சரியாச் சொன்னீங்க...!


வணக்கம் நண்பர்களே, எனது இனிய நண்பரின் வேண்டுகோளுக்கிணங்க ஒரு உரையாடலை முந்தைய பதிவில் → "அப்படிச் சொல்லுங்க...!" ← படித்திருப்பீர்கள்... (என் தளத்திற்கு வந்த புதிய நண்பர்கள், பதிவின் மீது சொடுக்கி படித்து விட்டு வந்தால், நன்று) இப்போது மேலதிகாரியும், முந்தைய பதிவின் உரையாடலில் கலந்து கொண்ட அதிகாரியின் அடுத்துள்ள துணை அதிகாரியும் உரையாடுகிறார்கள்...


711 : "என்னங்க... நான் ஊரில் இல்லாதலால், விழாவில் கலந்து கொள்ள முடிவில்லை... விழா எப்படி நடந்தது...? நம்ம அதிகாரி, சொற்களின் வகை தொகை அறிந்த அறிவாளார் ஆச்சே... அவற்றை எல்லாம் அறிந்து, தான் சொல்லப் போவதை நன்றாக ஆராய்ந்து சொன்னாரா...?"

அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்.

712 : "..ம்..ம்.. அவர் சொல்லின் நடையை அறிந்த நல்லறிவு உடையவர் தான். அவ்வப்போது அவையின் தன்மையையும் நேரத்தையும் அறிந்து, கேட்போர் விரும்பிக் கேட்கும் நிலைமையையும் மிகத் தெளிவாக அறிந்து சொல்ல வேண்டும் அல்லவா ?"

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர்.

713 : "ஏன்...? என்ன ஆச்சி...? வந்தவர்களைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது... அவருக்கு, தமக்கும் மேலான கல்வியாளர் கூடியிருக்கும் அவை, சமமானவர் அவை, குறைவான கல்வியாளர் அவை என தரம், தன்மையை அறிந்து பேசுபவர் ஆயிற்றே... அப்படி ஆராய்ந்து பேசவில்லை என்றால், அவராலே எதையும் சாதிக்க முடியாதே..."

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல்.

714 : "ஆமாம்... அறிவாளிகள் நிறைந்த சபையிலே, நாம அறிவாளிகளாகப் பேச வேண்டும்... அறிவு குறைவான சபையிலே, அவர்களுக்கு விளங்கும்படி இறங்கி பேச வேண்டும்... சுருக்கமா சொன்னா... சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல் ஆகிவிட வேண்டும்... நம்ம அதிகாரி, அவர்களின் கருத்தையே கேட்கவே இல்லை..."

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்.

715 : "ஓஹோ... அது சிறந்த நன்மை தராதே... ஏதாவது முந்திரிக் கொட்டை போல் பேசிட்டாரா...? அறிவாளிகள் நிறைந்த சபையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லக் கூடாதே... அந்த அடக்கம் வேண்டுமே... ரொம்ப முக்கியமாச்சே அது..."

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு.

716 : "ஆமாங்க... விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர்கள் முன்னே சென்று பேசி, வாங்கிக் கட்டிக்கிறது, ஆற்று வெள்ளத்தில் நீந்தி, நடுவிலே தன்னிலை தளர்ந்து, மாட்டிக்கிட்டது போல் ஆயிடுச்சி அவருக்கு..."

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு.

717 : "என்ன இப்படிச் சொல்லிட்டீங்க... சரியாகப் பேசியிருந்தால் இவருடைய கல்வித்திறம், குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிந்த இவரது வல்லமை, முதலில் இவருக்கும், பிறகு அனைவருக்கும் தெரிந்து இருக்குமே..."

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.

718 : "உண்மை தாங்க... இவர் சொல்லாமலேயே, அவர்களே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில், இவர் நன்றாகப் பேசி இருந்தால், தானே வளரும் பயிர் உள்ள பாத்தியில் நீரினைப் பாய்ச்சி பயன் பெற்றது போல இருந்திருக்கும்..."

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று.

719 : "அது சரி... நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களின் மனதில் நன்றாகப் பதியுமாறு பேசணும்... அப்படி இல்லையா, மறந்தும் பேசாம இருக்கணும்..."

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார்.

720 : "ஆமாங்க... மௌனம் கூடச் சில இடங்களில் சிறந்த மந்திரச் சொல்... அப்படி அறிவுடைவர்கள் இல்லாத சபையிலே, அறியாத... தெரியாத... புரியாத... ஒன்றைப் பற்றி விரிவாக, விளக்கமாகப் பேசினா, சாக்கடைக்குள் கொட்டிய அமுதம் போல் பாழாப் போயிடும்..."

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல்.

" சரியாச் சொன்னீங்க...! "

...ம்... அவருக்கு உடம்பு ஏதும் சரியில்லையோ...? வீட்டில் ஏதும் பிரச்சனையா...? வயிறு சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனை இருந்தாத் தான் இப்படி ஆகும் என்று நினைக்கிறேன்... அவரை வரச் சொல்லுங்க...! (படத்திலுள்ள அதிகாரிக்குக் கோபம் வந்து விட்டது...)

என்ன நண்பர்களே... 'சொல் வன்மை' மட்டும் தெரிந்தால் போதுமா ? அதனாலே, இந்த முறை எடுத்துக் கொண்டது (72) 'அவை அறிதல்' அதிகாரத்தில் உள்ள பத்து குறள்களும்... அதனின் விளக்கங்களைக் குறள்களின் குரலாக மேலே ஓரளவு சொல்லி உள்ளேன் நண்பர்களே.... இரண்டும் சரியாக இருக்கா என்று பாருங்க. முடிவாக, குறள்களுக்குக் குறள் :

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தாற் செயின்.
(497)
பொருள் : செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து, தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்... இப்ப நீங்க சொல்லுங்க :-

ஒரே திருக்குறளாக இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு → இங்கே ← சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. அதிகாலை முதல் காப்பி எனக்குதான், நான்தான் முதல்ல வந்துருக்கேன் பால் காப்பி தாங்க....

  பதிலளிநீக்கு
 2. அழகான தமிழ் வார்த்தைகள் ஒப்பீடு மிகவும் ரசித்தேன் மக்கா, வாழ்த்துகள்...!

  பதிலளிநீக்கு
 3. அவையறிதல்’ அதிகாரத்தின் குறட்பாக்களையும்,அதன் கருத்துக்களையும், உரையாடல் மூலம் அழகாகத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்! பதிவில் இணைக்கப்பட்டுள்ள படம் அருமை.

  பதிலளிநீக்கு
 4. 'சொல் வன்மை' மட்டும் தெரிந்தால் போதுமா ? 'அவை அறிதல்' அவசியம் என்பதை அருமையாக விளக்கிய பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 5. அவை அறிதல் என்பது மிகவும் முக்கியமானது. இதனால்தான் அவ்வையாரும்

  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
  அவையல்ல நல்ல மரங்கள்-சவைநடுவே
  நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
  மாட்டா தவன்நல் மரம். - மூதுரை

  என்று சொன்னார். தங்கள் பதிவில் வள்ளுவரின் வாய்மொழியை எளிமையாக்கி தந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 6. குரள்களும் தாங்கள் கூறியுள்ள விளக்கங்களும் மிக அருமை!

  வாழ்க்கையில் நமக்கு நிச்சயம் பயன்படக்கூடிய விசயங்கள்!

  அழகாகக் கூறியமைக்கு மிக்க நன்றி சார்!

  பதிலளிநீக்கு
 7. வள்ளுவரின் வரிகளுக்கான தகுந்த உரையாடல் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 8. ஒவ்வொரு குறளும் ஒரு வாழ்க்கையையே சொல்கிறது. பின்பற்றி நடந்தோமென்றால், அனைவர்க்கும் நலம்

  பதிலளிநீக்கு

 9. ம்ம்ம்....
  நல்ல பதிவு சார்
  உரையாடலும் குரள் ஒப்பீட்டலும் ம்ம்ம் ..அருமை

  பதிலளிநீக்கு
 10. எல்லாக் குறள்களுக்கும உங்களின் உரையாடல் பாணி எளிய விளக்கம் மிக அருமை நண்பர் D.D. அவர்களே... சூப்பர்ப்.

  பதிலளிநீக்கு
 11. அருமையான திருக்குறள் பொருள் விளக்கம் மிக மிகச் சிறப்பான உரையாடல் மூலம்!!!!..வாழ்த்துக்கள் சகோதரரே உங்கள் படைப்புகள்
  ஒவ்வொன்றும் தனித்தன்மை பொருந்தி நிற்பது கண்டு பெருமை கொள்கின்றேன் .மிக்க நன்றி பகிர்வுக்கு .மேலும்
  உங்கள் ஆக்கங்கள் சிறந்து விளங்க அந்தக் கலைவாணி அருள்
  பெருகட்டும் !....

  பதிலளிநீக்கு
 12. குறளுக்கு நல்ல விளக்கம்.. சரியாச் சொன்னிங்க நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. 650வது கருத்துக்கு இது ஒத்துவருதா பாருங்க!=
  கவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்
  அவையல்ல நல்ல மரங்கள்-அவைநடுவே
  நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய
  மாட்டா தவன் நல்மரம்.

  பதிலளிநீக்கு
 14. அவையறிதலை....
  அவையறிந்து விளக்கியுள்ளீர்கள் தனபாலன் ஐயா.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 15. //அதிகாலை முதல் காப்பி எனக்குதான், நான்தான் முதல்ல வந்துருக்கேன் பால் காப்பி தாங்க.//

  இப்ப எல்லாம் வடைக்கு பதில் காப்பி தராங்களோ??


  மிக அருமையான உரையாடல் அந்த சுட்டி பையன் போட்டோ அருமை

  பதிலளிநீக்கு
 16. நல்ல பதிவு...உங்கனால மட்டும் எப்படி தொடர்ந்து தரமான பதிவுகள் குடுக்க முடியுதோ.. :)

  பதிலளிநீக்கு
 17. நேரமிருக்கும்போது நீங்கள் கொடுத்த சுட்டியை படிக்கனும்...குட்டி பையன் போட்டோ சூப்பர்ர்!!

  பதிலளிநீக்கு
 18. வள்ளுவரின் வரிகளுக்கான தகுந்த உரையாடல் சிறப்பு.

  படமும் சூப்பர்

  பதிலளிநீக்கு
 19. வழக்கம் போல கலக்கல் பதிவு தலைவா. உங்களுக்கு அவார்ட் குடுக்கணும் ஆனா எப்படின்னு தெரில

  பதிலளிநீக்கு
 20. குறளுடன் ஒப்பிட்டு அமைந்த வரிகள் மிகவும் சிறப்பு அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 21. அருமையான படைப்பு. திருக்குறள் சேவையை உளமாற பாராட்டுகிறேன் சார்.

  பதிலளிநீக்கு
 22. மிகச்சிறப்பு.
  அறிவார்ந்த பதிவு.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 23. ச‌ரியாத்தானே சொல்லிகிட்டு வ‌ர்றீங்க‌ தோழ‌ர்! ப‌ட‌த்திலிருப்ப‌து உங்க‌ குழ‌ந்தையா, நீங்க‌ளா? அழ‌கு அள்ளிகிட்டு போகுது. திருஷ்டி சுத்திப் போடுங்க‌. சேமித்துக் கொண்டேன், ந‌ன்றி!

  பதிலளிநீக்கு
 24. நல்ல உரையாடல்,திருக்குறள் பகிர்வும் நன்று..

  பதிலளிநீக்கு
 25. மிகவும் சரியாகத்தான் சொல்றீங்க நீங்க.

  ஆமா, 'சரியாத்தான் சொல்றீங்க'
  அப்படின்னு புகைபடத்துல சொல்ற வாண்டு பயல யாரு?

  ஜூனியர் தி.தி. யா?

  பதிலளிநீக்கு
 26. சரியாக சொல்லியிருக்கீங்க.எளிமையான முறையில் வள்ளுவரின் கருத்துகள் எல்லோருக்கும் புரியும்படி சிறப்பாக இருக்கு.
  அந்த குழந்தையின் படம் மிக அழகு.

  பதிலளிநீக்கு
 27. தமிழ் வார்த்தைகள் ஒப்பீடு மிகவும் ரசித்தேன்அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 28. அருமையான பதிவு நண்பரே..

  வணக்கம் தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது..
  தினபதிவு திரட்டி உங்களை வரவேற்கின்றது

  தினபதிவு திரட்டி

  பதிலளிநீக்கு
 29. வள்ளுவர் வாக்குகளைக் கச்சிதமாக எடுத்துரைத்தாற்போல
  வார்த்தைகள் ஒப்பீடு அழகு.வாழ்த்துகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 30. உரையாடல் எதார்த்தமாகவும் புதுமையாகவும் உள்ளது.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 31. ஆஹா..பத்தும் அருமை.. அழகான உரையாடல்...

  அதிலும் மேலுள்ள குட்டியின் உடையும் லுக்கும்:) கலக்கலோ கலக்கல்.. சொல்ல வார்த்தையில்லை.. சூப்பர் போட்டோ.

  பதிலளிநீக்கு
 32. அவை அறிதல் கண்டிப்பாக அனைவரும் அறியவேண்டிய விஷயம்... அழகாக கூறினீர்கள் அண்ணா... தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 33. குறள் தந்து குறள்கேற்ப உரைதந்து - நல்
  அறிவூட்டும் மனம் வாழி

  பதிலளிநீக்கு
 34. தங்களுடைய இந்த உரையாடல் பாணி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. குறிப்பெடுத்து வைத்து விட்டேன். அவையறிதல் கருத்துக்களை அழகாக உரையாடலாக கோர்த்த விதம் அருமை.
  எனது டேஷ் போர்டில் இந்தப் பதிவு இடம் பெறவில்லையே!

  பதிலளிநீக்கு
 35. கலக்குறீங்க சார்..குறளும் உங்கள் குரலும்(கருத்தும்) சூப்பர்

  பதிலளிநீக்கு
 36. ஒரு உரையாடலை கூட குறளை ஒட்டி சிந்திக்கும் உங்கள் தமிழ்ப்பற்றுக்கு தலை வணங்குகிறேன்.

  பதிலளிநீக்கு
 37. சொல்லைப் பற்றி பலர்
  சொல்லியபோதிலும்
  வெல்லுமோர் சொல் என்ன என‌
  வள்ளுவன் போல் சொன்னது
  வையகத்தில் இல்லை.

  வாழ்வாங்கு வாழ‌
  வள்ளுவன் வழி காட்டிய‌
  உமக்கெமது பாராட்டுக்கள்.

  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 38. ஆஹா! அருமையான இடுகை. வாழ்த்துக்கள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 39. 720 முழுதும் உண்மை..அத்தனையும் அசத்தல்:) தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 40. புதிய முறையில், ரசிக்கத் தகுந்த முறையிலும் எளிமையான உரையாடல்கள் மூலம் குறள் விளக்கங்கள். எளிமை, இனிமை DD.

  பதிலளிநீக்கு
 41. பந்தா பார்வையுடன்’காட்சிதரும் அந்தப் பெரிய மனுசச் சிறுவன் ரொம்பவே அழகு!

  பதிலளிநீக்கு
 42. திருக்குறளை இப்படியும் இளைய தலைமுறைக்கு தரமுடியுமா? அசத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 43. வாழ்க்கைக்கு தேவையான-
  கருத்து பெட்டகம்!

  வாழ்த்துக்கள்!
  அண்ணே!

  பதிலளிநீக்கு
 44. அவை அறிதல் விளக்கம்
  அவ்வையின் ஆத்தி சூடிபோல்
  படிக்க ஆனந்தமாக உள்ளது.

  இறைக்க இறைக்க ஊற்றெடுக்கும் கேணி போல்
  திருக்குறளை படிக்க படிக்க
  புதிய கருத்துக்கள் உங்கள் உள்ளத்திலிருந்து
  பெருக்கெடுத்து வலையில் ஆறாய் ஓடுகிறது
  புதிய வித்தியாசமான முயற்சி
  பாராட்டுக்கள்

  பதிலளிநீக்கு
 45. வணக்கம்
  திண்டுக்கல்தனபால் (அண்ணா)

  நல்ல படைப்பு நல்ல சிந்தனை வளம் ,20.11.2012இன்று உங்களின் பதிவு வலைச்சர கதம்பத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 46. அன்பின் தனபாலன்

  சொல்வன்மை - அவை அறிதல் - விளக்கம் அருமை -நல்லதொரு பதிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 47. அருமை .இன்னமும் கதையாக்கினால் சிறு குழந்தைகளுக்கும் அவரின் கருத்துக்கள் சென்று எளிதாகச் சென்று சேரும்

  பதிலளிநீக்கு
 48. திருக்குறளை அழகாய் சொல்லி புரியவைத்துவிட்டீர்கள்.வீட்டில் பள்ளி படிக்கும் குழந்தைகள் இருக்கும் பெற்றோர்கள் உங்கள் பதிவை குழந்தைகளை படிக்க சொல்லல்லாம்.
  அவர்கள் சிறப்பாய் குறளை படித்து விடுவார்கள்.
  நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 49. உங்கள் எழுத்து திறமை கண்டு வியக்கிறேன், வணங்குகிறேன்!

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.