🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉நீங்க மட்டும் மனசு வச்சா...

வலைத்தள உறவுகளுக்கு வணக்கம்... திரு. முத்துநிலவன் ஐயா அவர்களின் ஒரு பதிவில் "ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே..." பாடலை வலைப்பூ சம்பந்தமாக மாற்றி கருத்துரை இட்டு இருந்தேன்... அதைப் பலரும் தங்களின் தளத்தில் பகிர்ந்து கொண்டு என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டார்கள்... அவர்களுக்கும், அங்குக் கருத்துரையிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளோடு அவர்களின் இணைப்புகள் :-

திருமிகு
1. மதுரைத்தமிழன் சிந்திக்க மட்டுமல்ல நம்பிக்கையைத் தூண்டும் பாடல்
2. தேன்மதுரத்தமிழ் கிரேஸ் லட்சம் பதிவுகள் கண்ணோடு
3. S.P.செந்தில்குமார் நான் அறியாத டிடி
4. கரந்தை ஜெயக்குமார் புதுமைகள் படைக்கும் புதுகை
5. சுப்பு தாத்தாவின் குரலில் தமிழ்ப்பதிவர் மாநாடு எழுச்சி பாடல்
6. யாழ்பாவணன் ஒவ்வொரு வலைப்பதிவர்களும் படிக்கலாமே!
இந்த உற்சாகத்தில்... இப்போது ஜாலியாக...

திண்டுக்கல் வலைச்சித்தருக்கு நினைவுப் பரிசு தரும்
"புதுக்கோட்டை வலைச்சித்தர் ஸ்ரீமலையப்பன்"

(பாடல்:என் சோகக் கதையே கேளு தாய்க்குலமே, படம்:தூறல் நின்னு போச்சு, இசை:இளையராஜா, பாடியவர்:மலேசியா வாசுதேவன் மற்றும் பலர்)

பங்கஜ வள்ளி அம்புஜனேஸ்ரீ... பங்கஜ வள்ளி அம்புஜனேஸ்ரீ... பார்வதி தாயே பணிந்தேன் நானே... பங்கஜ வள்ளி அம்புஜனேஸ்ரீ...

டேய்ய்ய்ய்ய்.......... யார்ரா அவன் பங்கஜத்த பத்தி பாட்றவன்...?

நாந்தானுங்க சாமி...

பங்கஜம் என்னடா பங்கஜம்...? என் மங்களத்த பத்தி பாட்றா...!

மங்களம் கடைசில தானுங்க பாடனும்...

டேய்... நான் சொல்றேன்... முதல்லேயே பாடுறா...!

இன்னும் அட்வான்ஸ் வாங்கலைங்களே...

அட்வான்சாவது கிட்வான்சாவது... தள்ளிக்கடா நாங்களே பாடுறோம்...

"என்னஸ்ரீ பயமா...? பாட்டெல்லாம் அத்துப்படி ஆனாத்தான் சித்தர்...!
சவால்...! ம்...
"

© தூறல் நின்னு போச்சு கங்கை அமரன் இளையராஜா மலேசியா வாசுதேவன், கிருஷ்ணமூர்த்தி @ 1982 ⟫
சித்தரே...

மாப்ளஸ்ரீ...

நீங்க ஆரம்பிங்க...

சென்னை சந்திப்பை எல்லாம் சிறக்கப் பாத்தவன் நான் - அந்த
    மாபெரும் சந்திப்பையும் மதுரையிலே நடத்தினவன் நான்...
    அப்பேற்பட்ட என்னை அந்தரத்துல விட்டு, வராம போன...
    வலைத்தள உறவுகளே...!


ஆமா………………

என் சித்து என்ன... ஃபித்து என்ன... பதிவுகளென்ன...!

ஆமா………………

என் பேரு என்ன... புகழு என்ன... பீத்தல் என்ன...!

ஆமா………………

இத நான்
    எங்கே சொல்வேன்...? என்ன செய்வேன்...? ஹெஹெஹே...
    மாப்ளஸ்ரீ... இதுக்கு மேல நீயே பாடுப்பா...!


அட உங்க கதை எனக்கெதுக்கு சித்தரே...?
    எங்க சோகக்கதைய கேளு பதிவர்குலமே...


ஆமா பதிவர் குலமே...

நம்ம பதிவர் குலமே...

நம்ம பதிவர் குலமே...

அத கேட்டாத்தான் தாங்காதப்பா உங்க மனமே...

ஆமா உங்க மனமே...

ஆமா உங்க மனமே...
    எல்லா ஊரு பதிவரை நம்பி - கையேட்டை தயாரிச்சி வச்சேன்...
    க்யூஆர் கோட் எல்லாம் செஞ்சி - க்ளியரா பதிச்சி வச்சேன்...
    எங்க சோகக்கதைய கேளு பதிவர் குலமே...


ஆமா பதிவர் குலமே... நம்ம பதிவர் குலமே...

தேடித் தேடி வலைத்தளத்தை - தேர்ந்தெடுத்துப் படிச்சதும்...
    இல்லாத தகவலையெல்லாம் - எடுத்து ஒண்ணா சேர்த்ததும்...
    கடைசி நேரம் வந்தாக் கூட - ப்ரெஸ்ல கெஞ்சி ஏத்துனதும்...
    க்யூஆர் கோட் உருவாக்க - கிறுக்குப் பிடிச்சித் திரிஞ்சதும்...


அத்தனையும் மறந்துபுட்டு கையேட்டை வாங்க மறந்திட்டா...
    கையேட்லே தகவலை மட்டும் பெருசாக நினைச்சிட்டா...
    ஆசைப்பட்ட விழாக்குழுவோ பற்றாக்குறையில் நிக்குது...


பெருமைப்பட்ட விழாக்குழுவோ பொறுமையோட காத்திருக்கு...!
    (எங்க சோகக்)

ஆசை வச்சி வேலைசெஞ்சி - அலையுறேனே நொந்துபோயி...
    கையேடு ஸ்டாக்கப் பார்த்து - கலங்கி கலங்கிப் புலம்புறேன்...
    நேத்துவரை நடந்ததெல்லாம்-புரவலர்களின் சாதனை...இனி
    நீங்க மட்டும் மனசு வச்சா - தீருமெங்க வேதனை...!


காசு அனுப்பி வாங்குறதுன்னா - சலுகையிலே குடுக்குறோம்...
    குமரி முதல் இமயம் வரை - கூரியரிலே அனுப்புறோம்...
    கையேட்டிலே பதிஞ்சவுங்களே... காசு அனுப்பி வாங்குங்கய்யா...


நண்பருக்கு அனுப்ப எண்ணும்-நல்லவுங்களும் வாங்குங்கய்யா...
    (எங்க சோகக்)

"இது தான் சவால்...! + பாட்டு... ஆகா...!! + தெய்வீக சிரிப்பு...!!!
எதிலும் புதுமை புதுக்கோட்டை வலைச்சித்தருக்கு வாழ்த்துகள்....
"

"வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென,
தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ள விவரம் வருமாறு :-

NAME : MUTHU BASKARAN N
SB A/c Number : 35154810782
CIF No. : 80731458645
BANK NAME : STATE BANK OF INDIA
BRANCH : PUDUKKOTTAI TOWN
BRANCH CODE : 16320
IFSC CODE : SBIN0016320


இந்தக் கணக்கின் வழி தொகை செலுத்துவோர், அவர் தம் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்குக் குறுஞ்செய்தி (SMS) அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

"சித்தர்களின் அன்புப் பிடியில் திரு.முத்துநிலவன் ஐயா"

எத்தனை நூல்கள் தேவை என்பதையும், ஒரு பிரதி ரூ.150 எனினும், ரூ.250 அனுப்பினால் 2 பிரதிகளும், ரூ.500க்கு 4 பிரதிகளும் விழாக்குழுச் செலவில் அனுப்பி வைப்போம். கையேடு அனுப்ப வேண்டிய முகவரியை muthunilavanpdk@gmail.com மின்னஞ்சலுக்கு மறக்காமல் அனுப்ப அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

நீங்க மட்டும் மனசு வச்சா...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வலைச் சித்தருக்கு
  கவிச் சித்தர் பட்டமும்
  வழங்க வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது
  என்றே எண்ணுகின்றேன்
  வாழ்த்துக்கள் ஐயா
  பாட்ட அருமை
  தம +1

  பதிலளிநீக்கு
 2. ஆஹா வலைச்சித்தர்கள் இருவரும் ஒன்றிணைந்த பாட்டு மிக அருமை...சார்...வரவு செலவு கணக்க பதிவர்விழா வலைத்தளத்திலும் இணைத்துவிடலாமே சார்.

  பதிலளிநீக்கு
 3. அருமை...ஒரு கட்டுரையில் சொல்ல வேண்டியதை எளிய பாடலில் சொல்லி விட்டீர்கள், பதிவர்கள் வாசிப்பதோடு நிற்காமல் சிக்கல்கள் தீர கைகொடுக்கும் விதமாய் கையேட்டையும் வாங்குங்கள்

  பதிலளிநீக்கு
 4. பாட்டும் அருமை பதிவும் அருமை...சோகத்திலும் சிரிப்பு..

  கையேடு ஏற்கனவே உள்ளது ஒன்று அங்கு வந்ததால்.

  அனுப்பிவிடுகின்றோம்.....நண்பர்களுக்குக் கொடுக்கலாமே...சென்ற மாதமே அனுப்பலாம் என்று நினைத்தாலும் சற்றுக் கடினமாகி விட்டதால் இப்போது...தயவாய் மன்னித்துவிடுங்கள்

  பதிலளிநீக்கு
 5. தங்கள் பதிவின் இணைப்பை இப்போதுதான் பார்த்ததால் தற்போது எங்கள் தளத்தில் இடுகையின் இறுதியில் இணைக்கின்றோம்.

  மிக்க நன்றி டிடி, வலைப்பதிவர் விழா குழுவிற்கும்

  பதிலளிநீக்கு

 6. புதிய வலைப்பதிவர்களுக்கு வழிகாட்டும்
  தொழில்நுட்பப் பதிவுகளை
  தங்கள் தளத்தில் வெளியிட்டிருப்பினும்
  கூப்பிட்டவுடன் பதிவர்களுக்கு
  தொழில்நுட்ப உதவிகளை வழங்கும்
  தங்கள் செயலுக்கும்
  தங்களுக்கு "வலைச்சித்தர்" பட்டம்
  வழங்கியிருந்தமைக்குக்குப் பாராட்டுகள்!
  வாழ்த்துகள் அறிஞரே!

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள வலைச்சித்தரே!

  \பாட்டும் நானே பாவமும் நானே
  பாடும் உனை நான் பாடவைப்பேனே
  கூட்டும் இசையும் கூற்றின் முறையும்
  காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ?/

  வலைப்பதிவர் விழாமழை நீன்றாலும் தூறல் நின்னு போச்சு என்று சொல்ல முடியாது நிலை. ‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ “எங்க சோகக் கதையக் கேளு” வலைப்பதிவர் குலத்திற்கு ஸ்ரீயுடன் பாடுபட்டதைப் பாட்டாலே பாடியது அருமை. பட்ட பாட்டிற்கேற்ப பலன் கிடைக்கவில்லை என்பதை அனைவரும் உணரவேண்டும்.

  இதனால் சகலமானவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால் கையேட்டை காசு கொடுத்து வாங்காதவங்க வாங்கிக்கங்க சாமியோ...!

  நன்றி.
  த.ம.5

  பதிலளிநீக்கு
 8. புதுப்பாடகர் உருவாகிவிட்டார் போல இருக்கே

  பதிலளிநீக்கு
 9. அருமையான பாட்டு! இன்னும் இன்னும் நிறையா பாடுங்க அண்ணா!

  பதிலளிநீக்கு
 10. சித்தர் என்றால் பாட தெரிந்திருக்க வேண்டும் என்பதையும், பட்டபாடுகளை பாட்டாக சொன்ன விதமும் அருமை. இனி பலப் பதிவுகள் பாடலாக வரும் என்றும் தெரிகிறது.
  த ம 8

  பதிலளிநீக்கு
 11. சோகத்தையும் நகைச்சுவை ,உங்களால் மட்டுமே முடியும் ,ஜி :)

  பதிலளிநீக்கு
 12. அருமை டிடி சகோ :)

  வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும்படி சொல்லி இருக்கேன். அவங்க யாருக்கும் டைம் கிடைக்கலை போல தெரியுது. :(

  எனக்கு வலைப்பதிவர் கையேடு இரண்டு வேண்டும். வைச்சு வைங்க. எப்பிடி வாங்கிக்கிறதுன்னு தெரில. கையில் பணமிருக்கு. புதுக்கோட்டை வந்தா கையோடு வாங்கிக்குவேன்னு தோணுது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தேனம்மை லக்ஷ்மணன் மேடம்,

   என்னிடம் மூன்று புத்த்கங்கள் அதிகம் இருக்கின்றன. ஆகவே,
   நீங்கள் சென்னையில் இருந்தால், உங்களிடம் நேரில் வந்து நானே தந்து விடுகிறேன்.

   நீங்கள் விரும்பும் தொகை மட்டும், திண்டுக்கல் தனபாலன் சார் சொல்லி இருக்கும் கணக்குக்கு அனுப்பி வைக்கவும்.

   சுப்பு தாத்தா.
   please inform your address to
   meenasury@gmail.com

   நீக்கு
 13. பாடல் ஆசிரியராக இன்னொரு அவதாரம் . சூழலுக்கு பொருத்தாமா பாட்டெழுதி கலக்கிட்டீங்க

  பதிலளிநீக்கு
 14. சோகக் கதை கூட மெட்டுக் கட்டிப் பாடிப் பார்க்கும் போது சுவையாகிவிடுகிறது ஐயா.

  வலைச்சித்தர் கவிச்சித்தர் ஆகிறார்.

  வாழ்த்துகள்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அருமை டிடி சார். கலக்குங்க. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 16. மனசு வச்ச.....பாட்டும் பதிவும் அருமை.... சித்தரே......

  பதிலளிநீக்கு
 17. பாட்டினை ரசித்தோம். வழக்கமாக தங்களின் பாணியில் அசத்துகின்றீர்கள். ஒவ்வொரு பதிவிலும் ஒரு வித்தியாசமான பாணியே தங்களின் பாணி. நான் மனது வைத்துவிட்டேன். இதுவரை மனது வைக்காத நம் நண்பர்கள் மனது வைப்பார்கள், கைகொடுப்பார்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 18. பதிவு வாசித்தேன்.பணம் அனுப்ப முயற்சித்த பின் தகவல் தருகிறேன்.

  பதிலளிநீக்கு
 19. சோகத்தின் பாஷை என்ன சொன்னால் அது தீருமா? கங்கை நீர் காயக் கூடும் பதிவர் அன்பு வற்றுமா? இதோ தீர்ந்து விடும் புத்தகக் கையிருப்பு!

  பதிலளிநீக்கு
 20. வில்லுப்பாட் டாய்உள்ள வில்லங்கம் தன்னையும்
  சொல்லிப் புரியவைத்த தொண்டு!

  சகோதரரே! தங்கள் திறமை பா இயற்றலும் மிளிர்கிறது!
  வாழ்த்துக்கள்!
  சொல்லியது புரிந்து பலன் கிட்ட வேண்டும்!
  நானும் முயல்கின்றேன் சகோதரரே!

  பதிலளிநீக்கு
 21. செம்மை... அனைவரும் இதை பாக்கியராஜ் வாயிஸ்லயே படிங்க இந்த சமாசாரமெல்லாம் இனி நானும் கத்துக்கணும் அய்யா (டிடிமாமா )...
  அதாவது கையேடு தயாரிக்க நிலவன் தாத்தா கஸ்தூரி அய்யாட்ட கேட்டப்போ ஸ்ரீ உன்னால முடியுமா கேட்டாங்க
  நானும் முயற்சி பன்னிருவோமேனு செய்ய ஆரம்மிச்சேன்...
  எப்போவுமே நமக்கு முன்னோடி ஒர்த்தர் உண்டு எல்லா செயல்லயும்`
  கஸ்தூரி ரெங்கன் அய்யா எனக்கு ப்ளாக் ஆரமிக்க முன்னோடி...
  கையேடு மாதிரி சமச்சரதுக்கு யாரடா இருப்பாங்கன்னு விசாரிச்சா நிலவன் அய்யா டிடி அய்யாவ அறிமுகபடுதினாங்க...
  அவரோட பெயரே எனக்கும் கிடைச்சது ரொம்ப பெருமை...
  கையேடு வாங்கி எல்லாரும் அவங்கவங்க சம்சாரம் புள்ளகுட்டிங்களோட ரொம்ப மகிழ்சியா இருக்கணும்... நன்றி
  மறுமுறை நன்றி டிடி அய்யா (மாமா) அவர்களுக்கு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வலைச்சித்தர் இரண்டாவது முறையாகப் பாடலெழுதி இப்போ கவிச்சித்தர் ஆகிவிட்டார். (இளைய வலைச்சித்தர் எங்க ஊர்ல வந்துட்டார்ல..?) அப்பறம் ஸ்ரீ என்னைத் “தாத்தா“ சொன்னது பத்தி... அது உண்மை தான்! ஏன்னா ஸ்ரீயோட அம்மா என் மாணவி! “அப்படினா நீ என் பேரனப்பா்“ னு சொல்லிட்டேன். புததகம் தேங்கியதை நான் ஸ்ரீ+ UK Infotech கார்த்தி தம்பிகளின் அசுரத்தனமான உழைப்பு வீணாகிவிடக்கூடாதே என்றும் பார்க்கிறேன். இப்படிச் சொன்னால் புரியுமா என்று தெரியல.. ஆனா க்யூஆர் கோடு தயாரித்த கையோடு ஒரு நாள் நள்ளிரவு மணி 11.45க்கு ஸ்ரீயும் கார்த்தியும் தொலைபேசியில் பேசி “அய்யா நீங்க இப்ப முழிச்சிக்கிட்டுத்தான் இருப்பீங்கன்னு தெரியம்.. வேற எங்கயும் ப்ரிண்ட் அவுட் எடுக்க முடியல.. உங்க வீட்ல எடுக்க வரலாமா?” என்று கேட்டு வந்து, வேலை முடிந்து போகும்போது மணி இரவு12.30 ஆனாலும் அந்த இரவு முழுவதுமே இருவரும் தூங்கவில்லை என்பதறிந்து நான் நெகிழ்ந்து போனேன்.. திண்டுக்கல் காரர் என்னவென்றால் பதிவர் விவரங்களை எக்ஸெல் கோப்பில் அசராமல் அனுப்ப, அதை பேஜ்மேக்கருக்கு அவ்வப்போது மாற்றிக்கொண்டே வந்த அந்த உழைப்பு வீணாகலாமா? என்பதே என் கவலை!
   மாமனும் மருமகனுமாகப் பாடுவதாகப் பாட்டு இருந்தாலும் இதன் மையமான பொருளைப் புரிந்து கொண்டு நம் வலைப்பக்க நண்பர் பலர் நூல்பிரதிகளை வாங்கிக் கொள்வதாகச் சொன்னதுதான் பாடலின் வெற்றி! வலைச்சித்தரே உங்கள் தொழில் நுட்ப ம(ா)யம் அருமை!

   நீக்கு
 22. நன்கொடையாக இல்லாமல் கையேடு விற்ற பணமாகப் பெரும் எண்ணம் தெரிகிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம் அய்யா. எதையுமே இலவசமாகத் தந்தால் அதன் மதிப்பு தெரியாது. அப்படியெனில், விழாவில் தோள்பை மற்றும் இந்தக் கையேட்டைக் காசுபெறாமல் தந்தது ஏன் என்று கேட்பீராகில், அது செலவழித்தும் சிரமம் பாராமலும் பல்வேறு ஊர்களிலிருந்தும் வந்த அன்பிற்கான எமது விழாக்குழுவின் இனிய விருந்தோம்பலின் ஒரு பகுதி! வந்தவர் மனமும் வயிறும் குளிரணும் என்பதன் வெளிப்பாடுகள் இவை. நன்றி (இதையெல்லாம் சொல்ல வாய்ப்பாக இப்படி ஒரு பாடலை எழுதி வெளியிட்ட வலைச்சித்தரின் அன்புக்கு நன்றி.)

   நீக்கு
 23. வலைப்பதிவர் கையேட்டை நிறைய பேர் வாங்காதது வருத்தமான ஒன்று! உங்களுக்குத் தெரியாத பாட்டே கிடையாது. இந்த முறையும் அசத்திட்டீங்க! இன்றுதான் எனக்கு வலைபதிவர் கையேடு வந்து சேர்ந்தது. நன்றி!

  பதிலளிநீக்கு
 24. வணக்கம்
  அண்ணா.
  எல்லாப் புகழும் உனக்கே..அண்ணா.. பாடல் அற்புதம்.. நன்றி சொல்லிய விதமும் சிறப்பு வாழ்த்துக்கள்... த.ம13

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 25. அருமை ஜி அதே மெட்டில் பாடிப்பார்த்தேன் சிறப்பு பொருத்தமான வரிகள் வாழ்த்துகள் ஜி நமது பதிவர்கள் அனைவரும் இனி மேலாவது கையேடு வாங்குவார்கள் என்று நம்புவோம்...

  பதிலளிநீக்கு
 26. வலைக் கவிச் சித்தரே... கையேடு வாங்காதவரையும் வாங்க வைக்கும் உங்கள் கோரிக்கைப் பாடல்.

  பதிலளிநீக்கு
 27. பட்டு நூல் காரருக்கு...பட்டு வண்ண இழைகலை விட மேன்மையான ஒரு ஆடைகளாலும் பாசங்களாலும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. மற்றவர்களின் பாடலைப் பாடிக்கொண்டிருந்த நீங்கள் இப்போது சொந்தமாகப் பாடத் தொடங்கிவிட்டீர்களே! சோகக்கதை கேட்க வருத்தமாகத் தான் இருக்கிறது. எனக்காக திருமதி ருக்மிணி வாங்கிவிட்டதாகச் சொன்னார் (காசு கொடுத்துத்தான்!) இன்னும் யாருக்காவது அனுப்பி வைக்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். கூடிய விரைவில் பணம் அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 29. சங்கடத்தை உள்ளடக்கி
  இத்தனை இயல்பான வார்த்தைகளோடு
  யார் மனமும் கோணாதிருக்க
  நகைச்சுவையாய்ச் சொல்லிப் போனவிதம்
  அருமையிலும் அருமை
  படிக்கமட்டும் செய்யவில்லை
  பாடியும் ரசித்தேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. விரைவில் சங்கடங்கள்
  நீங்கி நூல்கள் போதவில்லை
  எனும் மகிழ்வான செய்தி
  உங்கள் பதிவிலேயே வரும்..(அதுக்கும் பாட்டு தயார் செஞ்சிகுங்க)

  நேற்று பதிவைக்கண்டதும்
  வாக்களித்து பின்னூட்டமிடுவதற்குள்
  என் செல்லக்கணினி வழக்கம்போல் சதி செய்து விட்டது சித்தரே..

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் அங்கிள்..என் வலை தளம் வந்து பாருங்க...http://chinnavalsurya.blogspot.in/2015/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 32. பதில்கள்
  1. வாக்கியத்தில் பிழை. எனவே நீக்கம் செய்துள்ளேன். மன்னிக்கவும்!

   நீக்கு
 33. வலைபதிவர்கள் கையேடு பற்றிய தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. நம்பியார் – பாக்கியராஜ் பாடும் பாடலைக் கேட்டுக் கொண்டே தங்கள் பாடலைக் வாசித்தேன்.. சந்தம் தட்டவில்லை. ராகத்தோடு ஒத்து போனது. ஆனாலும் மனதில் ஒரு சோகம். இந்த வலைப்பதிவர்கள் அனைவரும், புதுக்கோட்டை சந்திப்பிற்கு முன், ஆளுக்கு ஆள் வாளெடுத்து சுழற்றிக் கொண்டு இருந்தார்களே? எல்லாம் சும்மாதானோ என்ற வருத்தம் வந்து விட்டது.

  நண்பர்களுக்கு அன்பளிப்பாகத் தர எனக்கு நான்கு பிரதிகள் வேண்டும். நாளை (03.11.15) வங்கி திறந்ததும் ஐநூறு ரூபாய் அனுப்பி வைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 35. கலக்கிட்டீங்க அண்ணா...
  விற்று விடும் கவலை வேண்டாம்...

  பதிலளிநீக்கு
 36. வலைச் சித்தர் பட்டம் பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 37. நிறைய தவற விட்டு விட்டதாக உணர்கிறேன்.... வாழ்க வளமுடன்....

  பதிலளிநீக்கு
 38. பாடல் நல்லாருக்கு அங்கிள்...என் வலைதளமும் பாருங்கhttp://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post.html

  பதிலளிநீக்கு
 39. சொல்லவேண்டியவற்றை மிக அழகாகப் பாடல்வழி சொல்லி மனம் பதியவைத்தமை சிறப்பு.. விழாக்குழுவினர் ஒவ்வொருவரின் உழைப்பும் சிரத்தையும் நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக உள்ளது. ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே பாடலை வலைப்பூக்களின் அடையாள கீதமாகவே சொல்லலாம். அவ்வளவு கருத்தும் ஈர்ப்பும். பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 40. இனிய நினைவலைகள் இன்றும் இங்கு தொடர்வதில் மகிழ்ச்சி. தாங்கள் உள்பட விழாக்குழுவினர் அனைவருக்கும் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 41. வணக்கம் பிக் அங்கிள்...உங்கள் வலை தளம் எனக்கு ஒழுங்காகவே காட்டவில்லை..

  பதிலளிநீக்கு
 42. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ !

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.