எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?
அனைவருக்கும் வணக்கம்... நீண்ட மாதங்களுக்குப் பின் வலையில்... மகிழ்ச்சி...! சிறிதாக ஆரம்பித்த ஜவுளி வியாபாரம், இன்று ஓரளவு திருப்திகரமாக உள்ளது... ஊரில் இருப்பது குறைவு... அதனால் இணையம் வர முடியவில்லை... ஆனால், எனது கைப்பேசியில் நம்ம Feedly-ரீடர் மூலம் அன்பர்களின் பதிவுகளை வசிப்பதுண்டு... தீபத் திருநாள் முடிந்து சிறிது ஓய்வு... இதோ இன்னும் பத்தோ / பதினைந்தோ நாட்கள் ஊரில்... மீண்டும் வியா'பார' பயணம் ஆரம்பம்...! வியாபார ஆரம்பத்தில் ஊக்கம், உற்சாகம் தந்து, "ம்... மேலும் தொடருங்கள்" என்று மகிழ்வுடன் வாழ்த்தும் அனைத்து வலையுலக அன்பர்களுக்கும் மற்றும் தொடர்பு கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் பல...
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் : தங்களின் வலையில் எத்தகைய பிரச்சனை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்... நேரம் கிடைக்கும் போது உடனே சரி செய்து கொடுக்கிறேன்... நன்றி...
(Mail id : dindiguldhanabalan@yahoo.com)
அன்பு நண்பர் டி.என்.முரளிதரன் அவர்கள் திண்டுக்கல் தனபாலனுக்கு என்று ஒரு மடலே (பதிவே) எழுதி விட்டார்... அவருக்கும் நன்றிகள் பல... இந்த பதிவின் தலைப்பை ஒரு கணம் நினைக்க வைத்தது அவரது பதிவு...!
சரி விசயத்திற்கு வருவோம்... "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?"-ன்னு நம்ம ஐயன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? ஒவ்வொரு செயலிலும் இப்பதிவின் தலைப்பைச் சிந்திக்கிறவரின் செயல்கள் அனைத்தும் சிறப்படையும்... பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் தன் வாழ்வில், எந்த வயதிலாவது ஒரு முறை இந்தப் "பதிவின் தலைப்பு" பற்றி சிந்தனையும், பிறகு வாழ்வில் மாற்றமும் வரும்... வரலாம்... வர வேண்டும்...! வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது...! வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...! அது எப்படியென்றால்...
எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா... நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா... பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா2 இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா...! சட்டி சுட்டதடா கை விட்டதடா... புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா2 நாலும் நடந்து முடிந்த பின்னால் நல்லது கெட்டது தெரிந்ததடா...! ⟪ © ஆலயமணி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫
இதுவரை சந்தித்த, வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களைப் பற்றிய எனது அனுபவத்தில்... குறளின் குரலாக :- வாசிக்க... ரசிக்க... கேட்க...!
குறிப்பு : கில்லர்ஜிக்காக கடவுளைக் கண்டேன் என்கிற பதிவு எழுதினேன்... அந்த பதிவில், குறளின் சிறிய விளக்கத்தையும், குறளுக்கேற்ப சிறு திரைப்படப் பாடல் வரியும் கொடுத்திருந்தேன்... அந்த 10 குறள்களும் எந்த அதிகாரத்தில் உள்ளது என்றும் கேட்டிருந்தேன்...
அதிகாரத்தைச் சரியாகக் கணித்த திருமிகு. நாகேந்திர பாரதி ഽ திருமிகு. வே.நடனசபாபதி மற்றும் திருமிகு. தில்லைஅகத்து கீதா மூவருக்கும் பாராட்டுகள்... அதிகாரத்தைத் தேடின திருமிகு. கோமதி அரசு ഽ திருமிகு. ராஜலக்ஷ்மி பரமசிவம்ഽமற்றும் திருமிகு. கீத மஞ்சரி மூவருக்கும் நன்றிகள் பல...
இதோ முழுமையான குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப உங்களை அசர வைத்து ஆச்சரியப்படுத்தும் திரைப்படப் பாடல் வரிகளை, பாடலின் ஆரம்பத்தில் உள்ள பிளேரை சொடுக்கிக் கேட்கலாம்... (பாடல் தேடல் : பல மாதங்கள்)
அதிகாரம் 101 - நன்றியில் செல்வம்...(1001-1005)
ஆசைன்னா ஆசை... அவ்வளவு பேராசை...! இருக்கிற பரண் முழுதும் நிரம்பினாலும் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைச்சிக்கிட்டே இருக்கார் ஒருத்தர்... கஞ்சத்தனத்தால் யாருக்கும் கொடுக்க மனசே இல்லை... அடக் கொடுமை என்னான்னா, தானும் அனுபவிக்காம... ம்... அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரண்டும் ஒன்று தான்...!
மூங்கிலிலே முத்துப்பல்லக்கு... அதில் ஏறிச் செல்லச் சொத்து எதற்கு...? கொள்ளியிட்டால் வேகும் எலும்பு... அதில் கொண்டு செல்ல என்ன இருக்கு...? // குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன...? ரோசாப்பூ என்ன...? செவிடான ரசிகனுக்குக் கல்யாணி என்ன...? காம்போதி என்ன...? பூ மணக்காது... குழல் மணக்காது... உயிர் இருக்காது... உடல் தேடும் காடு...! ⟪ © நெஞ்சில் ஒரு ராகம் ✍ டி.ராஜேந்தர் ♫ டி.ராஜேந்தர் 🎤 T.M.சௌந்தரராஜன், P.S.சசிரேகா @ 1982 ⟫
இரண்டும் ஒன்று தான்னு தெரிய வாய்ப்பில்லை... ஏன்னா அசையும் சொத்து, அசையா சொத்துன்னு மயக்கத்திலே இருக்கார்... என் கிட்டே இல்லாத பணமா...? பொருளா...? இதை வைச்சிகிட்டு எதையும் சாதிக்க முடியும்ன்னு, உறவினர் தேவைக்கும் கூட எந்த உதவியும் செய்யாதவரை சுயநலவாதி என்பதா...? இல்லை பணப்பேய் என்பதா...?
தாயின் பெருமை மறக்கின்றான்... தன்னல சேற்றில் விழுகின்றான்... பேய் போல் பணத்தைக் காக்கின்றான்... பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்... ஒருவன் மனது ஒன்பதடா - அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா... உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா - அதில் உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா... ⟪ © தர்மம் தலை காக்கும் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫
"எப்படி வேணாலும் திட்டுங்க... கவலை கிடையாது... எனக்கொரு புகழும் வேண்டாம்... எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம்"ன்னு, மத்தவங்களை விடப் பணமும் பொருளும் சேர்க்கிறது ஒன்றிலேயே குறியா இருப்பவர், இந்த பூமியிலே பிறந்து வாழ்வது... இந்த பூமிக்கு பாரம்...!
சொந்தமில்லை பந்தமில்லை ஏறி மிதிக்கும் - தோள் மீது ஏறி நின்று காதை கடிக்கும் - பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும் - படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும் - பணத்தாலே நல்ல உள்ளம் பேயானது - குணத்தாலே அது மீண்டும் தாயானது... பொன்னுலகில் நீராடினேன், கண்ணிழந்து கொண்டாடினேன், மன்னனுக்கும் மேலாகினேன். தன்னந்தனி ஆளாகினேன், இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன் - பணம் பணம் பணம் ஆ... பணம் என்னடா பணம் பணம் - குணம் தானடா நிரந்தரம்... ⟪ © அந்தமான் காதலி ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1978 ⟫
இப்படி பூமிக்கு பாரமா, ஒருத்தருக்கும் ஒரு பைசா கூட பிரயோசனமில்லா வாழ்ந்து முடிந்த ஒருவர், தான் செத்த பின்னாடி "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?"-ன்னு, எதனை நினைப்பாங்க...?
ஊசிமுனை கூட வருமா உன் கூட...? உன் கணக்கைப் பார்க்கிறப்போ - சில்லறையா மிஞ்சும்...? வெறும் கல்லறைதான் மிஞ்சும்...! இருந்தா மரமாகும், விழுந்தா விறகாகும்... இந்தக் கதை நீ அறிஞ்சும் ஏன்டா இங்குச் சண்டை...? இதில் என்னத்த நீ கண்டே...? ஊரை விட்டுப் போகுறப்போ பெயரு ரொம்ப கெட்டுயிருந்தா, யாரு உன்னைத் தூக்க வருவா...? நல்ல பெயரு இங்கே வாங்கிக்கத்தான் யாரும் அழுவா...? ⟪ © வீரப்பதக்கம் ✍ வாலி ♫ தேவா 🎤 மலேசியா வாசுதேவன் @ 1994 ⟫
நினைக்க எதுவுமில்லை...! தன் தேவைக்கு தன்னிடம் இருக்கிற பணத்தைக் கொண்டு அனுபவிக்காத, தேவைப்படுவோர்க்குக் கொடுத்து மகிழாதவரிடம், கோடி கோடியாகப் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று தான்...!
ஆடிய ஆட்டம் என்ன...? பேசிய வார்த்தை என்ன...? தேடிய செல்வம் என்ன...? திரண்டதோர் சுற்றம் என்ன...? கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...? // ஆடும் வரை ஆட்டம், ஆயிரத்தில் நாட்டம்2 கூடி வரும் கூட்டம் கொள்ளி வரை வருமா...? வீடு வரை உறவு... வீதி வரை மனைவி... காடு வரை பிள்ளை... கடைசி வரை யாரோ...? கடைசி வரை யாரோ...? ⟪ © பாத காணிக்கை ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫
⟪ © வாழ்வே மாயம் ✍ வாலி ♫ கங்கை அமரன் 🎤 K.J.யேசுதாஸ் @ 1982 ⟫ பிறந்தாலும் பாலை ஊற்றுவார் - இங்கே, இறந்தாலும் பாலை ஊற்றுவார்... உண்டாவது ரெண்டானதால், ஊர்போவது நாலாலதான்... கருவோடு வந்தது - தெருவோடு போவது2 மெய் என்று மேனியை யார் சொன்னது...? வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்... தரை மீது காணும் யாவும்... தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா... யாரோடு யார் வந்தது...? நாம் போகும்போது யாரோடு யார் செல்வது...?
இதற்குத் தீர்வு தான் என்ன...? அடுத்த பதிவில்...! PLAY பட்டனைச் சொடுக்கிப் பாடல் வரிகளைக் கேட்டவர்களுக்கும் நன்றி... தங்களின் கருத்து என்ன...?
அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் : தங்களின் வலையில் எத்தகைய பிரச்சனை என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்... நேரம் கிடைக்கும் போது உடனே சரி செய்து கொடுக்கிறேன்... நன்றி...
அன்பு நண்பர் டி.என்.முரளிதரன் அவர்கள் திண்டுக்கல் தனபாலனுக்கு என்று ஒரு மடலே (பதிவே) எழுதி விட்டார்... அவருக்கும் நன்றிகள் பல... இந்த பதிவின் தலைப்பை ஒரு கணம் நினைக்க வைத்தது அவரது பதிவு...!
சரி விசயத்திற்கு வருவோம்... "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?"-ன்னு நம்ம ஐயன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? ஒவ்வொரு செயலிலும் இப்பதிவின் தலைப்பைச் சிந்திக்கிறவரின் செயல்கள் அனைத்தும் சிறப்படையும்... பொதுவாக அனைத்து மனிதர்களுக்கும் தன் வாழ்வில், எந்த வயதிலாவது ஒரு முறை இந்தப் "பதிவின் தலைப்பு" பற்றி சிந்தனையும், பிறகு வாழ்வில் மாற்றமும் வரும்... வரலாம்... வர வேண்டும்...! வயது = ஒரு எண்... பலருக்கும் கடைசி படுக்கையில் - வரும்... ஆனா வராது...! வெகு சிலருக்கு விரைவிலேயே... அது அவரவர் பெற்ற அனுபவமும், மனப்பக்குவமும் பொறுத்து...! அது எப்படியென்றால்...
இதுவரை சந்தித்த, வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களைப் பற்றிய எனது அனுபவத்தில்... குறளின் குரலாக :- வாசிக்க... ரசிக்க... கேட்க...!
குறிப்பு : கில்லர்ஜிக்காக கடவுளைக் கண்டேன் என்கிற பதிவு எழுதினேன்... அந்த பதிவில், குறளின் சிறிய விளக்கத்தையும், குறளுக்கேற்ப சிறு திரைப்படப் பாடல் வரியும் கொடுத்திருந்தேன்... அந்த 10 குறள்களும் எந்த அதிகாரத்தில் உள்ளது என்றும் கேட்டிருந்தேன்...
அதிகாரத்தைச் சரியாகக் கணித்த திருமிகு. நாகேந்திர பாரதி ഽ திருமிகு. வே.நடனசபாபதி மற்றும் திருமிகு. தில்லைஅகத்து கீதா மூவருக்கும் பாராட்டுகள்... அதிகாரத்தைத் தேடின திருமிகு. கோமதி அரசு ഽ திருமிகு. ராஜலக்ஷ்மி பரமசிவம்ഽமற்றும் திருமிகு. கீத மஞ்சரி மூவருக்கும் நன்றிகள் பல...
இதோ முழுமையான குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப உங்களை அசர வைத்து ஆச்சரியப்படுத்தும் திரைப்படப் பாடல் வரிகளை, பாடலின் ஆரம்பத்தில் உள்ள பிளேரை சொடுக்கிக் கேட்கலாம்... (பாடல் தேடல் : பல மாதங்கள்)
ஆசைன்னா ஆசை... அவ்வளவு பேராசை...! இருக்கிற பரண் முழுதும் நிரம்பினாலும் வீடு நிறையப் பெரும்பொருள் சேர்த்து வைச்சிக்கிட்டே இருக்கார் ஒருத்தர்... கஞ்சத்தனத்தால் யாருக்கும் கொடுக்க மனசே இல்லை... அடக் கொடுமை என்னான்னா, தானும் அனுபவிக்காம... ம்... அவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும், இரண்டும் ஒன்று தான்...!
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல் (1001)
செத்தான் செயக்கிடந்தது இல் (1001)
இரண்டும் ஒன்று தான்னு தெரிய வாய்ப்பில்லை... ஏன்னா அசையும் சொத்து, அசையா சொத்துன்னு மயக்கத்திலே இருக்கார்... என் கிட்டே இல்லாத பணமா...? பொருளா...? இதை வைச்சிகிட்டு எதையும் சாதிக்க முடியும்ன்னு, உறவினர் தேவைக்கும் கூட எந்த உதவியும் செய்யாதவரை சுயநலவாதி என்பதா...? இல்லை பணப்பேய் என்பதா...?
பொருளானாம் எல்லாம்என்று ஈயாது இவறும்
மருளானா மாணாப் பிறப்பு (1002)
மருளானா மாணாப் பிறப்பு (1002)
"எப்படி வேணாலும் திட்டுங்க... கவலை கிடையாது... எனக்கொரு புகழும் வேண்டாம்... எந்த மண்ணாங்கட்டியும் வேண்டாம்"ன்னு, மத்தவங்களை விடப் பணமும் பொருளும் சேர்க்கிறது ஒன்றிலேயே குறியா இருப்பவர், இந்த பூமியிலே பிறந்து வாழ்வது... இந்த பூமிக்கு பாரம்...!
ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை (1003)
தோற்றம் நிலக்குப் பொறை (1003)
இப்படி பூமிக்கு பாரமா, ஒருத்தருக்கும் ஒரு பைசா கூட பிரயோசனமில்லா வாழ்ந்து முடிந்த ஒருவர், தான் செத்த பின்னாடி "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?"-ன்னு, எதனை நினைப்பாங்க...?
எச்சம்என்று என்எண்ணும் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன் (1004)
நச்சப் படாஅ தவன் (1004)
நினைக்க எதுவுமில்லை...! தன் தேவைக்கு தன்னிடம் இருக்கிற பணத்தைக் கொண்டு அனுபவிக்காத, தேவைப்படுவோர்க்குக் கொடுத்து மகிழாதவரிடம், கோடி கோடியாகப் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒன்று தான்...!
கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண் டாயினும் இல் (1005)
கோடிஉண் டாயினும் இல் (1005)
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு. மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்....
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப்பின் பதிவு காணும் DD... வருக... வருக.. முரளிதரனுக்கு பாராட்டுகளும், நன்றியும்! பதிவு வழக்கமான ஜோருடன் தொடக்கம். ஆனால் DD.. கறுப்புப் பட்டைதான் தெரிகிறது. Play Button இல்லையே...
பதிலளிநீக்குநன்றி... மாற்றம் செய்து உள்ளேன்... பதிவின் இணைப்பில் (URL) https://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.html-என்று இருந்தால் ப்ளேயர் தெரியவில்லை... அதனால் URL ஆரம்பத்தில் உள்ள https:// என்பதில் s-ஐ எடுத்து விட்டு என்டர் தட்டி, பதிவை பாருங்கள்... இதோ கீழே உள்ளது போல் / அல்லது கீழே உள்ள இணைப்பை சொடுக்குங்கள்...
நீக்குhttp://dindiguldhanabalan.blogspot.com/2016/11/End-of-Life-Part-1.html
கருத்து பதிய வரும் அனைவரும் இதனை கவனிக்கவும்... நன்றி...
நான் மறுபடியும் வந்து பார்த்து விட்டேன். எனக்கு அங்கு கறுப்புக் கட்டங்கள் தெரிகின்றனவே தவிர, பிளேயர் தெரியவில்லை. மற்றவர்களுக்குத் தெரிகிறதா என்று அவர்கள்தான் சொல்ல வேண்டும். எதற்கும் பயர்பாக்ஸை விடுத்து க்ரோமிலும் திறந்து பார்க்கிறேன். சில சமயம் கில்லர்ஜியின் வீடியோக்கள் அப்படிப் பார்ப்பது உண்டு.
நீக்குஆம்! க்ரோம் பிரவுசரில் பிளேயர் தெரிகிறது. பாடலும் வருகிறது. மொஸில்லாவில் வரவில்லை (எனக்கு)
நீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்டதில் மகிழ்ச்சி. வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் மேன்மேலும் முன்னேறவும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பின் உங்களைக் கண்டதில் மகிழ்ச்சி. உங்களைத் தூண்டி களம் இறக்கவைத்த திரு முரளீதரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி. அவர் ஆவலை வெளிப்படுத்தியபின் அது எங்களது ஆவலாகவே உணர்ந்த நீங்கள் வழக்கம்போல் உங்கள் பாணியில் வந்து அசத்திவிட்டீர்கள். தொடருங்கள். தொடர்கிறோம்.
பதிலளிநீக்குநீண்ண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு தங்களை வலையில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி ஐயா
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்
தாங்கள் என்றும் வலைச்சித்தராகவே நினைக்கப் படுவீர்கள்
நெடுநாட்களுக்கப்புறம் -
பதிலளிநீக்குதங்களின் பதிவு கண்டு மகிழ்ச்சி...
கோல நிலவோடு கலந்த குளிர்த் தென்றலாக
தங்களுடைய பதிவுகள் தொடர்வதாக..
வாழ்க நலம்!..
வணக்கம் ஜி இடைவெளியை விட்டு வெளிவந்தமை கண்டு மகிழ்ச்சி தொடரட்டும் தங்களது பதிவு தொழில் முக்கியமே... வலையுலகையும் மனதில் வைத்து அடிக்கடி பதிவு தாருங்கள்.
பதிலளிநீக்குபதிவு வழக்கம்போல பாடல்களுடன் அட்டகாசம்
தொடர்வோம் நன்றி
வாங்கய்யா..வாங்க...
பதிலளிநீக்குதிரும்பவும் வலையுலகத்திற்கு வந்தமைக்கு நன்றி! வழக்கம்போல் திருக்குறளை இணைத்து திரைப்படப் பாடல்களை பதிவிற்கு சுவை கூட்டியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்! Play button இல்லை. எனவே பாடல்களை கேட்டு இரசிக்க இயலவில்லை.
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பின்னர் கண்டதில் மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமுதலில் குடும்பம் அதன் பின் வியாபாரம் அதன் பின்தான் மற்ற எல்லாம்.
குடும்பம் மற்றும் வியாபாரம் சிறப்பாக நடைபெறவும் மேன்மேலும் முன்னேறவும் வாழ்த்துகள்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்த்ததில் சந்தோஷம். வியாபாரம் சிறப்புற வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குமீண்டும் தங்களை பதிவின் மூலம் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்களுக்கு அழைப்பு விடுத்து எழுத தூண்டுகோலாய் அமைந்த நண்பர் முரளிதரன் அவர்களுக்கும் நன்றி.
பதிலளிநீக்குவழக்கம்போல் ஜோரான பதிவு. பல புதுமைகள் தெரிகின்றன. என்னதான் வேலை இருந்தாலும் உங்கள் மீது நேசம் வைத்திருக்கும் வலைப்பதிவர்களுக்காக கொஞ்ச நேரம் ஒதுக்கி வலைப்பக்கம் வாருங்கள். கருத்திடுங்கள். தங்களின் பின்னூட்டம் இல்லாமல் பதிவுகள் வெறுமையாக காட்சி தருகின்றன.
களத்தில் இறங்குங்கள். இணைந்து பயணிப்போம்..!
த ம 5
படித்தேன். கருத்தை உள் வாங்க முடியவில்லை. மூளை மிகவும் துருப்பிடித்து விட்டது. துரு நீக்க கிரசின் கிடைப்பதில்லை.
பதிலளிநீக்குமீண்டும் வருக நல்ல பதிவுகள் தருக
பதிலளிநீக்குWelcome back bro. Expecting more posts from ur end.
பதிலளிநீக்குஉடல் நலம் மன நலம் பத்திரம். வாழ்த்துகள் தனபாலன்.
பதிலளிநீக்குarumai anna ungal viyabaram selikka valthukkal enathu web site konjam matri amaikkalam enru ninaikiren thangal karuththu enna anna itharkum thangal thaan uthavendum
பதிலளிநீக்குஎதை வெச்சி என்னை நினைப்பாங்க . பதிவுகள் எழுத விஷயங்கள் தேடி அலையும் பதிவர்களிடையே திருக்குறளும் திரை இசைப் பாடல்களையும் கலந்து கட்டி பதிவுகள் எழுதுவதி வல்லவர் என்று உங்கள் பதிவுகள் என் டாஷ் போர்டில் வரும்
பதிலளிநீக்குதங்களுக்கு வலைப் பக்கம் வருவதில் பல சிரமங்கள் இருந்தாலும் வந்தமைக்கு நன்றி !
பதிலளிநீக்குஅனைவருக்கும் உதவுகிறேன் என்று தலைப்புக்கு நீங்களே உதாரணம் ஆகிவிட்டீர்கள் ,மீண்டும் நன்றி :)
பதிவின் தலைப்பு, ராபின் ஷர்மா எழுதிய who will cry when you die? என்ற நூலின் தலைப்பை ஒத்திருக்கிறது. வெகு நாள் கழித்து உங்க பதிவை காண்பது மகிழ்ச்சி.
பதிலளிநீக்குஎன்ன நண்பரே நலமா? வியாபாரம் எப்படி போகுது? பொழப்ப முதல்ல பாருன்க்க சாமி
பதிலளிநீக்குநல்ல பதிவு. நன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவைக் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது.என்னையும் உங்கள் பதிவில் குறிப்பிடத்தான் வாயிலாக என் பதிவிற்கு இணைப்புக் கொடுத்து என்னை கவுரவப்படுத்தி விட்டீர்கள் தனபாலன் சார்.
பதிலளிநீக்குமிக்கநன்றி.
உங்கள் வியாபாரம் மேம்ன்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்கள்.
பி.கு. 'திருமதி' என்று என்னை அழைத்தால் போதுமே ! 'திருமிகு' அடை மொழிக்கு நான் தகுதியானவள் இல்லை சார்.
தங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்
பதிலளிநீக்குடி டி மறுபடியும் வலைப்பக்கம் வந்தது அறிய மிக்க மகிழ்ச்சி உங்கள் வியாபாரம் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமீள்வருகைக்கு நன்றி DD.
பதிலளிநீக்குநான் ஒரு பழம்பாடல் பித்தன். உங்கள் பதிவுகளில் தென்படும் இனிய, ஆனால் நினைவைவிட்டு விலகியிருந்த பாடல்வரிகள் மகிழ்ச்சியூட்டுகின்றன; செய்கிற காரியத்தை சற்றே நிறுத்திவிட்டு பாடலை முணுமுணுக்கவைக்கின்றன.
வணிகம் செழிக்க வாழ்த்துக்கள். வலையிலும் விழுந்திருங்கள் அவ்வப்போது!
மிக மகிழ்ச்சி சகோதரா.
பதிலளிநீக்குதங்கள்தொழில் முன்னேற வாழ்த்துகள்.
(தங்கள் வலைக்கு வந்தேன் பழைய இடுகை இருந்தது.)
வேதா. இலங்காதிலகம்.
வெல்கம் பேக் சகோ. அருமையான திரைப்பாடல்களும் திருக்குறளும் கைகோர்த்து வலம் வருகின்றன. பாலா சார் சொன்னதையும் செந்தில் சகோ சொன்னதையும் வழிமொழிகிறேன். தொடருங்கள்.
பதிலளிநீக்குவணக்கம் தனபாலன் மீண்டும் அதே உற்சாகத்துடன் பாடல்கள், திருக்குறள் எல்லாம் கொடுத்து அசத்தி விட்டீர்கள்.
பதிலளிநீக்குஎன் சிறு முயற்சியை பாராட்டி என் பெயரை நினைவு படுத்தியமைக்கு நன்றி.
காலம் அறிந்து உதவி செய்தவர்களை காலத்துக்கும் நினைவு வைத்துக் கொள்வார்கள்.
வலையில் என்ன பிரச்சனை வந்தாலும் வலையுலக சித்தர் இருக்க கவலை என்ன? (எப்போதும் உங்களை நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.)
உங்களிடம் தான் உதவி கேட்போம். ஒரு சிலருக்கு என் பதிவு துள்ளி குதிக்கிறதாம், படிக்க முடியவில்லையாம்.
அதற்கு என்ன காரணம் என்று உதவுங்கள் . முன்பு இதே பிரச்சனை வந்த போது உதவி செய்தீர்கள்.
பாடல்களை கேட்டு மகிழ்ந்தேன்.
உங்கள் தொழிலில் மேலும் மேலும் சிறப்படைய வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்.
அருமை நண்பா!
பதிலளிநீக்குதென்றல்காற்று உன்னை உரசும் வேளை
http://www.ypvnpubs.com/2016/10/blog-post_23.html
என முரளியின் பதிவை நானும் அறிமுகம் செய்திருந்தேன்.
குடும்பம், குழந்தை வளர்ப்பு, தொழில் எல்லாம் முடிந்த பின் வலைப்பக்கம் வருக.
நீண்ட இடைவெளிக்குப் பின் வந்தாலும் குறள், பாடல் எனப் பதிவு சிறப்பாக உள்ளது.
வசதி வரும் போதெல்லாம் பதிவு இட்டு மகிழ்விக்க வாருங்கள்.
தங்கள் தொழில் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்!
யாழ்பாவாணன்
வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள் . தொழிலை பாதிக்கா வண்ணம் பிளாக்கைத் தொடரவும்
பதிலளிநீக்கும்...
பதிலளிநீக்குநல்வரவு, தனபாலன். பாடல்களும், குறள்களும் எத்தனை அழகாகப் பொருந்துகின்றன என்று வியப்பாக இருக்கிறது. சிலபாடல்கள் நான் அத்கம் கேட்டதில்லை.
பதிலளிநீக்குவியாபாரம் நன்கு செழிக்க நல்வாழ்த்துகள். அவ்வப்போது பதிவுலகிற்கும் வாருங்கள். உங்களைபோல பதிவுகள் போட இங்கு யார் இருக்கிறார்கள்?
நல்வாழ்த்துகள் மறுபடியும்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதாங்கள் தொடர்ந்து பதிவை தாருங்கள்
தாங்கள் தருவது அனைத்தும் உய்ர்வானவைகள்
அன்புடன்
ஆகா! எத்தனை நாட்கள் கழித்து மீண்டும் வந்திருக்கிறீர்கள்!! மிக்க மகிழ்ச்சி! ஆனால் தொடக்கத்தில், இன்னும் சில நாட்கள்தான் என்றும் அதன் பிறகு மீண்டும் வணிகப் பயணம் தொடங்கிவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளீர்களே! எனில், வணிகப் பயணம் தொடங்கிவிட்டால் மீண்டும் பதிவு எழுதுவதை நிறுத்தி விடுவீர்களா? ஏன் ஐயா, கைப்பேசியிலிருந்து கூடப் பதிவுகள் இடலாமே! பெரிதாக வேண்டா, மாதத்துக்கு ஒன்று வெளியிடுங்களேன்!
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பின் தங்களை சந்திக்கிறோம்!.. தங்கள் வருகை மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது... தங்கள் தொழில் சிறக்கவும், பதிவுலகில் தங்கள் பங்களிப்பு வெற்றிகரமாகத் தொடரவும் வாழ்த்துகிறேன்!.
பதிலளிநீக்குபசியோடு காத்திருந்தமைக்கு அருமையான குறள் விருந்து நன்றி தனபாலன் மீண்டும் பதிவுழுத தொடங்கியமைக்கு. தெரிந்தோ தெரியாமலோ எனது மடல் காரணமாக இருந்ததில் மகிழ்ச்சி. இனி வலைப்பூக்கள் களை கட்டும்
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் பதிவு படித்து மகிழ்ந்தேன்! இடைவெளிக்கு காரணம் ஜவுளிதான் என்றாலும் தொழில் முக்கியம் அல்லவா? உங்களின் ஜவுளி வியாபாரம் சிறக்க வாழ்த்துக்கள்! அவ்வப்போது ஒன்றிரண்டு பதிவுகள் எழுதி எங்களையும் மகிழ்வியுங்கள்! நன்றி!
பதிலளிநீக்குவருக
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
ஆஹா... அண்ணா வந்தாச்சா...?
பதிலளிநீக்குஉங்க எழுத்தை மீண்டும் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு...
மிகச் சிறப்பான பகிர்வு அண்ணா...
தொழில் முக்கியம்... இடையில் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள்.
நீண்ட இடைவெளியாக இருந்தாலும் எப்போதையும் விட சிறப்பாகவே திருக்குறட்பாக்களையும் திரையிசைப் பாடல்களையும் இயைபுடன் அமைத்த இப்பதிவு அருமையே.
பதிலளிநீக்குமகிழ்ச்சி, தங்கள் வருகையும் பதிவும் மகிழ்ச்சி அளிக்கிறது. வாழ்க! வளர்க!! வாழ்த்துகள்!!!
பதிலளிநீக்குஅருமை. அழகிய பதிவு. இது போன்ற பதிவுகளை இன்னும் தொடர்ச்சியாக எதிர்பார்க்கிறோம். வள்ளுவனின் குறள்களை மக்களை இலகுவில் சென்றடையும் திரைப்பாடல்களுடன் இணைத்து பதிவிட்டமை அருமையான சிந்தனை. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாங்க!தொழிலில் முன்னேற்றம் எனும் செய்தியே மகிழ்ச்சி! வெற்றி தொடரட்டும்.
பதிலளிநீக்குகுறளும் இசையும் கருத்தைக் கவர்ந்தன
பதிலளிநீக்குஐயா. வலையில் மீண்டும் தங்களைக் காண்பது உவப்பே! தொடர்கிறேன்.
வலைப்பதிவர் பலரது ஆவலைப் பூர்த்திசெய்தமைக்கு மிக்க நன்றி !வளரட்டும் தம் தொழில். பெருகட்டும் பொருளாராதம்.செழிக்கட்டும் நும் வாழ்க்கை.மகிழ்ச்சியில் மிளிரட்டும் வலைப்பத்திவுகள்!
பதிலளிநீக்குதனப்பால்,
பதிலளிநீக்குதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி , வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்.
பதிவு அருமை.
என்னை நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.
கோ
மகிழ்ச்சி, தங்கள் தொழில் சிறக்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஆஹா! உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. வியாபாரமும் நல்லவிதத்தில் நடப்பதறிந்து மகிழ்ச்சி. வழக்கம் போல் திருக்குறளையும் திரையிசைப்பாடல்களையும் இணைத்துப் பதிவு தந்து விட்டீர்கள். இடையிடையே நேரங்கிடைக்கும் போது வாருங்கள் தனபாலன்! தொழிலில் மேலும் முன்னேற வாழ்த்துகிறேன்!
பதிலளிநீக்குவாருங்கள் அய்யா, வணக்கம். நெடுநாள் கழித்து வந்த உங்கள் பதிவைச் சிலநாள் கழித்தே பார்க்கும் நிலை... ஆம்அய்யா! நம் பதிவர் “பெருநாழி” தமிழாசிரியர் சி.குருநாத சுந்தரம், (நமது பதிவர் விழாவில் பார்த்திருப்பீர்கள் மிகவும் பண்பான அன்பான அறிவானவர் இளைஞரும் கூட 45வயது) ஒரு விபத்தில் சிக்கி, 17நாள் மருத்துவ மனையிலிருந்து தீபாவளி அன்று காலை அகாலமரணம் அடைந்துவிட்டார்... அதிலிருந்து மீள இன்னும் சில நாள்கள் தேவை... எழுதுவேன். நீங்கள் எழுத வந்தது கண்டு மகிழ்ச்சி, தொடருங்கள்.
பதிலளிநீக்குதொழில் முன்னேற்றம் முக்கியம்!எப்போதும் உங்கள் சிரிப்பு வேண்டி வெட்டியான் ! தனிமரம்!
பதிலளிநீக்குமீண்டும் தங்கள் பதிவைக் காண்பதில் மகிழ்ச்சி ! வழக்கம்போல் அருமையான பதிவு...! "ஆடாத ஆட்டமெல்லாம்..போட்டவங்க மண்ணுக்குள்ள..போன கதை உனக்குத் தெரியுமா?" - என்ற பாடல் (படம்: மௌனம் பேசியதே) ஒன்றும் நினைவுக்கு வந்தது...! நன்றி !
பதிலளிநீக்குஅன்புள்ள தனபாலன்
பதிலளிநீக்குவணக்கம். உங்கள் பதிவுகளை எப்பவும் வாசிப்பதில் மனநிறைவு உண்டு. உங்களின் வணிகம் காரணமாக ஏற்பட்ட தாமதம் பற்றிக் கவலையில்லை. தொடர்ந்து எழுதுங்கள் அதற்குமுன்னதாக உங்களின் வியாபாரம் முக்கியமானது. காற்று உள்ளபோதே தூற்றிக்கொள் என்பதுபோல காலத்தில் இன்னும் பல வெற்றிகளை உங்கள் வாணிபத்தில் பெறவேண்டும். அத்தகைய அனுபவங்களையும் வலையில் அறியத் தாருங்கள். பல்வேறு இறுக்கமான பணிகளின் காரணமாக என்னால் முன்புபோல வலைப்பதிவுகளைப் படிப்பதும் எழுதுவதும் குறைந்துள்ளது. எனக்கு வருத்தமாக உள்ளது. நிறைய செய்திகளை இழக்கிறேன் அறிந்துகொள்வதில். என்றாலும் என்னுடைய பணிகள் முக்கியம். இடைவெளிகளை வென்று தொடர்ந்து வருவேன். மனதுக்குப்பிடித்த பதிவுகளை விட்டதை விடாது படித்து கருததுரைப்பேன். சந்திப்போம்.
இதுதான் எங்க DD முத்திரை மகிழ்ச்சி வாழ்த்துகள் நன்றி
பதிலளிநீக்குஇன்றுதான் முதல் முறையாக உங்க பதிவு பக்கம் வந்தேன். சரியா புரியணும்னா உங்க பழய பதிவெல்லாம் தேடி பிடிச்சு படிச்சாதான் புனியும்.
பதிலளிநீக்குநானும் தமிழ்... ஹிந்தி பாடல்களை மட்டுமே பதிவா போட்டுகிட்டு இருக்கேன்..
சிறந்த அறிஞர்களின் புதிய பதிவுகளைப் படிக்க, நாட வேண்டிய ஒரே குழு உலகத் தமிழ் வலைப்பதிவர்கள்! மறக்காமல் படிக்க வாருங்கள்! நீங்களோ உங்கள் நண்பர்களோ வலைப்பதிவர்கள் ஆயின் உங்கள் புதிய பதிவுகளையும் எமது குழுவில் இணைக்கலாம் வாருங்கள்!
பதிலளிநீக்குhttps://plus.google.com/u/0/communities/110989462720435185590
டிடி தாங்கள் மீண்டும் வந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி! அதே சமயம் தங்கள் குடும்பம், தொழில் எல்லாவற்றையும் மனதில் கொண்டு தளம் பக்கம் வந்து எழுதவும். ஏனென்றால் தொழில் என்பது அத்தனை எளிதல்ல. தங்களின் உழைப்பில் அது மிளிரும்! ஐயமில்லை. தங்கள் நலனையும் கருத்தில் கொள்ளவும்.
பதிலளிநீக்குதங்களின் நலன், குடும்ப நலன், தொழில் எல்லாம் சிறக்க வாழ்த்துகள், பிரார்த்தனைகள்!
கீதா: மிக்க நன்றி டிடி. நான் கண்டுபிடித்ததற்காக என்னையும் குறிப்பிட்டமைக்கு!
பதிலளிநீக்குதற்போது சிலநாட்களாகப்ளாக் டாஷ்போர்ட் ஓபனாகம தகறாறு பண்ணுது. மத்தவங்க கமெண்ட்...பதிவு (புது) பாக்கவே முடியல. என்ன ப்ராப்லம்.. எப்படி சரி செய்ய...
பதிலளிநீக்கு