🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



முயற்சி + பயிற்சி = வெற்றி (பகுதி 1)

நண்பர்களே! அன்பான வணக்கங்கள் ! கவிதையும், நகைச்சுவையும், பொன்மொழிகளுமாக உள்ளதே என்று நினைத்து விடாதீர்கள் ! இவையெல்லாம் என்னுடையது அல்ல! எனக்குத் தெரிந்தது அந்தக் கால இலக்கியங்கள், நம்ம திருவள்ளுவர், பாரதியார், விவேகானந்தர்... இப்படிப் போகும் நண்பர்களே ! இவை என்னவென்றால்...


கடந்த பொங்கல் விடுமுறை அன்று எங்கள் வீட்டில் எனது மக்களுடன், அவர்களது நண்பர்களும், நண்பிகளும் வந்திருந்தனர். நிறையப் பேசினோம். விவாதித்தோம். விளையாடினோம். முடிவில் அவர்கள் கையில் 'ஊற்று' என்று ஒரு புத்தகம். படித்து விட்டு வியந்து விட்டேன் நண்பர்களே !

"அங்கிள், இவற்றையெல்லாம் நீங்கள் பதிவிட முடியுமா?, பல பள்ளி மாணவ மாணவிகள் படிப்பார்கள் அல்லவா ? நாங்கள் மிகவும் சந்தோசப்படுவோம் ! அடுத்த முறை நாங்கள் வரும் போது உங்கள் தளத்தைப் பார்ப்போம்" என்றார்கள். ஆக நண்பர்களே...இந்தப்பதிவு குழந்தைகளுக்காக ! அவர்களின் விருப்பத்திற்காகப் பதிவிடுகிறேன் ! ஆனால் உடனே முடியவில்லை. என் தொழில் அப்படி ! வீட்டில் இருக்கும் போது கொஞ்சக் கொஞ்சமாகத் தொகுத்தேன்.

இரண்டு அல்லது மூன்று பகுதி வரும் என்று நினைக்கிறேன்! இவை எல்லாம் மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் படைப்புக்கள் ! அவர்களின் ஜீவனுள்ள கற்பனைகள், திறமைகள், கட்டுரை, கவிதை, நகைச்சுவை, பொன்மொழிகள், புதிர்கள் என்று அந்த இதழ் முழுவதும் ஊற்று நீர்போல் ஊற்றெடுத்தது. முதலில்...
கொஞ்சம் கவிதை...

முடியும் வரை !
முடியும் வரை முயற்சி செய்யுங்கள்
உங்களால் முடியும் வரை அல்ல
நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை !

வெற்றி கொள்...
எதிரியை - அன்பினால்
ஆசிரியர்களை - மரியாதையினால்
இறைவனை - பக்தியினால்
தேடி வரும் !
நதியைப் போல் ஓடு !
நகைச்சுவையாய் பேசு !
உண்மையாய் வாழ் !
உழைப்பை நேசி !
உயர்வு உன்னைத் தேடி வரும் !
வெற்றி உன் கையில்!
தோல்விக்குக் காரணம்
விதியென்று சொல்லாதே !
அது மதியிழந்தவன் பேச்சு !
கடும் பயிற்சி செய் -
விடாமுயற்சியுடன் !
வெற்றி உன் கையில் !
உன்னை நேசி
இருளை நேசி -
விடியல் தெரியும்...!
தோல்வியை நேசி -
வெற்றி தெரியும்...!
உன்னை நேசி -
உலகமே உனக்குப் புரியும்...!
வெற்றி பெற...

மற்றவர்களைவிட :

1.அதிகமாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
2.அதிகமாக பணியாற்றுங்கள்.
3.குறைவாக எதிர்பாருங்கள் !
சிகரம் நோக்கி...

சிலிப்பைக் கொடுக்கும் பள்ளம் கண்டும்
சிகரம் தொட்டவன் முதலில் டென்சிங்
நிகரிலாச் சாதனை செய்து முடித்தான்
நிலைத்த மனிதரில் ஒருவன் ஆனான்!
உன்னுள் இருக்கும் ஆற்றல் உணர்ந்து
உலகப் பயனுற வெளிக் கொணர்ந்து
என்றும் நிலைக்கும் செயல்கள் செய்து
ஏறுபோல் செல்வாய் நீ நிமிர்ந்து !
வாழ்வு வந்தது
பொறாமையோடு போனேன்
அழிவு வந்தது
கோபத்தோடு போனேன்
நஷ்டம் வந்தது
எரிச்சலோடு போனேன்
கஷ்டம் வந்தது
இவற்றையெல்லாம் விட்டேன்
வாழ்வு வந்தது !
எங்கள் தாய்
எங்கள் ஊர்க்கடல்
எங்கள் தாய்
காப்பாள் என்ற நம்பிக்கையில்-அதி
காலை படகில் பயணம்
மாலை வருகை மீனோடு
நம்பிக்கையே வாழ்க்கை
பெற்றுக் கொள்கிறோம்
கடல் தாயின் பகிர்வை !
வெற்றிக்கான படிகள்
வெற்றிக்கு
முதல் படி துணிவு !
வெற்றிப் பயணத்திற்கு
இரண்டாம் படி சுறுசுறுப்பு !
வெற்றிச் சிகரத்தை எட்டுவதற்கான
மூன்றாம் படி மன ஒருமைப்பாடு
வெற்றிக்கு
நான்காம் படி இலக்குத் தெளிவு !
உன்னில் இல்லாதது ?
இந்தியாவில் எரிமலைகள் இல்லை
உத்தரப்பிரதேசத்தில் தென்னை மரங்கள் இல்லை
நேபாளத்தில் பகலில் மழை பெய்வதில்லை
புருனே நாட்டில் வரிகள் இல்லை
அத்தி மரங்கள் பூப்பதில்லை
காந்தியடிகள் விமானத்தில் பயணம் செய்ததில்லை
எங்களிடம் சோம்பேறித்தனம் இல்லை.
நீ தானே !
துள்ளித் திரியும் வயதில்
முடங்கிப் போனேன் ஊடகத்தில் !
பார்வை மங்கிப் போக
அணிந்தேன் மூக்குக்கண்ணாடி !
மற்றவர்களின் சிரிப்பு
மனதை ஊனப்படுத்தியது...
இதற்குக்காரணம்
ஊடகமே நீ தானே!
சிந்தித்துப் பேசு !
கோபமாய்ப் பேசினால் குணத்தை இழப்பாய்
அதிகமாய்ப் பேசினால் அமைதியை இழப்பாய்
வெட்டியாய் பேசினால் வேலையை இழப்பாய்
வேகமாய் பேசினால் அர்த்தத்தை இழப்பாய்
ஆணவமாய்ப் பேசினால் அன்பை இழப்பாய்
பொய்யாய் பேசினால் பெயரை இழப்பாய்
சிந்தித்துப் பேசினால் சிறப்போடு இருப்பாய் !
கரை சேர...
கல்வி என்ற கடலில்
தேர்வு என்ற படகில் பயணிப்போம்.
அப்போது தோல்வி என்ற அலையில்
படகு கவிழ்ந்தால்
முயற்சி என்ற நீச்சலில் நீந்தி,
வெற்றி என்ற கரையை அடைந்திடுவோம்.
வாழ நினைத்தால்...
நீ வாழ நினைத்தால் - துன்பம் இன்பமாகும்
நீ ஆழ நினைத்தால் - உலகம் சிற்றூராகும்
நீ பறக்க நினைத்தால் - வானமும் வழிவிடும்
நீ தாண்ட நினைத்தால் கடலும் -
சிறு கால்வாயாகும்
நீ சுற்ற நினைத்தால் -
அண்டமும் நீ அறிந்த ஊராகும்
நீ கட்டளையிட நினைத்தால் -
சூரியனும் கட்டுப்படும்
நீ சுட்டெரிக்க நினைத்தால் -
குளிர் நிலவும் சுடருடன் எரியும்
உலகமே உன் கையில் வந்துவிடும் -
உன்மீதே நீ நம்பிக்கை வைத்திருந்தால்...
சிறகை நம்பும் பறவை
சிறகை நம்பும் பறவை
சிகரத்தையும் தாண்டி பறக்கிறது
சிந்தனையுள்ள மனிதா !
உன்னையே நீ நம்பி
தடைகளைத் தாண்டு !
சாதனையாளன் பட்டமும்
சரித்திரம் படைக்கும் சுவடும்
உலகம் உன்னை அறியும் நாளும்
அனைத்தும் உன் கையில்
அதுதான் உன் நம்பிக்கை !

கொஞ்சம் ஹி... ஹி... ஹி...

குளவி கொட்டினா வலிக்கும்...! தேள் கொட்டினா வலிக்கும்...!
ஆனால் முடி கொட்டினா வலிக்குமா ?
முடியாதுமுடியாதுமுடியாது...
சில விஷயத்தை யாராலும் மாற்ற முடியாது...
காலி பிளவர்-ஐ தலையில் வைக்க முடியாது !
ஏண்டி, என் தலையில் தண்ணி ஊத்துற ?
'மண்டை காஞ்சி போச்சு'ன்னு சொன்னீங்களே !
வேடந்தாங்கலுக்கு எப்படி போகணும்?
'பறந்து தான் !?!'
பாம்புக்கு ஏண்டா 'பம்பு'-ன்னு எழுதுறே ?
பாம்புக்குத் தான் கால் கிடையாதுல்லே...!
ஆசிரியர் :இளமையில் 'கல்' முதுமையில் என்னன்னு சொல்லு?
மாணவன் :முதுமையில் 'மண்ணுதான்' சார் !
ஆசிரியர் : வகுப்பறை இவ்வளவு குப்பையா இருக்கே, பெருக்கக் கூடாதா ?
மாணவன் : பெருக்கினால் அதிகமாகும், கழிக்கலாம் சார் !
என்னடா பரிட்சை பேப்பர்ல 'சிக்கன்' என்று எழுதியிருக்கு ?
ஒரு சேஞ்சுக்குத்தான்... அடிக்கடி முட்டைப்போட்டு வாத்தியாருக்கு போர் அடிச்சுப் போச்சாம்...!

கொஞ்சம் ... கட்டுரை 1-தலைப்பு :கடும்பயிற்சி + விடாமுயற்சி = வெற்றி

முன்னுரை : "தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்" என்ற வள்ளுவரின் வரிகள் முயற்சி என்னும் பண்பின் மகத்துவத்தை உணர்த்துகின்றன. இடைவிடாத முயற்சி யாவருக்கும் வெற்றியைக் கொடுக்கும். வெற்றிக்கான தயார் நிலையே முயற்சி தான். வெற்றி என்பது முறையான பயிற்சி செய்து பெற வேண்டிய ஒன்றாகும். அதற்கு கடும் பயிற்சியும், விடாமுயற்சியுமே தேவை. அதிர்ஷ்டம் தேவையில்லை.

கடும் பயிற்சி : "சாதனையாளர் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்" கடும் பயிற்சி மட்டுமே ஒரு மனிதனைச் சாதனையாளராக மாற்றுகிறது. 'ஜெனட் இவான்' என்பவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதற்காகத் தினமும் கடும் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த கடும் பயிற்சியின் விளைவாக 1988-ம் ஆண்டு தமது 14-ம் அகவையில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு, தொடர்ந்து நான்கு தங்கப்பதக்கங்களை வென்று சாதனை மனிதனானார்.

விடாமுயற்சி : "முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்தி விடும்" என்ற வள்ளுவர் வாய்மொழியைச் சிரமேற்கொண்டு, முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் என்பதை உணர்ந்து, செயற்கரியன செய்து, வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, வெற்றிக் கொடி நாட்டிட விடாமுயற்சியே தேவை.

வெற்றி : தொடர் பயிற்சி செய்பவர்கள் மட்டுமே வெற்றி அடைகிறார்கள். விடாமுயற்சி செய்பவர்கள் சோம்பலை சோம்பலடையச் செய்து வெற்றிக் கொடி நாட்டுகிறார்கள்.

முடிவுரை : ஒரு மனிதனை மாமனிதனாக மாற்றுவது விடாமுயற்சியும், கடும் பயிற்சியும் தான். "புத்திசாலிக்கு மட்டுமே வாழ்க்கை திருவிழாவாக அமைகிறது" என்கிறார் ரால்ப் வால்டோ எமர்சன். கடும் பயிற்சியின் பலனான வெற்றியை அடைந்தவர் மட்டுமே அதன் பலனை உணர்வார்கள்.

கடும் பயிற்சி + விடாமுயற்சி = வெற்றி

நண்பர்களே ! உங்கள் குழந்தைகளையும் படிக்கச் சொல்லுங்கள் ! உங்களின் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும், எனக்குப் பதிவிட வாய்ப்பளித்த அந்தக் குழந்தைகளுக்குச் சேரட்டும். மிக்க நன்றி... தொடரும்...

இந்தக்கால குழந்தைகள் இன்னும் எப்படியெல்லாம் அசத்துறாங்க என்பதைப் படிக்க இங்கே சொடுக்கித் தொடரவும்... அதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றித் தங்களின் கருத்து என்ன...?

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. முடியும் வரை-நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை!
    மிக அருமை

    நகைச்சுவையும் இரசிக்கும்படி அமைந்திருந்தது.

    நன்றி!
    காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  2. முடியும் வரை- நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை!
    மிக அருமை!

    -காரஞ்சன்(சேஷ்)

    பதிலளிநீக்கு
  3. மிக அருமையான பயனுள்ள பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  4. அன்பு நண்பரே அருமையான பகிர்வு, குழந்தைகள் எதிர்கால நம்பிக்கைகள், அவர்களின் சிந்தையை சிலிர்க்க வைக்க பயன்படும் உங்களின் இந்த அற்புத பதிவு. நன்றி

    பதிலளிநீக்கு
  5. 3-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள பிள்ளைகளா இவற்றையெல்லாம் எழுதியது. நம்ப முடியவில்லை. புத்திசாலி குழந்தைகள்தான் போங்க. அருமையான தொகுப்பு. இதைப் பார்க்கும்போது நான் 3-ம் வகுப்பு படிக்கும்போதே கதை எழுதியது ஞாபகம் வருகிறது. அப்பவே குமுதம், ஆனந்தவிகடன், க்ரைம் நாவல் எல்லாம் வாசித்தேன். என் பழைய ஞாபகங்களை கிளற வைத்த மனம் கவர்ந்த பதிவு சார். வாழ்த்துக்கள்! தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு வார்த்தையிலும் கொட்டிக் கிடக்குது செம எனர்ஜி...

    பதிலளிநீக்கு
  7. அருமையான பதிவு..அனைத்தும் அறிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.
    மாணவிகளுக்கு அவசியமான பதிவு வாசித்தேன் வாக்கிட்டேன்..

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு நன்றி நண்பரே!

    "பயிற்சியும் முயற்சியும் இருந்தால் ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே!"

    பதிலளிநீக்கு
  9. குழந்தைகளின் கற்பனை ஊற்றில் பிறந்த கவிதைகள் அருமை. ஊடகத்தைப் பற்றி எழுதியிருந்த வரிகளை மிக ரசித்தேன். பயனுள்ள பகிர்வு.

    பதிலளிநீக்கு
  10. நன்றி. .
    படித்தேன் ஒருமுறை
    சிந்தித்தேன் பலமுறை ,
    அவற்றை வாழ்வில்
    கொள்வேன் நடைமுறை
    படிக்க படிக்க தாழ்வு
    மனப்பான்மைஅகன்றிடும்
    சித்தத்தில் தெளிவு பிறந்திடும்
    வாழ்க்கை பாதை சீராகும்
    பயனுள்ள பதிவு

    பதிலளிநீக்கு
  11. நல்லது. ஒவ்வொரு துணுக்கும் அருமை.. !

    பதிலளிநீக்கு
  12. மிக, மிக நல்ல பதிவு. வெரி இண்ட்ரெஸ்டிங்க். நன்றி

    பதிலளிநீக்கு
  13. //முடியும் வரை-நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை! //
    ஆரம்பமே சிறப்பாக இருக்கு,தனபால்.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  14. குழந்தைகளின் ஊற்று மிக அருமை.
    பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.


    குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. சிந்தனை சிரிப்பு பொன்மொழிகள் கவிதை இந்த கதம்ப தொகுப்பு அருமை

    பதிலளிநீக்கு
  16. அனைத்தும் நல்லா இருக்கு....

    வாசித்தேன்..... ரசித்தேன்.....

    பதிலளிநீக்கு
  17. மாப்ள பல விஷயங்களை தாங்கிய பதிவு நல்லா இருக்குங்க!

    பதிலளிநீக்கு
  18. எல்லாமே நல்லாயிருந்தது.. கவிதையும் நகைச்சுவைவும் அருமை..

    இதை எழுதியவர்களின் பெயர் போட்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  19. எனது பள்ளி நாட்களையும் நினைவு படுத்தி விட்டீர்கள்..நண்பரே..அதிசயமாகவும் ஆசர்யப்படவும் வைக்கிறது..இதன் பின்புலத்தில் நல்ல ஒரு ஆசிரியரின் வழிகாட்டுதல் இருந்திருக்கும்..

    பதிலளிநீக்கு
  20. வோர்டில் சேமித்து விட்டேன்

    உயர்ந்த படைப்புகள் நன்றி ...

    பதிலளிநீக்கு
  21. அத்தனையும் அற்ப்புதம் குழந்தைகளுக்குள் ஆயிரம் திறமைகள் புதைந்திருக்கின்றது . அனைத்தையும் ரசித்தேன் திரும்பத் திரும்ப வந்து பார்க்கக் கூடிய பதிவு. இவ்வாறான பதிவுகளை விரும்புகின்றேன். தொடருங்கள் தனபாலன் அவர்களே. நன்றியுலன் கூடிய வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  22. இந்த காலத்து பிள்ளைகள் இவற்றையெல்லாம் விரும்பி படிக்கின்றனர் என்று கேட்கும்போதே வியப்பாக இருக்கின்றது. அவர்களுக்கு என் வாழ்த்துகளை சொல்லிடுங்க சகோ

    பதிலளிநீக்கு
  23. நகைச்சுவைகல எல்லாம் சிரிக்க வைத்தது. நன்றி நண்பரே!

    பதிலளிநீக்கு
  24. அருமை நண்பரே...நல்ல முயற்சி

    பதிலளிநீக்கு
  25. மனதும் செயலும் இணைந்தால் தான் இலக்கை
    அடையமுடியும் என்பது போல ..
    முயற்சியும் பயிற்சியும் இருந்தால் தான்
    வெற்றியை அடைய முடியும் என்பது
    நிதர்சனமான உண்மை நண்பரே...

    துளிக் கவிதைகள் அத்தனையும் அருமை..

    பதிலளிநீக்கு
  26. அருமையான பதிவு நண்பரே. பகிர்தலுக்கு நன்றி. இன்னும் உங்களிடம் இது போன்ற பதிவுகளை நிறைய எதிர்பார்கிறேன்.

    பதிலளிநீக்கு
  27. குட்டிப் படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். படைப்புகள் அருமை.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம்
    திண்டுக்கல் தனபால்(அண்ணா)

    நல்ல படைப்பு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
    உங்களின் பதிவு வலைச்சரத்தில் இன்று வந்துள்ளது சந்தோசமாக உள்ளது,இந்த லிங்கை கிளிக்செய்து பார்க்கவும்,
    http://dindiguldhanabalan.blogspot.com/2012/01/blog-post_30.html

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  29. அன்புக்குரிய நண்பரே !
    ஒவ்வொரு பதிவையும் பொறுமையுடன் படித்து பின் கருத்துகளை பகிரும் பொறுமை உள்ளவரே !
    தங்கள் பதிவை என்னால் முழுமையாக பிடிக்க முடியாமல் சென்று விடுகிறது !
    இப்போதுதான் படித்தேன் !
    இந்த பதிவு குழந்தைகளுக்கு என்று சொல்வதை விட அனைவருக்கும் என்றே சொல்லுங்கள் ..
    // கொஞ்சம் கவிதை // அதில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் அருமை ..

    குறிப்பாய் //முடியும் வரை !
    முடியும் வரை முயற்சி செய்யுங்கள்
    உங்களால் முடியும் வரை அல்ல
    நீங்கள் நினைத்த செயல் முடியும் வரை !//

    //நதியைப் போல் ஓடு !
    நகைச்சுவையாய் பேசு !
    உண்மையாய் வாழ் !
    உழைப்பை நேசி !
    உயர்வு உன்னைத் தேடி வரும் !
    //

    //வெற்றி உன் கையில்!
    தோல்விக்குக் காரணம்
    விதியென்று சொல்லாதே !
    அது மதியிழந்தவன் பேச்சு !
    கடும்பயிற்சி செய், விடாமுயற்சியுடன் !
    வெற்றி உன் கையில் !//

    //மற்றவர்களைவிட
    1.அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்.
    2.அதிகமாக பணியாற்றுங்கள்.
    3.குறைவாக எதிர்பாருங்கள் !
    //

    ...
    உங்களை போன்ற எழுதாளால் எப்போதும் தேவை ..
    கெட்டதை சொல்ல ஆயிரம் பேர் நல்ல சொல்ல உங்களை போன்ற சிலரே

    உங்கள் வெற்றி பதிவுகள் தொடரட்டும்..

    பதிலளிநீக்கு
  30. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள் சென்று பார்வையிட இதோ.http://blogintamil.blogspot.com/2013/12/blog-post_14.html?showComment=1386988215252#c2283658728372207094

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  31. வணக்கம்
    அண்ணா

    இன்றைய வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  32. குழந்தைகளின் படைப்பு மிகவும் அருமை...

    http://aasirvathikkapattaval.blogspot.sg/

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.