உன்னால் முடியும் நம்பு (பகுதி 3)
நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளில் பள்ளிக் குழந்தைகளின் கவிதையும், நகைச்சுவையும், கட்டுரையும் பொன்மொழிகளையும் ரசித்திருப்பீர்கள் !நிறைவுப்பகுதி இதோ உங்களுக்காக...
முதல் பகுதியைப் படிக்க - முயற்சி + பயிற்சி = வெற்றி இங்கே சொடுக்கவும்
இரண்டாம் பகுதியைப் படிக்க - நம்மையன்றி வேறு யாரால் முடியும் ? இங்கே சொடுக்கவும்
இவை எல்லாம்மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று அந்த இதழ் முழுவதும் ஊற்று நீர்போல் ஊற்றெடுத்தது. முதலில்...
கொஞ்சம் கவிதை...
உன்னை உழைப்பாளி என்பர் மாணவனே! நீ ரசித்திடு! உன்னை கலைஞன் என்பர் மாணவனே! நீ வண்ணம் தீட்டிடு! உன்னை ஓவியன் என்பர் மாணவனே! நீ மனிதநேயத்துடன் இருந்திடு! உன்னை மனிதன் என்பர் மாணவனே! நீ உன்னை நம்பிடு! உன்னை சாதனையாளன் என்பார்கள்! |
இதில்உலாவத்தான் முடியுமா என்று! அடுத்தவனை நம்பினேன் அன்றே வீழ்ந்தேன் எதிரில் உள்ளவனை நம்பினேன் என்றுமே ஏமாற்றம் தான் என்னை நான் நம்பினேன் என்றுமே வெற்றி தான் எனக்கு உன்னை நம்பு உலகம் உன்னைப் பார்த்து வியக்கும் ! |
கலைந்துபோகும் மேகத்திலும் ஓர் உருவம் தெரியும் இரசித்துப் பார் ! வளைந்து நெளிந்த வானவில்லும் வாழ்வின் அர்த்தம் புரியும் கவனித்துப் பார் ! மழைநீர் ஓடிய மணலிலும் ஓர் ஓவியம் தெரியும் கூர்ந்து கேள் ! மலைச்சாரல் ஒலியிலும் ஓர் சங்கீதம் ஊற்றெடுக்கும் முயன்று பார் ! புலப்படும் உனக்குள் இருக்கும் ஓர் உன்னத சக்தி ! |
அகங்காரம் ஒழித்து விடு ! இச் ஜகத்தை வென்று விடலாம் இயலாமை போக்கி விடலாம் ! தூக்கத்தை அளவுடன் கொள் துக்கத்தைத் தூரத் தள்ளிவிடு ! அடக்கம் கொண்டு வாழ்ந்து விடு ! சுணக்கம் இன்றி செயல்படு ! கல்வியை கற்று உணர்ந்தால் கலங்கரை விளக்கம் நீயாவாய் ! தோல்வியைப் படியாக்கிக் கொண்டால்..... வெற்றியை அடைந்து விடுவாய் ! |
ஓடி வாருங்கள்! மகிழ்ச்சியாகப் பாடங்களை கற்றுக் கொள்ளுங்கள்! அறிவு சிறகு விரித்து விட ஓடி வாருங்கள்! உறவுகளை வளர்த்துக் கொள்ள ஒன்று சேருங்கள்! அன்பான ஆசான் சொல் கேட்க ஓடி வாருங்கள்! பண்பான நடத்தைகளால் உலகை வெல்லுங்கள்! பாட்டுப்பாடி மகிழ்ந்து ஆட ஓடி வாருங்கள்! ஒற்றுமையான உலகைக்காணப் பள்ளி வாருங்கள்! வண்ண மீனைப் போல் நீந்த ஓடி வாருங்கள்! காலம் அறிந்து வேலைகளைச் செய்து பாருங்கள்! தென்றல் காற்றைப் போல் வீச ஓடி வாருங்கள்! கடமைகளை நெஞ்சில் கொண்டு உயர்ந்து நில்லுங்கள்! |
யாரும் உதிக்க வைப்பதில்லை ! பூமி சுழல மறப்பதில்லை ! யாரும் சுழல வைப்பதில்லை ! காற்று வீச மறப்பதில்லை ! யாரும் வீச வைப்பதில்லை ! மழை பொழிய மறப்பதில்லை ! யாரும் பொழிய வைப்பதில்லை ! பறவைகள் பறக்க மறப்பதில்லை ! யாரும் பறக்க வைப்பதில்லை ! காலங்கள் செல்ல மறப்பதில்லை ! யாரும் செல்ல வைப்பதில்லை ! உனக்கு யாரும் சொல்லித் தருவாரோ ! உலகம் உன்கையில் என்று ! விடியும் என்று விண்ணை - நம்பும் மனிதா ! முடியும் என்று உன்னை நம்பு ! C- Conviction(மன உறுதிப்பாடு) C- Clarity(தெளிவு) |
எவரும் கோடீசுவரரில்லை ! ஏழ்மையில் உழன்று இன்னல் பல கண்டு சரித்திரமானோர் பலர் அகிலமே அதிசயிக்கும்அப்துல் கலாம் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி கதராடை காமராசர் கலங்காத வ.உ.சி.மற்றும் பலர், மனோபாவம், உடல் பலம் மட்டுமே மூலதனமாகக் கொண்டவர்கள் ! மக்கள் மனதில் இவர்களைப் போல் நீயும் மண்ணில் சாதித்து சரித்திரமாக்கு ! உன்னால் முடியும் நம்பு ! |
கைகொட்டிச் சிரிக்கிறவரிடையே நீட்டுகிற கைகள் தான் இறைவனின் கரங்கள் ! கொட்டிக் கிடப்பது பணமாய் இருப்பினும் உதவாதவரை... தட்டில் இட்டது கூழாய் இருந்தாலும் அமிர்தம் தான் உழைப்பில் வரும் போது ! |
அவற்றுக்குத் தீ வையுங்கள் மாணவ மாணவியரே ! அழுமூஞ்சி சீரியல்களை ஒளிபரப்பும் டிவிகள் - நீங்கள் அவற்றுக்கு மலர் வளையம் வையுங்கள் மாணவியரே வதந்தியைப் பரப்பும் - எஸ்.எம்.எஸ்.களைப் படிக்காதீர்கள் பீதியைக் கிளப்பும் - பொய்ப்பிரசாரங்களைக் கேட்காதீர்கள் வன்முறைக்கு வழிநடத்தும் - சீ.டி.களை ஒழியுங்கள் கலவரத்தைத் தூண்டும் - கதைப் புத்தகங்களைக் கிழியுங்கள் மூடநம்பிக்கைகளை மூட்டை கட்டுங்கள் பேய்க்கதைகளை எழுதிப் பணம் - சேர்க்கும் சினிமாக்கள் பணம் பறிக்கும் போலி - வியாபார விளம்பரங்கள் ஏமாற்றித் திருமணம் புரிய - உதவும் இன்டர்நெட்டுக்கள் ஊனப்படுத்தும் ஊடகங்களை விட்டு விலகுங்கள் ! வாழ்க்கை வளம் சேர்க்கும் நல்லவற்றோடு பழகுங்கள் ! |
It is Just a Letter Name of an Insect B A large body of water C Part of body I A light drink T Plural of 'is' R Standing in a row Q A form of questioning Y A Exclamation O Positive answer to aquestion S |
கொஞ்சம் ... ஹி... ஹி... ஹி...
டாக்டர் : தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிடுங்கள் ! நோயாளி : முடியாது டாக்டர் ? டாக்டர் : ஏன் ? நோயாளி : எங்கள் கோழி வெள்ளை முட்டை தான் போடும். |
"அவன் ரொம்ப முயற்சி செய்து பெயில் ஆயிட்டான்." "என்னடா சொல்றே? முயற்சி வெற்றியைத் தரும்தானே சொல்வாங்க." "ஆமாம். ஆனால் இவனோ கடும் முயற்சி செய்து பிட் அடிக்கப் பார்த்தான் அதான்....!" |
"7-யும்,7-யும் கூட்டினால் எப்படி 8வரும் ?" "தப்பாக் கூட்டினால் வரும் !" |
"இந்த கடிகாரத்துக்கு என்ன கேரண்டி?" "இந்த கடிகாரத்தை நூறடியிலிருந்து கீழேப் போட்டாலும் 99அடி வரை உடையாமல் போய்க் கொண்டிருக்கும்" |
"டேய் ! நேத்து வீட்ல இருந்த பாலை பூனை குடிச்சிருச்சுடா !" " 'Cat' ஆ குடிச்சுச்சு ?" "கேக்காமதாண்டா குடிச்சுச்சு !" |
கொஞ்சம் ... பொன்மொழிகள், சிந்தனைகள்
வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதில் தெளிவான சிந்தனை வேண்டும். உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் இனிமையாகக் கனிவாகப் பேசுங்கள். என்னால் முடியும், நான் இதைச் சிறப்பாகச் செய்வேன் என்ற தன்னம்பிக்கை, வெற்றித் தேவதையை அருகில் ஈர்க்கும். ஒரு போதும் அடுத்தவர்கள் என்ன சொல்வார்களோ என்ற கவலையை அகற்றுங்கள். அடுத்தவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சியும் வேண்டாம். உங்கள் முக்கியத்தை அதிகரிக்க விரும்புவீர்களானால் அடுத்தவர்களுக்கும் அதே அளவு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களைச் சுற்றி உள்ளவர்கள் செய்யும் சிறுசிறு செயல்களைப் பாராட்டிப் பேசுங்கள். உங்களைச் சுற்றி இருப்போர் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் குற்றங்களை மறந்து, மன்னித்து விடுங்கள். பரந்த மனமும், நேர்மையும் வெற்றியை நிலைநிறுத்தும். பொறுமை இல்லாதவனிடம் வெற்றி விலகிச்செல்லும். உடல் வலிமையாக இருக்க மன வலிமை அவசியம். வெற்றி என்பது உனது நிழல் போல, நீ அதைத் தேடிப்போக வேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும் போது அது உன்னுடன் வரும். நீ நடந்து போகப் பாதை இல்லையே என்று கவலைப்படாதே. நீ நடந்தால் அதுவே பாதையாகி விடும். நீ சிந்தித்துச் செயல்பட்டால் உன்னைச் சந்திக்கத் தோல்விகள் சிந்திக்கும். விழித்து எழுந்தவுடன் கிடைப்பது வெற்றியல்ல; விழுந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி! |
நண்பர்களே ! இந்தப் பதிவை உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! கைப்பேசியில் வாழ்த்து சொன்ன நண்பர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ! (என் வேலை சும்மா டைப்பிங் தான்) கடந்த மூன்று பதிவுகளைப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்கு உங்களின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொல்லுங்கள்.
அன்புச் சகோதரி சந்திர கௌரி அவர்கள் மேலுள்ள ஜெர்மனி விருதை வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியையும் சந்தோசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை (1) கவிதைகள், நகைச்சுவைகள், கட்டுரைகள், பொன்மொழிகள் எனப் பல படைப்புகளை வழங்கிய மழலைக் குழந்தைகள் அனைவருக்கும், (2) பல பட்டங்கள் பெற, தன்னுடைய குழந்தைகளும் வானத்தில் பறக்கும் பட்டம் போல இருக்க, கண்ணுக்குத் தெரியாத அந்த பட்டத்தின் நூலைப் (கயிற்றை) போல வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும், (3) நம்மைப் பற்றி நாமே அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள, குழந்தைகளை ஊக்குவித்த, அழகிய சிற்பத்தை வடிக்கும் உளியாய், சிற்பியாய் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...
இந்த வயதிலேயே இப்படி யோசிக்கும் குழந்தைகளை வாழ்த்துவோம். வாங்க நாம சிந்திப்போம் இங்கே இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?
அன்புச் சகோதரி சந்திர கௌரி அவர்கள் மேலுள்ள ஜெர்மனி விருதை வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு முதலில் எனது மனமார்ந்த நன்றியையும் சந்தோசத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருதை (1) கவிதைகள், நகைச்சுவைகள், கட்டுரைகள், பொன்மொழிகள் எனப் பல படைப்புகளை வழங்கிய மழலைக் குழந்தைகள் அனைவருக்கும், (2) பல பட்டங்கள் பெற, தன்னுடைய குழந்தைகளும் வானத்தில் பறக்கும் பட்டம் போல இருக்க, கண்ணுக்குத் தெரியாத அந்த பட்டத்தின் நூலைப் (கயிற்றை) போல வாழ்ந்து கொண்டிருக்கும் அனைத்து பெற்றோர்களுக்கும், (3) நம்மைப் பற்றி நாமே அறிந்து, தெரிந்து, புரிந்து கொள்ள, குழந்தைகளை ஊக்குவித்த, அழகிய சிற்பத்தை வடிக்கும் உளியாய், சிற்பியாய் இருக்கும் அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்...
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வாசம் வீசும் படைப்புகள்-வளரும் தலைமுறைக்கு வாழ்த்துக்கள்!-அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குகாரஞ்சன்(சேஷ்)
வளரும் தலைமுறையின் வாசமிகு படைப்புகள்! அனைத்தும் அருமை!
பதிலளிநீக்குபகிர்விற்கு நன்றி!
காரஞ்சன்(சேஷ்)
மணம் வீசி
பதிலளிநீக்குமனம் கவரும்
அருமையான
பகிர்வுகள்..
பாராட்டுக்கள்..
அருமை சார். ஒரே பதிவில் இத்தனை கவிதைகள், கருத்துக்கள், ஜோக்குகள் என்று அசத்தி விட்டீர்கள். மிக்க நன்றி
பதிலளிநீக்குசிறப்பான பதிவு.
பதிலளிநீக்கு//It is Just a Letter//
//சாதிக்கத் தேவையான மூன்று C-க்கள்
C - Confidence (நம்பிக்கை) C - Conviction (மன உறுதிப்பாடு) C - Clarity (தெளிவு) //
இவையெல்லாம் அருமை.
அற்புதமான கருத்துக்கள்.. பகிர்வுக்கு மிக்க நன்றி..
பதிலளிநீக்குhttp://anubhudhi.blogspot.in/
விருதுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஇத்தொகுப்பில் உங்களுடைய பணி வெறும் டைப்பிங் என்று எழுதியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குடைப்பிங் தெர்ந்தவர்கள் அனைவருமே இப்படி செய்வதில்லை நண்பரே.!
தொகுத்தளித்தவிதம் அருமை.!
பகிர்வினுக்கு நன்றி!
உங்களைச் சுற்றி உள்ளவர்களிடம் இனிமையாகக் கனிவாகப் பேசுங்கள்.
பதிலளிநீக்குஅருமையான கதம்ப பகிர்வு அனைத்தும் அருமை மழலைகளுக்கு எனது மனமார்ந்த நன்றி .
நல்ல பகிர்வு விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் பாஸ்
பதிலளிநீக்குsuperb brother...
பதிலளிநீக்குவிழித்து எழுந்தவுடன் கிடைப்பது வெற்றியல்ல;
பதிலளிநீக்குவிழுந்து எழுந்தவுடன் கிடைப்பது தான் வெற்றி!
என்னைக் கவர்ந்த வரிகள் இது மட்டும் போதும்.மிகமிக அருமையான வரிகள் மதிப்பில்லா சொத்துகள் தந்தமைக்கு நன்றி
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள் பதிவு நல்லா இருக்கு.
பதிலளிநீக்குஉயர் சிந்தனை. உங்கள் விருதுகிடைக்க வேண்டியவர்களுக்கே கிடைத்திருக்கின்றது . நீங்களே உங்கள் பெற்றோருக்கு ஒரு விருதுதான். உங்கள் சிறப்பான சேவையை உலகம் மெச்சும் போது முதலில் மேச்சுபவர்கள் பெற்றோர்களே . வளரும் தலைமுறை வளர்ந்து இறக்கும் போது தம் கருத்துக்களுக்கு முதல் இடம் தந்தவர் என்று கூறும்போது அப்போதும் உங்களுக்கு விருது கிடைக்கும். கற்பிக்கும் ஆசான் மனதினுள் மகிழ்ச்சி துளிர்க்கையில் அப்போதும் பெறுவீர்கள் அடக்கமான விருது. உங்கள் பனி தொடருங்கள். எங்கள் மனதி ஏற்றுங்கள் அறிவுத் தீபங்கள் . நன்றி
பதிலளிநீக்குமாப்ள விருது பெற்றதர்க்கு வாழ்த்துக்கள்...பல விஷயங்களை அழகுர சொல்லி இருக்கீங்க..நன்றி!
பதிலளிநீக்குவணக்கம் தங்களை ஒரு தொடர்பதிவிற்கு அழைத்துள்ளேன்... மறக்காமல் எழுத முயற்சிக்கவும்...
பதிலளிநீக்குநன்றி....
www.sangkavi.com
விருது பெற்றதற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை!
பகிர்விற்கு நன்றி!
பல்சுவை விருந்து.. நன்றாக இருக்கிறது..
பதிலளிநீக்குபல்சுவை கதம்பமாக ஒரு இனிய பதிவு.
பதிலளிநீக்குஉற்சாகத்தொடர் அருமை ... தொடர்ந்து எழுதவும் .
பதிலளிநீக்குவணக்கம் நண்பரே!
பதிலளிநீக்குபயனுள்ள பல பதிவுகளை அளிக்கும் உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது. தயவு செய்து என்னுடைய வலைப்பூவிற்கு வருகை தாருங்கள்!
வாழ்த்துக்களுடன்
காரஞ்சன்(சேஷ்)
மணமணக்கும் வாழ்வியல் கதம்ப
பதிலளிநீக்குகூற்றுக்கள் தங்கள் பதிவுகள்.
மிக அருமையான பகிர்வு
பதிலளிநீக்குஎல்லாத்தையும் ஒரே பதிவுல போட்டுட்டீஙக்
ஆக்கபூர்வமான விடயங்கள் நகைச்சுவை... என தொடர்ந்து சுவாரசியமான பதிவுகளாக தருவதற்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகூலாக ஒரு குறிப்பு கேட்டீங்க போட்டாச்சு ......
பதிலளிநீக்குஉங்கள் பக்கம் நிறைய வெட்ஜட்டுகள் பதிவ படிக்க சங்கடமாக இருக்கு
அருமையான பதிவு சார். நீங்கள் பதிவிட்ட அனைத்தும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குஅருமையான பதிவு சார்.
பதிலளிநீக்குஇன்றே பதிவை கண்ணுற்றேன் தனபாலன். நல்ல பணி.. வாழ்த்துக்கள் சகோதரா!
பதிலளிநீக்குஇந்த பதிவை-
பதிலளிநீக்குவலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்!
வருகை தாருங்கள்!
தலைப்பு ; படித்தவர்கள்.....
தேவையான, அருமையான பதிவு!
பதிலளிநீக்குசகோ! வாழ்த்துக்கள்....