🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



10 கடவுளைக் கண்டேன்...!

பதிவுலகம் சுறுசுறுப்படைய அவ்வப்போது நம்ம தேவகோட்டை கில்லர்ஜி (அபுதாபி) கனவு காண்பார்... இப்போது 10 ஆசைகளைக் கடவுளிடம் முன் வைக்கச் சொல்கிறார்... வாழ்கிற, வாழ்ந்த 10 ஆசை மனங்களைப் பற்றி சொல்கிறேன்... "ஏற்கனவே 18 பாடல்களோடு "அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்" பதிவு இருக்கிறதே ஜி..." என்றேன்... (வாசிக்காதவர்கள் இங்கே சொடுக்கவும்) "பாட்டுக் கேசட்டுகளை தூசி தட்டி எடுத்து விடுங்க"ன்னு வேறு சொல்லிட்டார், எதைத் தட்டினேன் என்பது முடிவில்...!


வீடு நிறையப் பொருள் சேர்த்து வைச்சிக்கிட்டே இருக்கும் கஞ்ச மனதிற்கு :

குருடான கவிஞனுக்கு ஊதாப்பூ என்ன...? ரோசாப்பூ என்ன...? செவிடான ரசிகனுக்குக் கல்யாணி என்ன...? காம்போதி என்ன...?

பணம் மட்டும் இருந்தா எதையும் சாதிக்க முடியும் எனும் பேய் மனதிற்கு :

பேய் போல் பணத்தைக் காக்கின்றான்... பெரியவர் தம்மைப் பழிக்கின்றான்...

மத்தவங்களை விடப் பணமும் பொருளும் ஒன்றே சேர்க்கும் மனதிற்கு :

பல கோடி சேர்த்தாலும் மேலும் நினைக்கும் - படுபாவி என்கின்ற பேரை கொடுக்கும்...

ஒருத்தருக்கும் ஒரு பைசா கூட பிரயோசனமில்லா வாழ்ந்த மனதிற்கு :

ஊரை விட்டுப் போகுறப்போ பெயரு ரொம்ப கெட்டுயிருந்தா, யாரு உன்னை தூக்க வருவா...? நல்ல பெயரு இங்கே வாங்கிக்கத்தான் யாரும் அழுவா...?

தேவைப்படுவோர்க்குக் கொடுத்து மகிழாத, கோடீசுவரரான கேடி மனதிற்கு :

கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன...?

தானும் அனுபவிக்காமல், உதவும் எண்ணமே இல்லாத நோயாளி மனதிற்கு :

இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை... இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை...?

இல்லாதவர்க்கு மனதார ஏதாவது ஒன்றைக் கொடுத்து உதவாத மனதிற்கு :

தவற்றுக்கும் தவறான தவற்றைப் புரிந்துவிட்டு, தனிப்பட்டுப் போனவன் ஞானப்பெண்ணே... பதறிப் பதறி நின்று கதறிப் புலம்பினாலும், பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே...?

கஞ்சத்தனத்தால் எல்லோரிடமும் வெறுப்பைச் சம்பாதிக்கும் அல்ப மனதிற்கு :

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...?

அனைத்தும் இருந்தும், நாய் பெற்ற தெங்கம் பழம் போல் இருக்கும் மனதிற்கு :

உண்டாக்கி விட்டவர்கள் இரண்டு பேரு... இங்கே கொண்டு வந்து போட்டவர்கள் நாலு பேரு... கொண்டாடும் போது ஒரு நூறு பேரு... உயிர் கூடுவிட்டு போன பின்னே கூட யாரு...?

பிறர்க்குக் கொடுத்துப் பழகி சந்தோசமாக வாழும் மனதிற்கு :

வெள்ளிப் பணத்துக்கும் நல்ல குணத்துக்கும் வெகு தூரம்... இது உள்ளபடி இந்த உலகம் உணர்த்தும் ஒரு பாடம்...!

எதைச் சொல்ல வருகிறேன் என்று யாராவது சொல்வீர்களா...? அதற்கு முன் இது முழுமையான பதிவு அல்ல... காரைக்குடியில் நடக்கவிருக்கும் “இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை”க்காக ஒரு தொழினுட்ப பதிவு எழுதிக் கொண்டிருக்கிறேன்... இடையில் நம்ம ஜியின் ஆசையை ஓரளவு நிறைவேற்றி விட்டேன்... ஆம், draft-ல் இருந்த ஒரு பதிவு... சின்ன சின்ன குறிப்பிற்குப் பாடல் வரிகளைச் சேர்த்தேன்... என் பதிவுகள் எழுதும் முறையும் இப்படித்தான்... சரி, நானே சொல்லி விடுகிறேன்...

இந்தப் பதிவு எப்படி எல்லாம் மாறும்...? இவை குறளின் குறிப்புகள்... ஒவ்வொரு குறளையும் மனதில் புரியும்படி உள்வாங்கிக் கொண்டு, அதன் அடுத்த குறளுக்குத் தொடர்புடன் விளக்கம் தர வேண்டும்... அப்படி ஒவ்வொரு குறளையும் சிந்திக்கும் போது குறளுக்கேற்ப திரைப்படப் பாடல்கள் மனதில் பாடும்... நேரமிருந்தால் அந்தந்த பாடல் வரிகளுக்கு mp3-யும் இணைக்க வேண்டும்... அனைத்தையும் விரைவில் செய்து பகிர்ந்து கொள்கிறேன்...

சரி இந்த 10 குறிப்புகளும் நம்ம ஐயனின் எந்த அதிகாரம்...? 10 பேர்களை அழைக்க வேண்டுமே... ம்... என்ன செய்யலாம்...? எந்த அதிகாரம் என்று சரியாகக் கணிப்பவர்கள் தொடரைத் தொடர வேண்டியதில்லை...! கணிக்க முடியாதவர்கள் தொடர வேண்டும்...! ஹா... ஹா... சும்மா ஜாலிக்காக... விரைவில் இந்த அதிகாரத்தில் ஐயன் சொன்ன 10 பேரைக் கூட்டி வருகிறேன்... நன்றி... தங்களின் கருத்து என்ன...?

பிற்சேர்க்கை : சரியாகக் கணித்துள்ளவர்களின் எண்ணிக்கை : 03

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மறந்து போன குறட் பாக்களை யோசிக்க வைத்து விட்டீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  2. கடவுளைக் கண்டேன் - தங்களுடைய பாணியில்!..
    அருமை.. அருமை!..

    பதிலளிநீக்கு
  3. அருமை ஐயா
    பிரிக்க முடியாதது எதுவோ
    வலைச்சித்தரும் குறளும்
    தம+1

    பதிலளிநீக்கு
  4. தொடரலாம் என்று ஓடி வந்தால் கடைசியில் தொடர வேண்டாம் என்று சொல்கின்றீர்கள். ஆனாலும் நாங்கள் உங்களைத் தொடராமல் இருப்போமா........ தொடர்வோம்

    பதிலளிநீக்கு
  5. கேள்விகள் கூடக் கேட்டுடலாம் டிடி. இந்தப் பத்து பேர்களைக் கூப்பிடறதுதான் பேஜார்!

    :))

    பதிலளிநீக்கு
  6. கள்ளுண்ணாமை, புலால் உண்பதைத்தவிர்த்தல், என்பதெல்லாம் பற்றித்தேளிவாகச் சொன்ன வள்ளுவப்பெருந்தகையே தன்னைத் தவறாது தொடரவேண்டும் என்று சொல்லி வேண்டுகோள் இடாதபோது,

    நீங்கள் தொடரவேண்டாம் (இப்போதைக்கு) என்று சொல்வதில் வியப்பு ஒன்றும் இல்லையே

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  7. தொட்டுவிடத் தொட்டுவிட தொடரும். தொடர்கின்றேன். அந்த பத்து பேர் யார்?

    பதிலளிநீக்கு
  8. வித்தியாசமா இருக்கே சார்...வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு

  9. அய்யா சாமி பதிவு எழுதும் போது என்னை போல உள்ள அரைகுறைகளை மனசுல வச்சு எழுதுங்கய்யா?கண்ணை கட்டி காட்டுல விட்டது போல இருக்கு... இப்பதான் சகோ மைதிலி எழுதுன்ன புரட்சி கவிதையை படித்தேன் அதுவும் எனக்கு புரியலை ஹும்ம்...

    பதிலளிநீக்கு
  10. அய்யனின் அதிகாரம் ' நன்றியில் செல்வம் ' . வாய்ப்பளித்த வலைச் சித்தருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. வணக்கம்
    அண்ணா

    வித்தியாசமான பாணியில் அசத்தி விட்டீர்கள்... வாழ்த்துக்கள் த.ம6
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் ஜி அழகான பாடல் வரிகள் மூலம் தெளிவான விளக்கமும் தங்களது பாணியில் வழக்கம் போலவே... நன்று

    மிகுதிக்காகவும் ஆர்வமுடன்....
    எமது கோரிக்கையை ஏற்று பதிவிட்டமைக்கு மீண்டும் நன்றி ஜி
    அன்புடன் - கில்லர்ஜி

    அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்.... மீண்டும் படித்தேன் ஜி

    பதிலளிநீக்கு
  13. அறத்துப்பாலில் ஈகை, புகழ் அதிகாரத்தில் நீங்கள் சொன்ன 10 குறிப்புகளுக்கு பாடல்கள் இருக்கிறது.

    பதிவு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்க வைத்து விட்டீர்கள் ஜி :)

    பதிலளிநீக்கு
  15. ஆஹா... அசத்தல் அண்ணா...
    குறளோடு வாருங்கள்...

    பதிலளிநீக்கு
  16. என்னையும் கோர்த்து விட்டிருக்காங்கண்ணா.

    பதிலளிநீக்கு
  17. மறந்து போன குறட்பாக்களை நினைவிற்குக் கொண்டு வர இணையத்தின் உதவியை நாடுகிறேன். . குறட்பாக்களை நினவு படுத்திக் கொள்ளும்படியான பதிவிற்கு நன்றி தனபாலன் சார். . கண்டு பிடிக்க முயற்சிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  18. நீங்கள் சொல்ல விரும்பும் குறட்பாக்கள் பொருட்பாலில் ‘நன்றியில் செல்வம்’ அதிகாரத்தில் உள்ளன. என்ன சரிதானே வலைச்சித்தரே! ஆனாலும் இந்த தொடரை நான் தொடரவேண்டும் என்று ஏற்கனவே நண்பர் தேவகோட்டை திரு KILLERGEE அவர்கள் கேட்டுக்கொண்டுவிட்டார். .

    பதிலளிநீக்கு
  19. கில்லர்ஜி பாணியில் அருமையான தொடர்பு. நன்றி. தங்களைப் போல நானும் சில பணிகளில் சிக்கிவிட்டதால் சற்று தாமதமாகிறது. கில்லர்ஜியின் தொடரைத் தொடர்வேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் வலைச்சித்தரே !

    கில்லர் ஜி தொடக்கி வைத்ததனால் கிளுகிளுப்பாக இருக்கும் என்று பார்த்தால் சிந்திக்க வைக்கிறதே ம்ம் மீண்டும் திருக்குறளை அலசிட வேண்டியதுதான் ...தங்கள் பாடல் வரிகள் அசத்தல்
    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
    தம +1

    பதிலளிநீக்கு
  21. நன்றி! தொடர தெரியாதவர்கள் தொடர வேண்டாம் என்று சொன்னதற்கு......????

    பதிலளிநீக்கு
  22. முழுமையான பதிவுக்கு காத்திருக்கிறேன்! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. கோமதி அரசு அவர்களின் பதிலே
    என் பதிலாகவும் பதிவு செய்கிறேன்

    பதிலளிநீக்கு
  24. நீங்கள் எழுதும் பதிவுகள் எல்லாமே பலமுறை படித்தால்தான் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரிந்துகொள்ள முடியும்? இந்தப் பதிவில் இன்னும் விளக்கம் கொடுத்தீர்களானால் தான் முழுதும் புரியும் என்று நினைக்கிறேன். நீங்களே பாதிப்பதிவு என்று சொல்லியிருக்கிறீர்களே. முழுப் பதிவிற்குக் காத்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  25. அன்புள்ள வலைச்சித்தரே!

    ‘ஆசைதான் துன்பத்திற்குக் காரணம்’ என்றான் திருமணத்திற்கு பின் ஞானோதயம் ஏற்பட்ட புத்தன் என்கிற சித்தார்த்தன்.
    ‘சினந்தனிந்த மனிதனாக... இனந்தெரிந்த மனிதனாக... மனந்தெரிந்த ஞானியாக - இவனை மாற்று’ -கவியரசர் கண்ணதாசன்.
    ‘ஆசையை ஒழிக்க வேண்டு மென்ற ஆசை புத்தனுக்கு இருந்தது’ -என்றார் வார்த்தைச் சித்தா வலம்புரிஜான்.
    ‘பிறருக்குக் கொடுத்து வாழ்; கெடுத்து வாழாதே!’ - என்கிறார் திண்டுக்கல் வலைச்சித்தர்.

    த.ம.16

    பதிலளிநீக்கு
  26. படைத்து வைக்க ஒருவர் (கடவுள்)
    பிறக்க வைக்க இருவர் (பெற்றோர்)
    இறந்த பின்னே எவரோ?
    என்றவாறு
    சிந்திக்க வைக்கும் பதிவு!

    பதிலளிநீக்கு
  27. அய்யா..நீர் புலவர்....நீரே புலவர்...நீரே புலவர்...புல்லரிக்க வைத்து விட்டீர்களே...அடடா..

    பதிலளிநீக்கு
  28. டிடி....பொருட்பாலில் வரும் அதிகாரம் 101 நன்றியில்செல்வம்

    பதிலளிநீக்கு
  29. அருமை டி டி சார் காத்திருக்கிறேன்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  30. தங்களின் பணி எந்நாளும் தளர்வே அற்றுத் தொடர எமது உள்ளார்ந்த வாழ்த்துக்கள் தலைவரே |

    பதிலளிநீக்கு
  31. திருக்குறளை ஆய்வு செய்ய வைக்கும் பதிவு. உங்கள் கனவு தொடரட்டும்.

    நானும் தான் ஆல்ப்ஸ் தென்றலில் கடவுளை கண்டேன் அப்போ உங்களை காணவே இல்லை தனபாலன்ஹி!

    பதிலளிநீக்கு
  32. தங்களின் பாணியில் கில்லர்ஜிக்காக ஒரு தொடர்பதிவு. நானும் தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  33. எங்களை எக்கச்சக்கமாக சிந்திக்க வைப்பது எங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பதை பணிவோடு. தெரிவித்து கொள்கிறேன். - இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு
  34. ஒப்புரவறிதலோ என்று இப்போது தோன்றுகிறது... நல்லதொரு சிந்தனையைத் தூண்டும் பதிவு...மறுபடி மறுபடி குறளைப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.. :))

    பதிலளிநீக்கு
  35. அப்படி போடுங்க...நல்லாயிருக்கு அங்கிள்.குறள்...உங்க குரல்ல்ல....

    பதிலளிநீக்கு
  36. புதுமை....அருமை....குறளோடியைந்த பதிவு ..

    பதிலளிநீக்கு
  37. நல்ல சிந்திக்க வைத்த பதிவு. தில்லையகத்துக் காரரின் பதிவில் இருந்து வந்தேன். :)

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.