🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மனம்தனில் கறையில்லையே - குறையில்லையே...


வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...! விடியும் பூமி அமைதிக்காக விடிகவே...! மண்மேல் மஞ்சள் வெளிச்சம் விழுகவே...! மலரே சோம்பல் முறித்து எழுகவே...! குழந்தை விழிக்கட்டுமே - தாயின் கதகதப்பில்... உலகம் விடியட்டுமே - பிள்ளையின் சிறுமுகச் சிரிப்பில்... வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...!


© கன்னத்தில் முத்தமிட்டால் வைரமுத்து A.R.ரகுமான் 🎤 A.R.ரகுமான் @ 2002 ⟫

வலையுலக உறவுகள் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...


எப்படியிருக்கு நம்ம வெள்ளை வேட்டி...! வெள்ளை சட்டை...!

அட...! என்ன வெள்ளையும் சொள்ளையுமா...? வாழ்க... வாழ்க...

யாராவது வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையோட வந்தா போதுமே, உடனே "வாழ்க / ஒழிக"-ன்னு கோஷம் போட்டு அவங்களை ஒழிக்காம விட மாட்டீங்களே... மனிசன்க வெள்ளை உடையிலே வரவே கூடாதா...?

பொறுமை... பொறுமை... மனமே பொறுமை தேவை... மனிசன் வெள்ளை உடையிலே வர்றது தப்பில்லே... அரசியல்லே இருக்கிறதும் தப்பில்லே...

அப்படி வா வழிக்கு...! ஆமா, நான் எங்கே அரசியல்லே இருக்கேன்...? இன்னைக்கு நம்ம தெருக்காரங்களுக்காக ஒரு பொதுநல வேலையிலே ஈடுபடப் போறேன்... வீட்டிலே தான் சொன்னாங்க... வெள்ளையா போங்க... உங்களுக்கு மரியாதை கூடும் அப்படீன்னு...! பொதுநலத்திலே ஈடுபட்றவங்க பெரிய மனுசனா தன்னை காட்டிக்கணும்ன்னு நினைக்கிறவங்க எல்லாம் வெண்மை உடையிலே இருக்கணும்ன்னு நாம எதிர்பார்க்கிறோமே, அது என்னப்பா கெமிஸ்ட்ரி...? / பயாலாஜி...? / ஏதேனும் ஸ்டாடிஸ்டிகல் ப்ராபபிலிடி...? ஒன்னும் புரியலையே சாமி...!

பொது வாழ்க்கையிலே இருக்கிறவங்க அப்பழுக்கு இல்லாதவங்களா இருக்கணும்... மனசாலேயும் உடம்பாலேயும் எந்த தவற்றையும் செய்யாம தூய்மையா இருக்கணும்ன்னு இருக்கலாம்...! அதுக்காக வெள்ளை உடையிலே இருக்காதவங்க எல்லாம் தூய்மையானவங்க இல்லைன்னு அர்த்தம் கிடையாது... துறவிகளுக்குக் காவி மாதிரி, பொது வாழ்க்கைக்கு வெள்ளை ஒரு அடையாளம்...! அவ்ளோ தான்...!

வெள்ளை உடை மட்டும் போட்டுட்டா போதுமா...? வெள்ளை சட்டையிலே அழுக்கு படாம பாத்துக்கலாம்... பட்டாலும் உடனே மாத்திக்கலாம்...! ஆனா மனசிலே அழுக்கு படாம எத்தனை பேரு பாத்துக்கிறாங்க...?

இப்ப தாண்டா உருப்படியா ஒரு கேள்வி கேட்டிருக்கே...! இதற்குப் பதில் அமைதி தான்... வேறென்ன பதில் சொல்ல முடியும்...? வழக்கம் போல ஒரு நிகழ்வைச் சொல்ல முடியும்...! சரியா...? கேட்டுக்கோ...

சந்திரகுப்த மௌரியரின் தலைமை அமைச்சராக இருந்தவர் சாணக்கியர்... அப்பழுக்கில்லாத அரசியலாளர் அவர்... எளிமையான வாழ்க்கை... தலைமை அமைச்சர் என்றாலும் வாழ்வது ஒரு குடிசையில் தான்... அப்போது குளிர் காலம் வந்ததால், அப்பகுதியில் வாழும் ஏழைகளுக்கு வழங்குவதற்காக நிறையக் கம்பளிகளைச் சாணக்கியரின் குடிசைக்கு அனுப்பியிருந்தார் மாமன்னர்... சாணக்கியரின் குடிசைக்கு நிறைய கம்பளிகள் வந்து இறங்கியுள்ளன... அவற்றில் சிலவற்றைத் திருடி விட வேண்டும் என்று சில திருடர்கள் திட்டமிட்டு நள்ளிரவு நேரத்தில் அவரின் குடிசைக்குச் சென்றனர்...

ஒரு பக்கம் மலை போலக் கம்பளிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தன... குடிசையின் ஒரு மூலையில் சாணக்கியரும் அவரின் மனைவியும் தூங்கிக் கொண்டிருந்தனர்... திருடர்கள் கூர்ந்து பார்த்தனர்... சாணக்கியரும் அவரது மனைவியும் ஒரு பழைய கம்பளியைப் போர்த்தி இருந்தனர்... அந்த பழைய கம்பளியிலும் ஆங்காங்கே கிழிசல்கள்...! ஒரு பக்கம் அரசர் அனுப்பி வைத்த புதிய கம்பளிகள் அடுக்கி இருக்க, இப்படி சாணக்கியர் பழைய கம்பளியைப் போர்த்திக் கொண்டு தூங்கி இருக்கிறாரே என்று ஆச்சரியப்பட்ட திருடர்கள், சாணக்கியரை எழுப்பி தங்களின் ஆச்சரியக் கேள்வியைக் கேட்டே விட்டனர்...

"ஐயா, இந்த புதிய கம்பளிகள் எல்லாம், ஒரு கம்பளி கூட இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்ற ஏழைகளுக்காக மன்னர் அனுப்பி வைத்திருப்பவை, இவற்றில் எனக்குத் தேவை என்று ஒரு கம்பளியை எடுத்தால் கூட நான் திருடனாகி விடுவேன்... அப்புறம் உங்களுக்கும் எனக்கும் வேறுபாடு இல்லாமல் போய்விடும்" என்றார் சாணக்கியர்... திருட வந்த திருடர்கள் மனம் மாறினர்... இனிமேல் திருடவே மாட்டோம் என் சத்தியமும் செய்து கொடுத்தனர்... அடுத்தவர் பொருளை மனத்தாலும் திருட நினையாமல் இருப்பதே அப்பழுக்கற்ற தூய்மை...!

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள் (178)

தேடித் தேடிக் குறை சொல்றவங்க... குறையை மட்டும் சொல்றவங்க மனங்கள் எல்லாம், அழுக்கோடு வாழ்றவங்களா...? அதாவது மன அழுக்கோடு வாழ்றவங்களா...? உன் கருத்து என்ன...?

கேள்விற்கு பதில் பாட்டில்...! கருத்தெல்லாம் வி(தீ)வரமாக வரும் பதிவில்...!



© இருவர் வைரமுத்து A.R.ரகுமான் 🎤 ஹரிஹரன் @ 1997 ⟫

கண்ணைக்கட்டிக் கொள்ளாதே... கண்டதையெல்லாம் நம்பாதே... காக்கை குயிலாய் ஆகாதே தோழா... தாடிகள் எல்லாம் தாகூரா...? மீசைகள் எல்லாம் பாரதியா...? வேசத்திலே ஏமாறாதே தோழா...! நம் மடியினில் கனமில்லையே - பயமில்லையே... மனம்தனில் கறையில்லையே - குறையில்லையே... நினைத்தது முடியும் வரை... ஹே ஹே ஹேய்...!

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான கருத்து ஐயா
    நன்றி
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
    தம 2

    பதிலளிநீக்கு
  2. உண்மைதான்..அப்படி வாழ்ந்தவர்கள் இன்று கள்வர்களாக மாறிவிட்டார்கள்.சார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .
      அடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .
      www.puthumaiyukam.blogspot.in

      நீக்கு
  3. மனசு அந்த புறா மாதிரி பறக்குது உங்க பதிவை படிச்சவுடன்:) நன்றி அண்ணா!

    பதிலளிநீக்கு
  4. வலைப்பூ சித்தனே வாழும் கலைப்பித்தனே....
    சிலைகூட சிலநேரம் உட்காரும் கால்வலியால்
    மலையுச்சி கதிரொளிபோல் உயர்ந்து நின்றாய்...
    விலைவைத்து கேட்டாலும் கிடைக்காத நட்புனது நண்பா வாழி

    பதிலளிநீக்கு
  5. குறைகள் இல்லாத மனிதர்கள் உண்டா? ‘குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.’ என்பதே பழமொழி. எனவே நிறைகள் பற்றி பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  6. இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  7. அன்புள்ள வலைச்சித்தருக்கு,

    ‘மடியில் கனமில்லாதவருக்கு வழியில் பயமில்லை’ என்பதே (இந்த வரியை எழுதிய பின்தான் இறுதியில் பார்த்தால் தாங்களும் எழுதியிருப்பதை) நிதர்சனம். சாணக்கியர் அப்ப அழுக்கில்லாதவர். இப்பயெல்லாம் சாணக்கியர் ஆவதையே... அதாவது தலைமை அமைச்சராக இருப்பதையே விரும்பிகின்றனர்... பெயரெடுக்கவும். தன்னலமற்ற பணியாற்ற ... பொது நலத்துடன் பணியாற்ற மக்களில் பெரும்பாலானவர்கள் முன்வருதில்லை. சாணக்கியராக இல்லாமல்... சாணக்கியர் போல இருப்பதாக... சாணக்கியத் தனமாக கேள்வி-பதில் சொல்லித் தான் செய்யும் தகாத செயல்களை வெளியில் தெரியாமல் காட்டிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பொது வாழ்க்கையில் அண்ணல் காந்தி, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர், அன்னை தெரசா போன்றோர்கள் படாத இன்னல்களா? ஏச்சுப் பேச்சுக்களா...?
    ‘வந்ததை வரவில் வைப்போம்
    செய்வதை செலவில் வைப்போம்
    இன்று போல் என்றும் இங்கே ஒன்றாய்க் கூடுவோம்,,,’


    ‘தேடி சோறு தினம் தின்று
    பல சின்னஞ்சிறு கதைகள் பேசி
    வாடி துன்பம் மிக உழன்று
    பிறர் வாட பல செய்கை செய்து
    நரை கூடி கிழப்பருவம் எய்தி
    கொடும் கூற்றுக்கு இரையாகி மாயும
    சில வேடிக்கை மனிதரை போலவே
    நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ!’

    பாரதியின் பாட்டு வரிகளை மனதில் நிறுத்திக் கொண்டாடுவோம்....
    ‘தீபாவளித் திருநாளை...!| வாழ்த்துகள்.

    நன்றி.

    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் எனது சகோதரி ,சகோதர்களே , நண்பர்களே நானும் இது போன்ற பயன்னுள்ள தகவல்களை தருவதற்குகா ஒரு வெப் சைட் ஆரம்பித்து உஇருக்கிறான் .நாண்பர்களே .. உங்களது நமது] இணைய தளத்தின் வளர்சிக்கு உங்கள் உதவி தேவை . . .
      அடிகடி நமது வெப் சைட்டை பார்த்து பயன்னுள்ள தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் உங்கள் தங்களின் மேலான கருத்துக்களைளயும் தெரிவிக்கவும் .நன்றி .
      www.puthumaiyukam.blogspot.in

      நீக்கு
  8. நல்லதொரு கதை.. வெண்மைக்கு விளக்கம் அருமை..

    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. நித்த நித்தம் உத்துப்பார்த்து
    குத்தம் சொல்லிகினே இருந்தோம் னா

    சுத்திப் பார்த்தா யாருமே
    யாருமே இருக்க மாட்டாங்க...

    விட்டுட்டு, நம்ம கிட்ட என்ன
    ஒழிசல் இருக்கு அப்படின்னு புழிஞ்சு பார்த்து
    அத உடுங்க..

    ஊரு ஒலகம் அப்படித்தான் இருக்கும் முதல்லே
    ஒன்னையே சரி பண்ணிக்க அப்படின்னு
    சொல்றீக..
    புரியுது.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  10. சாணக்கிய நீதியுடன் கூடிய அருமையான பதிவுக்கு நன்றி. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  11. வெள்ளை பற்றி
    வெள்ளை மனத்துடன்
    வெளிப்படையாகச் சொல்லியுள்ள கருத்துகள் அருமை.

    தங்களுக்கும், குடும்பத்தார், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  12. நம் காலத்திய வெள்ளை நிற போர்வைத் திருடர்கள் ,அந்த கால திருடர்களைப் போல் திருந்துவார்களா :)

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல் மனசாட்சியுடனான இந்த போராட்டமும் அருமை! புதிய பாடல்களிலும் கருத்துள்ளது என்பதற்கு அடையாளமாக இரண்டு புதிய பாடல்கள். சாணக்கியரைப் பார்த்து திருடர்கள் திருந்தினார்கள் அன்று. இன்றோ திருடர்களைப் பார்த்து ஆட்சியாளர்கள் திருட கற்றுக்கொள்கிறார்கள்.
    அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி!
    த ம 6

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்
    அண்ணா
    நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. அருமையான சிந்தனைகள் நல்ல கதையுடன்..டிடி.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தீபாவளி வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  16. இலவச மிக்சி கிரைண்டர் கிடைக்கவில்லை என்று இப்படி எல்லாம் பதிவு போடக்கூடாது.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  17. நல்ல கருத்துகள். இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  18. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் . சந்தர்ப்பம் இருந்தும் கேட்டுப் போகாமல் இருப்பது தான் வைராக்கியம் .வேட்டி பற்றிய என் பதிவுக்கு கீழே சொடுக்கவும் http://abayaaruna.blogspot.in/2015/10/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  19. எனக்கு இந்த கதை புதிது. பகிர்வுக்கு நன்றி. உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


    பதிலளிநீக்கு
  20. அன்று போல் இன்று இல்லை....இன்று போல் அன்று இல்லை..

    பதிலளிநீக்கு
  21. ஒழுக்கத்தைச் சிறப்பிக்கும் அருமையான பதிவு! குட்டிக்கதை அசத்தல்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. அருமை ஐயா..சாணக்கியர் போல் நம் நாடு இருந்தால் நாம் என்றோ வல்லரசு அடைந்திருக்கலாம்..ஐயா..

    இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  23. வெள்ளை வேட்டி. ....... யோசிக்க வைத்த கருத்து. .

    தீபாவளி நல்வாழ்த்துக்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  24. அருமை ஜி அற்புதமாக வெண்மையைப்பற்றி கருத்துரையை தந்தமைக்கு நன்றி தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    குறிப்பு – நான் ஆட்சிக்கு வந்தால் ? ? ? அரசியல்வாதிகள் வெள்ளை உடை அணியக்கூடாது என்று சட்டம் கொண்டு வருவேன்.

    பதிலளிநீக்கு
  25. குட்டிக்கதை அருமை! எடுத்துக்காட்டான குறளும் அருமை!!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  26. நல்ல சிந்தனை !

    தங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  27. தனப்பல்,

    அருமையான பதிவு. வெள்ளை வேட்டியும் சட்டையுமே கொள்ளை அடித்த அடுத்தவன் பணத்தில் வாங்காமல் இருந்தால் சரி.

    முயற்சிப்போம் உள்ளே வெள்ளை உடுத்த.

    சாணக்கியருக்கு உலகில் எங்கேனும் சிலை /கோயில் உண்டா? அல்லது நிறுவப்பட்டதை யாரனும் திருடிவிட்டார்களா?

    தனப்பாலனுக்கும் அவர்தம் குடும்பத்தார் நண்பர்கள் யாவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    நட்புடன்

    கோ

    பதிலளிநீக்கு
  28. கதையும் பாடலும் அருமை. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. மேல்சாதியினர் முன்னேற்றத்திற்காகவே மனுதர்மம்(?) எழுதியவர்,
    அவர் வழியில் வந்த சாணக்கியர் அரசர் முன்னேற்றத்திற்காகவே அர்த்தசாஸ்திரம் எழுதியவர். அவர் கதை நல்லாத்தான் இருக்கு. ஆங்காங்கே சில குத்துகளும் தெரியுது.ஆனால் அது சாதாரண மக்களுக்கானதல்ல வலைச்சித்தரே! ஆனால், மனுவும் சாணக்கியரும் எப்படியோ “நீதிமான்கள்“ போலவே அறிமுகப்படுத்தப் படுகிறார்கள்.. நீங்களும் அந்தத் தவறைச் செய்யக் கூடாது. மற்றபடி
    உங்கள் பாணி குறள்விளக்கம், படப்பாடல் விளக்கம் எல்லாவற்றையும் விட சொல்லவந்த செய்தி மிகவும்அருமை.

    பதிலளிநீக்கு
  30. வணக்கம் சகோதரரே.

    நல்ல கருத்துக்களுடன் ௬டிய வளமான சிந்தனை. உதாரணக் கதை சிறப்பாக இருந்தது. இதுவரை படித்ததில்லை. பொருத்தமான பாடல்களுடன் பதிவு அருமை. பகிர்வுக்கு நன்றி.

    என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  31. மனத் தூய்மைக் கருத்தும் விளக்கமும் அருமை .தீபாவளி வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  32. அருமையான குட்டிக்கதையுடன் அசத்தலான பதிவு.

    தீப திருநாளின் ஒளி அனைவரின் மனதிலும் அன்பு வெள்ளையை பூசட்டும் !

    நன்றி
    சாமானியன்

    பதிலளிநீக்கு
  33. இனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  34. ஒருமுறை தோழர். ப.ஜீவானந்தம் சென்னை காசிமேடு- இராயபுரம் பகுதியிலிருந்து தி.நகர் வரை நடந்தே சென்றார். ஏனெனில் அவரிடம் சொந்தக் காசு இல்லை. தொழிலாளரிடம் வசூல் செய்த பணம் தாராளமாக இருந்தது. சொந்த உபயோகத்திற்குப் பயன்படுத்தக்கூடாது என்ற வைராக்கியமே காரணம். நம் வலைப்பதிவர்கள் ஒன்றுசெய்யலாம்; தான் மட்டும் குறைந்தபட்சம் தீபாவளி கொண்டாடாமல் இருந்து அந்தப்பணத்தைச் சேமிக்கலாம். ஒத்த கருத்துடைய பதிவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். சேரும் தொகையை ஆண்டிற்கொருமுறை வசதியற்ற அரசுப்பள்ளி மாணாக்கரின் தேவைகளுக்கு - தமிழில் படிக்கும் - பயன்படுத்தலாம் திண்டுக்கல் தனபாலனே பொறுப்பேற்க வேண்டும் என்பது எனது ஆசை. 67-வயதுக்காரன்..

    பதிலளிநீக்கு
  35. இன்பத் தீபாவளி உங்களிற்காகட்டும்
    அன்புடன் இனிய வாழ்த்துகள்.!
    இன்னமுத நன்றியுடன் தீபமொளிரட்டும்.

    பதிலளிநீக்கு
  36. வெள்ளை மன வலைச்சித்தர்/கவிஞர்-க்கும், சார்ந்தோருக்கும் தீபத் திருநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  37. எக்காலத்திற்கும் பொருத்தமான கருத்தை தங்கள் பாணியில் பதிந்த விதம் நன்று. நன்றி.

    பதிலளிநீக்கு
  38. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
    உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
    "தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
    இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
    எல்லாம் கைகூடி வந்து
    என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
    தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்

    பதிலளிநீக்கு
  39. உள்ளமும் வெள்ளையாக இருந்தால் தான் பெருமை!

    பதிலளிநீக்கு
  40. மனதை வெள்ளையாக வைத்திருக்கவேண்டும் ..பிடித்த பாடல் வரிகள் , குறள் எப்பொழுதும் போல் அருமை!
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அண்ணா

    பதிலளிநீக்கு
  41. வெள்ளையாக மனம் இருந்தால் பெருமைதான். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் வலைச்சித்தரே.

    பதிலளிநீக்கு
  42. நல்ல கதையும் கருத்தும்... பாடல்வழிப் புகட்டிய அறிவுரை அருமை..

    பதிலளிநீக்கு
  43. இத்தீபாவளி நன்நாள் - தங்களுக்கு
    நன்மை தரும் பொன்நாளாக அமைய
    வாழ்த்துகள்!

    யாழ்பாவாணன்
    http://www.ypvnpubs.com/

    பதிலளிநீக்கு
  44. சிலவற்றை தள்ளி விட்டுப் போய்க் கொண்டே இருக்க வேண்டியதுதான்;குறட்சித்தருக்குத் தெரியாததா?

    பதிலளிநீக்கு
  45. அன்பு ஜி வணக்கம்
    தங்களை தொடர் பதிவு ஒன்றில் இணைத்திருக்கிறேன் எனது தளம் வருகை தந்து விபரம் அறிய அழைக்கின்றேன்.
    முகவரி -
    http://www.killergee.blogspot.ae/2015/11/1.html
    அன்புடன்
    தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி
    12.11.2015
    U.A.E. Time: 03.39 pm

    பதிலளிநீக்கு
  46. சாணக்கியர் கதை அருமை...அவரைப் பற்றி கொஞ்சம் நிறையவே படித்தேன். நான் எழுதும் கனவுக் காட்சிகள் தொடருக்காக...அவரின் ஒவ்வொரு செயலும் சொல்லும் போற்றத்தக்கவை என்பது என் கணிப்பு..பகிர்ந்தமைக்கு நன்றி...வாழ்த்துக்கள்...இப்போது? நிலைமை தலைகீழ்..

    பதிலளிநீக்கு
  47. எப்படித் தான் பொறுமையாக எல்லாத்தையும் தேடி எடுக்கறீங்களோ! ஆச்சரியமா இருக்கு!

    பதிலளிநீக்கு
  48. ரொம்ப நல்லாருக்கு..நான் சொல்வதெல்லாம் கூட வெளியிடுவீங்களா அங்கிள்???

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.