தன்னலம் கருதா முழக்கம்...!

வணக்கம் நண்பர்களே... அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்... திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும், திருடும் கையைக் கட்டி வச்சாலும், தேடும் காதைத் திருகி வச்சாலும், ஆடும் கண்களை அடக்கி வச்சாலும் (2) ஓஹோஹோஹோஹொஹொஹோ... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும், தூய தங்கம் தீயில் வெந்தாலும்... மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது... (2) அஹஹஹ ஓஹோஓஹோ ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்ஹ்ம்... (படம் : குடும்பத் தலைவன்) மனமும் குணமும் மாறவில்லை என்றால் மனிதனின் சுயநலமும் மாறவே மாறாது... எங்கும் எதிலும் சுயநலம் தான்...


அப்படி எல்லாம் பொத்தம்பொதுவாகச் சொல்லிவிட முடியாது மனமே... சுயநலம் என்கிற ஒரு சின்ன உலகத்தில் ஒருவர் பல நாள் வாழ முடியாது... இன்றைக்கும் பொதுநலத்திற்காக வாழுவோர், போராடுவோர், செயல்படுவோர் என நிறையப் பேர் இருக்கின்றார்கள்...

இருக்கலாம்... ஆனால் இன்று அரசியல், சினிமா தவிர்த்து பொதுநலப் போராட்டம்... ஓஓ அப்படி ஒன்று இன்றில்லையோ...? சரி, அவைகள் இல்லாமல் நடக்கும் பொதுநலப் போராட்டம் என்று, எதை ஆராய்ந்து பார்த்தாலும் உள்ளே எங்கோ ஒரு மூலையில் சிறிதளவு சுயநலம் இருக்கத்தானே செய்கிறது...? உண்மையாகவே உண்மையைச் சொல்...!

எல்லாவற்றையும் நுணுகி ஆராய்ந்தால் உள்ளே ஒன்றிரண்டு அப்படி இருக்க வாய்ப்புண்டு தான்... ஆனால் ஏகப்பட்ட பொதுமக்கள் அதன் மூலம் பயனடையும் போது, ஒன்றிரண்டு சுயநலப் போக்குகளைப் புறந்தள்ளிவிட வேண்டும்... உனது ஆராய்ச்சி கேள்வியையும் சேர்த்து...!

சரி விடு... இந்தியா அடிமைப்பட்டுக் கிடந்த போது நடந்த போராட்டங்கள், பங்கு பெற்ற விடுதலைப் போராட்ட வீரர்கள், அவர்களின் நெஞ்சில் ஒளிந்து கொண்டிருந்த தன்னலமற்ற தியாக உணர்வுகள் - இவற்றையெல்லாம் இன்று காண முடியுமா...? முதலில் அவைகளை இன்று ஏன் நினைத்தாவது பார்க்க முடிவதில்லை...? இன்றைய நாடு இருக்கும் சூழ்நிலையில் தன் மனதையும் உடம்பையும் கூட பேணிக்காக்க துப்பில்லாததால் தான், அவைகளை மறந்து சீரழிந்து போகிறோமோ...?

இதோ இன்னும் சிறிது நேரத்தில் நினைத்துப் பார்ப்போம்... அதற்கு முன்... அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு (குறள் 72) நம்ம அய்யன், அன்பில்லாதவர்கள் அவர்களுக்குள்ளேயே வாழ்ந்து கொள்ளும் சுயநல வாதிகள்... அதே சமயம் அன்பு என்பது கொடுப்பது என்று கூட சொல்லவில்லை... என் எலும்பைக் கூட எடுத்துக் கொள்...! அது என்ன எலும்பு மட்டும்...? எலும்பு உரியர் என்று சொல்லவில்லை....எலும்பு'ம்' உரியர் என்று சொன்னார்... என்னை உன்னிடம் தந்து விட்டேன்... எப்போது வேண்டுமோ, எவ்வளவு வேண்டுமோ, என்ன வேண்டுமோ எடுத்துக் கொள்...! பிரதிபலன் எதிர்பாராதது தான் உண்மையான அன்பு... சரி, இப்போ நாம் விசயத்திற்கு வருவோம்...

விடுதலைப் போராட்டங்களோடு இன்றைய போராட்டங்களை ஒப்பிடக் கூடாது... ஒப்பிடவே முடியாது...! அந்நியரின் அதிகாரத்தை எதிர்த்து நடைபெற்ற போராட்ட நோக்கங்களுக்கும், இப்போது 'நமக்கு நாமே' நடத்திக் கொண்டிருக்கின்ற போராட்ட நோக்கங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன... ஆனாலும் அன்றைய விடுதலைப் போராட்ட வீரர்களின் லட்சிய நோக்கு, உயிரை துச்சமென மதித்த போக்கு - இவற்றையெல்லாம் வேறு எதனிடமும் ஒப்பிடவே முடியாது... ஒப்பிடவும் கூடாது... மேலே சொன்ன குறளுக்கேற்ப நெஞ்சை உருக வைக்கும் ஒரு நிகழ்வு :

மகாத்மா தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த காலத்தில், கறுப்பர்களுக்கு ஆதாரவாக வெள்ளையர்களை எதிர்த்து நிறையப் போராட்டங்களை நடத்தினார்... அப்படி ஒரு போராட்டம் டிரான்ஸ்வால் எல்லை நுழைவுப் போராட்டம்... ஜோகன்ஸ்பர்க்கிலிருந்து டிரான்ஸ்வாலுக்கு நடந்தே சென்று எல்லை நுழைவு... நிறைய ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்... இதில் இந்தியர்கள், குறிப்பாக நிறையப் பெண்கள் அதிகமாகக் கலந்து கொண்டனர்... நீண்ட வரிசையில் போராட்டப் பயணம் தொடங்கியது...

போராட்டத்திற்குத் தலைமை ஏற்று காந்திஜி முதலாவதாகச் சென்று கொண்டிருந்தார்... பயணம் தொடங்கிய சிறிது நேரத்தில், போராட்டத்தில் பங்கேற்ற ஒரு பெண் பதற்றத்தோடு முன்னே சென்று கொண்டிருந்த மகாத்மாவை நிறுத்தினார்... ஊர்வலம் போய்க் கொண்டே இருந்தது... ஊர்வலத்தில் வந்து கொண்டிருந்த ஒரு பெண்ணைக் காட்டி, "இந்தப் பெண் என்ன காரியம் செய்தார் என்பதை விசாரியுங்கள் பாபுஜி" என்றார்.."ஏன்... ஏன்...? அவரென்ன அப்படி செய்து விட்டார்...?" என்று வரிசையில் வந்து கொண்டிருந்த அந்தப் பெண்ணை நிறுத்தினார் காந்திஜி... "ஒன்றும் நடக்கவில்லை மகாத்மா... நீங்கள் முன்னே சென்று போராட்டத்தை வழி நடத்துங்கள்..." என்றார் அந்தப் பெண்... மகாத்மாவை அழைத்து வந்த பெண் விடுவதாக இல்லை... அந்தப் பெண் செய்த காரியத்தைச் சொன்னார் :

"நடந்தது இது தான்... போராட்டத்தில் கலந்து கொண்ட அந்தப் பெண், தனது ஆறுமாதக் கைக்குழந்தையோடு வந்தார்... ஏற்கனவே அந்தக் குழந்தைக்குக் கடுமையான காய்ச்சல் இருந்தது... போராட்டத்தில் நடக்கத் தொடங்கியதும், கையிலிருந்த கைக் குழந்தைக்கு ஜன்னி வந்தது... சிறிது நேரத்தில் இறந்தும் போனது... இதை வெளியே சொன்னால் போராட்டம் தடைபடுமே என்று எண்ணிய இந்தப் பெண், வழியில் ஓரமாக ஒதுங்கி அவசர அவசரமாக ஒரு சிறு குழியைத் தோண்டி, இறந்த குழந்தைப் போட்டு புதைத்து விட்டு, ஒன்றும் தெரியாதது போல மீண்டும் வந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டார்... இந்தப் பெண்ணின் கல்நெஞ்சத்தை என்னவென்று கேளுங்கள்..." என்றார்... விசயம் அறிந்து பதைத்துப் போன மகாத்மா, அந்தப் பெண்ணைப் பார்த்து, "ஏன் இப்படிச் செய்தாய்...?" என்று கேட்டார்... அந்த வீரத் தாய் கர்ஜித்தார் :-

"மகாத்மா...! நாம் இறந்து போனவர்களுக்காகப் போராடவில்லை... வாழுகிறவர்களுக்காகவே போராடுகிறோம்...! இறந்து போன என் குழந்தைப் பற்றிக் கவலைப்படாதீர்கள்... மேலே முன்னே சென்று போராட்டத்தைத் தொடருங்கள்...!"

தன்னலம் கருதா முழக்கம்...!

உடல் பொருள் ஆவி அனைத்தும் துறந்த இவர்களைப் போன்ற தூய தியாகிகளின் தியாகங்களால் தான் இன்று நாம் சுதந்திரமாக வாழ்கிறோம்...


© ஜெய்ஹிந்த் வைரமுத்து வித்யாசாகர் S.P.பாலசுப்ரமணியம் @ 1994 ⟫

வண்ணம் பல வண்ணம் நம் எண்ணம் ஒன்றல்லோ... பறவைகள் பலவன்றோ வானம் ஒன்றன்றோ... தேகம் பலவாகும் நம் ரத்தம் ஒன்றல்லோ... பாஷைகள் பலவன்றோ தேசம் ஒன்றன்றோ... பூக்கள் கொண்டு வந்தால் இது புண்ணியத் தேசமடா... வாட்கள் கொண்டு வந்தால் தலை வாங்கிடும் தேசமடா...! எங்கள் ரத்தம் எங்கள் கண்ணீர் - இவை இரண்டும் கலந்ததெங்கள் சரிதமே.. இது தீயில் எழுந்து வந்த தேசமே...! தலை கொடுத்தார் அந்த அனைவருக்கும் - தாயகமே எங்கள் முதல் வணக்கம்... தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி... சொல்லுது ஜெய்ஹிந்த்... தாயகம் காத்திட தன்னலம் போக்கிட - சொல்லுக ஜெய்ஹிந்த்... என் இந்திய தேசம் இது, ரத்தம் சிந்திய தேசமிது, காந்தி மகான் வந்த கண்ணிய பூமி இது... ஜெய்ஹிந்த்...! ஜெய்ஹிந்த்...! ஜெய்ஹிந்த்...!

இது முந்தைய பதிவின் இணைப்பு : இந்த → சுயநலம் தேவை...! ← (வாசிக்காதவர்கள் செல்லலாம்) அதற்கு முன் இந்த பதிவைப் பற்றி.....

தங்களின் முழக்கம் என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அருமையான பதிவு டிடி ... அந்த பெண்ணின் மகத்தான உள்நோக்கத்திற்கு தலை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 2. அரிய தகவல்..
  அந்தப் பெண்ணின் மனோதிடம் போற்றுதலுக்குரியது..

  அத்தகைய தியாகிகளினால் பெற்றதிந்த நாடு..
  கட்டிக் காக்க வேண்டியது நம் கடமை..

  குடியரசு தின நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 3. கொஞ்சம் மனதை கலங்க வைக்கிற பதிவாய்.
  தேர்ந்தெடுத்த பாடல்களும் அருமை,,,/

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கு இனிய குடியரசு நாள் வாழ்த்துக்கள்! விடுதலைப் போராட்டத்தில் எண்ணற்ற சுயநலம் கருதா தியாகிகள் செய்த தியாகங்களை அனுபவித்துக்கொண்டு இருக்கும் நாம் அவர்களை என்றாவது நினைத்துப் பார்க்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. அவர்களை இந்த நாளிலாவது நினைத்து பார்க்க வைத்த உங்களுக்கு நன்றி! பதிவுக்கு பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 5. இன்றைய நிலை முற்றிலும் வேறாக இருப்பதனை உணர்ந்து எழுதப்பட்ட பதிவு! தியாகங்கள் மறக்கப்படுகின்றன. உழைப்பாளிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். மாற்றம் நிகழுமா? மனங்கள் மாறுமா? ....
  இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. குடியரசு தின நல்வாழ்த்துகள்,
  வாழுகின்றவர்களுக்காக போராடிய காலம் போய் எதற்காக போராட வேண்டுமே அவைகளுக்கு போராடாமல் வேண்டாதவைகளுக்கு போர்க்கொடி உயர்த்தும் நிலையில் இருக்கின்றோம்.கடந்த காலம் கனவுக்காலம் மட்டும்தானே?

  பதிலளிநீக்கு
 7. மகத்தானப் பெண்ணின் அந்தத் தியாக உள்ளத்திற்கு இன்றைய தினத்தில் ராயல் சல்யூட்!! அருமையான பதிவு டிடி

  பதிலளிநீக்கு
 8. குடியரசு நாள் வாழ்த்துப் பரிமாறும்
  உள்ளங்களைக் கொஞ்சம் ஊடுருவி
  போராடிய போராளிகளின்
  உள்ளத்து எண்ணங்களை பகிர்ந்து
  நாட்டுப்பற்று உணர்வை
  ஒவ்வொருவர் உணர்ச்சி நரம்புகளில்
  ஊட்டிவிடும் அருமையான பதிவு!

  பதிலளிநீக்கு
 9. அருமையான பதிவு. தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. மேலிருந்து கீழ்வரை லஞ்சம் நிறைந்த நாடாகி விட்டது ,போராடுபவர்கள் அடக்கி ஒடுக்கப் படுகிறார்கள் ,எதற்கு வம்பு என்று பெரும்பான்மையினர் ஒதுங்கி விடுகின்றனர் !

  பதிலளிநீக்கு
 11. தென்னாப்பிரிக்காவில் காந்திஜி தலைமையில் நடைபெற்ற, நெஞ்சைப் பிழியும் நிகழ்வு ஒன்றினை இங்கு நினைவு படுத்தியமைக்கு நன்றி. எனக்கு இது புதிய செய்திதான். எனது உளங்கனிந்த குடியரசு தின வாழ்த்துக்கள்! (சென்ற ஞாயிறு அன்று புதுக்கோட்டைக்கு வீதி இலக்கிய கூட்டத்திற்கு வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். அங்கிருந்த பலரும் திண்டுக்கல் தனபாலன் வரவில்லையா என்றுதான் (என்னிடமும்) கேட்டார்கள். பேசாமல் நீங்கள் புதுக்கோட்டை தனபாலன் ஆகிவிடலாம்)

  பதிலளிநீக்கு

 12. எத்தனை தியாகிகள் வாங்கிக் கொடுத்த சுதந்திரம்.. இன்று?!!

  பதிலளிநீக்கு
 13. விடுதலைப்போராட்ட வீர நங்கை ஒருவரைப்பற்றிய செய்தி கண் கலங்க வைத்தது.

  தங்களுக்கு என் குடியரசுதின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த் !

  பதிலளிநீக்கு
 14. இனிய குடியரசு தின வாழ்த்து
  சிறிது தன்னலத்தோடு தான் பொதுநலம் விரிகிறது...
  அருமையான பதிவு
  (வேதாவின் வலை)

  பதிலளிநீக்கு
 15. அருமையான பதிவு. அப்பெண்ணை நினைக்கையில்....தொண்டை அடைக்கிறது. என்ன சொல்வது. தலைவணங்குகிறேன்.தம+ 1

  பதிலளிநீக்கு
 16. பொதுநலத்தால் பலர் வாழ்வார். சுய நலத்தால் அவர் மட்டும்தான் வாழ்வார் அருமை சித்தரே....

  பதிலளிநீக்கு
 17. குடியரசு தினத்தன்று அருமையான பதிவு! சுயநலமில்லா அந்த பெண்மணியின் கர்ஜனை போற்றத்தக்கது! தலைவணங்குகிறேன்! அப்பெண்மணிக்கு! இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்! நன்றி!

  பதிலளிநீக்கு
 18. அருமையான விடயம் ஜி அந்தப் தாயின் தியாக உணர்வு மெய்சிலிர்க்க வைக்கின்றது இப்படிப்பட்டவர்களால் கிடைத்த சுதந்திரம் இன்னும் ஏழைக்கு கிடைக்க வில்லை இதுதான் உண்மை
  அரசியல்வாதிகளுக்காகவும், சினிமா நடிகர்களுக்காகவும், கிரிக்கெட் வீரர்களுக்காகவும், பணக்கார முதலைகளுக்காகவும் மட்டுமே பயனளிக்கின்றது.
  இனிய குடியரசு தின வாழ்த்துகள் ஜி

  பதிலளிநீக்கு
 19. மாற்றம் ஒன்றே மாறாதது. மாறும் - எல்லாம் மாறும். நாடும் மாறும். :-)
  இனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 20. உண்மையில் மிகசிறந்த மற்றம் வந்துவிடும் என எண்ணித்தான் விடுதலைப் போராட்டம் நம் மண்ணில் நடந்தேறியது முதன் முதலில் விடுதலை வேட்கையை தொடங்கி போராடியவர்கள் பூலித்தேவனும் அவரது தோழர்களும்தான் ஆனால் பெயர் எடுத்துக் கொண்டதோ யாரோ தன்னலவாதிகள் இவற்றையெல்லாம் யாரு பேசப்போகிறார்கள்.....

  பதிலளிநீக்கு
 21. கூடவே பிறந்தது என்ன செய்ய ? சிலரின் மனமும் குணமும் மாறாது.

  பதிலளிநீக்கு
 22. முகம் தெரியாத தியாகிகளால் விளைந்ததே நமது சுதந்திரம்.அருமை அருமை

  பதிலளிநீக்கு
 23. உணர்வுப் பூர்வமான பதிவு DD
  அப் பெண்ணைப் பற்றிய மேலும் தகவல்கள் கிடைக்குமா?!

  பதிலளிநீக்கு
 24. அன்புள்ள வலைச்சித்தரே!

  அந்த வீரத்தாய்க்கு வீரவணக்கம். சுய நலமில்லாத பொதுநலம் அது.
  காந்தியின் ‘சத்தியசேதனை’ அனைவரும் படிக்கவேண்டிய அருமையான நூல்.
  காந்தியை போற்றுவாரும் உண்டு... தூற்றுவாரும் உண்டு.
  மகாத்மா அவரது பிள்ளைகளின் நலனில்கூட அக்கறையில்லாமல் நாட்டைப்பற்றியே எண்ணி வாழ்ந்து மறைந்திட்ட மகான்!

  ‘வாழ்கநீ; எம்மான், இந்த வையத்து நாட்டிலெல்லாம்
  தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
  பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
  வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்; வாழ்க!’

  நன்றி.
  த.ம.13

  பதிலளிநீக்கு
 25. சுயநலம் இல்லாதவர்கள் வாங்கித்தந்த சுதந்திரம்சுயநலவாதிகளினால் சீரழியுது.அழகான பாடல்கள்

  பதிலளிநீக்கு
 26. வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
  மற்றைய எல்லாம் பிற.

  எனும் வள்ளுவப்பெருந்தகையின் வாய்மொழி நினைவுக்கு வருகிறது.

  அப்பெண் தனது ஒரு உறுதியின் வாயிலாய்
  காந்திஜியின் சரித்திரத்திலே இடம் பிடித்து விட்டாளே !!

  வாய்ச் சொல்லில் வீரரடி என்றில்லாமல்
  வழி காட்டியாய் அமர்ந்துவிடாரே!!

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 27. அப்பெண்ணின் செயல் மெய்சிலிர்க்க வைத்தது.

  குடியரசு தின நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 28. குடியரசு தினத்தில் அருமையான நினைவுகூறல். அன்று நடந்ததுதான் போராட்டம். இன்று நடப்பது...அதனுடன் இதனை ஒப்புநோக்கவே முடியாது.

  பதிலளிநீக்கு
 29. வீரத்தாய் யாரென்றே தெரியவில்லை அல்லவா? சுயநலமில்லாதப் பொதுநலம்! வீரத்தாய்க்கு வணக்கங்களும் பகிர்ந்த உங்களுக்கு நன்றியும் அண்ணா

  பதிலளிநீக்கு
 30. அடடா அருமை...
  உங்கள் பெரும்பாண்மை பின்னூடங்கள் போலவே உங்களுக்கும் போட்டுவிட காத்துக்கொண்டே இருக்கிறேன்...

  நீங்கள் இப்படி எழுதினால் நான் எப்படி எளிதில் சொல்லிவிட்டுப் போகமுடியும் அருமை என..

  எப்போதேனும் எழுதினாலும் ..யோசிக்க வைத்து விடுகின்றீர்கள் டி டி...

  உங்களுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் வலைச்சித்தரே...

  பதிலளிநீக்கு
 31. குடியரசு தின நல் வாழ்த்துகள். நாம் தெரிந்து கொண்டிராத பல தியாகிகள் இருக்காங்க. அவர்களுக்கு வணக்கம்

  பதிலளிநீக்கு
 32. குடியரசு நாள் வாழ்த்து ! பொருத்தமான சமயத்தில் பெயர் தெரியாத ஓர் அற்புதத் தியாகியைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள் உலக வரலாற்றின் ஏடுகளில் பெயரளவில்கூட இடம் பெறாமற் பொன எண்ணற்ற தியாகிகளின் நினைவைப் போற்றுவோம் ! பதிவுக்குப் பாராட்டு .

  பதிலளிநீக்கு
 33. பொருத்தமான சமயத்தில் பெயர் தெரியாத ஓர் அற்புதத் தியாகியைப் பற்றி எழுதியமைக்குப் பாராட்டு . குடியரசு நாள் வாழ்த்து .

  பதிலளிநீக்கு
 34. இந்தியக் குடியரசு தினத்தன்று தேசபக்தியைக் கிளறும் பதிவு. குடியரசு தின நல்வாழ்த்துக்கள் நண்பரே.
  அப்போதிருந்த நம் தலைவர்களும் தேசத்தொண்டர்களும், தலைவர் யார், தொண்டர் யார் எனத் தெரியாத அளவுக்கு தேசம்.. தேசம் என மனமுழுக்க நிறைந்து வாழ்ந்தார்கள்.தேசத்திற்காக அர்ப்பணிப்பு செய்தார்கள். அவர்கள் செய்த உயிர்த்தியாகம், வாழ்வுத்தியாகம் வீணாகிவிடக்கூடாதே என்கிற கவலை மனதை அரிக்கிறது- குறிப்பாக இப்போது அரசியலை ஒரு ஈனத்தொழிலாய்ச் செய்து பெரும்பணம் பண்ணும், நாடெங்கும் நிரம்பிவழியும் அரசியல்வியாதிகள் எனும் கொள்ளைக்கூட்டத்தை நினைத்தால்..

  பதிலளிநீக்கு
 35. வணக்கம்
  அண்ணா

  அற்புத விளக்கம் கொடுத்துள்ளீர்கள் இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
  த.ம 16
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 36. தென் ஆப்பிரிக்காவில் பெயர் தெரியாத பெண்ணின் கதை இதுவரை அறியாதது. பெயர் தெரியாமல் இருந்ததால்தானோ என்னவோ பரவலாகப் பேசப்படவில்லை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 37. ​​உலகமே மகாத்மா என்று மெச்சுமளவக்கு, உள்ளம் நெகிழ வைக்கும் பணிகள் செய்தவரையே, நெகிழ வைத்த சம்பவம் சிறப்பு. வாழ்த்துக்கள் !

  பதிலளிநீக்கு
 38. தெரியாத தகவல்,, நன்றி டிடி சார், அருமையான பகிர்வு,

  பதிலளிநீக்கு
 39. அருமையான பகிர்வு அண்ணா...
  அந்த தாயை தலை வணங்குவோம்...
  ஜெய்ஹிந்த்...

  பதிலளிநீக்கு
 40. தனபாலன் சார்

  காந்தியின் வாழ்க்கையில் இப்படி ஒரு பெண் அவரைச் சந்தித்திருக்கிறாள் என்ற செய்தி நான் இதுவரை கேள்விப்படாத ஒன்று . இப்படி வாங்கிய சுதந்திரம் எவ்வளவு கேலிக்கூத்தாகி விட்டது. அந்தப் பெண்ணின் தியாகம் நாட்டுணர்வைத் தூண்டியது. செய்திக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 41. நான் மொபைலில்தான் நெட் யூஸ்பண்ரேன். கம்ப்யூட்டரில் வருவது போல வலைப்பூவும் ஜி.மெயில் இன்பாக்சும் ஸைடு பார் வசதியுடன் மொபைலில் பார்க்கமுடியுமா? என் மெயிலுக்கு தகவல் சொல்ல முடியுமா?
  ramgobal70@gmail.com.
  நன்றி

  பதிலளிநீக்கு
 42. இன்றைய நாடு இருக்கும் சூழ்நிலையில் தன் மனதையும் உடம்பையும் கூட பேணிக்காக்க துப்பில்லாததால் தான், அவைகளை மறந்து சீரழிந்து போகிறோமோ...?///
  உண்மை. என்று பெரும்பாலனவரிடத்தே பொதுநலமில்லை என்று சொல்லலாமே தவிர சுயநலவாதிகள் என்று சொல்லிவிட முடியாது

  பதிலளிநீக்கு
 43. இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

  சித்திரையாள் வருகை
  இத்தரையில் எல்லோரும்
  எல்லாமும் பெற்று வாழ
  எல்லோருக்கும் வழிகிட்டுமென
  புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிரும்
  இத்தால் உங்கள் யாழ்பாவாணன்

  பதிலளிநீக்கு
 44. அன்பின் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!..

  பதிலளிநீக்கு
 45. தனிமனித பண்புகளும், பொதுநல உணர்வும் நாளுக்கு நாள் மங்கிக்கொண்டு வருகிறது என்பதுதான் வருத்தமான உண்மை ! பேரிடர் சமயங்களில் தோன்றும் ஒற்றுமை கூட வெள்ளத்தின் வேகம் போலவே சீக்கிரமாய் வடிந்துவிடுகிறது...

  இதுவும் மாறும் !

  நன்றி
  சாமானியன்

  எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
  http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

  பதிலளிநீக்கு
 46. வாழ்த்துகள் நண்பர் தனபால் அவர்களேஅற்புதமானப் பதிவு நண்பர் தனபால் அவர்களே!

  இந்திய சரித்திரம் (சுயநலமின்றி திரித்து,இடைச்செருகல் இல்லாமல் எழுதப்பட்டது)பல வியக்கத்தக்க,விந்தையான உணர்வு பூரணமான நிகழ்வுகளைக் கொண்டது என்பதற்கு தங்களது பதிவு ஒரு உதாரணம்.

  ஒரு கரும் பச்சை சீருடை அணிந்த மனிதரை வாழ்நாளில் ஒரு முறைகூட சந்திக்காமல் இராணுவ அதிகாரியான எனது "மண் மேடுகள்" நாவலில் இப்படி எழுதி இருக்கிறேன்,


  பண்டைய தமிழகத்தில் போர்மேகம் சூழ்ந்த ஒரு நிகழ்வு.எதிரி நாட்டு மன்னன் நமது நாட்டை முற்றுகை யிட்டுருக்கிறான் என்ற நிலையில் வீரம் செறிந்த நாட்டுப்பற்றுடைய இளைஞர்கள் களம்காணத் துடிக்கிறார்கள்.இளம் மனைவிமார்கள் தங்கள் கணவன் தனது வீரத்தை நிரூபிக்க ஊக்குவிக்கிறார்கள்.

  படைத் தேர்வுக்குப் போகும் தனது கணவனை ஆரத்தி எடுத்து வீர திலகமிட்டு வாழ்த்தி அனுப்புகிறாள் ஒரு இளம் மனைவி.அவன் போர்ப்படையில் சேர்ந்து விட்டான் ன்ற மகிழ்வான செய்திக்காகக் காத்திருக்கிறாள்.
  மாலையில் சோர்வோடு வீடு திரும்புகிறான் அவன்.இடையில் வாள் தொங்க தலை குனித்து குனிந்து வருகிறான்.என்ன நடந்தது என்கிறாள் மனைவி.
  பலவிதப் போர்த் தேர்வுகளிலும் வெற்றிபெற்று படைத்தலைவன் நேர்காணலில் திருமணம் ஆகிவிட்டதா என்று கேட்டார்கள்.ஆம் என்றேன்.திருமணமான ஒருவன் முழுமையான ஈடுபாட்டுடன் போராட மாட்டான் என்று நிராகரித்து விட்டார்கள் என்கிறான்.
  அப்படியா என்று கர்ஜித்த அவள் அவன் இடையில் தொங்கிகொண்டிருந்த வாளை உருவி தன நெஞ்சில் பாய்ச்சிக்கொண்டு "இப்பொழுது போய் மனைவி இல்லை என்று

  பதிலளிநீக்கு
 47. பல புதிய வசதிகளுடன், புதிய வேகத்துடன், புதிய‌ தமிழன் திரட்டி சுலபமாக பதிவுகளை இணைக்கலாம் (http://www.tamiln.in)

  பதிலளிநீக்கு
 48. அனைவருக்கும் வணக்கம்

  சுகந்திர தினத்தை முன்னிட்டு புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  பதிலளிநீக்கு
 49. அனைவருக்கும் வணக்கம்

  புதியதாக உதயமாயிருக்கும் (superdealcoupon.com)நமது தளம் .இந்த தளத்தின் சிறப்பு இந்தியாவில் முதன்மையான ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் மொபைல் ரீசார்ஜ் ஆகிய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆபர் பற்றிய தகவல்களை உங்களிடம் பகிர்ந்து உங்கள் பணத்தை யும் உங்கள் நேரத்தையும் சேமிப்பதே எங்கள் கொள்கை .

  நன்றி

  நமது தளத்தை பார்க்க Superdealcoupon

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.