🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉நமக்கான திரட்டி எது...?

புதிய பதிவர்கள் உட்பட அனைவருக்கும் வணக்கம்... வலைத்தளம் உருவாக்க சில பதிவுகளைப் பகிர்ந்து கொண்டேன்... அந்தப் பதிவுகளின் இணைப்பு தொழினுட்பம்


இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 18.10.2019

தளத்தைத் தொடங்கிப் பதிவுகள் பகிர்ந்து விட்டோம்... இணைத்த திரட்டிகள், g+, முகநூல் & முக்கியமாக நன்கு அறிந்த நண்பர்கள் மூலம் நம் தளத்திற்கு வருவார்கள்... நாமும் அவர்களின் தளத்தைப் பின்தொடருவோம்... தொடர வேண்டும்...! சரி, வழக்கமாக நாம் என்ன செய்வோம் :- நமது Blogger Dashboard கீழே Reading List என்பதைச் சொடுக்கி, வலதுபுறம் மேல் Blog I follow பக்கத்தில் உள்ள பென்சில் போன்ற ஐகானை சொடுக்குவோம்... Add என்பதைச் சொடுக்கி, நம் விருப்பமான தளங்களை அதில் சேர்த்து, அவர்களின் புதிய பதிவை அதன் மூலம் தொடர்வோம்... ஆனால் இதில் 300 தளங்களை மட்டுமே சேர்க்க முடியும்... இதை தவிர மற்ற புதிய தளங்களில் Email subscription இருந்தால், அதன் மூலம், subscribe செய்து தொடர்வோம்... அப்படித் தானே நண்பர்களே...? ஆனால் :-

1 வருடம் கழித்து நமது Reading List 300-ல் 3 பேர்களின் பதிவுகள் தான் வருவதாக வைத்துக் கொள்வோம்... [உண்மை தானோ...?] அவரவர் சூழ்நிலைகேற்ப பகிர்ந்து கொள்வதில் மாற்றம் இருக்கலாம்... சிறிது நாட்கள் கழித்துத் தொடரலாம் அல்லது விடையும் பெறலாம்... Reading List-லிருந்து எடுக்கவும் மனம் வராது...! ஒருவேளை நீக்கி விட்டால், மீண்டும் அவர்கள் பதிவை பகிர்ந்து கொண்டால் எப்படி நமக்குத் தெரியும்...? இது போல் பல குழப்பங்களைத் தீர்த்தது Google Reader...! வலைத்தளம் தொடங்குவதற்கு முன் Google Reader எனது வழிகாட்டி அல்லது வலைத்தள வங்கி...! ம்... அதுவும் போயிந்தே...!

நாம் தொடரும் அனைத்து தளங்களும் ஒரு தொகுப்பாக இருந்தது உட்பட பல வசதிகளை Google Reader செய்து கொண்டு இருந்தது... ஆனால் தனது சேவையை ஜூலை 1, 2013 அன்று நிறுத்திக் கொண்டது... அதன் பின் 1. feedly, 2. bloglines, 3. theoldreader, 4. Feed Booster (qsensei), 5. netwibes, 6. newsblur, 7. bloglovin, 8. protopage, 9. pulse, 10, newsvibe, 11. digg, 12. g2, 13. feedspot, 14. commafeed எனப் பலப்பல ரீடர்கள் வந்தாலும், அனைத்தையும் பயன்படுத்திப் பார்த்தாலும், இவைகளில் (எனக்கு) மிகவும் எளிதாக உள்ளது f e e d l y ரீடர் ! வாங்க போவோம்...! + திரட்டுவோம்...!

நமக்கான திரட்டி எது...?
இன்றைய நிலவரப்படி இந்த ரீடர் தான்...!

Blogger A/c-ல் தானே உள்ளீர்கள்... மற்றொரு tab-ல் டைப் செய்து என்டர் (↵) தட்ட வேண்டியது இது → https://feedly.com ← இங்கேயும் சொடுக்கலாம்... அதில் Login என்பதைச் சொடுக்கி, Continue with Google என்பதைத் தேர்வு செய்து விட்டால், உங்களுக்கான திரட்டி தயார்...! இடது புறம் உள்ள Create New Feed என்பதை சொடுக்கி, வரும் திரையில் Title என்பதில், வலைப்பூக்கள் என்று தட்டச்சு செய்து விட்டு, Save என்பதைச் சொடுக்குங்கள்... ADD CONTENT-யை சொடுக்கி, உங்களின் விருப்ப வலைத்தளத்தின் url-யை ஒவ்வொன்றாக இட்டு, அந்த தளத்தை சொடுக்கி, Follow என்பதைச் சொடுக்குங்கள்... மீண்டும் Create New Feed மூலம், அந்தத் தளத்திற்கேற்ப பிரிக்கலாம் இப்படி → கணினித்தகவல்கள், சமையல், ஆன்மீகம், உடல்நலம், செய்திகள், இ-புத்தகம் மற்றும் நீங்கள் வாசிக்கும் அனைத்து தளங்களும்...!

பயன்கள் சில: 1) இதில் 1000 தளங்கள் வரை சேர்க்கலாம்...! 2) பதிவு எழுதும் போது Until jump break செய்யாதவர்களின் பதிவுகளை, அவர்களின் தளத்திற்குச் செல்லாமலே இதில் எளிதாக வாசிக்கலாம் + ஒரே பதிவை எத்தனை முறை வெளியீடு செய்துள்ளார்கள், பதிவில் என்னென்ன மாற்றம் செய்து முடிவாகப் பதிவை வெளியீடு செய்துள்ளார்கள் (?) எனும் பதிவரின் குழப்பத்தை அறியலாம்...(!) 3) இதிலிருந்தே பல சமூக வலைத் தளங்களில் பதிவுகளைப் பகிரலாம். உங்களின் பகிர்வு உட்பட எந்தப் பகிர்வாக இருந்தாலும், அதன் மொத்த பரிந்துரையை அறிந்து, பகிர்வின் தரத்தை அறியலாம்... 4) Refresh-யை சொடுக்குவதன் மூலம், புதிய பதிவுகளைப் பகிர்ந்தவுடன் இதில் காணலாம்... பயன்படுத்திப் பார்த்தால் நிறையத் தெரிந்து கொள்ளலாம்... எளிமை தான் என்றும் பலம் → நமக்கும்...!

கிட்டத்தட்ட 100 தளங்களுக்கு மேல் திரட்டிகளை இணைப்பது உட்பட எனக்குத் தெரிந்த சில நுட்பங்களைச் செய்து கொடுத்திருக்கிறேன்... ஆனால் இந்தப் பதிவின் சாரத்தை அவர்களிடம் சொல்லத்தான் முடியுமே தவிர, இந்த வலைத்தள வங்கியை அவர்களாகவே உருவாக்க வேண்டும் என்று இந்தப் பதிவின் மூலம் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்... அதை விட ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் சிக்காத, திரட்டிகளே இணைக்காத, என்றும் புதியவைகளைத் தேடும் ஆர்வமுள்ள, பல வருடங்களாகப் பகிரும் அன்பர்களுக்குப் பலதும் புரிந்திருக்கும் என்பதை நம்புகிறேன்... நன்றி...!

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. வணக்கம்
  அண்ணா.

  பதிவு எழுதுவதை விட திரட்டிகளில் இணைப்பதன் வழி நமது படைப்புக்களை அறியச்செய்யும் மிக அருமையாக தெளிவான விளக்கத்துடன் சொல்லிய விதம் நன்று வாழ்த்துக்கள்

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 2. மிக நன்றி தனபாலன். இதைப் பயன்படுத்திப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ..

  பதிலளிநீக்கு
 4. அருமையான தெளிவான விளக்கப்பகிர்வு .

  பதிலளிநீக்கு
 5. தெளிவான விளக்கங்கள்..
  பயனுள்ள பகிர்வுகள்.
  பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 6. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி தனபாலன் ஐயா.

  -அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்.
  www.99likes.in

  பதிலளிநீக்கு
 7. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
  ஆனாலும் தங்களிற்கு இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்

  பதிலளிநீக்கு
 8. அருமையான விளக்கம் தனபாலன் அண்ணா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. பழைய....புதிய பதிவர்களுக்கு அருமையான ஆலோசனை நன்றி....!

  பதிலளிநீக்கு
 10. தங்கள் தொழில்நுட்பப் பதிவுகளை நான் அதிகம் விரும்புபவன். நானும் கணினித் துறை அறிவைப் பெற்றமையால்...
  நீங்கள் எளிதாக உள்ளத்தில் பதிய வைக்கும்படி வெளிப்படுத்துவதை பலரும் விரும்புவர். இதனால் பதிவர்கள் எல்லோரும் நன்மை அடைவர்.
  தங்கள் பணியைத் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 11. தெளிவான விளக்கங்கள். மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி.

  பதிலளிநீக்கு
 12. அப்பப்பா ஏகப்பட்ட விஷயங்கள் !
  தொகுத்து அனைவரும் பயன் தரும் வகையில் தந்தமைக்கு நன்றி.ஒரு புத்தகமாகப் போட்டால் அனைவருக்கும் referசெய்ய வசதியாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 13. ஏகப்பட்ட பயனுள்ள விவரங்கள் DD. எனக்கு முன்னர் வந்த சில சந்தேகங்களுக்கு விடை இதில் இருக்கிறது. இருந்தாலும் நான் உங்களை அப்புறம் ஒரு ஓய்வான நேரத்தில் அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்! :)))

  பதிலளிநீக்கு
 14. நவீன நாரதர் போல எப்படி எல்லாத்த தளங்களுக்கும் இநத டி.டி.யால் சஞ்சாரம் செய்ய முடிகிறது என்று பலமுறை நினைதததுண்டு. இப்போ தெரிந்தது விஷயம். மிகமிகமிகப் பயனுள்ள விஷயம் நண்பா நீங்க பகிர்ந்திருப்பது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 15. மிக அருமையான பயனுள்ள பதிவு
  நன்றி

  பதிலளிநீக்கு
 16. வலைப் பூவில்தான் எத்தனை எத்தனை சூட்சுமங்கள்
  வலைச் சித்தர் என்னும் பட்டம் தங்களுக்கு மிகவும் பொருத்தம்தான்.
  மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
  குறித்துக் கொண்டேன்
  நன்றி
  தம 6

  பதிலளிநீக்கு
 17. பதிவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வண்ணம் ரகசியத்தை வெளியிட்டதற்கு நன்றி !
  த ம 8

  பதிலளிநீக்கு
 18. மிக்க நன்றி தனபாலன் சார். பயன்படுத்திக் கொண்டேன்.

  பதிலளிநீக்கு
 19. தங்களின் அனைத்துப்பதிவுகளும் மிக அருமை. அதனைப்போன்றே இந்தப்பதிவும். எங்களைப்போன்ற புதுமுகங்களுக்கு வழி காட்டியாய் இருந்து ஏணியில் ஏற்றிவிடும் மோதிரக்கை ஜாலம். அடுத்த முயற்சி ஃபீட்லி தான். நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 20. அனைத்தும் பதிவர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை.
  மிகவும் பயனுள்ள தகவல்கள்
  நன்றி

  பதிலளிநீக்கு
 21. பயனுள்ள பதிவு. ஒவ்வொன்றாக செய்துபார்க்க ஆசைதான். ஆனால் நேரம்தான் கிடைப்பதில்லை. எனினும் முயற்சி செய்கிறேன்..எளிய நடையில் விளக்கியிருக்கும் உங்களுக்கு எனது நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 22. மிகவும் பயனுள்ள விஷயங்களை வாரி வழங்கியமைக்கு மிக்க நன்றி..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 23. அருமையான,மிகவும் பயனுள்ள விடயத்தினை எளிமையாக புரியும்படி தந்தமைக்கு ரெம்ப நன்றிகள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. அருமையான தொகுப்பு...
  பலருக்கும் பயன்படும்....

  பதிலளிநீக்கு
 25. ஒரு சந்தேகம்: பாலோயர் விட்ஜெட் பயன்பாடு நிறுத்தி பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அந்த விட்ஜெட்டை இன்னமும் நாம் வலைப்பூவில் வைத்து, அதன் மூலம் நண்பர்கள் இணைந்து வருகிறார்கள். இதில் இணைபவர்களின் ரீடரில் நமது வலைப்பூ காட்டுமா? அல்லது நாமும் பாலோயராக இணைந்தால் நமது ரீடரில் அவர்களது வலைப்பூ காட்டுமா??? (கேள்வி புரியவில்லை எனில் தொடர்பு கொள்க DD :-) )

  பதிலளிநீக்கு
 26. எளிய நடையில் பயனுள்ள தகவல்கள் நன்றி

  பதிலளிநீக்கு
 27. அருமையான தேவையான பதிவு தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 28. அய்யா முத்துநிலவன் சொன்னைத ஆமோதிக்கிறேன் சித்தரே!

  பதிலளிநீக்கு
 29. மிகவும் பயனுள்ள பதிவு. கூகுள் ரீடர் போனபின் வேறு ரீடர்கள் பற்றி அறியாதிருந்தேன். இன்று பல ரீடர்கள் பற்றியும் அதை பயன்படுத்துவது பற்றியும் அறிந்தேன். மிக்க நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 30. நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் டிடி அண்ணா.
  பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி. மூத்த பதிவர்களுக்கும், எங்களைப் போன்று புதிய பதிவர்களின் புரிதலுக்கும் தங்களின் பொன்னான நேரத்தை செலவிட்டு எழுதியமைக்கு நன்றி அண்ணா.

  பதிலளிநீக்கு
 32. திரட்டிகளை என்றும் விரும்பியதில்லை. இருந்தாலும் பதிவுகளை படிக்க, பதிவர்களின் வலைத்தளங்களை இணைத்துப் பதிவுகளைப் படிக்க, தங்களின் இப்பதிவு ஆலோசனைப் பதிவாக , அவசியமான பதிவாக பகிர்ந்தமைக்கு நன்றி சகோ!

  பதிலளிநீக்கு
 33. சகோதரரின் இணையத்தமிழ் தொண்டிற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 34. பீட்லி (Feedly) பற்றிய இந்த விளக்கமான பதிவுக்கு நன்றி!

  எனக்கோர் ஐயம்!
  படிப்பான்கள் மூலம் மற்ற தளங்களைத் தொடர்வது இருக்கட்டும். இப்படிப் படிப்பான்களில் நாம் நம் தளத்தை இணைப்பதால் நம் தளத்துக்குப் பின்னிணைப்பு (backlink) கூடுதலாக வாய்ப்புண்டா? சாதாரண திரட்டிகள், சமூக வலைத்தளங்கள் ஆகியவற்றில் நாமேதான் ஒவ்வொரு முறையும் நம் பதிவைப் பகிர வேண்டியிருக்கிறது. ஆனால், பீட்லி, பீட்சுபாட் (feedspot) போன்ற படிப்பான்களில் நம் தளத்தை ஒருமுறை இணைத்துவிட்டால், பின்னர் நாம் இடும் ஒவ்வோர் இடுகையும் தானாகவே அங்கே வெளியாகி விடுகிறது. இதனால் நம் பின்னிணைப்புகள் கூடுதலாகுமா, அல்லது இவை மிகவும் மூடுதன்மை (closed) வாய்ந்தவை என்பதால், இவற்றின் இணைப்புகள் (links) பின்னிணைப்புகளாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளப்பட மாட்டாவா?

  பதிலளிநீக்கு
 35. அனைவருக்கும் உதவும் அருமையான தகவல்கள்! அன்பு நன்றி!!

  பதிலளிநீக்கு
 36. மிகவும் பயனுள்ள பதிவு.
  நான் தங்களுடைய வலைத்தள நுட்பம் பதிவுகளின் மூலம் என்னுடைய வலைப்பூவை இன்னும் மாற்றவில்லை. கூடிய விரைவில் மாற்றுகிறேன். பிறகும் மீண்டும் இந்த பதிவிற்கு வந்து பார்க்கிறேன்.

  பயனுள்ள விஷயங்களை பகிர்ந்துக் கொண்டதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 37. மிக அருமையான திரட்டி ஒன்றை அறிமுக படுத்தியதுடன் இணைப்புக்கள் கொடுத்து சிறந்த தளங்களை இணைப்பதற்கு வழியும் காட்டிவிட்டீர்கள்! அருமை! வாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் உங்கள் சீரிய பணி! நன்றி!

  பதிலளிநீக்கு
 38. நிச்சயம் என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு பயனுள்ளதே... நன்றி திரு.தி.த.ஸார்

  பதிலளிநீக்கு
 39. பதிவுக்கும், பகிர்வுக்கும் நன்றி...

  பதிலளிநீக்கு
 40. விளக்கமான பதிவு. முயற்சித்திப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. இன்னும் சில வாரங்களுக்கு எந்தப் பக்கமும் வரமுடியாத சூழ்நிலை. நீங்க எழுதியுள்ள பதிவுகளை நிச்சயம் ஒரு பதிவில் இணைப்பு கொடுத்து அறிமுகம் செய்ய எண்ணமுண்டு.

  சிறப்பான பணி. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 42. feedly உதவியை உங்கள் உதவியால் நாடினேன். நன்றி சார் பகிர்விற்கு,

  பதிலளிநீக்கு
 43. மிக்க நன்றி சகோ! நல்ல பதிவு, எனக்கு தான் செயல் படுத்த நேரம் கிடைப்பதில்லை.பயனுள்ள பகிர்வு. வாழ்த்துக்கள் ......!

  பதிலளிநீக்கு
 44. நல்லாத் தான் இருக்கு. ஆனால் தனியாகச் செய்ய யோசிக்கணும். :))))

  பதிலளிநீக்கு
 45. சிறப்பாக வழி காட்டுகிறீர்கள். விரைந்து பின்பற்ற நினைக்கிறேன்.

  மிக்க நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 46. பயனுள்ள பதிவு. புதியவை அறிந்துகொண்டேன்

  பதிலளிநீக்கு
 47. என்னை போன்ற புதியவர்களுக்கு மிகவும் பயனுள்ள விளக்கங்கள்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr
  ( தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகைதந்து குறைநிறைகளை பதியுங்கள்.நன்றி. )

  பதிலளிநீக்கு
 48. ஒவ்வொரு பதிவிலும் தங்களின் முத்திரையைப் பதித்து வருகின்றீர்கள். தாங்கள் சொன்ன உத்தியைப் பயன்படுத்த முயற்சிப்பேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 49. பயனுள்ள பதிவு பயன் பெறுவோம்
  இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 50. ஊரில் இல்லாததால் இந்த பதிவைப் படிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டாது. இந்துதான் படித்தேன். பதிவர்கள் அனைவர்க்கும் உபயோகமான பதிவு.

  இந்த பதிவு எ(ந)மக்கான பதிவு என சொல்லுவேன்!

  பதிலளிநீக்கு
 51. அருமை. உடனேயே நானும் feedly இல் நானும் இணைந்து கொண்டு விட்டேன். நமக்கான திரட்டி நல்லாத்தான்யா இருக்கு. இந்த மாதிரி சக பதிவர்களுக்கும் வழிகாட்டும் பதிவுகளை வெளியிட உங்களை மிஞ்ச ஆளே இல்லை என்பேன். நம்ம வலைத்தளப் பக்கமும் கொஞ்சம் வாங்களேன்?

  பதிலளிநீக்கு
 52. நமக்கான திரட்டிக்கு ஆப்பு வைத்து விட்டார்களே? விபரங்களுக்கு:http://blog.feedly.com/

  பதிலளிநீக்கு
 53. feedlyயில் இணைக்க வேண்டும் என்று ரொம்ப நாளா யோசிச்சு, செய்யாம இருந்தேன்,,,நினைவூட்டி விட்டீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 54. அருமையான பதிவு & பயனுள்ள பதிவு மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 55. வணக்கம் சகோதரர்!

  நான் வலையுலகில் சில காலம் இல்லாதபோது வெளியிடப்பட்ட இப் பதிவை இப்பொழுதான் பார்த்தேன். அதுவும் இதன் அவசியம் அவசரம் வந்த பின்தான் கண்டு கொண்டேன்.
  அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி!

  அருமையான பதிவு. இதன்படி இப்பொழுது செய்துவிட்டேன். கூகில் பதிவில் இருந்த பதிவர்களின் புதிய பதிவுகள் யாவும் உடனுக்குடன் காணக்கூடியதாக இருக்கின்றது.

  என் மனமுவந்த நன்றியுடன் வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
 56. இன்று தான் விட்டுப் போன வாசிக்காமல் விட்ட அத்தனை பதிவுகளையும் படித்தேன். வாட்ஸ் அப் குழுமத்தை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வருவது என்பது தற்போதைய சூழ்நிலையில் மகத்தான் சாதனையாகவே இருக்கும் என்று நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 57. feedly.com..ல இன்ஸ்டால்... ஆட்விஷ் லிஸ்டுனுதான் வருது. ஸைன் இன் ஆப்ஷன் இல்லையே.எப்படி இணைச்சைக்கறது.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.