🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉பதிவர்கள் பிரச்சனைக்கு தீர்வு... முத்து...?

வணக்கம் நண்பர்களே... மே 1 அன்று திரு. V. துளசிதரன் அவர்களின் பாலக்காட்டில் நடந்த "புரோட்டா கார்த்திக்" எனும் குறும்படப் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன்... அவருக்கு நன்றிகள் பல + குறும்படம் சிறப்பாக அமைய வாழ்த்துவோம்... இந்தப் பகிர்வில் கோவை ஆவி அவர்கள் எடுத்த சில புகைப்படங்களை இணைத்து சிந்தனைப் பகிர்வாக... அவருக்கும் நன்றி... கீழுள்ள படத்தில் திருமதி கீதா சகோதரி, திரு. குடந்தையூர் சரவணன், DD, கவிஞர். திரு. இராய.செல்லப்பா, திரு. கோவை ஆவி, திரு. V. துளசிதரன்

குறும்படத் தகவல் அறிய → இங்கே ← சொடுக்கவும்...


கவிஞர் : விட்டுக் கொடுப்பதில் பிரச்சனையா...? இதென்ன புதுப் பிரச்சனை DD...?

DD : "எப்போதும் எந்தப் பிரச்சனை வந்தாலும், நான் மட்டுமே விட்டுக் கொடுத்துப் போகிறேன், அவர் விட்டுக் கொடுப்பதே இல்லை" என்று வீட்டிலே சொல்றாங்க... "எவ்வளவு பிரச்சனை வந்தாலும் கடைசியில் வெற்றி பெறுவது அவங்க தான்"னு உங்களுக்கு நான் சொல்லத் தேவையில்லை... எங்க பிரச்சனையே வேறு சார்... எனக்கும் நண்பர் ஆவிக்கும் விட்டுக் கொடுப்பதில் எந்தப் பிரச்சனையுமில்லை... ஆனால் யார் விட்டுக் கொடுப்பது என்பது தான் பிரச்சனையே...!


கவிஞர் : வீட்டிலே போட்டியா...? கணவனுக்கு எப்போதும் தோல்வி தான்... ஆனாலும் அது ஒரு சந்தோசமான தோல்வி... ஆனா இப்படி வீட்டிலே பேசிக் கொண்டு போனால், இது ஒரு புதுப் பிரச்சனையாக உருவாக வாய்ப்பிருக்கு DD...! விட்டுக் கொடுக்க வேண்டும்... முரண்டு பிடிக்காமல் விட்டுக் கொடுக்க வேண்டும்... ஒருவரின் கட்டாயத்திற்காக இன்னொருவர் விட்டுக் கொடுக்கக் கூடாது... விட்டுக் கொடுப்பதென்பது இயல்பாக நடக்க வேண்டும்...

DD & ஆவி : எங்க பிரச்சினையை நாங்க அப்புறம் சொல்றோம்...


கவிஞர் : நாம நடக்கும் போது நம்ம கைகால்களின் இயக்கத்தை எப்போதாவது கவனித்துப் பார்த்திருக்கிறோமா...? கொஞ்சம் கவனிங்கப்பா... நம்ம வலது கால் முன்னே போகும் போது, இடது கால் பின்னே போகிறது... இடது கால் முன்னே போகும் போது, வலது கால் பின்னே போகிறது... கால்களுக்குள் விட்டுக் கொடுத்தல் இருந்தால் தான் நாம் நடந்து முன்னே போக முடியும்... இதே போல் வீசுகிற கைகளுக்குள் விட்டுக் கொடுத்தல் இருந்தால் தான் நடையின் இயக்கத்தில் வேகம் கூட்ட முடியும்... இரண்டு கால்களையும் ஒரே நேரத்தில் முன்னே எடுத்து வைக்க முயன்றால் நடை நடைபெறுமா...? இது தான் வாழ்க்கை...! "ஜம்ப் செய்யலாம்"ன்னு சொல்ற DD அவர்களே, உங்களுக்குக் குறள் ஏதாவது சொல்லணுமா...?


DD : வேணாம் அப்புறம் சொல்லிக்கிறேன் ! அந்த நேரத்திற்குச் சின்ன பிரச்சனை தானே என்று தப்பித்து விடுகிறோம்... ஆனா அதுவே வளர்ந்து பெரிய மலையளவு பிரச்சனையாகும் போது ஜம்ப் செய்ய முடிவதில்லைன்னு சொல்ல வந்தேன்... கால்களுக்குள் விட்டுக் கொடுத்தல் போல... சூரியன் வரும் போது நிலவு விட்டுக் கொடுத்தல், நிலவு வரும் போது சூரியன் விட்டுக் கொடுத்தல்... நாள் நடக்கிறது இரவு பகலாய் - வாழ்வில் இன்பமும் துன்பமும் போல... புரிந்து உணராமல் முரண்டு பண்ணினால், எதிலும் யாரிடத்திலும் முட்டுக் கட்டை தான்... இயல்பாய் விட்டுக் கொடுத்தால் இன்ப வாழ்க்கை தான்... பிரச்சனை முற்றி கணவன் மனைவி இருவரில் யார் விட்டுக்கொடுப்பது என்று பிரச்சனை வந்தால், தீர்க்க எளிதான வழி இருக்கிறது... அது என்ன வழி தெரியுமா சார்...? இருவரும் சேர்ந்து அந்தப் பிரச்சனையையே கொஞ்ச நாள் கிடப்பில் போட்டு விட வேண்டியது தான்... கொஞ்ச நாளில் யாராவது ஒருவர் இயல்பாக வந்து விட்டுக் கொடுக்க முன்வந்து விடுவார்கள்... விட்டுக் கொடுப்பதே வீடு சிறக்க வழி... அனைத்தையும் மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு...! எப்பூடி ?

ஆவி : நல்லாத்தான் இருக்கு DD...! நம்ம பிரச்சனையைச் சொல்லுங்க...

DD : குடும்பத்திலேயோ, நண்பர்களுக்குள்ளேயோ, உறவினர்களுக்குள்ளேயோ பிரச்சனைன்னு ஒன்னு வந்துச்சின்னா, அதை மூணாவது மனிசங்க யார்கிட்டேயேயாவது எடுத்துப் போய் தீர்த்து வைக்கச் சொல்வது சரியா சார்...? முதலில் இதற்குப் பதில் தேவை...

கவிஞர் : மூணாவது மனிசன் யார்...? யாருக்கும் யாருக்கும் பிரச்சனையோ, அந்த ரெண்டு பேருக்கும் தொடர்புடையவராக, எந்தப் பிரச்சனையும் பொதுவான நபராக இருந்து ஆராய்பவராக, அந்த மூன்றாவது நபர் இருந்தால் நல்லது... ஆனால் இன்றைக்குப் பல வீடுகளில் கணவன் மனைவியர்க்கிடையே, நண்பர்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே பிரச்சனைகள் வருவதற்கே மூன்றாவது நபர்கள் தான் காரணமாக இருக்கிறார்கள்...! பலவகைப் பிரச்சனைகள் வீடுகளுக்குள் இல்லாமல், தெருவரை பரவுவதற்கு நாம் மத்தியஸ்தர்க்குச் செல்லும் மூன்றாவது நபர் தான் காரணம்...! அதனால் தான் சில வேளைகளில் "சாட்சிகாரன் காலில் விழுவதை விடச் சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்" என்று சொல்றாங்க... என்னைய மூணாவது மனிசனா நினைச்சாலும் பரவாயில்லை... உங்க பிரச்சனை என்னான்னு சொல்லுங்கப்பா...

ஆவி : நானும் DD-யும் ஒரு (கற்பனை) கடற்கரைக்குப் போனப்போ ஒரு முத்து கிடைத்தது... அது யாருக்குச் சொந்தம்ங்கிறது தான் பிரச்சனையே...DD : முதலில் நான் தான் சிப்பியைப் பார்த்தேன்... அதனால் முத்து எனக்குத் தான்... யாஹூ... Google, whatsஅப், ட்விட்...!


ஆவி : நாந்தான் சிப்பியை கையிலெடுத்து திறந்து உள்ளே முத்து இருப்பதைக் கண்டுபிடிச்சேன்... அதனால் முத்து எனக்குத் தான்...கவிஞர் : இதோ ப.ந.மு.க. தலைவர் வந்து விட்டார்... (பதியுலக நட்பு (/நடிகர்கள்...?) முன்னேறக் கழகம்)


சரவணன் : இனிய நண்பர் கவிஞருக்கு உதவ வந்து விட்டேன்... என்ன இது சண்டை...! சின்னபிள்ளத்தனமா இருக்கு...! பல ஆண்டுகளாக நாட்டு மக்களுக்குச் செய்வதைப் போலவே இங்கும் பிரச்சனையைச் சரி செய்கிறேன்... இதெல்லாம் ஜூஜூபி மேட்டர்...

சிப்பியை முதலில் பார்த்த DD அவர்களே, நீங்கள் சிப்பியின் மேல் ஓட்டை எடுத்துக் கொள்ளுங்கள்... சிப்பியை எடுத்த ஆவி அவர்களே, நீங்கள் சிப்பியின் கீழ் ஓட்டை எடுத்துக் கொள்ளுங்கள்... சுமுகமான தீர்ப்பு வழங்கியதற்காக, போனால் போகிறது... உள்ளே இருக்கும் முத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்...! நன்றி... வணக்கம்... வாழ்க வளமுடன்...!
ஆவி : அடடா.... வடை சே... முத்து போச்சே DD...! நல்ல வேளை ஒருத்தரை ஒருத்தர் திட்டி "புகழ்" பாடவில்லை... அப்படி செஞ்சிருந்தா நாம நம்மை புரிஞ்சிகிறோமோ இல்லையோ, மத்தவங்க நல்லாவே நம்மளப் பத்தி தெரிஞ்சிகிட்டு இருப்பாங்க... என்ன சொல்றீங்க DD...?

DD : சரியாச் சொன்னீங்க ஆவி...! எந்த உறவாக இருந்தாலும் சரி, நெருக்கமானவர்களுக்கிடையே வரும் பிரச்சனைகளை ஒருத்தருக்கொருத்தர் புரிஞ்சிக்கிட்டு, அவர்களுக்குள்ளேயே இயல்பாக விட்டுக் கொடுத்துத் தீர்த்துக் கொள்வதை விட வேறு சிறந்த வழி எதுவுமே இல்லை...!

சரி தானே நண்பர்களே...? புதுக்கோட்டையில் சந்திப்போம் :-


புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. விட்டுக்கொடுத்து தீர்ப்பதுதான் சரியான செயல். புகைப்படங்கள் அருமை. புதுக்கோட்டை சந்திப்புக்கு advance வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. இதுதான் குறும்படத்தின் கருத்தேவா? அல்லது அந்தப் படங்களை வைத்துக் கொண்டு உங்கள் கற்பனையா? விட்டுக் கொடுப்பவர்கள் கேட்டுப் போவதில்லை கேட்டுப் போனவர்கள் விட்டுக் கொடுத்ததில்லை என்று ஒரு பொன்மொழி சொல்வார்கள்! (வேறு யார், நம்ம துணிக்கடைக்காரங்கதான் இப்படி எல்லாம் ஸ்டிக்கர் தர்றாங்க!) நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 3. அன்புடைய நண்பருக்கு ,
  தாங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது .நல்ல ஆசிரியராகவும் சிறந்த மாணவராகவும் வருகிறீர்கள் .தங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. பதிவர் பிரச்சினைக்கான தீர்வு வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்களும் & வாழ்த்துக்களும்.

  குறும்படத்தில் நடிக்கிறீர்களா ? கதைக் கருவைத்தான் பதிவாக்கியுள்ளீர்களா?

  பதிலளிநீக்கு
 5. சிரிப்பு போலிசு மாதிரி டிடி & ஆவி போலீசா...? கடைசில லத்தி ஒருத்தருக்கு தொப்பி ஒருத்தருக்குன்னு விட்டுக் குடுத்திட்டீங்க போல...? :-)

  பதிலளிநீக்கு
 6. பரோட்டா கார்த்திக் குறும்படத்துல நீங்க பரோட்டாவா நடிச்சீங்களா இல்ல கார்த்திக்கா நடிச்சீங்களா...? அங்க எடுக்கப்பட்ட படங்களை வெச்சே நல்ல நல்ல கருத்துக்களை அதும் நம்ம கவிஞரை விட்டு சொல்ல வெச்சது சிறப்பு. அப்ஆவி குடந்தையூராரை இப்படி நாட்டாமையாக்கிப்புட்டீங்களே...!

  பதிலளிநீக்கு
 7. உண்மையைச் சொல்லியிருக்கீங்க.
  சில சமயம் மூன்றாவது ஆட்களிடம் பிரச்சினையை கொண்டு செல்லும்போது பிரச்சினையின் பரிமாணமே மாறிவிடுகிறது.பிரச்சினை பெரும் பிரச்சினையாகி விடுகிறது. அதற்குப்பின்னர் அந்த மூன்றாம் மனிதரும் பிரச்சினைக்குள் வந்து விடுவார்.

  குறும்படத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே!

  God Bless YOu.

  பதிலளிநீக்கு
 8. ஸ்டில்களை வைத்துக்கொண்டே விட்டுக்கொடுத்தல் பற்றிய சிறப்பான ஆக்கம். விட்டுக்கொடுத்துப் போகும் வாழ்க்கையில் பெரிய அளவில் சிக்கல்கள் உருவாவதில்லை. மிகச்சரியான கருத்து. பகிர்வுக்கு நன்றி தனபாலன். பயிற்சிப் பட்டறை சிறப்புற நடைபெற இனிய வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. குறும்படத்தில் நடித்தமைக்கு வாழ்த்துக்கள். படம் பார்க்க ஆவலாக இருக்கிறோம்
  சரவணன்தன்னோட தீர்ப்பு மூல உலகத்தை புரிய வச்சுட்டார்

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் சகோதரர்
  தங்களின் கற்பனை ரசிக்கும்படி உள்ளது. கற்பனை என்றாலும் வாழ்வியலுக்கு அவசியமான ஆலோசனைகள். ஐயா துளசிதரன் அவர்கள் எடுக்கும் குறும்படம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.புதுகை கணினி பயிற்சிப் பட்டறைக்கான தகவலை நண்பர்களுக்கு பகிர்ந்தமைக்கு சிறப்பான நன்றிகள். நேரில் சந்திப்போம் சகோதரரே. தங்கள் வருகைக்கு ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 11. பதிவின் ஆரம்பத்தில் சொன்னது போல், கோவை ஆவி அவர்கள் எடுத்த சில புகைப்படங்களை இணைத்து சிந்தனைப் பகிர்வாக...

  திரு. V. துளசிதரன் அவர்களின் குறும்படத் தகவல் அறிய இங்கே சொடுக்கவும்...

  பதிலளிநீக்கு
 12. முத்தான பதிவு. முத்தை எடுத்துக் கொண்ட நடுவரை நினைக்கையில் வேறே ஒரு கதை நினைவில் வருதே! ஹிஹிஹி, அப்பம் பங்கிட்ட கதை! :)))))

  நல்ல நடுவர், நல்ல நண்பர்கள், நல்ல பிரச்னைதான். :)))

  பதிலளிநீக்கு
 13. எந்த உறவாக இருந்தாலும் வரும் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு இயலாபாக மற்றவருக்கு விட்டுக்கொடுத்து வாழ்வதை விட சிறந்தது வேறொன்றுமில்லை என்ற முத்தாய்ப்பான உங்கள் கருத்தை ஆமோதிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்
  அண்ணா

  பதிவில் நல்ல கருத்துக்களை உரையாடல் வழி மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் குறும்படம் வெற்றிபெற வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 15. அடுத்த குறும் படத்திற்கு கதை வசனம் நீங்களே எழுதி விடலாம் போலிருக்கே !சிந்தனைப் பகிர்வு அருமை !
  த ம 7

  பதிலளிநீக்கு
 16. எந்த உறவாக இருந்தாலும் வரும் பிரச்சினைகளை ஒருவருக்கொருவர் புரிந்துகொண்டு இயலாபாக மற்றவருக்கு விட்டுக்கொடுத்து வாழ்வதை விட சிறந்தது வேறொன்றுமில்லை
  kalakarthik

  பதிலளிநீக்கு
 17. படங்கள் அனைத்தும் அட்டகாசம். விட்டுக்கொடுப்பதைப் பற்றி தாங்கள் கூறிய கருத்துகள் அமர்க்களம். இது ஒரு நல்ல தொடக்கத்தின் ஆரம்பம். வாழ்த்துக்கள் டிடி அண்னா.

  பதிலளிநீக்கு
 18. விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை! முத்து பஞ்சாயத்து !
  அருமை! பதிவு நன்று!

  பதிலளிநீக்கு
 19. அந்தப் பழைய கதையில - முழு ஆப்பமும் மூன்றாவது பார்ட்டிக்கே!.. ஆனால் - புதிய கதையில் ஆளுக்கு ஒரு சிப்பியாவது மிஞ்சியதே!.. அதுவரைக்கும் சந்தோஷம்..

  ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வதை விட சிறந்தது வேறொன்றும் இல்லை.

  பதிலளிநீக்கு
 20. Well said DD sir, I am waiting to see your and all other bloggers acting soon.... pls share us the link soon !!

  Good post, Timely post !

  பதிலளிநீக்கு
 21. ஹஹஹா.. DD.. நல்ல தகவலுடன் கூடிய கற்பனை உரையாடல்.. ரசித்துப் படித்தேன்..

  பதிலளிநீக்கு
 22. பதிவர்களின் பிரச்சினைக்கு தீர்வு சொன்ன பதிவர்களுக்கு நன்றி!
  த.ம.11

  பதிலளிநீக்கு
 23. வாழ்க்கைக்கு மிக அவசியமான ஒரு பண்பினை அழகா ஒரு பதிவாக்கியமை அருமை.
  குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. முதலில்
  குறும்படக் குழுவினருக்கு
  வாழ்த்துகள்!

  சிக்கலும் (பிரச்சனையும்) தீர்வும்
  சிறப்பான கையாளல்
  விட்டுக்கொடுப்பு என்பது
  இருசாரார் இணக்கமே - அது
  இயல்பாக அமையணும்
  நல்ல வழிகாட்டல்
  தங்களுக்குப் பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
 25. விட்டுக் கொடுப்பது என்பது நல்லதுதான். ஆனால் அதுவும் ஒரு அளவோடு இருந்தால் நல்லது. இன்றைய கலியுகத்தில் விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் நாம் இருந்த இடத்திலேயே இருக்க வேண்டியதுதான். குறுமபட நடிகர் ஆகிவிட்டீர்கள் போலுள்ளது. வாழ்த்துக்கள் :))

  பதிலளிநீக்கு
 26. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை. பகிர்வுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 27. சிந்திக்க வைக்கும் கருத்துக்களுடன் இனிய சந்திப்பு. முத்தான நல்லதொரு தீர்ப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 28. பயிற்சிப் பட்டறை, விட்டுக்கெடுத்தல்,
  படஙகள் நன்று நன்று.
  இனிய வாழ்த்து சகோதரா.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 29. குறும்படத்தில் நடித்தமைக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 30. படங்களை வைத்து பதிவை தேத்தியது அருமை

  பதிலளிநீக்கு
 31. விட்டுக் கொடுத்தல் இயல்பாக நடக்க வேண்டும். ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு இயல்பாக விட்டுக் கொடுப்பதே நல்லது. மூன்றாமவர் தலையீடு பிரச்னையை அதிகமாக்கும்.

  நன்றாகச் சொல்லியிருக்கிறீர்கள் DD!

  பதிலளிநீக்கு
 32. வாழ்த்துகள். குறும்படத்தில் நடித்திருப்பதற்கு. நல்ல செய்திப் பகிர்வு. பாராட்டுகள் சகோதரரே.

  அன்புடன்
  பவளா

  பதிலளிநீக்கு
 33. விட்டுக்கொடு விருப்பமுடன் உலகை வெல்லலாம் என்பதை சொல்லிவிட்டீர்கள். உலகை வெல்வது அவரவர்கள் கையில் தான் உள்ளது. நடிப்பில் மேலும் வளர அனைத்து உள்ளங்களுக்கும் அன்பனின் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 34. விட்டுக் கொடுத்தல் நல்ல பதிவு.
  தங்கள் நடிப்பில் வெளிவர இருக்கும் குறும் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 35. படங்கள் அருமை அண்ணா ..

  வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 36. விட்டுக்கொடுத்தலை அழகாகப் பதிவு செய்து விட்டீர்கள்..படங்கள் அருமை..குறும்படத்தில் நடித்ததற்கு வாழ்த்துகள்..படம் வெளியானவுடன் இணைப்புக் கொடுக்கவும். நன்றி.

  பதிலளிநீக்கு
 37. விட்டுக்கொடுத்து போக வேண்டும்! என்று மிகச்சிறப்பாக புரிய வைத்துவிட்டீர்கள்! படங்கள் கலக்கல்! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 38. விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டு போவதில்லை என்பது உண்மை !
  படங்கள் அருமை அண்ணா

  பதிலளிநீக்கு

 39. சில நாட்களாக திரு.செல்லப்பாவைக் காணோமே என்றிருந்தேன் இப்போதுதான் தெரிகிறது விட்டுக் கொடுத்துப் பாடம் எடுத்திருக்கிறார் என்று,நடிப்பு முயற்சிக்கும் குறும் படத்துக்கும் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 40. கவிஞரின் கருத்துக்கள் வாழ்வியல் யதார்த்தம் ...நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 41. நண்பர் D.D அவர்களுக்கு நான் கொடுக்கும் கருத்துரை எப்பொழுதுமே வருவதில்லையே ஏன் ?
  Killergee

  பதிலளிநீக்கு
 42. அருமையானக் கருத்துள்ள புதிவு தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 43. விட்டுக்கொடுத்தல் ஓகே.ஆனால் அது ஒருவரே செய்யும் போதும் ,மற்றும் மறு பக்கத்திலிருந்து எப்போதுமே பிடிவாதமாக இருந்தால் பிரச்னை தொடருமே தவிர முற்றுப் பெறுவதில்லை .எனவே அது இரண்டு பார்ட்டியும் turnல் செய்யவேண்டும்

  பதிலளிநீக்கு
 44. என்னால தான் வர முடியாம போச்சு.. அப்போ எனக்குதான் வட போச்சு :-)

  பதிலளிநீக்கு
 45. முத்தைக் கண்டு எடுத்தது போல மிகவும் அளப்பற்கரிய மதிப்புடைய முத்தான ஒரு பதிவு! நல்ல கருத்து, சிந்தனை! தங்கள் படைப்பிற்கு ஏற்றபடி, அங்கு குறும்படத்திற்காக வந்த போது ஏதேச்சையாக ஆவி எடுத்தப் படங்கள் மிகவும் பொருத்தமாக தாங்கள் சேர்த்திருப்பது மிகவும் அருமையான ஒரு ஆச்சரியம் நண்பரே! வாழ்த்துக்கள்!

  தங்கள் எல்லோரது வாழ்த்துக்களுக்கும், ஊக்கத்திற்கும் மிக்க நன்றி நண்பர்க்ளே!

  பதிலளிநீக்கு
 46. ஆஹா நல்லாத்தானே போய்க்கிட்டிருந்துச்சி???
  நடுவுல 'ஊத்துக்குளி பரமசிவம் எம்.எல்.ஏ.' (சரவணன்)
  வந்து... முத்தை லாவட்டிக்கிட்டுப் போய்ட்டாரே! பலே ஆளுப்பா அவரு!
  சுவையான பதிவு. நன்றி!

  பதிலளிநீக்கு
 47. யார் விட்டுக்கொடுப்பது என்பது நல்ல பிரச்சனைதான். ஒரு முடிவின் பலனுக்கு யார் பொருப்பேற்கிறார்களோ அவருக்காக மற்றவர் விட்டுக்கொடுப்பது இயல்பான ஒன்றாக இருக்கும். நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 48. ஆஹா.... குறும்படத்தையும் விட்டு வைக்கலையா!!!!! சூப்பர்!

  மூணாவது படம் ரொம்ப நல்லா இருக்கு.

  உறவுகளைப் பற்றிச் சொன்னது ரொம்பச் சரி.

  போயிட்டுப்போகுதுன்னு விட்டுத்தொலைச்சால் வம்பே இல்லை, கேட்டோ!

  பதிலளிநீக்கு
 49. பிரச்சினைகளில் மூன்றாவது நபராக இப்பொழுதெல்லாம் தொலைக்காட்ச்சிகள் பல குடும்பங்களில் நுழைந்து விட்டன... வீட்டினுல்லான பிரச்சினைகள் கூட காசாகும் காலமிது... புரிந்து நடந்து விட்டுக் கொடுத்தால் வம்பேது வழக்கேது...அருமையான படங்கள் சார்... இவற்றில் சிலவற்றை முக நூலில் பார்த்தேன்... குறும்படம் எதைக் குறித்தது சார்?

  பதிலளிநீக்கு
 50. யார் விட்டுக்கொடுப்பது ... நல்ல சொல்லியிருக்கீங்க சார் அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 51. விட்டுக் கொடுத்து வாழ்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் பதிவு.

  பதிலளிநீக்கு
 52. சரியான தீர்ப்பு.
  ஆசிரியர் மாணவர்கள் படம் மிக அருமை. கடைசிப் படம் ரொம்ப கலக்கல்.

  பதிலளிநீக்கு
 53. விட்டுக் கொடுக்க பெருமனது வேண்டும். அது அனைவருக்கும் இருப்பதில்லை. நல்ல ஒரு கருத்தை மையமாகக் கொண்டு ஆழமாகச் சிந்திக்கவைத்துவிட்டீர்கள். நன்றி. புதுக்கோட்டையில் சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 54. விட்டுக்கொடுத்தல் பற்றியது..
  நன்றாக இருந்தது ..

  பதிலளிநீக்கு
 55. சிந்திக்கவைக்கும் பதிவு.

  உண்மைதான் ! பெரும்பாலான சமயங்களில் பிரச்சனைகள பெரிதாவதற்கு மூன்றாவது நபர்கள்தான் காரணமாக அமைகிறார்கள். நமது பிரச்சனை பாதிக்கப்படாத அவர்களுக்கு பொழுதுபோக்கு செய்தியாக மாறிவிடுவதுதான் காரணம் !

  கணவன், மனைவி பிரச்சனைகள் நான்கு சுவர்களை தாண்டினால் தடுமாற்றம்தான் ! இதற்கு நம் சமூகத்தின் குடும்ப சூழலும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 56. புதுக்கோட்டையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன் நண்பரே
  18,5,2014 அன்று நானும், சோழநாட்டில் பௌத்தம் வலைப் பூ
  முனைவர் பா.ஐம்புலிங்கம் அவர்களும்
  வருகிறோம்

  பதிலளிநீக்கு
 57. மனப்பூர்வமான பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 58. நல்ல பகிர்வு....

  குறும்படம் வெற்றி பெற எனது வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு
 59. நல்லா இருக்குங்க உங்க நியாயம்! (இப்படிப் படிங்க அண்ணா)

  பதிலளிநீக்கு
 60. உங்களுடைய ஸ்டைலில் மற்றுமொரு சிறந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்..

  இங்க பாருங்க. இவர் ரொம்ப சிம்பிளா திறன்பேசி பற்றின தகவல்களை தொகுத்து தர்றார்.
  சுட்டி: நோக்கியா போனின் சிறப்பம்சங்கள்

  பதிலளிநீக்கு
 61. பாராட்டுக்கள்.
  படங்கள் பிரமாதம்.

  பதிலளிநீக்கு
 62. நல்ல கருத்துக்களைச் சொல்லி இருக்கிங்க. நகைச்சுவையாகவும் கூட.

  பதிலளிநீக்கு
 63. உங்கள் பதிவுகள் மிகவும் பயனுடையவை.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 64. நண்பருக்கு என் அன்பான வேண்டுகோள்.

  என் வலைப்பக்கத்தில் ‘துள்ளல்’ இருப்பதாக, அருணா செல்வம் அவர்கள் தம்முடைய இன்றைய பதிவில் [ http://arouna-selvame.blogspot.com/2014/05/blog-post_23.html] குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  அதைக் கவனித்துப் பிரச்சினை உள்ளதா என்பதைத் தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

  என் வலைப்பக்கக் கருத்துப் பெட்டியைத் திறந்து வைத்துள்ளேன்.

  அருணா செல்வம் அவர்களின் வலைப்பக்கத்திலேயே தகவல் அளித்தாலும் மகிழ்வேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 65. அன்பு நண்பருக்கு,

  பிளாக்கர் நண்பனில் ’துள்ளல்’ பற்றிய ஒரு பதிவு பார்த்தேன்.

  அவர் வழிகாட்டியபடி, Gadget இல் இருந்த ஒரு நிரலை நீக்கிவிட்டு, HTML இல் ஒரு நிரலைச் சேர்த்திருக்கிறேன்.

  பிரச்சினை சரியாகியிருக்கும் என்று நம்புகிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 66. விட்டுக் கொடுத்தல் பற்றி அழகிய படங்கள் மூலம் விளக்கி விட்டீர்கள்.
  குறும்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 67. அஹா .....எங்களுடைய வலைத் தளக் குடும்பத்தினர் நடிச்சு ஒரு முழு நீளப் படம் வராதா ! வந்தால் அதற்குப் பாட்டு எழுதி எழுதியே என் கைகளும் ஓய்ந்து போக வேண்டும் சகோதரா .அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் .சிறு துளி பெரு
  வெள்ளம் இந்த சின்னச் சின்ன முயற்சிகளின் வெற்றியானது என் எண்ணத்திற்கும் வித்திட்டுச் செல்ல மீண்டும் மீண்டும் வாழ்த்துகின்றேன் .மிக்க நன்றி சகோதரா பகிர்விற்கு .அது என்னவோ தெரியவில்லைத் தங்களின் ஆக்கங்களை பின் தொடரும் பட்டியலில் காண முடிவதில்லை அதனால் நானாக யோசித்து வந்தால் மட்டுமே
  நீங்கள் பதிவு எழுதிய விசயமும் தெரிய வருகிறது சகோதரா .மன்னிக்கவும் .

  பதிலளிநீக்கு
 68. அடடா இத்தனை நாளும் முயற்சித்து இன்று வெற்றி கண்டும் விட்டேன் .தங்களின் தளத்தில் இணைஞ்சாச்சு :)) .இனி தங்களின் பகிர்வுகளையும் உடனுக்குடன் காண முடியும் !!

  பதிலளிநீக்கு
 69. நீங்க குறும்படத்தில நடிக்கிறீங்களா? வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 70. நல்ல உரையாடல் அண்ணா.... குறிப்பா கட்டயமின்றி விட்டுகுடுத்தல் நல்ல வரி......

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.