🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மாற்றம் ஒன்றே மாறாதது...!

வணக்கம் நண்பர்களே...

நமது வலைப்பூவில் உள்ளே நுழையும் போது கீழுள்ளவாறு காண்பீர்கள்...


Blogger Dashboard - வலைப்பூ முகப்புத் திரை புதுவித தோற்றத்திற்கு, இந்த 2020 ஜூன் மாத இறுதிக்குள் மாறப்போகிறது... வாங்க பழகுவோம்...

வலைப்பூ அன்பர்களுடன் சமீபத்தில் நடந்த சிலரின் - சில உரையாடல்கள் மட்டும் :-

(5) 'எங்கள்ஸ்' குழுமம் திருமிகு ஸ்ரீராம் : "DD, இந்த 'Try the new Blogger' எல்லாம் சொடுக்குறதில்லேயாக்கும்...!" (வருக)
(4) அனைவரின் நண்பர் திருமிகு கில்லர்ஜி : "New post-யே காணாம்...! edit-ங்கிறதையும் காணாம் ஜி...!" (இதோ பதிவு)
(3) விக்கிப்பீடியா திருமிகு முனைவர் ஜம்புலிங்கம் : "நீங்க சொல்ற மாதிரி Dashboard எனக்கில்லையே...!" (அதானே...@!)
(2) திருமிகு வல்லிசிம்ஹன் அம்மா : "அறிவிப்பு வந்து கொண்டிருக்கிறது; சொல்லுமா... " (மின்னஞ்சல்)
(1) திருமிகு கோமதி அரசு அம்மா : "மே 14 அன்று முதல் பழகிக் கொண்டுள்ளேன்..." (ஆகா...!)

இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 22.07.2020

கணினி நுட்பம் (Windows XP »» 7 »» 10) மாற்றம் அடைவதைப் போலத்தான் இதுவும்...! வலைப்பூ சொ(செ)ல்வது போல் 'Try the new Blogger' யை சொடுக்கினால் புதிய தோற்றத்திற்கு மாறிவிடும்... மீண்டும் Revert to legacy Blogger - யை சொடுக்கினால் மீண்டும் பழைய தோற்றத்திற்குச் சென்று விடும்... ஆனால் இவை, இப்படி எத்தனை நாட்கள் இருக்கும் என்பது தான் தெரியவில்லை... அதனால், புதிய தோற்றத்தைப் பழகப் பழக வழக்கமாகி விடும்...! எடுத்துக்காட்டாக முன்பு Settings என்பதற்குக் கீழே ஏழு விதமாக அமைப்புகள் இருக்கும்... இப்போது அந்த ஏழும் Settings-ல்...! சில முக்கிய குறிப்புகள் மட்டும் இங்கே தருகிறேன் :-

விளக்கம்
Icon-களின் விளக்கம்
 1. புதிய பதிவை எழுத இடதுபுறம் மேலுள்ள + NEW POST என்பதைச் சொடுக்குக
 2. மூத்த மொழி தமிழில் எழுத Icon-களின் முடிவில் உள்ள மூன்று புள்ளிகளை சொடுக்கி, Globe
போன்ற Icon-யை சொடுக்கி, Input Tools என்பதில் Tamil-யை சொடுக்குக
 3. வரிகளை/பத்திகளைச் சரி சமமாக்க வரிகளை/பத்திகளைச் சுட்டியால் தேர்வு செய்துவிட்டு, emoji icon பக்கத்தில் உள்ள icon-யை சொடுக்கி, Justify-யை தேர்வு செய்க
 4. வலது ஓரம் மேலுள்ள Icon-கள்
(பதிவை எழுதும் போது)

 அவ்வப்போது எழுதி வைப்பதைச் சேமிக்க, save என்பதைச் சொடுக்க மறக்க வேண்டாம்
 5. எழுதிய பதிவில் மாற்றம் செய்ய குறிபார்த்துச் சரியாகப் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்குக
 6. வலது ஓரம் மேலுள்ள Icon-கள்
(வெளியிட்ட பதிவைத் திருத்தம் செய்யும் போது)
 
 7. எழுதின பழைய பதிவைத் தேடல் - மேலே காணும் தேடல் பெட்டியில் பதிவின் »» தலைப்பு or » முக்கியமான வரி or » ஒரு சொல்

வழக்கமாக நம் நண்பர்கள் வலைப்பூ பற்றிய சந்தேகங்கள் மற்றும் பிரச்சனைகளைக் கேட்கும் போது, உடனே தீர்வுக்கான வழிமுறைகளை மனப்பாடமாகச் சொல்லும் அளவிற்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்...! இப்போது கற்றுக் கொள்ள வேண்டும்...! சென்ற வருடம் புதுக்கோட்டை இருநாள் இணையத் தமிழ்ப் பயிற்சி நடப்பதற்கு முன், இதைப் பயன்படுத்திப் பார்த்துள்ளேன்... வலைப்பூ பயிற்சி கையேடு ஒன்றை உருவாக்க டெங்குவின் டொங்கான நிலையில், இதைப் பற்றி சிந்தனையும் இல்லை... எழுதிய தொழினுட்ப பதிவுகளையெல்லாம் திருத்தி, அதிலிருந்து கையேடு தயாரிப்பதிலேயே கவனம் இருந்தது... அன்று இதைக் கவனிக்காமல் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று இன்றைக்குப் புரிகிறது...! மறுபடியும் புதிய தோற்றத்திற்கேற்ப எழுதியிருக்கும் தொழினுட்ப பதிவுகளை ஓரளவு மாற்றி உள்ளேன்... மேலும் புதியனவற்றைச் செயல்படுத்திப் பார்க்கும் போது ஏற்படும் தவறுகளால், அவைகளைப் புதுப்பித்து விடுவேன்...!

கவனிக்க வேண்டியது என்னவென்றால், பதிவுகளை அதிகம் வாசிப்பது கைப்பேசியில் மட்டுமே என்பதால், மாற்றங்கள் அனைத்தும் அதற்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளது... மேலும் விவரங்களை அறியவும், உங்கள் தளத்தில் செயல்படுத்தி மேம்படுத்தவும், சில நாட்களுக்கு முன்பு எழுதிய ஒரு தொழினுட்ப பதிவைச் செயல்படுத்த செல்லலாம்... தொழினுட்ப பதிவுகளின் மற்ற இணைப்புகளை, கருத்துரைகளுக்கேற்ப அங்கேயே தருகிறேன்... உங்களின் கருத்துரைகளின் மூலம் நானும் கற்றுக் கொள்கிறேன்... அனைவருக்கும் பயன் தரும் கருத்துரைகளை, இதே பதிவில் மேலுள்ளே கட்டங்களில் புதுப்பிக்கிறேன்... நன்றி... dindiguldhanabalan@yahoo.com

© அறிவாளி அ.மருதகாசி S.V.வெங்கட்ராமன் T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

அவனியில் உள்ளோர்கள் அனைவரும் தனைப்போலே...
அவசியம் கற்றுணர்ந்து பயன் பெறும் நினைப்பாலே...


நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான தொழில்நுட்பத் தகவல்.
    எல்லோரையும் முந்திக்கொண்டு பகிர்ந்து உள்ளீர்கள்.
    மாற்றங்களே மனிதருக்கு அறிவூட்டும்
    தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
  2. கடைசியாக நீங்க சொன்ன தகவல் தான் முக்கியமானது. கணினி வழியே படிக்கக்கூடியது மட்டும் மனதில் நிற்கின்றது. அலைபேசி என்பது பார்க்க பகிர என்பதில் தான் உள்ளது. இதன் காரணமாகவே பலருக்கும் விமர்சனம் அளிக்க முடியாமல் போகின்றது. வலைபதிவில் எழுதிக் கொண்டே இருப்பவர்கள் இப்போது முதலே கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் ஜாகையை மாற்றிக் கொள்ள மனதளவில் தயாராக வேண்டும். தாங்கள் எழுதியவற்றை சிறப்பு என்று கருதக்கூடியவற்றை மின்னூலாக மாற்றி அமேசான் தளத்தில் இலவசமாக போட்டு விடவும். இலவசமாக வாசித்தாலும் குறிப்பிட்ட அளவு உங்களுக்கு வருமானம் உண்டு என்பதனை நினைவில் வைத்திருக்கவும்.மேலும் காலம் கடந்தும் உங்கள் படைப்புகள் உலகம் முழுக்க சுற்றி வந்து கொண்டே இருக்கும். அமேசான் தளம் பல கண்டங்களுக்கு அவர்களே எடுத்துச் சென்று விளம்பரப்படுத்துகின்றார்கள். உங்களுக்கு அங்கீகாரம் அளிக்கின்றார்கள். நன்றி சித்தரே.

    பதிலளிநீக்கு
  3. இது எல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது. இந்த புதிய முறை அமலுக்கு வந்தவுடன் சரியா வேலை செய்யலைன்னு சொல்றேன் அப்ப உதவிக்கு வாங்க.

    நன்றி தனபாலன். உங்கள் சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு

  4. வணக்கம் ஜி
    பழகிக்கொண்டு வருகிறேன்.

    ஏதும் குழப்பம் வந்தால் பழைய நிலைக்கு மாற்றி விட்டு மீண்டும் உள்ளே செல்கிறேன்.

    ஜம்பிங் பிரேக் மற்றும் பூட்டு போடுவது கிடையாதோ என்று நினைத்து விட்டேன். பிறகு வலைவீசி தேடியதில் அயிரை மீனின் குஞ்சைவிட சிறிய இரண்டு கோடுகளில் வைத்து இருக்கிறார்கள்.

    மற்றபடி பதிவை உள்ளே ஒட்டி எல்லா ஒப்பனைகளையும் முடித்த பிறகு முன்னோட்டம் பார்த்தால் ???

    பத்தியின் இடைவெளியை அதிகம் காட்டுகிறது அதில்தான் பாண்ட் பிரச்சனை இருக்கிறது இன்னும் கொஞ்சம் உள்ளே அலையணும்.

    இருந்தாலும் பழையது நன்றே.. . கஞ்சிக்கும், பிட்சாவுக்கும் உள்ள வேறுபாடுதான். பிட்சா அழகாத்தான் இருக்கு, அழகா மட்டும்தான் இருக்கும் என்னைப்போல் கத்துக்குட்டிகளை கத்தவிடும் போல...

    என்னைப் போன்றவர்களையும் இவர்கள் மனதில் வைத்து இருக்கலாம்...

    எப்படியோ பழகுவோம் வேறுவழி முயற்சி திருவினையாக்கும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Insert Jump break - பல பயன்கள் கொண்ட ஒரு முக்கியமான Icon... நீங்கள் சொன்னது போல சிறிதாகத்தான் இருக்கிறது...! பழைய நிலைக்கு மாற - Revert to legacy Blogger - என்பதை எத்தனை நாட்கள் வைத்திருப்பார்களோ தெரியவில்லை... அதற்குள் புதிய தோற்றத்தையே பயன்படுத்தவும்... கணினி என்றால், ஒவ்வொரு icon மீது mouse யை கொண்டு சென்று, அதன் விவரத்தை அறிய முடியும்... கைப்பேசியிலும் நன்றாகத்தான் உள்ளது... எனினும் கைப்பேசியில் பதிவு எழுதும் நீங்கள் கவனமாகவே செயல்படுங்கள்... பதிவில் சொன்ன 4.2. & 4.4. மற்றும் 6.2. & 6.4. முக்கியம்...

      நீக்கு
    2. நேற்று மீண்டும் ஒரு தகவல் வந்தது ஜி, என்னவென்றால், வரும் "ஆகஸ்ட் 24 ஆம் தேதியோடு புதிய முகப்புத் திரை தான் அனைவருக்கும்" என்று... மீண்டும் ஏற்படுத்திய மாற்றத்திற்கேற்ப இந்தப்பதிவையும் மாற்றியுள்ளேன் ←கவனிக்க→ இப்போது அயிரை மீன் குஞ்சு, அதாவது (Insert Jump break) மறைந்து உள்ளது, அதுவும் ஒரே ஒரு கோடாக...!

      நீக்கு
  5. உங்களின் ஆலோசனைகள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தன. இருந்தபோதிலும் நாங்கள், நீங்கள் சொல்லும் அனைத்தையும் உள்வாங்கிக்கொண்டு செயல்படுகின்றோமோ என்பது சற்று ஐயமே. போகப்போகப் பழகிவிடும் என நினைக்கிறேன். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. சிறப்பு. பிளாக்கரை கூகுள் கைவிட்டுவிட்டதோ என்று எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் பல புதிய மாற்றங்கள். ஆனால் இவை போதாது. வேர்ட்பிரஸ் போல இணையத்தளங்களுக்கான சிறப்பு வசதிகள் உருவாக்கப்பட வேண்டும்.

    இது குறித்து நான் எழுதிய பதிவு: வலைப்பதிவு வழிகாட்டி - 04

    நமது வலைத்திரட்டி: வலை ஓலை

    பதிலளிநீக்கு
  7. நானே பேசணும்னு நினைச்சேன். இன்னும் கூட புரிபடல. இது டாஷ்போர்டுல மாற்றமா இல்ல ப்லாக் தளத்துலயா

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு பகிர்வு. நான் சென்ற ஒரு மாதத்திற்கும் மேலாகவே புதிய Blogger-ஐயே பயன்படுத்துகிறேன். சில ஆரம்பகால hitches இருந்தாலும் இப்போது பரவாயில்லை.

    உங்கள் பதிவு பலருக்கும் பயன்படும். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    சேர்த்த பாடல் சிறப்பு. தொடர்ந்து கற்றுக் கொள்வோம்.

    பதிலளிநீக்கு
  9. நான் இன்னும் அந்த Try New Blogger கிளிக் செய்யவில்லை.  வரும்போது வரட்டும்.  அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்றிருக்கிறேன்!  இந்தப் பதிவை புக்மார்க் செய்து வைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. சகோ அருமையான விளக்கப்பதிவு .நானும் மாத்திட்டேன் தட்டுத்தடுமாறி பயந்துதான் ஒவ்வொரு icon உம்  தட்டறேன் .ஒரு டவுட் நான் ஏற்கனவே பப்லிஷ் செய்த பதிவு மீண்டும் 8 மணிநேரம் கழித்து அப்போதான் பப்லிஷ் ஆனா மாதிரி டேஷ்போர்டில் காட்டுது ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // 8 மணி நேரம் கழித்து // அவ்வாறு எதுவும் காட்டாதே... Publish ஆனவுடன் உடனே காட்டி விடுகிறதே... அதோடு, கருத்துரைகளின் எண்ணிக்கை மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் காண்பிக்கும்...

      நீக்கு
    2. அடுத்தமுறை அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைக்கிறேன் .அதோட இன்னும் சில சந்தேகமும் இருக்கு அதையும் திங்கள் அல்லது செவ்வாயில் பதிவில் படமா போட்டு காட்டறேன் .(எனக்கு வார இறுதி work )

      நீக்கு
  11. அருமையான பதிவு.
    தட்டுதடுமாறி ஐந்து பதிவு போட்டு விட்டேன். புதிய Blogger பழகி விட்டது.

    ஆனாலும் பழைய டேஸ்போர்ட் நன்றாக இருந்தது,
    பழைய பாடலை புது ராகத்தில் பாடினால் எங்களுக்கு எல்லாம் பிடிக்காது. பழைய ராகம் கேட்டு கேட்டு பழகியதால். இப்போது உள்ள பாட்டுக்கள் வரிகள் புரியவில்லை என்போம், ஆனால் குழந்தைகள் சிறு வயது குழந்தைகள் அட்சரம் பிசகாமல் பாடுகிறார்கள்.

    மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல் மாறி கொண்டு இருப்பதை ஏற்றுக் கொள்ள மனதை தயார் செய்து கொள்ளவேண்டிய காலம்.

    பாடல் பகிர்வு அருமை.

    மிக பொறுமையாக சொல்லிக் கொடுத்து இருக்கிறீர்கள் பலருக்கு பயன். உங்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.


    பதிலளிநீக்கு
  12. பழகி கொள்ள வேண்டும்பழைய லெகசி ப்ளொகெர் எத்தனை நால் இருக்கும் நமக்கு ஆப்ஷன் இல்லை போல் இருக்கிறதே

    பதிலளிநீக்கு
  13. புதிய இண்டர்ஃபேஸ் பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது. இதனைத்தான் ஜனவரியில் இருந்து பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன். அமைப்பில் மாறுதல் இருக்கிறதே தவிர கூடுதல் வசதி ஏதும் கண்ணில் படவில்ளை இனிமேல்தான் பார்க்க வேண்டும். டிடி இருக்க கவலை ஏன்?

    பதிலளிநீக்கு
  14. நாளை புதிய வலை அமைப்பிற்குள் நுழையப் போகிறேன்
    ஏதேனும் சந்தேகம் வந்தால்
    சித்தரே சரணம்

    பதிலளிநீக்கு
  15. டிடி நன்றாகச் சொல்லியிருக்கீங்க.

    நான் ஏற்கனவே பழகிக் கொண்டுவிட்டேன். பதிவுதான் போட வில்லை. கணினி கைக்கு கிடைக்கும் நேரப் பிரச்சனையால்.

    நன்றி டிடி

    கீதா

    பதிலளிநீக்கு
  16. நான் கற்றுக் கொண்டது, புது ப்ளாகரில் சும்மா ஒரு 4, 5 வரிகளை காப்பி பேஸ்ட் செய்து ஒவ்வொன்றாகச் செய்து பார்க்கும் முன் பப்ளிஷ் பட்டன் எங்கிருக்கு என்று பார்த்துக் கொண்டுவிட்டேன். இல்லை என்றால் டெஸ்ட் செய்யும் போது பப்ளிஷ் ஆகிவிட்டால் ஹா ஹா ஹா அதனால்...அப்புறம் சும்மா ஒவ்வொன்றாகப் பார்த்து தெரிந்து கொண்டேன்.

    மொபைல் வடிவத்தில் இருப்பது போல இருக்கு. அந்த ப்ளஸ் சைன் எல்லாம் மொபைலில் புதுசு எழுத க்ளிக் செய்ய வேண்டுமே அப்படி..

    கீதா

    பதிலளிநீக்கு
  17. அதிகம் சிக்கல் இனித்தான் போலும் டிடி உங்களைத்தான் இனி அடிக்கடி மெயிலில் சந்தேகம் கேட்கனும் போல! புதியதை இன்னும் முயச்சிக்கிக்கவில்லை!

    பதிலளிநீக்கு
  18. நேரத்துக்கு ஏற்ப, தேவையான போஸ்ட்.... என் கொம்பியூட்டரிலும், ஸ்ரீராம் சொல்வதைப்போலத்தான்.. லிங் வேலை செய்யவில்லை, அதனால அதுவா எப்படியும் மாறத்தானே போகிறது, அப்போ பார்த்திடுவோம் என விட்டிருக்கிறேன் ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  19. புதிய செட்டிங்கில் font style தான் ஆரம்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதுவும் வர வர சரியாகிகொண்டு வருகிறது. புதுமையை வரவேற்போம்....

    பதிலளிநீக்கு
  20. நானும் புதிய பிளாக்கரைத்தான் பயன்படுத்துகிறேன். பிரச்சினையில்லை. என்றாலும் 'மனைவியின் அம்சங்கள் சிலவற்றைப் புதிய பெண் நண்பரிடம் எதிர்பார்க்க முடியுமா?' என்று யாரோ சொன்னது நினைவுக்கு வருகிறது.

    அதே சமயம், எனது பிரச்சினை வேறு மாதிரியானது. அலைபேசியில் வலைப்பதிவைப் படித்த பிறகு, பின்னூட்டம் இட்டபின் 'வெளியிடு' என்று சொன்னால் அது மீண்டும் GOOGLE PASSWORD கேட்கிறது. கொடுத்தாலும் சும்மா இராமல், please use a compatible browser என்று வருகிறது. Chrome, Blogger இரண்டு apps களையும் re-install செய்த பிறகும் இதே சிரமம் நீடிக்கிறது. எனவே படுத்துக்கொண்டு பின்னூட்டம் இடும் வசதி குறைகிறது. மறுபடியும் மடிக்கணினி மூலமே பின்னூட்டம் இடவேண்டி இருக்கிறது. அதற்குள் நண்பர்கள் கோபித்துக்கொண்டு விடுகிறார்கள். நானோ இதற்கு நாயகமே!


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலைபேசியில் Chrome-யையும் update செய்தும் உள்ளீர்கள்... அலைபேசியில் இதை சரி பார்க்கவும் ஐயா...
      1) open Google Chrome 2) In the top right, click : 3) Settings 4) Under Advanced (or) Site settings 5) JavaScript - Turn on JavaScript.

      நீக்கு
    2. அதையெல்லாம் ஏற்கெனவே செய்துவிட்டேன். Blogger app தான் பிரச்சினை என்று தோன்றவே, அதைவிட்டுவிட்டு, chellappatamildiary.blogspot.com க்கே சென்று பார்த்தேன். அதில் இருந்து தான் இதை எழுதுகிறேன். உங்களுக்கு வந்ததா?

      நீக்கு
  21. தகவலுக்கு நன்றி! தங்களின் ஆலோசனைப்படி புதிய தோற்றத்தை முயற்சித்துப் பார்த்தேன். பார்க்கும்போது எளிதாக் இருக்கிறது. ஐயம் இருப்பின் தங்களைத் தொடர்பு கொள்வேன்.

    பதிலளிநீக்கு
  22. உண்மையில் இதைப் பற்றி யாராவது எழுத மாட்டார்களா என்றிருந்தேன். நீங்களே எழுதி விட்டீர்கள். மிக்க நன்றி ஐயா!

    என்னைக் கேட்டால் பழைய பிளாகர் இடைமுகத்தை விட இந்தப் புதிய இடைமுகம் பன்மடங்கு சிறப்பானதாக இருக்கிறது என்பேன். இதற்கு நான் சொல்லும் முக்கிய காரணம் நாம் செய்யும் மாற்றங்களை உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளும் தன்மை. நான் எப்பொழுதும் வேர்டில் படைப்பை எழுதி அதைப் படியெடுத்துத்தான் (copy) பிளாகரில் வெளியிடுவேன். படியெடுத்து ஒட்டிய பின் எழுத்துரு அளவை மாற்றுவது, பத்தி பிரிப்பது என எதைச் செய்தாலும் சேமித்தவுடன் அந்த மாற்றம் ஏற்றுக் கொள்ளப்படாது. குறிப்பாக, பத்தியைப் பிரித்தால் ஒரு வரிதான் கீழிறங்குமே தவிர, பத்திகளுக்கு இடையில் இடைவெளி விழாது. இடைவெளி வைத்துச் சேமித்தாலும் முன்னோட்டத்தில் பரிசோதித்தால் இடைவெளி விழுந்திருக்காது. அப்படி இடைவெளி வர வேண்டுமானால் மொத்தப் பதிவின் எல்லாப் பத்திகளிலும் வரி முடிவில் இடைவெளி சீராக வைக்க வேண்டும். அல்லது HTML திருத்தப் பிரிவுக்குள் சென்று
    எனும் நிரல் துண்டைச் சேர்க்க வேண்டும். இப்படிச் செய்தால்தான் பத்திகளுக்கு இடையில் இடைவெளியை வரவழைக்க முடியும்.

    இப்படிக் குட்டிக் குட்டியாகப் பல நச்சுப் பிடித்த சிக்கல்களை நீங்களும் பலமுறை சந்தித்திருப்பீர்கள். இவை எதுவும் புதிய இடைமுகத்தில் இல்லை. நாம் செய்யும் எந்த ஒரு மாற்றமும் உடனுக்குடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் பதிவில் வேண்டிய மாற்றங்களை உடனுக்குடன் செய்து மிகக் குறுகிய நேரத்துக்குள்ளேயே பதிவை வெளியிட்டு விட முடிகிறது. மணிக்கணக்கில் நேரம் மிச்சமாகிறது. எனவே பதிவுலகினர் அனைவரும் தயங்காமல் இந்தப் புதிய இடைமுகத்துக்கு மாறப் பரிந்துரைக்கிறேன். வடிவமைப்பில் உள்ள மாற்றங்கள் துவக்கத்தில் கொஞ்சம் திணறலைத் தரலாம். போகப் போகப் பழகி விடும். எனவே தயங்காதீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Word-ல் நீங்கள் செய்வது போலவே நானும்... ஆனால் compose view-வில் அல்ல... html view-வில் முன்பு போல பதிவு எழுத சிறிது திணறிப் போனேன்... அதைப் பற்றி கீழுள்ள பதிவில் குறிப்பிட்டு உள்ளேன்... நன்றி...

      ஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...!

      நீக்கு
  23. சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் ஜம்புலிங்கம் என்ற என்னுடைய இரு வலைப்பூவினையும் தற்போது மாற்றியுள்ளேன். உங்களின் ஆலோசனைகள் மிகவும் உதவியாக இருந்தன. நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் சகோதரரே

    மாறுதலாக வந்திருக்கும் இதை கற்றுக் கொள்வதென்பது எனக்கு முதலில் கொஞ்சம் தடுமாற்றந்தான்.! நீங்கள் விரிவாக எழுதியிருப்பதைப் நன்றாக உள்வாங்கிக் கொண்டேன்.மாறுதல் செய்முறைகளை அழகான விளக்கமுடன் பதிவில் தொகுத்து தந்த உங்களுக்கு மிகவும் நன்றி. உங்கள் மூலமும், வீட்டில் என் குழந்தைகள் மூலமும் கற்றுக் கொண்டு விடலாம் என்ற நம்பிக்கையும் வருகிறது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  25. புதியதைத் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். பழகப் பழக எளிதாகிவிடும்.

    மிகவும் பயனுள்ள பதிவு.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  26. அன்பு தனபாலன் மிக நன்றி மா.
    நானும் புது ப்ளாகரைப் பழகிக் கொண்டு வருகிறேன். நீங்கள் சொன்ன வழிகளில்

    செய்து பழகுகிறேன்.
    கோமதி சொல்வது போல ,பழைய டாஷ்போர்ட் இன்னும் நன்றாக இருந்தது.
    அருமையான விளக்கங்கள் தனபாலன்.
    மனதைப் புது வழியில் செலுத்தப் பழகணும் அவ்வளவுதான். அறிவுக்கு விருந்தாகும் திருக்குறள்
    பாடலைக் கேட்டு மகிழ்ந்தேன்.
    நன்றி மா.

    பதிலளிநீக்கு
  27. தனபால்,

    பலருக்கும் பயன்படும் விவரங்களை விவரமாக விளக்கி இருக்கின்றீர்கள், புதிய பதிவேற்றம் செய்யும்போது இந்த குறிப்புகளை பக்கத்திலேயே வைத்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்.

    நன்றி,

    மீண்டும் ச(சி)ந்திப்போம்

    கோ.

    பதிலளிநீக்கு
  28. எனது அறிவுக்கு எட்டிய வரையில் பழகிவிட்டேன் வலை சித்தரே!! நன்றி பல!!

    பதிலளிநீக்கு
  29. வணக்கம்
    அண்ணா

    உண்மையில் ஒரு வலைப்பதிவர் அறிய வேண்டி விடயங்கள் பகிர்ந்தமைக்கு நன்றிகள் அண்ணா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூ பன்-

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.