🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இருவிழிக் கல்விக்கொள்கை...



அனைவருக்கும் வணக்கம்... உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் தேவையான :-

இருவிழிக் கல்விக்கொள்கைக்கான குறள் :

40. கல்வி : 392. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு

மனிதர்களில் எந்தவித பாகுபாடும் இல்லாமல் மக்களாய்ப் பிறந்த அனைவரும் கல்வி கற்க வேண்டும் என்றெண்ணி நல்வாழ்வு நடத்த விரும்பும் மனிதனுக்குத் தேவை என்ன...? எண்ணும் எழுத்தும் கண்களைப் போல் தேவை... எந்தக் கண் தேவை...? இடது கண்ணா...? வலது கண்ணா...? எல்லாத்துறைகளிலும் கோலோச்சும் அறிவியல் துறைகளுக்கெல்லாம் தாயான கணித நூலறிவாக ஒரு கண்ணும், கணிதம் தவிர்த்த ஏனைய இலக்கிய இலக்கண நூல்களன்றி அரசியல், பொருளியல், கவிதை, காப்பியங்கள், சமயம், தத்துவம், மருத்துவம், என எண்ணற்ற நூல்கள் கொண்ட எழுத்து நூலறிவாக ஒரு கண்ணும் தேவை... இதையே பின் தொடர்ந்த ஔவை பாட்டிகள் கூறியவை :- எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும், எண் எழுத்து இகழேல்... வலது கண்ணோ இடது கண்ணோ - கணித நூலறிவு கண்ணாகத் தாயும், எழுத்து நூலறிவு கண்ணாகத் தந்தையும் தேவை...

நான் கணித்த ஒன்றின் செயல் சரியாக நடக்கும் போது மகிழ்ச்சி... சற்றே அந்த கணிப்பின் நிலைமை அணு அளவு மாறும்போது வருத்தம்... மேன்மேலும் என் கணிப்பின் நிலைமை மோசமாகி தலைகீழாக மாறும் போது, வருத்தப்பட்டு என் கணிப்பை மாற்றிக் கொண்டு திருந்துவதற்குப் பதிலாக, 'அதற்கு இது பரவாயில்லை' எனத் தொடர்ந்து ஒப்பீடு சுழலில் மாட்டிக் கொள்கிறேன்... அதன்பின் கணிப்பதெல்லாம் தவறாகி என்னை உலகமே கணிக்க ஆரம்பித்து விடுகிறது...! இந்தப் பத்தியின் ஆரம்பத்திலுள்ள ஒன்றின் என்பதை 'பிறரின்' என வாசிக்கவும்... தேவையா இது...? இதற்குத் தீர்வு என்ன...? :- நன்றின்பால் உய்ப்பது அறிவு (குறள் 422 : →எது அறிவு...?←) / மீண்டும் ஒருமுறை ஒன்றின் என்பதை 'மனதின்' என வாசிக்கவும்...! நம் ஒவ்வொரு கணிப்பும் கணக்கே...! நம் மனம் கணிக்கும் தவறான கணிப்பிலிருந்து தப்பிக்க, அறிந்து தெரிந்து புரிந்து கொள்வதே பெரும் செயல்...!

அடுத்ததாக எழுத்தறிவு என்பது முதலில் அவரவர் தாய்மொழி திறன் பொறுத்தே... மற்ற மொழிகளை அவசியமெனில் கற்கலாம்... தாய்மொழியில் மாற்றி அவற்றைப் பொருள் கொள்வது இயல்பு...! ஆனால் எந்த மொழியையும் அந்த மொழியிலேயே பயிற்சி பெற்று பொருள் புரிந்து கொண்டால் எளிதாக கற்கலாம்... ஏழு மொழிகள் தெரியும் என்றால் ஏழு மனிதர்களுக்குச் சமம்... அடியேனுக்கு ஈரேழு மொழிகள் தெரியும், அதிலும் கள்ளமற்ற வெள்ளை மொழியான பிள்ளை மொழி தான் முதன்மை - அதுவே மிகவும் பிடிக்கும்...! // பிள்ளையாய் இருந்து விட்டால் - இல்லை ஒரு துன்பமடா // கவியரசருக்கு நன்றி... பாவேந்தர் :- தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விடாதே... தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடாதே... மேலும் இன்றைக்குத் தேவைப்படுவது யாதெனில் :-


அதாவது பிறப்பொக்கும் குறளில் "எல்லா உயிர்க்கும்" எனும் அடியும், மேலே குறிப்பிட்டுள்ள குறளில் "வாழும் உயிர்க்கு" அடியும் எடுத்துக்கொள்ளலாம்... இதுவே திணிப்பவர்களுக்கு திருந்துவதற்கான இரண்டு அடிகள்... நம் தாய் தமிழ்நாட்டிற்கு அவசியம் இவ்விரு அடிகள் என்றும் தேவை போல... தாத்தாவிடம் அனைத்து மனிதர்களும் உகந்த தகுந்த அடிகள் உள்ளன நண்பர்களே...

40. கல்வி : 393. கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்

கற்றவர்களே கண்ணுடையவர்கள், கல்லாதவர் முகத்தில் புண்களையுடையவர்கள்... மனிதர்கள் அனைவரும் எழுதப்படிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும் என்பதை வலியுறுத்தவே இக்குறளில் மிகக் கடுஞ்சொல்லான புண்ணுடையவர் என்று, கல்லாதவரது கண்களை நலம் குறைந்த உறுப்புக்களாக இழித்துரைக்கிறார் தாத்தா...! இவ்விரு குறளையும் தொடர்புப் படுத்திச் சிந்தித்து தாத்தாவின் உள்ளத்தைச் சிறிதளவு அறிய முயல்கிறேன்...! "எனை எழுத்தென்ப" :- பல்வேறு நூல்களை வாசிப்பது சுவாசிப்பது போல... "எண்ணென்ப" :- எண்களை எண்ணி எண்ணங்களை வரையறுக்கும் எண்ணியல் அல்லது கணக்கியல்...! எழுத்தறிவே இல்லாதவர்கள் கூட கணித அறிவில் மேதையாகவும், வாழ்க்கை கணக்கிலும் சிறப்புற்று இருந்தார்கள் - இருக்கின்றார்கள்... ஆனால் இன்று மிகுதியாக அவை எவ்வாறு உள்ளன...? பணம், பேராசை, சுயநலம், துதிபாடும் அரசியல் போன்ற பல்வேறு கெடுதலில் மிகச்சரியாகக் கணக்கு பார்த்து, கணிதயறிவு கண்ணைப் புண்ணாகிக் கொண்டே, எழுத்தறிவு கண்ணையும் புண்ணாகிக் கொள்கிறார்கள்...! மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்பதை விடச் சிறந்த அறம் ஏதுமில்லை... அவ்வாறு ஆகி விட்டால் இரு கண்களும் சரிவரச் செயல்பட்டே ஆக வேண்டும்...! அதன்பிறகே எதையும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளவே முடியும்...

அனைத்து அறம் குறள்களையும் விட அறத்திற்கு முதன்மை இந்த 34-வது குறள்...! உங்களுக்கும் தெரியும், அதான் அனைத்துஅறன் ஆகுல நீர பிற... குறள் எண்ணின் மூல எண்ணும் 7...! ஈற்றடியில் மூன்று சீர்களின் கூட்டுத் தொகையாக 7 எழுத்துக்களே கொண்ட இரண்டு குறட்பாக்களில் ஒன்று...!

அழகான அருமையான இனிமையான ஒரு பாடல் :-

© மொழி வைரமுத்து வித்யாசாகர் 🎤 பல்ராம் @ 2007⟫



இயற்கையின் 'கணக்குகள்' புரிந்துவிடில் -
மனிதரின் மொழிகள் தேவையில்லை...
இதயத்தின் 'கணக்குகள்' புரிந்துவிடில் -
மனிதர்க்கு மொழியே தேவையில்லை...

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. சிறந்த கருத்துகளின் பகிர்வு.  உங்களுக்கு ஈரேழு மொழிகள் தெரியும் என்பது எனக்கு புதுச்செய்தி.  பிரமிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி...? கள்ளமற்ற வெள்ளை மொழி - தேவன் தந்த தெய்வ மொழி...

      நீக்கு
  2. ஈரேழு மொழிகளிலே பிள்ளை மொழி கள்ளமில்லாத அன்பு மொழி அருமை ஜி

    பதிவு வழக்கம் போல அசத்தல்.

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    வழக்கம் போல் பதிவு அருமை. எண்ணும், எழுத்துக்குமான உவமானங்கள் சிறப்பாக உள்ளது. நல்ல கருத்துக்கள் அடங்கிய தெளிவான குறள் விளக்கம் அற்புதமாக உள்ளது. சிறந்த சிந்தனைகளுடன், நீங்கள் ஈரேழு மொழிகளும் கற்று தேர்ந்தமைக்கு பாராட்டுகள். பாடலும் இன்றுதான் கேட்டேன். நன்றாக இருக்கிறது. வித்தியாசமான சிந்தனைகளுடன் கூடிய சிறந்த பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  4. "ஒரே ஒரே என்பவனை ஓங்கி அடி" - இதில் வரும் "ஒரே ஒரே" என்பது என்ன ? அடியேனுக்கு புரியவில்லையே!!..

    பதிலளிநீக்கு
  5. பொருத்திக்கூறும் விதம் புருவங்களை உயர்த்தின.

    பதிலளிநீக்கு
  6. இரு விழி கல்விக் கொள்கை விளக்கம், படம், பகிர்ந்த குறள் எல்லாம்அருமை.
    இரு கண்கள் போன்றது கணிதமும், ஏனைய நூல றிவும் என்ற விளக்கம் அருமை.

    பிள்ளை மொழி, தாய் மொழி மற்ற மொழிகள் விளக்கமும் மிக மிக அருமை.
    காற்றின் மொழி பகிர்வு வரிகள் எல்லாம் எனக்கு பிடிக்கும் அது இந்த பதிவுக்கு மிக பொருத்தம்.

    குறள் விளக்கம் கொடுத்த விதம் இந்த பதிவை மிக சிறப்பாக ஆக்கி உள்ளது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. இயற்கையின் மொழி தெரிந்து விட்டால் போதும்.
    அது போல இதயத்தின் கணக்கு தெரிந்து விட்டால் வேறு என்ன தேவை!

    பதிலளிநீக்கு
  8. குறள் விளக்கம் வழக்கம் போல் அருமை

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.