பதிவர்களால் கற்றுக் கொண்டவை...!


"இப்போ இந்த Slide Show எப்படி செய்றது...?"

ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஆண்டிபட்டி கணவா காத்து ஆள் தூக்குதே... அய்த்த பொண்ணு என்ன தாக்குதே...! அடி முக்கா பொம்பளையே... என்ன முழுசா நம்பலையே... நான் உச்சந்தலையில் சத்தியம் செஞ்சும் அச்சம் தீரலையே... // உன் பவுசுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்பே... இந்த கிறுக்கிய ஏழை சிறுக்கிய எதுக்காக புடிச்சே...? // ஒரு வெள்ளக்காரி காசு தீந்தா வெறுத்து ஓடிப் போவா... இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா...! ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... ஒ... (படம் : தர்மதுரை) பயணத்தில் இயற்கையோடு ஒன்றி லயித்திருக்கும் போது, இப்படியுள்ள பாடல்களைக் கேட்பது தான் எவ்வளவு இனிமை...! வாங்க... ரசனையான ஒரு தொழினுட்பத்தைப் பத்தியும் பேசலாம்...!


© தர்மதுரை வைரமுத்து யுவன் சங்கர் ராஜா செந்தில்தாஸ், சுர்முகி ராமன் @ 2016 ⟫

"எனது 3 முக்கிய நூல்கள் Slide Show-வாக, எனது தளத்தில் வலது புறம் வர வேண்டும்"ன்னு நம்ம முத்துநிலவன் ஐயா அவர்கள் சொல்லிட்டாங்க...! செய்யாம விடுவோமா...? அவரது தளத்திற்கு → இங்கே ← சொடுக்கி போங்க... "இணையத் தமிழ்ப்பயிற்சி" மற்றும் "வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா" பற்றிய விவரங்களும் உள்ளன... தங்களின் மேலான கருத்துக்களை அங்கே பகிர்ந்து கொண்டு விட்டீர்களா...? நன்றி... இப்போ அவர் தளத்திலே சைட்லே இருக்கும் கேட்ஜ்ட்யை கொஞ்சம் பார்த்துட்டு வந்துடுங்களேன்... நல்லா இருக்கா...? சூடா ஒரு டீ சாப்பிடுங்க... இனி செய்முறை படிப்படியாக...

01) முதலில் சேர்க்க வேண்டிய படங்களை Copy செய்து, உங்கள் கணினியில் தனி ஒரு Folder-ல் கொண்டு செல்லுங்க... உங்கள் விருப்ப வரிசைக்கேற்ப படங்களுக்கு Image1, Image2, ..., ...,-ன்னு பெயர் வைச்சா நல்லது...

02) ஒவ்வொரு படத்தின் அளவை (Resize) மாத்தணும்... "Paint" இல்லாத கணினியே இல்லை என்று சொல்லலாம்... அது இருக்கா / இல்லையா...? சந்தேகமா...? - தீர்க்க உங்க முதல் வகுப்பு குழந்தையை... ம்... அல்லது பேரன் பேத்திகளைப் பக்கத்திலே அமர வைத்துக் கொள்ளலாம்... தவறில்லை...! ஏன்னா நீங்க சொல்லிக் கொடுத்து, அவங்க தான் இதை செய்யப் போறாங்க...! ஜாக்கிரதை :- நம்மைப் போல வாட்ஸ்-அப் / முகநூல் - பாழாப்போற இதுலே மூழ்கி இருக்கிற குழந்தைகளின் அலட்சிய / ஏளன பார்வைக்கும், கோபத்திற்கும் ஆளாகாதீர்கள்... அதனாலே உங்க பெண் அல்லது பேத்தி என்றால் OK... Good...!!! "நூலைப் போல் சேலை"-ன்னு சொல்ல வந்தேன்... ஐயோ... மறந்துட்டேன்... இது தொழினுட்ப பதிவு... அடுத்து என்ன செய்ய வேண்டுமென்றால்...

03) படத்தின் அளவை மாற்றுவோமா...? படத்தின் மீது Right ClickOpen with"Paint" என்பதைத் தேர்வு செய்ய சொல்லுங்க...

04) படம் வந்துருச்சா...? மேலே உள்ள Resize என்பதைச் சொடுக்கி, Maintain aspect ratio-லே டிக் மார்க்கை எடுத்துட்டு, Pixels-யை தேர்வு செய்ய சொல்லுங்க...

05) Horizontal-லே 300, Vertical-லே 306-ன்னு போட்டுட்டு, OK சொடுக்கிட்டு, Save செய்ய சொல்லுங்க... இப்படி இணைக்க வேண்டிய படங்கள் அனைத்தையும் உங்க குழந்தை செய்து விட்டார்களா...? அடுத்து...

06) உங்க தளத்திற்கு வாங்க... படத்தைப் பதிவில் ஏற்ற உங்களுக்குத் தெரியும்... Slide Show-வில் வர வேண்டிய படங்களை எல்லாம் ஒரு டம்மி Draft பதிவில் ஏற்றுங்க... ரைட்டு... இப்படி அனைத்து படத்தையும், ஆர்வமுடன் இருக்கும் குழந்தையிடம் வேலை வாங்கியாச்சா...? இப்போ அவங்களை விளையாட அனுப்பிட்டு, நாமளும் ஆர்வமா விளையாடலாமா...? இப்போ அந்த டம்மி Draft பதிவில் Compose அருகில் உள்ள HTML-யை சொடுக்குங்க... https://-ன்னு ஆரம்பித்து Image1.jpg-ன்னு முடியற வரை முதல் படத்திற்கான Script..... அவைகளை மட்டும் அப்படியே Copy செய்து Notepad(1) அல்லது Word File(1)-ல் Paste செய்து சேமித்துக் கொள்ளவும்...
07) இப்போ மேல் பெட்டியுள்ள Slide Show Widget Script முழுவதையும் சுட்டியால் தேர்வு செஞ்சி + Copy செய்து, இன்னொரு Notepad(2) அல்லது Word File(2)-ல் Paste செய்யுங்க... இந்த Script-ன் கடைசியில் <a href="#"><img src="படம் 1" alt="?" /></a> ன்னு வரிசையா மூன்று இருக்கும்... உங்க படங்கள் எண்ணிக்கைக்கு ஏத்த மாதிரி அதிகமாக்கிக் கொள்ளுங்க...

08) "படம் 1"-ங்கிற இடத்திலே, Notepad(1) அல்லது Word File(1)-ல் உள்ள முதல் படத்தோட Script-யை சேருங்க... (https://-ன்னு என்று ஆரம்பித்து Image1.jpg-ன்னு முடியும்-) அதே போல மற்றவைகளையும்...

09) அப்புறம் alt="?"-ங்கிற இடத்திலே "?" நடுவே உங்க படத்தோட விளக்கத்தை கொடுத்தீங்கன்னா, அதுவும் Slide Show-விலே தெரியும்...

10) எல்லாம் முடிந்ததா...? அதை எல்லாத்தையும் தேர்வு செஞ்சி Copy செய்து கொள்ளுங்க... Layout போய், வலப்பக்கம் இருக்கிற Add a Gadget சொடுக்கி, வரும் popup திரையிலே HTML/JavaScript-யை சொடுக்குங்க... அங்கே Content-லே, Paste-செஞ்சிட்டு, அதுக்கு மேலே இருக்கிற Title-லே "தலைப்பை" கொடுத்துட்டு, save என்பதை சொடுக்குங்க...

அவ்வளவு தான்... இனி உங்கள் தளத்தைத் திறந்து பார்க்கலாம்... எப்படி...? அழகா வந்து இருக்கா...? மு.கோபி சரபோஜி ஐயா தளத்திற்கு → இங்கே ← சென்று பாருங்கள்... 24 நூல்களின் Slide Show (யம்மாடி...! உதவின என் மகளுக்கு நன்றி...! பொறுமைசாலி...!) "க்கும்... நூல்களா...!" என்று நினைக்காதீங்க... விரைவில் உங்களுக்கும் உதவும்... என்னை வியப்படைய வைத்தது :- திருமதி → கோமதி அரசு ← அவர்களின் தளத்தில், வலைப்பூ நண்பர்கள் தந்த AWARDS-களை அழகாக Slide Show-வாக வைத்துள்ளார்கள்...!

பயணத்தில் பயணிக்கும் போது எடுக்கும் அதிக புகைப்படங்களைப் பகிரும் பதிவர்களே : நீங்கள் இது போல் செய்து பகிர்ந்து கொண்டால், பதிவு மேலும் அழகாக இருக்கும் என்பதை விட, விரைவில் அந்தப் பதிவு திறக்கும்...! "சரி... எழுதும் பதிவில் எப்படி இதைக் கொண்டு வருவது...?" என்று நீங்கள் நினைப்பது எனக்குக் கேட்கிறது... மேலே வரிசை எண் 10-ல் Layout செல்லாமல், நீங்கள் எழுதி முடித்த பதிவின் ஆரம்பத்திலோ அல்லது முடிவிலோ, Compose view அருகில் உள்ள HTML view-யை சொடுக்கி, அங்கே Slide Show Script-யை Paste செய்யவும்... நன்றி...

இன்னும் வேறு சந்தேகங்கள் / பிரச்சனைகள் இருந்தால், தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்... கற்றுக் கொள்கிறேன்... அதை ஒரு பதிவாகப் பகிர்ந்து கொள்கிறேன்... பலருக்கும் பயன் தரும்... நன்றி...

dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. Slide Show தொழில்நுட்பம் அருமை
  பயனுள்ள தொழில்நுட்ப வழிகாட்டல்
  தொடருங்கள்

  புதுக்கோட்டையில் இணையத் தமிழ் பயிற்சி முகாம் 2016
  என்ற தலைப்பில் நானும் பகிர்ந்துள்ளேன்.
  http://www.ypvnpubs.com/2016/11/2016.html

  பதிலளிநீக்கு
 2. மிகவும்பயனுள்ள தொழில் நுட்பப் பதிவு ஐயா
  முயற்சித்துப் பார்க்கிறேன்
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 3. நல்ல உபயோகமான தகவல் தனபாலன் சார். என்னுடைய வேறொரு தளத்திற்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் . நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வலைப் பக்கத்தில் படைப்புகள் ஈர்க்கப் பட ஸ்லைட் ஷோ உதவும். அருமையான வழிகாட்டல்.டிடி தொடர்ந்து கலக்குங்க புடவை டிசைன்கள் அட்டகாசம்

  பதிலளிநீக்கு
 5. பட்டுப் புடவைகளின் அணிவகுப்பு அழகு!...

  நல்லதொரு வழிகாட்டி... மகிழ்ச்சி..

  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 6. அருமையான பதிவு.
  கணினியில் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது.
  படங்களை ஏற்ற கற்றுக் கொண்ட பின் என் தளத்தில் படங்கள் அதிகமாகிவிட்டது. படத்தின் மேல் நம் பெயரை போட கற்றுக் கொள்ள போகிறேன் அடுத்து.

  என் தளத்தை குறிபிட்டதற்கு நன்றி.
  அந்த தொழில்நுட்ப வேலையை செய்து தந்தவள் என் மகள்.
  உங்கள் புடவைகள் மிகவும் நன்றாக இருக்கிறது.
  வியாபாரம் நன்கு நடைபெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. வழக்கம்போல மிகவும் பயனுள்ள தொழில்நுட்ப பதிவு. பலருக்கும் பயன்படும். நானே இதை பற்றி தங்களிடம் கேட்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.
  மிக்க நன்றி!
  த ம 4

  பதிலளிநீக்கு
 8. டெக்னாலாஜி பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு தமிழில் தாங்கள் தரும் விளக்கம் பலருக்கும் பயன் அளிக்கும்.தலைவருக்கு பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
 9. நல்ல தகவல்கள் ஜி நானும் செய்து பார்க்கிறேன் என்னிடம் இயக்கை காட்சி புகைப்படங்கள் நிறைய இருக்கின்றது
  பதிவர் திருவிழா சிறக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 10. எனக்கு அம்புட்டு அறிவு இல்லை என்பது நிச்சயம் இருந்தாலும் முட்டி மோதி பார்க்கிறேன். நன்றி!!!

  பதிலளிநீக்கு
 11. மிகவும் நன்றி தனபாலன் சகோ. என்னோட ஸ்லைட் ஷோ கேட்ஜெட்ஸும் காணோம். ஃபோட்டோஸ் எல்லாம் பிகாஸாவில் இருக்கும். தேடணும். புடவைகள் அற்புதம் :)

  பதிலளிநீக்கு
 12. கடினம் என நினைத்த தொழில் நுட்பத்தை எளிதாக விளக்கிவிட்டீர்கள். மிக்க நன்றி! அந்த புடவைகளின் வண்ணங்களும் வடிவமைப்பும் நேர்த்தியாய் உள்ளன. தங்களின் கற்பனைத்திறனுக்கு பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 13. நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. வலைப்பதிவர்களுக்கான உங்களுடைய சேவை தொடரட்டும். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 14. ஆஹா...நல்லா இருக்கே முயன்று பார்க்கலாம்.....

  புடவைகளின் அணிவகுப்பு அழகோ அழகு...

  பதிலளிநீக்கு
 15. நீங்கள் கூறியதை முயற்சி செய்து பார்த்துவிட்டு மறுபடியும் தொடர்புகொள்வேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம்
  யாவருக்கும் பயன் பெறும் பதிவு கிர்வுக்கு நன்றி அண்ணா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 17. காட்சிப்படங்கள் அழகு கொடுக்கும் என்றாலும் அதை தளத்தில் சேர்க்கும் வழிமுறை வழிகாட்டியதுக்கு நன்றிகள்.செய்து பார்க்கின்றேன் டிடி..போ/வரத்தில் பாடல் கேட்பதும் தனிச்சுகம் தான் உங்களுடன் பாடலில் எப்போதும் இணைந்தே இருப்பது அருமையான ஒத்த சிந்தனை டிடி!

  பதிலளிநீக்கு
 18. இருப்பதே போதுமென்று நிணைக்கிறேன் .. தேவை என்றால் முயன்று பார்க்கிறேன் நன்றி!!

  பதிலளிநீக்கு
 19. அட, இது நல்லா இருக்கே, முடிஞ்சா நானும் முயன்று பார்க்கிறேன். நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 20. டிடி வந்துட்டோம்ல!!!! நீங்களும் வந்துட்டீங்க! அதுவும் அருமையான ஒரு தொழில்நுட்பப் பதிவோட வந்துட்டீங்க! கண்டிப்பா செஞ்சு பாக்கணும்....இன்னும் கொஞ்சம் டீப்பா வாசிக்கணும். அப்பதான் மண்டைல ஏறும். உங்க பதிவை வைச்சுக்கிட்டு ஸ்டெப் பை ஸ்டெப்பா செஞ்சு பார்க்கணும்...

  அருமை டிடி...ரொம்பவே பயனுள்ளது. நன்றி டிடி..

  பதிலளிநீக்கு
 21. பயனுள்ள பகிர்வு
  சொல்லிச் சென்றவிதம் அருமை
  வாழ்த்துக்களுடன்...

  பதிலளிநீக்கு
 22. சகோதர சகோதரிகளுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் www.mytamilpeople.blogspot.in எனும் வலைப்பூ நடத்தும் நான். YOUTUBEல் தொழில்நுட்பம் சார்ந்த CHANNELய் நடத்தி வருகிறேன். இதில் உபயோகமான பதிவுகளை இட்டு வருகிறேன். எனது CHANNELய் SUBSCRIBE செய்வதன் மூலம் உங்களுக்கு பல தகவல்கள் உடனடியாக கிடைக்கும். அதனால் எனது CHANNELய் SUBSCRIBE செய்து எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவை தறுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். எனது YOUTUBE CHANNEL செல்ல இந்த LINKய் CLICK செய்யவும் - https://goo.gl/M3eCnK

  பதிலளிநீக்கு
 23. அகவை கூடியபின் ஆர்வம் ,
  ஆனால் கலந்து கொள்ள முடியவில்லை.
  ௨௦௧௭ இடுகையாளர்கள் சந்திப்பு எப்போது?
  அறிவிப்பு வரவில்லையே ?

  பதிலளிநீக்கு
 24. உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.