🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉பணம். பணம்.. பணம்...

பணம். பணம்.. பணம்... இதைப் பற்றித் தான் இந்த பதிவு.... ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக.....! பழைய மற்றும் தத்துவ பாடல்களைக் கேட்க விருப்பமுள்ளவர்கள் மட்டும் மேலே தொடரவும். இனி கேட்போமா....?


பணம் - இது என்னென்ன வேலைகள் செய்கிறது என்பதைப் பற்றி அந்த கால கவிஞர்கள் முதல் இந்த கால கவிஞர்கள் வரை, எழுதிய (பணப்) பாடல்கள் பற்றி ஒரு சின்ன தொகுப்பு... இணையத்தில் தேடிய போது கிடைத்த பாடல்களில் எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் கீழே கொடுத்துள்ளேன். ஒவ்வொரு பாடல் முடிந்த பின் அடுத்த பாடலை சொடுக்கவும்

01. படம் : பராசக்தி | பாடல் வரிகள் : உடுமலை நாராயண கவி | 1952 | C.S. ஜெயராமன் பாடியது | நடிகர் திலகம் நடித்த முதல் படம் | பாட்டு முழுவதுமே நன்றாக இருக்கும் | தேசம் ஞானம் கல்வி ஈசன் பூஜை எல்லாம் காசு முன் செல்லாதடி...! || பணப்பெட்டி மேலே கண்வையடா தாண்டவகோனே.....!


02. படம் : பாசவலை | பாடல் வரிகள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் | 1956 | C.S. ஜெயராமன் | வித்தியாசமான குரலுக்குச் சொந்தக்காரர் | பாடல் : இது தான் உலகமடா...! || பொருள் இருந்தால் வந்து கூடும்... அதை இழந்தால் விலகி ஓடும்...


03. படம் : பணம் | பாடல் வரிகள் : உடுமலை நாராயண கவி | 1952 | கலைவாணர் N.S.கிருஷ்ணன் | நகைச்சுவை கலந்த கருத்துள்ள பாட்டு | பாடல் : எங்கே தேடுவேன், பணத்தை எங்கே தேடுவேன்...? || இரக்கமுள்ளவனிடம் இருக்காத பணம்தனை எங்கே தேடுவேன்.....!


04. படம் : மானமுள்ள மறுதாரம் | பாடல் வரிகள் : அ.மருதகாசி | 1958 | சீர்காழி கோவிந்தராஜன்... கணீர் குரலுக்குச் சொந்தக்காரர். பாடல் : இன்பமெங்கே...இன்பமெங்கே... என்று தேடு || சேர்த்து வைத்துக் காத்து என்ன நன்மை...?


05. படம் : எங்க வீட்டுப் பெண் | பாடல் வரிகள் : ஆலங்குடி சோமு | 1965 | சீர்காழி கோவிந்தராஜன் | பாடல் : இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா || உனக்கும் பின்னே இருக்குமடா... உரிமை என்றால் சிரிக்குமடா...


06. படம் : அழகு நிலா | பாடல் வரிகள் : அ.மருதகாசி | 1962 | சீர்காழி கோவிந்தராஜன் | பாடல் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் || குள்ள நரி போல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்...


07. படம் : அன்னை | பாடல் வரிகள் : கண்ணதாசன் | 1962 | சந்திரபாபு | பாடல் : புத்தியுள்ள மனிதனெல்லாம் வெற்றி காண்பதில்லை || பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை... மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை...


08. படம் : பழநி | பாடல் வரிகள் : கண்ணதாசன் | 1965 | T.M.சௌந்தரராஜன் பாடல் : அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே...? || பணத்தின் மீது தான் பக்தி என்ற பின் பந்த பாசமே ஏனடா....?


09. படம் : பணத்தோட்டம் | பாடல் வரிகள் : கண்ணதாசன் | 1963 | T.M.சௌந்தரராஜன் | பாடல் : குரங்கு தோட்டமடி பழத்தோட்டம் || காசாசை போகாதடி என் முத்தம்மா... கட்டையிலும் வேகாதடி...


10. படம் : தர்மம் தலை காக்கும் | பாடல் வரிகள் : கண்ணதாசன் | 1963 | T.M.சௌந்தரராஜன் | பாடல் : ஒருவன் மனது ஒன்பதடா || வறுமை வந்தால் பிரிகின்றான்...


11. படம் : பணம் பந்தியிலே | பாடல் வரிகள் : கா.மு. ஷெரீப் | 1961 | T.M.சௌந்தரராஜன் | பாடல் : பணம் பந்தியிலே குணம் குப்பையிலே || என்ன அறிவு இருந்திட்டாலும் பணம் இல்லாத ஆளை, உலகம் எந்த நாளும் மனிதனாக மதிக்க மாட்டாதே...


12. படம் : சூரியகாந்தி | பாடல் வரிகள் : கண்ணதாசன் | 1973 | T.M.சௌந்தரராஜன் | பாடல் : பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது || உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும்... உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும்...


13. படம் : எங்க ஊர் ராஜா | பாடல் வரிகள் : கண்ணதாசன் | 1968 | T.M.சௌந்தரராஜன் | பாடல் : யாரை நம்பி நான் பொறந்தேன்...? போங்கடா போங்க || பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா... சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லே பந்தமில்லே...


14. படம் : சொல்ல மறந்த கதை | பாடல் வரிகள் : இளையராஜா | 2002 | இளையராஜா | பாடல் : பணம் மட்டும் வாழ்க்கையா.....? || வாழ்க்கைக்கென்ன என்ன வெல கொடுப்பே.....?


15. படம் : மாயக் கண்ணாடி | பாடல் வரிகள் : கங்கை அமரன் | 2007 | இளையராஜா | பாடல் : காசு கையில் இல்லாட்டா, இங்கு எதுவும் இல்லேடா... || உன் பேச்சு இங்குச் செல்லாது, உலகம் கண்டுகாதுடா...


16. படம் : தர்ம துரை | பாடல் வரிகள் : வைரமுத்து | 1991 | இளையராஜா பாடல் : அண்ணன் என்ன...தம்பி என்ன... || ஊருக்கு நியாயங்கள் சொல்லிடும் வேஷமென்ன...?


17. படம் : படிக்காதவன் | பாடல் வரிகள் : வைரமுத்து | 1985 | K.J. யேசுதாஸ் | பாடல் : ஊரை தெரிஞ்சிக்கிட்டேன்... || காசு, பணம் வந்தா நேசம் சில மாசம்...


18. படம் : முத்து | பாடல் வரிகள் : வைரமுத்து | 1995 | S.P .பாலசுப்ரமணியம் | பாடல் : ஒருவன் ஒருவன் முதலாளி || கழுத்து வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன்...


இவ்வளவு நேரம் பொறுமையாகக் கேட்டதற்கு மிக்க நன்றி...

இந்தப் பாடல்களை முழுப்பாடல்களாக கேட்க →இங்கே← சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. நல்ல முயற்ச்சி. பழைய பாடல்களையும் கொஞ்சம் கேட்கச்செய்வதும், கேட்டுக்கொண்டே பிற இணையங்களில் வேலை செய்வதற்கும் உதவுவதாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 2. வணக்கம்
  ரேடியோ எப்பொழுதும் பாடுகிறது எப்படி நிறுத்துவது? மின்ஞ்சலுக்கு வழிமுறையை அனுப்பவும்.

  பதிலளிநீக்கு
 3. அருமையான பாடல்கள் மிக்க நன்றி சகோ எங்க பக்கமும் வந்து எதாவது சொல்லிட்டு போங்க

  பதிலளிநீக்கு
 4. உண்மையை சொல்லனும்னா இதுவரை உங்கள் பதிவுகளை நான் படித்ததில்லை. துறவைப்பற்றி படித்த முதல் பதிவு பிடித்துவிட மற்ற பதிவுகள் ஒவ்வொன்றாய் கண்ணில் படுகிறது. எல்லோரும் ஏதேதோ பாட்டுக்கள் கேட்கிறோம், ஏதேதோ கருத்துகளைப் படிக்கிறோம், பிறர் சொல்லக் கேட்கிறோம். ஆயிரம் கேட்டாலும் அவரவருக்கு சாதகமானதை மட்டும் எடுத்துக் கொள்கிறோம். உங்கள் இல்லத்தில் இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

  அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
  இவ்வுலகம் இல்லாகி யாங்கு

  பதிலளிநீக்கு
 5. ஆவ்வ்வ்வ் அத்தனையும் அருமையான தத்துவப் பாடல்கள்.. அதிலும் 12,13ம் பாடல் எனக்குமிக மிகப் பிடித்த பாட்டுக்கள்... இங்கிருந்தே பாடல் கேட்க முடியவில்லை.. டவுண்லோட் பண்ணோனும் ஃபிளாஸ் ஃபிளேயரை. தெரிந்த ஆனா மறக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பாடல்கள்.. நினைவுபடுத்தி விட்டீங்கள்.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.