வியாழன், 25 ஏப்ரல், 2013

உங்களை எனக்குப் பிடிக்கிறது...! (SET 4) ISO Part 8


வணக்கம் நண்பர்களே... (1) படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்பதற்காக, தெரிந்த அல்லது சொந்த தொழிலை தைரியமாகச் செய்பவர்களுக்கு... (2) அறிவை தந்த தந்தையின் பாரத்தையும், அன்பே அனைத்தும் எனும் தாயின் மனதையும், தன் பொறுப்புகளையும் எந்தச் சூழ்நிலையிலும் மாறாது உணர்ந்தவர்களுக்கு... (3) எப்பேர்ப்பட்ட வலிகள் இருந்தாலும், தொடர்ந்தாலும்... நல்ல எண்ணங்கள், பண்புகள், குணங்கள், மற்ற அனைத்தும் தளராத, அயராத உழைப்பின் மூலம் மட்டுமே என்று அறிந்து தெரிந்து புரிந்தவர்களுக்கு - இன்று மட்டுமல்ல... என்றும் நமக்குத் தொழிலாளர் தினம் தான்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...


நண்பர்களே சிறு வேண்டுகோள் : கீழே உள்ள Play button-னை சொடுக்கவும். ஒருமுறை அழுத்தினால், பதிவை படிக்கும் போது பாடலை கவனமாகக் கேட்க முடியாதென்பதால், இருமுறை சொடுக்கவும். பதிவைப் படித்து முடிப்பதற்குள் Load ஆகிவிடும்.

471 வேலைக்குப் போகணும்ன்னு நான் விரும்புறேன்... நீ சொந்தமா தொழில் செய்யணும்ன்னு உறுதியா இருக்கே... சரி... உன்னோட பலம் எனக்குத் தெரியும்... செய்யப் போற வேலை, உனக்கு உதவி செய்யப் போறேன்னு சொல்றவங்க பலமும், அதே சமயம் இந்தத் தொழிலை செய்றவங்க பற்றியும், நல்ல யோசனை பண்ணிட்டுதாம்பா தொழிலை தொடங்கணும்...

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்


472 அப்பா... எல்லாத்தையும் ஆராய்ச்சி செய்து, எனக்குப் பொருத்தமான தொழில் தான்னு உறுதியான முயற்சியோடு இருக்கேன்... அதனாலே முடியாததுன்னு ஏதும் இல்லை...

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்


473 உணர்ச்சி வயப்பட்டு ஒரு தொழிலை ஆரம்பிச்சிட்டு, "என் பலம் இவ்வளவு தான், நேரம் சரியில்லை... எதுவும் ஒத்து வரலே…" இப்படிச் சொல்லிட்டு, தொழிலை தொடர முடியாமல் இடையிலேயே விட்டுவிட்டு, கெட்டுப் போனவங்க உலகத்திலே பல பேர் இருக்காங்க...

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்


474 என்னப்பா... என் திறமை எனக்குத் தெரியாதா...? மத்தவங்களை மதிக்காம, அவங்க சொல்றதையும் கேட்காம, "எனக்கு எல்லாம் தெரியும்"ன்னு தன்னைத் தானே பெரிசா நினைக்கிறவங்கதாம்பா சீக்கிரத்தில் கெட்டுப் போவாங்க... நான் அப்படி இல்லே...

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்


475 நல்லாவே தெரிஞ்சி வச்சிருக்கே... சந்தோசம்யா... ஆனா, அனுபவம் இல்லாத இந்த வயசுலே, இவ்வளவையும் இழுத்துப் போட்டு எப்படிச் செய்வேன்னு ஒரு சின்ன பயம்... ஏன்னா, மயிலிறகு ஏற்றின வண்டியே ஆனாலும், அளவுக்கு மீறி போச்சின்னா, வண்டியின் அச்சு முறிந்துபோகும்ன்னு சொல்வாங்க...

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்


476 அளவுக்கு மீறி ஆசைப்பற்றவங்க தான் அப்படி... ஒரு மரத்திலே நுனிக்கொம்பில் ஏறினவங்க, அதற்கு மேலேயும் போகணும்ன்னு நினைச்சா என்னப்பா ஆகும்...? அந்த மாதிரி என்னைப்பற்றி அதிகமாகக் கணக்குப் போடமாட்டேன்...

நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க்கிறுதி யாகி விடும்


477 சரிப்பா... எனக்கு இன்னும் சில வருசங்க தான் வருமானம் வரும்... உன் தங்கை பத்தாவது தான் படிக்கிறா... எல்லாத்தையும் மனசிலே வச்சி தீர்மானமா சொல்றேன், உனக்கென்னு சிறுகச் சிறுக வங்கியிலே சேர்த்து வைச்சிருக்கிறதை தர்றேன்... அதனோட மதிப்பை நீயும் உணர்ந்து, உயர்த்திக் காப்பாத்தணும்பா...

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி


478 1500 கடனோட வாழ்க்கையை ஆரம்பிச்சி, அக்காவையும் நல்லபடியா கல்யாணம் பண்ணிக் கொடுத்து, என்னையும் படிக்க வைக்கலையா...? உங்க அனுபவம் தான் மூலதனமே... கவலையேபடாதீங்கப்பா... எனக்கும் பொறுப்பு இருக்கு... இந்தத் தொழிலே ஆரம்பத்திலே சின்ன வருமானம் வந்தாலும் சேமிப்பு தான் செய்யப் போறேன்... கண்டமேனிக்குச் செலவு செஞ்சா, என்னென்ன கேடெல்லாம் வருமென்பது எனக்குத் தெரியும்... சேமிப்புப் பணம் ஓரளவு சேர்ந்த பின்னாடி தான், தொழிலை பெரிசா செய்யணும்னு எண்ணமே இருக்கு... எல்லாம் அம்மாகிட்டே கத்துக்கிட்டது...

ஆகாறு அளவிட்டி தாயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை


479 நீ இப்படித் தன்னம்பிக்கையா பேசுறது எவ்வளவு சந்தோசமா இருக்கு தெரியுமா...? நம்மகிட்டே இருக்கிறதை வச்சி, சந்தோசமா வாழ்ந்தாலே போதும்பா... இல்லேன்னா வாழ்க்கையிலே எல்லாம் இருக்கிற மாதிரி இருக்கும்... ஆனா, சீக்கிரம் நாம காணாம போயிடுவோம்...

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்


480 சரியாச் சொன்னீங்கப்பா... மாசாமாசம் வங்கியிலே சேமிச்சது போக, மிச்ச பணத்தை அப்படியே அம்மாகிட்டே கொடுக்குறீங்க... அம்மா, அதிலேயும் எப்படியோ மிச்சம் பிடிச்சி, வீட்டுக்கு தேவையானது மட்டும் வாங்கிப் போட்டு, வீட்டு நிர்வாகம் பண்ணலையா...? நான் கேட்கிற போதெல்லாம் நீங்க அள்ளிக் கொடுத்தா, பணத்தோட அளவும் குறைஞ்சி போகும், எனக்கும் பணத்தோட மதிப்பும் தெரியாமப் போகும்... நன்றிப்பா...

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்நன்றி என்னும் குணம் கொண்ட, நன்மை செய்யும் மனம் கொண்ட நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என, பல சந்தோசமான குடும்பங்களின் திருப்தியான வாழ்க்கையைச் சிந்திக்கும் போது உதவிய, நம்ம வள்ளுவரின் அதிகாரம் (48) வலியறிதல் எனக்கு வழியறிதல்... வலிகள் இன்றி வாழ்க்கை இல்லை... வலிகளை ஏற்றுக் கொண்டால் வழிகள் பிறக்கும்...

என் வலி... தனி வழி...! (வள்ளுவரின் வலி வாழ்க்கைக்கு வழி)


இப்போது மேலே உள்ள Play பட்டனை சொடுக்கி சிறப்பான பாடலை கேட்கலாம்... (படம் : நாடோடி மன்னன்) முதல் வரி உங்களுக்காக :


உழைப்பதிலா உழைப்பைப் பெறுவதிலா இன்பம்...? உண்டாவதெங்கே சொல் என் தோழா...! உழைப்பவரே உரிமை பெறுவதிலே இன்பம்...! உண்டாகும் என்றே சொல் என் தோழா...!


இதுவும் தொழிலாளர்கள் பற்றிய பகிர்வு தான்... அறிய இங்கே சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி... நண்பர்களே... தங்களின் கருத்து என்ன ?
நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி !


தொடர்புடைய பதிவுகளை படிக்க :


59 கருத்துகள்:

 1. அண்ணே நான் பார்டர் ல பாஸ் பண்ணிட்டேன்

  பதிலளிநீக்கு
 2. இலக்கு நிர்ணயித்தல், சுய மதிப்பீடு, தலைமைப்பண்புகள் பற்றிய அலசல் அருமை. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  பலரை சிந்திக்க வைக்கும் பதிவு ஒவ்வொரு வினாவும் பல மடங்கு கருத்து குவிந்துள்ளது அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. சுய பரிசோதனைகள் செய்தால் நிறைய அழுக்கடஞ்சி போயிதான் கிடக்கு மனசு இல்லையா?

  பதிலளிநீக்கு


 5. சுய பரிசோதனை மிகவும் சரியே. இந்த சுய பரிசோதனை முடிவுகளை
  அலுவலகத்தில் நமது மேல் நிலை அதிகாரியிடம் பகிர்ந்து கொள்ளவேண்டும்
  அவரது கருத்துக்களையும் ( நம் மேல் அவருக்கான பதில்களை) நம்முடன்
  அவர் பகிர்ந்துகொள்வார். அந்த அடிப்படையிலே தான் அடுத்த கட்ட பதவி உயர்வு
  இருக்கும் என்ற நிலை 1990 ல் எங்கள் நிறுவனத்தில் அகில் இந்திய அளவில்
  துவங்கப்பட்டது.

  துவக்க கட்டத்திலேயே மூன்றாம் நான்காம் பிரிவினைசார்ந்த ஊழியர்களுக்கான‌
  சங்கம் இதை நிராகரித்து விட்டது.

  முதல் பிரிவினைச் சேர்ந்த அதிகாரிகளோ ரகசிய அறிக்கை என்னும் ஆயுதத்தை
  கை விடத் தயாரில்லை. ஆகவே இதற்கு சரிவர அவர்கள் ஒத்துழைப்பு தராததால்
  இது நீர்த்துப்போனது.

  இந்த சுய பரிசோதனை மிகவும் தேவை.
  இதில் பங்கு பெறும் நபர்கள் ஒரு இத்ய சுத்தியுடன் பதில்கள் தரவேண்டும்.
  இது அவ்வளவு சாத்தியமில்லை. ஆதலால், இதில் வரும் முடிவுகளுக்கு
  ஒரு விழுக்காடு 5 முதல் 20 வரை உண்மை சாத்தியக்கூறுகளின் அடிப்படையிலே
  கழிவு தரப்படுகிறது.

  உடல் குறித்த சுய பரிசோதனைகளில் இந்த சிக்கல் இல்லை.

  எது எப்படி இருப்பினும் சுய பரிசோதனை என்னும் ஆய்வுக்கு மறு கருத்து
  இருக்க இயலாது.

  குடும்ப சூழ் நிலைகளில் இந்த சோதனை யை கணவனும் கணவனைக்குறித்து
  மனைவியும் வைஸி வர்ஸா செய்தார்களானால், குடும்ப சூழ் நிலை பெரிதும்
  இன்பமாகும். ஐயமில்லை.

  பாராட்டுகள்.

  சுப்பு தாத்தா.
  www.subbuthatha.blogspot.in
  www.vazhvuneri.blogspot.in

  பதிலளிநீக்கு
 6. சூப்பர் சகோ,பாராட்டுக்கள்...சிந்திக்க வைக்கும் நல்ல பதிவு!!

  பதிலளிநீக்கு
 7. மிக அருமையான விசயங்களைக் கூறிவிட்டு வாழ்கையே எதிரொலி போலத் தான் என்னும் அற்புதமான விசயத்துடன் நிறைவு செய்துள்ளீர்கள் மகிழ்ச்சி

  பதிலளிநீக்கு
 8. உங்களை எல்லோருக்கும் பிடிக்கிறது .அருமையான கட்டுரைகளை தந்து அறிவை பரவலாக்குவதால் .
  சிறப்பான கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 9. மிக அருமையான பகிர்வு நான்கு பாகமும் அசத்தல்

  பதிலளிநீக்கு
 10. அருமையான பதிவு ஐயா.தலைமைப் பண்பிற்கான சுய மதிப்பீடு அருமை.வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
 11. சுய பரிசோதனை அருமையான விடயம்.
  எத்தனையோ விஷயங்களில் தினம்தினம் நாம் எம்மை பரிசோதித்துக்கொண்டேதான் வாழவேண்டிய காலகட்டத்தில் வாழ்கின்றோம். நல்ல பதிவு.

  உங்களை எல்லோருக்கும் எனக்கும் பிடிக்கிறது தனபாலன் சார்!!!

  த.ம.2

  பதிலளிநீக்கு
 12. சுய மதிப்பக்கான சிறப்பான பகிர்வு

  பதிலளிநீக்கு
 13. அவரவர் பார்வையில் அவரவரை எடை போட்டுக் கொள்ள சிறந்த பயிற்சி. சுப்பு தாத்தாவின் பின்னூட்டம் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 14. ஆய்வு அருமை !

  சுவாரசியமான விசயங்கள் பல கற்றுக்கொள்ள நேரிட்டது.

  தொடர வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 15. சுயபரிசோதனை தேவையான ஒன்று தான். மிக மிக பயனுள்ள பகிர்வு நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 16. //உடல் நலம், மன நலம் இவைகளை கருத்தில் கொண்டு நமது பலத்தையும், பலவீனத்தையும் உண்மையா சோதனை செய்வதே இந்த ஆய்வு// ஒவ்வொரு வரியும் ஆணி அடித்தாற்போல இருக்கிறது.

  வாழ்க்கையே எதிரொலி போலத்தான் - மிக அழகாச் சொன்னீங்க!

  பதிலளிநீக்கு
 17. // உள் மனதில் தவறு என்று தெரிந்ததை... செய்யாமல் உறுதியாக இருந்தால், வாழ்க்கை என்றும் சுவாரசியம் இருக்கம் ....// உண்மை.
  நாம் உணர்ந்து நம் தலைமுறையை வழிகாட்ட வேண்டும் என்று அழகாக சொல்லி இருக்கிங்க. சமூகத்தில் மறைந்து வரும் பண்புகளை மீண்டும் கண்டறிய உதவும் ஒரு நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 18. பத்து நண்பர்களும் தேர்ந்தெடுத்த முத்துக்களாக இருப்பது ரொம்ப விசேஷம் பாராட்டுக்கள் தனபாலன்

  பதிலளிநீக்கு
 19. மிக அருமையான கட்டுரை ..என் மகளுக்கு இப்படி assess மற்றும் evaluation செய்வது ரொம்ப பிடிக்கும் ..அவளுக்கும் காட்டவேண்டும் .
  எல்லா விஷயத்தையும் உள்ளடக்கி அருமையான ஒரு மனவியல் சார்ந்த பதிவு .
  எல்லாருக்கும் உங்களை கண்டிப்பா பிடிக்கும் சகோ ..
  நானும் பாஸ் பண்ணிட்டேன் சுய மதிப்பீட்டில் :)))
  குழந்தைகள் மனதில்......நீங்கள் சொல்லியிருப்பது அற்புதமான கருத்து.

  பதிலளிநீக்கு
 20. நானும் படித்தேன் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றிகள் அண்ணா

  பதிலளிநீக்கு
 21. சுயசோதனை கேள்விகள் அருமை.நன்றி பகிர்வுக்கு.பகிர்ந்த அனைத்து வரிகளும் அசத்தல் ஏற்றுக் கொள்ளும் படியிருக்கு.

  பதிலளிநீக்கு
 22. இந்த சுய மதிப்பீட்டு கேள்விகளுக்கு மனசாட்சியுடன் பதிலளித்து தலைமைப் பண்பு என்னிடம் இருக்கிறதா? என்று தெரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்

  பதிலளிநீக்கு
 23. நல்ல சுய பரிசோதனை வழிகாட்டி .
  முயன்று பார்த்து சொல்கிறேன்.
  உடல் நலம் போலவே தான் மண் நலமும் என்பதை நன்கு உணர்த்தும் பதிவு.

  பதிலளிநீக்கு
 24. திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை நானும் திருப்பிச் சொல்கிறேன்.’உங்களை எனக்குப் பிடிக்கிறது!’

  பதிலளிநீக்கு
 25. உள்மனதில் தவறு என்று தெரிந்ததை செய்யாமல் உறுதியாக இருந்தால் - மற்றவர்களை மாற்றும் வல்லமை உண்டாகும் என்பது வைரவரிகள்... ஆனால் கல்லுக்கு நீதி சொல்ல முடியாது.. நீ என்ன சொன்னாலும் என்வழி மாறாது என்று இருப்பவர்களால் தான் பிரச்னையே!..

  பதிலளிநீக்கு
 26. அருமையான பதிவு.
  ஆண்டுக்கு ஒருதடவை மருத்துவ பரிசோதனை போல் ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்வது மிக மிக அவசியம். நன்றாக சொன்னீர்கள்.


  தினம் தினம் சுயபரிசோதனை வேண்டும்.

  இரவு தூங்க போகும் போது ஒரு தடவை இன்று எப்படி நடந்து கொண்டோம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும் என்பார்கள் மகரிஷி.

  உள்மனதில் (மனசாட்சி) தவறு என்பதை செய்யாமல் இருந்தாலேபோதும் என்று நன்றாக சொன்னீர்கள்.
  அடுத்தவர்களை நேசிக்க கற்றுக் கொண்டாலே போதும் என்பதை உங்களை எனக்கு பிடிக்கிறது என்று மலைமேல் ஏறி அழகாய் சொல்லசொல்லி விட்டீர்கள்.
  உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.
  பதிவு அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. சுய பரிசோதனை நிச்சயம் தேவை! நான் கூட இப்படி கேட்டுக்கொள்வேன். அருமையான விஷயங்களை பகிர்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 28. தன்னை உணர்வதே வாழ்வின் முக்கிய அம்சம்..நல்லதொரு பதிவுக்கு நன்றி...

  பதிலளிநீக்கு

 29. எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 30. நல்ல பதிவு நண்பரே, சுயபரிசோதனை செய்து கொள்வது மிகவும் அவசியம், நீங்கள் சொல்வது போல் அது தொடர்ந்து செயல்படவேண்டும்.

  பதிலளிநீக்கு
 31. நல்ல சுய பரிசோதனை வழிகாட்டி ...அருமையான கட்டுரை...

  பதிலளிநீக்கு
 32. சுய பரிசோதனை ஆய்வு நன்று நமக்கு !
  தொடருங்கள் அன்பரே

  பதிலளிநீக்கு
 33. சுய பரிசோதனையை எல்லோரும் தொடங்க வேண்டும் smartய் என சொல்லியமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 34. சுயபரிசோதனை மிகவும் அவசியமாகிப்போகிறது.

  பதிலளிநீக்கு
 35. பயனுள்ள பதிவு. வாழ்வின் வெல்லத் துடிக்கின்ற இளம் உள்ளங்களுக்க இச் சுயபரிசோதனை பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் அய்யமில்லை.

  பதிலளிநீக்கு
 36. சிந்திக்க வைத்த அருமையான பதிவு.

  எனக்கும் உங்களை மிகவும் பிடிக்கும் தனபாலன் அண்ணா.

  பதிலளிநீக்கு
 37. படித்து கொண்டே இருக்கிறேன் மனதிற்கு தேவையான பயிற்சி இதில் நாமதான் உண்மையா இருக்கனும் சார் இது கம்பி மேல நடக்கிற மாதிரிதோணுது நம்மை காப்பாற்றி கொள்ள நாமதான் நமக்கு உதவ முடியும் முதலில் சுயத்தை அறிய சொல்லி கொடுக்க பட்டுள்ள இந்த விஷயங்கள் பல பேரால் சொல்லி கொடுக்க பட்டவைதான் என்றாலும் எப்போதும் புதிதாய் தோன்றும் அது சொல்லி கொடுக்கிறவங்களோடமனநிலமையும் திறமையை பொறுத்தது அதில் நீங்க எக்ஸ்பர்டா இருக்கீங்க நான் முடிவு சொல்ல முடியாது ஏன்னா நான் இன்னும் இரண்டு மூன்று முறையாவது படித்து புரிந்து கொண்டுதான் சொல்ல முடியும் படித்தேன் படிக்கிறேன் படிப்பேன் அப்படி பட்ட பதிவுகள் இவைகள் மீண்டும் வருகிறேன்உங்கள் தலைப்பே போதும் இருந்தும் நன்றி நன்றி நன்றி

  பதிலளிநீக்கு
 38. மிகவும் அவசியம் சுயபரிசோதனை எனக்கும் உங்களைப்பிடிக்கும் சார்!

  பதிலளிநீக்கு

 39. வணக்கம்!

  தன்முயற்சி கட்டுரை! வாழ்வு தழைத்திடவே
  பொன்குழைத்துத் தந்தீா் பொலிந்து!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 40. "நம் மனதை ஒரு நாள் சுய பரிசோதனை செய்வோமா... வாங்க..." என்று அழைத்து மூளைக்கு வேலை கொடுத்து நல்வழிகாட்டும் தங்கள் பதிவுகளை வரவேற்கிறேன்.

  பதிலளிநீக்கு
 41. நீண்ட பட்டியல்!
  தன்னாய்வு செய்யாதவர்கள் தலைமையேற்றால் அவர்களுக்கே துன்பம் தான்.
  at least தன்னுடைய பலவீனங்களையாவது அறிந்து கொள்ள உதவும்.

  பதிலளிநீக்கு
 42. சுயபரிசோதனை மிக அவசியம் என்பதை உணர்த்தும் அற்புதமான பதிவு! "உன்னையறிந்தால் நீ உன்னை அறிந்தால் இந்த உலகத்தில் போராடலாம்"! எனும் வரிகள் நினைவுக்கு வந்தன! நன்றி ஐயா!

  பதிலளிநீக்கு
 43. சுயபரிசோதனை மிகவும் அவசியமானதொன்று. இந்தக் கேள்விகள் மிகவும் பிடித்திருந்தது. வெளியில் சொல்லாவிட்டாலும், நமது தகுதி எது, இன்னும் எவ்வளவு நாம் முன்னேர வேண்டும் என்பதை மனது அறிந்துவிடும். சிந்திக்க வைக்கும் பதிவு.
  ஒருதரமல்ல, பலமுறை படித்து உண்மையாக நம்மை மதிப்பிட்டுக்கொள்ள வேண்டும்.
  அருமையான பதிவு. சிந்திக்க வைக்கிரது. அதுவே மிக்க விசேஷமானது. நன்றி .

  பதிலளிநீக்கு
 44. ’சுய மனப் பரிசோதனை’...

  முற்றிலும் புதிய சிந்தனை.

  மனதைச் சீர்திருத்திக் கொள்ள உதவும் அருமையான பதிவு.

  நன்றி தனபாலன்.

  பதிலளிநீக்கு
 45. நிறைய சொல்லியிருக்கிறீங்க... ஆனா எனக்கு சரியா புரியுதில்ல.. மீண்டும் மீண்டும் படிக்கிறேன்ன்ன்....

  பதிலளிநீக்கு
 46. மற்றவர்களின் குணங்களை ஆராயும் முன்னர்...
  நாம் யார்.. எந்த நிலையில் இருக்கிறோம்
  என்று உள்ளூர சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
  என்கிற வகையில் உங்களது அனைத்து பதிவுகளுமே
  வாழ்வியல் சாசனங்கள்...

  பதிலளிநீக்கு
 47. வணக்கம் தோழரே. நல்ல அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 48. சுய பரிசோதனையில் பொய்யில்லாமல் இருந்தால் வெற்றியே. இதை அடிக்கடி செய்ய வேண்டும். தன்பாலன்
  எனக்குஎப்பொழுதோ படித்த எஃபெக்டிவ் கம்யூனிகேஷன் நினைவுக்கு வந்தது.
  மிக மிக நன்றி அருமை நண்பரே. உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்.

  பதிலளிநீக்கு
 49. சுய பரிசோதனை மிகவும் அவசியமானது.நல்ல பதிவு

  பதிலளிநீக்கு
 50. சுய பரிசோதனை ஆய்வு நன்று
  Eniya vaalththu.
  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 51. அருமையான இடுகை தனபாலன்.
  தகவல்களைத் தேடி... அழகாகத் தொகுத்து... பொறுமை அதிகம் உங்களுக்கு.

  பதிலளிநீக்கு
 52. மிக அரிய பதிவு; மிகவும் பயன் தருவது.

  மீண்டும் மீண்டும் பாராட்டத் தோன்றுகிறது.

  மீண்டும் நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 53. நிதானமாய்ச் செய்ய வேண்டியது, அவசியமானதும் கூட.

  பதிலளிநீக்கு
 54. தமிழ்மணத்தில் என் பதிவை எவ்வாறு புதுபிப்பது என கூறுங்களேன் தோழரே.

  தமிழ்மணப் பதிவுப்பட்டை கிடைத்தாலும்.. அதில் கிளிக் செய்யும்போது Error வருது.

  எனது வலைபதிவு jeshwatamiltamil.blogspot.in
  இதில் (.com ) இல்லாமல் (.in) என்று இருப்பதாலா?
  ___________________________________

  எனக்கு தெரியவில்லை. எனவே இதை இரவின் புன்னகை வலைபதிவரிடம் கேட்டிருந்தேன்.. அவர் தங்களிடம் கேட்டால் பதில் கிடைக்கும் என கூறினார்.

  கொஞ்சம் விளக்கம் தர முடியுமா சார்?

  பதிலளிநீக்கு

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.