இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...!


வணக்கம் நண்பர்களே... "எதை வைச்சி என்னை நினைப்பாங்க...?"-ன்னு நம்ம அய்யன் எங்காவது கேள்வி கேட்டுள்ளாரா...? என்பதை அறிய, இதன் முந்தைய பதிவை வாசிக்காதவர்கள் →இங்கே← சொடுக்கி வாசித்து வந்தால் தான், அதற்கு நம்ம அய்யன் சொன்ன தீர்வை இந்த அதிகாரத்தின் முடிவில் உள்ள குறளில் அறிய முடியும்...
© பாலும் பழமும் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1961 ⟫ இரவல் தந்தவன் கேட்கின்றான் - அதை இல்லை என்றால் அவன் விடுவானா...? உறவைச் சொல்லி அழுவதனாலே - உயிரை மீண்டும் தருவானா...? கூக்குரலாலே கிடைக்காது - இது கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக் கோட்டையில் நுழைந்தால் திரும்பாது... போனால் போகட்டும் போடா (2) இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா...? போனால் போகட்டும் போடா... || இன்றைய நாட்டு நிலையில் சிலர் பாடும் பாடல் இதுவாக இருக்குமோ...? அதற்காக இப்பதிவில் உள்ள குறள் விளக்கமும், குறள்களுக்கேற்ப திரைப்பட பாடல் வரிகளும் "அவர்களுக்காக" என்று வாசிக்க வேண்டாம்...

கறுப்புப்பணம் மட்டுமல்ல... அளவிற்கு அதிகமாக பொன், பொருள் வைத்திருப்பவர்களுக்காக அன்றே நம்ம அய்யன் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்... வாங்க...

பாடல் வரிகளை கேட்க, பாடலின் ஆரம்பத்தில் உள்ள பிளேரை இருமுறை சொடுக்கவும்... நன்றி... இதுவரை சந்தித்த, வாழ்ந்த, வாழ்கிற மனிதர்களைப் பற்றிய எனது அனுபவத்தில்... குறளின் குரலாக:- வாசிக்க.. ரசிக்க.. கேட்க..!

அதிகாரம் 101 - நன்றியில் செல்வம்...(1006-1010)

தானும் அனுபவிக்காமல், தகுதியானவர்க்குத் தரும் எண்ணமே இல்லாமல் வாழ்பவரிடம் இருக்கும் பெரும் செல்வம் எத்தகையது தெரியுமா...? அந்த செல்வத்துக்கே தீராத ஒரு நோய் போன்றவர்...

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று  
ஈதல் இயல்பிலா தான் (1006)  
இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை - இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை ? (2) இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை - இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை...?© மானமுள்ள மறுதாரம் அ. மருத காசி K.V.மகாதேவன் சீர்காழி கோவிந்தராஜன் @ 1958 ⟫

அற்புதமான அழகுடைய தேவதை போல் ஒருத்தி, தன்னந்தனியாகவே வாழ்ந்து கிழவியானது போலத் தான், ஏதும் இல்லாதவர்க்கு மனதார ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாதவரின் செல்வம்...!

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்  
பெற்றாள் தமியள்மூத் தற்று (1007)  
தவறுக்கும் தவறான தவறை புரிந்துவிட்டு, தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே (2) பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும் - பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே ? (2) // சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு, சம்சாரம் ஏதுக்கடி - தங்கம் சம்சாரம் ஏதுக்கடி ? (2) மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை வாழ்த்துவதாகாதடி (2) தங்கம் மன்னிக்க கூடாதடி...© தங்கப் பதுமை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் விஸ்வநாதன்-ராமமூர்த்தி C.S.ஜெயராமன், பத்மினி (வசனம்) @ 1959 ⟫

கஞ்சத்தனத்தால் யாருக்கும் எந்த உதவியும் செய்யாமல், எல்லோரிடமும் வெறுப்பையும் சம்பாதித்து வைத்திருக்கிறவரின் செல்வமும், ஊர் நடுவே நச்சு மரத்தில் காய்த்துக் குலுங்குகின்ற பழமும் வெவ்வேறானவையல்ல...!

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்  
நச்சு மரம்பழுத் தற்று  
நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே - நல்ல சுகம் அடைவதேது... ? // வாஸ்தவம் குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன், கண்டவள் பின் சென்றேன், கட்டுடலையும் இழந்தேன், இன்று கண்ணையும் இழந்தேன்... வாழ்க்கையில் எனக்கு நிம்மதி ஏது...? ஏது...? // குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...?© ரத்தக் கண்ணீர் ஆத்மநாதன் C.S.ஜெயராமன் C.S.ஜெயராமன் @ 1954 ⟫

சொந்த பந்தங்க கிட்டே கூட அன்போடு இருக்காம, நாய் பெற்ற தெங்கம் பழம் போல ஒருத்தரிடம் இருக்கும் பணமும் பொருளும், யாருக்கு கடைசியில் உதவும்...? அடுத்தவங்க கொண்டு போய் அனுபவிப்பாங்க...!

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய  
ஒண்பொருள் கொள்வார் பிறர் (1009)  
பட்டணத்தில் பாதி இவன் வாங்கி முடித்தான்... அந்த பட்டயத்தில் கண்டது போல் வேலி எடுத்தான்... அதில் எட்டடுக்கு மாடி வைத்து, கட்டிடத்தை கட்டி விட்டு, எட்டடிக்குள் வந்து படுத்தார்... மண்ணை கொட்டியவன் வேலி எடுத்தான்...! ஹோய்... உண்டாக்கி விட்டவர்கள் ரெண்டு பேரு... இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு... கொண்டாடும் போது ஒரு நூறு பேரு... உயிர் கூடுவிட்டு போன பின்னே கூட யாரு...?© முகராசி கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫

இத்தனையும் அறிந்து தெரிந்து புரிந்து உணர்ந்து, பிறர்க்குக் கொடுத்துப் பழகி சந்தோசமாக வாழும் புகழ்மிக்கவர்களுக்கு வறுமைப்பட நேர்ந்தால்...? அது மழை தரும் மேகமே வறுமைப்பட்டது போல சில நாட்கள் தான்...!

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி  
வறங்கூர்ந் தனையது உடைத்து (1010)  
வெள்ளத்தினால் வரும் பள்ள மேடு போல் - செல்வம் வரும் போகும்... இதை எள்ளளவேனும் எண்ணாத கஞ்சர்க்கு துன்பம் வரவாகும்...! கள்ளமில்லாத அன்பு செல்வமே என்றும் நிலையாகும்...! (2) கஷ்டம் தீரும்... கவலைகள் மாறும்... இன்பம் உருவாகும்... வெள்ளி பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்... இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...!© சபாஷ் மாப்பிள்ளை அ. மருத காசி K.V.மகாதேவன் P..B.ஸ்ரீனிவாஸ் @ 1961 ⟫

நண்பர்களே... ஒரு நிறைவான பாடலோடு பதிவை நிறைவு செய்கிறேன்... PLAY பட்டனை சொடுக்கி பாடல் வரிகளை கேட்டவர்களுக்கும் நன்றி... தங்களின் கருத்து என்ன...?
(படம்:தர்மம் தலை காக்கும்|பாடல் வரிகள்:கண்ணதாசன் | வருடம்:1963) அள்ளிக்கொடுத்து வாழ்பவன் நெஞ்சம் ஆனந்த பூந்தோப்பு... வாழ்வில் நல்லவர் என்றும் கெடுவதில்லை - இது நான்குமறை தீர்ப்பு (2) என்றும் தர்மம் தலை காக்கும்... தக்க சமயத்தில் உயிர் காக்கும்... கூட இருந்தே குழி பறிச்சாலும்... கொடுத்தது காத்து நிக்கும்... ம்ம்ம்... செய்த தர்மம் தலை காக்கும்... தக்க சமயத்தில் உயிர் காக்கும்...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. சுயநலன் பெருத்துவிட்ட மனிதர் வாழும் பூமியல்லவா இது
  அருமை ஐயா

  பதிலளிநீக்கு
 2. அருமை அருமை! குறளையும் அதன் பொருளையும் திரைப்பாடல்களோடு பொருத்தும் பாங்கும் அருமை!

  பதிலளிநீக்கு
 3. திருப்பூரில் உள்ள ஒவ்வொரு முதலாளிகளுக்கும் இந்தப் பதிவை நகல் எடுத்து கொடுக்கட்டுமா?

  பதிலளிநீக்கு
 4. சிறப்பான பகிர்வு. பாடல்கள் அனைத்தும் சிறப்பான தேர்வு. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 5. உரைப்பவர் உரைத்தும் உணர்ந்து கொண்டோர் சிலரே!..

  பாவிகாள்!.. யாரே சுமப்பார் அந்தப் பணம்?.. - என்று ஔவையாரும் சவுக்கெடுத்து விளாசினார்..

  கேட்டுத் திருந்தியவர்கள் எத்தனை பேர்?..

  கண்ணெதிரே - நிகழ்பவனவற்றைக் கண்டு இனியேனும் திருந்தட்டும்..

  இல்லையேல் -
  திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்..
  வருந்தாத வடிவங்கள் வாழ்ந்தென்ன லாபம்!..
  - என்று போக வேண்டியதுதான்..

  பதிலளிநீக்கு
 6. பதிவு மிக மிக அருமை.பாடல் பகிர்வும், குறள் சொல்லும் உண்மையும் மிக அருமை.
  எத்தனை உழைப்பு ! எப்போது நல்லதை பகிரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 7. நிறைய நேரம் செலவழித்து எழுதப்பட்ட பதிவாக இருக்கும் என்று நினைக்கிறேன் , கருத்துள்ள பதிவு

  பதிலளிநீக்கு
 8. மிக மிக ஆழமாகச் சிந்தித்து
  எளிமையாகத் தரப்பட்ட அற்புதமான பதிவு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. சூப்பர் டிடி. பொருத்தமான குறள் தேர்வுகள். பாடல் இணைப்பு அபாரம், உங்கள் உழைப்பு பிரமிக்க வைகிறது.

  பதிலளிநீக்கு
 10. பாடல்கள் பதிவிற்கு அழகானாலும்
  பாடல்கள் படிப்பவர் உள்ளங்களை
  சட்டென்று சிந்திக்க வைக்க
  குறள் விளக்கம் - வாசகர்
  உள்ளங்களுக்கு அறிவூட்ட
  தாங்கள் சொல்ல வேண்டிய
  தங்கள் கருத்துகளின் கோர்வை
  ஒழுங்குபடுத்தல் அமைவு
  எல்லோர் உள்ளங்களையும்
  உங்கள் பக்கம் ஈர்க்கும்
  தொடருங்கள்; தொடருகிறோம்!

  பதிலளிநீக்கு
 11. அற்புதமான அழகுடைய தேவதை ஒருத்தி ,தன்னந்தனியாக வாழ்ந்து கிழவி ஆவது போல் ......ஆகா ,வள்ளுவர் வள்ளுவர்தான் எப்படியெல்லாம் உவமைக் கூறியுள்ளார் !இதையெல்லாம் நீங்களும் எப்படி தேடிஎடுக்கிறீர்கள்:)

  பதிலளிநீக்கு
 12. அருமை,புதுமையான வடிவில் குறளும் குரலும் இணைந்துக் கேட்டேன்,படித்தேன் நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 13. இந்தப் பதிவுக்குப் பின்னுள்ள அரிய உழைப்பை எண்ணி வியக்கிறேன் . பாராட்டுகிறேன் . யாக்கை நிலையாமை , இளமை நிலையாமை , செல்வம் நிலையாமை குறித்து ஏராள தமிழ் நூல்கள் எடுத்தியம்பி இருக்கின்றன . ஈகையின் சிறப்பைப் பற்றியும் பலவாறு கூறியுள்ளன . திருந்துவோர் சிலரே .

  பதிலளிநீக்கு
 14. ஓலைச்சுவடி காலத்திலேயே தீர்க்க தரிசியாக குறள்கள் தரித்த வள்ளுவனாகட்டும், எழுதுகோல் பிடித்து அதே தீர்க்க தரிசியாக வாழ்ந்த கண்ணதாசன் ஆகட்டும், ... இன்றைய நவீன காலக் கவிஞர்களின் வறட்டு மெருகு பூசிய அனர்த்த உளறல் வார்த்தைகளின் முன்னிலையில் .. .. கூனிக் கூசாமல் கம்பீரமாக நங்கூரமிட்டு நிற்கிற யோக்கியதை கொண்டவர்கள்.. [யோக்கியதை கொண்டவை .. அவர்களது காலத்தினால் அழியா புனைவுகள்]
  அவைகளை மணம் மாறாமல் அழகாகக் கோர்த்து சமர்ப்பித்திருக்கிற தங்களின் சாதுர்யம் கவனிக்கையில், புனைந்தவர்களின் மீதான அதே வகை மரியாதை தங்களின் மீதும் தவழ்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. நன்றி சார்..

  பதிலளிநீக்கு
 15. நல்ல பதிவு.
  இனிய வாழ்த்துகள் டிடி.
  https://kovaikkavi.wordpress.com/

  பதிலளிநீக்கு
 16. அருமை! டிடி! வழக்கம் போலவே அபாரமான உழைப்பு! வார்த்தைகள் இல்லை.

  பதிலளிநீக்கு
 17. அருமையான குறள்களைத் தெரிவு செய்து நன்கு தெரிந்த பாடல்களுடன் இணைத்து விளக்கியமை மிகவும் நன்று. பாராட்டுக்கள் தனபாலன் சார்!

  பதிலளிநீக்கு
 18. வழக்கம்போல் குறளையும் அதற்கு பொருத்தமான திரைப்படப் பாடல்களையும் இணைத்து பதிவிட உங்களைப் போல் வேறு யாரால் முடியும். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 19. குறள் உணர்த்தும் நீதிகளை குரல் இணைப்புடன் தந்து வழக்கம் போல அருமையாக அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள் சார்!

  பதிலளிநீக்கு
 20. கடின உழைப்புடன் கூடிய அருமையான பதிவு.
  பகிர்ந்தமைக்கு நன்றிகள்
  த ம12

  பதிலளிநீக்கு
 21. இக்காலகட்டத்திற்குத் தேவையான பதிவு. ஒருவகையில் பாடம். தங்களது தொழில்நுட்பம் பதிவின் அழகினை மேம்படுத்துகிறது.

  பதிலளிநீக்கு
 22. இந்த உலகம் என்பதைவிட.நடப்பு நிலைமைகளை பாரத்தால் .இந்தீயா என்ற நாடு என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது..

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் சகோதரரே

  நலமா? குறளும், அதன் பொருள் விளக்கமும், அதனோடு இணைந்த பாடல்களுமாய் வழக்கம் போல் தங்கள் பதிவு அருமையாய் உள்ளது. இவ்விதம் பதிவிட்டு எங்களுடன் அழகான அந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு என் நன்றிகள். தங்கள் வியாபார நிமித்தம், வலையுலகை விட்டு விலகியிருந்ததை படித்தறிந்தேன். தங்கள் வியாபாரம் வளர்ந்து தங்கள் வாழ்வில் வளம் செழிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  இத்தனை வேலைகளுக்கு நடுவிலும், என் தளம் வந்து பாராட்டியமைக்கு, என் மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 24. காலத்திற்கேற்ற பதிவு. பழைய பாடல்கள் மறுநினையூட்டல் !!!

  பதிலளிநீக்கு
 25. சிறப்பான பகிர்வு அண்ணா...
  அருமையான பாடல்களின் தொகுப்போடு குறள் விளக்கம்....

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.