🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



ஓஹோ... அப்படியா...! ISO - PART 3

வணக்கம் நண்பர்களே... ISO பெறும் நிறுவனங்களில், பல பேருக்குக் கொடுக்கப்படும் தகவல்களை, முந்தைய பதிவாக வாங்க... பழகலாம்...! ISO PART 2 கொடுத்திருந்தேன்... (படிக்காதவர்கள் பதிவின் மீது சொடுக்கிப் படிக்கவும்) இன்றைய பதிவும் அதே போல் சுருக்கமாக 18 நன்மைகள்...


நீங்கள் தூக்கத்தில் காண்பது கனவு அல்ல. உங்களை தூங்க விடாதது தான் கனவு. - டாக்டர் அ.பெ.ஜெ. அப்துல் கலாம்


சர்வதேச தரநிர்ணய அமைப்பின் ISO 9000 தர நிர்வாக முறையை அமுலாக்குவதால் கிடைக்கும் நன்மைகள் :

01. வாடிக்கையாளரை மையமாகக் கொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து, திருப்திப் படுத்த முடியும்.

02. வாடிக்கையாளர்களின் ஆலோசனை மற்றும் புகார்களைத் தகுந்த முறையில் கையாண்டு, அவர்களின் தன்னம்பிக்கையைப் பெற முடியும்.

03. ஒரே சீரான தரமுள்ள உற்பத்தி அல்லது சேவையை வழங்க முடியும்.

04. குறைபாடுள்ள உற்பத்தி அல்லது சேவையைக் கண்டறிந்து, அதனை நிவர்த்திச் செய்வதன் மூலம் தொடர்ச்சியான முன்னேற்றத்தை அடைய முடியும்.

05. திட்டமிட்டுச் செயல்படுதலின் மூலம் உற்பத்தி அல்லது சேவையின் திறனை அதிகப்படுத்த முடியும்.

06. குறைபாடுகளைக் குறைப்பதன் மூலம் உற்பத்திச் செலவினங்களைக் குறைக்க முடியும்.

07. தரமான மூலப் பொருட்கள் மற்றும் இதர பொருட்களை வாங்க முடியும்.

08. இயந்திரங்கள் மற்றும் சாதனங்களின் பயனீட்டை அதிகப்படுத்த முடியும்.

09. நிறுவனத்தின் பணிபுரியும் ஒவ்வொருவருடைய கடமைகள், பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை வரையறுப்பதன் மூலமும், பயிற்சியின் மூலமும், வேலை முறைகளை மேம்படுத்த முடியும்.

10. நிறுவனத்தின் குறிக்கோள்களை ஒவ்வொரு துறைக்கும் வரையறுத்து, அவைகளை அவ்வப்போது ஆய்வு செய்வதன் மூலம், நிறுவனத்தின் இலக்கினை அடைய முடியும்.

11. நிறுவனத்தின் உள்ளக மற்றும் வெளிப்புற தகவல் பரிமாற்றங்களை மேம்படுத்த முடியும்.

12. அரசாங்கத்தின் சட்ட பூர்வமான மற்றும் நிலையான ஆணைகளைக் கடைப்பிடிக்க ஏதுவாகும்.

ISO 9001 சான்றிதழ் வாங்குவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் :

01. நிறுவனத்தின் பெயர், உற்பத்தி பொருட்கள் அல்லது சேவைகளின் விவரங்கள் 125 நாடுகளுக்கும் மேல் வெளியிடப்படும்.

02. நிறுவனத்தின் மதிப்பானது இந்தியாவிலும், சர்வதேச நாடுகளிலும் மேன்மை அடையும்.

03. வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை வைத்து, நிறுவனத்தின் தயாரிப்பு அல்லது சேவைகளுக்கு முதலிடம் கொடுப்பார்கள்.

04. ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு மிகச் சிறந்த வரவேற்பு கிடைக்கும்.

05. சான்றிதழ் வாங்கிய நிறுவனங்களுக்கு நிதி உதவி நிறுவனங்கள் முன்னுரிமை தரும்.

06. சான்றிதழ் வாங்கிய சிறுதொழில் நிறுவனங்களுக்கு (SSI) மானியம் கிடைக்கும்.
"ஐ... நான் தான் மனசாட்சி... அதுக்குள்ளே முடிச்சா...? விளக்கம் தேவை..."

"ISO-வின் அனைத்து சிறப்புகளையும் தொடரும் நிறுவனங்கள் பல உள்ளன... கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் பெயருக்கு ISO வாங்கி வைத்துக் கொள்ளும் நிறுவனங்களும் உண்டு... அதைப் பற்றி அலசப் போவதில்லை... நிறுவனம் : உற்பத்தி செய்யும் நிறுவனம், வாங்கி விற்கும் (Trading) நிறுவனம், எந்த நிறுவனமாக வேண்டுமானாலும் இருக்கலாம்... ISO பெற்ற நிறுவனங்களில் நீங்கள் வாங்குவது குண்டூசியானாலும் சரி... கோஹினூர் வைரமானாலும் சரி... நீங்கள் வாங்கின பொருளில் அந்த நிறுவனம் குறிப்பிட்டது போல் இல்லை என்றால் / குறைகள் ஏற்பட்டால் புகார் கடிதம் அனுப்புங்கள்... (Post with Acknowledgement) உடனே உங்கள் வீட்டிற்கு ஆட்டோ வரும்... உங்களைக் கூட்டிச் சென்று வாங்கின பொருளை மாற்றித் தருவார்கள்... நல்ல நிறுவனம் என்றால் கண்டிப்பாக மாற்றித் தர வேண்டும்..."

"கடிதத்தைக் கிழித்து விட்டு, "அப்படி எதுவும் வரலையே"-அந்த நிறுவனம் !"

"நீங்கள் புகார் கொடுத்து எந்தப்பதிலும் வரவில்லை என்றால், வாங்கிய பொருளின் பில் + வாங்கிய பொருளின் தரத்தைப் பற்றிய விளக்கம் (முக்கியம் : எல்லாமே xerox) - இவற்றை அந்த நிறுவனத்திற்கு எந்தக் நிறுவனம் சான்றிதழ் கொடுத்ததோ அவர்களுக்கு ஒரு புகார் கடிதம், மீண்டும் ஒருமுறை பொருட்கள் வாங்கின நிறுவனத்திற்கும் ஒரு புகார் கடிதம் + இதற்கு முன் அனுப்பிய புகார் கடிதத்தையும் சேர்த்து அனுப்புங்கள்... இந்தமுறை ஆட்டோ வராது... அந்த நிறுவனத்தின் கார் வரும்... மறுபடியும் சொல்கிறேன்... குண்டூசியானாலும் சரி... கோஹினூர் வைரமானாலும் சரி... மாற்றித் தரும் வரை அந்த நிறுவனத்திற்குச் சான்றிதழ் கிடையாது..."

"நாளை அக்டோபர் 2 - மகாத்மாவை வாழ்த்துவதா...? கல்விக் கண் திறந்த பெருந்தலைவரைப் போற்றுவதா ? என்று யோசனையில் இருக்கேன்... இப்படி பயமுறுத்துறே... ஊரில் இருக்கிற நுகர்வோர் அமைப்பே தெரியாது... தெரிந்தாலும் போறதேயில்லை... இதெல்லாம் செய்வோமா...?"

"...ம்... இப்ப பயமுறுத்துறேன்...இப்படி புலம்பினா, கனவிலே 'இந்தியன்' தாத்தா வந்து கத்தியால் குத்துவார்... 'அந்நியன்' வந்து எண்ணெய்ச் சட்டியில் தூக்கிப் போடுவார்... (கீழ்வரும் கருத்தை ஏற்கனவே சொல்லி இருந்தாலும்...)

நிறைய விவரங்களைத் தெரிந்து வைத்துக் கொண்டு அவற்றைப் பயன்படுத்தத் தவறினால், என்ன பயன்...? தெரிந்ததைப் பயன்படுத்தாமல் இருப்பவருக்கும், தெரியாமலே இருப்பதற்கும் ஒன்று தான்... பயன்படாமல் இருக்கும் அறிவாற்றல் என்று எதுவுமில்லை... அதுவும் அறியாமைக்குச் சமம் தான்... அதனாலே...நிறையத் தெரிந்து கொள்ள முயல்வதை விடத் தெரிந்ததைப் பயன்படுத்தவும், மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும் முயல்வோமா ? ஏதோ எனக்குத் தெரிந்ததைச் சுருக்கமாகச் சொல்லி இருக்கேன்..."

ஓஹோ... அப்படியா...!


என்னைப்பற்றி ஆராய்வதற்கு இங்கே சொடுக்கித் தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி நண்பர்களே... தங்களின் கருத்து என்ன...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. தெரிந்ததை பயண்படுத்தாமல் இருப்பவருக்கும் தெரியாமல் இருப்பதுவும் ஒன்றுதான்
    அழகாக சொல்லியிருக்கிறீர்கள் சார்....

    பதிலளிநீக்கு
  2. உங்களுக்கு தெரிந்ததை, தெரியாத எங்களுக்கு சொன்னதற்கு நன்றி!¬

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் பாஸ்..நல்ல பதிவு..நிறைய புது தகவல்கள்..
    நமக்கு தெரிந்ததை விசயங்களை அடுத்தவர்களுக்கு பகிர்வது ரொம்ப நல்ல விஷயம், அதை நீங்கள் மிகவும் சிறப்பாய் செய்கிறீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஓஓஓஓஓஓஒ அப்படியா !
    தெளிவான விளக்கங்கங்கள் ,நன்றி !

    பதிலளிநீக்கு
  5. ISO பற்றி அருமையான விளக்கம் நண்பரே...

    எனது தளத்தில் குழந்தை தொழிலாளி

    பதிலளிநீக்கு
  6. ISO பற்றி மேலும் பல தகவல்கள் தந்தமைக்கு நன்றி! பெயருக்கு ISO வாங்கி வைத்து இருப்பவர்களைப் பற்றியும் குறிப்பாக உணர்த்தி இருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. அன்பு சகோ வணக்கம் தங்களின் பதிவில் Iso பற்றி குறிப்பிட்டு தொழில் எவ்வாறு வளர்ச்சி அடையும் என்ன நன்மைகள் என சொன்ன விதம் ஒவோன்றும் மனதை நெகிழ வைத்தது

    பதிலளிநீக்கு
  8. வியாபாரம் செய்வோருக்கு பயனுள்ள தகவல்கள்.. நன்றி...

    பதிலளிநீக்கு
  9. பதிவின் விளக்கம் மிக அருமை.பயனுள்ள தகவல்கள் சகோ.

    பதிலளிநீக்கு
  10. ISO பற்றியபயனுள்ள பதிவு சார்
    மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  11. “ஓஹோ... அப்படியா...!!

    ஐ.எஸ்.ஓ வை நானும் அறிந்து கொள்ள வைத்ததற்கு மிக்க நன்றி தனபாலன் ஐயா.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் பயனுள்ள பதிவு, வாழ்த்துக்கள்.
    [மின் தடங்கல்! உடன் வர இயலவில்லை]

    பதிலளிநீக்கு
  13. தெரியாத தகவல்கள்...பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க...

    பதிலளிநீக்கு
  14. உங்கள் தேடல்கள் ‘ஓ..அப்படியா..’ என்று வியக்கத்தான் வைக்கிறது !

    பதிலளிநீக்கு
  15. பயனுள்ள பதிவு நண்பரே.. நிறைய தெரிந்துகொண்டேன்.. மிக்க நன்றி!

    பதிலளிநீக்கு
  16. இதில் இவ்வளவு இருக்கா! நல்ல விஷயம் தெரிந்து கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  17. விளக்கமான பதிவு, பயனுள்ள பதிவும் கூட. பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  18. பகிர்வு ஓஹோன்னு இருக்கு.பகிர்ந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  19. அருமை அண்ணா
    இந்த இணைப்பில் சென்று பாருங்கள், மற்றும் இந்த இணைப்பை சமூக வலைத்தளங்களில் பகிருங்களேன்
    இதோ இணைப்பு : http://ptab.it/bzRe

    பதிலளிநீக்கு
  20. அறிந்து கொண்டேன் .. சார் ..
    நல்ல தகவல்கள் என்றாவது ஒரு நாள் எனக்கும் பயன் படும் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  21. தூங்கவிடாததுதான் கனவு,நல்ல பதிவு.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்.நன்றி

    பதிலளிநீக்கு
  23. //தெரிந்தவற்றைப் பயன்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் முயல்வதே
    மிகச் சிறந்த கொள்கை/// சகோ உங்கள் கருத்து மனதை மகிழ வைக்கின்றது .
    தொடர வாழ்த்துக்கள் .இந்த அம்பாளடியாளுக்கு ஆக்கம் எழுதத்தான்
    நேரம் சரியாக இருக்கிறது .கருத்துக்கள் இட முடிவதில்லை மன்னிக்கவும்
    சகோ .

    பதிலளிநீக்கு
  24. பயனுள்ள பதிவு.
    ISO சான்று பெற விரும்பும் கம்பெனிகளில் வேலை புரியும் பதிவின் வாசகர்கள் இந்தப் பதிவுகளை கொத்திக் கொண்டு போவார்கள் என்று நினைக்கிறேன். தமிழில் இருப்பது இன்னு எளிமையாகத் தோன்றுகிறது. பாராட்டுக்கள்.

    ISO audit எப்படி செய்ய வேண்டும் என்பதையும் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. அப்துல் கலாமை மேற்கோள் காட்டியிருக்கிறீர்கள். அவர் சொன்னதற்கு என்ன பொருள்?

    பதிலளிநீக்கு
  26. நிறைய விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க, மிக்க நன்றி. ஆனா படிக்க எனக்கு தலை சுத்துது.. நான் போயிட்டுப் பின்பு வாறேன்.

    பதிலளிநீக்கு


  27. மக்களுக்கு நல்ல பயன் தரும் தகவல் தந்துள்ளீர் தனபால்!

    பதிலளிநீக்கு
  28. இவை நான் முற்றிலும் அறியாத தகவல்கள்.

    அறிந்து கொள்ள உதவியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. அன்பின் தனபாலன்,

    உங்க அன்பை, நல்லமனதை எப்படி பாராட்டுவது என்றே தெரியலப்பா... இன்று காலை ரொம்பவே டென்ஷனாச்சு பதிவுகள் இடவே டைம் ஆகிவிட்டது. அதன்பின் மெல்ல எல்லாரும் வந்து பதிவுகள் போட்டாங்க. இப்ப தான் வராதவங்களுக்கு தெரிவிக்கலாம்னு வந்தப்ப உங்க நல்ல மனதை அறியும் வாய்ப்பு கிடைத்தது. மனம் நெகிழ்ந்தது தனபாலன். நீங்கள் பின்னூட்டப்புயல் மட்டும் இல்லப்பா... உதவுவதிலும் முதன்மை....

    மனம் நிறைந்த அன்புநன்றிகள்பா தனபாலன்..

    பதிலளிநீக்கு
  30. "நிறுவனத்தின் பெயர், உற்பத்தி பொருட்கள் 125 நாடுகளுக்கும் மேல் வெளியிடப்படும்."
    ஓஹோ !! அப்படியா ? நான் இது வரை அறிந்திராத தகவல். நன்றி

    பதிலளிநீக்கு
  31. ISO பற்றி விரிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  32. எனக்கு தெரியாத பல தகவல்களை புரியும் படியாக கூறி உள்லேர்கள். நல்ல பதிவு. அப்டியே நம்ம பக்கம் கொஞ்சம் வந்து படிங்க http://eththanam.blogspot.in/2012/10/blog-post_4.html

    பதிலளிநீக்கு
  33. பயன்தரும் தகவல்களை பட்டை தீட்டி சொல்லி இருக்கிறீர்கள்..நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  34. ப‌ய‌னுள்ள‌ தக‌வ‌ல்க‌ளையே முன்னுரிமை கொடுத்து ப‌திவிடுகிறீர்க‌ள் தோழ‌ர்! பாராட்டுகிறேன். 'தேன்' ப‌ற்றிய‌ என‌து ப‌திவொன்றில் 'த‌ண்ணீரில் க‌ல‌ந்து குடிப்ப‌த‌ற்கும் பாலில் க‌ல‌ந்து தேனை ப‌ருகுவ‌த‌ற்கும் ப‌ல‌ன் மாறுபாடுள்ள‌தா என‌க் கேட்ட‌' நினைவு இருக்கிற‌து. அடுத்த‌ தேன் ப‌ற்றிய‌ ப‌திவில் தெரிந்த‌தை சொல்ல‌லாமென்றிருந்தேன். அது த‌ள்ளிப் போவ‌தால், இவ்விட‌த்தை பய‌ன்ப‌டுத்திக் கொள்கிறேன்.

    காலை வெறும் வ‌யிற்றில் மித‌மான‌ வெந்நீரில் தேக்க‌ர‌ண்டி தேன் க‌ல‌ந்து குடித்து வ‌ந்தால் உட‌ல் ப‌ரும‌ன் குறையுமாம். இர‌வு ப‌டுக்கும் முன் பாலுட‌ன் தேன் க‌ல‌ந்து ப‌ருகி வ‌ந்தால் உட‌லில் ச‌தை பிடிக்குமாம். கேள்விப்ப‌ட்ட‌து தான். எவ்வ‌ள‌வு ச‌த‌வீத‌ம் ப‌லிக்குமென‌த் தெரிய‌வில்லை.

    ப‌திவுக‌ளை உட‌னுக்குட‌ன் வ‌ந்து ப‌டித்து க‌ருத்திடுவ‌த‌ற்கு மிக்க‌ ந‌ன்றி!

    பதிலளிநீக்கு
  35. நல்ல தகவல். அறிந்தவற்றைப் பயன்படுத்துதல் அவசியம். நல்ல கருத்து, தனபாலன்.

    பதிலளிநீக்கு
  36. பல புதிய விவரங்கள். பலருக்கும் பயனுள்ள பதிவு. முகப்பில் அப்துல் கலாம் அவர்களின் வாக்கு மன எழுச்சியூட்டும் வாக்கு. பாராட்டுக்கள் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  37. ISO பற்றியபயனுள்ள பதிவு சார் பயனுள்ள தகவல்கள்,தெரியாத தகவல்கள் நிறைய தெரிந்துகொண்டேன்.மிக்க நன்றி சார்

    பதிலளிநீக்கு
  38. பலருக்கு இது பயனாகும்.
    நல்ல பதிவுத் தொடர்.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  39. வணக்கம்!

    வலிகளைத் ஏற்றுக் கொள்க!
    வந்தவை தாமே போகும்!
    உளிகளைப் பாராய்! தாங்கி
    உளங்கவா் சிலையைச் செய்யும்!
    கிளிகளைக் கூண்டில் வைத்துக்
    கேட்டிடும் குரலா இன்பம்?
    ஒளிகளை விஞ்சும் வண்ணம்
    ஓடிடும் மனத்தை வெல்க!

    பதிலளிநீக்கு
  40. அப்துல் கலாமின் வார்த்தைகளுடன் தொடக்கம் அருமை. பாய்ண்ட்ஸ் படித்துக் கொண்டு வரும்போதே எனக்குத் தோன்றிய எண்ணங்களுக்கு பதில் அடுத்த பாராக்களில்! நன்றி DD!

    பதிலளிநீக்கு
  41. அன்புச் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் என் வலைப்பூந் தோட்டத்திற்கு வருகை தருவதை மட்டும் கண்டேன்; ஆனால், இன்று வலைச்சரம் எனும் வலையில் என் அன்புச் சகோதரி இலங்கை மஞ்சுபாஷினி அவர்களின் புகழுரையில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன்; இன்று முதல் உங்களின் தளத்தை என் தளத்தின் பின்பற்றுவோர்ப் பட்டியலில் இணைத்தேன்

    பதிலளிநீக்கு
  42. அன்பின் தனபாலன்,

    தங்களை வலைச்சரத்தில் இன்று அறிமுகப்படுத்தி இருக்கிறேன். சமயம் கிடைக்கும்போது வந்து பாருங்கப்பா..

    http://blogintamil.blogspot.com/2012/10/blog-post_5.html

    இவரைப்பற்றி நான் அறிந்தது ஒரே ஒரு விஷயம்… பின்னூட்டப்புயல், புன்னகையுடன் எல்லோரிடமும் அன்புடன் பழகுபவர். உதவுவதில் முன்னே நிற்பவர்… எப்படி இத்தனையும் தெரியும்னு பார்க்கிறீங்களா? ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம் போதும் தானே… இந்த நல்ல உள்ளம் சொல்லும் வாழ்க்கைக்கு பயனுள்ள நல்லவிஷயங்கள் என்னன்னு பார்ப்போமா?

    உங்களின் மந்திரச்சொல் என்ன?
    மனிதனுக்கு மிகப்பெரிய தண்டனை எது?
    அட அவ்வளவு தானா - ISO

    அன்புடன்
    மஞ்சுபாஷிணி

    பதிலளிநீக்கு
  43. ISO CERTIFICATE பற்றி தெளிவாக சொல்லி இருக்கீர்கள். நன்றி

    பதிலளிநீக்கு
  44. நீங்கள் தூக்கத்தில் காண்பது கனவு அல்ல.

    உங்களை தூங்க விடாதது தான் கனவு.

    அமர்க்களமான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

    வலைச்சரத்தில் அருமையான அறிமுகத்திற்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  45. நல்ல தகவல்கள்.. நன்றி மிஸ்டர் திண்டுக்கல் பாலன்.

    பதிலளிநீக்கு
  46. கல்லூரி படிக்கும்போது ISO தரச் சான்றிதழ் பற்றி படித்தது. அப்போது ஏனோ தானோ என்று படித்தோம். இப்போது தங்கள் பதிவைப் படித்தபோது இன்னும் கற்றுக் கொண்டேன். தகவலுக்கு மிக்க நன்றி அண்ணா. தங்கள் பதிவுகள் என் டேஷ்போர்டில் அனைத்தும் வர மறுக்கிறது, அப்புறம் நேரமின்மை ஆகைய காரணங்களால் தான் தங்கள் தளத்திற்கு தொடர்ந்து வந்தாலும் கருத்து வழங்க இயலவில்லை...

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே .மிக்க நன்றி தவறமால் வந்து என் ஆக்கங்களுக்கு
    இனிய கருத்திட்டு ஊக்கிவித்து வருவதற்கு .எனக்கு தங்களால் ஒரு
    காரியம் ஆகவேண்டும் .அதாவது நான் சமீப காலமாக கவிஞர்
    இ .பாரதிதாசன் ஐயா அவர்களின் ஆக்கங்களைப் படித்து வருகின்றேன் .
    இந்த ஆக்கங்கள் மிகவும் மனத்தைக் கவர்ந்து நிற்கின்றது .அவரது
    கவிதைகள் அவர் கொடுக்கும் தகவல்கள் "தமிழை எழுத்துப் பிழைகள் இன்றி" எவ்வாறு எழுதுவது என்ற சிறந்த பயனுள்ள ஆக்கங்களுக்கு
    என் மனமார்ந்த நன்றியினையும் மகிழ்வினையும் தெரிவிப்பதில்
    .இன்றைய ஆக்கம்கூட அருமையிலும் அருமை !!.....இரட்டிப்பு மகிழ்வைத் தந்து நிற்கின்றது .முடிந்தால் word verification பார்பதைத் தவிர்த்து விட்டால் நலமே .இதன்மூலம் நேரடியாக பலரது கருத்துக்களும் இந்த சிறப்பான படைப்புகளுக்கு வந்து சேரும் என்று கூறிக்கொண்டு என் நன்றியினை இருவருக்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் .மிக்க நன்றி வாழ்க தமிழ்!....
    அம்பாளடியாள் (தயவு செய்து இதனைப் பிரதி எடுத்துப் போட்டு விடுங்கள் சகோதரரே )

    பதிலளிநீக்கு
  48. தனபாலன் அண்ணே இதெல்லாம் என்ன..?

    இவ்வளவு தகவலையும் நீங்க தருவதில் ஆச்சர்யமே இல்லை,,,

    தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள்,,

    பதிலளிநீக்கு
  49. தெரியாததை தெரியபடுத்தியதற்கு நன்றிகள்!

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.