🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



நான் என் செய்வேன்...?

வணக்கம் நண்பர்களே... முதலில் ஒரு பாட்டு கேட்போமா...?


அவனை அழைத்துவந்து, ஆசையில் மிதக்கவிட்டு, "ஆடடா ஆடு" என்று, ஆட வைத்துப் பார்த்திருப்பேன்2 படுவான், துடித்திடுவான், பட்டதே போதும் என்பான்2 பாவி அவன் பெண் குலத்தைப் படைக்காமல் நிறுத்தி வைப்பான்... கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் - அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும்... பிரிவென்னும் கடலினிலே மூழ்க வேண்டும் - அவன் பெண்ணென்றால் என்னவென்று உணர வேண்டும்...!
மேலுள்ள பாடல் வரிகளை மட்டும் கேட்க → சொடுக்குக ►

© வானம்பாடி கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

கவிஞரும் T.M.சௌந்தரராஜன் அவர்களும் பேசியதைக் கேட்டீர்களா...? முருகா...! பதிவிற்குச் செல்வோமா...? பிறந்து, வாடி, மூழ்கி, அப்படி என்ன உணர்ந்தான் காதலன்...? ஏனிந்த பிதற்றல்...? காரணம், எவ்வளவோ முயன்றும் தனது காதலியைச் சந்திக்க முடியவில்லை... அதனால் வந்த துயரத்தில், இறுதி முயற்சியாக தன் காதலை ஊராருக்குச் சொல்லி, காதலியை மணப்பதற்காகத் தன் நாணத்தை விட்டு, மடலேறுவேன் என்கிறான்... மடலேறுதல் என்றால் என்ன...? புரியவில்லையே...! அறிய "முன்னோட்டம்..." என்கிற பதிவை வாசிக்காதவர்கள் இங்கு சொடுக்கிச் சென்று, வாசித்து வந்து விடவும்...



என் மனதைப் பறித்துச்சென்று, என்னை விரும்பிய காதலியைச் சந்திக்கப் பலவழிகளில் முயன்றும் முடியவில்லையே... அதனால், எங்களது காதல் நிறைவேற வேண்டுமென்றால், நான் மடல் ஏறுதலைத் தவிர வேறு பலம் எனக்கில்லை...

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி 1131


கண்ணாலே பெண்ணை அன்று கண்டது பாவம்... பாவம்... கொண்ட பின்னே பிரிவைச் சொல்லி வந்தது பாவம்... வெறும் கூடாகப் பூமியில் இன்னும் வாழ்வது பாவம்... வாழ்வது பாவம்... காதலுக்கே வாழ்ந்திருந்தேன் கற்பனை இல்லை... கல்யாணம் கொள்வது மட்டும் - என் வசமில்லை... என் வசமில்லை...

© பணக்கார குடும்பம் கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1964 ⟫

அவளே எனது உயிரென்பதால், அவளைச் சந்திக்க முடியாமல் வரும் தடைகள் அனைத்தும், எனது உடலுக்கும் உயிருக்கும் மிகுந்த வலியைத் தருகிறது... அவளை அடைவதைவிட நாணம் பெரிதில்லை... அதைத் தூக்கி எறிந்துவிட்டு, துன்பத்தைப் பொறுக்காத எனது உடலும் உயிரும் ஒன்றாக மடல் ஏறத்தயங்காது...

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து 1132


என்ன தவறு செய்தேன் அதுதான், எனக்கும் புரியவில்லை... வந்து பிறந்துவிட்டேன் ஆனால், வாழத் தெரியவில்லை... அருகில் இருந்து சொல்லிக் கொடுத்தால், உலகம் தெரியாதா ? அம்மா... விவரம் புரியாதா...? நான் உன்னை அழைக்கவில்லை... கண்ணை மறைத்துக்கொண்டால் மனதில், எண்ணம் மறைவதில்லை...

© எங்கிருந்தோ வந்தாள் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் T.M.சௌந்தரராஜன் @ 1962 ⟫

என்னிடம் முன்பிருந்த நாணமும், பல ஆற்றல்கள் கொண்ட நல்ல ஆண்மையையும், எனது திடமான உள்ளத்திலிருந்து தொலைத்து விட்டேனே... ஊரறிய மடலேறுவது வெட்கங்கெட்ட செயலாக இருந்தாலும், எனக்கு வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லையே...

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல் 1133


யாருக்காக...? கண்கள் தீண்டும் காதல் என்பது - அது கண்ணில் நீரை வரவழைப்பது... பெண்கள் காட்டும் அன்பு என்பது - யாருக்காக...? எங்கிருந்து சொந்தம் வந்தது...? இன்று எங்கிருந்து நஞ்சு வந்தது...? அங்கிருந்து ஆட்டுகின்றவன் - தினம் ஆடுகின்ற நாடகம் இது...! யாருக்காக...? இது யாருக்காக...?

© வசந்த மாளிகை கண்ணதாசன் K.V.மகாதேவன் T.M.சௌந்தரராஜன் @ 1972 ⟫

காதலுக்கு உதவாத இந்த நாணத்தையும், நல்லாண்மையையும் காத்துப் பொறுத்திருப்பதில் பயனில்லையே... விம்மிப் பெருகி விரைந்தோடும் இந்த காதல் பெருவெள்ளம், எனது ஞானம் உட்பட அனைத்தையும் அடித்துக் கொண்டு போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்... நான் என் செய்வேன்...?

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை 1134


என்னைப் படைத்ததும் ஏன்...? இன்பம் கொடுத்ததும் ஏன்...? - இதுபோலே பாதியிலே தட்டிப் பறித்ததும் ஏன்...?2 2 துன்பமெனும் நெருப்பாற்றில் எனை தூக்கி எறிந்ததும் ஏன்...?2 கண் இல்லையோ...? மனம் இல்லையோ...? கலங்கும் என் நிலை மாற வழியில்லையோ...? செய்த பிழை என்ன...? தேகம் இருந்தென்ன...? உய்யும் வழி என்ன...? உனது தீர்ப்பென்ன...?

© பாசவலை அ.மருதகாசி விஸ்வநாதன்-ராமமூர்த்தி C.S.ஜெயராமன் @ 1956 ⟫


நாம் என்ன செய்ய முடியும்...? இருக்கிறது, சொல்கிறேன்... அதற்குமுன் இவை (1131-1134) 114 நாணுத்துறவுரைத்தல் அதிகாரத்தின் குறளின் குரல்கள்... முன்னோட்டம் பதிவில் // காதலன் மடலேறி, பார்வை முழுவதும் தன் கையில் உள்ள கிழியின் மீது வைத்துக் கொண்டு, காதலியைப் பற்றிப் பாடிக் கொண்டேயிருப்பான் // என்று சொன்னேன் அல்லவா...? காதலன் பாடும் பாடல்களை நாம் கேட்க வேண்டாமா...? அதனால்..........

நாம் செய்ய வேண்டியது, மேலிருந்து ஒவ்வொரு இதயத்தையும் சொடுக்க வேண்டும்... வாசுகி பாட்டி சொல்லி முடித்தவுடன், பதிவில் உள்ள வரிகளை மட்டும், காதலன் பாடுவதைக் கேட்டும் ரசிக்கலாம்...! நன்றி...

தொடரும்...

நண்பர்களே... நாணம் துறந்த தங்களின் அனுபவம் ஏதேனும்...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. காதலர் தினத்துக்கேற்ற பதிவு!  

    ஊருக்கு எடுத்துச் செல்லும் பைக்லபார்க்க சிறியதாக இருக்கும்.  ஆங்காங்கிருக்கும் சிறு ஜிப்களை விடுவித்தால் பை பெரிதாகிவிடும்!  அதுபோல உங்கள் இந்தப்பதிவு சிறிதாகத் தெரிந்து, ஆங்காங்கே இருக்கும் காதல் சின்னங்களைத் தொட்டதும் DD ஸ்பெஷல் தெரிந்தது.

    பதிலளிநீக்கு
  2. ஆகா! காதலர் தினத்திற்கும் பொய்யாமொழிப் புலவர் ..அவரோடு பாடல்களை அழகாய்ச் சேர்க்கும் வலைச்சித்தர் 😀 பிரமாதம் அண்ணா

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் ஜி
    காதலர் தினத்திற்கு பொருத்தமான விளக்கங்களுடன் பதிவு அருமை.

    தொடரட்டும் காதலைக் குறித்த பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  4. சிறப்புப்பதிவு மிகவும் அருமையாய் வித்தியாசமாய்...வாழ்த்துகளுடன்..

    பதிலளிநீக்கு
  5. அலைபேசியில்தான் படித்தேன் முன்பு காதல் சின்னத்தை சொடுக்க இயலவில்லை இப்பொழுது சொடுக்கி பார்த்தேன், படித்தேன், கேட்டேன்.
    ஸூப்பர் ஜி

    பதிலளிநீக்கு
  6. நல்ல பதிவு. தங்கள் வித்தியாசமான சிந்தனை ரசிக்க வைக்கிறது. இப்போது யார் மடலேறுகிறார்கள்? ஆசிட் அல்லவா வீசுகிறார்கள்? காதலுக்கும் ஈர்ப்புக்கும் வித்தியாசமான தலைமுறை தான் நம் மத்தியில் வளர்ந்து வருகிறது என்பதே காதலர் தினத்தின் வேதனையான செய்தி.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    பதிலளிநீக்கு
  7. 14/2 இதற்கான பதிவா இது?... அருமையாகச் சொல்லியிருக்கின்றீர்கள் தங்கள் கருத்தை..

    ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும்
    காதலின் மெய்ப்பொருள் கண்டார் யார்?...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை ஐயா... இன்று மட்டுமல்ல... எந்த நாளும் அன்பு தான் முதன்மை... முந்தைய முன்னோட்டம் பதிவிலேயே சொல்லி விட்டேன்... நான்கு அதிகாரங்களை தொடர்ந்து பகிர்ந்து கொள்ளப் போகிறேன்... இடையில் அன்புடைமையும் வரும்...

      நீக்கு
  8. என் பாடலில் கடவுளை சாவு என்று சொல்லமாட்டேன்...அப்பப்பா...அருமை.
    பாடல்களை ரசித்தேன். சிறப்பு.

    பதிலளிநீக்கு
  9. நான் முன்பே சொல்லி இருந்ததைப் போல் இன்னும் எளிமையாக டைரெக்டாக சொல்லிப்போனால் எம்போன்றோரும் இன்னும் ரசிக்க முடியும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எளிமையாகவே சொல்கிறேன்... 1) குறளுக்கு திரைப்பட பாடல் வரிகள் எனது தளத்தில் உண்டு என்பது, மற்றவர்களை விட உங்களுக்கு நன்றாகவே தெரியும்... அதை மறைத்துள்ளேன்... காரணம் இடையினில் அவை இருந்தால், வாசிக்கும் சிந்தனை மாறுபடும்... எடுத்துக்கொண்ட குறள் அதிகாரம் பொறுத்து, அவையும் மாறுபடுவதை அரசியல் பதிவுகளில் (குறளின் குரல்) காணலாம்...

      2) பதிவை முடித்துவிட்டு, விருப்பம் இருந்தால் சொடுக்க சொன்னதை கொடுக்கலாம்... பாடலை வாசிக்கலாம்... ரசிக்க வேண்டுமென்றால் கேட்கலாம்... மிக முக்கியமாக மீண்டும் குறள் விளக்கத்தை வாசிக்க எண்ணம் வரலாம்...! "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன...?" என்றால், இது தான்...!

      இன்னும் எளிமையாக :- 3) "என்ன எழுதப் போகிறேன்...?" என்று முன்னோட்டம் பதிவிலேயே சொல்லி விட்டேன்... அது திருக்குறளின் நான்கு அதிகாரங்கள்... இந்தப்பதிவில் எந்த அதிகாரத்தில் ஆரம்பித்து உள்ளேன் என்பதும் உள்ளது... அதில் பத்து குறள்களில், நான்கின் விளக்கம் மட்டும் தான் சொல்லியுள்ளேன்... பதிவில் எங்கும் எதையும் சொடுக்காமல், அதைப்பற்றி தாங்கள் கருத்துரை சொல்லலாம் ஐயா...! நன்றி...

      நீக்கு
  10. மிக அழகிய தத்துவப் பாடல்கள், கடசிப் பாடல் தவிர ஏனையவை அனைத்தும் பல தடவை கேட்டு நெகிழ்ந்த பாட்டுக்கள்...
    படம் வரைந்திருப்பது அழகோ அழகு. தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  11. சுவையான பாடல்கள் , பொருத்தமான குறட்பாக்கள் ! நன்று .

    பதிலளிநீக்கு
  12. உரையாடல் கிளிப் தெள்ளத்தெளிவா இருக்கு சகோ ..பாடல் அமைந்த உருவான விதத்தை இணைக்கும்போது கூடவே பொருத்தமான குறளும் இணைந்து பாடல் இன்னும் அதிகதிகமா விளங்குது .எல்லா நாளும் அன்புக்குரிய தினமே .நல்ல பதிவு,

    பதிலளிநீக்கு
  13. அருமை! குறள், விளக்கம், அதற்கேற்ற திரை பாடல், அற்புதம்.நன்றி!

    பதிலளிநீக்கு
  14. காமத்துப்பால் குறள்பாக்களை இப்படி உள்வாங்கி திரையிசையோடு வெளிப்படுத்தியவர் உங்களைத் தவிர யாரும் இருக்க முடியாது. வலைப்பூ தொழில் நுட்பம் மிக அருமை!

    பதிலளிநீக்கு
  15. சுவையான பகிர்வு. வழமை போல அசத்தலாக பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள். வாழ்த்துகள் தனபாலன்.

    எல்லா நாளும் அன்பு செலுத்துவோம்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    அழகான பாடல்கள். காதலின் பிரிவை தாங்க முடியாமல் காதலனின் மன வேதனைகளை உணர்த்தும் பாடல்கள், அதற்கேற்ற குறள்கள் என தங்களின் தொழில்நுட்பம் கலந்து பதிவை நன்றாக தந்துள்ளீர்கள். ஒவ்வொன்றையும் சொடுக்கி, பாடலையும், குறள்களும், கேட்டு, படித்து ரசித்தேன். நடுவில் சுழலும் இருதய படம் அழகாக உள்ளது. இன்றைய தினத்திற்கு பொருத்தமாக பதிவை அமர்க்களமாக தந்து சிறப்பித்து உள்ளீர்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி. கொஞ்சம் தாமதமாக வந்தமைக்கு வருந்துகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. கடவுள் மனிதனாகப் பிறக்க.., பல்லாக்கு வாங்கப்போனேன்.. -ஆகியவற்றை நினைவுவெளியில் கொண்டு வந்து விட்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. 'என்னாலும் வாழ்விலே.. கண்ணான காதலே..’ என்று மருதகாசி ஏதோ சொல்லியிருக்கிறாரே என்று கேட்டுவிட்டு இந்தப் பக்கம் வந்தேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள்... ரசிக்க இன்னும் நிறைய பாடல்கள் வரவிருக்கிறது... நன்றி ஐயா...

      நீக்கு
  19. வள்ளுவ்ன் பல காதல் பாடல்களுக்கு வழிகாட்டி என்ப்தை அருமையாக விளக்கிவிட்டீர்கள்.அருமை

    பதிலளிநீக்கு
  20. 57 வருடங்கள் கழித்து(ம்) இவர்களைப் பற்றி நாம் பேசிக் கொண்டு இருக்கின்றோம் என்றால் அவர்கள் இன்னமும் இங்கே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் தேவையாய் இருக்கின்றார்கள். அவர்கள் நமக்கு அறிவுரை சொல்லும் அளவிற்கு எழுதி இருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

    பதிலளிநீக்கு
  21. அன்பை சிறப்பிக்க பதிவு மிக அருமை.
    அன்புதான் அனைத்தும்.
    அன்பு செய்து வாழ்வோம்.
    வாசுகி பாட்டி குரலை சொல்வதை கேட்டேன்.
    மிக அருமையான தொழில் நுட்பத்துடன் குறளை படித்து கேட்டு . பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.

    பதிலளிநீக்கு
  22. திருக்குறள் ஓவியம் மிக அருமை. வரைந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  23. தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    ----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக தங்கள் வலைப்பதிவு உட்பட ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  24. மிகத் தாமதமாக வருகிறேன்.
    குறள்களின் அருமையையும்,
    பாடல்களின் உருக்கத்தையும் சொல்லி முடியாது.
    இனிய அன்பு விருந்து.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.