புதன், 9 ஏப்ரல், 2014

ஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...!


வணக்கம் நண்பர்களே... முந்தைய மூன்று பகிர்வுகளில் வலைத்தளம் ஆரம்பித்து, தேவையான திரட்டிகள்+Gadgets-களையும் இணைத்து விட்டோம்... இப்போது பதிவெழுதும் போது இலவசமாக HTML-யையும் கற்றுக் கொண்டு, புதிய பதிவர்கள் பதிவுகளை பகிரலாம்... முந்தைய பகிர்வுகளை வாசிக்காதவர்கள் ஒவ்வொன்றாக சொடுக்குக : 1 2 3

ஐ ! என் முதல் பதிவு !

தளத்தின் பெயரை சொடுக்கி வந்த பிறகு, இடது புறம் மேலே பென்சில் icon-யை சொடுக்கினால், பதிவு எழுதும் பக்கத்திற்கு வந்து விடுவோம்...


'அ' (2) என்றில்லாமலிருந்தால், அருகில் சிம்பலை சொடுக்கி தமிழைத் தேர்வு செய்து aarvam என்று தட்டச்சு செய்து spacebar-யை தட்டினால் வரும் ஆர்வத்தைச் சுட்டியில் தேர்வு செய்து (5) என்பதைச் சொடுக்கினால் ஆர்வம் இப்போது அடர்த்தியாகி விடும்... இப்போது Compose அருகிலுள்ள HTML-யை சொடுக்கினால் இவ்வாறு இருக்கும் :

<div dir="ltr" style="text-align: left;" trbidi="on"><b>ஆர்வம்</b></div> → இதில் ஒரு சொல்லை அடர்த்தியாக்க <b> </b> தேவை என்பது நாம் தெரிந்து கொண்ட முதல் HTML Script - கீழுள்ள VIEW மேலே சுட்டியை கொண்டு செல்லுங்கள்...

VIEWHelpவிளக்கம் → HTML Script4 Font size : எழுத்தளவை மாற்ற :
4.2) சிறியதாக்க → <span style="font-size: x-small;">ஆர்வம்</span>
4.3) பெரியதாக்க → <span style="font-size: large;">ஆர்வம்</span>

5 Bold → <b>ஆர்வம்</b> 6 Italic → <i>ஆர்வம்</i>
7 Underline → <u>ஆர்வம்</u> 8 Strikethrough → <strike>ஆர்வம்</strike>
9 Text color (நீலம்) → <span style="color: blue;">ஆர்வம்</span>
10 Text background color (மஞ்சள்) → <span style="background-color: yellow;">ஆர்வம்</span>


நீங்கள் பார்த்தது சிறிது தான்... 1 to 10 விளக்கங்களும், 11 to 15 நண்பர்களின் இணைப்புகளும் கீழுள்ள பெட்டியில் உள்ளது... அதை அப்படியே copy செய்து உங்கள் கணினியில் Ms-Word file-லில் சேமிக்கவும்... (COPY செய்ய : சுட்டியால் தேர்வு செய்து, Ctrl key-யை அழுத்திக் கொண்டு, C -யை அழுத்தவும்)
சொற்கள் விழுவது, வரிகள் பல வண்ணமாக மாறுவது, கலக்கலான Icon-களை சேர்ப்பது, எண்களை தொட்டால் விளக்கம் என பலப்பல வியப்பளிக்கும் பல நுட்பங்களைப் பதிவுகளில் செய்ய, அவைகள் வேலை செய்ய வேண்டுமென்றால்... HTML-ல் செய்தால் மட்டுமே முடியும்...! அப்படி எழுதும் போது HTML Mode-ல் என்னென்ன பட்டன்கள் இருக்கும் என்பதை மேலுள்ள படத்தில், கீழ் Arrow-க்களில்...! இதோ மேலுள்ள பெட்டிக்கான HTML Script : <textarea cols="68" readonly="" rows="8">#</textarea></pre> இதை நீங்கள் பதிவில் வேண்டிய இடத்தில் HTML Mode-டில் தான் சேர்க்க முடியும் இதில் # எனும் இடத்தில் உங்கள் Text & 68 என்பதை உங்கள் தளத்தின் அகலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ள வேண்டும்... புதிய பதிவர்களே :

http://translate.google.com/#ta/en/-ல் அல்லது nhm writer-ல் எழுதி வைத்த, எனது கணினி Word-லிருந்த 'பெரிய' பதிவை copy செய்து, HTML-ல் paste செய்கிறேன்... சுட்டியை கீழுள்ள "பதிவு" என்பதின் மேல் கொண்டு சென்று பார்த்து விட்டு, அந்தப் பதிவு எப்படி மாறுகிறது என்பது முடிவில்...!

பதிவுErrorபதிவுஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...! இன்று எப்படியாவது இதைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்... அப்போது தான் கொண்டு வந்து வைத்திருந்த தட்டிலிருந்து மாம்பழத் துண்டு இரண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே முதலாவது வெற்றி - 2 மா.துண்டுகள் காலி... இரண்டாவதும் வெற்றி - 2 மா.துண்டுகள் காலி... மூன்றாவதில் தடங்கல்... சலிப்புடன் "சே...! என்ன இது மாம்பழம் இவ்வளவு புளிப்பாக இருக்கிறது..." "சின்ன தடங்கல் வந்தவுடன், சலிப்பு வந்து ஆர்வம் குறைந்து, கவனம் இப்போது சுவைக்குச் சென்று விட்டது... எல்லாத் துண்டுகளும் புளிப்பு தான் DD...! மனதை ஒருநிலைப்படுத்தி ஆர்வத்துடன் மீண்டும் முயற்சி செய்... !" இப்படிக்கு மனச்சாட்சி...!
HTML சேர்க்கும் முறை

1 ஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...! என்பதை கட் செய்து தலைப்பாக வைக்கிறேன்... 2 பதிவின் ஆரம்ப சொல்லின் முன் <div style="text-align: justify;"> 3 முடிவு சொல்லின் பின் </div> 4 ஆக வேண்டும்... அடுத்து என்டர் (↵) தட்டி, பிடித்த படத்தை சிறு குறிப்போடு இணைக்கிறேன்... 5 மறுபடியும் ஒரு முறை என்டர் (↵) தட்டி, <!--more--> என்று தட்டச்சு செய்து விட்டு, 6 தடங்கல்...!, இருக்கிறது..." - இந்தச் சொற்களுக்குச் சென்று என்டர் (↵) தட்டி பத்திகளாகப் பிரிக்கிறேன்... 7 தடங்கல் என்பதற்கு முன் <u> பின் </u> 8 சுவைக்குச் சென்று விட்டது... என்பதற்கு முன் <span style="background-color: maroon; color: white;"> பின் </span> 9 ஆர்வத்துடன் என்பதற்கு முன் <b> பின் </b> 10 (எனது தளத்தின் Favicon போல) → DD...! என்பதற்கு முன் <span style="background-color: yellow;"><span style="color: red; font-family: Georgia, Times New Roman, serif;"><b>DD...! பின் </b></span></span>

HTML அவ்வளவு தான்...! இப்போது சில முக்கியமானவைகளும்

11 வலது புறம் Post Settings கீழுள்ள Labels-யை சொடுக்கி மாம்பழம், புளிப்பு, சலிப்பு, ஆர்வம் என்றெல்லாம் கண்டபடி குறிச்சொற்கள் இடாமல், சிந்தனை, அனுபவம் என்று மட்டும் இட்டு விட்டு Done என்பதைச் சொடுக்கிறேன்... 12 அதற்குக் கீழுள்ள Permalink-யை சொடுக்கி ஆங்கிலத்தில் பதிவிற்கேற்ப சொற்களை இட்டு விட்டு, (இரு சொற்களுக்கிடையே [-] Ex : Speed-Wisdom-6) Done என்பதைச் சொடுக்கிறேன்... 13 உடனே Publish என்பதைச் சொடுக்காமல், Preview வை சொடுக்குகிறேன்... அடுத்த tab-ல் வரும் பதிவை - இட்ட HTML Script எல்லாம் சரியாக இருக்கிறதா ? என்பதை விட நம் தவறுகள் நமக்கே தெரிந்து விட்டால், நாட்டில் ? ம்ஹீம்... முதலில் நமக்குள் பிரச்சனை ஏது...? ஹா... ஹா... அதனால் எழுத்துப்பிழைகளை அறிய வீட்டில் உள்ளவர்களை அழைக்கிறேன்... சரி செய்கிறேன்... 14 Publish செய்யாமல் Close !!! ஏன்...? 15 மறுபடியும் அந்தப் பதிவின் தலைப்பிற்குக் கீழுள்ள Edit என்பதைச் சொடுக்கி, இட்ட Permalink உள்ளதா என்பதை உறுதி செய்து விட்டு, Publish Click ! O.K. இனி g+, முகநூல், திரட்டிகள் என்று மெதுவாக ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருக்கும் போதே, வந்து விட்டது கருத்துரை...! யார்...? ஹிஹி...!!!

அடடா...! ஏதோ ஒன்று மறந்த மாதிரி இல்லை...? மறுபடியும் அந்தப் பதிவின் தலைப்பிற்குக் கீழுள்ள Edit என்பதைச் சொடுக்கி, 16 <center>தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?</center> இதோ சேர்த்து விட்டு, Update என்பதைத் தான் கவனமாகச் சொடுக்கி...OK...OK... இந்தப் பதிவு எப்படி இருக்கும்...? இதோ :

ஆர்வத்துடன் வாங்க... பதிவு எழுதலாம்...!

இன்று எப்படியாவது இதைக் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்...

நானும் HTML-ல் எழுதி பதிவு போட்டுட்டேன்..!
அப்போது தான் கொண்டு வந்து வைத்திருந்த தட்டிலிருந்து மாம்பழத் துண்டு இரண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டே முதலாவது வெற்றி - 2 மா.துண்டுகள் காலி... இரண்டாவதும் வெற்றி - 2 மா.துண்டுகள் காலி... மூன்றாவதில் தடங்கல்...!

சலிப்புடன் "சே...! என்ன இது மாம்பழம் இவ்வளவு புளிப்பாக இருக்கிறது..."

"சின்ன தடங்கல் வந்தவுடன், சலிப்பு வந்து ஆர்வம் குறைந்து, கவனம் இப்போது சுவைக்குச் சென்று விட்டது... எல்லாத் துண்டுகளும் புளிப்பு தான் DD...! மனதை ஒருநிலைப்படுத்தி ஆர்வத்துடன் மீண்டும் முயற்சி செய்...!" இப்படிக்கு மனச்சாட்சி...!

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?


மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி...
dindiguldhanabalan@yahoo.com / 09944345233

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !


தொடர்புடைய பதிவுகளை படிக்க :


79 கருத்துகள்:

 1. பதிவர்கள் அனைவரும் அவசியம்
  அறிந்து கொள்ளவேண்டிய தகவல்கள் அடங்கிய
  அற்புதமானத் தொடர்
  பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. என்னவோ சொல்றீங்கன்னு தெரியுது. சாவகாசமாக வார இறுதியில் படிக்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. really i m very much proud of your passion regarding the blogs.. and of course i m too proud about your patience mr.danpal.. thanks

  பதிலளிநீக்கு
 4. அருமை ஐயா அருமை
  பதிவு எழுதி வெளியிடும் செய்தியினை இவ்வளவு எளிமையாகவும் சொல்ல முடியுமா என்பது வியப்பாக இருக்கிறது.
  பாடப் புத்தகங்கள் ஒவ்வொன்றும், இதுபோல இருந்தால் அனைத்து மாணவர்களுமே நூறு சதவீத தேர்ச்சிதான்.
  வாழ்த்துக்கள் ஐயா.
  இத்தொடரின் பதிவு முடிந்தவுடன், இப்பதிவுகளைத் தொகுத்து ஒரு மின்நூலாக வெளியிடுங்கள் ஐயா.
  மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
  நன்றி

  பதிலளிநீக்கு
 5. படிப்படியாக விளக்கியிருக்கிறீர்கள். அருமை.

  பதிலளிநீக்கு
 6. அன்புடையீர் .
  தாங்கள் தரும் தொடர் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.முடிவில் இதனை ஒரு புத்தமாக வெளியிட கணினி படிப்பிற்கு மிகவும் பயன்படும்.
  தங்கள் சேவைக்கு வாழ்த்துகள்
  அன்புடன்

  பதிலளிநீக்கு
 7. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி தனபாலன். நம் பதிவில் படத்தை இணைப்பதற்கும் காணொளியை இணைப்பதற்கும் வசதிகள் உள்ளன. நம் கணினியில் இருக்கும் mp3 -ஐ நம் பதிவில் எப்படி இணைப்பது? தெரிவித்தால் மகிழ்வேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 8. விளக்கம் அருமை.

  அனைவருக்கும் பயனுள்ளதாய் அமையும் வண்ணம் எழுதியிருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்களும், நன்றிகளும்.....

  பதிலளிநீக்கு
 9. #ஒவ்வொன்றாக இணைத்துக் கொண்டிருக்கும் போதே வந்து விட்டது கருத்துரை #
  புதிய பதிவர்களே ,உங்களை ஊக்குவிக்க முதல் கருத்துரையும் போடுவது சகோ .DD யாகத்தான் இருப்பார் ,அதை தன்னடக்கம் காரணமாக அவர் நேரடியாக கூறவில்லை !
  பதிவுலகில் புதிதாய் காலடி எடுத்துவைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
  த ம 5

  பதிலளிநீக்கு
 10. பதிவுலகத்திற்கு புதிய பதிவர்களைக் கொண்டுவர அருமையான முயற்சி...வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. முதல் பதிவு எழுதி முடித்த களிப்பில் உள்ள குட்டிப்பாப்பா அழகு ! நல்ல விளக்கத்துடன் எழுதியுள்ளீர்கள். மீண்டும் ஒருமுறை வந்து பொறுமையாகப் படிக்க வேண்டும். பதிவுக்கு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 12. புதியவர்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற பதிவர்களுக்கும் உதவும் வகையில் விளக்கம் தந்திருக்கிறீர்கள். நன்றி!

  பதிலளிநீக்கு
 13. சிறு குழந்தைக்கு கூட புரியும் வகையில் மிக எளிமையாக, தெளிவாக பதிவிட்டிருக்கிறீர்கள். தொடருங்கள் சிறப்பான பணியை..!

  வாழ்த்துக்கள் சார்..!

  பதிலளிநீக்கு
 14. இதற்கு மேலும் - விளக்கம் தர இயலுமா!.. என்ற அளவிற்கு இருக்கின்றது - தங்களின் பதிவு!..
  அனைவருக்கும் பயனுள்ளதாக விளங்குகின்றது. வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 15. மிகவும் பயனுடைய பதிவு .. ஏதோ அப்படியே டைப் செய்து வெளியிட்டுக்கொண்டிருக்கும் எனக்கு இந்த பதிவு மிக்க பயனளிக்கும்.கரந்தை ஜெயக்குமார் சொன்னது போல் புத்தகமாக்கி விடுங்கள்..இதற்குததொடர்பில்லை இருந்தாலும் கேட்கிறேன் ஏற்கெனவே என் பக்கத்தில் தமிழ்மணம் இணைத்திருந்தேன். நீங்கள் கூறியபடி . in ஆனதும் இயங்கவில்லை. தற்போது உங்கள் ஆலோசனைப்படி இணைத்தேன். .com ஆகிவிட்டது ஆனாலும் தமிழ்மணம் இணைப்பில் இல்லை. என்ன காரணமாயிருக்கும்?

  பதிலளிநீக்கு
 16. நல்ல பயன் உள்ள பதிவுகள். நன்றி வாழ்த்துக்கள்...!

  பதிலளிநீக்கு
 17. புதிய பதிவர்கள் மட்டுமல்லாம எல்லா பதிவர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒரு நல்ல பதிவு! குறிபெடுத்துக் கொண்டோம்! இனிய நண்பர்,ஆசிரியர் DD அவர்களே!

  பகிர்வுக்கு மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 18. மிகவும் தெளிவாக,அழகாக,மனதில் பதியும்படி ஆழமாக எழுதியிருக்கிறீங்க.
  அனேகமானோர் புத்தகமாக வெளியிட வேண்டுமென கேட்டிருக்கிறார்கள்.(மின்னூலாகவேனும்)என் வேண்டுகோளும் அதுவே.நன்றி.

  பதிலளிநீக்கு
 19. கீத மஞ்சரி கூறியது போல் நம் கணனியிலிருந்து எம் பி த்ரீ மற்றும் வீடியோவை இணைப்பது பற்றிக் கூறுங்கள் தனபாலன் சகோ

  உங்கள் முயற்சிகளையும் பகிர்வுகளையும் பார்த்து அசந்து போய் இருக்கிறேன். வாழ்த்துக்கள். :)

  பதிலளிநீக்கு
 20. வலைத் தள நுட்பங்களை
  கலைநயத்துடன் பகிரும்
  இனிய நண்பா!
  இனிவரும் காலங்களில்
  இவை தான் தேவை
  இவை தரும் பயன்
  நம்மாளுகள்
  உலகெங்கும் தமிழ் பேண உதவுமென
  நம்பிக்கை வெளியிடுகிறேன்!

  பதிலளிநீக்கு
 21. புதியவர்களுக்கு மட்டுமின்றி என்னைப் போன்றவர்களுக்கும் மிக முக்கியமான பதிவு.

  பதிலளிநீக்கு
 22. சிறந்த முயற்சி !

  புதியவர்களுக்கு நல்லதோர் வழிகாட்டி

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 23. நன்றாக விளக்கமாக எழுதுகிறீர்கள்.
  இந்த மரமண்டையில் ஏற வேண்டுமே!
  இனிய வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 24. எல்லோரையும் ஊக்கு விக்கும் தங்கள் முயற்சிக்கு நன்றி .
  ஆனால் பதிவு எழுதுபவர்களுக்கு (குறிப்பாக என் போன்றவர்களுக்கு ) புதிய ஒன்றைக் கற்றுக் கொள்ள ஆர்வம் இருந்தாலும் ஏதாவது தப்பாக செய்து ஏடாகூடம் ஆகிவிட்டால் பக்கத்தில் இருந்து சொல்லிக் கொடுக்க ஆள் தேடும் மனோபாவம் இருக்கிறது.நீங்கள் இவ்வளவு சிரமம் எடுத்து சொல்லிக்கொடுப்பதே பெரிய விஷயம் . எனவே உங்களைத்
  தொந்தரவு செய்வது கூடாது. ஒன்று வேண்டுமானால் செய்யலாம் . சந்தேகம் இருந்தால் மாதம் எதோ ஒரு ஞாயிற்றுக் கிழமையில் பகல் 12முதல் 2 மணியில் மட்டுமே தொலை பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று சொல்லலாம்.
  அதுவும் உங்களுக்கும் வேறு வேலைகள் இல்லாமலிருந்தால் !
  இது யோசனை தானே தவிர கட்டாயம் இல்லை .

  பதிலளிநீக்கு
 25. அற்புதமானத் தொடர் மனமார்ந்த
  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 26. வணக்கம்
  அண்ணா

  சிறப்பான விளக்கம் அறியாதவர்கள் அறிய ஒரு வாய்ப்பு.....

  நன்றி
  அன்புடன்
  ரூபன்

  பதிலளிநீக்கு
 27. மிக்க பயனுள்ள பதிவு ஐயா, பகிர்விற்கு மிக்க நன்றிகளும் வாழ்த்துக்களும்

  பதிலளிநீக்கு
 28. ஏதோ கொஞ்சம் புரிஞ்சா மாதிரி இருக்கு... ஆனா புரியலை :) முயற்சி செய்து பார்க்கிறேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 29. தங்களின் பதிவுகள் எப்போதுமே புளிக்காத மாம்பழத்துண்டுகளே ....

  எனக்கல்ல .....

  புரிந்துகொள்ள முடிவோருக்கு மட்டுமே!

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 30. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி தனபாலன் ஐயா

  -அன்புடன்-
  S. முகம்மது நவ்சின் கான்.
  www.99likes.in

  பதிலளிநீக்கு
 31. This post is not only new (in teaching how to blog) but also very useful....

  There must be somebody to teach like this. I am happy that you have undertaken the same..

  My best wishes...

  பதிலளிநீக்கு
 32. html ல் எழுதுவது பற்றி விரிவாக சொல்லியிருக்கிறீர்கள்! இருந்தாலும் எனக்கு இன்று சட்டென்று புரிந்துகொள்ள முடியவில்லை! மீண்டும் நிதானமாக வாசிக்கிறேன்! பதிவு எழுதுவதில் இவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது! சிறப்பான பகிர்வு! நன்றி!

  பதிலளிநீக்கு
 33. அழகாகக் கற்றுக்கொடுக்கும் உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்...நிறையத் தளங்கள் மின்னப்போகின்றன என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு

 34. தெரிந்தோ தெரியாமலோ பதிவுகள் மூன்றாண்டுக்கும் மேலாக எழுதி வருகிறேன் இந்த html விவரங்கள் புரிவதில்லை. mp3 இணைப்பு தெரியவில்லை. அதற்கு கணினியில் வசதி இருக்க வேண்டுமா. ஒரு முறை ஒரு பாட்டை என் பேரன் வீடியோவாக்கிப் பதிவு செய்ய உதவினான் குறிப்பிட்ட பிரச்சனைகள் வந்தால் அணுகுகிறேன் ,

  பதிலளிநீக்கு
 35. விளக்கமாக, தெளிவாக, எளிமையாக எழுதுகிறீர்கள்.. நிறைய விஷயங்களை தங்கள் பதிவுகள் மூலமே கற்றுக் கொள்கிறேன்.. மிக்க நன்றி!

  பதிலளிநீக்கு
 36. உங்கள் முயற்சிகள் மிகவும் பாராட்டத்தக்கவை. என்னைபோலத் தொழில்நுட்பம் தெரியாதவர்கள் கூட சிறிது நிதானமாகப் படித்து புரிந்து கொள்ளும்படி எழுதுகிறீர்கள்.
  உங்கள் தொண்டு தொடரட்டும். பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 37. சிறப்பான பகிர்வு இது பதிவு எழுத ஆர்வமுள்ள அனைவருக்கும் பயன்
  தரும் ! மிக்க நன்றி சகோதரா பகிர்வுக்கு மேலும் தொடர என் இனிய
  வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 38. html பயன்பாடு பற்றிய குறிப்புகள் அருமை. அனைத்தும் பயன்படுத்தாத சிலவற்றை முயற்சித்துப் பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 39. வணக்கம்சகோ,
  எங்களுக்கு எப்படிஒரு குரு கிடைத்துள்ளார் நன்றி சகோ.
  ஆனா எனக்குதா கொஞ்சம் புரியாதமாதிரி இருக்கு ஆனாலும் கத்துக்குவேநன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 40. தங்களால் முடிந்தவரை அனைத்து விவரங்களையும் மிகவும் துல்லியமாகவும், எளியதாகவும் மனதில் பதியும்படியும் அளித்துவருகின்றீர்கள். மாணவர்களைப் போல நாங்கள் கவனித்துக் கொண்டே வருகிறோம். விரைவில் தாங்கள் சொல்லும் வழிமுறைகளில் எதையாவது பின்பற்றி வலைப்பூவை மேம்படுத்த முயற்சிப்போம். தங்களின் இவ்வாறான பதிவுகளை நூலாகக் கொணர்ந்தால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 41. i am eagerly waiting for your next post sir, keep it up. this type of informations are help new bloggers like me....

  பதிலளிநீக்கு
 42. தனபாலன் சார், உங்களுடைய முந்தைய பதிவின் தயவில் என் தளத்தில் தமிழ்மண ஓட்டுப் பட்டை இணைத்து , ஓட்டும் வாங்கிக் கொண்டிருக்கிறேன். முதலில் அதற்கு நன்றி . இந்தப் பதவில் சொல்லியுள்ளதையும், முயற்சி செய்து பார்க்கிறேன். அருமையான தொடராக எழுதி வருகிறீர்கள். பதிவர்களுக்கு மிகவும் உபயோகமாயிருக்கிறது.நன்றி தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 43. டிடி அண்ணா. என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல் அளித்துள்ளீர்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 44. மிகவும் பயன் உள்ள பகிர்வு தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 45. நம் கணனியிலிருந்து எம் பி த்ரீ பற்றிக் கூறுங்கள் தனபாலன் அண்ணாச்சி!

  பதிலளிநீக்கு

 46. வணக்கம்!

  கணிப்பொறி நுட்பத்தைக் கற்க! தொடா்ந்தே
  அணியொளிா் ஆக்கம் அளி!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 47. உங்களுடைய தொண்டு பாராட்டப்பட வேண்டியதாகும். புதிதாக எழுத வருபவர்களுக்கும் சரி, என்னைய மாதிரி வலைப்பூவைப் பற்றி கொஞ்சம் மட்டும் தெரிந்தவர்களுக்கும் சரி உங்களின் இந்த பதிவுகள் மிகவும் உபயோகமாக இருக்கிறது.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 48. புதிய பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள்... படம் வரைந்து பாகங்களைக் குறித்து விளக்கிய விதம் மிக அருமை... வாழ்த்துக்கள்...!

  தொடரட்டும் உமது சேவை...!

  பதிலளிநீக்கு
 49. தனபாலன் சில நேரங்களில் ரொம்ப விளக்கினாலும் படிப்பவர்களுக்கு குழப்பம் வரலாம்.

  உங்களின் ஆர்வத்தையும், மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் மற்றும் மற்றவர்களின் எழுத்தை உற்சாகப்படுத்தும் உங்கள் நல்ல மனதையும் நிச்சயம் பாராட்டாமல் இருக்க முடியாது.

  அனைவருக்கும் உதவும் உங்க நல்ல எண்ணம் புரிகிறது என்றாலும் இதையும் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளுங்கள். நானும் எழுத வந்த புதிதில் ஒருவர் விடாமல் அனைவருக்கும் பின்னூட்டம் இடுவேன். ஏகப்பட்ட பதிவு எழுதுவேன் ஆனால், சில நாட்களுக்குப் பிறகு தான் இது என்னுடைய நேரத்தை எடுத்துக்கொள்வது புரிந்தது. அதோடு அதிக நண்பர்களும் கூடுதல் சிக்கலையே தரும்.

  சில பதிவுகளில் அவர்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் தகவல்கள் கூறுகிறீர்கள் ஆனால், அதை அவர்கள் புரிந்து கொண்டது போல தெரியவில்லை. எனவே இதிலும் கவனமாக இருங்கள். உதவி செய்பவர்களை மற்றவர்கள் கிண்டலாக நினைத்து விடக்கூடாது.

  இதை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்வீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் ரொம்ப நாட்களாக கூற வேண்டும் என்று நினைத்து இருந்தேன், இதில் கூறி விட்டேன்.

  பதிலளிநீக்கு
 50. தனபாலன் அண்ணா.... நீங்கள் இதையெல்லாம் சேகரித்துப் புத்தகமாக வெளியிட்டால் நான் தான் முதல் பிரதியை வாங்குவேன்.
  மிக மிக பயனுள்ள பதிவு. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 51. எளிமையாக புதிய பதிவர்கள் புரிந்துகொள்ளும் விதத்தில் பதிவிட்டுள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 52. @ கிரி..
  இது தாங்க திரு. தனபாலனோட சிறப்பே.

  எல்லாத்துக்கும் ஜாக்கிரதையாயிருந்து தன் சுபாவத்தை இழப்பவராய் இவர் எனக்குத் தெரியவில்லை. தெருவில் இறங்கி நடப்பதைத் தவிர்த்தால் நாய்க்கடிக்கு தப்பலாம். ஆனால் நாய்க்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கக் கூடாதில்லையா? அதான்.

  உண்மையில் சொல்லப்போனால் இது மிகப் பெரிய முயற்சிமட்டுமல்ல அவர் மற்றவர்க்குக் காட்டும் மிகப் பெரிய மரியாதையும் கூட. ஒன்றுமில்லாததெற்கெல்லாம் சிலுப்பிக் கொண்டு "இது உனக்குப் புரியாது" என்று செல்லும் டெக்கி மனோபாவத்தினர் மத்தியில் அத்தனை பேரையும் சமமாய் மதித்து புரிந்து கொள்ள முடியும் என்று ஊக்கப் படுத்தி வளரவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதிவருகிறாரே இது மிகப் பெரிய விடயமல்லவா?

  பலபேர் 'எனக்குப் புரியவில்லை 'என்று சொன்னாலும் 'முயலுங்கள்' என்று சொல்கிறாரே..இவரை எத்துனை பாராட்டினாலும் தகும்..

  திரு. தனபாலன் அய்யா.. உங்களது முயற்சிகளுக்கு நன்றி.

  God bless you.

  பதிலளிநீக்கு
 53. அனைவருக்கும் பயன்படும் மிக நல்லதொரு பகிர்வு...

  பகிர்வுக்கு நன்றி தனபாலன் சார்....

  பதிலளிநீக்கு
 54. பதிவா இது


  பாடம் அல்லவா

  பலமுறை படிக்கவேண்டிய பாடம் தொகுத்து ஒரு பதிவில் இணைப்புகளை தரவும் வாழ்த்துக்கள் அண்ணா

  பதிலளிநீக்கு
 55. தொடரை முழுவதும் படித்து வருகிறேன்... பல புதிய தகவல் கிடைத்தன நன்றி

  பதிலளிநீக்கு
 56. என்னைப்போன்றோருக்கு இது கண்டிப்பா பயன் தரும் பகிர்வுப்பா..

  யாராவது சொல்லித்தாங்களேன், யாராவது எனக்கு இதுப்போன்று செய்து தாங்களேன் என்று உதவிக்கு கேட்பதைவிட,

  நாமே கற்றுக்கொள்வதால் நமக்கும் இதில் ஈடுபாடு அதிகமாகும், சந்தேகம் ஏற்பட்டால் தீர்த்திட உதவிட நீங்கள் இருக்கும்போது என்ன கவலைப்பா..

  உங்களின் இந்த சேவை எல்லோருக்குமே நன்மை பயக்கக்கூடியது..

  மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..

  பதிலளிநீக்கு
 57. தொழில் நுட்ப பதிவுகள் தொடர்ந்து எழுதுவதற்கு பாராட்டுகள் அண்ணா.. தொடரட்டும்

  பதிலளிநீக்கு

 58. வணக்கம்!

  சித்திரைத் திங்கள் சிறந்து செழிக்கட்டும்
  சத்தியம் எங்கும் தழைத்து

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 59. அன்பின் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 60. இன்பம் பொங்கும் மனத்தழகும்
  இதயம் போற்றும் குணத்தழகும்
  என்றும் எதிலும் வெற்றி காண
  என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா !

  பதிலளிநீக்கு
 61. இனிய சித்திரைப்புத்தாண்டு நல் வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
 62. அனைவருக்கும் இனிய தமிழ்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உரித்தாகுக.

  பதிலளிநீக்கு
 63. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா !

  பதிலளிநீக்கு
 64. திரு கிரி, அவர்களின் வெட்டிப்பேச்சு மன்னிக்கவும், திரு கிரி மற்றும் திரு வெட்டிப்பேச்சு அவர்களின் கருத்துக்களை படித்ததில் எனக்கு(ள்)கேட்ட குறள் மீண்டும் மன்னிக்கவும் குரல் ...,
  'உலகம் ஆயிரம் சொல்லட்டுமே!..,. 'உனக்கு நீதான் நீதிபதி"

  பதிலளிநீக்கு
 65. அனைவருக்கும் பயன் படும் பயனுள்ள பகிர்வு.

  பதிலளிநீக்கு
 66. //பாடப் புத்தகங்கள் ஒவ்வொன்றும், இதுபோல இருந்தால் அனைத்து மாணவர்களுமே நூறு சதவீத தேர்ச்சிதான்//

  சகோ ஜெயகுமார் அவர்கள் சொல்வது சரியே

  பதிலளிநீக்கு
 67. எவ்வளவு பொறுமையாக , நிதானமாக படி படியாக அனைத்தையும் சொல்லி தருகிறீர்கள்!
  உங்கள் உதவிக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 68. முதலில் இந்த பதிவிற்காக மிக்கநன்றி.
  எனது வலைப்பூவை தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை.என்ன செய்வது?

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.