அணில் உதவியதை போல்...
வலைத்தள உறவுகள் அனைவருக்கும் வணக்கம்... புதுக்கோட்டையில் சிறப்பாக நடந்து முடிந்த பதிவர் சந்திப்பை பற்றி பலரும் அருமையாக எழுதி விட்டார்கள்... அவர்கள் அனைவருக்கும் நன்றிகள்... மேலும்...
வலைச்சித்தர் பட்டம் வழங்கிய புதுக்கோட்டை விழாக் குழுவினருக்கும், வலைச்சித்தர் என்று பெயர் சூட்டிய திரு. கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டு, விழா குறித்து என் அனுபவங்களும், சில பழைய சிந்தனைகளும்...
நம் பொதுவான தள முகப்பில் https://bloggersmeet2015.blogspot.com/ ஒரு பதிவர் சந்திப்புக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் கொண்ட பக்கங்களை (Labels) புதுப்பித்தல் செய்ததில் (இன்னும் இருக்கு) மிகவும் சந்தோசப்படுகிறேன்... அனைத்திற்கும் காரணம் நம்ம முத்துநிலவன் ஐயா அவர்கள்... பழைய அனுபவத்தை நினைத்துப் பார்க்கிறேன்...
சென்னை பின்னி மில்லில் பணியிலிருந்த போது, திரு.T.K.V அவர்களின் ஞாபகம் வருகிறது... அன்று இருந்த கணினி வேறு... கணினிப் பெட்டி(CPU), திரை(Monitor), தட்டச்சுப் பலகை(Keyboard) அவ்வளவே... நினைவகம்(Hard Disk) கூட கிடையாது... இப்போது இதெல்லாம் இல்லை என்பதால் இத்துடன் இதை விட்டு விடுவோம்... Foxbase-ல் செய்ய வேண்டியதெல்லாம் Lotus-123-ல் செய்யச் சொல்வார்...! இப்படிப் பல சவாலான வேலைகள் கொடுப்பதில் முன்னோடி...! என் மீது அவ்வளவு நம்பிக்கை... ஒரே தகவலை எந்தெந்த விதத்தில் உருவாக்கிப் பயன்படுத்தலாம் என்று கற்றுக் கொடுத்தவர்...
எடுத்துக்காட்டு : பதிவர் வருகைப்பதிவை மாவட்ட வாரியாக செய்ததும், 100 போட்டியாளர்களின் 260 படைப்புகளை வகைவாரியான பட்டியலும் இப்படித் தான்... கற்றுக் கொண்ட எந்த நுட்பமும் என்றும் வீண் போகாது...! இத்தனைக்கும் அவர் எனது நேரிடை மேலாளர் கிடையாது... எனக்கு மேலாளர் மில் மேனேஜர் தான்... அவர் Vice President - Marketing... இருவரையும் சமாளித்தது பற்றி பிறகு...! "முயற்'சிக்காமல்' முடியாதென்று சொல்லாதே..." என்று சொன்னவர் திரு.T.K.V அவர்கள்... (இந்த தலைப்பில் ரசனையான பாடல்களுடன் பதிவை வாசிக்க இங்கே சொடுக்கவும்)
இதே போல் தான் திரு.முத்து நிலவன் ஐயாவின் அன்பு பிடியில் சிக்கினேன்...! எதிலும் நேர்த்தியை எதிர்பார்ப்பதில் இவரும் ஒரு நிபுணர்...! நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை ஒருவரின் ஆளுமைத்திறனைக் கண்டு வியந்தேன்... விழாக்குழுவினருக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒரு வேலையைக் கொடுத்து நம்பிக்கையோடு செயல்பட்டார்... அதே சமயம் ஒவ்வொரு வேலையையும் நேரடியாகக் கண்காணிக்கவும் செய்தார்... ராமர் பாலம் கட்ட அணில் உதவியதை போல் என் உதவியும்... மில்லில் ஒரு நாள் செய்த வேலையைத்தான் இந்த இரண்டு மாதங்களாக நம் விழாத்தளத்தில் செய்தேன் என்பது தான் உண்மை... அதன் தொழினுட்ப பதிவு பிறகு...!
கோபமா...? அப்படியென்றால்...? சிறு எரிச்சல் கூட ஐயாவிடம் எதிர்பார்க்க முடியாது... அவரின் ஒரு சிறு மௌனம், என் மீது எனக்கே கோபம் வந்தது... தவறு என் மீது தான்... அது என்னவென்றால்...
இன்று வரை உழைத்துக் கொண்டிருக்கிற எனது அப்பா நினைவுகளோடு... கைத்தறி நெசவு குடும்பம் எங்களது... சேலையில் கரை மற்றும் சேலை முந்திக்கு வேண்டிய வடிவங்களை (Designs) அவரே வரைவார்...! கரைக்குத் தனி அட்டை, முந்திக்குத் தனி அட்டை... முந்தியில் பெரிய அழகான வடிவம் இருக்க வேண்டும்... அதன் இருபுறமும் கரையில் இருக்கும் வடிவம் இருக்க வேண்டும்... இரு விதமான அட்டையும் (For Jacquard) அடிப்பார்... சிறு வயதில் இதைப் பார்த்ததுண்டு... டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி படிக்கும் போது படித்ததுண்டு... முதலில் படம் வரைந்து, பிறகு டிராப்ட் பிளான் உருவாக்கி, அதன் பின் முடிவான பிளான் உருவாக்கி அட்டை அடிக்க வேண்டும் என்று...! அப்பா என்னவென்றால் வெறும் டிராப்ட் பேப்பரை பார்த்து, அட்டை அடிக்கும் மெசினை விட இவ்வளவு வேகமாக அடிக்கிறாரே என்று வியந்ததுண்டு...! விடுவோமா...? நானே ஒரு படத்தை வரைந்து, அட்டை அடித்து கைத்தறி 2 Jacquard-களில் ஏற்றி ஓர் அங்குலம் நெய்து பார்த்தால்... அவசரத்திற்குக் கிடைத்த பரிசு...! என்னத்த படிச்சி... சில வருடம் மில்லில் மேலாளராக வேலை செய்து...! இதில் ISO Consultant வேறு...!
கரையில் முன்புறம் வர வேண்டிய வடிவம் பின்புறம் வந்துள்ளது... க்கும் சேலை வித்த மாதிரி தான்... அப்பா சொன்னார்..."கரை அட்டை அடிக்கும் போது டிராப்ட் பேப்பரில் வரைந்துள்ள புள்ளிகளை அடிக்கக் கூடாது... அது இல்லாத புள்ளிகளை அடித்தால் சரியாகி விடும்" என்றார்...! ம்... அது போல்...
ஒரு பதிவர் ஒரே வகையில் பதிவு செய்த பல போட்டிப் படைப்புகளை, அவரின் பெயருக்குக் கீழே தினமும் புதுப்பித்துக் கொண்டிருந்தேன்... இதனால் வரிசை எண்ணும் மாறும்... நடுவர்களுக்கு வரிசை எண் முக்கியம் என்பதை நினைக்கக்கூடயில்லை... ஐயா தான் பிறகு இதைத் தெரிவித்தார் கோபப்படாமல்...! இது கூட பரவாயில்லை... ஒரு பதிவை நாம் திருத்தம் செய்யும் போது, அதே பதிவை வேறொரு இடத்தில் இன்னொருவர் திருத்தம் செய்து, இதில் யார் முதலில் "update" செய்கிறார்களோ, அது தான் அந்தப் பதிவில் இருக்கும்... இதை ஐயாவிடம் நான் சொல்ல மறந்து விட்டேன்... அவர் ஒரு பதிவில் ஒரு பக்க அளவிற்கு எழுதி இருக்க, நான் அந்தப் பதிவை இங்குப் புதுப்பித்து "update" செய்ய, ஐயாவிடம் இருந்து தொடர்பு வர, பிறகு அவரிடம் இந்த விசயத்தைச் சொல்ல... சிறிது மௌனம்... "சரி விடுங்க... நான் பார்த்துக்கிறேன்..." என்றார்... தடங்கல் / சங்கடம் வந்தாலும் அந்த ஈடுபாடு...! அதை விடப் பொறுமை...! அடுத்த பதிவில் நிறையப் பேசுவோம்... நன்றி...
517. இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்
(அதிகாரம் : தெரிந்து வினையாடல்)
கருணை இருந்தால் வள்ளலாகலாம்... கடமை இருந்தால் வீரனாகலாம்...2 பொறுமை இருந்தால் மனிதனாகலாம்... மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.....இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்...
⟪ © பெற்றால் தான் பிள்ளையா ✍ வாலி ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1966 ⟫
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?
முக்கிய குறிப்பு : நமது விழாவிலும் ஒரு பெரும் குறை நேர்ந்துவிட்டது... அதைப் பற்றி அறிய இங்கே சொடுக்கவும்... வாசித்து விட்டீர்களா...? அதன்படி வலைத்தள நண்பர்கள் அனைவரும் உதவி செய்யக் கோருகிறேன்... நன்றி...

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வலைச்சித்தரே
பதிலளிநீக்குஏன் ஆசை
வார்த்தைச்சித்தராக?
அனுபவங்களே
வாழ்க்கை.
சில கவிதையாகும்,
சில நம்மைக்
கழுதையாக்கும்.
அருமையான
பின்னல் நடை
ஒரு வெட்டு
ஒரு ஒட்டு
நல்ல எடிட்டர்
உமக்குள் இருக்கிறார்.
அருமை DD...
நிலவன் ஐய்யா பற்றி
சொன்னதும் அத்தனை
ஈர்ப்பாய் இருந்தது....
நீங்கள் இப்போது சொல்லும் எல்லா சம்பவங்களும் பரிமாறப்பட்டது. இனிப்பாகவே எங்களுக்குள்..உங்களை,உங்கள் பணியை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது....
இன்னும் எழுதுங்கள்.....போரடித்தால் புறப்படுங்கள் புதுக்கோட்டைக்கு...
என் சின்னவயது தான் தடுக்கிறது.....
இல்லையெனில் இப்படித்தான் இதை
முடித்திருப்பேன்
"நண்பேண்டா"......
சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களே, புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு முடிந்தவுடன், ஒரு பின்னூட்டத்தில் ஏற்கனவே நான் சொன்னது போல, “உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை”. நன்றி.
பதிலளிநீக்குஅமைதியாக, அசத்தலாக, அனாயசமாக ஒரு பெரிய பணியைச் செய்துமுடித்துவிட்டு அணில் என்று கூறியுள்ளீர்கள். உங்களைப் போன்ற பல அணில்களின் பங்களிப்பே இவ்வாறான வெற்றிக்குக் காரணம். உங்களுக்கும், புதுக்கோட்டைக்குழுவினருக்கும் எத்தனை முறை நன்றி கூறினாலும் எங்கள் மனம் நிறைவடையாது. உங்களிடமிருந்தும் நாங்கள் கற்றுக்கொள்ளவேண்டியது நிறையவே இருக்கிறது. நிறைகுடம் இப்படித்தான் இருக்கும்.
பதிலளிநீக்குநான் சொல்ல நினைத்ததையே ஐயா சொல்லியிருக்காங்க.
நீக்குவிழாக்குழுவினர் ஒவ்வொருவரின் ஆர்வமும் உற்சாகமும் அவர்களை வழிநடத்திய முத்துநிலவன் அண்ணாவின் பணியும் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
நானும் வழிமொழிகிறேன்
நீக்குவழி மொழிகின்றோம்...கருத்து அருமை!
நீக்குவணக்கம் சார்...நல்ல நடை...கருத்து மாறுபாடுகளைக்கூட நகைச்சுவையாக வர்ணிக்கும் பக்குவம்.உங்களின் அனுபவங்கள் பதிவுகளை மேம்படுத்திய விதம் மிக அருமை...நன்றி.
பதிலளிநீக்குvaazthukkal
பதிலளிநீக்குவணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
வலைச்சித்தர் என்ற பட்டம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் தங்களின் அனுபவத்தை மாலையாக்கிய விதம் சிறப்பு வாழ்த்துக்கள் த.ம 4
எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மறக்க முடியாத நிகழ்வு என்று விழாவை சொன்னாலும், அதன்பின் மறைக்கப்படாத பலரின் உழைப்பு இருக்கிறது. தங்களின் உழைப்பும் சிந்தனையும் அபாரம்.
பதிலளிநீக்குத ம 4
வாழ்த்துகள் வலை சித்தர் பாலன் சார்!
பதிலளிநீக்குஇந்த வலைப்பதிவர் சந்திப்பு விழாவிற்கு நீங்கள் ஆற்றிய பணி எத்தகையது என்பதை அனைவரும் அறிவர். நீங்கள் உங்களை அணில் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள இயலாது. அப்படியே ஒரு வாதத்திற்காக ஒப்புக்கொண்டாலும் ‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பது தானே பழமொழி. திரு முத்து நிலவன் அவர்களின் சீரிய தலைமையை பாராட்ட சொற்களே இல்லை. அவருக்கும் உங்களைப்போல் இரவு பகல் பாராது உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்!
பதிலளிநீக்குவலைச்சித்தர் பட்டத்துக்குத் தாங்கள் பொருத்தமானவரே! உங்கள் தந்தையின் அனுபவ அறிவோடு உங்கள் தொழில் நுட்ப அறிவும் சேர்ந்து கொண்டிருக்கிறது. வெற்றி நிச்சயம். கவிஞர் முத்துநிலவன் அவர்களின் ஈடுபாடும், உங்கள் உழைப்பும் நிச்சயம் போற்றுதலுக்கு உரியது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎல்லோருடனும் இணங்கிப் போகும் தாங்களின் பணி புதுகை வலைப்பதிவர் விழாவில் மிக முக்கியமானது... அதுவும் நிலவன் ஐயாவோடு கைகோர்த்து வேலை பார்த்திருக்கிறீர்கள்... நல்ல அனுபவம்... உழைத்த உழைப்பு வீண் போகாது அண்ணா... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஅன்பு தனபாலன் ! ஒரு பதிவர் விழாவை மிகவும் விமரிசையாக நீங்களும் நண்பர்களும் நடத்தி இருக்கிறீர்கள். வலைப்பூக்களில் வெளியான பாராட்டுகளையும் விமரிசனங்களையும் கண்ணுற்றேன். அவற்றுக்கு,நீங்கள் மற்றும் முத்துநிலவன் பொறுப்பேற்ற விதமும் கூறிய விளக்கங்களையும் கூட படிக்கலாயிற்று. விழாக்குழுவினர் தங்கள் நேரம், கடும் உழைப்பு, மற்றும் காசைக்கூட செலவிட்டு தேரிழுத்திருக்கிறீர்கள். அனைவருக்குமே என் உளமார்ந்த பாராட்டுகள். சில விடுபடல்கள் இருக்கத்தான் செய்யும்.. வருங்காலத்தில் இவை களையப்பட்டுவிடும். அனுபவம் பெரிய ஆசான். மனம் தளராமல் அடுத்தவிழாவை மேலும் சிறப்பாக திட்டமிட்டு செய்யுங்கள். இளையவர்கள் சிலரை ஈடுபடுத்துங்கள். வலைத்தளம் காணும் வரலாற்றில் இடம்பெற்று விட்டீர்கள். அனைவருக்கும் என் மென்தழுவல்... வலைச்சித்தராகி விட்டபின் வலையுலகில் உங்கள் சித்துவேலைகளையும் எதிர்பார்க்கிறேன் தனபாலன்!
பதிலளிநீக்குவலைப்பதிவர் சந்திப்பு விழாவில் - தங்களுடைய பணி மகத்தானது..
பதிலளிநீக்குசிறப்பானது.. என்றும் மறக்க இயலாதது.. தங்கள் உழைப்பிற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்..
இதனை இவர் முடிப்பார் என்றாராய்ந்து அதனை அவர் கையில் விடுபவர் சிறந்த மேலாண்மைவாதி. உங்கள் அனுபவம் உங்களுக்கு கை கொடுத்திருக்கிறது. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவலைச்சித்தருக்கு அன்பின் வணக்கம். என்ன ஒரு நுட்பமான கவனம்! அய்யா உங்களிடம் இன்னும் “ஜாக்கிரதையாக“ இருக்கணும் போல! அய்யா. அன்பின் “பின்னலாய்் நாம் சூழப்பட்டிருக்கிறோம். என்பதைத்தான் மில் வேலையிலிருந்து தொடர்கிறீர்கள்! நிற்க அய்யா இங்கே தலைவர் என்று யாரும் கிடையாது. எல்லாரும் அவரவர் தரப்பில் இருந்து, அவரவர் அனுபவத்திற்கும் சூழலுக்கும் ஏற்ப தத்தம் மனச்சாட்சிக்கு விரோதமின்றி உழைப்பைத் தந்ததால் இந்தநிகழ்வு சிறந்தது என்பதே இப்போதும் என் கருத்து. தங்களின் அணில் உவமை பொருந்தாது, தங்களின் பண்பு காரணமாகத் தங்களின் அற்புதப்பணிகளைக் குறைத்துச் சொல்லிக் கொண்டாலும் தங்களின் அசராத உழைப்பை எமது விழாக்குழுவும், விழாவுக்கு வந்திருந்த அனைவரும் நன்கறிவோம். அதனால்தான், புதுக்கோட்டை நண்பர்கள் மாறிமாறி அமரச்சொன்ன மேடையில் தாங்கள் நிரந்தரமாகவே உட்கார வேண்டும் என்றும் அன்புக் கட்டளையிட்டிருந்தோம் (அப்படியும் தாஙகள் இடையிடையே நேரலை ஒளிப்பதிவைப் பார்க்க இறங்கிப் போய்வந்துகொண்டே இருந்தீர்கள் என்பது தனிக்கதை!) ஒவ்வொருவர் உழைப்புக்கும் எங்கள் விழாக்குழுவின் அங்கீகாரத்தை மகிழ்வோடு வழங்கிக்கொண்டே இருந்தோம். அதுதான் இந்த வெற்றி. இதில் தலைவர் என்பதற்குப் பதிலாக “ஒருங்கிணைப்பாளர்“ எனும் பொறுப்பைத்தான் நான் செய்தேன். எங்கள் சகோதரிகள் மு.கீதா, இரா.ஜெயா, பொன்.க., வைகறை, செல்வா, முதலானோர் அனைத்து குழுப்பணிகளிலும் தலையிட்டோம். மற்ற யு.கே.தம்பிகளின் பணிகள், ஓவியக்குழுவினரின் பணிகள் ஒருபுறம் நடந்துகொண்டே இருந்ததைப்போல உங்களின் தொழில்நுட்பப்பணிகள் இரவுபகலாய் நடந்துகொண்டே இருந்ததால்தான் தொடர்பணிகள் தொடர்ந்தன. இதை எங்கெங்கோ இருந்துகொண்டு உற்சாகப் பதிவுகள் போட்டும், நிதி அனுப்பியும், அழைத்து உரையாடியும் “விழா வெற்றிக்கு“ உதவி செய்தவர்களின் பங்களிப்பை மறக்கவே முடியாது! சொல்லச் சொல்ல இது தொடருமே அன்றி நிறைவடையாது! எனவேதான் தங்களின் “அணில்“ பணியால் நம் இணையத்தமிழின் வளர்ச்சிக்கு நம்மால் இயன்றதைச் செய்திருக்கிறோம். இனியும் இளைஞர்கள் இதைத் தொடர்ந்து கொண்டுசெலுத்துவார்கள் எனும் நம்பிக்கை வந்திருக்கிறது..அடுதத ஆண்டு நாங்கள் நடத்தவுள்ள “கணினித் தமிழ்ச்சங்க ஆண்டுவிழா“வுக்கும் தங்கள் உதவிகளை இப்போதே கேட்டு விண்ணப்பிக்கிறோம் அய்யா. தொடர்வோம்.வணக்கம்.
பதிலளிநீக்குஅய்யா, அப்படியே “உலகத்தமிழ் வலைப்பதிவர் கையேடு-2015“ நூல் விற்பனையின் “இருமுனை“ அவசியம் பற்றியும் நீங்கள் தான் எழுத வேண்டும், நீங்கள்தான் எழுத முடியும். எழுதிட வேண்டுகிறேன்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபணிசெய்து வலைப்பூ இலக்கண யாப்பில்
அணியாக அமைந்தீர் அய்யா அணிலாக
மணியான தன்மை முதல் பாவிகம்வரை
துணிவே துணையாய் நிற்க
த ம +
நட்புடன்,
புதுவை வேலு
வலைச்சித்து கைவந்த சித்தருக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவலைச்சித்தர் நண்பர் திருமிகு திண்டுக்கல் தனபாலன் அவர்கள்,
பதிலளிநீக்குவலைப்பதிவுலகத்திற்க்கும், வலைப்பதிவு நண்பர்களுக்கும் தாங்கள் செய்யும் இனிய பணி, சீரும் சிறப்புமாய் தொடர வாழ்த்துக்கள் !
சித்தையன் சிவக்குமார், மதுரை.
அணிலுக்கு எங்கள் அன்பான பாராட்டுகள். எல்லோரையும் அன்புடன் வழி நடத்திக்கொண்டு போகும் தலைமைப் பண்பு முத்துநிலவன் அவர்களிடம் இருக்கிறது. மதுரையில் அவரை சந்தித்தாலும் பேச முடியாமல் போய்விட்டது.
பதிலளிநீக்குஊர் கூடி நல்லாவே தேரை இழுத்துருக்கீங்க!
வாழ்த்துகள்
பதிலளிநீக்குமூன்றும் இருந்தால் தலைவர் ஆகலாம் என்று..... வலையுலக தலைவர் ஆகிவிட்டீர்கள் நன்றி!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் வலையுளக சித்தரே.
பதிலளிநீக்குவணக்கம் சித்தர் அண்ணா! தங்கள் பணி மகத்தானது! ஒரு பதிவு எழுதிமுடிப்பதற்குள் உடனே எப்படி இணைத்துவிடுகிறார் என்று மிக மிக ஆச்சரியப்பட்டேன்! தாங்கள் வழங்கிய ஊக்கத்தினால்தான் சில பதிவும் எழுதினேன்! சித்தர் என்கிற பட்டத்திற்கு முழு பொருத்தமானவர் தாங்கள் தான்! பதிவர் சந்திப்பு எனக்கு இதுதான் முதல்தரம்! விழா வை பார்த்து மிரண்டுபோனேன்! நேரம்காலம் பாராது உழைத்த அனைத்து உள்ளங்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் அண்ணா! நன்றி
பதிலளிநீக்குபதிவர் விழா அனுபவங்களைத் தந்தையுடனான துவக்க கால நெசவு நினைவலைகளுடன் கோர்த்துப் பின்னிய விதம் அழகு. கற்றுக்கொண்ட எந்த நுட்பமும் வீண் போகாது; ஏதாவதொரு சமயத்தில் நமக்குக் கைகொடுக்கும் என்பது முழுக்க முழுக்க உண்மை. எதிலும் நேர்த்தியை எதிர்பார்க்கும் அண்ணன் முத்துநிலவன் அவர்கள் அன்புப்பிடியில் சிக்கி பதிவர் விழாவுக்கு நீங்கள் தந்த பங்களிப்பினைச் சுவையாகத் தந்துள்ளீர்கள். அணில் என்று மிகவும் குறைத்துச் சொல்லிக்கொண்டாலும் உங்கள் தொழில் நுட்ப பணி அசாதாரணமானது என்பதை நாங்களறிவோம். வலைச்சித்தர் என்ற பட்டம் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது. தொடர்ந்து உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன். பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குசகோதரரே!.”வலைச்சித்தர்” பட்டம் மிகமிகப் பொருத்தமானது உங்களுக்கு!
பதிலளிநீக்குசித்தர்கள் யாவும் அறிவர். அவர்களின் தன்மை, ஆற்றல் அளவிடற்கரியது!
உங்கள் தந்தையாரிடம் கற்றுக்கொண்ட பாடங்களும் வேலைத்தள அனுபவங்களும் இப்போது பதிவர் சந்திப்பு உழைப்பனுபவமுமென்று அனுபவப் பகிர்வு மிக அருமை!
பதிவர் விழாவிற்காக உங்கள் யாவரினதும் உழைப்பு மதிப்பிட முடியாதது! பாடுபட்ட அத்தனை பேருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
வலைசித்தர் பட்டம் பெற்றமைக்கும்,வாழ்வில் இனிமேல் சோதனைகளைக் கடந்து சாதனைகளைப் பெறவும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவலைப்பதிவர் சந்திப்பு விழாவில் தங்ககளது பணி மகத்தானது. வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குபுதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு நிகழ்வை
பதிலளிநீக்குநேரலையில் பார்த்த போதும் கண்டேன்
பலரது வலைப்பதிவுகளில் கண்டேன்
தங்கள் பணியைப் பாராட்டியுள்ளனர்
ஆயினும், நான்
நம்பகமான தங்கள் பணியை
பல வழிகளில் கவனித்தேன்!
அப்படியிருப்பினும்
தங்கள் அவையடக்கம் பாராட்டுக்குரியது.
வலைப்பதிவர் மத்தியில்
ஒரு நம்பிக்கை நட்சத்திரம்
தாங்கள் தான் என்பதை - அந்தக்
கடவுளும் கண்டிருப்பார்!
தங்கள் பணி தொடர
எனது பாராட்டும் வாழ்த்தும்
உரித்தாகுக!
ஆஹா அருமை அருமை,,,,,,,,
பதிலளிநீக்குபட்டம் சரியாக பொருந்தும் மனிதர்,,,,,
வாழ்த்துக்கள்,,,,
தங்கள் பணி இங்கு அனைவரும் அறிந்ததே,,,
நான் அதிசயத்துப் போனதுண்டு, தங்கள் வேகமான பணிக்குறித்து,
வாழ்த்துக்கள் சித்தரே,,,
உங்கள் தந்தையாரின் அனுபவ அறிவுரை, பின்னி மில்லில் உங்களுக்கு கணனியில் திரு TKV கற்றுக்கொடுத்த பல சித்து வேலைகள் - இவையெல்லாம் உங்களை எந்த அளவிற்குப் புடம் போட்டிருக்கின்றன என்று நாங்களும் அறிந்துகொண்டோம். ஒரு மேலாண்மை மிக்கவரின் நேரடிப் பார்வையில் வேலை செய்யும்போது மேற்சொன்னவை உங்களுக்கு எந்த அளவிற்கு பயன்பட்டன என்று உங்களுக்கு உரிய தனிப்பாணியில் (ரசனை மிகுந்த பாடல்களுடன்) விவரித்து இருக்கிறீர்கள், வலைச்சித்தரே! நீங்கள் கற்றுக் கொண்டவைகளை உங்களுடனேயே வைத்துக் கொள்ளாமல் பலருக்கும் பயன்படும் வகையிலும் எழுதியும், உதவி செய்தும் வருகிறீர்களே இந்த இடத்தில் தான் நீங்கள் தனித்து நிற்கிறீர்கள்.
பதிலளிநீக்குவாழ்க உங்கள் பரந்த உள்ளம். வளர்க உங்கள் மேலான பணிகள்.
புதுக்கோட்டை பதிவர் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது என்று பலரது வலைத்தளத்திலும் படித்துத் தெரிந்து கொண்டேன். நேரடி ஒளிபரப்பில் திரு எஸ்ரா அவர்களின் சொற்பொழிவு முழுக்கக் கேட்க முடிந்தது. விழாவிற்கு நேரில் வந்து பரிசு பெற முடியாத குறையை இந்த நேரடி ஒளிபரப்பு ஓரளவிற்கு தீர்த்து வைத்தது. விழாவிற்காக தலைமைப் பொறுப்பேற்ற திரு முத்துநிலவன் அவர்களுக்கும், அவருக்கு உதவிய பல அணில்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
வலைச்சித்தருக்கு சிறப்பு பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
டிடி இனிய வாழ்த்துகள் எல்லாம் அறிந்தேன்.
பதிலளிநீக்குவலையுலகச் சித்தருக்கும் வாழ்த்துகள்.
உங்கள் தந்தை பற்றியும் முத்து நிலவன் ஐயா பற்றியும் கூறி இருந்த விதம் அருமை டிடி சகோ. வலைச்சித்தர் பட்டத்துக்குப் பொருத்தமானவர் தாங்கள் மட்டுமே. :)
பதிலளிநீக்குநண்பர் ஸ்ரீராம் சொன்ன குறள் பொருத்தமாக இருக்கிறது :) அதுனாலதான் முத்து நிலவன் ஐயா அடுத்த வருட கணினி தமிழ்ச்சங்கத்து ஆண்டுவிழாவுக்கு கரம் கோர்க்கச் சொல்லி இப்பவே உங்களை கூப்பிட்டுட்டாங்க. :)
உங்கள் வலைதளத்திலிருந்து தான் அன்றைய நிகழ்வை முழுமையாகப் பார்த்தேன். அதன் பின்னரும் தொடர்ந்து பார்த்தேன்...( ரொம்பக் கோவமாத்தான்...நீங்கள்ளாம் நேரில் ஒரு தடவை தானே பாத்தீங்க...நான் பலதடவை பார்ப்பேன் என்ற அர்த்தத்தில்..)பதிவுஅருமை
பதிலளிநீக்குஉங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது! உங்கள் அனுபவங்கள் எங்களுக்கோர் பாடமாக அமைகிறது! தொடரட்டும் உங்கள் கணிணித் தொண்டு! நன்றி!
பதிலளிநீக்குநான் இங்கு சில உண்மைகளைச் சொல்ல விரும்புகிறேன்..
பதிலளிநீக்குஅறிவு தெரிந்த நாள் முதல் பாராட்டுக்காக ஏங்காத மணிதர் யாருமில்லை..
ஆனால் தங்கள் திறமைக்கும் உயரத்திற்க்கும் தாங்களெல்லாம் என்போன்ற கத்துகுட்டிகளை சிரமேற்க்கொண்டு பாராட்டுவதை பார்த்துகொண்டும். அதே போல் வலைப்பதிவு பற்றி ஏற்படும் எந்த ஐயத்தையும் அலைபேசி வாயிலாகவே தீர்த்துக்கொண்டும் உள்ள தங்களின் ஈடுபாடும் உள்ளத்தை கொள்ளை கொள்கிறது..
தமிழ் பதிவுலகில் தங்களை தெரியாதென்று சொல்பவர் எனக்கு தெரிந்து யாருமில்லை.. அப்படி ஒருவர் சொன்னால் அவர் சொல்வது உண்மையில்லை..
பதிவிட்ட அடுத்த சில நிமிடங்களில் தேடி வரும் தங்கள் பின்னூட்டம். இளம் பதிவர்களுக்கு சத்து தரும் மாத்திரை.
கவலை இல்லாத மணிதர் இவ்வுலகில் இருப்பாரா?..
அவ்வாறு ஒருவர் இருந்தால் அதுவே அவருக்கு பெருங்கவலையாக இருக்கும்.
ஆனால் தங்கள் தொழில், வருவாய், குடும்பம். இவற்றையும் கவனித்துக்கொண்டு வலைப்பதிவர்பால் கொண்ட அன்பால் தங்கள் பற்றி மூத்தோர் அறிந்தே வைத்த பெயர்தானோ தனபால்..!
தங்களுக்கு வாழ்த்துகள்..
மற்றும் வழங்கப்பெற்ற, இனி வரவுள்ள பாராட்டுகளுடன் பட்டங்களுக்கும்...
"முயற்சிக்காமல் முடியாது என்று சொல்லாதே "எந்த அளவு முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் என்பது புரிகிறது.
பதிலளிநீக்குவணக்கம் ஜி
பதிலளிநீக்குமாநாட்டு வேலைகளில் தாங்கள் அனைவரின் உழைப்பு தெரியாததல்ல இரவும், பகலும் அனைவரும் உழைத்தார்கள் இது பணத்துக்காக இல்லையே.... நல்லவேளையாக நான் எனது ‘’பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள்’’ என்ற எனது பதிவை நேற்றே வெளியிட்டு விட்டேன் அந்தப்பதிவே தாங்கள் அனைவரின் உழைப்பைப் பாராட்டியே எனது பதிவையே கருத்துரையாக எடுத்துக் கொள்ளுங்கள் ஜி நன்றி
பழைய பதிவுக்கும் சென்று வந்தேன் நன்று.
வலைச்சித்தர் பட்டம் பெற்றமைக்கு எமது வாழ்த்துகள் ஜி
நீக்குநீங்கள் ஏற்றுக் கொண்ட அல்லது உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள் என்பதில் கடுகளவும் சந்தேகம் இல்லை. வாழ்த்துக்கள் டிடி.
பதிலளிநீக்குதங்களின் அளப்பரிய சேவை புதுக்கோட்டை விழாவில் என்பதை அறிவேன். வலைச்சித்தர் பட்டத்துக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதாங்களா அணில்....
பதிலளிநீக்குஇதுபோல் தொண்டு செய்யவும் மனம் வேண்டும்
அது தங்கடம் நிரம்ப இருக்கிறது
வாழ்த்துக்கள் ஐயா
தம +1
வலைச்சித்தருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
பதிலளிநீக்குமென்மேலும் சாதனை படைத்து வாழ்வில் பதிவில் முன்னேற வாழ்த்துக்கள்
அண்ணா! நீங்க அணிலா!!! ரொம்பத்தான் தன்னடக்கம். இரவுபகல் பாராத உங்கள் உழைப்பை பார்த்துக்கொண்டே இருந்த தமிழ் வலையுலகமே இந்த வார்த்தையை ஏற்றுக்கொள்ளாது! நீங்கள் இந்த விழாவின் ஒரு தூண் அண்ணா. வலைசித்தர் அண்ணாவிற்கு வாழ்த்துகள் !
பதிலளிநீக்குஅன்புள்ள வலைச்சித்தருக்கு,
பதிலளிநீக்குஅய்யா நீங்கள் முதல்வர்... சித்த(ர்) ராம(ர்) அய்யா...!
வள்ளுவரின் குறள் வழி நிற்பவர் தாங்கள் என்பது உண்மைதான்... அதற்காக ‘அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதற்காக ராமர் பாலம் கட்ட உதவிய ‘அணில்’ என்றால் யார் ஏற்றுக் கொள்வார்கள். ராமரே தாங்கள் தான் அய்யா!
நண்பர் கில்லர்ஜியின் தளத்தில் ‘பதிவர்களுக்கு இனிய வேண்டுகோள்’ பதிவில் அளித்த பதிலையே (அவர் தளத்தில் பார்க்க) தங்கள் தளத்திலும் அதே பதிலை அளிக்க விரும்புகிறேன்.
தங்கள் தந்தையிடம் கற்றுக்கொண்ட பாடத்தை வாழ்வில் கடைபிடித்து வெற்றி காண்கிறீர்கள் என்றால் அது மிகையில்லை.
எந்த நேரத்திலும் உதவி என்று கேட்டால் நேரம் காலத்தைப் பார்க்காமல் தங்களின் பணிகளுக்கிடையில் உடனே உதவிடும் தங்களின் மனத்திற்கு ஈடுஇணை கிடையாது.
‘வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்... அதை வாங்கித்தந்த பெருமையெல்லாம் உங்களின் தந்தையைச் சேரும்!’
நன்றி.
த.ம.18
மரியாதைக்குரிய ஐயா,வணக்கம். தங்களுக்கு இணை தாங்களேதாங்க.இதில் எள்ளளவும் மாற்றுக்கருத்து இல்லைங்க..
பதிலளிநீக்குவலைப்பூவில் யாருமே செய்யாத சித்து வேலைகளைச் செய்யும் தங்களுக்கு 'வலைச் சித்தர் 'பட்டம் பொருத்தமானதே :)
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்ட விபரங்களுக்கு நன்றி வலைச் சித்தர் அவர்களே. என்றும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவலைச்சித்தர் தொழில்நுட்ப வல்லுநர்
பதிலளிநீக்குஅவ்வளவு வேலை செய்துவிட்டுத்
தன்னை அணில் என்றால்
என்ன செய்வது?
சரி, அணில் இல்லையென்றால்
பாலம் இல்லை தானே ?
தந்தையிடம் கற்றுக் கொண்டது, அலுவலகத்தில் கற்றுக்கொண்டது எல்லாம் எங்களுக்குப் பயன்படத் தரும் உங்கள் உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
முத்துநிலவன் அண்ணாவின் உழைப்பும் ஊக்கமும் மிகப்பெரிது.. அவருக்கும் நன்றி
எவ்வளவு பெரிய சாதனைகளை உடனிருந்து நிகழ்த்திவிட்டு இப்போது அணில் என்று அடக்கத்துடன் சொல்லிக்கொள்கிறீர்கள்... பாராட்டுகள் தனபாலன். உங்களுக்கு ஓய்வுப்பொழுதே இல்லையோ என்று எண்ணும் வண்ணம் உடனுக்குடன் பதிவர்களின் பதிவுகளைத் திரட்டித் தொகுத்து, பதில் அளித்து, பதிவர்களுக்கு உடனுக்குடன் தெரிவித்து... எவ்வளவு சிரத்தையுடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநல்லதொரு தலைமையாய் சீரியதொரு வழிகாட்டியாய் முத்துநிலவன் ஐயா அவர்களின் செயல்பாட்டை சொல்லி மாளாது. எவ்வளவு நேர்த்தியான திட்டமிடல்... சிறப்பான வழிகாட்டல்... புதுகை பதிவர் திருவிழா குழுவினருக்கு அன்பான பாராட்டுகள்.
நெசவு அனுபவம் நல்லதொரு உதாரணம்... கற்றுக்கொண்ட எந்தத் தொழில்நுட்பமும் வீண்போகாது... - எவராலும் மறுக்கமுடியாத உண்மை. நன்றி தனபாலன்.
வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஅணில் அல்ல.ராமர்.மாருதி எல்லாம் ஒன்றானவர்
பதிலளிநீக்குவணக்கம் ஐயா!
பதிலளிநீக்குஉங்கள் பணிபற்றி அறிய,
“பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத
கையே வாயாகக் கதிரே மதியாக
மையிலா நூல்முடியு மாறு“
என்ற நன்னூல் வாசகம் நினைவில் வருகிறது.
நூல் நூற்கும் கைவண்மகள் பஞ்சைக் கொண்டு கதிரால் நூல் நூற்பதுபோன்றதே
செஞ்சொற்புலவர் சொல் என்னும் பஞ்சால் நூற்கின்றமையால் அந்நூலும் இந்நூலும் ஒன்றென்னும் நன்னூல்.
உதவி செயப்பட்டார் சால்பின் வரைந்தென இருப்பதால் நீங்கள் அணிலென்றாலும் அனுமனென்றாலும் அவ்வுதவி ஞாலப்பெரிதெனவே நன்றிபாராட்டுவோரால் கொள்ளப்படும்.
முன்னுள்ள சுட்டிகளையும் படித்தேன்.
இசைப்பாடல்களில் எடுத்த படி தேன்.
தொடர்கிறேன்.
நன்றி
தொட்டதெல்லாம் துலங்கவரும் மங்கலக் கரங்கள் நம் திண்டுக்கல்லாரின் கரங்கள் என்று நாங்கள் பேசிக்கொண்டோம். விழாவின் ஒவ்வொரு அணுவிலும் உங்கள் பங்களிப்பை உணரமுடிந்தது. வாழ்த்த வயதுண்டு, வார்த்தைகள்தாம் இல்லை. - இராய செல்லப்பா
பதிலளிநீக்குஅணில், ஆடு, இலை..என்று நீங்கள் உங்களை எப்படி வேண்டுமானாலும் அழைத்துக்கொள்ளலாம்தான்! ஆனால், புதுக்கோட்டைக்காரர்களோடு விழாவில் இணைந்து, புகுந்து விளையாடியிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம்!
பதிலளிநீக்குவாழ்த்துகள் தனபாலன். சிறப்பான முறையில் விழா நடக்க நீங்களும் ஒரு காரணம்.....
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே.
பதிலளிநீக்குபுதுக்கோட்டை பதிவர் விழாவில், வலைச்சித்தர் பட்டம் பெற்ற தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.தங்களுக்கு பொருத்தமான பட்டம் தங்களை வந்தடைந்திருக்கிறது. பாராட்டுக்கள்.! பதிவர் விழாவில் தங்களின் அரும்பணி குறித்து ஏனைய பதிவர்கள் வலைத்தளத்தில் அவ்வப்போது படிக்கும் போது அறிந்து கொண்டேன்.தங்களின் ஊக்கமிகுந்த பணி மகத்தானது. போற்றத்தக்கது.! என் எழுத்துக்களையும் ஆரம்பத்திலிருந்தே ஊக்குவித்து கருத்திடும் தங்களின் செயல்தான் என்னை இதுவரைக்கும் எழுத தூண்டி வந்துள்ளது. என்பதையும் நான் அறிவேன். அதற்காக தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சிறப்பாக விழா நடக்க நீங்களும் ஒரு காரணம்...இதுதான் அவையடக்கம்! வாழ்த்துகள் டிடி...
பதிலளிநீக்குவணக்கம்...தேர்வுக்குத் தயாராகிக் கொண்டே நானும் அம்மாவும் உங்கள் வ்லைதளம் வழியே நிகழ்வுகளைப் பார்த்தோம்...அருமையான நிகழ்வில் அசாத்தியமானது உங்கள் பணி...எங்கள் அன்பின் வணக்கங்கள்http://sakthiinnisai.blogspot.in/2015/11/blog-post.html
பதிலளிநீக்குவலைசித்தருக்கு வாழ்த்துக்கள். ஊர் பயணங்களால் விழாவிலும் நேரடி விழா நிகழ்வுகளையும் பார்க்க முடியவில்லை.
பதிலளிநீக்குவிழா கையேடு எனக்கு எனக்கு வேண்டும் எப்படி பெற வேண்டும் என்பதை சொல்லுங்கள்.
அணில் போன்று எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும் வலைச்சித்தருக்கு வாழ்த்துகள் ! பொருத்தமான பட்டம் மிகப் பொருத்தமான நபருக்கு வழங்கப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி !!
பதிலளிநீக்கு