🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நேயர் விருப்பம்...

பாட்டாலே புத்தி சொன்னார்; பாட்டாலே பக்தி சொன்னார்; பாட்டுக்கு நான் பாடுபட்டேன்; அந்தப் பாட்டுகள் பலவிதம் தான்...



© கரகாட்டக்காரன் இளையராஜா இளையராஜா 🎤 இளையராஜா @ 1989 ⟫

நமக்குப் பிடித்த பலவிதமான பாடல்களை நமது தளத்தில் சிறிது பாடுபட்டு... ம்... விருப்பப்பட்டு, கொஞ்சூண்டு மெனக்கெட்டு, இணைத்து, இணைந்து ரசிப்போம்... → முந்தைய பதிவின் ← கருத்துரையில் சகோதர சகோதரிகளின் விருப்பத்திற்காக இந்தப் பகிர்வு... நன்றி சகோதரி கீதமஞ்சரி...



வலைப்பூவின் புதிய முகப்பு தோற்றத்திற்கேற்ப தொழினுட்பம் மாற்றப்பட்டுள்ளது - புதுப்பிக்கப்பட்ட நாள் :18.10.2019
மீண்டும் இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 8.9.2021 - வலைப்பூவில் கேட்பொலி இணைப்பு முழுவதுமாக எளிதாக மாறி விட்டது... அதன் விளக்கங்கள் :-

நீங்கள் Blogger A/c-ல் தானே உள்ளீர்கள்...? மற்றொரு tab-ல் தட்டச்சு (type) செய்து தட்ட (↵) வேண்டியது →https://drive.google.com/drive/my-drive← (இங்கேயும் சொடுக்கலாம்...) வலைப்பூவுக்கென்று தனியே ஒரு மின்னஞ்சல் இருந்தால் தனியே ஒரு கோப்புறை (Folder) தேவையில்லை... பல கோப்புக்களைத் தரவேற்றம் செய்து வைத்திருந்தால் தனியே ஒரு கோப்புறை (Folder) இருந்தால் எளிது... அதனால் முதலில் மேலே + New என்பதையும் அதில் Folder என்பதையும் சொடுக்கி, உங்கள் விருப்பம் போல் ஒரு பெயரிட்டுக் கொள்ளவும்...(Audio Files) பின் அதைச் சொடுக்கி உள்ளே செல்லவும்... மறுபடியும் மேலே + New என்பதையும் அதில் File upload என்பதையும் சொடுக்கி, உங்களின் கணினியில் உள்ள கேட்பொலியை (mp3) தரவேற்றம் செய்யவும்... தரவேற்றம் முடிந்தவுடன் அதன் மீது சுட்டியைக் கொண்டு சென்று சொடுக்கி Right Click → கவனியுங்கள் → உங்கள் திரையையும்...! Restricted என்று இருந்தால், அதன் கீழே இருக்கும் Any one with the link என்பதைத் தேர்வு செய்துவிட்டு Copy Link என்பதையும் சொடுக்கி, முடிவாக Done-யை சொடுக்கவும்...! கணினி நினைவகத்தில் அந்த இணைப்பு உள்ளது... அதை Copy செய்து Note pad-ல் சேமித்துக் கொள்ளவும்... இவ்வாறு இருக்கும்: https://drive.google.com/file/d/xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx/view?usp=drive_link

ஒரு பதிவை எழுதி முடித்து விட்டீர்கள்... இனி கேட்பொலியை இணைக்க வேண்டும்... அதற்கு ஒரு mp3Player script வேண்டும்... பதிவெழுதும் போது நீங்கள் Compose view-ல் தான் எழுதிக் கொண்டு இருப்பீர்கள்... கவனிக்க மேலே பல Icon இருக்கும்... முதல் Icon <> ▿ ஆக இருக்கும்... அதைச் சொடுக்கி HTML view என்பதைத் தேர்வு செய்யுங்கள்... பதிவில் எந்த பத்திக்குப் பின் கேட்பொலி வேண்டுமோ அங்குச் சென்று (Enter key) தட்டவும்... கீழ் பெட்டியிலுள்ள mp3 Player script-யை copy செய்து paste செய்யவும்... (COPY செய்ய : சுட்டியால் தேர்வு செய்து, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C -யை அழுத்தவும்) இந்த script-ல் #COPY# எனும் இடத்தில், Note pad-ல், https://drive.google.com/file/d/ என்பதற்கும் /view?usp=drive_link என்பதற்கும் இடையுள்ளவற்றை மட்டும் எடுத்து paste செய்யவும்... பதிவை Publish சொடுக்குவதற்கு முன் Preview என்பதை சொடுக்கி சரி பார்க்கவும்... உற்சாகத்துடன் இப்பதிவில் உள்ள எதிர்நீச்சல் கேட்பொலியை கேட்கலாம்...! அடுத்த புதிய பதிவை எழுத ஆரம்பிக்கும் முன் மறக்காமல் Compose view -விற்கு மாறி விடவும்...!
சரி நாம் இணைத்தது எவ்வாறு இருக்கும்...? இதோ :-

© எதிர் நீச்சல் வாலி குமார் 🎤 சீர்காழி கோவிந்தராஜன் @ 1968 ⟫

சொடுக்கி கேளுங்கள்... சொடுக்கி நிறுத்தி விடலாம்...! நாமும் வெற்றி பெற எதிர்நீச்சல் போடுவோம்...


முதல்முறையாக எனது பதிவில் mp3 இணைத்த போது செய்தவைக்கும், இப்போதுக்கும் சில மாற்றங்கள் உள்ளது... இனியும் மாற்றம் வரலாம்... படம், காணொளி ஐகான் போன்று mp3-க்கும், கூகுள் மெனக்கெட்டு ஒரு ஐகான் வைத்தால் எவ்வளவு எளிதாக இருக்கும்...! ம்...! ஆனால், இதுவரை செய்தது படிப்படியான சில சொடுக்குகளில் வேலை முடிந்து விடும்...

இனி தான் நமது ரசனையான வேலையே : நேயர் விருப்பம் என்று பதிவிற்குத் தலைப்பு வைத்து விட்டு, இந்தப் பதிவிற்கேற்ப ஞாபகம் வந்த சில "பாடல்" என்று வரும் பாடல்களை சொல்லவில்லை என்றால், அடியேன் மனதை சமாதானம் செய்ய முடியாதென்பதால் ↓


என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்...
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்...
© தவப்புதல்வன் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫
                 
பாட்டும் நானே பாவமும் நானே...
© திருவிளையாடல் கண்ணதாசன் K.V.மகாதேவன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1965 ⟫
       
பாடவா உன் பாடலை...
© நான் பாடும் பாடல் வைரமுத்து இளையராஜா 🎤 S.ஜானகி @ 1984 ⟫

மனசோடு பாடும் பாட்டு
கேட்குதா...? கேட்குதா...?
© பாடு நிலாவே வாலி இளையராஜா 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1987 ⟫

துள்ளி எழுந்தது பாட்டு...
© கீதாஞ்சலி வாலி இளையராஜா 🎤 இளையராஜா, K.S.சித்ரா @ 1985 ⟫

உன்ன நெனைச்சேன் பாட்டு படிச்சேன்...
© அபூர்வ சகோதரர்கள் வாலி இளையராஜா 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1989 ⟫

உன்னைப் பார்த்துக் கொண்டிருந்தால்
பாட்டு வரும்...!
© நான் ஆணையிட்டால் வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன், P.சுசிலா @ 1966 ⟫


பாட்டொன்று கேட்டேன்-பரவசமானேன்-
நானதைப் பாடவில்லை...!
© பாசமலர் கண்ணதாசன் விஸ்வநாதன் ராமமூர்த்தி 🎤 ஜமுனா ராணி @ 1961 ⟫
                 
பாட்டுக்குப் பாட்டெடுத்து நான்
பாடுவதைக் கேட்டாயோ...?
© படகோட்டி வாலி விஸ்வநாதன் - ராமமூர்த்தி 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫
       
நான் பாடும் பாடல்...
© நான் ஏன் பிறந்தேன் வாலி சங்கர் கணேஷ் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫
                 
என்னைப் பாடச் சொல்லாதே...!
© ஆண்பாவம் வாலி இளையராஜா 🎤 S.ஜானகி @ 1985 ⟫


பாடும் போது நான் தென்றல் காற்று...
© நேற்று இன்று நாளை புலமைப்பித்தன் M.S.விஸ்வநாதன் 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1974 ⟫
                 
ஒரே பாடல் உன்னை அழைக்கும்...
© எங்கிருந்தோ வந்தாள் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫
       
நானா - பாடுவது நானா...
© நூல்வேலி கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 S.P.பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம், L.R.அஞ்சலி @ 1979 ⟫
                 
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும் ...!
© கண்ணன் என் காதலன் வாலி M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1968 ⟫


நான் பாடிய முதல் பாட்டு...
© ஐந்து லட்சம் வாலி S.M.சுப்பையா நாயுடு 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1969 ⟫
                 
மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு...
© அண்ணா நகர் முதல் தெரு வாலி சந்திரபோஸ் 🎤 S.P.பாலசுப்ரமணியம், K.S.சித்ரா @ 1988 ⟫
       
பாட்டு பாடவா...?
பார்த்துப் பேசவா...?
© தேன்நிலவு கண்ணதாசன் A.M.ராஜா 🎤 A.M.ராஜா @ 1961 ⟫
                 
என்ன பாட்டு பாட...?
என்ன தாளம் போட...?
© சக்களத்தி புலமைப்பித்தன் இளையராஜா 🎤 இளையராஜா @ 1979 ⟫


எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்...
© எங்க மாமா கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1970 ⟫

பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா...?
© புது வசந்தம் S.A.ராஜ்குமார் S.A.ராஜ்குமார் 🎤 K.J.யேசுதாஸ் @ 1990 ⟫

என்னோடு பாட்டு பாருங்கள்...
© உதயகீதம் M.G.வல்லபன் இளையராஜா 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1985 ⟫

பாட்டு ஒன்னு பாடு தம்பி...
© வறுமையின் நிறம் சிவப்பு கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 S.P.பாலசுப்ரமணியம் @ 1990 ⟫
       
அட உச்சந்தல உச்சியிலே...
உள்ளிருக்கும் புத்தியிலே பாட்டு...
© சின்னத்தம்பி வாலி இளையராஜா 🎤 மனோ @ 1984 ⟫
                 
எந்தன் பாடல்களில் நீ நீலாம்பரி...
© உறவை காத்த கிளி T.ராஜேந்தர் T.ராஜேந்தர் 🎤 K.J.யேசுதாஸ்,B.S.சசிரேகா @ 1984 ⟫


மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி
    இன்றே முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. ஈதல் இசைபட வாழ்தல்! ஐடியாக்களை ஈந்து விட்டீர்கள்! இந்த HTML படுத்தல்தான்... ம்ம்ம்ம்...

    பதிலளிநீக்கு
  3. விளக்கம் அருமை முயல்கின்றேன் சார்! நன்றி விளக்க பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  4. DD மிக்ஸ் கூட இப்படித்தான் நடக்கிறதா? ;-)

    பதிலளிநீக்கு
  5. வணக்கம்
    அண்ணா.

    விளக்கம் நன்றாக உள்ளது....பகிர்வுக்கு வாழ்த்துக்கள் அண்ணா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  6. இரண்டு மூன்று தடவை படித்து உள் வாங்கியபிறகு தான் நீங்கள் சொன்னபடி செய்யவேண்டும். உபயோகமான தகவலுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  7. பயன் உள்ள பதிவுகளே நானும் முயற்சிக்கிறேன்.
    நன்றி வாழ்த்துக்கள் ...!

    பதிலளிநீக்கு
  8. இசை பிரியர்களுக்கு இன்னிசை விருந்தாகும் பதிவு, மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  9. இது பதிவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் பதிவு என நினைக்கிறேன்.
    எளிதான அருமையான விளக்கம்.

    மிகுந்த பாராட்டுக்கள்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  10. நுட்பமான விஷயங்கள். பயன்தரத் தக்கன. இந்த முறையை நான் முயற்சித்ததில்லை,இனி இதையும் பயன்படுத்திக் கொள்வேன். நன்றி DDசார்

    பதிலளிநீக்கு
  11. பயனுள்ள விளக்கங்கள்...
    எளிமையாகப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  12. உங்களின் இணையம் பற்றிய அறிவு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது .
    புதிது புதிதாய் கண்டுபிடிப்புகள் ?உங்களுக்கு எப்படி இவ்வளவு ஆர்வமும் நேரமும் செலவு செய்ய முடிகிறது.பதிவு பயனுள்ளது நன்றிங்க நண்பரே

    பதிலளிநீக்கு
  13. நான் விரும்பி உங்களிடம் கேட்டது .
    மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி
    செய்வது சிரமமாக உள்ளது .நீங்கள் வந்து செய்துக் கொடுங்கள்

    பதிலளிநீக்கு
  14. அன்பின் தனபாலன்..
    தாங்கள் கூறியபடிக்கு பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.. வாழ்க நலம்..

    பதிலளிநீக்கு
  15. விளக்கம்லாம் புரியுது. ஆனா, இதெல்லாம் செஞ்சுப் பார்க்க பயமா இருக்கேண்ணா!

    பதிலளிநீக்கு
  16. மிக மிக பயனுள்ள பதிவு. சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். நிச்சயம் பயன்படுத்த முயல்கிறேன். நன்றி நன்றி

    பதிலளிநீக்கு
  17. எனக்கு ஒண்ணும் புரியலை. பொறுமையாய் படித்து செயல்படுத்திப் பார்க்க நேரமும் இல்லை.

    பதிலளிநீக்கு
  18. எனக்கும் இந்த முறை புதியதாகவும் எளியதாகவும் தோன்றுகிறது. இதை பயன்படுத்திப் பார்க்கிறேன். மிக மிகப் பயனுள்ள, அவசியமான தகவலைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பா.

    பதிலளிநீக்கு
  19. மிகவும் பயனுள்ள பதிவு. பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  20. எனக்கு ரொம்ப நாளாக தெரியாமல் இருந்த விஷயம் இது. மிக அழகாகவும், எளிமையாகவும் புரிய வைத்துவிட்டீர்கள்.
    மிக்க மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  21. படிப்படியாக விளக்கும் உங்களுடைய திறமை வியப்பளிக்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. ONLY MP3 FORMAT FILES AND NOT OTHER FORMATS LIKE WMA
    அதற்கு இந்த இடத்திலே வகை இருக்கிறதா ?

    இருந்தாலும், மற்ற பார்மட்களில் பதிவு செய்யப்பட்டவைகளை எம்பி 3 பார்மேட்க்கு மாற்றி பதிவு செய்யவேண்டும் போல் இருக்கிறது.

    நான் என்னுடைய இசை கோப்புகளை www.soundcloud.com வழியாக இணைக்கிறேன்.

    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு
  23. மிகவும் பயனுள்ள பதிவு.பாராட்ட வார்த்தைகளே இல்லை. நீங்கள் "நேயர்விருப்பத்தில்" தந்திருக்கும் எல்லாப்பாடல்களுமே அருமையான, விருப்பமான பாடல்கள்தான். வாழ்த்துக்கள் & நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  24. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா.விளக்கங்கள் மிக அருமையாக உள்ளது. நானும் கரகாட்டகாரன் தான்....

    ஒரே நேரத்தில் இரண்டுபேருமே அவரை யூஸ் பண்றோம் கரகாட்டக்காரன் மவுசு இன்னும் குறையல போலிருக்கு....

    பதிலளிநீக்கு
  25. மிகப் பொறுமையாக அருமையாக விளக்கி உள்ளீர்கள். சாவகாசமா இன்னொரு நாள் செய்து பார்க்கணும். எப்பவும் பிள்ளைங்களையே டிப்பெண்ட் பண்ணிக்கிட்டு இருக்கேன். சில சமயம் விழாக்களுக்குப் போயிட்டு வந்த வீடியோ அல்லது ஆடியோவைப் பகிர நான் அவங்களைத்தான் எதிர்பார்ப்பேன். வீடியோவை ஸ்பிலிட் பண்ணி வேற அப்லோட் பண்ணனும். ஏன்னா 20 நிமிஷம் எல்லாம் ப்லாகில அல்லது ஃபேஸ்புக்குல டவுன்லோட் ஆக மாட்டேங்குது. என் பையன் பாட்டுக் கேட்க சவுண்ட் க்ளவுட் அப்பிடின்னு ஒன்னுல போட்டு வச்சிருக்கான். :)நன்றி சகோ பகிர்வுக்கு :)

    பதிலளிநீக்கு
  26. தகவல் நன்றாக இருக்கிறது. எனக்கு தான் உடனே புரியவில்லை.மீண்டும் மீண்டும் வாசித்து உள்வாங்கிக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  27. நீங்கள் இவ்வளவு மெனக்கெட்டு விலாவாரியாக எழுதுவதை நாங்கள் தான் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவில்லை .காரணம் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் ஒரு மனச் சோர்வு புதிய எதையும் செய்து பார்க்க பயம் இவையே .முயற்சிக்கிறேன்

    பதிலளிநீக்கு
  28. மிகவும் பயனுள்ள பதிவு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி DD.
    Best wishes.
    Vetha.Elangathilakam.

    பதிலளிநீக்கு
  29. இசையோடு இசைந்து வாழ வழிகாட்டியதற்க்கு நன்றி !
    தம+1

    பதிலளிநீக்கு
  30. உங்களை ரொம்பவும் பாராட்ட வேண்டும், தனபாலன்! படிப்படியாக நிதானமாக சொல்லியிருக்கிறீர்கள். உங்களின் பதிவுகளையும் ஒரு பக்கம் திறந்து வைத்துக்கொண்டு நீங்கள் சொல்லியதை எல்லாம் செய்துபார்க்க வேண்டும்.
    படிக்கும்போது புரிவது, நடைமுறையில் செய்யும்போது வருகிறதா என்று பார்க்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  31. அனைவருக்கும் பயனுள்ள பகிர்வு. தாங்கள் மாணவர்களுக்குச் சொல்லித் தருவது போல மிகவும் அழகாக சொல்கிறீர்கள். இருப்பினும் போதிய நேரமின்மை காரணமாக முழுமையாக உங்களைப் பின்தொடர்ந்து அதை கடைபிடிப்பது என்பது எங்களுக்குச் சிரமமாக இருக்கிறது. எப்படியும் தாங்கள் கூறும் உத்திகளை நாங்கள் பயன்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையுண்டு. நன்றி.

    பதிலளிநீக்கு
  32. சிறந்த பயன்தரும் பகிர்வு - இனி
    சிறந்த பாடல்களை வலையில் - பலர்
    மறந்து விடாமல் இணைப்பரே!

    பதிலளிநீக்கு
  33. @sury Siva அவர்களுக்கு // ONLY MP3 FORMAT FILES AND NOT OTHER FORMATS LIKE WMA
    அதற்கு இந்த இடத்திலே வகை இருக்கிறதா ? இருந்தாலும், மற்ற பார்மட்களில் பதிவு செய்யப்பட்டவைகளை எம்பி 3 பார்மேட்க்கு மாற்றி பதிவு செய்யவேண்டும் போல் இருக்கிறது.//

    ஆமாம் ஐயா... இணையத்தில் எளிதாக மாற்ற : மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது இது → http://www.convertfiles.com ← இங்கேயும் சொடுக்கலாம்...

    பதிலளிநீக்கு
  34. ஒரு சந்தேகமும் இல்லை பகிர்வைப் படித்து முடிக்கும் வரைக்கும்
    யாமிருக்கப் பயம் ஏன் என்பது போல் தங்களின் முகம் மட்டுமே
    வந்து வந்து போனது சகோதரா இந்த வேலையைச் செய்து முடிக்கப்
    போறவரே நீங்க தானே?.. அப்படி இருக்க நா(ங்க)ன் ஏன் கஸ்ரப் படணும் ?..:))))
    அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா விரைவில்
    அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன் :))) மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  35. எளிமையாக புரியும் படியான விளக்கம்! என் இணைய வேகம் ஸ்லோவாக இருப்பதால் கொஞ்சம் ஸ்லோவாகத்தான் முயற்சித்து பார்க்க வேண்டும்! பயனுள்ள பதிவிற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  36. மிக நன்றி தனபாலன். அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் .என் போல கைநாட்டுகளுக்குப் புரிதலில் சிரமம். முயற்சி செய்கிறேன் மா.இவ்வளவு உழைப்பும் கரிசனமும் உங்களிடம் தான் காண முடிகிறது.வளமுடன் இருங்கள்.

    பதிலளிநீக்கு
  37. அன்பு டிடி நன்றாகத்தான் சொல்லிக் கொடுக்கிறீர்கள். இருந்தாலும் இந்த html விஷயங்கள் பயமுறுத்துகிறது நன்றி

    பதிலளிநீக்கு
  38. நான் ஒரு டியுப் லைட்.

    கொஞ்சம் மெதுவாகத்தான்....
    இரண்டு மூன்று முறை படித்தாலும்...ம்ம்ம்...

    எனக்கு நீங்களே அனைத்தையும் செய்து கொடுத்துவிடுங்கள் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  39. அழகான விளக்கம், இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் ..... உதவிக்கு எண்ணைக் கொடுத்து .... பெரிய விஷயம்தான். வளரட்டும் உங்கள் உதவும் பணி !

    பதிலளிநீக்கு
  40. எனது வேண்டுகோளை ஏற்று வழிமுறைகளை வெளியிட்டமைக்கு மனமார்ந்த நன்றி தனபாலன். விரைவில் செயல்படுத்திப் பார்க்கிறேன். கேட்டதும் கொடுக்கும் தங்கள் பரந்த மனத்துக்கு மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  41. சிறப்பான தகவல்கள்....

    ஒவ்வொரு பதிவிற்கும் எவ்வளவு மெனக்கெடுகிறீர்கள்.........

    பதிலளிநீக்கு
  42. "பல்சக்கர ஐகான்" நல்ல சொல் தேர்வு...!
    மிகவும் பயனுள்ள தகவல்கள்... முயற்சி செய்து பார்க்கிறேன்...

    வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
  43. மிகவும் எளிதாக இருக்கிறது நீங்கள் சொல்லியதை படிக்கும் போது அதை செயலுக்கு கொண்டு வந்து பார்க்க வேண்டும்.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் நண்பர்களே

    உங்கள் தகவல் பகிர்வுக்கு மிக்க மகிழ்ச்சி மேலும் உங்கள் வலைதளத்தின் themesசை மாற்றம் செய்ய உடனே என்னுடிய இணையதளத்தை பயன்படுத்தும் மாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் நன்றி இலவசமாகப பிளாக்கர் தீம்ஸ் டவுன்லோட் செய்ய இந்த லிங்கை அழுத்தவும்

    பதிலளிநீக்கு
  45. மிகவும் பயனுள்ள பதிவு. இதை முயற்சித்து பார்க்கிறேன் (என் மகனின் உதவியுடன்). பகிர்வுக்கு நன்றி சகோதரரே.

    வாழ்த்துக்களுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  46. மிகவும் எளிமையான பயனுள்ள விளக்கங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  47. பயனுள்ள பதிவுக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு

  48. தனபாலன் சார். எனக்கெல்லாம் அரை மாத்திரை கம்மி. இந்த சப்ஜெக்ட் எல்லாம், புரிய மாட்டேன் என்கிறது. யாராவது, டியூசன் வகுப்பு எடுக்கிறார்களா?

    பதிலளிநீக்கு
  49. அருமையான பதிவு. நான் எனது சோதனை வலைப்பதிவில் முயற்சித்து பார்த்தேன். அருமையாக வேலை செய்கிறது. நன்றி. சோதனை ஓட்டத்தை காண: http://suttapalam2012.blogspot.com/2014/05/blog-post.html எனது வலைப்பதிவில்: http://newsigaram.blogspot.com/2014/04/vetkathaik-kettaal-enna-tharuvaai.html வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்?

    பதிலளிநீக்கு

  50. ஏதோ....விஞ்ஞான லேபுக்குள் வந்த போல் இருக்கிறது. அத்தனை டெக்னிக்கல் வார்த்தைகள். ரொம்ப யூஸ்புல்!.

    பதிலளிநீக்கு
  51. பள்ளிக்கூடம் போகாமலே பாடம் புரிகிறது... நன்றி சகோ.

    பதிலளிநீக்கு
  52. நாத்திக பதிவு எழுதி வந்த நம்பள்கி வலைப்பக்கம் சில நாட்களாக காணவில்லை.கடைசியாக கடுமையாக கடவுளை மறுத்தும் விமர்சித்தும் எழுதியிருன்(வந்)தார். அந்த பதிவுடன் அவரது வலைப்பக்கமும் காணக்கிடைக்கவில்லை. இது பற்றி ஏதேனும் விபரம் யாருக்காவது தெரியுமா? www.nambalki.com பக்கத்தை யாராவது களவாடி (hack செய்து) விட்டார்களா?

    பூபதி துபை

    பதிலளிநீக்கு
  53. நன்றி தனபாலன் சார் . பயனுள்ள பதிவு . உங்களின் ஆலோசனைப் படி தொடர்ந்து முயற்சி செய்து நான் வெற்றியும் பெற்றேன் . என் பதிவுக்கு நீங்கள் வந்து கருத்துரையிட்டால் நலம்.

    http://puthukaatru.blogspot.in/2015/01/6.html

    பதிலளிநீக்கு
  54. tried but player is blank not playing. in html code first error it says https and http mixed error is there, is gmmodules is the player website think that is not working, any instructions how to place the player in working mode

    பதிலளிநீக்கு
  55. மிக்க நன்றி தனபாலன். சார் மிகவும் பயனுள்ள கட்டுரை நன்றி

    பதிலளிநீக்கு
  56. எதேச்சையாக இந்த blogspot இன்று தெரிய வந்தது! அட இவ்வளவு நாட்கள் நாம் வீணாக்கி விட்டோமே என்று வருந்தினேன்! இனிய தமிழில் எவ்வளவு அருமையாக விளக்குகிறீர்கள்! மிக்க நன்றி! தொடரட்டும் தங்கள் பனி! அவ்வபோது இனி தொந்தரவு செய்யலாம்! Ravichandran R

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.