🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



பூட்டு

வணக்கம் நண்பர்களே... நல்லதொரு பாடல் கேட்போமா...?



© ஆனந்த ஜோதி கண்ணதாசன் விஸ்வநாதன்-ராமமூர்த்தி T.M.சௌந்தரராஜன் @ 1963 ⟫

பலப்பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு அது பலவிதமா மனிதர்கள பூட்டுது போட்டு... கலகலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு... நான் கச்சிதமா திறந்து வைப்பேன் - இதயத்தைக் காட்டு... அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும் ஆண்களுக்கு வாயிலே பூட்டு... அடுத்தவர் பையில் இருப்பதை கையில் அள்ளிக் கொள்ளும் திருடருக்குக் கையிலே பூட்டு... புத்தி கெட்டு சக்தி கெட்டு பொழப்பை எல்லாம் விட்டுபுட்டு சுத்தி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு... மங்கையர் பின்னாலே லைசென்ஸ் இல்லாம வளைய வரும் காமுகர்க்குக் கண்ணிலே பூட்டு... அங்குமில்லாமே இங்குமில்லாமே அலைஞ்சி வரும் மூடருக்கு மனசிலே பூட்டு... உறக்கங்கெட்டு வழக்கங்கெட்டு ஊரு வம்ப கேட்டுக்கிட்டு உள்ளங்கெட்ட மனுஷனுக்குக் காதிலே பூட்டு... அறிவிருந்தாலும் வழி தடுமாறி அவதிப்படும் மக்களுக்கும் இருக்குது சாவி... வறுமையினாலே வாழ்க்கையில்லாமே வாடிப்போன வீட்டினையும் திறக்குது சாவி... தங்க மக்க உள்ளத்திலே அன்பு மிக்க எண்ணத்திலே தடை இருந்தா உடைத்துப் போடும் தர்மத்தின் சாவி...!

ஆனா இந்த வலைப்பூட்டுக்கு சாவியில்லைன்னு இனிய நண்பர் திரு. ராஜாராம் நீச்சல்காரன் அவர்கள் சொல்கிறார்... இந்தப் பதிவிற்குக் காரணமான அவருக்கு முதலில் நன்றி... அவரின் பூட்டுச் செயலியை எடுத்துக்காட்டுக்காகக் கீழே இணைத்துள்ளேன்... பயன்படுத்தும் முறையை வாசித்து விட்டு, இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி விட்டால், உங்கள் பதிவை யாரும் திருடவே முடியாது என்று பொய் சொல்ல மாட்டேன்... அன்பர்கள் உங்கள் எழுத்துக்களைத் தட்டச்சு செய்து திருட முடியும் (!) என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்... இதோ விளக்கமாக :

Low Medium High

சிறப்பான கட்டுரைகள், அழகான சொந்த கதைகள், பயனுள்ள அனுபவ தகவல்கள், தானே வியக்கும் அற்புத கவிதைகள், இன்னும் பல - இதைப் பற்றிய தன் பதிவுகள் திருடு போகும் போது, உடனே கோபம் / ஒருவித வெறுப்பு / வருத்தம் என்று நம் மனதில் வந்தாலும், "அட...! நம் எழுத்து கூட திருடப்படுகிறது...!" என்று நம் மனதைத் தேற்றிக் கொள்கிறோம்...!

ஏச்சுப் பிழைக்கும் தொழிலே சரிதானா...? எண்ணிப் பாருங்க - ஐயா எண்ணிப் பாருங்க...2 நாச்சியப்பா, சங்கிலிக் கருப்பா, பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா - மூட்டையடிச்சா உன்னையே விடுவானா...? - நெனச்சுப் பாருங்க - நல்லா நெனச்சுப் பாருங்க...2 தேட்டை போடும் புள்ளிகளெல்லாம் - கோட்டை விட்டு, கம்பி எண்ணணும்... சிறையில் கம்பி எண்ணணும்...! பூட்டை உடைக்கும் புலியே இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க... பூட்டை உடைக்கும்...(3) பூட்டை உடைக்கும் புலியே - இதை நீங்க புரிஞ்சு கொள்ளுங்க...(3) (திரைப்படம் : மதுரைவீரன் / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)

ஆனா, இந்த செயலி மூலம் பூட்டுப் போடுவதும், அதை உடைப்பதும் நம் கையில் தான் உள்ளது... முதல்லே நம்ம தளத்திலே இரு அமைப்புகளை (Settings) சரி செய்து கொள்வோமா...? வாங்க...

1) நமது தளத்தில் இடது பக்கமுள்ள "Settings" என்பதைச் சொடுக்கி, "Other" என்பதையும் சொடுக்குங்கள்... "Site Feed" என்கிற தலைப்பில் "Allow Blog Feed ?"-ல் "Until Jump Break" என்பதைத் தேர்வு செய்து விட்டு, Save icon-யை சொடுக்கி விடுங்கள்... "இதென்ன அவ்வளவு முக்கியமா...?" என்று நினைப்பவர்கள் இங்கே சொடுக்கி வாசித்து விட்டு, பிறகு இங்கே தொடருங்கள்...
சரி, இப்போது புதிதாக ஒரு பதிவு எழுதுவோமா..? நாலுவரி எழுதி விட்டு, பதிவிற்கு ஏற்ற படத்தையும் இணைக்கிறோம்... "Insert Jump Break" ஐகானைச் சொடுக்கி விட்டு, அடுத்த வரியை எழுத வேண்டும்... (இது போல் பதிவு எழுதும் முறையை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்... இதன் பயன்கள் ஏராளம்...)

அடுத்த வரியில் மீண்டும் எழுதத் துவங்குவதற்கு முன் இடதுபுறம் மேலே முதல் Icon <> ▿ என்றிருக்கும்... அது Compose view மற்றும் HTML view பக்கங்களுக்கு மாறுவதற்கான Icon... அதைச் சொடுக்கி "HTML view" என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்... அங்கு <!--more--> என்று இருக்கும்... சற்று முன் நாம் ஒரு ஐகானைச் சொடுக்கினோமே (Insert Jump Break)←இதன் "html script" ← ஞாபகம் இருக்கட்டும்... சரி, மீண்டும் "Compose"-யை சொடுக்கி விட்டு, முழுவதுமாக பதிவை எழுதி முடித்து விடுங்கள்...

பதிவின் தலைப்பு மற்றும் "Labels" எல்லாம் எழுதி முடித்து விட்டீர்களா...? வரிகளுக்கு வண்ணம் கொடுப்பது, எழுத்தின் அளவை மாற்றுவது எல்லாம் செய்து விட்டீர்களா...? பதிவை "Preview"-ல் பார்த்து, ஏதேனும் எழுத்துப் பிழை இருந்தால் அதையும் சரி செய்து விடுங்கள்... அனைத்தும் திருப்தி தானே...?

இப்போது மறுபடியும் "HTML" என்பதைச் சொடுக்கி, மேலிருந்து கீழ் வரை "Copy" செய்து கொண்டு, ஒரு "MS Word File"-ல் சேமித்துக் கொள்ளுங்கள்... மறுபடியும் நம் தளத்திற்கு வந்து, பதிவின் மேலே செல்லுங்கள்... <!--more--> இதன் கீழ் வரியிலிருந்து பதிவின் கடைசி வரை தேர்வு செய்து, காப்பி வேண்டாம் கட் (அதாவது right click and select cut) அதை அப்படியே இப்பதிவின் மேலே உள்ள பெட்டியில் "paste" செய்யுங்கள்... அடுத்து அதன் கீழே...

"Low" என்பதைத் தேர்வு செய்தால், Ctrl-A and Ctrl-C செய்தோ, Right-Click செய்தோ காப்பி செய்ய முடியாது... பாதுகாப்பு குறைவு என்பதால் இது வேண்டாம்... "High" என்பதைத் தேர்வு செய்தால், பதிவை சுட்டியை வைத்துத் தான் படிக்கமுடியும் என்பதால் இதுவும் வேண்டாம்... அதனால் "Medium" என்பதைத் தேர்வு செய்து விட்டு, "Encrypt me" என்பதைச் சொடுக்குங்கள்...

இப்போது அடுத்த பெட்டியில் "கசமுசா"ன்னு வரும் அனைத்தையும் "Copy" செய்து கொண்டு, உங்கள் தளத்தில் <!--more--> கீழ் "paste" செய்து விட்டு, பதிவை "publish" செய்யுங்கள்... சிறு மாற்றத்துடன் ஒரு பாட்டு...!

வலையைப் பூட்டி வைத்தாய், பதிவைப் பூட்டி வைத்தாய், திருட்டைப் பூட்ட ஏது பூட்டு...? குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே - சுகமாய் இருப்பவர் யார் காட்டு...? வலைப்பூ இருக்கும் மட்டும் பதிவு நமக்கு மட்டும் - இது தான் ஞான சித்தர் பாட்டு...! (திரைப்படம் : படையப்பா) Just Relax !
முக்கிய குறிப்புகள் :- (1) Medium, High போன்ற வழியில் பூட்டப்பட்ட உங்கள் பதிவுகளை நீங்கள் நினைத்தாலும் காப்பி செய்ய முடியாது... திருத்த வேண்டும் என்றால் கூட "MS Word File"-ல் சேமித்து வைத்ததைக் கொண்டு தான் திருத்த முடியும்...!

(2) <!--more--> "இதன் கீழ் உள்ள பதிவை மட்டும் ஏன் பூட்ட வேண்டும்...? பதிவு முழுவதையும் பூட்டலாமே...?!" - அப்படின்னு நீங்க கேட்கிறீங்க...! <!--more--> என்கிற html script இந்த 'செயலி'யில் வேலை செய்வதில்லை... மேலே "இதென்ன அவ்வளவு முக்கியமா...?" என்று திரு.கஸ்தூரி ரங்கன் அவர்களின் இணைப்பை வாசிக்க மறந்திருந்தால் ? வாசித்தால் புரிந்து விடும்...! உங்களின் கேள்வியால் நம் பதிவின் குறிப்பிட்ட பத்திகளை மட்டும் எடுத்து, பூட்டில் பூட்டலாம் என்பதையும் நாம் அறிந்து கொள்வோம்... நன்றி...

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்... நன்றி... dindiguldhanabalan@yahoo.com

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வழக்கம் போல ஒரு அற்புத தொழில் நுட்பப்பதிவு
    நீச்சலுக்கும் சித்தருக்கும் நன்றிகள்
    தம

    பதிலளிநீக்கு
  2. உபயோகமான பதிவு. மீண்டும் பிறகு வந்து விளக்கமாகப் படிக்கிறேன். காபி எடுத்தும் வைத்துக்கொள்ள முடியாது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீராம் சார்... பதிவை தங்களின் Google Chrome browser-ல் BOOKMARK செய்து வைத்து கொள்ளுங்கள்... இதை தவிர அனைத்து நண்பர்களுக்கு இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறேன்... கூகிள் நமக்கு இலவசமாக தரும் இந்த வலைப்பூவை, Google browser-ல் வாசிப்பது தான் சிறந்தது...

      அப்புறம் உங்கள் தளம் முகப்பு பாருங்கள்... (Home Page : http://engalblog.blogspot.com/) ஏழு பதிவுகளும் முழுதாக வருகிறது... "அதற்கு என்னவாம்...?" என்றா கேட்கிறீர்கள்...? இதோ சிறு விளக்கம்....!

      1) பதிவு முழுவதும் நம் தளத்தின் முகப்பு பகுதியில் வருவதால் அங்கேயே வாசகர்கள் படித்து விடுவார்கள்... அந்தந்த பதிவிற்கு வந்து வாசித்தால் தான், நம் தளத்தின் பக்கப் பார்வை (Page Views) எண்ணிக்கையில் சேரும்... அது மட்டுமிலாமல் தளம் திறப்பதற்கு நேரம் அதிகம் ஆகும்...!

      2) நம் தளத்தில் e-mail subscription செய்தவர்கள் அனைவரும் வலைப்பதிவர்கள் மட்டுமல்ல... வலைத்தளம் இல்லாதவர்களும் subscribe செய்து இருப்பார்கள்... உங்களின் புதிய பதிவு subscribe செய்தவர்களுக்கு முழுதாகவே செல்லும்... உங்கள் தளத்திற்கு வந்து தான் வாசிக்க வேண்டும் என்று அவர்களுக்கு அவசியமில்லை...

      3) இதே போல் Blogs I follow பகுதியிலும், Reader-லும் உங்களின் புதிய பதிவுகளை அங்கேயே படித்து விடுவார்கள்...!

      தினமும் பதிவு எழுதும் "நீங்கள்ஸ்" - இந்த செயலியை பயன்படுத்தவிட்டாலும் பரவாயில்லை... Insert Jump Break ஐகானை சொடுக்கி இனி பதிவு எழுதுங்கள்... பிறகு பாருங்கள் உங்கள் தளத்தின் பக்கப் பார்வை (Page Views)...

      நன்றி...

      நீக்கு
    2. அந்த "நீங்கள்ஸ்" (பொருள்) நிறைந்த வார்த்தை. ரசித்'தேன்.

      நீக்கு
    3. ஹா ஹா ஹா “நீங்கள்ஸ்”... நான் நினைச்சேன் சகோ ஸ்ரீராம் ஒருமை என:) அதாவது ஒருவர் என நம்பியிருந்தேனே:).. பன்மை எனச் சுட்டிக்காட்டிட்டீங்க:) ஹையோ ஹையோ:)..

      பேஜ்வியூவைப் பாருங்கோ எனச் சொல்லி எல்லா “நீங்கள்ஸ்” ஐயும் உசுப்பேத்தி விட்டிட்டீங்க:) இது எங்கின போய் முடியுமோ:)..

      நீக்கு
  3. பூட்டு போட சொல்லி தந்தமைக்கு நன்றி தனபால்...

    பயனுள்ள பதிவு !

    பதிலளிநீக்கு
  4. இதை ஏன் திருட்டு என்கிறீர்கள் தனபாலன்? பகிர்தல் என்று சொல்லலாமே? திறமை இல்லாதவர்கள் முகம் வெளிறிப் போகும். வாசிப்பவர்களுக்கு புரிந்து போகும். தினந்தோறும் யார் யாரோ எழுதிய பல விசயங்கள் அவர்கள் பெயர் போடாமல் வாட்ஸ் வாயிலாக லட்சக்கணக்கான நபர்களின் பார்வைக்கு சென்று கொண்டு தானே இருக்கின்றது? அதனை எப்படி தடுப்பது? வளர்ந்து கொண்டேயிருக்கும் தொழில்நுட்பத்தில் இது போன்ற சவால்கள் இருக்கத்தான் செய்யும். அப்படியே எனக்கான அங்கீகாரம் வேண்டும் என்று கருதுபவர்கள் எழுதிய வரிகளுக்கு இடையே தங்கள் பெயரை எழுதி வைத்துக் கொள்ள வேண்டியது தான். என் பார்வையில் இதனை கடந்து செல்லவே விரும்புகின்றேன். கருத்துக்கள் போய்ச் சேர்ந்தால் போதுமானது. நிச்சயம் நம் பெயர் தெரிந்து விடும். ஆனால் காத்திருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதனால் தான் "அட...! நம் எழுத்து கூட திருடப்படுகிறது...!" என்று நம் மனதை தேற்றிக் கொள்கிறோம்...! - என்று கூறினேன்.. பலரும் தனது படைப்பை வேறு இடத்தில் வாசிக்கும் போது சந்தோசப்படுவது அதிகம் தான்... ஆனால் அங்கே - "நன்றி" : படைப்பாளரின் பெயர் - என்று மட்டும் குறிப்பிட்டு இருந்தால் படைப்பாளியின் மகிழ்ச்சிக்கு அளவேது...?

      இதற்கு முந்தைய எனது ஒரு தொழிற்நுட்ப பதிவில் கூட, "எனது பதிவுகள் அப்படியே அலேக்காக காப்பி அடிக்கப்படுகின்றன" என்று எழுதி இருந்தேன்... அந்த புண்ணியவானை சந்தித்து நன்றி சொல்ல வேண்டும்... ஏனென்றால் அதன் பின் எனது பதிவு எழுதும் முறையே மாறி விட்டது தான் உண்மை... அதாவது என் மனச்சாட்சியுடன் பேசுவது போல பதிவுகள் மாறின... அதன் பிறகு எனது பதிவுகள் காப்பி செய்வது குறைந்து விட்டது... அதில் சொல்லும் சிறு சிறு கதைகள் மற்றும் காப்பி செய்யப்படுகிறது... ஹா...ஹா...

      திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது...

      இந்தப் பதிவில் முக்கியமாக ஒன்றை கவனிக்க வேண்டியது "பதிவு எழுதும் முறை"-யை சொல்லி உள்ளேன்... ஒரே ஒரு ஐகான் கிளிக்... அதை அனைவரும் தொடர்ந்தாலே மகிழ்ச்சி...

      "இதுவும் கடந்து போகும்" - இதற்கான உங்கள் கருத்துரைக்கு நன்றி...

      நீக்கு
    2. நான் ஜோதிஜியின் கருத்துடன் உடன்படுகிறேன். நாம் எழுதுவதே நம் கருத்துகள் பிறருக்குப் போய்ச் சேரத்தானே? அது எப்படிப் போய்ச் சேர்ந்தாலென்ன?

      நீக்கு
    3. டிடி நாங்களும் ஜோதிஜி அவர்களின் கருத்தைச் சொல்ல வந்தால் அவரே சொல்லிவிட்டார் எனவே வழிமொழிகிறோம். என்றாலும் நல்லதொரு தொழில்னுட்பப்பதிவு..

      எங்கள் பதிவுகள் எல்லாம் திருடப்படாது!!ஹிஹிஹிஹி

      நீக்கு
    4. உங்கள் எழுத்து களவு போனால் எங்களுக்கு மகிழ்ச்சியே, தாயின் மணம் அறியா சேயுண்டோ? அறியேன். தங்கள் நடை யறியா பதிவர் ஏது!.

      நீக்கு
  5. நல்ல விளக்கம் ஜி பிறகு பேசியில் வருகிறேன்

    பதிலளிநீக்கு
  6. மிகவும் பயனுள்ள தொழில் நுட்பப் பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு
  7. "பூட்டு" பற்றி 'திண்டுக்கல்'லாரைவிட வேறு யார் சிறப்பாக சொல்ல முடியும்?

    பதிலளிநீக்கு
  8. எனது தகவல்கள் பல. நாளிதழிலோ அல்லது பத்திரிகையிலோ வெளிவந்த மறுகணமே பல இணைய தளங்களில் வெளிவந்து விடுகிறது. குறிப்பாக செய்தி இணைய தளங்கள். மூன்று, நான்கு வருடங்கள் கழித்து அதே தகவலை எனது வலைப்பூவில் வெளியிடும்போது ஏற்கனவே வெளிவந்த தகவலை நான் காப்பி, பேஸ்ட் செய்ததுபோல் இருக்கிறது. இதை ஒன்றும் செய்யமுடியாது..?

    வலைத்திருட்டை தடுக்க முடியாது. என்னதான் பூட்டு போட்டாலும் நீங்கள் சொன்னதுபோல் தட்டச்சு செய்து கொள்ள முடியும். நண்பர் ஜோதிஜி சொல்வதுபோல் பகிர்தல் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். என்ன எனது சொந்த பதிவையே மற்றவர்களிடம் இருந்து பகிர்வதுபோல் அமைவதுதான் வேதனை.

    அருமையான பதிவுக்கு நன்றி நண்பரே.

    பதிலளிநீக்கு
  9. நானும் இனிமேல் பூட்டுப் போடலாமா என்று யோசிக்கிறேன் :)

    பதிலளிநீக்கு
  10. உணவை விடுத்தும் உறக்கத்தை விடுத்தும் உருவாக்கப்பட்ட பதிவுகள் -

    வேறு வேறு தளங்களில் - அவரவர் சொந்தத் தயாரிப்புகளைப் போலக் காணக்கிடைக்கின்றன..

    ஏதாவதொரு அதிகப்படியான புள்ளியை ஏற்றுக் கொள்கின்றவர்கள் - நமது தளத்தின் பெயரை மட்டும் கவனமாகத் தவிர்த்து விடுகின்றார்கள்!.. - என்பது தான் சோகம்..

    நல்ல வழிமுறைகளைத் தெரிவித்திருக்கின்றீர்கள்..

    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  11. மனசு குமார் தளத்தில் இன்றுதான் பதிவுகள் பலரால் காப்பி செய்யப்படுவது பற்றிக் கவலைப்படவேண்டாம் என்ற ரீதியில் கர்த்துகள் இட்டு இருந்தேன் நாம் எழுதுவது பொழுது போக்கிற்காகவும் நமது எழுத்துகள் நாலுபேரின் பார்வையில் பட வேண்டும் என்பதற்காகத்தான் அப்படி இருக்கையில் சில பேர் நம் பெயரோடு மறு பதிவு செய்வார்கள் சில பேர் செய்யமாட்டார்கள் அப்படி செய்யவில்லை என்றால் என்ன நம்ம குடியா மூழ்கி போகிறது அல்ல வருமானம் பாதிக்கப்படுகிறதா? இல்லையே நாம் ஒரிஜனல் பதிவை எழுதியவர் என்பது நம் தளத்திலே தேதி முதல் கொண்டு வந்து விடுகிறது அதன் பின் ஏன் கவலை? முடிந்த வரை தடுக்க பாருங்கள் இல்லையாக கவலையை விடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க பதிவ தமிழ் நாட்ல யாரும் காப்பி அடிக்க மாட்டாங்க. காரணம் ஆட்டோ வீடு தேடி வருமே!.

      நீக்கு
    2. அந்த அளவிற்கு நான் என்ன மோசமாகவா எழுதுறேன்???

      நீக்கு
    3. நானாவது ஏதோ ஒரு அளவிற்கு டீசண்டாக நையாண்டி பண்ணிதான் எழுதுகிறேன் ஆனால் தமிழ்நாட்டில் பலபேற் மிக மிக மோசமாக எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள் அவர்களின் வீட்டிற்கு எல்லாம் ஆட்டோ தேடி வருவதாக தெரியவில்லைய்யே.

      நீக்கு
  12. ஜம்ப் ஃப்ரேக் முயற்சி செய்ய வேண்டும்....பார்க்கிறோம்...

    கீதா: இதைப் பற்றி உங்களுடன் பேசுகிறேன். மொபைலின் உயிர் இன்டென்சிவ் கேர் யூனிட்டில்!!! மீண்டு வந்ததும் அழைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  13. நல்ல பகிர்வு அண்ணா...
    பதிவுத் திருட்டை தவிர்க்க முடியாதுதான்... இருப்பினும் நாம் இடும் அனைத்தையும் மற்றொருவர் மற்றொரு பக்கத்தில் அவர் பெயரில் பகிர்வது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததுதான்...

    பலருக்கும் செல்ல வேண்டும்தான்... ஆனால் அதற்காக நம் பதிவுகளுக்கு அவர்கள் வலைத்தளம் அமைத்து பகிர்கிறார்கள். படித்ததில் பிடித்தது என்றோ, நல்ல பகிர்வு என்றோ பகிர்ந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.. அப்படியில்லை...

    தென்றல் கீதா அக்காவின் ஒரு கவிதை போட்டிகளிலும் பத்திரிக்கைகளிலும் வேறு வேறு நபர்கள் பெயரில் வந்ததை அவர்கள் சொல்லவில்லையா..

    எது எப்படியோ நாம் எழுதிக் கொண்டே இருப்போம்...

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  14. பயனுள்ள பதிவு க்கு மிக மகிழ்ச்சி

    பதிலளிநீக்கு
  15. அனைருக்கு தேவையான அவசிய பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
  16. பூட்டு பற்றி கூறிவிட்டு, தட்டச்சு செய்து....முடியும்...என்று அதையும் கூறிவிட்டீர்களே?

    பதிலளிநீக்கு
  17. பூட்டுக்குப் பேர் போன திண்டுக்கல்லில் இருந்து, வலைப்பக்கத்திற்கும் ஒரு பூட்டு தயார் செய்வது எப்படி என்று சொன்ன, நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி. இந்த பூட்டு எனக்கு தேவைப்படுமா என்று தெரியவில்லை. (ஒன்று கிடக்க ஒன்று ஆகி விடக் கூடாது என்ற பயமன்றி வேறொன்றுமில்லை)

    நண்பர்களின் கருத்துரைகள் அனைத்தையும் படித்தேன். COPY PASTE பதிவர்களைப் பற்றி நிறைய பேர் நிறையவே எழுதி விட்டார்கள். இங்கு நண்பர் பரிவை சே.குமார் அவர்கள் எழுதிய கருத்தை அப்படியே வழி மொழிகின்றேன். அந்த பதிவர்கள் அவ்வாறு எடுத்து போடும்போது, இன்னாருடைய பதிவு என்று குறிப்பிட்டாலே போதும்; ஆனால் அவர்களோ அடுத்தவர் பதிவை, தங்களது பதிவாகவே சொல்லுவதால்தான், நமக்கு வருத்தமும், கோபமும் வருகிறது அவர்களாக உணர்ந்தால்தான் உண்டு.

    பதிலளிநீக்கு
  18. பூட்டு பதிவு அருமையான விளக்கம் ..புக்மார்க் செய்துக்கறேன் ஒவ்வொன்றாக பார்த்து படிச்சு தெரிஞ்சுக்கணும் ..
    நம் உழைப்பு கள்ளர் கைக்கு போகாமலிருக்க பூட்டு அவசியமே

    குமார் சொன்ன அந்த தென்றல் கீதா அவர்களின் கவிதையை நான் பல இடங்களில் பார்த்திருக்கேன் அதுவும் முகப்புத்தகத்தில் ஷேரிங் என்ற பெயரை காப்பிபேஸ்ட்தான் ஆயிரக்கணக்கில் ..நனையும் ஒருகாலத்தில் தேடித்தேடி விழுப்புணர்வு பதிவுகளை எழுதுவேன் நான் அட்மினா இருக்கும் பக்கத்துக்கு என் தோட்டத்து படங்களையே அங்கிருந்து சுட்டு வேறு பெயரில் வெளியிடுவாங்க :( வலைப்பதிவுகளில் தடுக்கலாம் ஆனால் முகப்புத்தகத்தில் காப்பி பேஸ்டை தடுக்க முடியலை

    பதிலளிநீக்கு
  19. பயனுள்ள பதிவு ஐயா.பகிர்ந்துக் கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. நீங்கள் விவரமாகத் தான் சொல்லியிருக்கிறீர்கள் . பண்ணிப் பார்க்கணும் நன்றி

    பதிலளிநீக்கு
  21. பதில்கள்
    1. insert jump break..

      settings ல மாத்தி இருந்தாலும்...பயன்படுத்தியது இல்லை
      ...

      இப்பொழுது எனது பதிவிலும் முயற்சித்து உள்ளேன்...நன்றாக இருக்கிறது...நன்றி சார்..

      பழைய பதிவுகளுக்கும் இவ்வாறு மாற்ற வேண்டும் ..

      நீக்கு
  22. எப்படியோ பலரும் படித்தால் சரி! அதனால் நான் கவலைப்படவதே இல்லை!

    பதிலளிநீக்கு
  23. அவர்கள் உண்மைகள் கருத்தே எனக்கும் நம் எண்ணங்கள் நாலு பேரைச் சேரவேண்டும் என் பதிவும் சுடப்பட்டு இருக்கிறது நானும் இதிகாசக் கதைகளில் இருந்து நிகழ்வுகளைச் சுடுவேன்

    பதிலளிநீக்கு
  24. என்ன பூட்டு போட்டு வைத்தாலும், வலைப் பதிவர் களின் மனசை க் கொள்ளை கொள்வதை 'கொள்கை' யாய் கொண்டுள்ளீர்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  25. தேவைப்படும்போது பயன்படுத்த நானும் எனது இமெயில் பெட்டியில் பூட்டிவைத்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
  26. INSERT JUMP BREAK ஐகான் பயன்பாடு பற்றியும் பக்கப் பார்வை அதனால் அதிகரிப்பது பற்றியும் இன்று தான் தெரிந்து கொண்டேன் தனபாலன் சார்! என் தளத்திலும் அதைப் பயன்படுத்தி மாற்றிவிட்டேன். Read more என்பது சிறிய எழுத்தாக வருகின்றதே, அதைப் பெரிதாக சிவப்புக் கலரில் நன்கு தெரியும் படியாக எப்படிப் போடுவது? பூட்டு போடுவது பற்றியும் தெரிந்து கொண்டேன். முயன்று பார்க்க வேண்டும். நன்றி தனபாலன் சார்! தொழில்நுட்பம் சிறிதும் தெரியாத என்னைப் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1) முதலில் நம் தளத்தில் இடதுபுறம் உள்ள Layout என்பதை சொடுக்கவும்...

      2) இடதுபுறம் சற்று கீழே main என்கிற தலைப்பின் கீழே உள்ள Blog Posts gadget என்பதில் edit என்பதை சொடுக்கவும்...

      3) Post page link text: என்பதில் "Read more" என்பதை "மேலும் படிக்க" என்று மாற்றி விடவும்...

      4) வலது புறம் Save arrangement என்பதை சொடுக்கவும்...

      நீக்கு
  27. என்கிற உண்மையையும் சொல்லிக்கொள்கிறேன்.. இதோ விளக்கமாக... என்பதற்கு கீழே எதுவுமே தெரியவில்லை.. 2 பெட்டிகள் மட்டும் தெரியுது...

    பின்பு சிறப்பான கட்டுரைகள் எனும் பந்தி ஆரம்பமாகுது.. இடையில் இடைவெளிதான் இருக்குது... ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆகுது ஒவ்வொரு தடவையும்???..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னது.! பந்தி ஆரம்பகுதா..?! ஒடனே எங்களுக்கும் ஒரு இடம் பிடியுங்க. 😃

      நீக்கு
    2. ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ... ஹா ஹா ஹா ..நான் ரொம்ப சீரியஸா எழுதியிருக்கிறேன்ன்:) இதைப்போய் பந்தியில் இடம் வேணும் என்கிறாரே:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. சகோ டிடி என் பின்னூட்டங்களுக்கும் ஒரு பூட்டு வேணும்:)..

      நீக்கு
  28. ம்ுழுவதும் ஒரே மூச்சில் படிச்சு முடிச்சேன்ன், முடிச்சதும் வோட் பண்ணிட்டேன்ன்ன்.. படிக்கப் படிக்க கை கால் எல்லாம் உதறுது.. இன்சேட் ஜம்ப் பிரேக் போடச் சொன்னீங்க... அட ரொம்ப ஈசியா இருக்கே.. இதைப் போட்டால் போதுமோ என நினைச்சு.. ஹாயாப் படிச்சனா... வெலவெலத்துப் போயிட்டேன்ன்ன்... இப்போதைக்கு வாணாம்ம்.. இருந்ததையும் இழந்தாய் போற்றி ஆகிட்டால் என்ன பண்ணுவேன்...

    ஆனா உண்மையில் சொந்த கிட்னியை ஊஸ் பண்ணி, உங்களைப்போல, நல்ல பல விசயங்கள் பகிரும் பலருக்கு இது உதவியாய் இருக்கும்...

    சரி சரி திட்டிடாதீங்கோ:)..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் அதிரா சகோதரி...

      மேலே ஸ்ரீராம் சாருக்கு சொன்ன எனது மறுமொழி போல இருந்தாலும், உங்களுக்காக "ஸ்பெஷல்" விளக்கம் :

      வலைத்தளங்களிலேயே உங்கள் தளம் தான் வண்ணவண்ணமாக இருக்கிறது... அதற்கு முதலில் பாராட்டுக்கள்...

      உங்கள் தளத்தை (Home Page :- http://gokisha.blogspot.com/) திறந்து பாருங்கள்... ஏழு பதிவுகள் முழுமையாக வருகிறது... தளம் திறக்க எவ்வளவு நேரம் ஆகிறது பாருங்கள்... காரணம் : பலப்பல அழகான படங்களையும், காணொளிகளையும் இணைத்து பதிவு வெளியீடு செய்கிறீர்கள்... ஆனால் அது பிரச்சனையில்லை...

      இதே நீங்கள் கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளுக்கும் இந்த "Insert jump break" ஐகானை சொடுக்கி விட்டு, பதிவுகளை வெளியிட்டு இருந்தால், உங்கள் Home Page :- http://gokisha.blogspot.com/ எப்படி இருக்கும் தெரியுமா...? ஏழு பதிவுகள் சின்ன சின்னதாகவும், தளமும் விரைவில் திறக்கும்... வாசகர்கள் அந்த ஏழு பதிவுகளில், எந்த பதிவுக்கு செல்ல வேண்டுமோ அதை எளிதாக கண்டுபிடித்து, அந்தப் பதிவின் கீழுள்ள "Read more" சொடுக்கி செல்வார்கள்...

      இப்போது கூட கடைசியாக வெளியிட்ட ஏழு பதிவுகளை "edit" செய்யலாம்... அதாவது ஒவ்வொரு பதிவையும் திறந்து, பதிவின் ஆரம்ப பத்திக்கு அடுத்து "Insert jump break" ஐகானை சொடுக்கி விட்டு, "update" செய்யவும்... அப்போது "Fix, Dismiss, Ignore" என்று வந்தால், "Dismiss" என்பதை சொடுக்கி விட்டு, "update" செய்யவும்... வேண்டாம் என்றால் விட்டு விடவும்...

      இனிமேல் வெளியிடும் பதிவுகளை "Insert jump break" ஐகானை பயன்படுத்தவும்... தளத்தின் "Pageviews" கன்னாபின்னாவென்று கூடி, உங்கள் பெயர் போல அதிரும்...! டெய்சி பூஸ்குட்டி போல துள்ளலாம்... நன்றி சகோதரி...

      நீக்கு
    2. ஆவ்வ்வ்வ் ஆஆவ்வ்வ்வ் இனி என்னை யாரும் பிடிக்கவே முடியாதூஊஊஊஊ பூஸ் ஒன்று புறப்படுதேஏஏஏஏஏஏ.... இன்றே செய்துவிட்டுச் சொல்கிறேன். மிக்க மிக்க நன்றி சகோ டிடி....

      நீக்கு
    3. ஆஹா... ஓஹோ.. ஓஒ லலலாஆஆஆஆ.. இப்போ என் பக்கம் அனைத்துப் பதிவுகளும் குட்டிக் குட்டியா மின்னுதே... மாற்றி விட்டேன்.. இந்த read more செய்வதற்கு.. HTML இல்தான் மாற்றம் செய்ய வேண்டுமாக்கும் எனத்தான் நினைத்திருந்தேன்...

      இனி நிறையப்பேரின் புளொக்குகள் குட்டியாக மின்னப்போகுது... சரி செய்வோர் அனைவரும் இங்கும் வந்து இதைப் பார்த்துத்தான் செய்தேன் என பின்னூட்டமிட்டால்.. உங்களுக்கும் அதிக சந்தோசமாக இருக்கும்.

      மிக்க மிக்க நன்றிகள்.

      நீக்கு
  29. அருமையான பதிவு.
    தொழில் நுட்பங்களை எவ்வளவு எளிதாக நீங்கள்
    சொன்னாலும் என் போன்றவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான். பிள்ளைகள் ஊரிலிருந்து வரும் போது அவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு நீங்கள் சொன்னதை செய்து பார்க்க வேண்டும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  30. பயனுள்ள பகிர்வு பாராட்டுக்கள் டிடி

    பதிலளிநீக்கு
  31. தங்களின் முகப்பு பகுதியில் (Home Page) தமிழ்மணம் திரட்டி அனைத்து பதிவுகளிலும் வருகிறது... அதையும் மாற்ற வேண்டும்... தலைப்பிற்கு கீழ் வந்தால் நல்லது... என்று சொல்லியிருக்கிறீர்கள். அதை எப்படி மாற்ற வேண்டும் என்று சொல்லுங்களேன். நீங்கள் சொன்னபடி மேலும் படிக்க என்பதைச் சரி செய்துவிட்டேன். நன்றி தனபாலன் சார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1) முதலில் உங்கள் தளத்தின் இடதுபுறம் உள்ள "Theme" என்பதை சொடுக்கவும்...

      2) Live on Blog கீழுள்ள "Edit HTML" என்பதை சொடுக்கவும்...

      3) வரும் HTML பெட்டியில் ஏதேனும் ஒரு இடத்தில் கிளிக் செய்யவும்...

      4) அடுத்து தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...

      5) ஒரு சின்ன பேட்டி Search என்று வலது பக்கம் தோன்றும்...

      6) thamizmanam என்று type செய்து enter தட்டவும்...

      7) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...

      8) கீழ் உள்ளது போல் இருக்கும் script-யை சுட்டியால் தேர்வு செய்து நீக்கி விடுங்கள்...

      <script language='javascript' src='http://services.thamizmanam.com/toolbar.php?date=23:23&posturl=http://unjal.blogspot.com/2017/03/blog-post.html&cmt=54&blogurl=http://unjal.blogspot.com/&photo=' type='text/javascript'>
      </script>

      9) மீண்டும் தேடல் : Ctrl Key-யை அழுத்திக் கொண்டு, F என்கிற எழுத்தை அமுக்கவும்...

      10) <div class='post-outer'> என்று type செய்து enter தட்டவும்...

      11) அந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள்...

      12) அந்த script முடிவில் click செய்து செய்து enter தட்டவும்... (ஒரு வரியை உருவாக்க)

      13) கீழே உள்ள script முழுவதையும் copy செய்து கொண்டு அங்கே paste செய்யவும்...

      <!-- Added-Start-Tamilmanam Vote button -->

      <b:if cond='data:blog.pageType != &quot;static_page&quot;'>
      <b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>

      <center><script language='javascript' src='http://services.thamizmanam.com/jscript.php' type='text/javascript'>
      </script><script expr:src=' &quot;http://services.thamizmanam.com/toolbar.php?date=&quot; + data:post.timestamp + &quot;&amp;posturl=&quot; + data:post.canonicalUrl + &quot;&amp;cmt=&quot; + data:post.numComments + &quot;&amp;blogurl=&quot; + &quot;http://unjal.blogspot.com&quot; + &quot;&amp;photo=&quot; + data:photo.url' language='javascript' type='text/javascript'></script></center></b:if></b:if>

      <!-- Added-End-Tamilmanam Vote button -->

      14) முடிவாக "Save theme" என்பதை சொடுக்கி விடுங்கள்...

      இப்போது உங்கள் தளத்தை பார்த்தால் (Home Page :-http://unjal.blogspot.com) தமிழ்மணம் ஓட்டுப்பட்டை வராது... ஏதேனும் ஒரு பதிவை சொடுக்கி பாருங்கள்... அந்த பதிவின் தலைப்பின் கீழ் தமிழ்மண ஓட்டுப்பட்டை வரும்...

      இதையே எனது முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்... இந்த கருத்துரையில் சந்தேகம் வந்தால் இங்கே சொடுக்கி வாசிக்கலாம்...

      நன்றி...

      நீக்கு
    2. கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் மிக எளிதாகச் சொல்லிக்கொடுத்தீர்கள். அதன்படியே நீக்கிவிட்டேன். முதலில் நீங்கள் கொடுத்த இணைப்புக்குச் சென்று படிக்க வேண்டும் என்றிருந்தேன். வேலை மிகுதியால் இணையம் வர முடியவில்லை. அதற்குள்ளாகவே மீண்டும் என் தளத்தில் விரிவாக எழுதிவிட்டீர்கள். மிக மிக நன்றி தனபாலன் சார்!
      நீங்கள் ஏற்கெனவே எழுதியதையே நாங்கள் திரும்பத் திரும்பக் கேட்டாலும், பதில் சொல்ல மிகவும் பொறுமை வேண்டும். உங்களின் இந்தப் பொறுமை எங்களுக்கு நன்மை!

      நீக்கு
    3. புஸ்தகாவில் வெளியாகியிருக்கும் என் மின்னூல்களில் இணைப்பை என் தளத்தில் வெளியிட என்ன செய்ய வேண்டும்? மின்னூல் படத்தை கிளிக் செய்தால் புஸ்தகா பக்கத்துக்குப் போக வேண்டும். உங்களை மீண்டும் தொந்திரவு செய்வதற்கு மன்னிக்க வேண்டும் தனபாலன் சார்! உங்களால் நான் நிறையக் கற்றுக் கொள்கிறேன். குருதட்சிணை தொகை ஏறிக்கொண்டே செல்கிறது. மீண்டும் நன்றி தனபாலன் சார்!

      நீக்கு
  32. அனைவருக்கும் பயனளிக்கும் அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  33. நண்பர் நீச்சல்காரன் அவர்களின் அருமையான வலையுலகப் புதுப்புனைவுகளில் இதுவும் ஒன்று. ஆனால், பதிவைப் பூட்டி வைப்பது எனக்குப் பிடிப்பதில்லை என்பதால் நான் இதைப் பயன்படுத்தவில்லை. மேலும், என் பதிவுகள் எல்லாமே பிரச்சினைக்குரியவை. அவற்றைத் திருடினால் திருடுபவருக்குத்தான் தீதே தவிர எனக்கில்லை. அது மட்டுமின்றி, எத்தனை பேர் என் பதிவுகளைக் களவாடி வெளியிட்டாலும் என் பதிவுதான் அசல் என்பது இணையத்தில் பதிவாகிவிட்ட ஒன்று என்பதால் திருடு போவது பற்றிக் கவலையில்லை. :-D

    பதிலளிநீக்கு
  34. பயனுள்ள பகிர்வு டிடி. இதை செய்யும் பொறுமை அதிகம் தேவை.

    பதிலளிநீக்கு
  35. மிக்க நன்றி சகோ டிடி ..நானும் நீங்க அதிராவுக்கு பின்னூட்டத்தில் சொன்ன மாதிரியே செய்திட்டேன் ஜம்ப் பிரேக் போட்டாச்சு ..read more ..
    அதோட இத்தனை நாள் ஒரு பதிவுதான் காட்டும் மெயின் பக்கம் இப்போ 5 போஸ்ட் காட்டறது வசதியா இருக்கு

    பதிலளிநீக்கு
  36. அருமையானபதிவு.அனைவருக்கும் பயனளிக்கும் விதத்தில் எளிமையான விளக்கம். நன்றி சார். உடல் நலம் பாதித்தமையால் வலைப்பக்கம் வர முடியவில்லை. விரைவில் மீள்வேன்

    பதிலளிநீக்கு
  37. மிக, மிக, மிகவும் பயனுள்ள தகவல். ஆனால், எனது சிற்ற்ற்ற்றறிவுக்கு முழுதாக எட்டவில்லை. தங்களை அலைபேசியில் தொடர்பு கொள்கிறேன். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  38. வலைப்பூ, இணையம் என நிரம்ப டெக்னிக்கல் விடயங்களை எழுதுகின்றீர்கள் தனபாலன் சார், என்னுடைய வேலைப்பழு, வீடு, ஹோட்டல் ஈவன்ஸ் நிர்வாகம் என இறுக்கும் நிலையில் எனக்கு கம்பூட்டர் என்பது நள்ளிரவில் சற்று ரிலாக்சிங்க நேரத்துக்கு மட்டும் தான். விடுமுறை எடுக்கும் தினத்தில் ஏதேனும் தோன்றி எழுதுவது தான். என்னுடைய பதிவின் பின்னூட்டமொன்றி. காம் இலிருந்து மாற்றம் செய்ய சொல்லி பின்னூட்டம் இட்டிருந்தீர்கள். உண்மையில் எனக்கு இந்த வலைப்பூ செட்டிங்ககினுள் சென்றால் நேரம் துளியாக பறந்து விடுவதனால் உள்ளே நுழையவே தயக்கமாக இருக்கின்றது.

    கம்பெனி வெப்சைட் மற்றங்கள் செய்யக்கூட நேரமில்லாமல் இருக்கின்றேன். உங்களால் என் ஆல்ப்ஸ் தென்றல் மாற்றங்கள் செட்டிங்கள் சரியாக செய்து தர முடியுமெனில் என் விபரம் உங்கல் பேஸ்புக் இன்பாக்சில் இருக்கின்றது. அதை பயன் படுத்தி செட் செய்து தாருங்கள். முடியுமானால் நேரமிருந்தால் மட்டுமே தான் சார். கட்டாயமெல்லாம் இல்லை.

    நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  39. உங்களைப்போன்று தன்னலமில்லாமல் அடுத்தவர்க்கு உதவக்கூடியவர்கள் நட்பாய்க் கிடைப்பது வரம்.. அந்த வகையில் நாங்களெல்லாம் வரம் வாங்கி வந்தவர்கள் போலும். :))) பயனுள்ள தொழில்நுட்பங்களை பொறுமையாகவும் எளிமையாகவும் சொல்லித்தருவதற்கு மிகவும் நன்றி தனபாலன். அருமையான செயலிக்காக நீச்சல்காரன் அவர்களுக்கும் மிக்க நன்றி. நீங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் மாற்றங்களை என் தளத்தில் செய்துவிட்டேன். மிகவும் நன்றி.

    பதிலளிநீக்கு
  40. அருமையான பயனுள்ள பதிவு! தொழில்நுட்பத்தை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  41. இனிய இறுக்கமான
    தொழில் நுட்ப வழிகாட்டல்
    நல்ல முயற்சி - ஆனால்
    பதிவுத் திருடருக்குச் சிக்கல் தான்...
    எப்படியோ
    தாங்கள் சொன்னது போல
    தட்டச்சுச் செய்துத் திருடுவாங்க தான்...
    திருவிளையாடலில்
    தருமிக்கு (நாகேஸ்) வந்த நிலை வந்தால் தான்
    பதிவுத் திருடரும் மாட்டுப்படுவினம்!

    பதிலளிநீக்கு
  42. தங்கள் பதிவினை எதிர்பார்த்து...

    மின்நூல் வெளியீடும் பரிசில் வழங்கலும் 2017
    https://seebooks4u.blogspot.com/2017/03/2017.html

    பதிலளிநீக்கு
  43. அருமை டிடி . இவற்றை எல்லாம் தொகுத்து மின்னூலாக்கி விடுங்கள்

    பதிலளிநீக்கு
  44. ஜோதிஜி , கந்த்சாமி சார், செந்தில் சகோ கூறியது போலத்தான் என் படைப்புகளும் . ஆனல் என்ன செய்ய பகிரப்படுவதால் பலருக்கும் போய்ச் சேருதே என மனதைத் தேற்றிக் கொள்வேன் :)

    பதிலளிநீக்கு
  45. பதிவெழுதி நாளாச்சே சகோ என்னாச்சு ??

    பதிலளிநீக்கு
  46. சகோ தனபாலன், எங்கே உங்களை நீண்ட நாட்களாக எங்கும் காணவில்லையே? கண்பட்டுவிட்டதோ பூட்டுப் போட்டதால்?:).. நலம்தானே?.

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் ஐயா,

    திரு நீச்சல்காரன் அவர்களின் தளம் சென்று பார்த்தேன்.

    அவர் கொடுத்த பத்தியை நகலெடுக்க முடிகிறதே?

    வேறேதேனும் பத்தியை நகலெடுக்க முடியாமல் பூட்டி இருக்கிறாரோ?

    //////காப்பி செய்து பார்க்கவும். .

    பூட்டு வாங்கலையோ பூட்டு...
    மதுரை பூட்டு சார்,
    மாடர்ன் பூட்டுசார்,
    வாங்கிட்டு வண்டிய ஓட்டு சார்,
    பூட்டு வாங்கலையோ பூட்டு....
    துட்டு வேண்டாம் சார்
    ஓட்டு வேணாம் சார்
    கருத்த வந்து கொட்டுசார்
    பூட்டு வாங்கலையோ பூட்டு....
    பொதுவாக பதிவை காப்பி செய்வதெப்படி
    அந்த பத்தியை மௌஸ் மூலம் select செய்து Rightclick செய்து காப்பி செய்யலாம்.
    ctrl+A மற்றும் ctrl+C அழுத்தி பதிவை எடுக்கலாம்.
    பதிவின் source code சென்று பதிவை காப்பி செய்யலாம்.
    மின்னஞ்சல்,கூகிள் ரீடர், போன்ற RSS உபகரணங்கள் மூலம் சில இடங்களில் காப்பி செய்யலாம்.
    பிரபல பிரவுசரில் ஜாவாஸ்கிரிப்டை தடை செய்து எளிதாக காப்பி செய்யலாம். //////

    நான்தான் குழம்பி விட்டேனோ?

    தெளிவு படுத்துங்கள்.

    நன்றி.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.