கு ஏழைகளைக் காட்டி -
"உதவி செய்...!" என்றார்

அன்பைத் தடுக்கும் இந்த
பட்டாசு நிறைந்த தீபாவளி வேண்டுமா ?
கண்ணாடியைப் பார்த்தால் நம் முகம் தெரியும்
அதுவே, பட்டாசைப் பார்த்தால்
சிவகாசிச் குழந்தைகளின்
அவலம் தான் தெரியும்


தீபாவளியை இனி -
புதுமையாய் கொண்டாடுவோம்...!
பட்டாசு இல்லாத
தீபாவளியாய் உருவாக்குவோம்...!

கவிதைச் சுனாமியே...
உன் நெஞ்சிலே பாரம், உனக்காகவே நானும் - சுமைதாங்கியாய் தாங்குவேன்... உன் கண்களின் ஓரம், எதற்காகவோ ஈரம் - கண்ணீரை நான் மாற்றுவேன்... வேதனை தீரலாம்; வெறும் பனி விலகலாம்; வெண் மேகமே புது அழகிலே நாமும் இணையலாம் ! வாழ்வென்பதோ கீதம், வளர்கின்றதோ நாதம்... நாள் ஒன்றிலும் ஆனந்தம், நீ கண்டதோ துன்பம்... இனி வாழ்வெல்லாம் இன்பம், சுக ராகமே ஆரம்பம்... நதியிலே புதுப்புனல், கடலிலே கலந்தது... நம் சொந்தமோ இன்று இணைந்தது, இன்பம் பிறந்தது... உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை... ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடரலாம்... இனி எல்லாம் சுகமே...! (படம் : அவள் அப்படித்தான்)

அலையே ! எத்தனை வருடங்கள்
காத்திருந்தாய் இந்த வித்தியாசமான
பிரசவத்திற்காக ?
உன்னைத் தாயென்று அழைத்தோமே
ஆனால் நீ சீறிப் பாய்ந்தது ஏன் ?

நீ ஹிட்லரின் வாரிசா ? அல்லது
ஒசாமாவின் தோழனா ?
பூக்கள் இங்கே......
இரத்தம் சிந்துவதைப் பார் !

அதோ ! அம்மா அப்பா......
என்ற அழுகையுடன் கூடிய முனகல்
இனி அவனுக்குப் பெயர்
அநாதைப் பையன் !

பாறை ஓரத்தில் நண்டுகள் கூட
பயந்து பயந்து வாழ்வைக் கழிக்கின்றன !

உண்மையைச் சொல்...!
கலவரம் செய்ய உனக்குக்
கற்றுக் கொடுத்தது யார் ?
அராஜகம் செய்ய எந்த
அரசியல்வாதியிடம்
கற்றுக் கொண்டாய் ?

நீ வந்து போனதால்...
நாங்கள் வெந்து போனோம்...
ஆயினும் நம்பிக்கைக் காற்றை...
சுவாசித்துக் கொண்டு,

எங்கள் ஏக்கக் கனவுகளை
நனவாக்குவோம் !
இது எங்கள் சத்தியம் !

நிறுத்தி விடாதே...!
மனம் நினைத்தால் அதைத் தினம் நினைத்தால், நெஞ்சம் நினைத்ததை முடிக்கலாம்...! தொடு வானம் இனி தொடும் தூரம், பல கைகளைச் சேர்க்கலாம்... விதை விதைத்தால் நெல்லை விதை விதைத்தால், அதில் கள்ளிப்பூ முளைக்குமா...? நம் தலைமுறைகள் நூறு கடந்தாலும், தந்த வீரங்கள் மறக்குமா...? ஒரே மனம், ஒரே குணம், ஒரே தடம் - எதிர் காலத்தில்...! அதே பலம், அதே திடம், அகம் புறம் - நம் தேகத்தில்...! இன்னும் என்ன தோழா, எத்தனையோ நாளா, நம்மை இங்கு நாமே தொலைத்தோமே...! நம்ப முடியாதா நம்மால் முடியாதா - நாளை வெல்லும் நாளை செய்வோமே... யாரும் இல்லை தடை போட - உன்னை மெல்ல எடை போட, நம்பிக்கையில் நடை போடச் சம்மதமே... என்று இல்லை உன்னோடு, ஏக்கம் என்ன கண்ணோடு - வெற்றி என்றும் வலியோடு பிறந்திடுமே...! வந்தால் அலையாய் வருவோம்...! வீழ்ந்தால் விதையாய் வீழ்வோம்...!! மீண்டும் மீண்டும் எழுவோம் எழுவோமே...!!! (படம் : ஏழாம் அறிவு)

நீ நினைப்பதெல்லாம் நடக்கவில்லையா ?
அதற்காக...
நினைப்பதையே நிறுத்தி விடாதே...!
நீ படித்ததெல்லாம் -
தேர்வின் போது வரவில்லையா ?
அதற்காக...
படிப்பதையே நிறுத்தி விடாதே...!
நீ கேட்டதெல்லாம் கிடைக்கவில்லையா...?
அதற்காக...
கேட்பதையே நிறுத்தி விடாதே...!
உனது உழைப்பிற்கேற்ற
ஊதியம் கிடைக்கவில்லையா ?
அதற்காக...
உழைப்பதையே நிறுத்தி விடாதே...

பூமி பறந்து கிடைக்கிறது...
நீ பறப்பதற்காக...!
எழு..! சிறகை விரி...!! பறந்து செல்...!!!
தன்னம்பிக்கையில் தான் நகர்கிறது -
வாழ்க்கை...!

துணை
நண்பர்களை துயரத்திலே கண்டுகொள்ளலாம்... நல்லவரை வறுமையிலே கண்டுகொள்ளலாம்... வஞ்சகரை வார்த்தையிலே கண்டுகொள்ளலாம்... மனைவியரை நோயினிலே கண்டுகொள்ளலாம்... உங்களை உறுதியிலே கண்டுகொள்ளலாம்... என்னை மட்டும் இறுதியிலே கண்டுகொள்ளலாம்... வருங்கால மன்னர்களே வாருங்கள்... என் வார்த்தைகளைச் செவி கொடுத்துக் கேளுங்கள்... இருக்கும் வரைக்கும் இறக்கை விரித்துப் பறக்க வேண்டும் தும்பிகளே... இமய மலையை இடுப்பில் சுமக்கும் இதயம் வேண்டும் தம்பிகளே... ஹோஹோ... (படம் : ராஜா சின்ன ரோஜா)

அன்னையின் துணைகொண்டு -
அன்பைப் பெற்றுக்கொள்...!
தந்தையின் துணைகொண்டு
தைரியத்தைப் பெற்றுக்கொள்...!
ஆசிரியரின் துணைகொண்டு -
ஆளுமையை வளர்த்துக் கொள்...!
நல்லவர் துணைகொண்டு -
நல்ல தெரிந்துகொள்...!
நண்பனின் துணைகொண்டு -
நட்பை வளர்த்துக் கொள்...!
அறிவின் துணைகொண்டு -
ஒளியை ஏற்றுக்கொள்...!
புத்தகத்தின் துணைகொண்டு -
புண்ணியத்தைத் தேடிக்கொள்...!
பள்ளியின் துணைகொண்டு -
பண்பைப் பெற்றுக்கொள்...!
தேசத்தின் துணைகொண்டு -
நாசத்தைத் தவிர்த்துக்கொள்...!
ஆண்டவனின் துணைகொண்டு -
ஆன்மாவைக் காத்துக்கொள்...!

உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் சேரட்டும்...

இன்னும் மூன்று நாட்களே உள்ளன... விவரம் ↓

ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப் போட்டி இங்கே சொடுக்கவும்...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. உதவி செய் என்றார்

    எல்லாம் சரி தான். எங்க சந்தில் எங்க வீட்டுக்கு யார் வந்து கேட்டாலும் இருப்பதை கொடுப்போம் என்றதும் நேராக இங்கே வந்து விடுகின்றார்கள்.

    கொடுத்து மாளல. பெரும்பாலான வீடுகளில் கதவைக் கூட திறப்பதில்லை.

    இந்த தீபாவளி திரு நாளில் உங்கள் குடும்பத்தினர் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ என் முதல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

  2. ‘எங்கள் கையில் பட்டாசுகள் இல்லை. ஓசோன்படலத்தில் ஓட்டைகளில்லை ‘
    பட்டாசு இல்லாத தீபாவளியைக் கொண்டாட சிறுவர்களே முன்வந்தால் அதைவிட வேறு என்ன வேண்டும். இந்த எண்ணம் கொண்ட சிறுவர்களுக்கு வாழ்த்துக்கள். (பதினைந்து வருடத்திற்கு முன் பட்டாசு வெடி சத்தம் கேட்டு எங்கள் வீட்டு நாய் பயந்து கொண்டு வீட்டுக்குள் ஒளிந்து கொண்டு வெளியே வரவே வராது. அதைப்பார்த்ததிலிருந்து எங்கள் குடும்பத்தினர் பட்டாசு வெடிப்பதையே விட்டுவிட்டோம்)
    பொருத்தமான படப்பாடல்களுடன் பதிவு அருமையாக உள்ளது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே..
    பள்ளிக்கூட குழந்தைகளின் கவிதைகள் அனைத்தும் அருமை. அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல தங்கள் தேர்ந்தெடுத்த பாடல் வரிகள் அழகு சேர்க்கிறது. கவிவரிகளைக் காணும்போது நமது எதிர்காலம் சந்ததியனரின் தமிழ் தலைத்தோங்கும் என்பது உறுதியாகிறது. பகிர்வுக்கு நன்றி சகோதரரே...

    பதிலளிநீக்கு
  4. சகோதரருக்கு வணக்கம்.
    பட்டாசு இல்லாத தீபாவளி வந்து விட்டால் ஏது மாசு. ”காசை கரியாக்குவது” எனும் முதுமொழி பட்டாசுக்கே மிக பொருந்தும். பள்ளிக் குழந்தைகளின் கவிவர்கள் அனைத்தும் அருமை. அதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல் வரிகள் அழகோ அழகு. தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது இதயம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  5. மிகவும் சிறப்பாக இருக்கிறது. உடல் நிலை முன்னேற்றம் அடைய பிரார்த்திக்கின்றேன். நலமுடன் வளமுடன் வாழ எம் கண்ணனை பிரார்த்திக்கின்றேன்!

    பதிலளிநீக்கு
  6. பாசாங்குகள் அற்ற எழுத்துக்கள் மாணவச் செல்வங்களுடையவை. சிவகாசிக் குழந்தைகளை எண்ணி பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதை நிறுத்தலாம் என்கிற நல்ல சிந்தனை எழுந்திருப்பதே மகிழ்வுதான். அனைத்து மாணவப் படைப்புகளும் அருமை!

    பதிலளிநீக்கு
  7. சிந்தனையத் தூண்டும் பகிர்வு.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. அருமை!.. அருமை!..

    வெடி வெடித்துத் தான் தீபாவளி - கொண்டாட வேண்டும் என்று எங்கும் சொல்லப்படவில்லை!..

    தீபாவளி திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ அன்பின் நல் வாழ்த்துகள்!.

    பதிலளிநீக்கு
  9. தன்னம்பிக்கை பற்றிய கவிதை பிடித்தது.

    சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுகள்....

    பதிலளிநீக்கு
  10. பட்டாசு கொளுத்தி ஓசோனில் ஓட்டை போடாமல், ஏழைகளுக்கு உதவிசெய்...!

    பதிலளிநீக்கு
  11. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் வலைதளத்திற்கு வருகை தரும்
    அனைவரும் இந்த தீபாவளிக்கு பட்டாசு வாங்கும் செலவில் ஒரு பத்து விழுக்காடு அதாவது அவர்கள் ஒரு 100 ரூபாய்க்கு பட்டாசு வாங்குபவர்களாக இருந்தால் ஒரு 10 ரூபாய், பக்கத்தில் இருக்கும் உதவும் கரங்கள் போன்ற ஏதேனும் ஒரு அனாதைச் சிறுவர் காப்பகத்திற்கு உதவி செய்யவேண்டும்.

    இதற்கான இனிஷியேடிவ் திண்டுக்கல் தனபாலன் அவர்களே செய்யலாம்.

    சேவாலயா எனும் தொண்டு நிறுவனம் கசுவா என்னும் கிராமத்தில், திருவள்ளூர் அருகில், ஒரு கிராமச் சிறுவர் அனைத்துக்குமே பள்ளி நடத்துகிறது. இலவசமாக. ஒரு முதியோர் இல்லமும் நடத்துகிறது.

    உதவும் கரங்கள் செய்யும் சேவை எல்லோரும் அறிந்ததே.

    தீபாவளித் திருநாளை இந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து கொண்டாடுங்கள்.

    மன நிறைவு பெறுங்கள்.

    சுப்பு தாத்தா.
    pl.see these for further information.
    www.wallposterwallposter.blogspot.com
    www.sevalaya.org.
    PLEASE NOTE THAT EVERY CONTRIBUTION OF RS.100 GIVEN BY YOU TO SEVALAYA IS MATCHED BY ANOTHER GIFT OF RS.100 TO SEVALAYA BY THE WORLD ORGANISATION GIVE INDIA.

    பதிலளிநீக்கு
  12. பட்டாசு கிடையாது. மத்தாப்பூவும் சாஸ்திரத்துக்காக.
    குழந்தைகளின் படைப்புகளும் அதற்கேற்ற உங்கள் பாடல்களும் வெகு அருமை. இந்த நல்ல கருத்து மேலும் பரவட்டும்.

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு பதிவிலும் நீங்கள் செய்யும் வித்தியாசமான முயற்ச்சிகள் அருமையாக உள்ளது டி.டி ஒவ்வொரு பாடல் வரிகளும் தன்னம்பிக்கை வரிகள்..

    நினைப்பது நடக்கவில்லை என்பதற்காக நினைப்பதையே நிறுத்தி விடாதே என்ற வரி பிரமாதம்

    பதிலளிநீக்கு
  14. அருமையான கருத்துக்களை அழகான திரைப்பட பாடல்களுடன் பதிவிட்ட உங்களுக்கும்’ இதைப் பதிவிட காரணமாயுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கும்’ எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!

    பதிலளிநீக்கு
  15. மத்தாப்பாய் ஒளிவீசும் குழந்தைகளின் கவிதை அருமை !
    உலக அதிசயங்களை விட தாய்தான் பெரிய அதிசயம் ...உண்மைதான் !

    பதிலளிநீக்கு
  16. அருமையான கவிதை வரிகள்.பட்டாசு பார்க்கும் போது சிவகாசி குழந்தைகள் தான் நினைவுக்கு வருகிறது !மாற்றங்கள ஒன்றே மாறாதது !பாடல்கள் அனைத்தும் அருமையான கோர்வை.

    பதிலளிநீக்கு
  17. அன்பின் தனபாலன் - பள்ளிச் சிறுவர் சிறுமியரின் படைபுக்கள் அருமை. அப்படைப்புகளுக்குப் பொருத்தமான திரைப்படப் பாடல்கள் - பொன்மொழிகள் - பகிர்வினிற்கு நன்றி - தொழில் நுட்பத்தில் கலக்கறீங்க போங்க - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பதிலளிநீக்கு


  18. மழலைகளின் கருத்துக்கள் மகத்தானவை! படித்து மகிழந் தக்கவை!
    தொகுத்தளித்த தங்களுக்கும் வாழ்த்து!

    பதிலளிநீக்கு
  19. அய்யா கவிதைகள் அருமை
    Lets make libraries.. in every home..

    பதிலளிநீக்கு
  20. குழந்தைகள் வரிகள் அவர்களதை
    வழங்கிய எளிமை அழகு அழகு!
    பதிவு சிறப்பு d.d.!
    இத்தனை குழந்தைகளிற்கும் தங்களிற்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  21. ஒவ்வொரு கவிதையும் அருமை! பகிர்ந்துகொண்டதற்கு நன்றி! நாளைய சமுதாயம் ஒளி மயமாகும் என்று நம்பிக்கை வருகிறது..நாங்களும் பட்டாசு வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம். தீபாவளி வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  22. தலைப்பே மிகச்சிறப்பான ஒன்று.
    பள்ளிக்குழந்தைகளின் ஒவ்வொரு வரியும் அற்புதம்.
    அதற்கு தகுந்த பாடல் வரிகளும் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  23. மனம் நிறைத்த பள்ளி மழலைகளின் கவிதைகள் அருமை!
    அதை மெருகாக்கிய உங்கள் பாடல் பதிவு இணைப்பு அதுவும் அருமை!

    சிந்தனைச் சிறப்பான பதிவு!
    அனைவருக்கும் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  24. தாயை மட்டுமே பார்த்ததற்கு இவற்றை எல்லாம் எதற்கு ரெஃபர் செய்ய வேண்டும்?! :))

    குழந்தைகளுக்குப் பாராட்டும், வாழ்த்துகளும்.


    பதிலளிநீக்கு
  25. குழந்தைகளை கவிதையும் அதற்கான பாடல்களும் வெகு பொருத்தம் .நல்ல பதிவு அய்யா

    பதிலளிநீக்கு
  26. நம்மை மீண்டும் சிறு குழந்தைகளாக்கி உற்சாகம்
    பீறிடச் செய்கிறது இந்தப் பிஞ்சுகளின் படைப்புகள்.

    பதிலளிநீக்கு
  27. நினைத்ததை அப்படியே எழுத்தில் கொண்டுவரும்
    குழந்தைச் செல்வங்களின் படைப்புகள் அத்தனையும் அருமை...
    சத்தம் இல்லாத ஒளித் திருநாளை கொண்டாடுவோம்...

    பதிலளிநீக்கு
  28. பிஞ்சுகளின் படைப்புகள் அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. தீபாவளி பரிசாக சிறந்த கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்
    உங்களுக்கும் மற்றும் வாசகர்களுக்கும் எனது அன்பான தீபாவளி வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  30. வணக்கம்
    தனபாலன்(அண்ணா)

    பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கு படபடக்கும் பட்டாசு திருநாள் வருகையிலே
    முத்தான வரிகளுடன் கவி படைத்த உங்களை என் மனதாற வாழ்த்துகிறேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  31. பதிவு டெக்னிகலாகவும்சரி விஷய கன்டென்ட்
    லும் சரி சூப்பர் ஆக உள்ளது.

    பதிலளிநீக்கு
  32. பாடலைக் கேட்பதைவிட பாடல்வரிகளை ரசிப்பதில் உள்ள சுகமே தனிசுகம்.

    பதிலளிநீக்கு
  33. பிஞ்சுகளின் படைப்புகள் அருமை !

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  34. பள்ளிக்குழந்தைகளின் அருமையான படைப்புகள்,அதற்கேற்ப பாடல்வரிகளை நீங்க தேர்ந்தெடுத்தவிதம் மிக அருமை.
    அச்சிறார்களுக்கு என் வாழ்த்துக்கள்.
    உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  35. மிக சிறப்பான பதிவு!
    குழந்தைகளின் படைப்புத்திறனும், அதைதந்த விதமும் அருமை!

    பதிலளிநீக்கு
  36. நீங்கள் சிறந்த படைப்பாளி என்பதை மீண்டும் நிருபித்து விட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  37. கவிக்குழந்தைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வியக்கவைக்கின்றன. அவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள். குழந்தைகளின் திறமையை செப்பனிடும் வகையில் சீரிய செயலாற்றும் உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  38. சிறார்கள் தங்கள் எண்ணங்களை எளிமையாய் வெளிப்படுத்துகிறார்கள். அவற்றுக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் உங்கள் திரைப்படப் பாடல்களின் தேர்வும் அதில் இருக்கும் தொழில் நுட்பமும் நன்றாக இருக்கிறது. அது சரி , எழுதும் குழந்தைகளை ஏன் முன்னிலைப் படுத்தக்கூடாது.? வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  39. மனதிலிருந்து எழும் வரிகள்! மனங்களுக்குத் தரும் புத்துணர்ச்சி!

    பதிலளிநீக்கு
  40. பட்டாசு வெடித்து அக்கம்பக்கத்திலுள்ளவர்களை சங்கடப்படுத்தித்தான் கொண்டாட வேண்டும் என்பதில்லை என்பது உண்மையான வார்த்தை.

    காதை செவிடாக்கும் பட்டாசுகள் வெடிப்பவர்களுக்கு மட்டுமே மகிழ்ச்சி அளிக்கக் கூடியவை. மற்றவர்களுக்கு அது எரிச்சலைத்தான் அளிக்கிறது.

    தீபாவளி வேண்டும்... ஆனால் ஓசை ஏற்படுத்தும் பட்டாசு? வேண்டவே வேண்டாம்.

    பதிலளிநீக்கு
  41. பள்ளிக்குழந்தைகளின் கவிதை அருமை.
    அவர்களின் சமூகப் பார்வைகள், ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள் ,கவிதைகளும், அதற்கு ஏற்றார் போல் உங்கள் திரை இசை பாடல் பகிர்வுகளும் மிக அருமை.

    நம்பிக்கை நட்சத்திரங்கள் வாழ்க!
    வளர்க!.
    அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  42. சிறார்களின் எண்ண வெளிப்பாடு அருமை.
    பூமி பறந்நு விரிந்து கிடக்கிறது
    எழு
    சிறகை விரி
    பற
    உலகம் உன்னுடையது.
    நம்பிக்கை வரிகள் ஐயா.
    பட்டாசு இல்லாத
    இனிமையான தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  43. பள்ளிக் குழந்தைகளின் கவிதைகள் அருமை.
    பட்டாசுஇல்லாத தீபாவளிவாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  44. பள்ளிக்கூட பிள்ளைகளின் படைப்புக்கள் அனைத்தும் சிந்திக்க வைத்தது! பட்டாசு இல்லாத தீபாவளி கவிதை மிக பிடித்தது! அருமையான பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  45. அன்பின் திரு தனபாலன்,

    குழந்தைகளின் கவிதைகள் அனைத்தும் கற்கண்டு! அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

    அன்புடன்
    பவள சங்கரி

    பதிலளிநீக்கு
  46. இரசித்துப் படித்தேன்! தீபாவளித் திரு நாளில் தாங்களும் தங்கள் குடும்பத்தாரும் நலன்கள் பெருகி மகிழ எங்கள் வாழ்த்துகள்.!
    நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  47. கவிதைகள் அனைத்தும் அருமை தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  48. குட்டிக் கவிஞர்கள் படைப்புகள் அனைத்தும் அருமை. பட்டாசு இல்லாத தீபாவளி சிறப்பாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  49. அத்தனை கவிதைகளும் மனதைக் கொள்ளை கொள்ளுகின்றன; சிந்திக்கத் தூண்டுகின்றபன.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  50. அழகான முத்துக்களால் தொகுத்த மாலை...

    முத்துக்களை வழங்கிய முத்துக்களுக்கு வாழ்த்துக்களை சொல்லிடுங்க தனபாலன் சார்.

    பதிலளிநீக்கு

  51. வணக்கம்!

    தனபால் பதிவின் தமிழ்வளம் கண்டு
    மனம்,கால் இரண்டேற்கும்! வார்த்த - இனிப்பால்
    இருகை சிறகேற்கும்! எண்ணிலா நண்பா்
    வருகை மணக்கும் வலை!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  52. இளம் சிற்பிகளுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கும் தங்களுக்கு வந்தனங்கள் அய்யா...

    பதிலளிநீக்கு
  53. கவிதைகள் அனைத்தும் அருமை!!.. மிக்க நன்றி!!... கவிதைகள் வழங்கிய மாணவர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  54. அத்தனையும் அருமை... அதைப் படைத்த விதமும் அருமை...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  55. பொருத்தமான படப்பாடல்களுடன் பதிவும்,
    பிஞ்சுக்குழந்தைகள் படைப்பும்
    அருமை... பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  56. அற்புதமான படைப்புகள்
    மிகவும் ரசித்தோம்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  57. திண்டுக்கல் தனபாலன் அவர்களே!
    பட்டாசு இல்லாத தீபாவளி என்றீர்
    பதிவைப் படிக்க நுழைந்தால்
    தங்கள் கணினி/பதிவு நுட்பம்
    சிறந்து விளங்க
    தனித்தனிக் கவிதைகள்
    சிறந்த வழிகாட்டலைச் சுட்டி நிற்க
    அருமையான பதிவிது!

    பதிலளிநீக்கு
  58. மழலை கவிதைகள் மனமுழுதும்
    மகிழவைக்கும் தேனமுதம்
    விளையும் பயிர்கள் எல்லாமே
    விளங்குது உங்கள் பதிவாலே...!

    வாழ்த்து சொல்லிக்கொள்ளுங்கள்
    வாழ்வது சிறக்கும் வகைசொல்லி
    சேர்த்துக்கொள்ளும் உணர்வெல்லாம்
    சிறக்கும் சிரசில் உரமேற்றி...!

    எல்லாமே சிறப்பு தங்களின் ஊக்கமும் ஆக்கமும் மேலும் ஆந்த சிறுவர்களை முன்னேறவைக்கும்

    வாழ்த்துக்கள்
    வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  59. மாணவர்கள் மிகவும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அனைத்தும் அருமை.

    பதிலளிநீக்கு
  60. சரவெடியாய் கவிதைகள் தொகுப்பு ..அறிவு பட்டாசு வெடிக்கும் அருமையான தலைப்பு..பட்டாசு இல்லாத தீபாவளி..ரசித்தேன்..அருமை நண்பரே..

    பதிலளிநீக்கு
  61. சிறுவர்களின் தன்னம்பிகை, தவறுகளை இனம் கண்டு சுட்டிக் காட்டும் தன்மை, துன்பம் வந்தாலும் துவளாது நிறத்திவிட கூடாது என்ற உறதி அசரவைக்கிறது. வருங்காலம் வளமாக வாழும் என்ற நம்பிக்கையும் நிம்மதியும் பிறக்கிறது. அதற்கேற்ப பொருத்தமான பாடல்களும் அசத்தலே. அனைத்தும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்.....!

    பதிலளிநீக்கு
  62. குழந்தைகளை உற்சாகப்படுத்தி எழுத வைத்தமைக்கு நன்றி. தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  63. நல்ல பகிர்வு, அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  64. வணக்கம் சார்.மிகவும் அருமையாக உள்ளது.எதிர்கால தலைமுறைக்கு இத்தகைய பொறுப்புணர்ச்சி வந்து விட்டால் போதும்.மகிழ்வாய் உள்ளது.

    பதிலளிநீக்கு
  65. குழநதைகளின் படிப்புகள் மிகவும் அர்த்தமுள்ளவை. தாயைக் கண்டேன், பட்டாசு இல்லாத தீபாவளி இரண்டும் சிறந்த படைப்புகள்.
    மழலை செல்வங்களுக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  66. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  67. தங்களின் தளத்தை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து இருக்கிறார்கள்.
    வாழ்த்துக்கள்.
    குழந்தைகளின் கவிதைகள் அழகுப் பூக்கள். அருமை.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.