நேயர் விருப்பம்


பாட்டாலே புத்தி சொன்னார்; பாட்டாலே பக்தி சொன்னார்; பாட்டுக்கு நான் பாடுபட்டேன்; அந்தப் பாட்டுகள் பலவிதம் தான்... (படம்: கரகாட்டக்காரன்) நமக்குப் பிடித்த பலவிதமான பாடல்களை நமது தளத்தில் சிறிது பாடுபட்டு... ம்ஹிம்... விருப்பப்பட்டு, கொஞ்சூண்டு மெனக்கெட்டு... இணைத்து ரசிப்போம்... → முந்தைய பதிவின் ← கருத்துரையில் சகோதர சகோதரிகளின் விருப்பத்திற்காக இந்தப் பகிர்வு...


என்னோடு பாட்டுப் பாடுங்கள்... எல்லோரும் சேர்ந்து ஆடுங்கள்... இசைக் கோலங்கள் இமை ஜாலங்கள் சுகம் தேடுங்கள்2 ஏனோ நெஞ்சு தனனன தனனன... பாடும் போது தனனனனா... தானே கொஞ்சம் தனனன... தனனன... சோகம் போகும் தனனனனாஆ...! (படம் உதய கீதம்)

இந்தப் பதிவைக் கைப்பேசியில் அல்லாமல் கணினியில் வாசித்தால், வலைப்பூவின் தொழில்நுட்பத்தை அனுபவிக்கலாம்...

வலைப்பூவின் புதிய முகப்பு தோற்றத்திற்கேற்ப தொழினுட்பம் மாற்றப்பட்டுள்ளது - புதுப்பிக்கப்பட்ட நாள் :18.10.2019
மீண்டும் இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 8.9.2021 - வலைப்பூவில் கேட்பொலி இணைப்பு முழுவதுமாக எளிதாக மாறி விட்டது... அதன் விளக்கங்கள் :-

நீங்கள் Blogger A/c-ல் தானே உள்ளீர்கள்...? மற்றொரு tab-ல் தட்டச்சு (type) செய்து தட்ட (↵) வேண்டியது →https://drive.google.com/drive/my-drive← (இங்கேயும் சொடுக்கலாம்...) வலைப்பூவுக்கென்று தனியே ஒரு மின்னஞ்சல் இருந்தால் தனியே ஒரு கோப்புறை (Folder) தேவையில்லை... பல கோப்புக்களைத் தரவேற்றம் செய்து வைத்திருந்தால் தனியே ஒரு கோப்புறை (Folder) இருந்தால் எளிது... அதனால் முதலில் மேலே + New என்பதையும் அதில் Folder என்பதையும் சொடுக்கி, உங்கள் விருப்பம் போல் ஒரு பெயரிட்டுக் கொள்ளவும்...(Audio Files) பின் அதைச் சொடுக்கி உள்ளே செல்லவும்... மறுபடியும் மேலே + New என்பதையும் அதில் File upload என்பதையும் சொடுக்கி, உங்களின் கணினியில் உள்ள கேட்பொலியை (mp3) தரவேற்றம் செய்யவும்... தரவேற்றம் முடிந்தவுடன் அதன் மீது சுட்டியைக் கொண்டு சென்று சொடுக்கி Right Click → கவனியுங்கள் → உங்கள் திரையையும்...! Restricted Only people aaded can open with the link என்று இருந்தால், அதன் கீழே இருக்கும் Change to anyone with the link என்பதைச் சொடுக்கி Any one with the link என்பதைத் தேர்வு செய்துவிட்டு Done சொடுக்கவும்...!

இனி அதன் இணைப்பு வேண்டும்... தரவேற்றம் செய்யப்பட்ட கேட்பொலியின் மீது சுட்டியைக் கொண்டு சென்று Right Click செய்து, அங்குள்ள Get link என்பதையும், Copy link என்பதையும் சொடுக்கி விட்டு, முடிவாக Done...! கணினி நினைவகத்தில் அந்த இணைப்பு உள்ளது... மற்ற கணினி வேலை ஏதேனும் இருந்தால் ஒதுக்கிவிட்டு அடுத்ததாக உடனே → Google drive direct link generator ← (இங்கேயும் சொடுக்கலாம்...) தளத்திற்குச் செல்ல வேண்டும்... Enter a Google Drive sharing URL என்று மங்கலாகத் தெரியும் கட்டத்தைச் சொடுக்கி Ctrl + C சொடுக்கவும்... (அதாவது Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C -யை அழுத்தவும்...) கணினி நினைவகத்தில் இருந்த இணைப்பு (Copy link) இங்கு வந்து விடும்... அதன்பின் கீழேயுள்ள Generate Google Drive Direct Link என்பதைச் சொடுக்கினால், அதன் கீழே கேட்பொலியின் இணைப்பு கிடைத்து விடும்... அதை முழுவதும் தேர்வு செய்து Copy செய்து Note pad-ல் சேமித்துக் கொள்ளவும்... இப்போது ஏதேனும் கணினியில் வேறு வேலை இருந்தால் செய்து கொள்ளலாம்...

ஒரு பதிவை எழுதி முடித்து விட்டீர்கள்... இனி கேட்பொலியை இணைக்க வேண்டும்... அதற்கு ஒரு mp3Player script வேண்டும்... பதிவெழுதும் போது நீங்கள் Compose view-ல் தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்... கவனிக்க மேலே பல Icon இருக்கும்... முதல் Icon - Pencil ஆக இருக்கும்... அதைச் சொடுக்கி < > HTML view என்பதைத் தேர்வு செய்யுங்கள்... பதிவில் எந்த பத்திக்குப் பின் கேட்பொலி வேண்டுமோ அங்குச் சென்று தட்டவும்... கீழ் பெட்டியிலுள்ள mp3 Player script-யை copy செய்து paste செய்யவும்... (COPY செய்ய : சுட்டியால் தேர்வு செய்து, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C -யை அழுத்தவும்) இந்த script-ல் COPY LINK எனும் இடத்தில், Note pad-ல் சேமித்துக் கொண்ட mp3 script -யை இடுங்கள்... பதிவை Publish சொடுக்குவதற்கு முன் Preview என்பதை சொடுக்கி சரி பார்க்கவும்... உற்சாகத்துடன் இப்பதிவில் உள்ள எதிர்நீச்சல் கேட்பொலியை கேட்கலாம்...! அடுத்த புதிய பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் மறக்காமல் Compose view -விற்கு மாறி விடவும்...! நன்றி...

முன்பு கேட்பொலி இணைப்பு எவ்வாறு இருந்தது என்பதை ஒரு நினைவாக :-

(1) இணையத்தில் ஒரு இடம் : நமது கணினியில் ஆடியோ ஃபைல்கள் (mp3) இருப்பதைப் போன்று இணையத்திலும் இடம் பிடித்து நமது பதிவுகளில் இணைப்போம்... அதற்குப் பதிவேற்றம் செய்யப் பல தளங்கள் இருந்தாலும், இருக்கவே இருக்கு Google Sites...! நீங்கள் Blogger A/c-ல் தானே உள்ளீர்கள்...? மற்றொரு tab-ல் தட்டச்சு (type செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது →https://sites.google.com/site← இங்கேயும் சொடுக்கலாம்... வரும் திரையில் இடது ஓரத்தில் உள்ள Create-யை சொடுக்கி, அதில் in classic Sites-யை சொடுக்கி, வரும் பக்கத்தில் Select a template to use: என்பதில் Blank template என்பது அப்படியே இருக்கட்டும்... Name your site: என்பதில், உங்களுக்குப் பிடித்த பெயரை ஆங்கிலத்தில் இட்டு விட்டு, I'm not a robot என்பதில் டிக் (√) செய்து விட்டு, மேலுள்ள CREATE என்பதைச் சொடுக்கினால், ஒஓஒள...! The location you have is not available என்று வந்தால், மறுபடியும் Name your site: என்பதில் பெயரை மாற்றியோ, பெயருடன் எண்களைச் சேர்த்தோ மாற்றுங்கள்... சரியாக வந்தவுடன், CREATE-யை சொடுக்கவும்... O.K. இணையத்தில் ஒரு இடத்தை உருவாக்கி விட்டோம்...

2) இடத்தை சேமிப்பு இடமாக மாற்றுதல் : இப்போது தோன்றும் பக்கத்தில் வலது புறம் மேலுள்ள பல்சக்கர () ஐகானை சொடுக்கி, அதில் Page settings என்பதை தேர்வு செய்யவும்... இப்போது வரும் பக்கத்தில் Currently using page template Web Page என்பதில், (Change) என்பதை சொடுக்கவும்... வரும் பக்கத்தில் Select a new template to use என்பதற்கு கீழுள்ள Web Page என்பதை, File Cabinet-யாக தேர்வு செய்து விட்டு, மேலுள்ள CHANGE என்பதைச் சொடுக்கவும்... சற்று முன் உருவாக்கிய இணைய இடம், இப்போது mp3 ஃபைல்களைச் சேமிக்கும் இடமாக மாற்றி விட்டோம்...!

இந்தத் திரையில் + Add File என்பதைச் சொடுக்கி, வரும் popup-திரையில், உங்களில் கணினியில் இருக்கும் mp3 File-யை தேர்ந்தெடுத்து விட்டு, (ஒரு mp3 File-ன் அதிகபட்ச அளவு 20Mb) Open என்பதைச் சொடுக்கி, தரவேற்றம் ஆகும் வரை பொறுமை காக்கவும்... பதிவேற்றம் முடிந்த mp3 File-ன் கீழுள்ள Download என்ற இடத்தில் சுட்டியை வைத்து, Right Click செய்து, Copy Link Address என்பதைச் சொடுக்கி, Note pad-ல் சேமித்துக் கொள்ளவும்... இதில், https:// என்று ஆரம்பித்து, mp3 வரை உள்ளது தான் mp3 script... மீதம் உள்ள ?attredirects=0&d=1 என்பதை நீக்கி விடுங்கள்... (இந்தப் பக்கத்தை மூட வேண்டாம்)

இப்போது பதிவில் ஒரு பத்தி எழுதிய பின், அதற்குக் கீழ் நமது பாடல் பாட ஒரு mp3Player script வேண்டும்... பதிவெழுதும் போது நீங்கள் Compose view-ல் தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்... (இதுக்குத் தான் முந்தைய பதிவில் → HTML view - வில் பதிவு எழுதிப் பழகிக் கொள்ளுங்கள் என்று சொன்னது...!) சரி விடுங்கள்... நீங்கள் இப்போது Compose view எனும் பதிவு எழுதும் பக்கத்தில் உள்ளீர்கள்... அந்த Icon-யை சொடுக்கி HTML view-விற்கு சென்று, கீழ் பெட்டியிலுள்ள mp3 Player script-யை copy செய்து paste செய்யவும்... (COPY செய்ய : சுட்டியால் தேர்வு செய்து, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C -யை அழுத்தவும்) இந்த script-ல் COPY LINK எனும் இடத்தில், Note pad-ல் சேமித்துக் கொண்ட mp3 script -யை இடுங்கள்... மீண்டும் Compose view -விற்கு மாறி தொடர்ந்து பதிவை எழுதுங்கள்...
சரி நாம் இணைத்தது எவ்வாறு இருக்கும்...? இதோ :-
© எதிர் நீச்சல் வாலி குமார் சீர்காழி கோவிந்தராஜன் @ 1968 ⟫
சொடுக்கி, கேளுங்கள்... சொடுக்கி நிறுத்தி விடலாம்...! நாமும் வெற்றி பெற எதிர்நீச்சல் போடுவோம்...

எல்லாம் முடிந்து பதிவை வெளியிட்டு விட்டு, பிடித்த பாடலை நமது தளத்தில் கேட்பதில் என்னவொரு இன்பம்...! ஆனால்... அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட எனது அனுபவம்... மேல் சொன்னவாறு எனது தளத்தில் முதல்முறையாக mp3-யை இணைத்து விட்டு, Sign-out + Browser-யை மூடி விட்டு, மறுபடியும் Browser-யை திறந்து, Blogger A/c-க்கு செல்லாமல், mp3 இணைத்த பதிவை திறந்து Play-யை சொடுக்கினால்... ம்ஹீம்... பாடல் ஓடவில்லை... அட...! இன்பத்திற்கு பின் என்னவொரு துன்பம்...! எல்லாம் சரி தான், பிறகு ? ம்... → அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? எது சிறந்தது? ← என்று எழுதிய பதிவு வீண் தானா ? நாம் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி தான்... ஆனால் பலருக்கும் பயன் தந்தால் தானே, உண்மையான மகிழ்ச்சி...? ம்... ஏதோ தடங்கல் உள்ளது... தீர்வு காண்போமா...? தேவை பொதுநலம்...! (பப்ளிக் பப்ளிக் :-)

3) மனதில் உள்ள இடத்தை பொதுநலமாக்குதல் : இப்போது மேலே மூட வேண்டாம் என்று சொன்ன பக்கத்திற்கு செல்லவும்... (1) இப்போது வலது புறம் மேலுள்ள பல்சக்கர ஐகானை சொடுக்கி, அதில் Manage Site என்பதைச் சொடுக்கவும்... இடது புறம் கவனிக்க : இப்போது General என்பதில் உள்ளோம்... அதில் Site storage என்பதில் நீங்கள் பதிவேற்றிய ஃபைலின் அளவைப் பொறுத்து 1% of 100 MB used ← இவ்வாறு இருக்கலாம்... 100 MB வரை தான் இந்தப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யலாம்... அப்புறம்...? மறுபடியும் முதலில் இருந்து செய்ய வேண்டியது தான்...! தொடர்ச்சியாக பத்து இடங்களை இவ்வாறு செய்யலாம்... அடுத்து...? Sorry, you cannot create more sites at this time. Please try again later. ← இவ்வாறு வரும்... ஒரு வாரம் கழித்து மீண்டும் செய்யலாம்...! (2) அடுத்து General கீழுள்ள Sharing and Permissions என்பதைச் சொடுக்கி Who has access என்பதில் Public on the web - Anyone on the Internet can find and view என்றிருக்க வேண்டும்... (அவ்வாறு இருந்தால் மிகவும் மகிழ்ச்சி) அப்படியில்லையென்றால் பக்கத்திலுள்ள Change என்பதைச் சொடுக்கி அதை தேர்வு செய்தால் தான் அனைவருக்கும் உங்களின் பாட்டு கேட்கும்...!

    
   இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்... ஏழாம் கடலும், வானும் நிலமும், என்னுடன் விளையாடும் - இசை என்னிடம் உருவாகும்... இசை என்னிடம் உருவாகும்... என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்... என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்2 என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்...2 எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்2 ஏழாம் கடலும் வானும் நிலமும் என்னுடன் விளையாடும் - இசை என்னிடம் உருவாகும்... இசை என்னிடம் உருவாகும்... இசை கேட்டால் புவி அசைந்தாடும் - அது இறைவன் அருளாகும்... (படம்: தவப்புதல்வன்)            அசையும் பொருளில் இசையும் நானே... ஆடும் கலையின் நாயகன் நானே... எதிலும் இயங்கும் இயக்கமும் நானே2 என்னிசை நின்றால் அடங்கும் உலகே...! நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே2 அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா...? ஆடவா எனவே ஆடவந்ததொரு... பாடும் வாயினையே மூடவந்ததொரு... பாட்டும் நானே... பாவமும் நானே... பாடும் உனை நான் பாடவைப்பேனே...! கூட்டும் இசையும் கூற்றின் முறையும்... காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ...? (படம்: திருவிளையாடல்)        வாடை பூங்காற்று என்னைத் தீண்டும் - வாழ்க்கை யாவும் நீ வேண்டும்2 கடலோடு அலை போல உறவாட வேண்டும்... இலை மோதும் மலர் போல எனை மூட வேண்டும்... என் தேகம் எங்கும் உன் கானம் தாங்கும்... நீ வந்து கேளாமல் ஏங்கும் தமிழ்ச் சங்கம்... பாடவா உன் பாடலை... பாடவா உன் பாடலை... உன்னைக் காணாமல் கண்கள் பொங்கும் - அதுவே நெஞ்சின் ஆதங்கம்2 உனக்காக என் பாடல் அரங்கேறும் வேளை, நீ கேட்க வழி இல்லை இது என்ன லீலை...? பூ மேகம் இங்கே... ஆகாயம் எங்கே... நீ சென்ற வழி பார்த்து வாடும் உன் பூ இங்கே... பாடவா உன் பாடலை... பாடவா உன் பாடலை... என் வாழ்விலே ஓர் பொன் வேளை ஹோ2 (படம் : நான் பாடும் பாடல்) குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா...? சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா...? ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட... ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட... இங்கே நான் காத்திருக்க... என் பார்வை பூத்திருக்க... எங்கேயோ நீயிருந்து... என் மீது போர் தொடுக்க... கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்... மலையோரம் வீசும் காத்து... மனசோடு பாடும் பாட்டு - கேக்குதா ? கேக்குதா ?2 யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா... சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா... என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா... (படம் : பாடு நிலாவே) அடியே...! ஒரு தூக்கம் போட்டு நெடுநாள் தான் ஆனது... கிளியே பசும்பாலும் தேனும் வெறுப்பாகிப் போனது... நிலவே பகல் நேரம்போலே நெருப்பாக காயுது... நான் தேடிடும் ராசாத்தியே... நீ போவதா ஏமாத்தியே...? வா வா கண்ணே... இதோ அழைக்கிறேன்... துள்ளி எழுந்தது பாட்டு... சின்னக் குயிலிசை கேட்டு... சந்த வரிகளைப் போட்டு... சொல்லிக் கொடுத்தது காற்று... உறவோடு தான் அதை பாடணும்... இரவோடு தான் அரங்கேறணும்... துள்ளி எழுந்தது பாட்டு... சின்னக் குயிலிசை கேட்டு... (படம் : கீதாஞ்சலி) காதலில் தானே சிறு இதயம் அடிக்கடி துடிக்கிறது... - ஹஹஹ... கழுதையப் போல அவ நினைப்பும் மனசுல உதைக்கிறது... - ஹுஹு... பார்த்து பார்த்து ஏக்கம் அட தீர்ந்து போச்சு தூக்கம்... - ஐய பாவம் ஆசை மெல்லப் பார்க்கும் அது ஆடு ஒன்ன கேக்கும் - ம்ஹ்ஹ... கன்னிப்பொண்னா எண்ணி எண்ணிக் கண்ணு மூட முடியல - ச்ச்ச்ச்ச்... காதலத்தான் சொல்ல வந்தேன்... காள நெஞ்சும் சரியல - ஐய்யயோ... காலையில் கேட்குது - பூபாளம்... காதலன் பாடுற - தேவாரம்... மனச கெடுக்குது மல்லிகைப் பூவாளே... என் பாட்ட கேட்டா போதும்... போதும் போதும்... காதல் கொடி தன்னால் ஏறும்... ஏறும் ஏறும்... (படம் : சின்னதம்பி பெரியதம்பி) இதயம் என்றொரு ஏடெடுத்தேன்... அதில் எத்தனையோ நான் எழுதிவைத்தேன்2 எழுதியதெல்லாம் உன் புகழ் பாடும்... எனக்கது போதும்... வேறென்ன வேண்டும்...? பாட்டு வரும்... பாட்டு வரும்... உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால் - பாட்டு வரும் அதைப் பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்... அதைக் கேட்டுக் கொண்டிருந்தால் ஆட்டம் வரும்... அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்...(படம் : நான் ஆணையிட்டால்)
   பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்... நானதைப் பாடவில்லை... பாவையின் முகத்தைப் பார்த்தார் ஒருவர்... நானதைப் பார்க்கவில்லை2 நான் சொன்ன வார்த்தை அவர் மட்டும் கேட்டார்... சிரித்தார் பேசவில்லை... சிரித்தார் பேசவில்லை... அவர் சொன்ன வார்த்தை நான் மட்டும் கேட்டேன்... சிரித்தேன் காணவில்லை... சிரித்தேன் காணவில்லை... இருவர் நினைவும் மயங்கியதாலே... யாரோடும் பேசவில்லை... யாரோடும் பேசவில்லை... ஆடி முடிந்தது ஆவணி வந்தது பாடிய பைங்கிளி உள்ளம் மலர்ந்தது நாடகம்போலே தூது நடந்தது காதலர் கண்ணாலே...! (படம் : பாசமலர்)            ஆசைக்கு ஆசை வச்சேன்... நான் அப்புறந்தான் காதலிச்சேன் ஹோய்... ஓசையிடும் பூங்காற்றே நீதான் ஓடிப்போய் சொல்லிவிடு... வாழைப்பூ திரி எடுத்து... வெண்ணையிலே நெய் எடுத்து... ஏழை மனக் குடிசையிலே... ஏத்தி வச்சான் ஒரு விளக்கு... ஏத்தி வச்ச கைகளிலே... என் மனச நான் கொடுத்தேன்... நெஞ்சு மட்டும் அங்கிருக்க... நான் மட்டும் இங்கிருக்க... நான் மட்டும் இங்கிருக்க... நான் மட்டும் இங்கிருக்க... தாமரை அவளிருக்க... இங்கே சூரியன் நானிருக்க... சாட்சி சொல்லும் சந்திரனே... நீதான் ஓடிப்போய் தூது சொல்லு... பாட்டுக்குப் பாட்டெடுத்து... நான் பாடுவதைக் கேட்டாயோ...? சாட்சி சொல்லும் சந்திரனே... நீ போய் தூது சொல்ல மாட்டாயோ...? (படம் : படகோட்டி)        தாழம்பூவில் காணும் பொன்வண்ணம்... நாளும் வாழும் தோகைப்பூங்கன்னம்2 எங்கே நானென்று தேடட்டும்... உன்னை சிந்தாத முத்தங்கள் சிந்த2 காலம் கொண்டாடும் கவிதை மகள்... கவிதை மகள்... நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்... இசைவெல்லம் நதியாக ஓடும் - அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்... நாதத்தோடு கீதம் உண்டாக... தாளத்தோடு பாதம் தள்ளாட2 வந்தால் பாடும் என் தமிழுக்குப் பெருமை... வாராதிருந்தாலோ தனிமை2 அழகே உன் பின்னால் அன்னம் வரும்... அன்னம் வரும்... நான் பாடும் பாடல் நலமாக வேண்டும்... இசை வெள்ளம் நதியாக ஓடும் - அதில் இள நெஞ்சம் படகாக ஆடும்... (படம் : நான் ஏன் பிறந்தேன்)             தேவாரமும் படிச்சோம்... திருவாசகம் படிச்சோம்... தெரியாமத் திருக்குறளை நாம் படிச்சோம்... ஆனான படிப்பெல்லாம் அன்றாடம் படிச்சிப்புட்டு, புரியாம தெரியாம நாம் முழிச்சோம்... அறிவான ஆத்திச்சூடி கொடுத்தாளே ஒளவைப்பாட்டி, அதைக்கூட காகிதம்ன்னு கிழிச்சிப்புட்டோம்... நாடும் என்னாச்சி...? நம்ம ஊரும் என்னாச்சி...? அட பேசிப் பேசித் தான் நல்ல பொழுதும் போயாச்சி...! இந்த தேசம் - ரொம்ப மோசம்... - இதைப் பார்க்கும் போது இப்ப... என்னை பாடச் சொல்லாதே... நான் கண்டபடி பாடிப்புடுவேன்...! அத கேட்டா மடையனுக்கும் ஞானம் பொறந்திடும்...! மூடி கிடக்கும் பல கண்ணும் தொறந்திடும்...! (படம் : ஆண்பாவம்)
   மெல்லிய பூங்கொடி வளைத்து - மலர் மேனியைக் கொஞ்சம் அணைத்து2 இதழில் தேனைக் குடித்து - ஒரு இன்ப நாடகம் நடித்து...!2 எங்கும் பாடும் தென்றல் காற்றும் - நானும் ஒன்று தானே... இன்ப நாளும் இன்று தானே... பாடும் போது நான் தென்றல் காற்று... பருவ மங்கையோ தென்னங் கீற்று... எல்லைகள் இல்லா உலகம்... என் இதயமும் அது போல் நிலவும்2 புதுமை உலகம் மலரும் - நல்ல பொழுதாய் யாருக்கும் புலரும்2 எங்கும் பாடும் தென்றல் காற்றும் - நானும் ஒன்று தானே... இன்ப நாளும் இன்று தானே... பாடும் போது நான் தென்றல் காற்று... பருவ மங்கையோ தென்னங் கீற்று... (படம் : நேற்று இன்று நாளை)            காதல் கிளிகள் பறந்த காலம் - கண்ணில் தெரியும் நெஞ்சம் உருகும்2 கண்ணீர் கலங்கி கண்ணில் இறங்கி2 நெஞ்சில் விழுந்தால் சொந்தம் புரியும்2 ஒரே பாடல் உன்னை அழைக்கும்... உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்... ஒரே பாடல்... உன்னையறிந்தேன் என்னைக் கொடுத்தேன்... உள்ளம் முழுதும் எண்ணம் வளர்த்தேன்2 உன்னை நினைத்தே உலகில் இருந்தேன்... உன்னைப் பிரிந்தேன் என்னை மறந்தேன்2 ஒரே பாடல் உன்னை அழைக்கும்... உந்தன் உள்ளம் என்னை நினைக்கும்... ஒரே பாடல்... (படம் : எங்கிருந்தோ வந்தாள்)        பெண் : கோதை என் நெஞ்சிலே, என் குடும்பம் நிற்கின்றது... நல்ல சமையல் புரிகின்றது... ஆனால் சங்கீதம் புரியவில்லை... ஆண் : தாயின் தாலாட்டிலே, தினம் தோன்றும் சங்கீதமே2 நீயும் தாயல்லவா, இதில் ஏனோ சந்தேகமே... இதில் ஏனோ சந்தேகமே...? பெண் : கவிஞன் சொல்லாதோ... தமிழ்க் கவிதை காணாததோ... இதில் எதை நான் சொல்வேனம்மா... இந்த சபையை வெல்வேனம்மா... ஆண் : நீந்தும் நேரம் வந்தால், உடன் நீச்சல் அங்கே வரும்2 பாடும் ஆசைவந்தால் எந்த பாட்டும் சபையில் வரும்... எந்த பாட்டும் சபையில் வரும்...! பெண் : நானா...? ஆண் : ம்... பெண் : பாடுவது நானா...? நானும் இளவயது மானா...? (படம் : நூல்வேலி)             பாட்டில் சுவை இருந்தால் - ஆட்டம் தானே வரும்... கேட்கும் இசைவிருந்தால் - கால்கள் தாளம் இடும்2 தன்னை மறந்தது பெண்மை - துள்ளி எழுந்தது பதுமை2 நூலளந்த இடைதான் நெளிய - நூறு கோடி விந்தை புரிய... நூறு கோடி விந்தை புரிய... பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்... பாதம் சிவந்திருக்கும் - பாவை செந்தாமரை... பார்வை குனிந்திருக்கும் - புருவம் மூன்றாம் பிறை... புத்தம் புது மலர்ச் செண்டு... தத்தி நடமிடக் கண்டு2 மேடை வந்த தென்றல் என்பேன்... ஆடை கொண்ட மின்னல் என்றேன்... ஆடை கொண்ட மின்னல் என்றேன்... பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்... பாலுடன் தேன் கனி சேர வேண்டும்... கலைகளைத் தெய்வமாய் காண வேண்டும்... கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்...? பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்... (படம் : கண்ணன் என் காதலன்)
   நான் பாடிய முதல் பாட்டு - இவள் பேசிய தமிழ் கேட்டு...!2 நான் கவிஞனொன்றானதெல்லாம் - இந்த அழகியின் முகம் பார்த்து...!2 கள்ளில் உண்டாகும் போதை - இவள் சொல்லில் உண்டாவதேனோ...?2 தொட்டால் உண்டாகும் இன்பம் - கண்கள் பட்டால் உண்டாவதேனோ...?2 இவள் காலடி நிழல் படும் நேரம் - மலர்போலே முள்ளும் மாறும்... கோவில் கொள்ளாத சிலையோ... இளம் கிளிகள் கொய்யாத கனியோ2 ஏட்டில் இல்லாத கவியோ... இவள் எழுத்தில் வராத பொருளோ2 மடல் வாழையைப் போல் இவள் மேனி... நகை சிந்தும் அழகு ராணி... நான் பாடிய முதல் பாட்டு... இவள் பேசிய தமிழ் கேட்டு...! நான் கவிஞனொன்றானதெல்லாம் - இந்த அழகியின் முகம் பார்த்து...! (படம் : ஐந்து லட்சம்)            உள்ளத்தை உன் கையில் அள்ளி தந்தேனே... நான் வாங்கும் மூச்செல்லாம் என்றும் நீ தானே...! ஆத்தோரம் கொஞ்சிடும் தென்னஞ்சிட்டுத்தான்... அங்கே வா பேசலாம் அச்சம் விட்டுத்தான்...! இளஞ்சிட்டு உனை விட்டு - இனி எங்கும் போகாது... இரு உள்ளம் புது வெள்ளம் - அணை போட்டால் தாங்காது... ஆஆஆ யா... மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு... மலரும் மலரும் புது தாளம் போட்டு... புதுசா புதுசா அதைக் காதில் கேட்டு... புழுவாய் துடித்தாள் இந்த மின்னல் கீற்று... ஆஆஆ யா... (படம் : அண்ணா நகர் முதல் தெரு)        மேக வண்ணம் போல மின்னும் ஆடையினாலே... மலை மேனி எல்லாம் மூடுதம்மா நாணத்தினாலே2 பக்கமாக வந்த பின்னும் வெட்கம் ஆகுமா...? இங்கே பார்வையோடு பார்வை சேர தூது வேண்டுமா...? மாலை அல்லவா... நல்ல நேரம் அல்லவா... இன்னும் வானம் பார்த்த பூமி போல வாழலாகுமா...? பாட்டுப் பாடவா...? பார்த்துப் பேசவா...? பாடம் சொல்லவா...? பறந்து செல்லவா...? பால் நிலாவைப் போல வந்த பாவை அல்லவா...! நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா...! (படம் : தேன்நிலவு)             என்ன பாட்டுப் பாட ? ம்... என்ன தாளம் போட ? ஒண்ணுமே புரியலேயே... ம்... என்ன பாட்டுப் பாட...? ம்... என்ன தாளம் போட...? (4) வண்டி ஓடும் சத்தம். பாட்டுக்கேத்த சந்தம்2 மாடு ரெண்டும் தாளம் போட கொம்பை கொம்பை ஆட்டுது... நிக்காதே ஓடு... இது சர்க்காரு ரோடு2 பள்ளிக்கூடம் நேரமாச்சி, வேகமாக போகணும்2 இந்தா டூர்ர்ர்ர் ஹேஹே... வண்டி பூட்டினா சண்டி ஆகுறே... காஃபி ஹோட்டல பாத்து நிக்கிறே... தன்னானே னானா... தன்னானே னானா... தன்னானே னானா... தன்னானே னானா... வைக்காதே ஆச... அது வெங்காய தோச2 அங்கேயும் இங்கேயும் கண்ணை நீ வைக்காதே... (படம் : சக்களத்தி)
   கண்ணீரை நான் எங்குக் கடன் வாங்குவேன்...? அது கடனாக வந்தாலும் தடை போடுவேன்... நியாயங்கள் தெளிவாக நாளாகலாம்... நான் யாரென்று அப்போது நீ காணலாம்...! உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்... இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்... எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்... நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்... எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்... நான் வாழ யார் பாடுவார்...? என் பாடல் நான் பாடப் பலர் ஆடுவார்... இனி என்னோடு யார் ஆடுவார்...? (படம்: எங்க மாமா)  இன்று வந்த புது வசந்தம் என்றும் தங்கும்... தென்றல் எங்கள் பாதைகளில் பூவை தூவும்... குயில்களுக்குத் தடைகள் போடும் மனிதர் இங்கே யாரு...? குரல் கொடுத்தால் நிலவின் முதுகில் உரசும் நாளை பாரு...! பயணங்கள் எங்கே என்று பாட்டில் கூற முடியாது... இசையென்னும் கடலின் ஆழம் எங்கே என்று தெரியாது... பாடுவதால் வாழுகிறோம்... சோகமில்லையே... பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா...? பால் நிலவைக் கேட்டு...! வார்த்தையிலே வளைக்கட்டுமா...? வானவில்லைச் சேர்த்து...! (படம் : புது வசந்தம்)  போகும் பாதை தூரமே... வாழும் காலம் கொஞ்சமே... ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா2 இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்2 கேளாய் பூ மனமே ஓஓஓஓ... சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... ஆகாயம் பூக்கள் தூவும் காலம்... உள்ளம் என்னும் ஊரிலே... பாடல் என்னும் தேரிலே... நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே...2 எந்தன் மூச்சும் இந்தப் பாட்டும் அணையா விளக்கே...2 கேளாய் பூ மனமே ஓஓஓஓ... சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்... ஆகாயம் பூக்கள் தூவும் காலம்... (படம் : உதயகீதம்) வற்றாத கங்கை என்றும்... வாகான பொன்னி என்றும்... கட்டாத ஆளில்லையப்பா... ஆனாலும், கத்தாழை விளையுதேயப்பா...! நாம் பொறந்த சீமையிலே நாம செஞ்ச பாவம் இல்லே... அப்பனுக்கும் அம்மாவுக்கும் ஆசை வந்த தோஷமப்பா2 கங்கையிலே முழுகிவிட்டு காவி கட்டி போவோமப்பா...! பாட்டு ஒன்னு பாடு தம்பி, பசிய கொஞ்சம் மறந்திருப்போம்... பாரதத்தின் தலைநகரில் தேடு, தேடு... வேலை தேடு தம்பி...! பாரதத்தின் பெருமை தன்னை பாடு, பாடு... சோறு எதுக்கு தம்பி...? (படம் : வறுமையின் நிறம் சிவப்பு)        உச்சந்தல உச்சியில... உள்ளிருக்கும் புத்தியில பாட்டு... இது அப்பன் சொல்லி வந்ததில்ல... பாட்டன் சொல்லித் தந்ததில்ல நேத்து... எப்படிதான் வந்ததுன்னு சொல்லுறவன் யாரு...? இதில் தப்பிருந்தா என்னுதில்ல - சாமிகிட்ட கேளு...! கண்மாயி நெறஞ்சாலும் - அதைப் பாடுவேன்... நெல்லு கதிர் முத்தி முளைச்சாலும் - அதை பாடுவேன்... புளியம் பூ பூத்தாலும் - அதைப் பாடுவேன்... பச்ச பனி மேலே பனி தூங்கும் - அதைப் பாடுவேன்... செவ்வானத்தைப் பார்த்தா... சின்ன சிட்டுகளைப் பார்த்தா... செம்மறியைப் பார்த்தா... சிறு சித்தெறும்ப பார்த்தா... என்னைக் கேட்காமலே பொங்கிவரும்... கற்பனைதான் பூத்து வரும்... பாட்டு... தமிழ்ப் பாட்டு... (படம்: சின்னத்தம்பி)             பச்சை அரிசி என்னும் பற்கள் கொண்ட உந்தன் புன்சிரிப்பு... நெஞ்ச பானையிலே நித்தம் வேகிறது உன் நினைப்பு2 வார்த்தை தென்றல் நீ வீசும்போது - ஆடும் பூவாய் ஆனேன் மாது... இதழோரம் சில்லென்று நனைகின்றது... சிந்தும் தேன் கூட சிந்தொன்று புனைகின்றது... எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி...! உன்னை பாராமலே மனம் தூங்காதடி... வலம்புரிச் சங்கைக் கூட உன் கழுத்து மிஞ்சுதடி வஞ்சி மலரே... ஓ... நிலவதன் தங்கை என உன் ஜொலிப்பு சொல்லுதடி வைர சிலையே... எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி...! உன்னை பாராமலே மனம் தூங்காதடி... (படம் : உறவைக் காத்த கிளி)
                                              

முதல்முறையாக எனது பதிவில் mp3 இணைத்த போது செய்தவற்றிற்கும், இப்போதும் சில மாற்றங்கள் உள்ளது... இனியும் மாற்றம் வரலாம்... படம், காணொளி ஐகான் போன்று mp3-க்கும், கூகுள் மெனக்கெட்டு ஒரு ஐகான் வைத்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்...! ம்...! ஆனால், இதுவரை செய்தது படிப்படியான சில சொடுக்குகளில் வேலை முடிந்து விடும்... நாம் மெனக்கெடுவோம்...! இது தான் நமது ரசனையான வேலையே : நேயர் விருப்பம் என்று பதிவிற்குத் தலைப்பு வைத்து விட்டு, இந்தப் பதிவிற்கேற்ப ஞாபகம் வந்த சில "பாட்டு / பாடல்" என்று வரும் பாடல்களை சொல்லவில்லை என்றால், அடியேன் மனதைச் சமாதானம் செய்ய முடியாதென்பதால், மேலுள்ள "பா" என்பதில் அம்புக்குறியிட்ட இடத்திலிருந்து சுட்டியைச் சொடுக்காமல் பாடலை ரசித்து விட்டு, சுட்டியை வேறு இடத்திற்கு நகர்த்தி விட்டு, மீண்டும் அடுத்த பாடலை ரசிக்கச் சுட்டியைக் கொண்டு செல்லவும்... எப்பூடி...? எந்தப் பாடல் உங்களைக் கவர்ந்தது...?

இணையத்தில் நிறைய Online Audio Cutter & Joiner இணையத்தளங்கள் உள்ளன... அவற்றைப் பயன்படுத்திப் பதிவிற்கேற்ப பாடல்களை நினைவில் வைத்துக் கொண்டு, நம் கணினியில் இல்லாத பாடல்களை எல்லாம் இணையத்தில் தேடி, அவைகளையும் கணினியில் பதிவிறக்கம் செய்து விட்டு, ஒவ்வொரு பாடலின் முக்கியமான வரிகளை (1) கட் செய்து (2) இணைத்து, (3) வெளியிட்டும் ரசிக்கலாம்... மேலே "பா" என்பதிலுள்ள பாடல்களை Mix செய்து உங்களின் தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்... ரசிக்க வருகிறேன்...
இன்னிசை நின்று போனால், என் இதயம் நின்று போகும்-இசையே உயிரே... எந்தன் தாய்மொழி இசையே, என் இமைகள் துடிப்பதும் இசையே, எங்கும் இசையே... மௌனம் மௌனம் என் நெஞ்சை அடைக்கும்; கீதம் கேட்டால் அது மீண்டும் துடிக்கும்; ஐம்புலன்கள் எந்தன் இருப்பு; செவி மட்டும் தான் ரொம்பச் சிறப்பு; நெஞ்சில் உள்ளது ஜீவன் பிறப்பு; ஆனால் காதில் உள்ளது ஜீவன் எனக்கு; இசையோடு வந்தேன்; இசையோடு வாழ்வேன்; இசையோடு போவேன்; இசையாவேன்...! (படம் : முகவரி)

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி... dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி
  இன்றே முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 2. ஈதல் இசைபட வாழ்தல்! ஐடியாக்களை ஈந்து விட்டீர்கள்! இந்த HTML படுத்தல்தான்... ம்ம்ம்ம்...

  பதிலளிநீக்கு
 3. விளக்கம் அருமை முயல்கின்றேன் சார்! நன்றி விளக்க பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 4. DD மிக்ஸ் கூட இப்படித்தான் நடக்கிறதா? ;-)

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்
  அண்ணா.

  விளக்கம் நன்றாக உள்ளது....பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 6. இரண்டு மூன்று தடவை படித்து உள் வாங்கியபிறகு தான் நீங்கள் சொன்னபடி செய்யவேண்டும். உபயோகமான தகவலுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. பயன் உள்ள பதிவுகளே நானும் முயற்சிக்கிறேன்.
  நன்றி வாழ்த்துக்கள் ...!

  பதிலளிநீக்கு
 8. இசை பிரியர்களுக்கு இன்னிசை விருந்தாகும் பதிவு, மிக்க நன்றி !

  பதிலளிநீக்கு
 9. இது பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பதிவு என நினைக்கிறேன்.
  எளிதான அருமையான விளக்கம்.

  மிகுந்த பாராட்டுக்கள்.

  God Bless You

  பதிலளிநீக்கு
 10. நுட்பமான விஷயங்கள். பயன்தரத் தக்கன. இந்த முறையை நான் முயற்சித்ததில்லை,இனி இதையும் பயன்படுத்திக் கொள்வேன். நன்றி DDசார்

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள விளக்கங்கள்...
  எளிமையாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 12. உங்களின் இணையம் பற்றிய அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது .
  புதிது புதிதாய் கண்டுபிடிப்புகள் ?உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆர்வமும் நேரமும் செலவு செய்ய முடிகிறது.பதிவு பயனுள்ளது நன்றிங்க நண்பரே

  பதிலளிநீக்கு
 13. நான் விரும்பி உங்களிடம் கேட்டது .
  மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி
  செய்வது சிரமமாக உள்ளது .நீங்கள் வந்து செய்துக் கொடுங்கள்

  பதிலளிநீக்கு
 14. அன்பின் தனபாலன்..
  தாங்கள் கூறியபடிக்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.. வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 15. விளக்கம்லாம் புரியுது. ஆனா, இதெல்லாம் செஞ்சுப் பார்க்க பயமா இருக்கேண்ணா!

  பதிலளிநீக்கு
 16. மிக மிக பயனுள்ள பதிவு. சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் பயன்படுத்த முயல்கிறேன். நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 17. எனக்கு ஒண்ணும் புரியலை. பொறுமையாய் படித்து செயல்படுத்திப் பார்க்க நேரமும் இல்லை.

  பதிலளிநீக்கு
 18. எனக்கும் இந்த முறை புதியதாகவும் எளியதாகவும் தோன்றுகிறது. இதை பயன்படுத்திப் பார்க்கிறேன். மிக மிகப் பயனுள்ள, அவசியமான தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பா.

  பதிலளிநீக்கு
 19. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 20. எனக்கு ரொம்ப நாளாக தெரியாமல் இருந்த விஷயம் இது. மிக அழகாகவும், எளிமையாகவும் புரிய வைத்துவிட்டீர்கள்.
  மிக்க மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 21. படிப்படியாக விளக்கும் உங்களுடைய திறமை வியப்பளிக்கிறது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 22. ONLY MP3 FORMAT FILES AND NOT OTHER FORMATS LIKE WMA
  அதற்கு இந்த இடத்திலே வகை இருக்கிறதா ?

  இருந்தாலும், மற்ற பார்மட்களில் பதிவு செய்யப்பட்டவைகளை எம்பி 3 பார்மேட்க்கு மாற்றி பதிவு செய்யவேண்டும் போல் இருக்கிறது.

  நான் என்னுடைய இசை கோப்புகளை www.soundcloud.com வழியாக இணைக்கிறேன்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 23. மிகவும் பயனுள்ள பதிவு.பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்கள் "நேயர்விருப்பத்தில்" தந்திருக்கும் எல்லாப்பாடல்களுமே அருமையான, விருப்பமான பாடல்கள்தான். வாழ்த்துக்கள் & நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 24. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா.விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது. நானும் கரகாட்டகாரன் தான்....

  ஒரே நேரத்தில் இரண்டுபேருமே அவரை யூஸ் பண்றோம் கரகாட்டக்காரன் மவுசு இன்னும் குறையல போலிருக்கு....

  பதிலளிநீக்கு
 25. மிகப் பொறுமையாக அருமையாக விளக்கி உள்ளீர்கள். சாவகாசமா இன்னொரு நாள் செய்து பார்க்கணும். எப்பவும் பிள்ளைங்களையே டிப்பெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். சில சமயம் விழாக்களுக்குப் போயிட்டு வந்த வீடியோ அல்லது ஆடியோவைப் பகிர நான் அவங்களைத்தான் எதிர்பார்ப்பேன். வீடியோவை ஸ்பிலிட் பண்ணி வேற அப்லோட் பண்ணனும். ஏன்னா 20 நிமிஷம் எல்லாம் ப்லாகில அல்லது ஃபேஸ்புக்குல டவுன்லோட் ஆக மாட்டேங்குது. என் பையன் பாட்டுக் கேட்க சவுண்ட் க்ளவுட் அப்பிடின்னு ஒன்னுல போட்டு வச்சிருக்கான். :)நன்றி சகோ பகிர்வுக்கு :)

  பதிலளிநீக்கு
 26. தகவல் நன்றாக இருக்கிறது. எனக்கு தான் உடனே புரியவில்லை.மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டு விலாவாரியாக எழுதுவதை நாங்கள் தான் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .காரணம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஒரு மனச் சோர்வு புதிய எதையும் செய்து பார்க்க பயம் இவையே .முயற்சிக்கிறேன்

  பதிலளிநீக்கு
 28. மிகவும் பயனுள்ள பதிவு.
  பகிர்வுக்கு மிக்க நன்றி DD.
  Best wishes.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 29. இசையோடு இசைந்து வாழ வழிகாட்டியதற்க்கு நன்றி !
  தம+1

  பதிலளிநீக்கு
 30. உங்களை ரொம்பவும் பாராட்ட வேண்டும், தனபாலன்! படிப்படியாக நிதானமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் பதிவுகளையும் ஒரு பக்கம் திறந்து வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லியதை எல்லாம் செய்துபார்க்க வேண்டும்.
  படிக்கும்போது புரிவது, நடைமுறையில் செய்யும்போது வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

  பதிலளிநீக்கு
 31. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு. தாங்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தருவது போல மிகவும் அழகாக சொல்கிறீர்கள். இருப்பினும் போதிய நேரமின்மை காரணமாக முழுமையாக உங்களைப் பின்தொடர்ந்து அதை கடைபிடிப்பது என்பது எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது. எப்படியும் தாங்கள் கூறும் உத்திகளை நாங்கள் பயன்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுண்டு. நன்றி.

  பதிலளிநீக்கு
 32. சிறந்த பயன்தரும் பகிர்வு - இனி
  சிறந்த பாடல்களை வலையில் - பலர்
  மறந்து விடாமல் இணைப்பரே!

  பதிலளிநீக்கு
 33. @sury Siva அவர்களுக்கு // ONLY MP3 FORMAT FILES AND NOT OTHER FORMATS LIKE WMA
  அதற்கு இந்த இடத்திலே வகை இருக்கிறதா ? இருந்தாலும், மற்ற பார்மட்களில் பதிவு செய்யப்பட்டவைகளை எம்பி 3 பார்மேட்க்கு மாற்றி பதிவு செய்யவேண்டும் போல் இருக்கிறது.//

  ஆமாம் ஐயா... இணையத்தில் எளிதாக மாற்ற : மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது இது → http://www.convertfiles.com ← இங்கேயும் சொடுக்கலாம்...

  பதிலளிநீக்கு
 34. ஒரு சந்தேகமும் இல்லை பகிர்வைப் படித்து முடிக்கும் வரைக்கும்
  யாமிருக்கப் பயம் ஏன் என்பது போல் தங்களின் முகம் மட்டுமே
  வந்து வந்து போனது சகோதரா இந்த வேலையைச் செய்து முடிக்கப்
  போறவரே நீங்க தானே?.. அப்படி இருக்க நா(ங்க)ன் ஏன் கஸ்ரப் படணும் ?..:))))
  அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா விரைவில்
  அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் :))) மிக்க நன்றி பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 35. எளிமையாக புரியும் படியான விளக்கம்! என் இணைய வேகம் ஸ்லோவாக இருப்பதால் கொஞ்சம் ஸ்லோவாகத்தான் முயற்சித்து பார்க்க வேண்டும்! பயனுள்ள பதிவிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 36. மிக நன்றி தனபாலன். அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் .என் போல கைநாட்டுகளுக்குப் புரிதலில் சிரமம். முயற்சி செய்கிறேன் மா.இவ்வளவு உழைப்பும் கரிசனமும் உங்களிடம் தான் காண முடிகிறது.வளமுடன் இருங்கள்.

  பதிலளிநீக்கு
 37. அன்பு டிடி நன்றாகத்தான் சொல்லிக் கொடுக்கிறீர்கள். இருந்தாலும் இந்த html விஷயங்கள் பயமுறுத்துகிறது நன்றி

  பதிலளிநீக்கு
 38. நான் ஒரு டியுப் லைட்.

  கொஞ்சம் மெதுவாகத்தான்....
  இரண்டு மூன்று முறை படித்தாலும்...ம்ம்ம்...

  எனக்கு நீங்களே அனைத்தையும் செய்து கொடுத்துவிடுங்கள் தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 39. அழகான விளக்கம், இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் ..... உதவிக்கு எண்ணைக் கொடுத்து .... பெரிய விஷயம்தான். வளரட்டும் உங்கள் உதவும் பணி !

  பதிலளிநீக்கு
 40. எனது வேண்டுகோளை ஏற்று வழிமுறைகளை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றி தனபாலன். விரைவில் செயல்படுத்திப் பார்க்கிறேன். கேட்டதும் கொடுக்கும் தங்கள் பரந்த மனத்துக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 41. சிறப்பான தகவல்கள்....

  ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்.........

  பதிலளிநீக்கு
 42. "பல்சக்கர ஐகான்" நல்ல சொல் தேர்வு...!
  மிகவும் பயனுள்ள தகவல்கள்... முயற்சி செய்து பார்க்கிறேன்...

  வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 43. மிகவும் எளிதாக இருக்கிறது நீங்கள் சொல்லியதை படிக்கும் போது அதை செயலுக்கு கொண்டு வந்து பார்க்க வேண்டும்.

  வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 44. வணக்கம் நண்பர்களே

  உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

  பதிலளிநீக்கு
 45. மிகவும் பயனுள்ள பதிவு. இதை முயற்சித்து பார்க்கிறேன் (என் மகனின் உதவியுடன்). பகிர்வுக்கு நன்றி சகோதரரே.

  வாழ்த்துக்களுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 46. மிகவும் எளிமையான பயனுள்ள விளக்கங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 47. தனபாலன் சார். எனக்கெல்லாம் அரை மாத்திரை கம்மி. இந்த சப்ஜெக்ட் எல்லாம், புரிய மாட்டேன் என்கிறது. யாராவது, டியூசன் வகுப்பு எடுக்கிறார்களா?

  பதிலளிநீக்கு
 48. அருமையான பதிவு. நான் எனது சோதனை வலைப்பதிவில் முயற்சித்து பார்த்தேன். அருமையாக வேலை செய்கிறது. நன்றி. சோதனை ஓட்டத்தை காண: http://suttapalam2012.blogspot.com/2014/05/blog-post.html எனது வலைப்பதிவில்: http://newsigaram.blogspot.com/2014/04/vetkathaik-kettaal-enna-tharuvaai.html வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

  பதிலளிநீக்கு

 49. ஏதோ....விஞ்ஞான லேபுக்குள் வந்த போல் இருக்கிறது. அத்தனை டெக்னிக்கல் வார்த்தைகள். ரொம்ப யூஸ்புல்!.

  பதிலளிநீக்கு
 50. பள்ளிக்கூடம் போகாமலே பாடம் புரிகிறது... நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 51. நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?

  பூபதி துபை

  பதிலளிநீக்கு
 52. நன்றி தனபாலன் சார் . பயனுள்ள பதிவு . உங்களின் ஆலோசனைப் படி தொடர்ந்து முயற்சி செய்து நான் வெற்றியும் பெற்றேன் . என் பதிவுக்கு நீங்கள் வந்து கருத்துரையிட்டால் நலம்.

  http://puthukaatru.blogspot.in/2015/01/6.html

  பதிலளிநீக்கு
 53. tried but player is blank not playing. in html code first error it says https and http mixed error is there, is gmmodules is the player website think that is not working, any instructions how to place the player in working mode

  பதிலளிநீக்கு
 54. மிக்க நன்றி தனபாலன். சார் மிகவும் பயனுள்ள கட்டுரை நன்றி

  பதிலளிநீக்கு
 55. எதேச்சையாக இந்த blogspot இன்று தெரிய வந்தது! அட இவ்வளவு நாட்கள் நாம் வீணாக்கி விட்டோமே என்று வருந்தினேன்! இனிய தமிழில் எவ்வளவு அருமையாக விளக்குகிறீர்கள்! மிக்க நன்றி! தொடரட்டும் தங்கள் பனி! அவ்வபோது இனி தொந்தரவு செய்யலாம்! Ravichandran R

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.