வீண்முயற்சி... விடாமுயற்சி... (பகுதி 4)


நண்பர்களே! குழந்தைகளின் படைப்புகளைப் பதிவிட்டு நிறைய மாதங்கள் ஆகி விட்டன... இதோ வருங்காலப் படைப்பாளிகள்... முந்தைய பதிவுகளைப் படிக்காதவர்கள் தலைப்பின் மேல் சொடுக்கவும்...


இணைப்பு: "Mr.Karthick suriya's excellent drawing:" நன்றி

(1) " முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி ஒன்று) "

(2) " நம்மையன்றி வேறு யாரால் முடியும் ? (பகுதி இரண்டு) "

(3) " உன்னால் முடியும் நம்பு (பகுதி மூன்று) "

இவை எல்லாம் பள்ளிக்கூட மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! மனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாகத் தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளை அடங்கிய, அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று ஊற்று நீர் போல் ஊற்றெடுத்துள்ளது. முதலில்...

கொஞ்சம் கவிதை...

இயற்கை

வீடு என்பது வசிப்பதற்கு !
காடு என்பது ரசிப்பதற்கு !
காற்று என்பது சுவாசிப்பதற்கு !
இயற்கை என்பது பாதுகாப்பதற்கே !

அம்மா

என்னைச் சுவாசிக்க வைத்த அவருக்கு...
நான் வாசித்த முதல் கவிதை 'அம்மா'...

விடாமுயற்சி

வெற்றியைத் தேடி அலைந்த போது
"வீண் முயற்சி" என்றவர்கள்
வெற்றியை நான் அடைந்ததும்
"விடாமுயற்சி" என்றார்கள்.

வெற்றி

காயங்கள் இல்லாமல்
கனவு காணலாம்
வலிகள் இல்லாமல்
வெற்றி காண முடியாது

மொபைல் மசாலா

சந்தோசத்தை இன்பாக்ஸில் வை
கவலைகளை அவுட்பாக்ஸில் வை
சிரிப்பை சென்ட் பண்ணு
கோபத்தை டெலிட் பண்ணு
அப்புறம் என்ன...
உன் வாழ்க்கை ரிங்க்டோனாக சிரிக்கும்.

நிலவு

ஆயிரம் கோடி விண்மீன்கள்
விண்ணிலிருந்தாலும்
இரவுக்கு அழகு - நிலவு தான்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
வாழ்க்கைக்கு அழகு - அன்பு தான்

பெற்றோரின் தியாகம்

நமக்காய் செங்கல் சுமந்து
மண்ணை மறைவார்கள்...
நமக்காய் விறகைச் சுமந்து
சாம்பலாய் நிற்பார்கள்...
நம் வாழ்வில் ஒளி தந்து
தன் கண்ணொளி இழப்பார்கள்...
அன்னை, தந்தை தியாகம் இது எனினும்
முன்னைய நிலை இல்லை உலகில்
முற்றும் நமக்காய் துறந்த பெற்றோர்க்கு
முதியோர் இல்லமே உறவாய் உள்ளது.
அவ்வில்லமே மகனின் மகிழ்ச்சி என்பதால்
முதுமையிலும் அக்கடினத்தை மகிழ்வுடன் ஏற்கின்றனர்... நண்பனே...!
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
பெற்றோர் தியாகத்தை மதிக்காமல்
பிற்காலம் எத்தனை தியாகம் செய்தாலும்
ஏற்காது உன்னை இந்த உலகம்...
போற்றாது உன்னை உன் சந்ததி...
போற்றுவோம் பெற்றோரின் தியாகத்தை
பேணிக்காப்போம் அவர்களின் காலம் வரை...

அழகு

அன்பிற்கு அழகு அறிவு
அறிவிற்கு அழகு கல்வி
கல்விக்கு அழகு ஒழுக்கம்
ஒழுக்கத்திற்கு அழகு படிப்பு
படிப்பிற்கு அழகு பட்டம்
பட்டத்திற்கு அழகு வேலை
வேலைக்கு அழகு கடமை
கடமைக்கு அழகு நேர்மை
நேர்மைக்கு அழகு உண்மை
உண்மைக்கு அழகு உழைப்பு
உழைப்பிற்கு அழகு ஊதியம்
ஊதியத்திற்கு அழகு ஈகை
ஈகைக்கு அழகு கருணை
கருணைக்கு அழகு இரக்கம்
இரக்கத்திற்கு அழகு அமைதி
அமைதிக்கு அழகு இறைவன்
இறைவனுக்கு அழகு அருள்
அருளுக்கு அழகு பக்தி
பக்திக்கு அழகு முக்தி
முக்திக்கு அழகு நிறைவு.

பேச்சு

மெதுவாகப் பேசு
அது உன் ரகசியங்களைப் பாதுகாக்கும்.
உண்மையைப் பேசு
அது உன் வார்த்தையைப் பாதுகாக்கும்.
கலந்து ஆலோசனை செய்
அது உன் சிந்தனையைப் பாதுகாக்கும்.

Three Nice Thoughts

Kills Tension Before Tension Kills You...
Reach Your Goal Before Goal Kicks You...
Live Life Before Life Leaves You
ஒரு நல்ல மாணவர்க்கு இலக்கணம்

ஒரு பொருளாளரின் செயல் - திறமை
ஒரு குருவியிடமிருக்கும் - பணிவு
பாம்பின் கூர்மையான - விவேகம்
புறாவின் கட்டற்ற - குணம்
இனியவை எதிர்நோக்கும் - மனப்பான்மை
அன்பு, உண்மை, நீதியில் உறுதி
இறைவனின் கருணையில் நம்பிக்கை
இத்தனையும் இருப்பவனே ஒரு நல்ல மாணாக்கன்.

தந்தை பாசம்

அடுத்த ஜென்மத்தில் நான்
செருப்பாகப் பிறக்க வேண்டும்... ஏனெனில்,
அப்பாவின் காலில் மிதிபட அல்ல,
என்னைச் சுமந்த அவரை நான் ஒரு முறையாவது
சுமப்பதற்காக...

கொஞ்சம் ... ஹி... ஹி... ஹி...

குட்டி கொசு : எனக்கு உலகத்திலே ரொம்ப மரியாதை கொடுக்கிறாங்க...

தாய் கொசு : எத வச்சி சொல்றே...?

குட்டி கொசு : என்னைப் பார்த்ததும் உடனே ஃபேனை போட்டு வரவேற்கிறாங்க...!

ஒரு குத்துச் சண்டை வீரர் மற்றொரு குத்துச் சண்டை வீரருக்கு எப்படி கடிதம் எழுதுவார்...?

பலம் பலமறிய ஆவல்...!

டிரைவர் : சாரி சார், பெட்ரோல் தீர்ந்து விட்டது... ஒரு அடி கூட ஆட்டோ முன்னால் நகராது...

சர்தார் : ஓகே... ரிவர்ஸ்லே எடு... வீட்டுக்காவது போகலாம்...

கொஞ்சம் பொன் மொழிகள்

மரியாதையைப் போல மலிவான பொருள் வேறில்லை - ஸ்பெயின்

மரியாதை செலுத்தி தீமையடைந்தோர் இல்லை - இத்தாலி

மரியாதையுள்ளவன், மரியாதையற்றவர்களிடம் மரியாதையைக் கற்கிறான் - துருக்கி

நல்லவரோ, தீயவரோ, மரியாதையுடன் சென்றால் கதவுகள் திறக்கின்றன - இங்கிலாந்து

மரியாதையைக் கேட்டால் கோட்டைகளும் உனக்கு வழிவிடும் - செக்கோஸ்லோவாக்கியா

கொஞ்சம் ஒரு கட்டுரை - மரியாதை - அது மனித மாண்பு

செல்வந்தரான ஒரு பெற்றோருக்கு யுவராணி ஒரே ஒரு மகள். மிக அழகானவள். அவளைச் செல்லமாக வளர்த்ததினால், அவள் மற்றவர்களை மதிக்காமல் வளர்ந்தாள். தான் அழகானவள், அறிவானவள், சிறந்தவள் என்று ஆணவத்தோடு மற்றவர்களை ஏளனமாகப் பேசுவாள். கல்லூரியில் தான் பெரிய செல்வந்தருடைய மகள் என்று பெருமையடித்துக் கொள்வாள்.

ஒரு நாள் "நாளை என் பிறந்த நாள். என் அம்மாவிடம் இருந்து நல்ல பரிசு பள்ளிக்கு வரும்" என்று அவள் தம்பட்டம் அடித்துக் கொண்டாள். அவளது தாய் அவளைத் திருத்துவதற்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம் என்று எண்ணி, அவளுக்குப் பிறந்த நாள் பரிசாக, 3 பொட்டலங்களை அனுப்பினாள். அதில் 1,2,3, என்று குறிக்கப்பட்டிருந்தது. அவள் அன்று தன் தாயிடம் இருந்து மூன்று பொட்டலங்கள் வந்திருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

அதில் முதலில் 1 என்று குறியிட்டதைத் திறந்தாள். அதில் ஒரு முகம் பார்க்கும் கண்ணாடி இருந்தது. அதில் "இது நீ இருக்கும் நிலை" என்று எழுதியிருந்தது. அதைக் கண்டு கடும் கோபம் உற்றாள். பின் 2 என்று குறியிட்டதை பொட்டலத்தைத் திறந்தாள். அதில் ஒரு மண்டையோடு படம் இருந்தது. அதைக் கண்டு ஆத்திரம் அடைந்தாள். அதில் "இது உனக்கு வரப் போகும் நிலை" என்று எழுதியிருந்தது. கோபத்துடன் 3 என்று குறியிட்டதைத் திறந்தாள். அதில் ஒரு அழகிய மரியாதை மிக்க பெண்ணின் உருவம் இருந்தது. அதில் "நீ இருக்க வேண்டிய நிலை இது" என்று எழுதியிருந்தது. அதை வாசித்ததும் அவள் ஆணவம் குறைந்தது. அவள் அன்றிலிருந்து அந்தப் பெண்ணைப் போல் மரியாதை, பணிவு, அன்பு போன்ற பண்புகளை வளர்த்தாள்.

வாழ்க்கை என்பது ஒருமுறை
வாழ்த்தட்டும் பல தலைமுறை
என்பதற்கேற்ப மரியாதையுடன் - பணிவுடன் வாழ்வோம்.

நண்பர்களே ! உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும். மிக்க நன்றி ! தொடரும்...

காஃபி குடிச்சிட்டீங்களா...? அப்போ இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி!!

  தீய வேலை செய்யுதோ...?

  சர்தார் ஜோக்,,

  ஹா,,, ஹா,,, ஹா,,,

  கலக்கல் தான் ,,

  தொடருங்கள்,,

  பதிலளிநீக்கு
 2. என் தந்தை என்னைச் சுமந்தார்.
  அவரை சுமக்க வேண்டும்
  அதற்கு அடுத்த சென்மத்தில்
  செருப்பாக பிறக்கவேண்டும்.

  கேட்க நல்லாத்தான் கீது..
  ஏம்பா !!
  வீட்டுக்காரிகிட்டே கேட்டுகிட்டு தான்
  எழுதினயா ?

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 3. அழகான கவிதைகள்! பெற்றோர் கவிதை வரிகள் அற்புதம்! நகைச்சுவை கலக்கல்! ஆக மொத்தம் குழந்தைகளுக்கு என் வாழ்த்துக்கள்! பதிவிட்ட தங்களுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 4. அண்ணே கொஞ்சம் கொஞ்சமா கொடுங்கண்ணே...திகட்டுது....சிறு படைப்பாளிகள்..கான்செப்ட் நல்லா இருக்கே...சிருவர்களுக்கென்று வலைத்தளம் திரட்டி என்று எதுவும் உண்டா?

  பதிலளிநீக்கு
 5. அன்பு நண்பரே,

  தங்களின் மின்னஞ்சல் அழைப்பில் இருந்த வார்த்தைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்த்து. பாராட்டுக்கள்.

  அதன்படியே விடாமுயற்சி செய்து இங்கு வந்தேன். வீண் முயற்சியாகாமல் பின்னூட்டமிடவும் முடிந்தது. மகிழ்ச்சி.

  அருமையான படைப்பு.
  அன்பான பாராட்டுக்கள்.

  அன்புடன்
  VGK

  பதிலளிநீக்கு
 6. அன்னை இயற்கை என அனைத்து வரிகளுமே சிறப்பு.
  தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 7. அருமை அருமையான தொகுப்பு தொடருங்கள் அண்ணே

  அமர்க்களம் கருத்துக்களம்
  தமிழ் பேசும் மக்களை ஒன்றினைக்கும் களம்.
  http://www.amarkkalam.net

  பதிலளிநீக்கு
 8. மனிதத்தை மதித்து மனிதனாக வாழ உதவும் அடிப்படைப் பண்புகளாக தியாகம், மனிதநேயம், வாய்மை, நன்றி கூறுதல் போன்ற நற்பண்புகளை அடங்கிய, ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று ஊற்று நீர் போல் ஊற்றெடுத்துள்ள மிக அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்...

  பதிலளிநீக்கு
 9. மொபைல் ஜோக் அருமை
  அம்மா அப்பா பற்றிய கவிதை வரிகள் நெகிழ வைத்தது
  புத்திலசாலி தாயார் கட்டுரை மிக அருமை
  இவையெல்லாம் சிறுவர்களின் படைப்புகளா !!!!fantastic
  எனது வாழ்த்துகளை அவர்களுக்கு சேர்த்து விடுங்கள்

  பதிலளிநீக்கு
 10. அன்பு, வெற்றி, விடாமுயற்சி, மொபைல் மசாலா. அம்மா, நல்ல மாணவருக்கு இலக்கணம் எல்லாமே மிக அருமை. மற்றவை நன்று.

  பதிலளிநீக்கு
 11. "செருப்பாக பிறக்கவேண்டும்"

  மண்ணானாலும் திருச்செந்தூர் மண்ணாவேன்---என்ற பாட்டு நினைவிற்கு வருகிறது.

  பதிலளிநீக்கு
 12. மினஞ்சல் மூலம் வரும் தங்கள் பதிவு பற்றிய அறிவிப்பே ஒரு அழகிய கவிதை!!

  பதிலளிநீக்கு
 13. குழந்தைகளின் படைப்புகளை சேகரித்து பகிர்ந்தது அருமை.. நகைச்சுவை,கவிதைகள் சிறப்பு.
  மின்சாரம் இருந்ததால் கருத்திட முடிந்தது..ஹிஹிஹி..

  பதிலளிநீக்கு
 14. பல பதிவுகளில் தர வேண்டிய கருத்துக்களை ஒரே பதிவில் தருகிறீர்கள். இதுவும் ஒரு புது உத்தியாகத்தான் தெரிகிறது.
  உங்கள் வழி, தனி வழி.  பதிலளிநீக்கு
 15. குழந்தைகளின் எழுத்துக்களைப் பார்க்கும் பொழுது நான் எழுதுவதற்க்கு இன்னும் எவ்வளவு உழைக்க வேண்டும் என்பது புரிகிறது

  குழந்தைகளின் படைப்புகள்
  நமக்குப் படிப்பினைகள்!!

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 16. சிறுவர்களுக்கு மட்டுமில்லை.. அனைவருக்குமே உதவும் மிக நல்ல பயனுள்ள பதிவு...

  நன்றி தனபாலன் ஐயா.

  பதிலளிநீக்கு
 17. எதிகால சமுதாயத்தை வளர்ப்பது ஒவ்வொருவர் கைகளிலும் இருக்கின்றது அப்பணியை சிறப்பாகச் செய்கின்றீர்கள் . இவர்களை பாராட்ட வேண்டி நீங்கள் கேட்க வேண்டுமா . அத்தனையும் பெரும் படைப்பாளிகளின் படைப்புக்களை மிஞ்சி நிற்கின்றது.தாய்க்கு முதலில் சொல்லிய கவிதை என்னும் போது நுமையில் இந்த சின்னவரை நினைத்துப் பெருமைப்படுகின்றேன். உண்மையில் தாயின் காதுகளுக்கு இச் சொல் கவிதையாகவே படும். மொபைல் மசாலா சிரிப்பாக இருந்தது. பொன்மொழிகள் கட்டுரை அற்புதம் . இவ்வார தாய் இருந்தால் பெருமை என்னும் பண்பு யாருக்குமே தோன்றாது . ஆனால் இப்படி ஒரேயடியாக திருந்தும் பிள்ளைகளும் இருக்க வேண்டும் . மொத்தத்தில் அனைத்தும் சிறப்பு. இதை பணியை மேற்கொண்டு தரும் உங்கள் பணிக்கும் பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 18. குழந்தைகளின் படைப்புகள் பாராட்ட படவேண்டியவை... அருமை
  நல்ல பல்சுவை பதிவு..

  பதிலளிநீக்கு
 19. உண்மையிலே இந்த பதிவை பகிர்ந்த அண்ணனுக்கு அன்புவின் அன்பான நன்றி

  பதிலளிநீக்கு
 20. நிலவு, விடாமுயற்சிக் கவிதைகள் ரொம்பவே பிடித்திருக்கு எனக்கு.

  நகைச்சுவை சூப்பர். மொத்தத்தில் பதிவு அழகு.

  பதிலளிநீக்கு
 21. கவிதை, கதை, பொன்மொழிகள், நகைச்சுவை என்று அனைத்து துறைகளிலுமே இந்த தலைமுறையினர் வல்லவர்களாக இருப்பது பெருமிதமாக இருக்கிறது. அவர்களுக்கும் பகிர்ந்த உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்!

  பதிலளிநீக்கு
 22. வழக்கம் போல் பகிர்வு அருமை.பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 23. அம்மாவுக்கு முதல் கவிதை முதல் விடா முயற்சி வரை எல்லாமே மனதில் இருத்திக் கொள்ளவேண்டிய வரிகள்.

  பதிலளிநீக்கு
 24. அருமை!
  அருமை!

  அத்தனையும்-
  அருமை!

  மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. பதிவு அருமையாக வந்துள்ளது தனபாலன்,கூடுதலாக மின்சாரம் இருந்தால்...
  படித்து விட்டு தங்களின் கருத்துக்களை கூறவும்.
  என்ற டைமிங் டையலாக் மிக அருமை

  பதிலளிநீக்கு
 26. பொதுநலத்துடன் கூடிய நல்ல கவிதைகளின் தொகுப்பு! அருமை

  பதிலளிநீக்கு
 27. 'பலம் பலமறிய ஆவல்'
  சூப்பர் ஜோக்!

  குழந்தைகளின் படைப்புகள் அனைத்தும் மிக அருமை!

  எங்கிருந்து உங்களுக்கு நேரம் கிடைக்கிறது, இத்தனை செய்ய?

  வாழ்த்துக்கள் தனபாலன்!

  பதிலளிநீக்கு
 28. இவற்றில்
  தனித்து எடுத்துக்காட்டி சொல்ல ஏதுமில்லை! காரணம் அனைத்துமே
  எடுத்துக்காட்டுகள் தானே! அருமை!

  பதிலளிநீக்கு
 29. நல்ல பதிவு (தலைப்பு). ஆனால் வாசிக்க நேரமில்லை. வாசித்து விட்டு கருத்து சொல்கின்றேன்.
  வாழ்க வளர்க

  பதிலளிநீக்கு
 30. நல்ல தொகுப்பு! :)

  ///தந்தை பாசம்
  அடுத்த ஜென்மத்தில் நான்
  செருப்பாக பிறக்க வேண்டும்... ஏனெனில்,
  அப்பாவின் காலில் மிதிபட அல்ல,
  என்னை சுமந்த அவரை நான் ஒரு முறையாவது
  சுமப்பதற்காக... //

  Interesting Poem! எழுதிய மகன்/மகள் வரப்போகும் எக்காலத்திலும் இதேபோல் உணர்ந்தால் நல்லதுதான்! :)

  பதிலளிநீக்கு
 31. அருமையான வரிகள் !
  தொடரட்டும் உங்கள் வெற்றி பதிவுகள் ..

  பதிலளிநீக்கு
 32. நல்ல கவிதை
  நல்ல நகைச்சுவை
  நல்ல பொன்மொழி
  நல்ல கதை.....
  ரசித்துப் படித்தேன் உங்களுடைய சில பதிவுகள் மிஸ் ஆகிவிட்டது படித்து விட்டு வருகிறேன் சார்

  பதிலளிநீக்கு
 33. அருமையான கவிதைகள் அய்யா. விடா முயற்சி கவிதை அனைவரின் மனதையும் கவரும் என்பதில் ஐயமில்லை. நன்றி

  பதிலளிநீக்கு
 34. நல்ல கவிதைகள்..கருத்துகள்..

  குழந்தைகளின் அறிவு பிரமிக்க வைக்கிறது..

  பதிலளிநீக்கு
 35. சகோதரா தங்கள் கவிதைகள் கட்டுரை நகைச்சுவை அனைத்தும் மிக நன்று.
  நிறைந்த நல்வாழ்த்து. ஆனாலும் தங்களுக்கு மிகமிக ஆசை அதிகம்.
  ஏன் இப்படி அளவிற்கு அதிகமாக ஆக்கம் எழுதுகிறீர்கள் ஒரு தடவைக்கு
  ஒரு அளவாக எழுதுங்களேன். ஒரு அளவு வைத்து எழுதுவது சிறப்பு என்பது என் கருத்து இனி தங்கள் விருப்பம்.
  தங்கள் முயற்சிக்கும் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 36. "மொபைல் மசாலா " ரொம்ப பிடித்திருந்தது. கலெக்சன் ப்ரமாதம் சார். பல்சுவை விருந்து.

  பதிலளிநீக்கு
 37. ஆகா என்ன ஒரு அற்புதமான பாதுவு அண்ணா கதை சுருக்கம் அத்துடன் கவிதை பெருக்கம் சூப்பர்

  பதிலளிநீக்கு
 38. குழந்தைகளின் சிறப்பான படைப்புக்கள்! ஒவ்வொன்றும் இனித்தன! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 39. யுவராணியின் கதையும், அதை ஒட்டிய கருத்தும் அருமை.

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.