மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா...
நண்பர்களே... பணம் - இது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதைப் பற்றிப் பாடல்கள் மூலமாகப் பார்ப்போம். இணையத்தில் பல பாடல்கள் இருந்தாலும் அவற்றில் எனக்குப் பிடித்த சில பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். அடைப்புக் குறிகளில் என்னுடைய கருத்தும் கூறியுள்ளேன். அந்தக் காலக் கவிஞர்கள் முதல் இந்தக் காலக் கவிஞர்கள் வரை, எழுதிய பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொகுப்பு...
01. ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே... உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே - அதுக்கு உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே... முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே... கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பிணத்தைக் கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே - பணப்பெட்டி மேலே கண்வையடா தாண்டவகோனே...! (பாட்டு முழுவதுமே நன்றாக இருக்கும்... பண விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதாக எடுத்துக் கொள்ளுங்கள்...)
⟪ © பராசக்தி ✍ உடுமலை நாராயண கவி ♫ R.சுதர்சனம் 🎤 C.S. ஜெயராமன் @ 1952 ⟫
02. உதைத்தவன் காலை முத்தமிடும் - உத்தமர் வாழ்வைக் கொட்டி விடும்... உதட்டில் உறவும் உள்ளத்தில் பகையும் வளர்த்தே அறிவை மாய்த்து விடும்... பொருள் இருந்தால் வந்து கூடும் - அதை இழந்தால் விலகி ஓடும்... அனுபவம் எப்படியெல்லாம் மாறுகிறது பாருங்கள்...! இன்றைய நிலையும் அப்படித் தான்...)
⟪ © பாசவலை ✍ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 C.S. ஜெயராமன் @ 1956 ⟫
03. திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ...? திருவண்ணாமலை குகை புகுந்தாயோ...? இரும்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ...? இரக்கமுள்ளவனிடம் இருக்காத பணம்தனை எங்கே தேடுவேன்...! தேர்தலில் சேர்த்துத் தேய்ந்து போனாயோ...? தேச சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ...? சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ...? சூடஞ் சாம்பிராணியாய் புகைந்து போனாயோ...? (இந்த காலத்தில் நடக்கும் பலவற்றை அன்றே பல பாடல்களில் சொல்லி விட்டார்... ஒவ்வொரு வரியும் யோசிக்க வேண்டும்...)
⟪ © பணம் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 N.S.கிருஷ்ணன் @ 1952 ⟫
04. இன்றிருப்போர் நாளையிங்கே இருப்பதென்ன உண்மை...? இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்துக் காத்து என்ன நன்மை...? இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை... இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கேது இனிமை...? (பாட்டு முழுவதுமே நன்றாக இருக்கும்... எது இன்பம்...? என்பதை இந்தப் பாடல் மூலம் தெரிந்து கொள்ளலாம்...)
⟪ © மானமுள்ள மறுதாரம் ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1958 ⟫
05. வான் மழை நீரும் மண்ணின் குணத்தால், மாற்றம் அடைவதுண்டு... வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும், தீயவர் ஆவதுண்டு... உனக்கு முன்னே பிறந்த நிலம், ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம் - உனக்குப் பின்னும் இருக்குமடா, உரிமை என்றால் சிரிக்குமடா... (மனிதனின் வாழ்க்கை ஒரு பிடி சாம்பலில் முடிந்து போகிறது என்பதைச் சொல்லாமல் சொல்கிறது இந்தப் பாடல்...)
⟪ © எங்க வீட்டுப் பெண் ✍ ஆலங்குடி சோமு ♫ K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1965 ⟫
06. கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை, சொல்லில் கொடுக்கப் புரிந்து கொண்டான்... குள்ளநரி போல் தந்திரத்தால், குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்... வெள்ளிப் பணத்தால் மற்றவரை, விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்... மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை... ஹோ...! (எறும்பைப் போலச் சுறுசுறுப்பாய் இரு, நாயைப் போல நன்றியுடன் இரு, காகத்தைப் போல் ஒற்றுமையாய் இரு, ஆமையைப் போல் பொறுமையாய் இரு, சிங்கத்தைப் போல் கம்பீரமாய் இரு, நரியைப் போல் தந்திரமாக (நல்லவை செய்ய) பேசு, புலியைப் போல் பதுங்கி தக்க சமயத்தில் திறமையைக் காட்டு, சிலந்தியைப் போல் முயற்சி செய் - இன்னும் பல விலங்குகளை ஒப்பிடுகிறோம், ஆனால் மனிதனைப் போல்...? (சிலரைத்தவிர)
⟪ © அழகு நிலா ✍ அ.மருதகாசி ♫ K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1962 ⟫
07. பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை... பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்... பணம் இல்லாத மனிதருக்குச் சொந்தம் எல்லாம் துன்பம்... (மனம் இருக்கும் மனிதனிடம் நிம்மதி இருக்கும்)
⟪ © அன்னை ✍ கண்ணதாசன் ♫ R.சுதர்சனம் 🎤 சந்திரபாபு @ 1962 ⟫
08. வாழும் நாளிலே கூட்டம்கூட்டமாய் வந்து சேர்கிறார் பாரடா... கை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை மதித்து வந்தவர் யாரடா... பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா...? பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா...! (நீங்கள் கஷ்டப்படும் போது உதவும் அனைவரும் உங்களின் உடன் பிறந்தவர்கள் தான்... இதே பாட்டில் இன்னொரு அருமையான வரியும் உண்டு... அது :- "மனித ஜாதியில் துயரம் யாவுமே மனதினால் வந்த நோய்யடா... மனதினால் வந்த நோய்யடா...")
⟪ © பழநி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫
09. ஊசிமுனை காதுக்குள்ளே ஒட்டகங்கள் போனாலும் - காசாசை போகாதடி என் முத்தம்மா... கட்டையிலும் வேகாதடி... (ஒன்னும் பண்ண முடியாது, நாமளா பார்த்து திருந்தினாத் தான் உண்டு...!)
⟪ © பணத்தோட்டம் ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫
10. ஏறும்போது ஏறிகின்றான்... இறங்கும்போது சிரிக்கின்றான்... வாழும் நேரத்தில் வருகின்றான்... வறுமை வந்தால் பிரிகின்றான்... (என் காலம் வெல்லும்... வென்ற பின்னே வாங்கடா வாங்க... {அப்போதும் அவர்களை வரவேற்கணும்})
⟪ © தர்மம் தலை காக்கும் ✍ கண்ணதாசன் ♫ K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫
11. ஒன்னும் தெரியா ஆளானாலும் பணம் இருந்தாலே - அவனை உயர்த்திப் பேச மனிதர் கூட்டம் நாளும் தப்பாதே... என்ன அறிவு இருந்திட்டாலும் பணம் இல்லாத ஆளை - உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே... (அப்படி மதிக்காதவனையும் மதிக்க வைப்பதே வாழ்க்கை)
⟪ © பணம் பந்தியிலே ✍ கா.மு.ஷெரீப் ♫ K.V.மகாதேவன் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1961 ⟫
12. உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்... மதியாதார் தலை வாசல் மிதிக்காதே என்று - மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது... அது அவ்வை சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது... பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது...? கருடா சௌக்கியமா...? யாரும் இருக்கும் இடத்திலிருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே... கருடன் சொன்னது - அதில் அர்த்தம் உள்ளது... (அவரே கடைசி இரு வரிகளில் சொல்லி விட்டார்...!)
⟪ © சூரியகாந்தி ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1973 ⟫
13. தென்னையைப் பெத்தா இளநீரு, பிள்ளையப் பெத்தா கண்ணீரு... பெத்தவன் மனமே பித்தம்மா, பிள்ளையின் மனமே கல்லம்மா... பானையிலே சோறு இருந்தா - பூனைகளும் சொந்தமடா... சோதனையைப் பங்கு வச்சா - சொந்தமில்லே பந்தமில்லே... (பாட்டின் முடிவில் :- "தேடி வரும் காலம் வந்தால் செல்வமெல்லாம் ஓடி வரும்")
⟪ © எங்க ஊர் ராஜா ✍ கண்ணதாசன் ♫ M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫
14. வெலை கொடுத்து பொருளை வாங்கி வீட்டுக்குள்ளே பூட்டலாம்... வாழ்க்கைக்கென்ன வெல கொடுப்பே...? நீயும் சொல்லு பாக்கலாம்... பாசமெல்லாம் மனிசனுக்குப் பணத்து மேலே போகுது... பாழடைந்த அரண்மனையா பாவி நெஞ்சு மாறுது...? (பட்டால் தான் சில மனிதருக்குப் புரியும் போலிருக்கு...!)
⟪ © சொல்ல மறந்த கதை ✍ இளையராஜா ♫ இளையராஜா 🎤 இளையராஜா @ 2002 ⟫
15. வாழ்க்கையென்பது பயணம் போன்றது... வளைவும் திருப்பமும் வழியை மாற்றுது... புத்தியுள்ளவன் தப்பிப் பிழைக்கிறான்... சிக்கிக் கொண்டவன் திகைத்து நிற்கிறான்... கட்டுப்பட்டுப் படிச்சவன் தான் மற்றவர்க்குப் பாடமாகிறான்... காசு - கையில் இல்லாட்டா - இங்கு எதுவும் இல்லேடா... உன் பேச்சு இங்குச் செல்லாது... உலகம் கண்டுகாதுடா.... (எல்லா பிரச்சனைக்கும் தீர்வு அனுபவ அறிவு அல்லது கல்வி தான்)
⟪ © மாயக் கண்ணாடி ✍ முத்துலிங்கம் ♫ இளையராஜா 🎤 இளையராஜா @ 2007 ⟫
16. ஆசையில் நான் வைத்த பாசத்தில் நேசத்தில் வந்ததிங்கு - வேதனையும் சோதனையும் தான்... நெஞ்சம் வெந்ததடி சோகத்தினால் தான்... பாம்புக்கு பால் வைத்து நான் செய்த பாவத்தில் - வந்ததிங்கு கொஞ்சமல்ல நஞ்சமல்லடி... எந்தன் நெஞ்சமிங்கு நெஞ்சமல்லடி... காருக்கும் பேருக்கும் தேருக்கும் ஆசையென்ன... நேருக்கு நேரிங்கு எய்த்திடும் மோசமென்ன...? ஊருக்கு நியாயங்கள் சொல்லிடும் வேஷமென்ன...? உண்மையைக் கொன்றபின் நெஞ்சுக்கு நீதியென்ன...? போகும் பாதை தவறானால் போடும் கணக்கும் தவறாகும்... ஹோ... (தப்பு செய்தவர்களுக்கு அவரவர் மனசாட்சியே ஒரு நாள் கண்டிப்பாகக் கேள்வி கேட்கும்...)
⟪ © தர்மதுரை ✍ பஞ்சு அருணாச்சலம் ♫ இளையராஜா 🎤 K.J.யேசுதாஸ் @ 1991 ⟫
17. காசு பணம் வந்தா நேசம் சில மாசம்... சிந்தினேன், ரத்தம் சிந்தினேன் - அது எல்லாம் வீண் தானோ...? வேப்பிலை, கருவேப்பிலை அது யாரோ - நான் தானோ...? (கருவேப்பிலைக்கு நிறைய மகத்துவம் உண்டு)
⟪ © படிக்காதவன் ✍ வைரமுத்து ♫ இளையராஜா 🎤 K.J.யேசுதாஸ் @ 1985 ⟫
18. மண்ணின் மீது மனிதனுக்காசை - மனிதன் மீது மண்ணுக்காசை... மண்தான் கடைசியில் ஜெயிக்கிறது - இதை மனம்தான் உணர மறுக்கிறது... கையில் கொஞ்சம் காசு இருந்தால் - நீதான் அதற்கு எஜமானன்... கழுத்து வரைக்கும் காசு இருந்தால் - அதுதான் உனக்கு எஜமானன்... வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு - வாழ்க்கையை வாரிக் குடித்து விடு. (காசு இல்லாதவனுக்கு : அவனைப் பற்றி ஊரில் யாருக்கும் தெரியாது. காசு இருப்பவனுக்கு : அவனைப் பற்றி அவனுக்கே தெரியாது.)
⟪ © முத்து ✍ வைரமுத்து ♫ A.R.ரகுமான் 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1995 ⟫
வாலி அவர்கள் பாபா படத்தில் எழுதிய பாடலின் முதல் வரியைத் தலைப்புக்கு வைத்து விட்டேன். (பொருள் : எல்லாமே மாயை...?!) அந்தப் பாட்டில் எனக்குப் பிடித்த வரிகளோடு முடிக்கிறேன்...
சந்தோசி சந்தோசி சந்தோசி
உன் சந்தோஷம் உன் கையில் நீ யோசி
பட்டும் படாமலே....
தொட்டும் தொடாமலே...
தாமரை இலை தண்ணீர் போல் நீ
ஒட்டி ஒட்டாமலிரு...
குறிப்பு : இதே பாடல்களில் எழுதியுள்ள வரிகளை மட்டும் கேட்க வேண்டுமென்றால் இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
இவ்வளவு பாடல்கள் சேகரிப்புக்குப் பின் உழைப்பு தெரிகிறது. நல்லாருக்கு.
பதிலளிநீக்குஎன் வலையில் ;
கருணாவும் ஜெயாவும் பாடும் 'கொலைவெறி' பாட்டு!
பணம் தான் வாழ்க்கை என்று உலகமே ஓடுகிறது எங்கே ஓடுகிறோம் என்று தெரியாமலே
பதிலளிநீக்குபாடல்கள் மூலம் கருத்து சொன்னது சிறப்பு..
பதிலளிநீக்குசிறந்த பாடல் தொகுப்பு. உங்கள் விளக்கமும் அருமை...
பதிலளிநீக்குஎனது வலைப்பூ இன்று முதல் புதிய டொமைனுக்கு மாறுகிறது:
வலையுலக நண்பர்களே, எனது வலைப்பூ பற்றி ஓர் அறிவிப்பு
தமிழ்மணம் இனச்சுடிங்க போல... ரைட்டு...
பதிலளிநீக்குArumaiyana thogupu. Ungal uzhaipuku vazhthukal sago. Ta ma 1
பதிலளிநீக்குமனிதர்களின் அன்புக்கு மதிப்பு கொடுக்கும் பாடல் தொகுப்புகள்...
பதிலளிநீக்குஅனைத்து பாடல்களும் அருமை... நண்பரே...
மிகச் சிறப்பாய் உள்ளது. உழைப்பு தெரிகிறது. வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குhttp://atchaya-krishnalaya.blogspot.com
Thanks Sir,
பதிலளிநீக்குwww.cuddalorenews.tk
நல்ல பகிர்வு. பாடல்கள் எல்லாமே நல்ல தேர்வு.
பதிலளிநீக்குநல்ல தொகுப்பு நண்பரே.. அருமை
பதிலளிநீக்குபணம் பதிவும் செய்யும்!
பதிலளிநீக்குஅத்தனையும் முத்துப்பாடல்கள் நண்பரே,
பதிலளிநீக்குகாலத்தை வென்று கடந்து நிற்கும் பாடல்கள் ஆயிரம் ஆயிரம்,
அவைகளில் சிலவற்றை தொகுத்தமை அருமை...
பத்தும் செய்யும் பணம் பற்றி
பதிலளிநீக்குபக்குவமான பகிர்வு..
பாராட்டுக்கள். வாழ்த்துகள்...
பணம் பணம் பணம் ...
பதிலளிநீக்கு2 பாகமாக போட்டுருக்கலாம்.. கொஞ்சம் நீளமாக தோன்றுகிறது..............
சிறப்பான தொகுப்புக்கள் பாஸ் அருமை
பதிலளிநீக்குஎல்லாபாடல்களும் கருத்தும் ரொம்ப நல்லா இருக்கு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
தனபாலன்...
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பக்கம் அழகாக உள்ளது. பணம் குறித்து தொகுத்த பாடல்களில் சில பலர் அறியாதவை. பல பல்ர் கேட்டவை. எப்படியாயினும் இது அவசியமான பதிவாகும். பணத்தைத் துரத்துபவர்கள் அதே சமயம் வாழ்க்கையின் நிலையற்ற தன்மையையும் புரிந்துகொள்ளவேண்டும். அருமையான பதிவு. தொடர்ந்து வாய்ப்பமைவில் வாசிப்பேன். வாழ்த்துக்கள்.
வரிகளை அசை போட்டால்
பதிலளிநீக்குஆசைகளுக்கு கடிவாளம் போடலாம்
Good collection. So many songs on Money !
பதிலளிநீக்குவணக்கம்! நல்ல தொகுப்பு.அசை போடும் மனத்தோடு இசைத் தொகுப்பு செய்துள்ளீர்கள்.
பதிலளிநீக்குபாஸ் எல்லாம் அருமையான பாடல்கள்....
பதிலளிநீக்குநீங்கள் குறியிட்டு காட்டிய வரிகள் மிக அற்புதமாய் இருக்கு... நல்ல ரசனைதான் உங்களுக்கு....
பதிலளிநீக்குபணத்தின் செல்வாக்கைப் பார்த்தீர்களா பாடல்களில் கூட எந்தளவு செல்வாக்குச் செலுத்துகிறது....
பதிலளிநீக்குமிகவும் நீண்ட தேடல் நன்றி சகோ...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
கருத்துள்ள நல்ல பாடல்கள்..
பதிலளிநீக்குஅருமையான தொகுப்புக்குப் பின்னால் உங்கள் கடுமையான உழைப்பு தெரியுது.. தொடருங்கள்.
சார் சூப்பர் சார். எல்லாமே அருமையான கலெக்ஷன். நன்றி
பதிலளிநீக்குரொம்ப உழைத்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்கு//உனக்கு முன்னே பிறந்த நிலம்... ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்...
உனக்கு பின்னும் இருக்குமடா... உரிமை என்றால் சிரிக்குமடா...//
அற்புதமான வரிகள்.
//பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா...//
ஆறுதல் தரும் வரிகள்.
//போகும் பாதை தவறானால் போடும் காசும் தவறாகும்//
போடும் கணக்கும் தவறாகும் என்று கேட்டதாக நினைவு.
//வாழ்வின் அர்த்தம் புரிந்து விடு. வாழ்க்கையை வாரிக் குடித்து விடு.//
அருமையான வரிகள். "வாழ்க்கையை வாரிக் குடித்து விடு" இந்த வரிக்கு மட்டுமே தனி பதிவு போடலாம்.
வாழ்த்துக்கள்.
அருமையான பாடல் வரிகளை தொகுத்து அசத்தியுள்ளீர்கள் சார்... வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவணக்கமுங்க!ரொம்பவே மெனக்கெட்டிருக்கீங்க.வாழ்த்துக்கள்!"அது"(பணம்)இருந்தா பொணம் கூட வாய் திறக்குமின்னு சொல்லுவாய்ங்க!என்னமோ,போங்க!
பதிலளிநீக்குஅருமையான தொகுப்பு நண்பரே..
பதிலளிநீக்குமீண்டும் மீண்டும் படித்து மகிழ்ந்தேன்..
அருமையான பதிவு நண்பரே பாடல் வரிகள் என்ன கூறினார் நம்மோர் விழிப்பதில்லை ஏனோ...
பதிலளிநீக்குஅழகான ,அருமையான தொகுப்பு நண்பரே,
பதிலளிநீக்குபகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி
//நீங்கள் கஷ்டப்படும் போது உதவும் அனைவரும் உங்களின் உடன் பிறந்தவர்கள் தான்..//
பதிலளிநீக்குபாடல் தேர்வும் உங்கள் கருத்துக்களும் அருமை.
ஒரு பதிவு எழுதுவதற்காக உங்களின் தேடல் அபாரம்
பதிலளிநீக்குத.ம.7
பதிலளிநீக்குநல்ல தேர்வு.
அருமை.
பதிலளிநீக்குசிறப்பு தொகுப்பு நண்பரே
பதிலளிநீக்குஅதிகமாக உழைத்து இருக்கின்றீர்கள் சகோ.வித்தியாசமான முயற்சி.வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஅத்தனை பாடல் வரிகளும் முத்துக்கள். இவை அனைத்தையும் தொகுத்து உங்கள் பொறுமைக்கு இடம் அளித்து சிரமமான தரமான படைப்பைத் தந்திருக்கின்றீர்கள். தேடல் சிறப்பு. அதைப் பலருக்குத் தெரியப்படுத்துவது மேலும் சிறப்பு. இது பணம் பற்றிய பலரின் பலபக்கப் பார்வையாக அமைகின்றது.
பதிலளிநீக்குபணம் பற்றிய திரைப்படப் பாடல்களின் தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல அருமையான தொகுப்பு நண்பரே. மேடைப்பேச்சுக்கு உதவும்.
பதிலளிநீக்குநல்ல பகிர்வு .இன்றைய என் ஆக்கத்தினை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும் என அன்போடு அழைக்கின்றேன் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கும் ஒத்துளைப்புகளிக்கும் .
பதிலளிநீக்குபணம் பத்தும் செய்யும் பகிர்வுக்கு நன்றி நண்பா...!
பதிலளிநீக்குஅருமையாகத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குசூப்பர்.
ஒவ்வொரு பாடல் வரிகளையும் பொறுமையாக தேர்ந்தெடுத்து தொகுத்ததற்கு வாழ்த்துகள். அருமையான பகிர்வு. 'கையில வாங்குனேன் பையில போடல, காசு போன இடம் தெரியல' என்ற தங்கவேலின் பாடல்வரி ஞாபகம் வந்தது. நன்றி.
பதிலளிநீக்குஎல்லா பாடல்களும் மிக அருமையாக உள்ளது .....
பதிலளிநீக்குSuper.. Super.. Super...
பதிலளிநீக்குAnbudan
Pavala
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமையான பதிவு. பணத்தை குறித்த எல்லா பாடல்களும், அதற்கு தங்கள் அளித்த கருத்துக்களும் மிக அருமையாக உள்ளது. படித்து பாடி மிகவும் ரசித்தேன். கேட்கவும் பிறகு வருகிறேன். படங்கள் எல்லாவற்றையும் மிக பொறுமையாக ஆராய்ந்து பணம் சம்பந்தப்பட்ட பாடல்களை தொகுத்து தந்திருக்கிறீர்கள். அந்த உழைப்புக்கு தங்களுக்கு இன்று (மே 1 தேதி) மனம் நிறைந்த வாழ்த்துக்களுடன், பாராட்டுக்களும்...பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.