🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!

வணக்கம் நண்பர்களே... மனிதனுக்குக் கடைசி வரை இருக்கும் குணம் என்ன? என்னும் பதிவை, படிக்காதவர்கள் பதிவின் தலைப்பின் மேல் சொடுக்கிப் படித்து விட்டுத் தொடரலாம்... சூறைக்காற்று மோதினால் தோணி ஓட்டம் மேவுமோ...? வாழ்வில் துன்பம் வரவு... சுகம் செலவு இருப்பது கனவு... காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்...? ஆசையே அலைபோலே... நாமெல்லாம் அதன் மேலே... ஓடம்போலே ஆடிடுவோமே... வாழ்நாளிலே...! (படம் : தை பிறந்தால் வழி பிறக்கும்)


ஆசை - பேராசை ஒரு அலசல்

ஆசை என்றால் என்ன...? நாம் ஒன்றை அடையணும் என்பதற்காக ஆசைப்படணும்... எத்தகைய வெற்றிகளுக்கும் செயல்களுக்கும் ஆசையே அடிப்படை... ஆசை மட்டும் இல்லை என்றால் மனித வாழ்வில் அறிவியல் வளர்ச்சியும், நாகரீக மாற்றங்களும் நிகழ்ந்திருக்காது... ஆசை மானுட வளர்ச்சிக்கு ஒரு அடிப்படை அம்சம்...

ஆதியிலாண்டவன் இந்தப் பூமியைப் படைத்தானே... அவன் ஆசையைப் போலவே இந்தப் பூமி அமையலையே... ஆண்டவன் ஆசையே இங்குப் பொய்யாய் போய்விடில், மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா...? (படம் : யூத்)

பாட்டிலே கேள்வியை ஆரம்பிச்சிட்டியா 'யூத்' மனமே...! இனிப்பான பொருட்கள் எல்லாம் மனிதருக்கு இனிப்பான பொருட்கள் இல்லை... அதே போலக் கசப்பான பொருட்கள் எல்லாம் கசப்பான பொருட்களும் அல்ல...சில இனிப்புக்களே நஞ்சுகள் ஆகலாம்... சில வேப்பங்காய்கள் மருந்துகள் ஆகி இனிப்புக்கள் ஆகலாம்... இனிப்பான பொருட்கள் சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு இனிப்பான எதிரிகள்... கசப்பான பொருட்கள் கசப்பான நண்பர்கள்... இது மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லாமே அளவிற்கு மீறி விட்டால் மனிதனுக்கு எதிரான விளைவுகளே தரக் கூடியவை...

இப்படியும் சொல்றே... அப்படியும் சொல்றே... விதைத்தவன் மனதில் விளைவதில் ஆசை; காதலன் நினைவில் கன்னியின் ஆசை; பாவலன் மனதில் பாடிடும் ஆசை; படைத்தவன் மனதில் நொடிக்கொரு ஆசை; இளமையில் புதுமைகள் படிப்பதில் ஆசை; முதுமையில் படித்ததை நினைப்பதில் ஆசை; வருவதும் போவதும் காலத்தின் ஆசை; திருமண வயதில் தினமொரு ஆசை; ஆசையில் பிறப்பது துணிவு... அந்தத் துணிவினில் பிறப்பது தெளிவு... தெளிவினில் பிறப்பது அறிவு... அந்த அறிவினில் அமைவது வாழ்வு...! (படம் : தென்றல் வீசும்) ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடு தான் என்ன...? விளக்கம் தேவை...

புத்தரும் திருவள்ளுவரும் ஆசைக்கு எல்லை வகுக்க வேண்டும் என்றது ஞானிகளுக்கு மட்டுமல்ல... நமக்கும் தான்... அளவான ஆசையுடன் இருப்பது யாருக்கும் துன்பமில்லை... நாம புகழோடு வாழ்க்கை நடத்த வேண்டும் என்பது ஆசை... ஆனா... உலகத்திலேயே நாம மட்டுமே புகழோடு இருக்கணும் என்று நினைக்கிறது தான் பேராசை... ஏன்...? ஆசையை ஆசையா மட்டும் நிறுத்திக்க முடியாதா...? அது ஏன் பேராசையா நீள்கிறது...? நாடு காக்க வேண்டும்; முடிந்தால் நன்மை செய்ய வேண்டும்... கேடு செய்யும் மனதைக் கண்டால் கிள்ளி வீச வேண்டும்... தமிழும் வாழ வேண்டும்; மனிதன் தரமும் வாழ வேண்டும்... அமைதி என்றும் வேண்டும்; ஆசை அளவு காண வேண்டும்...! வாழ்ந்து பார்க்க வேண்டும்... அறிவில் மனிதனாக வேண்டும்... வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும்...! (படம் : சாந்தி)

ஒரு நிமிசம்... "அனைத்திற்கும் ஆசைப்படு" என்று சொல்கிறார்களே...! மல்லிகைப் பூவாய் மாறிவிட ஆசை... தென்றலைக் கண்டு மாலையிட ஆசை; மேகங்களையெல்லாம் தொட்டுவிட ஆசை; சோகங்களையெல்லாம் விட்டுவிட ஆசை... கார்குழலில் உலகை...கட்டிவிட ஆசை... சின்ன சின்ன ஆசை... சிறகடிக்கும் ஆசை... முத்து முத்து ஆசை... முடிந்து வைத்த ஆசை... வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை...! என்னை இந்தப் பூமி சுற்றி வர ஆசை...! (படம் : ரோஜா)

மனசாட்சி... இப்படித்தான் சின்னச் சின்னதாகத்தான் ஆரம்பமாகும்... புத்தரும் திருவள்ளுவரும் சொன்னது ஞானிகளுக்கு... நீ சொன்னது நம்மைப் போல் அன்றாடக் காய்ச்சிகளுக்கு...! ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது, இருப்பவர்களுக்கு இடைவிடாமல் தொடர்ந்து துன்பம் வரும்... அவாவில்லார்க் கில்லாகும் துன்பம் அஃதுண்டேல் தவாஅது மேன்மேல் வரும். (368) ஆனால் ஆசைக்கு ஒரு குணம் உண்டு... அது வந்து விட்டால் அடங்கவே அடங்காது... நீண்டு கொண்டே போகும்... நீளும் ஆசை ஒரு நாள் பேராசையாக மாறிப் போகும்... அதனால் தான் ஆசையை அடக்கு என்று ஞானிகள் கூறுகின்றார்கள் ! (படம் : முத்து) பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு...? பூப்பறிக்கக் கோடரி எதற்கு...? பொன்னோ பொருளோ போர்க்களம் எதற்கு...? ஆசை துறந்தால் அகிலம் உனக்கு...!

தேவைகளுக்கேற்ப முயற்சி... முயற்சிக்கேற்ப உழைப்பு... கிடைத்ததைக் கொண்டு திருப்திப்படும் மனம்... அந்த மனத்தால் அமைதியான வாழ்க்கை... இதுவே துன்பங்களற்ற இன்ப வாழ்க்கைக்கு வழிமுறைகள்... அளவிற்கு அதிகமாக ஆசைப்பட்டால் துன்ப நிகழ்வே முடியும்...
பேராசைகள் தவிர்த்த வாழ்க்கையே பேரமைதிக்கு மூல விதை...

கடவுள் : "உனக்கு என்ன வேண்டும்...?"

DD : "எனக்குக் கொஞ்சம் தங்கம் வேண்டும்"

உடனே கடவுள் தனது வலது கை சுட்டு விரலைப் பக்கத்திலுள்ள இரும்பு அடுக்கையை (அலமாரி) நோக்கிக் காட்டினார்... உடனே அது தங்கமாயிற்று... திருப்தியடையாத DD-யின் முகத்தைப் பார்த்த கடவுள், தனது சுட்டு விரலைக் காட்டி வீட்டிலுள்ள கட்டை மேசை, நாற்காலிகளைத் தங்கமாகினார்...

அதற்கும் திருப்தி அடையாமல் DD...! ம்ஹீம்...! மீண்டும் வீட்டிலுள்ள கட்டை கட்டில், பாத்திரங்கள் ஆகியவற்றையும் தங்கமாகினார் கடவுள்...

அப்போதும் திருப்தியடையாமல் நின்றிருந்த DD-யைப் பார்த்துக் கேட்டார் கடவுள், "இவையும் போதாதா...? வேறு என்னதான் வேண்டும்...?" என்று கேட்டார்...

DD : "இப்போது எனக்குத் தேவைப்படுவது உங்களின் வலது கை சுட்டு விரல்...!"

அப்படிக் கேள் மனசாட்சி... ஆசை பேராசையாகும் வினோத குணம்...

அளவோடு அடக்குவதே வெற்றியின் குணம்...!


நண்பர்களே... இப்போது Play பட்டனைச் சொடுக்கி DD Mix கேட்கலாம்... அப்படியே இங்கே சொடுக்கி இதில் வரும் அனைத்து பாடல்களையும் முழுப்பாடல்களாக தனித்தனியாக கேட்கலாம்... (மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...)

கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா...? நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா…? கனவே கை சேர வா…! // பூங்காற்றைக் கொஞ்சம் கிழித்து, எங்கள் முக வேர்வை போக்கிடும்... நாளை என்பது கடவுளுக்கு - இன்று என்பது மனிதருக்கு - வாழ்வே வாழ்பவர்க்கு...


© கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் வைரமுத்து A.R.ரகுமான் 🎤 சாதனா சர்கம் @ 2000⟫

என் வலி... தனி வழி...! எழுத்துப் பிழையா...? அறிய இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அனைவரும் மனதில் ஏற்றிக் கொள்ளவேண்டிய
    அருமையான கருத்து .சொல்லிச் சென்றவிதம்
    வழக்கம்போல் அருமை
    அளவோடு அடங்குவதானே வெற்றியென்பதே
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. ஆசையே அலைபோலே..நாமெல்லாம் அதன் மேலே...

    ஆசை பேராசையாக உருவெடுக்கையிலே தான்
    எல்லா விபரீதங்களும் ....

    //அளவோடு அடக்கவேண்டும் //

    நன்றாகச் சொன்னீர்கள்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  3. பதிவுகள் உற்சாக மூட்டும்படியாக உள்ளன .

    பதிலளிநீக்கு
  4. 'இப்போது எனக்கு தேவைப்படுவது உங்களின் வலது கை சுட்டு விரல்' இந்த எண்ணம்தான் மனிதர்களின் மனநிலை.
    'ஆசைதுறந்தால் அகிலம் உனக்கு''சில இனிப்புகளே நஞ்சுஆகலாம். சில வேப்பங்காய்கள் மருந்துகள் ஆகி இனிப்புக்கள் ஆகலாம்' அனைத்தும் அற்புதமான அர்த்தமுள்ள வரிகள்.
    அனைவரும் புரிந்துகொண்டால் நல்லது

    பதிலளிநீக்கு
  5. வேறு வேறு பாடல்களை எப்படி சரியாக இணைத்து அருமையான பதிவாய் தருகிறீர்களோ! அற்புதம்! சொல்லிய விசயம் அருமை! கடவுளின் சுண்டுவிரல் கேட்டது ஹாஹா

    பதிலளிநீக்கு
  6. ”அத்தனைக்கும் ஆசைப்படு”...முடியும் வரை மோதி பாத்திடு...இது நம்ம ஸ்டைல் தலைவரே...உங்க ஸ்டைல்ல அழகா சொல்லி இருக்கீங்க நன்றி..

    பதிலளிநீக்கு
  7. ஆசை ஆசையாய் நீங்கள் கட்டி இருந்த ஆசை தோரணத்தை கண்டு மகிழ்ந்தேன் !படித்து முடிந்ததும் ஆசை அடங்கவில்லை ,முடிஞ்சுடுச்சேன்னு வருத்தமாய் இருந்தது ,என்னை பேராசைக் காரனாய் ஆக்கி விட்டீர்கள் !
    த.ம.3.

    பதிலளிநீக்கு
  8. கடந்த நாலைந்து பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் போது ஏதோ பாடப் புத்தகத்தை படிப்பது போல மனசுக்குள் பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியது போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ...

    பதிலளிநீக்கு
  10. "அளவோடிருந்தால் நலமோடு வாழலாம்".நல்லதொரு கருத்தை,சிந்தனையை பாடல்களை,குறளை மேற்கோள் காட்டி எல்லார் மனதிலும் பதியும்படி எழுதியவிதம் மிக அருமை.வாழ்த்துக்கள்.நன்றி.

    பதிலளிநீக்கு
  11. எப்போதும் போல, அருமையான கருத்தை அளவாக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். அருமை + :-)

    பாடல்கள் மிக்ஸ் சூப்பர் DD சார்.

    பதிலளிநீக்கு
  12. அருமையாக சொல்லியுள்ளீர்கள் சார்..... ஆசை என்பதற்கும் பேராசை என்பதற்கும் வித்யாசம் உண்டு, ஆனால் பேராசை என்பதன் கோடு என்ன என்பதுதான் இங்கு யாருக்கும் தெரியவில்லை ! பாட்டையும், கருத்தையும் சம விகிதத்தில் கலந்து நீங்கள் கொடுத்த விதம் அருமை.

    கடைசியில் நீங்கள் விரல் கேட்டீர்களே அதுதான் செம.....

    பதிலளிநீக்கு
  13. அத்தனைக்கும் ஆசைபடு என்பதை தவறாக புரிந்துக்கொண்டு ஏமாறுபவர்களுக்கு தேவையான அறிவுரைகள்!

    பதிலளிநீக்கு
  14. DD மிக்ஸும் தங்களின் கருத்துகளும் அருமை..

    பதிலளிநீக்கு
  15. ஆசை..ஆசை..இந்த
    ஓசையின் பேரிரைச்சலின்
    பூசையால் ஓட்டாண்டியாகும்
    மாசை எடுத்துக் கூறியமை சிறப்பு.

    அருமையான தொகுப்பு
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  16. ஆசைப்படுவதில் தப்பில்லை. அதன் வரையறையை மீறாமல் இருப்பதுதான் தவறு. கடவுளிடம் அவரது சுண்டுவிரல் கேட்ட கதை சிரிப்பை வரவழைத்தாலும் அதில் பொதிந்திருக்கும் கருத்து சிந்தனையை தூண்டியது.

    மிகச் சிறப்பான பதிவு.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  17. ஆசைக்கும் பேராசைக்கும் காண்பித்த வேறுபாடு மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது சகோதரரே!

    எப்பவுமே ஒரு விடயத்தை ஒருவருக்கு மனதில் பதியச்செய்வதற்கு தகுந்த நகைச்சுவை கலந்து கொடுத்துப்பாருங்கள் அப்படியே மனசில் உங்கள் கருத்து பசையின்றி ஒட்டிக்கொள்ளும் என்று படித்த ஞாபகம்...:)

    அருமையாகப் பாடல்களையும் நகைச்சுவை கலந்தும் அழகாகச் சொல்லுகிறீர்கள்!

    மிகமிக அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. பேராசைகள் தவிர்த்த வாழ்க்கையே பேரமைதிக்கு மூல விதை

    நூறு சதம் உண்மை!

    பதிலளிநீக்கு
  19. ஆசைக்கும் பேராசைக்கும் உள்ள வேறுபாடுகளும் அருமையான பாடல்களும் பகிர்ந்த சிறப்பான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  20. ‘ஆசையே அலை போல’ என்ற அழகானபொருள் பொதிந்த பாடலை திரும்ப கேட்க உதவியமைக்கு நன்றி!
    ஆசைப்படலாம் ஆனால் பேராசைப்படக்கூடாது என்பதை தெளிவாக விளக்கிவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  21. மிகச் சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  22. ஆசைப்படலாம் நல்லவற்றை அடைய.
    பேராசைதான் வேண்டாம்.
    அளவைக் கண்டு பிடிப்பது யார்?
    அருமையான பாட்ல்கள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  23. ஆசையை அளவோடு அடக்கினால் எல்லாமே இன்பமே, சரியாக சொன்னீர்கள்....!

    பதிலளிநீக்கு
  24. அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சுக்கு சும்மாவா சொன்னாங்க.

    பதிலளிநீக்கு
  25. திண்டுக்கல் தனபாலன் அவர்களது தத்துவம் தரும் தனிச் சிறப்பை பெற்றது . அதில் இந்த ஆக்கமும் ஒன்று .
    ஆசைப் படுவது ஆக்கத்தை உருவாக்கும்.பேராசை பெரும் தொல்லையை தந்து விடும் .

    பதிலளிநீக்கு
  26. அற்புதமான பதிவு... கருத்துக்களும் கூடவே அதற்கேற்ற பாடல் வரிகளும் என அமர்க்களமாகயிருந்தது... பல பாடல்களில் இவ்வளவு அருமையான வரிகளா என உங்கள் பதிவில்தான் அறியமுடிகிறது...
    சொல்ல வந்த விஷயத்தை சரியான உவமைகளோடு அழகாய் சொல்லியிருப்பதை ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  27. ஆசை மற்றும் பேராசையைப்பற்றி ஆசையுடன் மற்றும் பேராசையுடன் படித்து மகிழ்ந்தேன்.

    வெற்றி நிச்சயம் ... உங்களுக்கும் எங்களுக்கும்.

    பாடல்கள் அருமை.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  28. அனைத்துக்கும் ஆசைப்படாமல் மிதமாய் ஆசை வைத்தால் வாழ்க்கை சிறக்கும்! சீரிய சிந்தனை தரும் பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  29. அந்த கட்டை விரலுக்குப் பதிலா கடவுளையே கேட்டு இருக்கலாம்.ஹி ஹி

    பதிலளிநீக்கு
  30. பாடல்கள் கலவை மிக அருமை.
    எல்லா பாடல்களும் பணம் படுத்தும் பாட்டையையும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை.என்பதையும் அழகாய் சொல்கிறது.
    ஆசை அளவோடு இருக்கும் போது கஷ்டம் இல்லை. அது அளவுக்கு மீறும் போது தான் கஷ்டங்கள் தொடர்கதையாக மாறுகிறது.வரம் கொடுத்தவன் வலது கை கட்டைவிரலை கேட்க சொல்லும் காலம் தான். பணத்தின் பின் ஓடாமல், இருந்தாலே போதும், ஆசையை அளவோடு அடக்குவதே
    வெற்றிக்கு வழி என்று அழகாய் சொல்லி விட்டீர்கள்.
    அருமையான பதிவை கொடுத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
    நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  31. எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு. பேராசை பெரு நஷ்டத்தில் முடியும் என்று சொல்லும் உங்கள் பதிவு அருமை தனபாலன் சார். நன்றி பகிர்விற்கு.

    பதிலளிநீக்கு
  32. ஆசையின் அளவுகோலும் திரைப்படப் பாடல்களுடன் உங்கள் தொகுப்பும் அருமை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. ஆசை-பேராசை பொருள் புரிந்து செயல்பட்டால் என்றுமே நமக்கு வெற்றிதான்.

    அருமையான கருத்துக்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  34. ஆசை...பேராசை....அதனால் விளையும் விளைவுகள... அவற்றை அடக்கும் முறைகள்...அதற்கான தீர்வுகள் என அனைத்தையும் தெளிவாக...எளிமையான உதாரணப்படுத்தலின் மூலம் விளங்க வைத்தமை அருமை. அருமையிலும் அருமை..

    பகிர்வினுக்கு மிக்க நன்றி..

    என்னுடைய தளத்தில் இன்றைய தொழில்நுட்பச் செய்திப் பகிர்வுகள்: ஸ்மார்ட் வாட்ச் வாங்கப் போறீங்களா?-உதவிக் குறிப்புகள்
    எல்.ஜி. யின் "சூப்பர் ஸ்மார்ட் போன்" LG Vu 3..!

    பதிலளிநீக்கு
  35. ஆசைக்கு வரம்புவைப்போம். சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  36. படிப்படியாக சொல்லவந்த கருத்தை எளிமையாக போரடிக்கமால் சொல்வதில் உங்களுக்கு நிகர் நீங்களே..

    பதிலளிநீக்கு
  37. முற்றும் துறந்தவன் என்றவனும் ஆசையோடுதான் வாழ்கிறான்

    பதிலளிநீக்கு
  38. ஆசைக்கு அளவேது? தங்க முட்டையிடும் வாத்தை அறுத்துப் பார்க்கத் தோன்றும் மனம். பாடல் தொகுப்பு அருமை.

    பதிலளிநீக்கு
  39. ஆசைக்கும் பேராசைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அருமையான பாடல்களுடன் அளவிட்டமைக்கு மிக்க நன்றி!.. சிறப்பான பதிவு!..
    அன்பின் நல்வாழ்த்துக்கள்..!

    பதிலளிநீக்கு
  40. அடக்குவதே பெரும்பாடு. இதில் அளவோடு அடக்குவதென்பது மிகுந்த கடினமான ஒன்று!. பதிவு அடங்கி இருக்காமல் ஆர்பரித்து வருகிறது வாழ்த்துகள் DD!.

    பதிலளிநீக்கு
  41. மனதிற்கு மருந்தானது உங்கள் பகிர்வு..

    மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  42. ஆசையை பற்றிய சிறப்பான .... பதிவு..

    பாடல்கள் அருமை...


    ♥ ♥ அன்புடன் ♥ ♥
    S. முகம்மது நவ்சின் கான்.(99likes)


    பதிலளிநீக்கு
  43. vanakam sir. eppothum ungal pathivukal padippen anal kaaruththukal ittathu kidaiyathu. unga alavukku ennal yochichu karthu ida mudiyuma enru.
    anal intha pathivula rompa eliya vakaiyile asaikkum perasaikkum ulla vilakkam solli ullirkal sir.

    nandri sir..

    பதிலளிநீக்கு
  44. வணக்கம்
    தனபால்(அண்ணா)

    நீங்கள் சொல்வது போல ஆசை என்பது அளவோடு இருக்க வேண்டும் என்பதை மிக அருமையாக சொல்லிய விதம் மிகமிக நன்று. பதிவு அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  45. வழக்கமான D.D பாணி அசத்தல். அதுவும் அந்தக் குட்டிக்கதை சூப்பர்

    பதிலளிநீக்கு
  46. தனபாலன் சார் வாழ்க இதைத் தவிர வேறு என்ன சொல்ல உங்களது கட்டுரைகளுக்கு கருத்துக்கள் எழுத என்னுடைய வேலைப்பழு தடுப்பினும் உங்களது கட்டுரைகளை வாசிப்பது உண்மையில் மகிழ்வைத் தருகின்றது.

    ஒவ்வொரு பதிவிலும் புதுமை அருமை

    அதிகம் ஆசைப்படாதே அதிகம் ஏமாற்றம் அடையாதே என்பதை இதைவிட தெளிவாக சொல்லவும் முதுமா? இந்தக் கருத்துக்களை படித்தவர்கள் மற்றவர்களுக்கும் பகிர்ந்தால் சிறப்பு நாடு நாளை உங்களை வணங்கும்
    மகிழ்வுடன் இந்தியன் குரல் பாலசுப்ரமணியன்

    பதிலளிநீக்கு
  47. அளவின் அளவை நாம் நிர்ணயித்துக்கொண்டால் வாழ்க்கையில் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நகர்த்தலாம்

    நல்லதொரு ரசிக்கும்படியான பதிவு

    பதிலளிநீக்கு
  48. வழக்கம் போல சொல்ல வந்த விசயத்திர்கேற்ற பாடல் வரிகள் அருமை...த,ம -29

    பதிலளிநீக்கு
  49. ஆசை இல்லாத மனிதன் உலகில் இல்லை. ஆசை இல்லை என்றால் உலகமே இல்லை..

    ஆசையில் தானே ரசனை பிறக்கிறது.. ரசனையில் தானே அழகு மிளிர்கிறது..

    ஆனால் ஆசை அளவோடு இருந்தால் வாழ்க்கை அற்புதம் என்றும்.. ஆசை பேராசை ஆனால் அழிவுக்கு வழி வகுக்கும் என்று மிக அழகா சொல்லிட்டீங்க டிடி.. அது சரி உதாரணத்துக்கு எங்க டிடி தான் கிடைத்தாராப்பா?

    கடவுள் கிட்ட தங்கம் வேணும்னு கேட்ட டிடி கடைசில கேட்டதெல்லாம் கொடுக்கும் சுண்டு விரல் வேணும்னு கேட்டாருன்னு சொல்லிப்போட்டுட்டீங்களே.. சுண்டுவிரல் வேணும்னு கேட்டது தான் பேராசையின் உச்சம்....

    டிடி உங்க பகிர்வு மிக மிக அற்புதம் மட்டுமல்ல. கருத்தும் சொல்லிச்செல்கிறது..

    அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  50. ஆசை அளவோடு இருக்க வேண்டும் என்பது பற்றி நல்ல உதாரணங்களோடு அருமையான பதிவு.
    நன்றி
    அதேபோல உணகளின் மீதான அதீத ஆசையும் மிகை உணவும் உடல நல்திற்கு கேடு என என்பங்கிறகு சொல்லி வைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  51. அளவோடு இருக்க வேண்டும் என்பதை அருமையாக சொன்ன பகிர்வு.
    சில நாட்களாக வலைப்பக்கம் வரஇயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  52. அளவோடு கண்டு வளமோடு வாழணும்னு சொல்றீங்க.. உண்மை தான்.

    சுட்டுவிரல் நல்லா இருக்குங்க. மைதாஸ் கதையாவாம இருந்தா சரிதான்.

    பதிலளிநீக்கு
  53. வழமைபோல் தங்கள் பதிவு வாழ்க்கைக்கு அவசியமானதாய் இருகின்றது ...அத்தனைக்கும் ஆசைப்படு ஆனால் பேராசைப்படாதே,,,,

    பாடல்கள் எல்லாம் அருமையோ அருமை நல்ல தெரிவு,,,,

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  54. Sir, After i place my comment in Viki Anna's blog.. My photo jump to your comment... I don't know how it's been changed.

    பதிலளிநீக்கு
  55. அனைவரும் மனதில் வைத்து போற்றத் தக்கப் பதிவினை தங்களது பாணியில் கொடுத்து அசத்திருக்கிறீர்கள். சிறப்பான சிந்தனை படிப்பவர்களையும் சிந்திக்க வைக்கிறது.பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  56. தாண்டவக்கோனே ஆரம்ப பாடல் அருமை. தொடர்ந்த பாடல்கள்.....

    எங்கே தேடுவேன் இன்னும் சிறப்பு :)


    ஆடியோ பைலை எப்படி வலைப்பதிவில் போடவேண்டும் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  57. ஆசையைப் பற்றி அழகாக சொல்லியுள்ளீர்கள். சிறப்பான பகிர்வு.

    பதிலளிநீக்கு
  58. வணக்கம். தங்கள் தளத்தில் பிந்தொடர்பவர்கள் பட்டியியலில் இணைந்துவிட்டேன். மிக்க மகிழ்ச்சியும் கூட.

    பதிலளிநீக்கு
  59. ஆசையைப்பற்றிய உங்கள் கருத்துக்களையும், அதற்குப் பொருத்தமான பாடல்களையும் தந்து அசத்தியிருக்கிறீர்கள். குறிப்பாக பழைய திரைப்படப் பாடல்களில் தத்துவப் பாடல்களை தேர்ந்தெடுத்து கொடுத்திருப்பது அருமை.

    முன்பெல்லாம் ஒவ்வொரு திரைப்படத்திலும் ஒரு தத்துவப் பாடலாவது இடம் பெறும். கருத்துச் செறிவும் இருக்கும். தற்போதைய திரைப்படங்களில் தத்துவப் பாடல்கள் அவ்வளவாக இடம் பெறுவதில்லை. குத்துப் பாட்டுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

    ஆசையைப் பற்றிய இன்னொரு அருமையான திரைப்பாடல் இதோ:
    முரடன் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற TMS பாடியது.
    "பொன்னாசை கொண்டோர்க்கு உள்ளமில்லை. நல்ல உள்ளமில்லை. என்றும் பெண்ணாசை கொண்டோர்க்கு கண்ணுமில்லை. இரு கண்ணுமில்லை.

    குயிலுக்கு வான் பருந்து இணையாகுமா நல்ல துணையாகுமா சொல்லக்கூடாத ஆசை நெஞ்சில் வரலாகுமா.. அது முறையாகுமா"

    பதிலளிநீக்கு
  60. நல்லதே நடக்கும் கவலை வேண்டாம். பொருத்தமுள்ள திரைப்படப் பாடலை திருக்குறளுக்கு இணைத்தமை அருமை.
    பழைய பாடல் புதிய பாடல் அனைத்தையும் நினைவில் வைத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  61. வணக்கம் சகோதரா....!

    அருமையான விடயங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி. நல்ல கனவுகளும், ஆசைகளும் அவசியம் தான் வாழ்க்கைக்கு. அவை கைக் கடக்கமாகவும், தன்னையும் பிறரையும் அழிக்காத வரையில் இருந்தால் சிறந்தது தான். இல்லையேல் நிம்மதியை இழந்து விடுவோம் என்றும் ஆசை பேராசை பற்றி அழகாகவும் கூறியிருகிரீர்கள். பொருத்தமான பாடல்கள். எல்லாம் மனம் கவர்ந்தவை.

    நன்றி தொடர வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  62. அருமை நண்பரே ஆசையைக்குறித்து தந்த விடயங்கள் அருமை.
    கடவுளும், டி.டி யும் பேசுவது அருமையான கதை.

    நண்பரே முத்து படம் 1995 ல் வெளி வந்தது நான் வலைப்பூ தொடங்கியது 2010 ல் இப்பொழுதுதான் கூகுளில் பார்த்தேன் இந்தப்பாடலை நானும் கேட்டிருக்கின்றேன் ஆனால் எனக்கு அந்த சிந்தனை வரவேயில்லை.
    காரணம் சினிமாவையும், சினிமா நடிகர்களையும் நான் ஆரம்பம் முதலே வெறுத்தவன் இதனால் இதை கவனிக்கத் தவறி விட்டேன் போல....

    இப்பொழுது இதன் வரிகளை நீங்கள் சுட்டிக்காண்பிக்கும் பொழுதுதான் வைரமுத்துவின் வரிகளைத்தான் நான் பயன் படுத்தி வந்து இருக்கிறேன் 80தை நினைக்கும் பொழுது வெட்கமாக இருக்கிறது.

    சத்தியமாக சொல்கிறேன் எனது சிந்தனையில் தோன்றித்தான் எழுதினேன் ஆனால் இதை சமூகம் ஏற்காது காரணம் முதலில் சொன்னது வைரமுத்து, இரண்டாவதுதான் நான் சொல்லி இருக்கிறேன் ஆகவே நான் சொல்வது பொய்யாகி விடுகிறது.

    இதை எடுத்து விடலாம் என்று ஆலோசிக்கின்றேன் ஆனால் எனது வலைப்பூவுக்கு இந்த வார்த்தை பிரபலம் ஆகிவிட்டதே 80தே எமது இன்றைய 19.03.2015 கவலை.

    பதிலளிநீக்கு
  63. ஆசை பேராசை ஆகும்
    வினோத குணம் என்ற
    நிகழ்வை வெளிக்காட்டிய பதிவு

    பதிலளிநீக்கு
  64. நண்பரே தாங்கள் எதை சொல்ல ஆசைபடுகிறீர்கள் என்பதை சரியாக சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  65. அதிகமாக ஆசைப்படக்கூடாது என்று ஆசைப்படுவதும் இந்த ஆசை பட்டியலில் வந்து சேருமோ?

    ஆசையே துன்பத்திற்கு காரணம் எனும் தத்துவத்தை உலகிற்கு எடுத்துரைக்க ஆசைப்பட்ட புத்தனின் ஆசை எந்த வகை?.

    அருமையான சிந்தனை.

    கோ

    பதிலளிநீக்கு
  66. அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.