🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...

வணக்கம் நண்பர்களே... வாழ்க்கைப் பயணத்தில் ஏற்பட்ட சில மாற்றங்களால் வலைப்பூ பயணத்தில் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை... இதோ வந்துட்டேன்... காரணம் நம்ம நண்பர் கில்லர்ஜி நன்றி ஜி... பயணம்... கிட்டத்தட்டத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் பயணம் செய்யப் போகிறேன்... சேலைகள் வியாபாரம்... பொறுமையாகத் திட்டமிட்டு ஒவ்வொன்றாகச் செய்து கொண்டிருக்கிறேன்... விரைவில் அதைப் பற்றியும் பகிர்ந்து கொள்கிறேன்... இந்த தொடரைத் தொடங்கி வைத்த அன்புச் சகோதரி... பிரியமான தோழி மகிழ்நிறை மைதிலி அவர்களுக்கும் நன்றி.

© பிரியமான தோழி பா.விஜய் S.A.ராஜ்குமார் ஹரிஹரன் @ 2003 ⟫

பயணம் பற்றிய கேள்விகள், சிறு வயது முதல் இன்று வரை நடக்கிற பல நினைவுகளைச் சிந்திக்க வைத்து விட்டது... நெஞ்சிலே இந்த நெஞ்சிலே... கடல் பொங்குதே ஆனந்தமாய்... கையிலே இந்த கையிலே... வெற்றி வந்ததே ஆரம்பமாய்... அட வாழ்வில் இன்றே திறப்பு விழா... இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா...?

கடலுக்கிங்கே கைகள் தட்ட கற்றுத் தந்திடலாம்... பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி பறக்கச் சொல்லிடலாம்... வானம் என்ன வானம் - தொட்டுவிடலாம்... வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்... வில்லாக வானவில்லைக் கையில் ஏந்த வேண்டும்... அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்... நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும்...



01. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா...?

சத்தியமா ஞாபகம் இல்லேங்கே... ஆனால், ரயில் பயணம் எப்போதும் இனிமை தான்... பள்ளிப்படிப்பை முடித்து விட்டு, இராஜபாளையம் கல்லூரியில் படித்த போதும், மதுரை ஆலையில் முதல்முதலாக 1 வருடம் பயிற்சிக்காக வேலை பார்த்த போதும் பேருந்து பயணம் தான்... சென்னை பின்னி ஆலையில் வேலை பார்த்த போது, பல சமயங்களில் பகல் நேர வைகை ரயில் பயணம் தான்... அந்த பயணங்களில் சந்தித்த பல மனிதர்களைப் பற்றி எழுதப் பல பதிவுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்... அம்மா சொல்வார்கள்... "நீ வயிற்றில் இருக்கும் போது, அப்போது வெளியான "நீலகிரி எக்ஸ்பிரஸ்" படம் பார்த்தேன்... (யாருப்பா அது... வயசைக் கணக்குப் போடுவது...?) அதனால் தான் என்னவோ, வீட்டில் நீ மட்டும் அதிக நாட்கள் இருக்க முடிவதில்லை" என்று... ம்... இன்று வரை அது தொடர்கிறது... 16 வருஷம் முதற்கொண்டு பயணம் தான்... ரயில் பயணம் என்றவுடன் ஞாபகம் வந்தது இது தான்...

© வருஷம் 16 வாலி இளையராஜா K.J.யேசுதாஸ் @ 1989 ⟫
தூரத்தில் போகின்ற மேகங்களே... தூரல்கள் போடுங்கள் பூமியிலே... வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட... ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே... இறகுகள் எனக்கில்லை தாருங்களே... ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட... பறவைகள் போல் நாம் பறந்திட வேண்டும்; பனிமலை மேல் நாம் மிதந்திட வேண்டும்; ஏதோ ஒரு போதை மனம் கொண்டாடுதே... பழமுதிர்சோலை எனக்காகத் தான்...

02. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது...?

இடுப்பில் வெறும் துண்டுடன் ஊரில் அலைய முடியுமா...? ஹா... ஹா... எங்கு முடியும்...? என்றும் மகிழ்ச்சியான பயணம் குற்றாலம் செல்வது தான்... 3 வேளைகளிலும் சாப்பாடு செய்ய ஆட்களையும் கூடிச் செல்வதால், வயிற்றுக்குப் பாதகமில்லை... அங்கிருக்கும் ஒவ்வொரு நாளும் மறக்க முடியாத நாட்கள்... செண்பகாதேவி, தேனருவிகளில் குளிக்கும் போது... யப்பா...! பாதங்களில் வலி உண்டாக்கிய முள்ளும் மலரும் ... ஒவ்வொரு அருவிக்கும் ஜீப்பில் செல்லும் போது உள்மனம் பாடும் :-

© முள்ளும் மலரும் கண்ணதாசன் இளையராஜா K.J.யேசுதாஸ் @ 1978 ⟫
வளைந்து நெளிந்து போகும் பாதை - மங்கை மோக கூந்தலோ...? மயங்கி மயங்கிச் செல்லும் வெள்ளம் - பருவ நாண ஊடலோ...? ஆலங்கொடி மேலே கிளி - தேன் கனிகளை தேடுது... ஆசை குயில் பாஷை இன்றி - ராகம் என்ன பாடுது...? காடுகள் மலைகள் தேவன் கலைகள்... செந்தாழம்பூவில்... செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்... என் மீது மோதுதம்மா... பூ வாசம் மேடை போடுதம்மா; பெண்போல ஜாடை பேசுதம்மா; அம்மம்மா ஆனந்தம்... அம்மம்மா ஆனந்தம்...

03. எப்படிப் பயணிக்கப் பிடிக்கும்...?

குடும்பத்தார், உறவினர்கள், நண்பர்கள் என குழுவாகச் செல்வது தான் பிடிக்கும்... எதிலும் பயணிக்கும் போதே அரட்டை, சேட்டை, நடனம், தொடர்ப் பாட்டுப் போட்டி, நடிப்புப் போட்டி, சைகைப் போட்டி, மிமிக்கிரி எனப் பல உண்டு... ஒருவேளை சலிப்பு ஏற்பட்டால் தான் வெளியே இயற்கை ரசனை...! மனதில் வண்ண வண்ணப் பூக்கள் மலர்வதோடு, "கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்..."

© வண்ண வண்ணப் பூக்கள் வாலி இளையராஜா K.J.யேசுதாஸ் @ 1992 ⟫
பச்சைப் புல் மெத்தை விரித்து - அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்... பட்டுப் பூ மொட்டு வெடிக்கும் - செந்தேன் பெறப் பொன்வண்டு வட்டம் அடிக்கும்... சுற்றிலும் மூங்கில் காடுகள்; தென்றலும் தூங்கும் வீடுகள்... உச்சியின் மேலே பார்க்கிறேன்; பட்சிகள் வாழும் கூடுகள்... மண்ணின் ஆடைபோலே; வெள்ளம் ஓடுதே... அங்கே நாரை கூட்டம்; செம்மீன் தேடுதே... இந்நேரம்... இளநெஞ்சே வா... தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்...! அட அங்கே பார்; மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்... கண்ணோடு ஒரு சந்தோசம்... என்னோடு ஒரு சங்கீதம்...

04. பயணத்தில் கேட்க விரும்பும் இசை...?

அட போங்க... பயணத்தில் மட்டுமில்லேங்க... மனசு சந்தோசமா இருந்தால், துள்ளாத மனமும் இசையால் துள்ளும்... சோகமா இருந்தால், துவண்டு போன மனமும் ஆறுதல் அடையும்... மனம் போல் கேட்கும் இசையும் மாறும்...! சிறு வயதிலிருந்தே அப்பா பாடும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே வளர்ந்தவன் நான்... பாடல் வரிகள் அத்துப்படி ஆனது இப்படித் தான்...! க்கும்... பாடல் வரிகள் இல்லாமல் பதிவு எழுத கற்றுக் கொள்ள வேண்டும்... என் தளத்தின் முத்திரை+முகவரி = குறட்+பா... சரியா...?

© முகவரி வைரமுத்து தேவா ஹரிஹரன் @ 2000 ⟫
இன்னிசை நின்று போனால், என் இதயம் நின்று போகும்-இசையே உயிரே... எந்தன் தாய்மொழி இசையே, என் இமைகள் துடிப்பதும் இசையே, எங்கும் இசையே... மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்; கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்; ஐம்புலன்கள் எந்தன் இருப்பு; செவி மட்டும் தான் ரொம்ப சிறப்பு; நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு; ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு; இசையோடு வந்தேன்; இசையோடு வாழ்வேன்; இசையோடு போவேன்; இசையாவேன்...!

05. விருப்பமான பயண நேரம்...?

அதிகாலை பிடிக்கும்... பயணம் என்றாலும் சரி, தினமும் அதிகாலை நடைப் பயணம் என்றாலும் சரி... அதிகாலை பயணம் எனக்கு வேறு உலகத்தைக் காட்டும்...! அதே போல் அந்தி சாயும் நேரம் ரொம்பவும் பிடிக்கும்... சுருக்கமாக நிழல்கள் விழாத நேரம் என் விருப்பமான பயண நேரம்...

© நிழல்கள் வைரமுத்து இளையராஜா S.P.பாலசுப்ரமணியம் @ 1980 ⟫
பொன்மாலைப் பொழுது... இது ஒரு பொன்மாலைப் பொழுது... ஆயிரம் நிறங்கள் ஜாலமிடும்... இராத்திரி வாசலில் கோலமிடும்... வானம் இரவுக்கு பாலமிடும்... பாடும் பறவைகள் தாளமிடும்... பூமரங்கள், சாமரங்கள் வீசாதோ...? இது ஒரு பொன்மாலைப் பொழுது... வான மகள் நாணுகிறாள்... வேறு உடை பூணுகிறாள்... ஹேஹே ஹோஹோ ஹ்ம்ம் லல்லல்லா... ஹேஹே ஹோஹோ ஹ்ம்ம் லல்லல்லா...

06. விருப்பமான பயணத்துணை...?

யாராக இருந்தாலும் துணையாக்கிக் கொள்வது விருப்பம்... இதை இரண்டாவது பதிலாகச் சொல்லியிருக்க வேண்டும் →→ கல்யாணம் முடிந்து திண்டுக்கல்லிருந்து சென்னை பயணம் மஹிந்திரா வேனில்... முன்புறம் உள்ள ஒரே ஒரு இருக்கையில் நாங்கள்... எப்போது சென்னை வந்தது என்று எங்களுக்குத் தெரியவில்லை... வேனிலிருந்த இரு வீட்டார் பிதாமகன் களுக்கும் எப்படி என்று புரியவில்லை... ஹிஹி... இப்போது தனியே பயணம் வியாபாரத்திற்காக... பல நட்புகள் கிடைக்கும் என்பதில் மகிழ்ச்சி...! ம்... கவனத்தோடு கடமை தான் இப்போ விருப்பமான பயணத்துணை...!

© பிதாமகன் பழனிபாரதி இளையராஜா ஸ்ரீராம் பார்த்தசாரதி,ஸ்ரேயா கோஷல் @ 2003 ⟫
பின்னிப் பின்னிச் சின்ன இழையோடும்; நெஞ்சை அள்ளும் வண்ணத் துணி போல, ஒண்ணுக்கொண்ணுதான் இணைஞ்சு இருக்கு; உறவு எல்லாம் அமைஞ்சு இருக்கு...! அள்ளி அள்ளித் தந்து உறவாடும்; அன்னை மடி இந்த நிலம் போல - சிலருக்கு தான் மனசு இருக்கு...! உலகமதில் நிலைச்சு இருக்கு...! நேத்து தனிமையில போச்சு யாரும் துணை இல்லே...! யாரோ வழித்துணைக்கு வந்தா ஏதும் இணை இல்லே...! உலகத்தில் எதுவும் தனிச்சு இல்லையே...! குழலில் ராகம் மலரில் வாசம் சேர்ந்தது போல...! இளங்காத்து வீசுதே...! இசை போல பேசுதே...!

07. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்...?

என்னது...? படிப்பதா...? ம்ஹீம்... அதற்கென்று வீட்டில் தனி நேரம் உண்டு... இந்தப் பேருந்து பயணம் இருக்கே... சிரிப்பு, திகைப்பு, படபடப்பு எனப் பலவாறு மனம் சிட்டுக்குருவி போலத் துள்ளும்... ஒவ்வொரு பேருந்து பயணத்திலும் பல சுவாரஸ்யங்கள்... இலவசமாகக் கிடைக்கும் பலவிதமான ஒலியும் ஒளியும்...! ஆறாவது பதிலின் பாதிப்பு தொடர்கிறது !? ஹிஹி...

© சிட்டுக்குருவி வாலி இளையராஜா S.P.பாலசுப்ரமணியம், P.சுசீலா @ 1978 ⟫
இரு மான்கள் பேசும்போது மொழி ஏதம்மா...? பிறர் காதில் கேட்பதற்கும் வழி ஏதம்மா...? ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் - உறவன்றி வேறு இல்லை கவனங்களில்...! இள மாமயில்; அருகாமையில்; வந்தாடும் காலம் என்று கூடும் என்று-அனுபவம் சொல்வதில்லையோ...? // இந்தாம்மா கருவாட்டுக் கூடை முன்னாடி போ ! //

08. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்...?

வேறென்ன...? சைக்கிள் தான் !! எந்த துணையும் இல்லாமல் அரை பெடல் அடித்து அடித்து, விழுந்து விழுந்து கற்றுக் கொண்ட பின்... சீட்டில் உட்கார்ந்து லாவகமாக வானில் பறப்பது போல ஒட்டின நாட்கள்... ம்... இப்போது பைக்... சைக்கிளை நினைத்து மனம் அலைபாயுதே... அன்று சென்னையில் திருமணம் ஆகும் வரை ஆலைக்குச் சைக்கிளில் சென்றாலும், உற்சாகமாக :-

© அலைபாயுதே வைரமுத்து A.R.ரகுமான் A. R.ரகுமான், கிளின்டன் செரேஜு, சங்கர் மஹாதேவன், ஸ்ரீனிவாஸ் @ 2000 ⟫
என்றென்றும் புன்னகை... முடிவில்லா புன்னகை... இன்று நான் மீண்டும் மீண்டும் பிறந்தேன் - ஒரு துளி பார்வையிலே...2 ஓ என்னுயிரே (4) தீம் தீம் தனன தீம் தனனன... ஓஹோ ஹோ ஹோ வானமே எல்லையோ...? தீம் தீம் தனன தீம் தனனன... ஓஹோ ஹோ ஹோ காதலே எல்லையோ...?

09. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்...?

பார்த்தீங்கில்லே, பதிவு எழுதும் போதே மனசிலே 'டக்'கென்னு தோன்ற ஒரு வரியைச் சூசகமா அடிக்கோடிட்டு, பாடலில் பிடித்த வரிகளை எழுதிற்றேன்... பயணத்திலே...? ம்... பிடித்த பாடல்களை எல்லாம் ஆடியோ கேசட்டில் பதிவு செய்து, வாக்-மேனில் ரசித்துக் கொண்டே பயணம் செய்தது அந்தக் காலம்... இன்று DD Mix உட்பட என் பதிவுகளில் உள்ள அனைத்து பாடல்களும் கைப்பேசியில்... அவை மனதிலும் முணுமுணுக்கும்... தற்போதைய பயணங்களில் மிகவும் உதவுகிறது... அவைகளைக் கேட்கும் போது எந்தெந்த மனநிலையில் இந்தப் பாடல்களையெல்லாம் உதயகீதம் ஆனது என்பதும், குறளுக்கேற்ப பாடல்களை நினைத்து நினைத்து எனக்கே வியப்பும் வரும்...!

© உதயகீதம் முத்துலிங்கம் இளையராஜா S.P.பாலசுப்ரமணியம் @ 1985 ⟫
போகும் பாதை தூரமே... வாழும் காலம் கொஞ்சமே... ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா2 இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்2 கேளாய் பூ மனமே ஓஓஓஓ... சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... ஆகாயம் பூக்கள் தூவும் காலம்... உள்ளம் என்னும் ஊரிலே... பாடல் என்னும் தேரிலே... நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே... எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே2 கேளாய் பூ மனமே ஓஓஓஓ; சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்; ஆகாயம் பூக்கள் தூவும் காலம்...

10. கனவுப் பயணம் ஏதாவது...?

அப்படி எல்லாம் எதுவும் இல்லேங்க... ஏன்னா ரொம்ப எதிர்பார்ப்பு எதிலும் எதிர்ப்பார்க்கிறதில்லே... காரணம் முயற்சியும் ஆர்வமும் மனதில் வைராக்கியமா இருக்கும்... அதுக்கு முக்கிய காரணம் தோல்வி... தோல்விகள் கூடக் கூட பொறுமை இன்னும் கூடும்...! அதனாலே நிச்சய தாம்பூலம் நடந்ததை எண்ணி கவலைப் பட்டால் அவன் மடையன்2

© நிச்சய தாம்பூலம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫
ஆஹா, நடப்பதை எண்ணி வருத்தப் பட்டால் அவன் மூடன்... போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்... அவன் இவனே இவன் அவனே... அட இன்றுமில்லை நாளையில்லை... இரவில்லை பகலில்லை... இளமையும் முதுமையும் முடிவுமில்லை2 ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்..ம்.. ஓஹோ ஹோ... ஆண்டவன் படைச்சான் எங்கிட்ட கொடுத்தான்... அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்... என்னை அனுபவி ராஜான்னு அனுப்பி வைச்சான்... என்னை மட்டுமல்ல... உங்களையும் தான்... வாழ்த்துகள்... +

நன்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தமிழ் மணம் 1 ஹாஹாஹா நான்தான் ஃபர்ஸ்ட்

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    அண்ணா.

    தங்களின் பயணத்தை பற்றி மிக சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் அதிலும் இனி சொந்த வியாபாரம் என்னும் போது மகிழ்ச்சிதான். தொடருங்கள் வியாபாரத்தை நல்ல பொருளாதாரம் ஈட்ட எனது வாழ்த்துக்கள். த.ம 2

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வாங்க தனபாலன். அருமையாக பயன்னிது உள்ளீர்கள். கடையில் பாடினீர்களே ஒரு பாட்டு.. ஆண்டவன் படைச்சான்.. அதுதான் நான் பயணிக்கும் போது முனுமுனுக்கும் பாட்டு.

    பதிலளிநீக்கு
  4. பயணம் பற்றிச் சொல்லியது அருமை சகோ. :) பிடித்தது சைக்கிள் . இதை ரசித்தேன் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேனம்மை சகோ நீங்கள் எங்கள் ரிலேயில் உள்ளீர்கள். டார்ச்சைப் பெற்றுக் கொள்ளுங்கள் முடிந்தால்....ட்ராக்கில் இணைந்து கொள்ளுங்கள்...

      நீக்கு
  5. பயணம் முடிந்து திரும்பிய தனபாலனின் அருமையான பதிவு
    இன்றையவானம் தமிழ்ச்செல்வன்

    பதிலளிநீக்கு
  6. பதிவுக்கும் துணையாக பாட்டு. சுகமான பயணத்துக்கு துணையாக பாட்டு. அருமை அருமை

    பதிலளிநீக்கு
  7. பதிவகம் எதிர்பார்த்துக் கொண்டிருகிறேன் .என்ன ஆயிற்று?

    பதிலளிநீக்கு
  8. அன்பின் அண்ணா...
    உங்கள் பயணங்கள் + பாடல்கள் என அழகாய் தொடுக்கப்பட்ட (பா)பூமாலை இந்தப் பகிர்வு....

    உங்களது பகிர்வுகள் எல்லாமே தங்களினின் இசை ஆர்வத்தைப் பறைசாற்றும். இந்தப்பதிவு இன்னும் சூப்பர்... பதில்களும்... அதற்கு தகுந்த பாடலுமாய்... சான்ஸே இல்லை அண்ணா.... கலக்கல்.

    உங்கள் தொழிலில் கண்டிப்பாக வெற்றிச் சிகரத்தை அடைவீர்கள்... வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மிக மிக அருமையான பதில்கள் டிடி. பல பாடல்களும் இன்று உங்கள் மூலமாகவே அறிமுகம் ஆகி உள்ளது. இப்போதெல்லாம் பாட்டுக் கேட்கும் வழக்கம் எனக்குக் குறைந்து வருகிறது என நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. அது சரி, குற்றாலத்திற்குச் சமையல் செய்ய ஆட்களை அழைத்துச் செல்கிறீர்களா! ஹையோ, எவ்வளவு நன்றாக இருக்கும். இதே போல் நாங்க யு.எஸ்ஸில் வெளி ஊர்களுக்குப் போனால் ரைஸ் குக்கர், புளிக்காய்ச்சல், பொடி போன்றவை எடுத்துச் செல்வோம். கையில் கொஞ்சம் அரிசி. அங்கே போய் ரைஸ் குக்கரில் சாதம் வைத்துத் தயிர் எல்லா இடத்திலும் கிடைக்குமே, புளிக்காய்ச்சல் போட்டுச் சாதம், தயிர் சாதம் எனச் சாப்பிடுவது உண்டு. காலையில் தங்கும் ஹோட்டலில் இலவசமாக காம்ப்ளிமென்ட்ரி பிரேக்ஃபாஸ்ட். அதிலே ப்ரெட் டோஸ்ட், ஜூஸ், காஃபி சாப்பிட்டுப்போம். மாலை பழங்கள்னு வைச்சுப்போம்.

    பதிலளிநீக்கு
  11. அன்பின் தனபாலன் ..
    தங்களுடைய கைவண்ணம் கண்டு எவ்வளவு நாட்களாகின்றன!..

    மேலும் மேலும் வளர்க.. நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  12. அண்ணா ஒரே ஒரு பாட்டு தான் வேணும்னு கேட்டது எவ்வளோ தப்புன்னு இப்போதான் புரியுது. எல்லோரும் பயணம் தொடர்பான படங்களா இணைத்து பதிவெழுத, நீங்க உங்க ஸ்டைலில் பாட்டாவே பாடீடீங்க!!! ஒவ்வொரு பதிலும் பாடலும் அட்டகாசம்:) பயணத்தில் இணைந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  13. வியாபாரத்தில் பெருவெற்றி காண வாழ்த்துக்கள் சார்

    பதிலளிநீக்கு
  14. பாடல்களுடன் உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  15. தங்கள் வியாபாரம் செழிக்க நல்வாழ்த்து. பயணத்தொடர் தங்கள் பாணியில் வித்தியாசமாக இருந்தது. நீலகிரி எக்ஸ்பிரஸ் நினைவூட்டல் அருமை.

    பதிலளிநீக்கு
  16. உங்கள் பதிவை படித்ததும்,நெஞ்சோடு ஒரு சந்தோசம் ஒட்டிக் கொண்டது :)

    பதிவகம் எந்த நிலையில் உள்ளது ஜி ?

    பதிலளிநீக்கு
  17. ஆகா பயண அனுபவம் இனிக்கிறதே சார்,
    அதிலும் பாடலக்ளை நூல்க்கோர்த்து
    நெய்திருக்கிற,நெய்து கொண்டிருக்கிற
    விதம் மிக நன்று/வாழ்த்துக்கள் சார்/

    பதிலளிநீக்கு
  18. நாங்களும் பயணத்தில் கையோடு சில சமையல் வேலைகளுக்கானவற்றை எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. காரில் பயணித்தால் மட்டுமே. இல்லை என்றால் வெளியில்தான் என்ன கிடைக்கின்றதோ அதுதான்.

    அருமையான பதிவு டிடி. செம செம..கலக்கல் அழகு. எல்லோரும் கலக்குகின்றீர்கள் எங்களைத் தவிர...இந்த ரிலேயில் கொஞ்சம் நாங்கள் வீக்காகிவிட்டோமோ...

    பதிலளிநீக்கு
  19. வழக்கம் போலவே வித்தியாசமான பாணியில் டிப்பிகல் டிடி பதிவு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  20. வலைப்பாகவதர் தனபாலன் என்றே உங்களை அழைக்கலாம். அசத்தல் பதிவு. கேள்வியில் ரைட், டிரைவ் என்று வாசித்த போது ஏற்பட்ட குழப்பம் பதிலில் புரிந்துபோனது. தமிழிலேயே கேள்வி கேட்டிருக்கலாம்.

    அசத்தல் :-)

    பதிலளிநீக்கு
  21. பயணங்கள் முடிவதில்லை. வியாபாரம் செழிக்கவும், இனிய மன நிறைவுடன் வாழ்க்கைப் பயணத்தை தொடருங்கள். கண்ணன் அருள்புரிவான்.
    http://www.friendshipworld2016.com

    பதிலளிநீக்கு
  22. உங்கள் பயணம் மிகவும் அருமை
    அதுவும் பாடலுடன் பகிரப்பட்டது
    மிக மிக அருமை உறவே

    பதிலளிநீக்கு
  23. எப்போதுமே உங்கள் பதிவு சுவாரஸ்யமான ஒன்றுதான். பயணம் பற்றிய உங்களது அனுபவங்களை சுருக்கி விட்டீர்கள் என்று நினைக்கிறேன். வழக்கம்போல இந்த பதிவிலும் பாட்டுக்குப் பாட்டு, பாடல் வரிகள் என்று களைகட்டுகிறது.

    இந்த பதிவினில் நீங்கள் இணைத்துள்ள வீடியோக்களில் எனக்குப் பிடித்தமான, நான் அடிக்கடி ரசிக்கும்

    செந்தாழம்பூவில்(முள்ளும்மலரும்) இதுஒரு பொன்மாலை பொழுது(நிழல்கள்)
    என் கண்மணி காதலி (சிட்டுக்குருவி)

    ஆகிய பாடல்களை மீண்டும் கண்டு கேட்டு ரசித்தேன். மற்ற பாடல்களை ரசிக்க நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவின் பக்கம் வருவேன்.

    இந்த ஆண்டுக்கு இது உங்களது முதல் பதிவு என்பதால் என்னுடைய ஆங்கிலப் புத்தாண்டு மற்றும் தமிழ் பொங்கல் நல்வாழ்த்துக்கள். (தொடர் பதிவு எழுத அழைப்பு இல்லாத படியினால் நான் அந்தப்பக்கம் இதுவரை போகவில்லை. எனது தளத்தில் ஜல்லிக்கட்டுதான் ஓடிக்கொண்டு இருக்கிறது).

    பதிலளிநீக்கு
  24. உழைப்பே உயர்வுக்கு வழி...எனக்கு என் நண்பர்கள் சொல்லி தந்தது....நிணைவுககு வருகிறது.....பாடல்கள் கே்ட்க் கேட்க திகட்டாதவை மீண்டும் கேட்க வைத்தீர்கள் நன்றி!!!த.ம10

    பதிலளிநீக்கு
  25. எப்பவாச்சும் ஒரு பதிவு போட்டு எல்லாரையும் காலி செய்துவிடுகின்றீர்கள்...அழகும்...அர்த்தமும்..வாழ்த்துகள் டிடி

    பதிலளிநீக்கு
  26. பயணங்கள் குறித்த உங்களின் பதில்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது. உங்களின் புதிய பயணம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள்! அருமையான பாடல்களை காணொளியாகத் தந்தமைக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  27. பயணத்தின் பல விதங்கள் இருந்தாலும் ரயில் பயணம் அதுவும் ஒரு குரூப்பாக பயணம் செய்வது தனி சுவாரசியமே .

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஜி வழக்கம்போல அருமையான பாடல் கோர்வை அனைத்து வரிகளுமே எல்லோருக்குமே பிடிக்க கூடியவையே.... நிழல்கள் படப்பாடல் யாருக்குத்தான் பிடிக்காது அருமை.
    ரசனையாக அனைத்து காணொளிகளும் இணைத்தது மேலும் சிறப்பு

    நீலகிரியின் நீளத்தை அளந்து பார்த்தேன் ஜி

    மென்மேலும் வாழ்க்கைப்பயணம் சிறக்க எமது வாழ்த்துகள்
    பதிவில் என்னையும் குறிப்பிட்டமைக்கு நன்றி ஜி

    பதிலளிநீக்கு
  29. வியாபாரம் வெற்றிநடை போட வாழ்த்துக்கள்.பயண அனுபவம் புதுமைதான்.

    பதிலளிநீக்கு
  30. பொங்கல் வாழ்த்துக்கள்...
    வியாபாரம் செழிக்க வாழ்த்துக்கள்...

    பாடல்கள் பலவும் நம்ம பயண டேஸ்ட்டுக்கு ஒத்துப் போகிறதே...

    பதிலளிநீக்கு
  31. தொழிலில் அமோக வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ..

    பதிலளிநீக்கு
  32. பாடல்களுடன்...பயணம் இனிமை சகோ.
    தம +1

    பதிலளிநீக்கு
  33. பயணம்... பயணம்... என
    தங்கள் பயணம் பற்றிய பதில்கள்
    சிறந்த பாடல்களின் இணைப்பு
    வாசகர் உள்ளத்தை ஈர்க்கின்றதே!
    இலக்கியச் சுவை சொட்டும்
    இனிய பதிவு இது!
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  34. அன்புள்ள வலைச்சித்தரே!

    தங்களது வாழ்க்கைப் பயணத்தில் வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரவேண்டும்.
    தங்களின் பயண அனுபவங்களைப் பாங்காய்ப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.
    தங்களோடு பாடல்களை நானும் கேட்டு இரசித்துப் பயணித்தேன்...!

    ‘வளர்ந்தாலும் நான் இன்னும் சிறு பிள்ளைதான்
    நான் அறிந்தாலும் அது கூட நீ சொல்லித்தான்‘
    காதோடுதான் நான் பாடுவேன்
    மனதோடுதான் நான் பேசுவேன்...

    ‘வானம் என்ன வானம் தொட்டுவிடலாம்... வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்...’ நம்பிக்கை நாற்றை நட்டுவிட்டுச் செல்லும் நல்ல பாடல்.

    ‘தூரத்தில் போகின்ற மேகங்களே தூரல்கள் போடுங்கள் பூமியிலே
    வேர்கொண்ட பூஞ்சோலை நீர்கொண்டு ஆட ஏரியில் மீன் கொத்தும் நாரைகளே இறகுகள் எனக்கில்லை தாருங்களே ஊர்விட்டு ஊர் சென்று காவியம் பாட..’ மேகம் போலப் பயணிக்கவும் பறவை போல பறந்து திரியவும் ஆசைதான்...!

    ‘வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோகக் கூந்தலோ மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
    செந்தாழம்பூவில்... ’ இடது கையில் சரத்பாபு அவர்கள் லாவகமாக ஜீப்பை ஓட்டிக் கொண்டு ஷோபாவுடன் மலையில் செல்லும் கண்ணதாசனின் அருமையான வர்ணனைப் பாடல்.

    ‘பச்சைப்புல் மெத்தை விரிக்கும், அங்கே இளம் தத்தைகள் தத்தி குதிக்கும் பட்டுபூ மொட்டு விரிக்கும், செந்தேன் பெற
    பொன்வண்டு வட்டம் அடிக்கும் சுற்றிலும் மூங்கில் காடுகள்
    தென்றலும் தூங்கும் வீடுகள் உசியின் மேலே பார்க்கிறேன்
    பட்சிகள் வாழும் கூடுகள் மண்ணின் ஆடைப்போலே வெள்ளம் ஓடுதே அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே இன்னேரம்...’
    -இளையராஜாவின் இயற்கையோடு இயைந்த பயணம்.


    ‘வானமகள், நாணுகிறாள்... வேறு உடை, பூணுகிறாள்...
    இது ஒரு பொன்மாலை பொழுது...’ முதன்முதலில் வைரமுத்துவின் மாலை நேரத்து மயக்கம்.

    ‘இரு மான்கள் பேசும்போது மொழியேதம்மா பிறர் காதில் கேட்பதற்கும் வழியேதம்மா... ஒரு ஜோடி சேர்ந்து செல்லும் பயணங்களில் உறவன்றி வேறு இல்லை கவனங்களில்...’
    பல்ப் ஹாரனுள்ள பழைய பேருந்தில் கருவாட்டுக் கூடையுடன் ஒரு பயணம்.

    ‘நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என்
    வாழ்விலே சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் ’ உதயகீதத்தில் அனைத்து கீதமும் இதயகீதமாக்கும் இனிய பயணம்

    ‘பணங்களைச் சேர்த்து பதுக்கி வைத்தால் அது மடமை
    ஆஹா பகவான் படைத்த பணமெல்லாம் பொது உடமை
    கையில் கிடைத்ததை வீசி ரசிப்பது தான் என் கடமை
    அந்த பெருமை எந்தன் உரிமை
    நல்ல வெள்ளித் துட்டு அள்ளி விட்டு
    துள்ளித் துள்ளி ஆட விட்டு
    சிரிப்பதும் மகிழ்வதும் தனி மகிமை...’

    வாழ்க்கையில் சிரித்து மகிழ்ந்து பயணிப்போம்!

    நன்றி.

    த.ம.15

    பதிலளிநீக்கு
  35. அருமை அண்ணா உங்க பதிவு. அதானே உங்க படிவில் முத்திரை+முகவரி=குறட்பா இல்லைன்னா எப்படி.
    பதிலிலெயே பாடலின் திரைப்படத்தினையும் சுட்டிக்காட்டிய டெக்னிக் சூப்ப்ப்பர்.!!
    உங்க புதிய முயற்சிக்கு என மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  36. வாவ்! பதிவு போட்டதுமே பார்த்து ஒட்டும் போட்டு விட்டேன். உங்க ஊரில் பதிவிட்டால் எங்க ஊரிலிருந்து தான் முதலில் படிப்பேன். ஆனால் தூக்கக்கலக்க்ம். மேலோட்டமா படித்து விட்டு கருத்தெழுத மேலோட்டமெல்லாம் போதாது நாலு தடவை படிக்கணும் என முடிவெடுத்து போய் தூங்கி விட்டேன். அம்பூட்டு பாட்டுக்கள் விபரங்கள் சார். ...இதோ இப்போது தான் முழுமையாக படித்தேன்..!

    சூப்பர் தனபாலன் சார். சந்தடி சாக்கில் திருமணமான புதிதில் ஒத்த சீட்டில் ஒண்னாய் பயணம் செய்த அனுபவம் சும்ம்மா ஜில்ல்ல்லுன்னு இருந்திருக்கும்ல.....! உங்ககிட்ட நிரம்ப கற்றுக்கொள்ளணும் சார். ரசிக்கும் படியான அனுபவங்களும் பாடல்களுமாய்.....அசத்தல்!

    புதிய தொழில் செழிக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  37. சுகமான பாடல்களோடு
    இதமாய் ஒரு பதிவு
    படித்தேன்
    ரசித்தேன் ஐயா
    ந்ன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  38. DD அண்ணாவின் அக்மார்க் முத்திரை! பாடல்கள், அதுவும் பொருத்தமாக!! அடுத்தமுறை நேரில் பார்க்கும்போது இந்த ரகசியத்தைக் கேட்டுத் தெரிஞ்சுக்கனும். :-) பாடல்களும் பாடல் வரிகளும் அனைத்தும் பிடித்தமானவை, கோடிட்ட வரிகள் சில என்னை ஈர்ப்பவையும் கூட!
    உங்கள் தொழிலும் வளமும் சிறக்க வாழ்த்துகள் அண்ணா
    பயண அனுபவங்கள் அருமை அண்ணா.

    பதிலளிநீக்கு
  39. மழைக்குப்பிறகு கடல்...(படம் )வந்துள்ளது

    பதிலளிநீக்கு
  40. பயணம் பற்றி சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் அருமை!

    பதிலளிநீக்கு
  41. அன்பின் டிடி தங்கள் பயணம் மிக்க நன்று
    பாடல்களும் செம.
    என்னையும் தொடர் பதிவிற்கு அழைத்தமைக்கு நன்றி எழுதுகிறேன்
    மிக்க நன்றி.
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  42. அட்டகாசமான பதிவு. மனதை தொட்டுச் சென்றது. பயணம் எப்படி இனிமையோ அதேபோல உங்கள் பதிவும், அதற்கான பாடல்களும் இனிமையோ இனிமை.
    த ம 19

    பதிலளிநீக்கு
  43. லயித்துப் பயணம் செய்திருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  44. அனுபவங்களை சுவையாய் சொல்லியிருக்கிறீர்கள் . நன்று .

    பதிலளிநீக்கு
  45. எவ்வளவு நினைவு....எவ்வளவு லயிப்ப....!

    திரையிசைப் பயணம் அருமை ஐயா.

    தொடர்கிறேன்.

    தாமதவருகை பொறுத்தாற்றுங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
  46. மிகத் தாமதமாக உங்கள் பதிவைப் படிக்கிறேன். பயணம் இல்லாமலயே
    பாடுபவர் நீங்கள். இனி பயணத்தோடு பாடப் போகிறீர்கள். நல்லது. இனிமையான பாடல்களுக்கும் ,கருத்துகளுக்கும் மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  47. இன்று முதல் வருகை......... பயணங்கள் என்றுமே சுகமான அநுபவங்கள்தான். மனதுக்கு பிடித் பாடல்களுடன் பயணம் செய்யும்போது பயணம் முடிந்து விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்க மனது எதிர்பார்க்கும் அந்த அநுபவங்களை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ளும் போது மறுபடியும் பயணம் சுவாரசியம் கூடும் ரொம்ப நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  48. பயண அனுபவத்தைச் சுவை படச் சொல்லியிருக்கிறீர்கள்
    வியாபார வெற்றிகள் தொடரட்டும்

    பதிலளிநீக்கு
  49. பாடல் பயணம் அருமையோ அருமை
    மனதில் ரசித்தேன் தங்கள் அனுபவத்தை

    பதிலளிநீக்கு
  50. பயண அநுபவங்களை அதுவும் பொருத்தமான பாடல்களுடன் பகிர்ந்து கொண்டிருப்பது வெகு சுவாரசியம்.

    பதிலளிநீக்கு

  51. தங்கள் பதிவு என்றாலே அருமையான பாடல்களை கேட்டு மகிழும் வாய்ப்பு இருக்கும்.அதுவும் இந்த தொடர் பதிவில் அருமையான பாடல்களை காணொளி மூலம் இரசிக்க வைத்தமைக்கு நன்றி! எனக்கு மிகவும் பிடித்த பாடல்களை 2, 5,6,7,10ஆகிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும்போது இணைத்தமைக்கு நன்றிகள் பல! தங்கள் பதிவுகளிலிருந்து பதிவிடுவதில் உள்ள பல புதிய தொழில் நுட்பங்களையும் கற்றுக்கொள்ள உதவி செய்வதற்கும் நன்றி!

    பி.கு சனவரி 17 18 19 தேதிகளில் ஊரில் இல்லாததால் தங்களின் இந்த பதிவை படிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். அதனால் தான் பின்னூட்டம் இட தாமதம் ஆகிவிட்டது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.