🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...!


வணக்கம் நண்பர்களே... வீட்டில் இரண்டு குழந்தைகள்... மூத்தது பெண்... இளையது ஆண்... இருவருக்கும் விடுமுறை இருக்கும் நேரங்களில், வேறென்ன...? ஓயாத சண்டை தான்... பெண் குழந்தை ஏதாவது ஒன்றிக்காகவும், ஆண் குழந்தை அதற்கு எதிராகவும் சண்டையிடுகின்றன... வரவேற்பறையில் தந்தையும் தாயும் அமர்ந்திருக்கின்றனர்...


குழந்தைகள் இருவரும் தந்தையிடம் வந்து முறையிடுகின்றனர்... அந்தத் தந்தையால் தான் பெற்ற இரு குழந்தைகளுக்கும் ஏற்றுக் கொள்ளுமாறு தீர்ப்பு சொல்ல முடியுமா...? தடுமாடுகிறார்... பெண் குழந்தைக்கு ஏற்ற வண்ணம் தீர்ப்பு சொல்கிறார்... பையன் கோபித்துக் கொண்டு படுக்கை அறைக்குச் சென்று படுத்து அழுகின்றான்... அவனைச் சமாதானம் செய்யத் தாய் கிளம்பிப் போகிறாள்... அன்றாடம் நம் ஒவ்வொரு வீடுகளிலும் அரங்கேறுகிற காட்சி தான் இது...

ஐ... சண்டைன்னு கேள்விப்பட்ட உடனேயே வந்துடுவோம்லே... அதென்ன பெண் குழந்தைன்னா அப்பா... ஆண் குழந்தைன்னா அம்மா...

அதை பிறகு யோசிப்போம் மனசாட்சி ! சுருக்கமாக : ஒரு தந்தை வாழ்வது - மகள்(கள்) இந்த உலகத்தில் வாழும் வரை அவர்களின் மனதில் தான்...!

அது சரிதான்... விசயத்துக்கு வா... ஹேஹே... இரண்டு குழந்தைகளுக்கே ஏற்ற மாதிரி நல்லவனாக நடந்து கொள்ள முடியலே... பிறகெப்படி ஒரு மனிதனால் எல்லா மனிதர்களிடமும் ஏற்ற வண்ணம் நல்லவனாக நடந்து கொள்ள முடியும்...? வீடுகளில், அலுவலகங்களில், நிர்வாகத்தில், எல்லோருக்கும் நல்லவனாக நடந்து கொள்ள முடியுமா ஒரு மனிதனால்...?

சிக்கலான விசயம் தான்... நிர்வாகத்தில் இதை எதிர்பார்ப்பதும் கடினம் தான்... பிரச்சனைகளைப் பொறுத்து நல்ல விசயங்களுக்காக நாம் சார்ந்து நின்றால், கெடுதல் செய்கிறவர்களுக்கு எதிராகப் போக வேண்டிய சூழ்நிலை வரலாம்... நன்றாக வேலை செய்பவர்களைப் பாராட்ட நேர்ந்தால், வேலை செய்யாத சோம்பேறிகளுக்குப் பிடிக்காதவர்களாக ஆக வேண்டிவரும்...

எதையுமே கண்டுக்காம இருந்தா, நீ ரொம்ப நல்லவன்...!

ஓஹோ...! ஒரு நல்ல மனிதனுக்கு அது அடையாளம் இல்லை...

தெனாலிராமனை நடுவராக - ஒரு வழக்காடு மன்றம்... ஒரு பக்க அணியில் ஒருவர் அவரது அணிக்காக அரைமணி நேரம் பேசினார்... தெனாலிராமன், "சபாஷ்..! நீங்க சொல்றதும் சரி...!" எதிரணியில் ஒருவர் முக்கால் மணி நேரம் பேசினார்... தெனாலிராமன், "சபாஷ்..! நீங்க சொல்றதும் சரி...!" பார்வையாளர் ஒருவர் எழுந்து தெனாலிராமனிடம், "அதெப்படிங்க இரண்டு பேரும் சொல்றதும் சரியா இருக்கும்...?" தெனாலிராமன் அவரிடமும் சொன்னார் : "சபாஷ்..! நீங்க சொல்றதும் சரி...!"

இப்படி இருந்தால் தான் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியும்... ஒன்று தெரியுமா...? நாம் மட்டுமல்ல... நம்மைப் படைத்த ஆண்டவனால் கூட எல்லோருக்கும் நல்லவராக நடந்து கொள்ள முடியாது தான் உண்மை... வருந்துகிறவர்களுக்கு ஆதரவாகவும், வருத்துகிறவர்களுக்கு எதிராகவும் தான், அவரவர் மனதை ஆளும் ஆண்டவனால் கூட செயல்பட முடியும்... வண்ணம் பூசப்பட்ட சுவரில் ஒரே ஒரு சிறு கரும் புள்ளி பெரிதாகத் தெரிபவர்களிடமும், வீண் வாதம் செய்பவர்களிடமும், "ஆமாம் சாமி" சொல்லிவிட்டு நகர்வது நல்லது... எல்லோருக்கும் நல்லவனாக நடப்பதை விட, நமக்கு நல்லவனாக நடப்பது / இருப்பது மட்டுமே சாத்தியம் ! அதுவே உத்தமமும் கூட ! அதே போல் நம்மை மாற்றிக் கொள்வதும், திருந்துவதும் !

"எல்லோரிடமும் நல்லவனாக நடிப்பதை விட" என்று இருக்க வேண்டுமோ...?

அது சரி, இன்றைக்குப் பலவற்றிலிருந்து தப்பிக்க நடிக்க வேண்டிய சூழல்...! ஆனால், அவரவர் மனசாட்சி கேட்கும் உண்மைகளிடமிருந்து தப்பிக்க முடியுமா ? என்ன நண்பர்களே... சபாஷ்..! நீங்க சொல்லப் போறதும் சரி...!© படித்தால் மட்டும் போதுமா கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன், P.B.ஸ்ரீனிவாஸ் @ 1962 ⟫

உள்ளம் சொன்னதை மறைத்தவன் இல்லை... ஊருக்குத் தீமை செய்தவனில்லை...2 வல்லவன் ஆயினும் நல்லவன்2 நல்லவன் எனக்கு நானே நல்லவன்... சொல்லிலும் செயலிலும் நல்லவன்2 (படம் : படித்தால் மட்டும் போதுமா...?)

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. எல்லோருக்கும் நல்லவராக இருப்பதை விட, நமக்கு நாமே நல்லவராக இருப்பது உத்தமம்.

  உண்மை ! உண்மை ! அருமையான பதிவு.பகிர்வுக்கு நன்றிகள் ஐயா.

  பதிலளிநீக்கு
 2. எல்லோருக்கும் எல்லா சமயத்துலயும் நல்லவனா யாராலயும் இருக்க முடியாது!

  ஒரு பிரச்னை என்று வரும்வரை எல்லாஒருக்கும் நல்லவனாக வாழலாம். பிரச்னை இல்லாமல் பார்த்துக் கொள்வது நம் கைகளில்! :))))  பதிலளிநீக்கு
 3. முடியாது

  அதற்காகத்தான் சாம தான பேத தண்டம் என்னும் நான்கு வழிகளை நம் முன்னோர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள்

  ஒவ்வொருவரின் அடிப்படைக் குணத்திற்க்கேற்றவாறு,அவரவர் திறமைகளுக்கு ஏற்றவாறு .அதில் ஏதாவது ஒரு வழியைக் கடைபிடித்தால் நன்றாக் நிர்வாகம் செய்யமுடியும்.

  பதிலளிநீக்கு
 4. நம்மில் பலரும் சூழ்நிலைக்கேற்ப பல முகமூடிகளை அணிந்துக்கொண்டு திறிகின்றோம். எனவேதான் குழந்தை குடிக்கும் பால், வியாதிகளை குணப்படுத்தும் மருந்து, விவசாயத்திற்கு பயன்படும் உரம் என்று எல்லாவற்றிலும் கலப்படம் செய்கிறோம்.
  தேசத்தந்தை காந்தியாலேயே "எல்லோரிடமும் நல்லவனாக" இருக்க முடியவில்லை என்பதே நிதர்ச்சனம்!

  பதிலளிநீக்கு
 5. எல்லோருக்கும் நல்லவங்களா இருக்க முயற்சிப்பதெல்லாம் வேலைக்காகாதுங்க. முதலில் நம் மனசாட்சிக்கு நல்லவங்களா இருக்க முயற்சிப்போம். பாருங்க, நீங்களே சொல்லிட்டீங்க நான் சொல்வதும் சரிதானென்று !

  குழந்தைகள் அழகோ அழகு!

  பதிலளிநீக்கு
 6. சூழ்நிலைக்கேற்ப நட்ந்துகொள்ள வேண்டும்..!

  பதிலளிநீக்கு
 7. நமக்கு நல்லவனாக நடப்பதுதான் சாத்தியம் அதுவே உத்தமம்.
  உண்மை ஐயா. அருமையான கருத்து.
  நன்றி ஐயா

  பதிலளிநீக்கு
 8. நமக்கு நல்லவனாக இருப்பது மட்டுமே சாத்தியம்.

  பதிலளிநீக்கு
 9. தெனாலிராமன் கதையில் வருவதுபோல் எல்லாருக்கும் ஆமாம் சாமி போட்டால்தான் நல்லவர்கள் போலும்.

  பதிலளிநீக்கு
 10. நல்லவனுக்கு நல்லவனாக ,கெட்டவனுக்கு கெட்டவனாக வாழ்வதில் தவறில்லை !
  த ம 3

  பதிலளிநீக்கு
 11. சபாஷ், நீங்க சொல்றதும் சரிதான் DD..! ;-)

  பதிலளிநீக்கு
 12. பெண் குழந்தைகளுக்கு எப்போதுமே அப்பா தான். இதோ, இந்த பின்னூட்டம் எழுதும்போது கூட ஏன் மகள் ஏன் மடியில் அமர்ந்திருக்கிறாள்.

  நீங்க சொல்றதும் ரொம்ப சரி...

  பதிலளிநீக்கு
 13. "சபாஷ் - நீங்க சொல்றதும் சரிதான்"
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  பதிலளிநீக்கு
 14. எல்லோருக்கும் நல்லவனாக நடப்பதைவிட நமக்கு நல்லவனாக நடப்பதும்/ இருப்பதும் முக்கியம். --அதுதான் நல்லவழியும் கூட.

  பதிலளிநீக்கு
 15. நீங்கள் சொல்வது சரி!..
  இருப்பினும் - ஆமாம் சாமி போடுவதில்லை. மாறுபட்ட செயல்களைக் காணும் இடத்திலும், மாறுபட்ட வார்த்தைகளைக் கேட்கும் இடத்திலும் - மௌனமாக வெளியேறி விடுவேன். அதைப் பற்றி விமர்சித்துப் பேச மாட்டேன். அதனாலேயே, என்னைத் தங்களுடன் சேர்த்துக் கொள்வதில்லை பலர்.. அதனால் என்ன!?..

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் சகோ!
  வீட்டில் குழந்தைகள், அதனால்தான்புரியாமல் போராட்டம், நாமும்அதில்மாட்டிகொள்கிறோம் தொலைக்காட்சியில்மனசாட்சியே இல்லாத சொற்ப்போர் அல்லவா? நடந்து கொண்டிருக்கிறது.
  மனசாட்சி அதுவே செய்யட்டும் ஆட்சி,
  சகோ.....!!!!நீங்க சொல்றது சரிதா.

  பதிலளிநீக்கு
 17. நமக்கு நல்லவனாக இருக்க வேண்டும், உண்மைதான். ஆனால் நமக்கு 'மட்டுமே' என்கிற இடத்தில்தான் சிக்கல். சொல்வது எளிது. ஆனால் நடைமுறையில்...? எதிரிகளே இல்லாத வாழ்க்கை நாளடைவில் போரடித்துவிடும். ஊடலும் கூடலும் சேர்ந்ததுதானே வாழ்க்கை!

  பதிலளிநீக்கு
 18. நமக்கு நாம் நல்லவனாக நடந்து கொள்ளும்போது, அடுத்தவருக்கும் நாம் நம்மையறியாமலேயே நல்லவராக மாறி விடுகிறோம். விதைகள் நல்லவையாக இருந்தால் அது அடுத்தவருக்கும் நல்லவைகளைத்தானே தரும்?

  அழகான பதிவு!

  பதிலளிநீக்கு
 19. இரண்டு குழந்தைகளும் அழகோ அழகு...

  எல்லோருமே மனசாட்சி படி வாழ்தால், நன்றாக தான் இருக்கும்.

  அது என்னவோ தெரியவில்லை, எல்லா அப்பாக்களுக்குமே பெண் பிள்ளைகள் என்றால் ஒரு தனி பாசம் தான்.

  பதிலளிநீக்கு
 20. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை மட்டுமல்ல இரண்டுமே பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்குள் பொறாமை வந்துவிடுகிறது. அவதான் உங்களுக்குச் செல்ல பொண்ணு என்ற குற்றச்சாட்டுக்கள் இல்லாத வீடு உண்டா?

  பதிலளிநீக்கு
 21. மிகவும் அருமையான கட்டுரை .
  தெனாலிராமன் கதை அருமை
  போய் சேரும் இடத்திற்கு (ஆண்டவனுக்கு )நல்லவனாக இருப்பதே உயர்வு .அவனின்றி நாம் இல்லை
  உண்மையை சொன்னால் பெண் பிள்ளையுடன் பாசம் அதிகமாக இருக்கும் அதிலும் மகள் வழி வந்த பேரக் குழந்தைகளிடம் பாசம் அதிகமாகும் .
  (பாசம் வேறு நல்லவர் பட்டம் கிடைப்பது வேறு)
  நம் மனசாட்சியோடு நல்லவர்களாக அவசியம் முடிந்தவரை அனைவருடனும் சேர்ந்து வாழ வேண்டும்
  உங்களிடம் நான் நல்லவனாக இருக்கின்றேன் அது எனக்கு மகிழ்வைத் தருகின்றது .அதுவே உங்களுக்கும் கிடைக்கும் .அன்பை பரிமாற்றங்கள் செய்துக் கொள்வது அவசியம்

  பதிலளிநீக்கு
 22. சில சமயங்களில் தாங்கள் சொல்லுவதுபோல ஒதுங்கி செல்வதும் எளிதாக இருப்பதில்லை. ஒதுங்கினால், சுத்தமாக இளிச்சவாயனாக்கிவிடுவார்கள். சமயத்துக்குத் தகுந்தபடிதான் நடக்க வேண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 23. விலாங்கு போல நடப்பது பற்றிக் கூறியிருந்தீர்கள்...D.D
  தனக்கு நீதியாகத் தெரிவது தனக்கு நல்லவனாக நடப்பதே நல்லது.
  ஆராய்ச்சிப் பதிவு தான் மிக நன்று.
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 24. நல்லவன் எனக்கு நானே நல்லவன்.... நல்ல பாடலையும் சொல்லி நல்ல விஷயத்தையும் சொல்லியிருக்கிறீர்கள்...

  பதிலளிநீக்கு
 25. நம்மையே நாம் சுயபரிசோதனை செய்யத்தூண்டும் நல்லதொரு பயிற்சி. நல்லது கெட்டதை யோசித்து நடுவுநிலையுடன் நமக்கு நாமே நீதிபதியாய் இருந்து பிரச்சனைகளை அணுகுவதே மனநிம்மதிக்கும் நிறைவுக்கும் ஒரே வழி. எல்லோருக்கும் நல்லவனாக வாழ்தல் எவருக்கும் சாத்தியமற்ற ஒன்று. மிகச்சரியான அலசல். பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 26. மௌனம் பல இடங்களில் காப்பாற்றும்..

  பதிலளிநீக்கு
 27. நமக்கு நாமே நல்லவர்களாக.....அப்படி என்றால். ...வாழ்க்கையில் நல்லது இது தீது இது என்று பொதுவாக கூறப்படுகிறது. நம்பப் படுகிறது.values என்று சொல்லலாமா... யாரும் எதையும் மனசாட்சிக்கு எதிராகச் செய்வதாக ஒப்புவதில்லை. எதையும் செய்து மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செய்வதாக நம்புவார்கள். சில குறிக்கோளுடன் வாழும்போது எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியாது. எல்லோருக்கும் நல்லவராக நடப்பதாகச் சொல்பவர்கள் வால்யூஸுக்கு மதிப்பு கொடுக்காதவர் என்பது என் கருத்து. என்னால் எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியும் என்று தோன்றவில்லை.

  பதிலளிநீக்கு
 28. எல்லோருக்கும் நல்லவராக இருப்பது சாத்தியமில்லை..

  பதிலளிநீக்கு
 29. அருமையா சொன்னீங்க சகோ. இன்றைய கால கட்டத்தில் ஆமாம் சாமிகள்தான் எங்கேயும் வரவேற்கப்படுகிறார்கள்.

  நமக்கே நாம் க்ரிட்டிசைஸ் செய்து கொள்ளும்போது நாம் எங்கே எல்லாருக்கும் ஆமாம் சாமி போடுறது.. கஷ்டமான வேலைதான் ஆமாம் சாமி போடுறது கூட :)

  பதிலளிநீக்கு
 30. நல்லா சொன்னீங்க, எல்லோருக்கும் நல்லவனாக இருக்கமுடியாதுன்னு.....ஆனா, அடுத்த பதிவுல அப்படி இருக்கமுடியும்னு சொல்லப்போறீங்களோ அப்படின்னு ஒரு சின்ன சந்தேகம் வருதே!

  பதிலளிநீக்கு
 31. ஆஹா ....அருமையான தத்துவத்தை மிக எளிமையாக எடுத்துரைத்த என் அன்புச்
  சகோதரனுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .நாம் நல்லவர்களாக
  இருப்பதற்கு முதலில் எம்மை நாமே காதலிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் எல்லாக்
  குறை நிறைகளையும் தினசரி சரி செய்து வாழ வேண்டும் எம்மில் எக் குறையும்
  இல்லாத போது சபாஷ் நீங்கள் சொல்வதும் சரி என்றே சமூகத்தைப் பகைக்காமல் மெல்ல நழுவிக் கொள்வதும் முரண்பாடுகளைத் தவிக்க வல்ல செயலே இச் செயல்
  பிறரைப் பாதிக்காமல் இருக்கும் படசத்தில் இதுவே என் வாழ்விலும் நான் கடைப்பிடிக்கும் கொள்கை :)))) மனம் மகிழ்ந்தேன் சகோதரா அருமையான இப் பகிர்வினைக் கண்டு .

  பதிலளிநீக்கு
 32. அன்பினிய சகோதரருக்கு,

  அழகான குழந்தைகள்!, நல்லதொரு செய்தி. ஆழ்ந்ததத்துவத்தை மிக எளிமையாகச் சொன்ன விதம் பாராட்டுதலுக்குரியது. வாழ்த்துகள்.

  அன்புடன்
  பவளா

  பதிலளிநீக்கு
 33. எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது சாத்தியம் இல்லை! அருமையான விளக்கப்பகிர்வு!

  பதிலளிநீக்கு
 34. நீங்கள் சொன்னதும் சரி தான் தனபாலன் சார். முதலில் நாம் நல்லவர்களாவோம் பிறகு அடுத்தவர்களைப் பார்க்கலாம்.அருமையான பதிவைப் பகிர்ந்ததற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு
 35. எல்லோருக்கும் எப்போதும் நல்லவனாக இருப்பது கஷ்டமான விஷயமே! மிக சிறந்த கருத்துள்ள பதிவு! நன்றி!

  பதிலளிநீக்கு
 36. சபாஷ்! நீங்க சொல்றது சரி!
  அட, உண்மைதாங்க எல்லாருக்கும் நல்லவனா இருக்க முடியாது.

  பதிலளிநீக்கு
 37. மிக அருமையான கருத்துப் பகிர்வு!. எல்லோருக்கும் நல்லவராக எக்காலத்திலும் இருப்பது ரொம்பவே கடினம்!.. மிக்க நன்றி பகிர்வுக்கு!

  பதிலளிநீக்கு
 38. என்ன ஆச்சு? மீதியுள்ள தொழில் நுட்பம் (பதிவு உலகம்) குறித்து எழுதி முடித்து விடலாமே?

  பதிலளிநீக்கு
 39. நூற்றுல ஒரு வார்த்தை சொன்னீங்க...! அருமையாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 40. அரிய தத்துவம் எளிய வரிகளில்! பாடல் சொல்வதே முடிவுரை! மனம் கவர்ந்த பதிவு! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 41. சபாஷ் ஐயா!நீங்க சொன்னதெல்லாம் சரி !

  திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.முதலில் நாம்.... முடிந்தால் அடுத்தவர்களுக்கு முயற்சிக்கலாம்.

  பதிலளிநீக்கு


 42. மறைந்த பாடகரும் நடிகருமான மலேசியா வாசுதேவன் அடிக்கடி சொல்லும் .வார்த்தை..."வளைந்து கொடுத்துதான் வாழ வேண்டும்" என்று சொல்ல கேட்டுருக்கேன்...!

  பதிலளிநீக்கு
 43. வழமை போல அருமையான பதிவே உண்மையும் கூட ரொம்ப ரொம்ப கஷ்டமான விடயம் தான் ஆமா போட்டாலும் சரி அறிவுரை சொன்னாலும் சரி பிரச்சினை தான்.மீனுக்கு தலையை காட்டி பாம்புக்கு வாலை காட்டி நடக்கணும் என்பார்கள்.மௌனமே சிறந்தது. நமக்கு பிடிக்காத விடயங்களை நாம் செய்யாது விடுதலும் சிறந்தது. நன்றி தொடர வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 44. குழந்தைகளுக்கு தீர்ப்பு சொல்வது கடினம்

  பதிலளிநீக்கு
 45. நீங்க சொல்றது சரிதான், எல்லாருக்கும் எல்லா நேரமும் நல்லவனா இருக்க முடியாது....

  சிந்திக்க தூண்டியது அண்ணா, நன்றி....

  பதிலளிநீக்கு
 46. எனக்கு நினைவிற்க்கு வரும் ஒரு கதையை இங்கு கூறுகிறேன்.
  விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் ஒரு வெள்ளைகார பெண், தன் பக்கத்து இருக்கையில் ஒரு கருப்பர் உட்காருவதைக் கண்டு எரிச்சலுற்று விமான பணிப்பெண்னை அழைத்து அந்த கருப்பரை வேறு இடத்தில் உட்கார வைக்குமாறு சத்தம் போடுகிறாள். ஆனால் விமான பணிப்பெண் புத்திசாலி. அவளுக்கு யார் மீது நியாயம் உள்ளது என தெரிகிறது. அவள் அந்த வெள்ளைகார பெண்ணிடம் மிகவும் சாதரணமாக, புன்முறுவலுடன் "உங்களின் கஷ்டம் எனக்கு புறிகிறது" எனக் கூறி, அந்த கருப்பரிடம் "சார் இந்த வகுப்பில் இவருடன் பயணம் செய்வது மிகவும் கடினமான ஒன்று, நீங்கள் வாருங்கள் உங்களுக்கு காலியாக உள்ள பர்ஸ்ட் கிளாசு இருக்கையை தருகிறேன்" என கூறினாள். வெள்ளைக்காரி மூக்குடைந்தது மட்டுமல்லாமல், நியாயமான கருப்பருக்கு முதல் வகுப்பில் இருக்கையும் கிடைத்தது (நியாயத்திற்க்கு கிடைத்த பரிசு). பயணமும் அமைதியாக இருந்தது. ஆக, சில சமயங்களில் நாம் இவ்வாறு DIPLOMATIC காக நடந்து கொள்ளவேண்டும்.
  டிடி அண்ணாவின் உபதேசம் மிக அருமை.

  பதிலளிநீக்கு
 47. நமக்கு நல்லவனாய் இருந்தால் போதும். அருமை

  பதிலளிநீக்கு
 48. சொல்வது சரி
  நல்லவராக நடிப்பதை விட நல்லவனாக இருப்பது மேல்.

  பதிலளிநீக்கு
 49. இன்றைய கால கட்டத்தில்
  அவசியமான கருத்தினை
  சுவாரஸ்யமான பதிவாக்கித் தந்தமைக்கு
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 50. வாழ்க்கையே ஒரு நாடக மேடை.
  நாமெல்லாம் அதில் நடிகர்கள்.

  நாம் நல்லவராக இருப்பதும் கெட்டவராக மாறுவதும் அந்த அந்தக் காலச் சூழல் தான்.

  பதிவு நன்றாக யோசிக்கத் துர்ண்டியது.
  நன்றி தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 51. சபாஷ்....!!! நீங்க சொன்னதும் சரிதான்!!! நல்லா, அருமையா சொன்னீங்க. என் தளத்தில்: கந்தசாமியும் சுந்தரமும் - 02.

  பதிலளிநீக்கு
 52. நல்லவராக நடிப்பதை விட, நல்லவராக வாழ்ந்து காட்டுவதே மேல்...
  தங்கள் வழிகாட்டலை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 53. பதிவில் உள்ள சொற்களைவிட குழந்தைகளின் முகங்கள் எங்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது. இவ்வாறான புகைப்படங்களைத் தேர்ந்தெடுக்கும் தங்களின் திறன் போற்றத்தக்கதாகும். இக்காலத்திற்குத் தேவையான ஒன்றை தங்கள் பாணியில் பகிர்ந்துள்ள விதம் அருமை.

  பதிலளிநீக்கு
 54. நல்லாவே சொல்லீட்டீங்க....மனதிற்கு தோன்றுவதை வெளிப்படையாக பேசுவதில் தவறொன்றும் இருப்பதில்லை...

  பதிலளிநீக்கு
 55. ஒரு தந்தை வாழும் இடம் அவர் மகள் வாழும் வரை அவள் மனதில் தான் !!!
  கண்கள் வியர்க்கிறது அண்ணா!அருமை!

  பதிலளிநீக்கு
 56. //நாம் மட்டுமல்ல... நம்மைப் படைத்த ஆண்டவனால் கூட எல்லோருக்கும் நல்லவராக நடந்து கொள்ள முடியாது தான் உண்மை//

  இது ரொம்ப ரொம்ப சரி..

  பதிலளிநீக்கு
 57. நல்லவராக இருப்பது நல்லது;இருப்பது போல் நடிப்பதோ அளவுக்கு மீறி நல்லவராய் இருப்பதோ?

  பதிலளிநீக்கு
 58. "முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை...!"
  அல்லாருக்கும் நல்லவனா இருக்கணும்னா அதுக்கு ஒரு வழி கீதுபா... அத்து இன்னானா... "நல்லவன்" ன்னு பேரு வச்சிக்கணும்... அவ்ளோதாம்பா.. வெரி... வெரி... சிம்பிள்...! :-)

  பதிலளிநீக்கு
 59. நல்ல விஷயம்...

  எல்லோருக்கும் நல்லவனாக இருப்பது முடியாத ஒன்று... என்ன தான் ஆமாம் சாமி போட்டாலும் பல சமயங்களில் கெட்டவனாக தோன்றிவிடுகிறோம்..

  பதிலளிநீக்கு
 60. அருமையான ஆலோசனைகள் அண்ணா
  வாழ்த்துக்கள் ஒரு நல்ல பதிவிற்கு

  பதிலளிநீக்கு
 61. அருமையான அவசியமான பதிவு
  பார்த்தேன் படித்தேன் ரசித்தேன்
  வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 62. முகநூலில் பார்த்த படங்களாக இருந்தாலும் பார்க்கப் பார்க்க குழந்தைகள் படம் அருமை...

  அருமையான அலோசனைகள்...
  வாழ்த்துக்கள் அண்ணா...

  பதிலளிநீக்கு
 63. அருமையான பதிவு. குழந்தைகளின் அழகும் கண்களைக் கவர்ந்தன. எல்லாருக்கும் நல்லவராக நடப்பது கஷ்டம் தான் என்றாலும் ம.சா. னு ஒண்ணு இருக்கே, அது குத்திட்டே இருக்குமே! அதை என்ன செய்யறது? :((

  பதிலளிநீக்கு
 64. தாமதமாய் வந்ததற்கு மன்னிக்கவும். :)

  பதிலளிநீக்கு
 65. உண்மையைச் சொன்னால் எல்லாருக்கும் மற்றும் எல்லோருமே
  நல்லவராக இருந்து விட்டால் சுவாரசியம் இல்லை. (ஜோக்தான் .சீரியஸாக எடுத்துக் கொள்ளவேண்டாம்)

  பதிலளிநீக்கு
 66. வணக்கம் சகோதரரே!
  கண்களை விட்டு அகலாது, மனதில் நிறைந்த குழந்தைகள் படம் அருமையிலும் அருமை! எல்லோருக்கும் நல்லவராய் இருக்க, எதையுமே கண்டுக்காமே, இருந்தாலும்,நல்லவர் என்ற நற்பெயர் கிடைப்பது சிரமமான ஒன்றுதான். நீங்கள் சொல்வது போல் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் நமக்கு நல்லவனாக நடப்பது / இருப்பது மட்டுபது சாத்தியம் அதுவே உத்தமமும் ௯ட என்றுதான நானும் நினைக்கிறேன்,தங்களின் அருமையான கருத்துகளுக்கும், ஆழ்ந்த சிந்தனைகளுக்கும், என் உளமார்ந்த பாரட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 67. சிந்தனையை தூண்டிய பதிவு, தனபாலன்.

  பதிலளிநீக்கு
 68. ஊருக்கு போய் வந்ததால் பதிவுகளை காலதாமதமாய் படிக்கிறேன்.
  நன்றாக இருக்கிறது பதிவு.
  எல்லோருக்கும் நல்லவராக இருக்க முடியாது என்பது தான் உண்மை.
  நமமை பொறுத்தவரை நல்லவர்களாக நடந்துக் கொள்வோம். நல்லதை மட்டும் செய்வோம்.

  பதிலளிநீக்கு
 69. குழந்தைங்க படம் அசத்தல்... எல்லார்க்கும் நல்லவரா இருப்பது மகா கஷ்டம்... அனுபவ உண்மை..அருமையா சொல்லி இருகிங்க பதிவில் .

  பதிலளிநீக்கு
 70. நல்லதொரு பதிவு.

  சூழ்நிலைக்கு ஏற்ப நாமும் நடந்துகொள்ள வேண்டும்.

  குழந்தைகள் படம் ஜோராக உள்ளது. படத்தேர்வு அருமை. ;)))))

  பதிலளிநீக்கு
 71. எல்லாருக்கும் எல்லா நேரமும் நல்லவனா இருக்க முடியாது.
  kalakarthik

  பதிலளிநீக்கு
 72. நீங்கள் கூறுவது சரிதான். அவரவர் மனச்சான்றுக்கு நல்லவராக வாழ்ந்தால் கூடப் போதுமே! அதைக் கூடச் செய்ய இங்கு யாரும் ஆயத்தமாக இல்லையே!

  பதிலளிநீக்கு
 73. தமிழ்மணம் உட்பட எந்தத் திரட்டியின் வாக்குப்படையையும் காண முடியவில்லையே! ஏன் எடுத்து விட்டீர்கள்?

  பதிலளிநீக்கு
 74. மிக மிக நல்லதொரு பதிவு DD! எல்லோருக்கும் நாம் நல்லவராக இருக்க முயன்றாலும் யதார்த்தா வாழ்க்கையில் அது கொஞ்சம் கடினம்தான்....நாம் நல்லது என்று நினைத்து ஒருவருக்கு உதவி செய்யப் போக அதுவே பூமராங்க் போல நம்மைத் தவறாக நினைத்து அடித்து விடும் நிகழ்வுகளும் நடக்கின்றன!. நமது நல்ல மனதை அவர்கள் புரிந்துகொள்ளாத வரை ஒன்றும் செய்ய இயலாது...எனவே எல்லா நேரத்திலும், எல்லாருக்கும் நாம் நல்லவராக இருக்க முடியாதுதான்....தாங்கள் சொல்லியது போல நம் மனசாட்சிக்கு முதலில் நாம் நல்லவராக இருத்தலே மேல்தான்....அனால் அந்த மன்சாட்சி??????!!!!!!

  பதிலளிநீக்கு

 75. வணக்கம்!

  சுவரென்பது கட்டுவது! மண்வரண்டு காய்தல்
  சுவறென்று சொல்லுவார் சொல்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.