🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அனைவரும் இங்கு சரிசமமென உணர்த்திடும் மழையே...!

ஒரு துளி விழுது, ஒரு துளி விழுது...2 ஒரு துளி... இரு துளி... சிறு துளி... பல துளி... பட பட தட தட தட தட... சட சட சிதறுது...





© என் சுவாசக் காற்றே வைரமுத்து A.R. ரகுமான் 🎤 M.G.ஸ்ரீகுமார், K.S. சித்ரா @ 1999

சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ...? மின்னல் ஒளியில் நூல் எடுத்துக் கோர்த்து வைப்பேனோ...? சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான் சக்கரவாகப் பறவையானேனோ...? மழையின் தாரைகள் ஈரவிழுதுகள் - விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ...? மழை கவிதை கொண்டு வருது - யாரும் கதவடைக்க வேண்டாம்... ஒரு கறுப்புக் கொடி காட்டி - யாரும் குடை பிடிக்க வேண்டாம்... இது தேவதையின் பரிசு - யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்... நெடுஞ்சாலையிலே நனைய - ஒருவர் சம்மதமும் வேண்டாம்... அந்த மேகம் சுரந்த பாலில் - ஏன் நனைய மறுக்கிறாய்... நீ வாழ வந்த வாழ்வில் - ஒரு பகுதி இழக்கிறாய்... நீ கண்கள் மூடிக் கரையும் போது - மண்ணில் சொர்க்கம் ஏதுவாய்... நீ கண்கள் மூடிக் கரையும் போது - மண்ணில் சொர்க்கம் மீளுவாய்...

அதிகாரம் 2 - வான் சிறப்பு
மழையுடன் ஓர் உரையாடல்... குறளின் குரலாக... இத்துடன் :-
கிராமத்து மக்களின் அனுபவ மொழிகளும், பழமொழிகளும்

அறம் பொருள் இன்பம் அனைத்தும் தழைக்க உதவும் மழையே... உரிய காலத்தில் இடைவிடாது கருணை பொழிந்து உலகை காக்கும் மழையே... இந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நீயே அமிழ்தம்...

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்  
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று (11)  


மாரி அல்லாது காரியம் இல்லை...

தன் ரத்தத்தை பாலாக்கி தரும் தாயைப் போல், உண்பவர்க்குத் தகுந்தவாறு ருசியான உணவுப் பொருள்களை விளைவித்து சமைக்க உதவி செய்வதோடு, குடிப்பதற்கு தானும் ஓர் உணவாக இருந்து, அரிய தியாகம் செய்யும் அற்புத மழையே...

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்  
துப்பாய தூஉம் மழை (12)  


மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று...
/ பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும்...

முக்கால்வாசி கடல் நீர் சூழ்ந்த உலகமாக இருந்து பிரயோசனம் என்ன...? உரிய காலத்தில் நீ வராது போனால்... வாட்டி வதைக்கும் பசியின் கொடுமையால் உயிர்கள் வாழ வழியில்லையே அட்சயப்பாத்திரமே...

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து  
உள்நின்று உடற்றும் பசி (13)  


அகல் வட்டம் பகல் மழை / கோடை குமுறிக் கெடுக்கும்

வேறு எந்தத் தொழிலைச் செய்து திரிந்தாலும், முடிவில் இவ்வுலகம் பின்தொடரும் உழவுத்தொழில் செய்பவர்களின் நிலத்தில் உனது வருகை குறைந்து விட்டால், தொழில்களிலே முதன்மையான உழவுத்தொழிலே குன்றி விடுமே மழையே...

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்  
வாரி வளங்குன்றிக் கால் (14)  


ஆடியில் காத்தடிச்சா (காற்றடித்தால்) ஐப்பசியில் மழை வரும்
/ மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை...

சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே  
எடுப்பதூஉம் எல்லாம் மழை (15)  


மழை பெய்தும் கெடுக்கும்... பெய்யாமலும் கெடுக்கும்...

இவ்வுலகின் தலையை நிமிர்த்தி நடக்க வைத்து பாதுகாக்கும் மழையே... ஒரு துளி கூட நீ அழுகவில்லை என்றால், இவ்வுலகில் பசும்புல்லின் தலையைக் கூட காண முடியாதென்பதை அறிந்த கடவுள் நீயே...

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே  
பசும்புல் தலைகாண்பு அரிது (16)  


எறும்பு முட்டை கொண்டு திட்டை ஏறினால் மழை பெய்யும்
/ மழை விட்டாலும் தூவானம் விடவில்லை...

மழையே... உன் இயல்பான நிலையிலிருந்து அடிக்கடி மாறுவதை யாரிடமிருந்து கற்றுக் கொண்டாய்...? வேண்டாம், நீ இல்லையென்றால் பரந்து விரிந்து ஆர்ப்பரிக்கும் கடல் கூட வற்றிப் போய் திண்டாடும்...

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி  
தான்நல்கா தாகி விடின் (17)  


அடைத்த கதவு திறக்காத மழை / அந்தி மழை அழுதாலும் விடாது

மழையே... நீ இல்லாது போனால் அவரவர் நம்பும் இறைவனுக்கு வழிபாடு ஏது...? பிரார்த்தனை ஏது...? திருவிழாவும் ஏது...? அட... இதையெல்லாம் செய்பவர் தான் ஏது...?
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்  
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு (18)  


மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குக்கூடத் தெரியாது;
/ மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது...?

மாறிக் கொண்டிருக்கும் சுயநல உலகில், நீ மட்டும் பெய்யவில்லை என்றால், சிலர் பிறர்க்கு மகிழ்வோடு கொடுக்கும் தானமும் இருக்காது... பலர் தன்னை மேம்படுத்திக் கொள்ளும் தவமும் இருக்காது...

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்  
வானம் வழங்கா தெனின் (19)  


கர்ணனுக்கு மேலே கொடையும் இல்லை;
கார்த்திகைக்கு மேல் மழையுமில்லை...

முடிவாக மழையே... யாராக இருந்தாலும் நீ(ர்) இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது... நீ(ர்) இல்லாமல் உயிரினும் மேலான ஒழுக்கம் என்பதே நிலைபெறாமல், இல்லாமல் கூட போய்விடும்...

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்  
வான்இன்று அமையாது ஒழுக்கு (20)  


வானம் நினைத்தால் மழை... மனிதன் நினைத்தால் வினை...



© செந்தமிழ்ப் பாட்டு வாலி M.S.விஸ்வநாதன், இளையராஜா 🎤 S.P.பாலசுப்ரமணியம், அனுராதா @ 1992

சின்ன சின்ன தூரல் என்ன... என்னைக் கொஞ்சும் சாரல் என்ன... சிந்தச் சிந்த ஆவல் பின்ன... நெஞ்சில் பொங்கும் பாடல் என்ன... உனது தூரலும், இனிய சாரலும், தீண்டும் தேகம் சிலிர்க்குதம்மா...! நனைந்த பொழுதினில், குளிர்ந்த மனதினில், ஏதோ ஆசை துளிர்க்குதம்மா...! மனித ஜாதியின், பசியும் தாகமும், உன்னால் என்றும் தீருமம்மா...! வாரித்தந்த வள்ளல் என்று, பாரில் உன்னைச் சொல்வதுண்டு...! இனமும் குலமும் இருக்கும் உலகில், அனைவரும் இங்குச் சரிசமமென உணர்த்திடும் மழையே...!

நண்பர்களே தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மழை பற்றிய மொத்தமும்.....நெடுஞ்சாலை மழையில் கரம்பிடித்து அழைத்துப்போய் இருக்கின்றீர்கள்...தொகுப்பு...உவப்பு...உங்கள் கரம் பட்டது கூடுதல் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. மாரி அல்லது காரியம் இல்லையா, மாரி அல்லாது காரியம் இல்லையா?

    மழை பொழிவது போல வைத்திருக்கும் தொழில் நுட்பம் அழகுதான். ஆனால் மழை என்றாலே அலற வைத்திருக்கிறது இயற்கை இந்த முறை!

    பதிலளிநீக்கு
  3. அன்புள்ள வலைச்சித்தரே!

    ‘வான் சிறப்பு’ பற்றி வள்ளுவர் வழிநின்று மிகச் சிறப்பாக விளக்கங்களுடன் விளக்கியது கண்டு வியந்தேன். திரைப்பாடல்களுடன் மழையைக் கொட்டியது அருமை.

    ‘அடடா மழைடா அடைமழைடா!
    அழகா சிரிச்சா புயல் மழைடா !!

    மாறி மாறி மழையடிக்க, மனசுக்குள்ளக் குடைபிடிக்க ,
    கால்கள் நாலாச்சுக் கைகள் எட்டாச்சு,
    என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு;

    மயில்தோகைப் போல இவ மழையில் ஆடும் போது,
    ரயில் பாலம் போல என் மனசும் ஆடும் பாரு;
    என்னாச்சு எதாச்சு, ஏதேதோ ஆயாச்சு! ’

    த.ம.2

    பதிலளிநீக்கு
  4. மழையைப் பற்றிய திருக்குறள், மன்னிக்கவும் திண்டுக்கல் குறள், படித்தேன். வழக்கம்போல் மனதில் ஆழப்பதிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வட்டத்துக்குள் மழை; வட்டத்துக்கு வெளியேயும் மழை. உங்கள் வார்த்தைகளில் மழையை வரவேற்ற கவிதை மழை! சிறப்பான தொழில் நுட்பம். (எங்களுக்கும் கொஞ்சம் சொல்லித் தாருங்கள்) நன்றி அய்யா!

    இன்னும், இன்றும் வலையுலகில் திருவள்ளுவரின் திருக்குறளை மற்றவர்களுக்கு சலிப்பில்லாமல் சொல்லுவது நீங்கள் மட்டுமே. உங்களுக்கு ‘திருக்குறள் சித்தர்” அல்லது “திருக்குறள் பித்தர்” என்ற பட்டத்தினையும் தந்திடலாம். உங்கள் பதிவினைப் படித்தவுடன்,

    மாமழை போற்றுதும்! மாமழை போற்றுதும்!
    நாமநீர் வேலி உலகிற்கு அவன் அளிபோல்
    மேல்நின்று தான் சுரத்தலான். – (சிலப்பதிகாரம்)

    என்ற இளங்கோ அடிகளின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    பதிலளிநீக்கு
  6. மழையை நேசிக்க நம்மை விட்டால் யார்,
    பொருள் தந்த மழை.வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  7. மண் பயனுற வாரி வழங்கும் மாரி போல்
    மனம் பயனுற மலர்ந்தது இந்தப் பதிவு..

    பதிலளிநீக்கு
  8. மாமழை போற்றுதல் மனிதர்க்கு சிறப்பு மண்ணிற்கு சிறப்பு
    ஆனால் கோவில்களை தூர்த்துவிட்டு கும்பிடச்செல்வதுபோலத்தான் இன்றைய தமிழகத்தின் நிலை!

    பதிலளிநீக்கு
  9. வான் சிறப்பு உங்கள் வரிகளில் சிறப்பு

    பதிலளிநீக்கு
  10. அய்யா வணக்கம். மழைக்குறள், அதற்கான அழகான பொருள், பழமொழிகள், இவற்றை அழகாகத் தந்த தொழில் நுட்பம் அடடா..
    இவற்றில் எது கூடுதல் அழகுன்னு எப்படிச் சொல்ல..அருமை அய்யா.

    பதிலளிநீக்கு
  11. சின்னச்சின்ன மழைத்துளிகள் சேர்த்து அழகான பாடல்களால் பதிவுகள்.

    மழை பெய்தால் ஆண்கள் கறுப்புக்குடை =கொடி பிடிக்க..
    பெண்களோ பூங்கொத்து கொடுத்து வரவேற்பு கொடுக்கிறார்களோ..!

    பதிலளிநீக்கு
  12. நீங்க வலைச் சித்தர் மட்டுமல்ல ,மழைப் பித்தரும் கூட :)

    பதிலளிநீக்கு
  13. மழை பற்றிய பதிவு அருமை. தங்களுக்கு திருக்கார்த்திகை தீபத்திருநாள் வாழ்த்துக்கள் !!

    பதிலளிநீக்கு
  14. வான் வழங்கும் கொடை "மழை"
    வலைச் சித்தர் வழங்கிய கொடை "திருக்குறள் மழை"
    நன்றி நண்பரே,
    த ம +
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  15. போதுமென்ற மழையே பொன் செய்யும் மருந்து ஆகிவிட்டாலும் உங்கள் குறள்களின் விளக்கத்திலும் மழைச்சாரல் நுட்பத்திலும் ரசிக்க வைத்தது மழை.. தனபாலன் சகோ

    பதிலளிநீக்கு
  16. திருக்குறள்...திண்டுக்கல் குரலாகமாறிவிட்டது..இப்படித்தானோ...நன்றி!

    பதிலளிநீக்கு
  17. டிடி அருமையான மழைக் குறள்கள் உங்கள் குரலில். மழை இம்மும்றை கெடுத்துவிட்டது என்று சொல்லப்படுகின்றதுதான்...விவசாயிகளுக்கு அதிகமானாலும் கெடுதல்தான்...ஆனால் நாம் மக்கள் செய்யும் தவறுகளினால், ஆள்பவர்கள் செய்யும் தவறுகளால் விளைந்தவற்றிற்கு நாம் மழையைக் குற்றம் சொல்லி என்ன பயன்..

    அருமையான விளக்கங்கள் அதுவும் பழமொழியுடன்...என்னவானாலும் இயறகையை, மழையைப் போற்றுவோம்....உங்கள் தளத்திலும் மழை பொழியுது...நல்ல காலம் வெள்ளம் வரலை..ஹஹ்ஹ

    பதிலளிநீக்கு
  18. வான் சிறப்பு குறள் விளக்கமும், திரைபாடல்களும், கிராம மக்களின் அனுபவ மொழிகளும் மிக அருமை.
    வாழ்த்துக்கள். கார்த்திக்கை தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  19. மழையைப் பற்றி இவ்வளவு குறள் இருக்குதுன்னு இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.

    பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்..... பாடலை மிஸ் பண்ணிட்டீங்களே ப்ரோ. சேர்த்திருந்தால் மழைக்கு ரொம்ம்ப இதமா இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. அருமையான பதிவு... மழை நனைந்தபடியே படித்த அனுபவம்

    பதிலளிநீக்கு
  21. மழைக்கான குறட்பாக்களும் அதற்கேற்ற பழமொழிகளும் அருமை தனபாலன் சார். தேர்ந்தெடுத்த திரைப்படல் வரிகளும் அத்தோடு துளிகள் விழும் அழகும் ரசிக்கவைக்கிறது.

    பதிலளிநீக்கு
  22. சொட்டுச்சொட்டய் மழைத்துளிகள் விழும் அழகே அழகு! மிக அருமையாக வந்திருக்கின்றது சார், மழை குறித்த வர்ணனைகளும் பாடல்களுமாய் பதிவு மிக அருமை.

    மழை நம்ம மக்களை ரெம்பத்தான் படுத்தி எடுத்து இருக்கின்றது.

    பதிலளிநீக்கு
  23. ஆஹா அருமை அருமை டிடி சார்,,,,,
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  24. தனபாலன் சார் அருமையான பதிவு, மழை ஒரு இன்பம்தான் சந்தேகமில்லை.

    பதிலளிநீக்கு
  25. மழைத் தூறலுடன் கூடிய திருக்குறள் வரிகள் மிகவும் ரசிக்க வைத்தன. உங்கள் பக்கத்தில் மழையில் நனைந்தபடியே பதிவைப் படித்தது புது அனுபவம். இரண்டாவது முறையும் - மழைத்தூறலுக்காக - படித்து நனைந்தேன்.

    'வாழ உலகினில் பெய்திடாய்' என்று ஆண்டாளும் திருப்பாவையில் மழைக் கடவுளை வேண்டுகிறாள்.

    பதிலளிநீக்கு
  26. வள்ளுவன் கவியில் தங்கள்
    அற்புதமான மொழிபெயர்ப்பில்
    நனைந்து மகிழ்ந்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  27. மழைபற்றி மழையெனப்பொழுந்துள்ள ஆக்கம் அருமை. நன்கு தங்களின் பதிவு மழையில் நனைந்து இன்புற்றோம்.

    அளவுக்கு மிஞ்சினால் கறுப்புக்கொடி (கறுப்புக் குடை) காட்ட வேண்டியதாகத்தான் உள்ளது.

    மாதம் மும்மாரி அளவாகப் பெய்து உதவினால் பூங்கொத்து கொடுத்து வரவேற்கலாம்தான்.

    பதிலளிநீக்கு
  28. வள்ளுவனும் திரை இசைப் பாடல்களும் என்னமாய் வந்து விழுகிறது தனபாலனின் பதிவுகளில் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. வள்ளுவரின் வான் சிறப்புக்கு தாங்கள் அளித்திருக்கும் கொடை கிராமத்து பழமொழிகள். அனைத்தும் அருமை. பாராட்டுக்கள்! கார்த்திகைக்கு மேல் மழையில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். உங்கள் வாக்கு பலிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  30. மழையைக் குறித்து இவ்வளவு குறள் இருப்பது தங்களது குரல் வழி அறிந்தேன் ஜி அனைத்தும் அருமை வாழ்த்துகள்

    மழை வளம் மனிதனுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களுக்குமே இதை மனிதன் ஏனோ மறந்து விட்டான்.

    மழைப்பேறும் பிள்ளைப் பேறும் மகாதேவனுக்குக் கூடத் தெரியாது மழைக்கும் சூழலுக்கும் காலம் ஏது ?
    இந்நிலையில் பாவம் ரமணனுக்கு மட்டும் எப்படி தெரியும் ?

    வாழ்த்துகள் ஜி

    பதிலளிநீக்கு
  31. அடாது பெய்து விடாது கெடுக்கும் அடர்மழைக் காலத்தில் அய்யன் திருவள்ளுவரின் அமுத வரிகளை தங்களின் எண்ணவோட்டத்தோடும் அதற்கொப்பச் சொலவடைகளோடும் கருத்துறக் காட்சிப்படுத்திய தங்களின் மதிநுட்பத்தை என்னவென்பது?

    பதிலளிநீக்கு
  32. மழையைப் பற்றிய திருக்குறள், மன்னிக்கவும் திண்டுக்கல் குறள், படித்தேன். வழக்கம்போல் மனதில் ஆழப்பதிந்தது. நன்றி.//
    யம்புலிங்கம் ஐயாவை வழி மொழிகிறேன்.
    அருமை.. அருமை.. டிடி
    உங்களிற்கும் கரந்தையாருக்கும் கவிதை வழி தான் வருகிறது வேட்பிரஸ் வழி கருகுதில்லை...
    https://kovaikkavi.wordpress.com/

    பதிலளிநீக்கு
  33. அருமை டிடி;மழை பெய்யாவிட்டாலும் சபிக்கிறோம்;அதிகம் பெய்தாலும் சபிக்கிறோம்,தப்பை நம் மீது வைத்துக் கொண்டு.வள்ளுவர் காலத்தில் எப்போதும் மழை பெய்து கெடுத்திருக்காது;மாதமும்மாரி பெய்தால் சரியான முறையில் பயன் பட்டிருக்கும்

    பதிலளிநீக்கு
  34. இரண்டாவது அதிகாரமான வான் சிறப்பை இதை விட அழகாக சொல்ல முடியாது.பொருத்தமான பழமொழிகள் அருமை

    பதிலளிநீக்கு
  35. மழையை பற்றிய கருத்துக்களை போழிந்துவிட்டீர்கள்... அருமை அய்யா

    பதிலளிநீக்கு
  36. வழக்கம் போல திருக்குறளும், திரைகுரலும் சேர்ந்து ஒரு அட்டகாசமான பதிவை கொடுத்திருகிறீர்கள் அண்ணா!

    பதிலளிநீக்கு
  37. ஸ்ரீராம் சொல்வது போல மழை என்றாலே அலற வைத்துவிட்டது இந்த வருடம்.
    .
    மழையைச் சொல்லிப் பயன் இல்லை. மனிதர் தவறுக்கு மழை என்ன செய்யும். குறளும் உங்கள் எழுத்தும் அருமை தனபாலன்.

    பதிலளிநீக்கு
  38. ரொம்பத்தான் மழையில் நனைந்திருக்கிறீர்கள்! உங்களது பதிவைப் படித்தவுடன் நான் தலையைத் துவட்டிக்கொண்டேன் ! ஜலதோஷம் கிலதோஷம் பிடிச்சிருச்சுன்னா, எதுக்கு வம்பு?

    பதிலளிநீக்கு
  39. அண்ணா
    பதிவு சிறப்பு என்றால்...
    முதல் பாரா, கடைசிப் பாராவில் மழை பெய்யுதே...
    இதெல்லாம் எப்படி...
    அசந்து பொயிட்டேன் அண்ணா...
    உங்ககிட்ட நிறையக் கத்துக்கணும்...

    பதிலளிநீக்கு
  40. பொழிந்து தந்த இயற்கையை போற்றுவோம். அதன் இயல்பை அறியத்தவறிய மாணுடரின் அறியாமையை அகற்றுவோம்.

    நம் தேவையறிந்தே வந்தது வான்மழை...
    அதை அதீதமென்று புலம்புவது பெரும்பிழை...

    ஏற்பட்ட இன்னல்கள் துயரமானவைதான்..
    ஆனாலும் அதில் பெற்ற பாடங்களை ஏற்க இன்னும் நாம் தயாராக இல்லை...
    நாம் மட்டும் அல்ல. அரசும் அதில்
    எந்திரமாய் பணியாற்றும் அதிகாரிகளும்
    தந்திரமாய் தற்காத்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும்..

    வந்த நல்ல மழையையே நம்மால் தாங்க இயவில்லை என்று சொல்கிறோம்!..
    இந்த மழையுடன் காற்றும் இடியும் சேர்ந்து கொட்டி தள்ளியிருந்தால்...?
    நினைக்கவே பயமாய் இருக்கிறது...

    இனியாவது 'கடலூருக்கு' மட்டுமல்ல.. எல்லா
    'கடலோர பகுதிகளுக்கும்' கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தால் மட்டு போதாது...
    'கூடுதல் கவனமும்'.. உடன் கண்காணிப்பும் அவசியம்...
    செய்வார்களா???

    மழை தந்த படிப்பினைகளை பற்றி யோசித்தேன்.. அப்போது
    சத்தமின்றி வந்த தங்களின் திரு'க்'குறள் மழையை ரசித்தேன்...
    ஆழ்ந்த சிந்தனையோடு ஒரு (எம் மண்டைதான்) காலி குடத்தை வைத்தேன்...
    நிரம்பியது கண்டு மகிழ்ந்தேன்..

    நன்றி

    பதிலளிநீக்கு
  41. மழை பற்றிய பாடலும் குரளும் அருமையான விளக்கம்.

    பதிலளிநீக்கு
  42. வணக்கம்
    அண்ணா
    அழகான பாடல்களும் சிறப்பான குறள்களும் பதிவுக்கு ஒரு மகுடம் அண்ணா... அத்தோடு பழமொழிகளும் இனிது.... படித்து மகிழ்ந்தேன் த.ம 16
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  43. ஐயையோ! மழையா!? மழையும் போதும், மழை பத்திய பதிவும் திகட்ட திகட்ட அனுபவிச்சாச்சு. இனி கொஞ்ச காலத்துக்கு ரெண்டுமே வேணாம்பா சாமி!

    பதிலளிநீக்கு
  44. இங்கே கோடையின் தகிப்பில் நொந்துகொண்டிருக்கும் மனத்துக்கு மழைக்குறளின் குளுமையும் சார்ந்த பழமொழிகளும் சொல்லொணா இதம். வான் தரும் புதையலை சேமித்துவைக்கக் கலங்களின்றி தெருவில் திண்டாடவிட்டுக்கொண்டிருக்கிறோம்.. நம்மைத் திண்டாடவைத்துக்கொண்டிருக்கிறது மழை..

    பதிலளிநீக்கு
  45. மழையை இரசிக்காதவர்கள் உண்டோ இத்திருநாட்டில்..?? அருமையான வள்ளுவன் வழியில் பதிவு ஐயா..

    நன்றி..

    பதிலளிநீக்கு
  46. வணக்கம் !

    மழையைப் பற்றி இருபது குறள்கள் தேடி எடுத்து அசத்தலானா பதிவு இட்டீர்கள் மழைப்பாடல்களும் அருமை ஒவ்வொரு குரலுக்கும் ஒவ்வோர் கிராமத்துப் பழமொழி ஹைலைட் அத்தனையும் அருமை
    தொடர வாழ்த்துக்கள்
    தம +1

    பதிலளிநீக்கு
  47. அப்பப்பா "மழை"யாய் பொழிந்து விட்டீர்கள்!

    பதிலளிநீக்கு
  48. வான் மேகம்..பூப் பூப்பூவாய் தூவும்...!...பூமியெங்கும் ஜலதரங்கம் ! - வான் சிறப்பு குறள்களுக்கு தான் சிறப்பு செய்துள்ளீர்கள் டி.டி. !

    பதிலளிநீக்கு
  49. மழையின் சிறப்பை சொன்ன திருக்குறள்கள், சினிமாப் பாடல்கள், கிராமத்து மக்களின் சொலவடைகள் என்று மழையை பெருமை படுத்தி விட்டீர்கள். எதற்கும் சென்னைப் பதிவர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள். அவர்களுக்கு இப்போது மழை என்றாலே அலர்ஜி!

    பதிலளிநீக்கு
  50. பதிவின் துவக்கத்திலும் முடிவிலும் மழை பெய்யுமாறு அமைத்திருப்பது சிறப்பு! மழை பற்றிய குறள் விளக்கத்தைக் கிராமத்து மக்களின் அனுபவமொழியோடு சேர்த்துக் கொடுத்திருப்பது மிகவும் அருமை. பாராட்டுக்கள் தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
  51. மழையோ மழை .நல்ல மழை .நல்ல பாடல்கள்.

    கேட்டு நீண்ட நாட்களாயிற்று.பகிர்வுக்கு நன்றி .


    பதிலளிநீக்கு
  52. மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்!

    பதிலளிநீக்கு
  53. குறளோடு பழமொழிகளும் - பிரமாதம் அண்ணா!
    இனிய மழைப்பாடல்கள்!

    பதிலளிநீக்கு
  54. திருக்குறளின் திரை இசையின் தொழில்நுட்பத்தின் சரிசமக் கலவை.

    இனிமைக்குச் சொல்லவா வேண்டும்.

    தாமதத்திற்கு வருந்துகிறேன் ஐயா.

    நன்றி

    பதிலளிநீக்கு
  55. இந்த உங்களின் இந்த பதிவு சென்னைகாரர்களுக்கு நிச்சயம் பிடிக்காது காரணம் இங்கு மழை தொடர்ந்து (உங்களின் அன்பை போல )கொட்டிக் கொண்டிருக்கிறது.....

    பதிலளிநீக்கு
  56. பிரபஞ்சத்தில் வாழத்தக்க உயிர் மூலக் கூறுகளை தம்முள் பொதித்து நிலமிறங்கும் ஒவ்வொரு துளி மழையும் வாழ்க!

    பதிலளிநீக்கு
  57. தனப்பால்,

    அழகிய மழையில் நனைய வைத்துவிட்டீரே, இருங்க கொஞ்ச சுக்கு காபி குடிச்சிட்டு வரேன்.

    அருமையாக மழைத்துளிகளை எழுத்து நூலில் கோர்த்து கொடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

    கோ

    பதிலளிநீக்கு
  58. மழைத் துளிகள் பற்றிய
    தங்கள் பதிவில் நனைந்தேன்
    ஆயினும்
    மழைத் துளிகளால் நனைந்த
    மக்களை எண்ணிப் பார்த்தேன்

    வானிலிருந்து - கடவுள்
    தன் திருவிளையாடலைக் காட்ட
    தரையிலிருந்து - மக்கள்
    துயருறும் நிலை தொடராமலிருக்க
    கடவுளைத் தான் வேண்டுகிறேன்...

    போதும் போதும் கடவுளே! - உன்
    திருவிளையாடலை நிறுத்தினால் போதுமே!

    பதிலளிநீக்கு
  59. மழை மழை நன்று ..ஆனால், பட்ட கொடுமைகள்?????

    பதிலளிநீக்கு
  60. இங்கு பெய்யிற மழை நின்னாதங்கோ..வெளியில மழை நிக்கிமுங்கோ......

    பதிலளிநீக்கு
  61. 27 கருத்துக்கள்...பொறாமையா இருக்கு அங்கிள்...கொஞ்சம் என் வலை தளம் பக்கமும் தள்ளிவிடுங்க

    பதிலளிநீக்கு
  62. பொறாமை படக்கூடாது ஏங்கில்...எல்லா தளத்தையும் பொறுமையாக படிச்சு.. ஒவ்வொரு தள்த்திலும் தன் முத்திரையை வோட்டாக போட்டு வருகிறார்..தெரியுமா...?????

    பதிலளிநீக்கு
  63. மழையைப் போற்ற வள்ளுவனால் மட்டுமா முடியும். கொட்டுகின்ற மழையுடன் மழையை ரசித்து பல பக்கமாய்ப் பார்க்க உங்களாலும் முடியும். அற்புதம்

    பதிலளிநீக்கு
  64. சார்

    மழையைப் பற்றி இலக்கியத்தில் இவ்வளவு செய்திகள் இருக்கின்றனவா! ஆச்சரியம் . நம் தமிழ் சான்றோர்கள் சொல்லிவிட்டு சென்ற அறவுரையையும் அறிவுரையையும் நாம் பின்பற்றாததால் சமீபத்து தொடர் மழையில் பல இன்னல்கள் அடைந்தோம். இனியாவது விழிப்போம்.

    பதிலளிநீக்கு
  65. வணக்கம் சகோதரரே,

    நலமா? தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வளம் சேர்க்கும் நலம் நிறைந்த ஆண்டாக இவ்வாண்டு அமைய இறைவனை பிராத்திக்கிறேன்.

    மழையோடு இணைந்த குறள்களும் பழமொழிகளும் மீண்டும் மீண்டும் பதிவை படிக்க தூண்டின. தொழில் நுட்பம் பிரமிக்க செய்தன. மிகவும் ரசித்தேன்.

    நான் வலையில் வாரா நாட்களில் விட்டுப்போன தங்கள் பதிவுகளையும், மற்ற அனைவரின் படைப்புகளையும் படித்து வருகிறேன். என் தாமதக் கருத்துக்களுக்கு மன்னிக்கவும்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு


  66. அன்பு நண்பரே!
    வணக்கம்.


    "இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2016"


    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  67. என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ ...!

    பதிலளிநீக்கு
  68. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!
    இனிய 2016 இல் எல்லாம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  69. அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  70. இப்புத்தாண்டில் அனைவரின் நல்லெண்ணங்களும் நல்ல நிகழ்வுகளாய் ஈடேறி, மன நிம்மதியும் உடல் நலமும் நீடிக்க வேண்டுகிறேன்.

    - சாமானியன்

    எனது புத்தாண்டு பதிவு... " மனிதம் மலரட்டும் ! "
    http://saamaaniyan.blogspot.fr/2016/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து, கருத்திட வேண்டுகிறேன். நன்றி

    பதிலளிநீக்கு
  71. அன்புள்ள வலைச்சித்தரே,

    வணக்கம். இன்று பிறந்தநாள் காணும் தங்களை அன்புடன் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்.

    -மாறாத அன்புடன்,
    மணவை ஜேம்ஸ்.

    பதிலளிநீக்கு
  72. மழையும் குறளும்...அத்துடன் திரை கானமும் வழக்கம் போல் அருமை சகோ...காலம் கடந்து சொல்கிறேன் மன்னிக்கவும்...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  73. புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  74. ஜி தங்களை பயணத்தைக் குறித்த தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன் வருகை தந்து விபரம் அறிய இதோ இணைப்பு.
    http://www.killergee.blogspot.ae/2016/01/in.html

    பதிலளிநீக்கு
  75. மழைக்காலம் முடிந்து பனிக்காலம் தொடங்கி இருக்கிறது. வலை சித்தரின் தளத்திலே மழை இன்னும் விடல.......

    பதிலளிநீக்கு
  76. பல வருடங்களுக்குப் பிறகு இப்போது நாங்களும் சிறுசிறு தூறல்களில் தினமும் நனைந்துகொண்டிருக்கிறோம்.

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  77. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  78. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்1

    மீண்டும் பதிவுலகில்...
    http://www.friendshipworld2016.com/

    பதிலளிநீக்கு
  79. மழை உணர்த்திவிட்டுதான் போகிறது எல்லோரும் சமமென/ மனம் நிறைந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்/

    பதிலளிநீக்கு
  80. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

    பதிலளிநீக்கு
  81. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்
    (வேதாவின் வலை)

    பதிலளிநீக்கு
  82. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  83. வணக்கம்
    அண்ணா
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  84. அடேங்கப்பா! 92 பின்னூட்டம். செஞ்சூரி அடித்து விடுவீர்கள்.தனபாலன் சாருக்கு பின்னூட்டத்தில் கின்னஸ் சாதனை செய்யும் திட்டம் ஏதுமுண்டோ?

    92 பின்னூட்டத்துக்கும் பதிலிட்டால் இருமடங்காகி விடும் சார்.

    பொங்கல் நல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.