ஆயுள் தண்டனையும்... மரண தண்டனையும்...
இளமையெல்லாம் வெறும் கனவு மயம் - இதில் மறைந்தது சில காலம்... தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்... மயங்குது எதிர் காலம்... மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ...
⟪ © பாக்யலக்ஷ்மி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1961 ⟫
"தெளிவும்-முடிவும்" அறிந்து தெரிந்து புரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காது மனமே...! அதனாலே மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு எல்லாம் காணக் கூடாது...! இதோ எதிர்ப்பாட்டு : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா... இன்னலைத் தீர்க்க வா...! எப்பூடி...?
⟪ © குலேபகாவலி ✍ தஞ்சை ராமையா தாஸ் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 ஜிக்கி, A.M.ராஜா @ 1955 ⟫
⟪ © நாடோடி மன்னன் ✍ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ♫ S.M.சுப்பையா நாயுடு, S.M.பாலகிருஷ்ணன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் - நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்... சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு - அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்... விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்2 உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்...! தூங்காதே தம்பி தூங்காதே தம்பி - நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...
தெரியாம எதிர்ப்பாட்டு பாடிட்டேன்... மன்னிச்சு...! ஜுறுஜுறுப்பு வந்துருச்சி...! இன்றென்ன மனசாட்சி தம்பி, கேள்வியைக் காணாம்...?
ஒன்றுமில்லை... பொழுது போகவில்லை... ஒரு வேலையும் இல்லை... ஒரு சிந்தனையும் இல்லை... உன்னிடம் வந்தால் ஏதாவது உப்புக்கு உதவாத விசயத்தைக் கூட உன்னதமானது என்று கூறி, கொஞ்சம் நேரத்தைப் போக்க உதவுவாய்... சொல்லுப்பா... என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?
அதானே பார்த்தேன்...! அடப்பாவி... உப்பு பத்தி முந்தைய பதிவை எழுதினாலும் சாதாரணமானவர்களால் தான் சாதனையே...! ன்னு சொல்லிட்டோமில்லே... சலிப்பு இல்லாத உழைப்பு என்றும் தரும் சிரிப்பு...! போதுமா...? நம்மைப் போலத்தான் நாட்டிலே, "நேரம் போகவில்லை..."ன்னு புலம்புகிற பல பேரைச் சந்திக்கிறோம்... தனக்கு நேரம் போகவில்லை என்பதற்காக, அடுத்தவரைச் செல்பேசியில் அழைத்து அரைமணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை வீணடிக்கும் ஆ...சாமிகள்...! அலுவலகத்தில் தன்னுடைய அறையில் வேலை இல்லை என்பதற்காக, அடுத்த நண்பரின் அறைக்குப் போய் அவரது வேலையையும் நேரத்தையும் வீணடிக்கும் நண்பர்கள்... அப்புறம் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து, ரிமோட்டில் ஒன்று முதல் கடைசி அலைவரிசைகள் வரை மாற்றி மாற்றி, "ஒரு சேனலுமே சரியில்லை, எல்லாமுமே ஃபோர்" என்று அங்கலாய்க்கும் சோம்பேறிகள் - இப்படி நேரம் போகாமல் திரியும் "நேர்த்தி" மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள்...
உலகில் அனைவரும் ஒரு நாளில் அதிக முறை பார்ப்பது Watch தானே...? ஓ... இப்ப யாரும் அதிகம் கட்டுறதில்லே... கைப்பேசி தான்... முன்னேற்றம்...? ஆடம்பரமாகக் கருதப்பட்ட கடிகாரத்தையே அந்தக் காலத்தில் இடுப்பில் கட்டியிருந்தார் நம்ம எளிமை விரும்பி காந்திஜி அவர்கள்...
நேரத்தை திட்டமிட்டு செலவு செய்தார்... ம்... இன்னும் சில பேர்கள் பரபரப்பின் சின்னங்கள்... "நேரம் போதவில்லை... நேரம் போதவில்லை..." என்று சலிப்போடு பேசுவதற்கே அவர்களின் நேரம் முழுவதையும் செலவழிப்பார்கள்... வேலையைத் தொடங்குவதற்கு முன்னரேயே, "எப்போது முடிக்கப் போகிறோமோ...?" என்று பற்றிக் கொள்ளும் பரபரப்பு அவர்களுடையது... வேலை வேலை வேலை வேலை வேலை வேலை... ஆம்பளைக்கும் வேலை பொம்பளக்கும் வேலை... பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேலை...! மேலே மேலே மேலே மேலே மேலே மேலே... எத்தனையோ வேலை எப்பவுமே வேலை... அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மாலை...! (படம் : அவ்வை சண்முகி)
பரபர காட்சிகளுடன் சுறுசுறுப்பான பாடல்... பதிவுலகத்தையே எடுத்துக்கோ... பதிவு மட்டும் - வாசித்தாலும் கருத்திடாமல்... சின்ன உலகம் வேண்டாமா...? சரி விடு...! ஏழை - பணக்காரன், இளைஞர் - முதியவர், வேலை பார்ப்பவர் - வேலை இல்லாதவர், உயர்நிலை பணக்காரர் - கடைநிலை ஊழியர், இல்லறத்தில் வாழ்பவர் - இமயமலையில் வாழ்பவர் - இப்படி எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தானே உள்ளது...?
நேரம் போகவில்லைன்னு சொல்றபவங்களுக்கும், நேரம் போதவில்லைன்னு சொல்றபவங்களுக்கும் நேரம் என்பது சரிசமம்...! வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், திட்டமிடத் தெரிந்தவர்கள், அறிவு நுட்பம் வாய்ந்தவர்கள், நேரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தெரிந்தவர்கள் பரபரப்பின்றி வாழ்கிறார்கள்... இந்த நுட்பம் புரியாதவர்களுக்கு "சும்மா" இருப்பது கூட... ம்... சுறுசுறுப்பு தேவை தான்... பரபரப்பு தேவையா...? நிதானம் பிரதானம்... உண்மை நிகழ்வை சொல்றேன்... பொறுமையா கேளு...!
பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு புத்தகப் பிரியர்... ஒரு புத்தகக் கடையும் நடத்தி வந்தார்... ஒருமுறை அவர் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை எடுத்து, "இது என்ன விலை...?" என்று விற்பனையாளரைக் கேட்டார்... விற்பனையாளர் புத்தகத்திலேயே விலை 1 டாலர் என்று போட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்... "அது எனக்கும் தெரியும், அதை எந்தளவு குறைத்துக் கொடுப்பீர்கள்...?" என்றார்... 1 டாலருக்குக் குறையாது என்று சொல்ல வாக்குவாதம் ஆரம்பம்... இதைக் கேள்விப்பட்டு வந்த பெஞ்சமின் பிராங்கிளின்,"என்ன விசயம்...?" என்று கேட்க, வாடிக்கையாளர், "1 டாலர் பெறும் அளவிற்கு இந்தப் புத்தகம் தகுதியில்லை" என்று சொல்ல பெஞ்சமின் அமைதி காத்தார்... மறுபடியும் வாடிக்கையாளர், "எந்த விலைக்குத் தருவீர்கள்...?" என்று கேட்க, "2 டாலர்" என்றார் பெஞ்சமின்... பதறிப் போன வாடிக்கையாளர், "போட்டிருக்கிற 1 டாலருக்கே இந்தப் புத்தகம் பெறுமானம் இல்லை என்று நான் சொல்லுகிறேன்... நீங்க என்ன, 2 டாலர் என்று சொல்லுகிறீர்கள்...?" "ஐயா, புத்தக விலை 1 டாலர் தான்... ஆனால் இப்போது நான் கூடுதலாக 1 டாலர் கேட்பது, எனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்கு" என்றார் பெஞ்சமின் பிராங்கிளின்... பார்த்தாயா மனமே...
ஒருவரின் ஆளுமைத்திறன் மேம்பட வேண்டுமென்றால், முதலில் நேர மேலாண்மையில் வித்தகனாக வேண்டும்... அத்துடன் மெனக்கெட தீர்மானித்து விட்டால் தேடுதலும் ஆர்வமும் அதிகமாகும்... நேரத்தை மதிக்காதவனை நேரமே மிதித்து கீழ் தள்ளி விட்டு போய்க்கொண்டே இருக்கும்... நேரத்தை நிர்வகிக்கத் தெரியாவிட்டால், கடிகார முட்கள் ஆயுள் தண்டனையாகவும், காலண்டர்கள் மரண தண்டனையாகவும் மாறி விடும்...! நேரம் என்பதைத் தங்கமாகவும், பணமாகவும் கருதுபவர்களே உலகின் உன்னத வெற்றியாளர்களாகும் தகுதி படைத்தவர்கள்... சரியா...?
தண்ணீராகவும் என்பதைச் சேர்த்துக்கோ... காலமறிதல் என்று ஒரு அதிகாரமே இருக்கே... 49 அதில் ஒரு குறள் சொல்ல நேரம் இல்லையா.? எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற்கு அரிய செயல் (489)
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?
⟪ © பாக்யலக்ஷ்மி ✍ கண்ணதாசன் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 P.சுசீலா @ 1961 ⟫
"தெளிவும்-முடிவும்" அறிந்து தெரிந்து புரிந்து விட்டால் வாழ்க்கையில் சுவாரஸ்யமே இருக்காது மனமே...! அதனாலே மாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு எல்லாம் காணக் கூடாது...! இதோ எதிர்ப்பாட்டு : மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ... இனிக்கும் இன்ப இரவே நீ வா வா... இன்னலைத் தீர்க்க வா...! எப்பூடி...?
⟪ © குலேபகாவலி ✍ தஞ்சை ராமையா தாஸ் ♫ விஸ்வநாதன்-ராமமூர்த்தி 🎤 ஜிக்கி, A.M.ராஜா @ 1955 ⟫
⟪ © நாடோடி மன்னன் ✍ பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ♫ S.M.சுப்பையா நாயுடு, S.M.பாலகிருஷ்ணன் 🎤 T.M.சௌந்தரராஜன் @ 1958 ⟫
நல்ல பொழுதையெல்லாம் தூங்கிக் கெடுத்தவர்கள் - நாட்டைக் கெடுத்ததுடன் தானும் கெட்டார்... சிலர் அல்லும் பகலும் தெரு கல்லாய் இருந்துவிட்டு - அதிர்ஷ்டம் இல்லையென்று அலட்டிக் கொண்டார்... விழித்துக்கொண்டோர் எல்லாம் பிழைத்துக் கொண்டார்2 உன்போல் குறட்டைவிட்டோர் எல்லாம் கோட்டை விட்டார்...! தூங்காதே தம்பி தூங்காதே தம்பி - நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே...
சோம்பலும்... சலிப்பும்...
தெரியாம எதிர்ப்பாட்டு பாடிட்டேன்... மன்னிச்சு...! ஜுறுஜுறுப்பு வந்துருச்சி...! இன்றென்ன மனசாட்சி தம்பி, கேள்வியைக் காணாம்...?
ஒன்றுமில்லை... பொழுது போகவில்லை... ஒரு வேலையும் இல்லை... ஒரு சிந்தனையும் இல்லை... உன்னிடம் வந்தால் ஏதாவது உப்புக்கு உதவாத விசயத்தைக் கூட உன்னதமானது என்று கூறி, கொஞ்சம் நேரத்தைப் போக்க உதவுவாய்... சொல்லுப்பா... என்ன செய்து கொண்டிருக்கிறாய்...?
அதானே பார்த்தேன்...! அடப்பாவி... உப்பு பத்தி முந்தைய பதிவை எழுதினாலும் சாதாரணமானவர்களால் தான் சாதனையே...! ன்னு சொல்லிட்டோமில்லே... சலிப்பு இல்லாத உழைப்பு என்றும் தரும் சிரிப்பு...! போதுமா...? நம்மைப் போலத்தான் நாட்டிலே, "நேரம் போகவில்லை..."ன்னு புலம்புகிற பல பேரைச் சந்திக்கிறோம்... தனக்கு நேரம் போகவில்லை என்பதற்காக, அடுத்தவரைச் செல்பேசியில் அழைத்து அரைமணி நேரத்திற்கும் மேலாக நேரத்தை வீணடிக்கும் ஆ...சாமிகள்...! அலுவலகத்தில் தன்னுடைய அறையில் வேலை இல்லை என்பதற்காக, அடுத்த நண்பரின் அறைக்குப் போய் அவரது வேலையையும் நேரத்தையும் வீணடிக்கும் நண்பர்கள்... அப்புறம் தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து, ரிமோட்டில் ஒன்று முதல் கடைசி அலைவரிசைகள் வரை மாற்றி மாற்றி, "ஒரு சேனலுமே சரியில்லை, எல்லாமுமே ஃபோர்" என்று அங்கலாய்க்கும் சோம்பேறிகள் - இப்படி நேரம் போகாமல் திரியும் "நேர்த்தி" மிக்க மனிதர்களும் இருக்கிறார்கள்...
உலகில் அனைவரும் ஒரு நாளில் அதிக முறை பார்ப்பது Watch தானே...? ஓ... இப்ப யாரும் அதிகம் கட்டுறதில்லே... கைப்பேசி தான்... முன்னேற்றம்...? ஆடம்பரமாகக் கருதப்பட்ட கடிகாரத்தையே அந்தக் காலத்தில் இடுப்பில் கட்டியிருந்தார் நம்ம எளிமை விரும்பி காந்திஜி அவர்கள்...
நேரத்தை திட்டமிட்டு செலவு செய்தார்... ம்... இன்னும் சில பேர்கள் பரபரப்பின் சின்னங்கள்... "நேரம் போதவில்லை... நேரம் போதவில்லை..." என்று சலிப்போடு பேசுவதற்கே அவர்களின் நேரம் முழுவதையும் செலவழிப்பார்கள்... வேலையைத் தொடங்குவதற்கு முன்னரேயே, "எப்போது முடிக்கப் போகிறோமோ...?" என்று பற்றிக் கொள்ளும் பரபரப்பு அவர்களுடையது... வேலை வேலை வேலை வேலை வேலை வேலை... ஆம்பளைக்கும் வேலை பொம்பளக்கும் வேலை... பொம்பளையா போனா ஆம்பளைக்கும் வேலை...! மேலே மேலே மேலே மேலே மேலே மேலே... எத்தனையோ வேலை எப்பவுமே வேலை... அத்தனைக்கும் உண்டு வெற்றியென்னும் மாலை...! (படம் : அவ்வை சண்முகி)
பரபர காட்சிகளுடன் சுறுசுறுப்பான பாடல்... பதிவுலகத்தையே எடுத்துக்கோ... பதிவு மட்டும் - வாசித்தாலும் கருத்திடாமல்... சின்ன உலகம் வேண்டாமா...? சரி விடு...! ஏழை - பணக்காரன், இளைஞர் - முதியவர், வேலை பார்ப்பவர் - வேலை இல்லாதவர், உயர்நிலை பணக்காரர் - கடைநிலை ஊழியர், இல்லறத்தில் வாழ்பவர் - இமயமலையில் வாழ்பவர் - இப்படி எல்லோருக்கும் ஒரு நாளைக்கு 24 மணிநேரம் தானே உள்ளது...?
நேரம் போகவில்லைன்னு சொல்றபவங்களுக்கும், நேரம் போதவில்லைன்னு சொல்றபவங்களுக்கும் நேரம் என்பது சரிசமம்...! வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும், திட்டமிடத் தெரிந்தவர்கள், அறிவு நுட்பம் வாய்ந்தவர்கள், நேரத்தைப் பகிர்ந்து கொள்ளத் தெரிந்தவர்கள் பரபரப்பின்றி வாழ்கிறார்கள்... இந்த நுட்பம் புரியாதவர்களுக்கு "சும்மா" இருப்பது கூட... ம்... சுறுசுறுப்பு தேவை தான்... பரபரப்பு தேவையா...? நிதானம் பிரதானம்... உண்மை நிகழ்வை சொல்றேன்... பொறுமையா கேளு...!
பெஞ்சமின் பிராங்கிளின் ஒரு புத்தகப் பிரியர்... ஒரு புத்தகக் கடையும் நடத்தி வந்தார்... ஒருமுறை அவர் கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒரு புத்தகத்தை எடுத்து, "இது என்ன விலை...?" என்று விற்பனையாளரைக் கேட்டார்... விற்பனையாளர் புத்தகத்திலேயே விலை 1 டாலர் என்று போட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினார்... "அது எனக்கும் தெரியும், அதை எந்தளவு குறைத்துக் கொடுப்பீர்கள்...?" என்றார்... 1 டாலருக்குக் குறையாது என்று சொல்ல வாக்குவாதம் ஆரம்பம்... இதைக் கேள்விப்பட்டு வந்த பெஞ்சமின் பிராங்கிளின்,"என்ன விசயம்...?" என்று கேட்க, வாடிக்கையாளர், "1 டாலர் பெறும் அளவிற்கு இந்தப் புத்தகம் தகுதியில்லை" என்று சொல்ல பெஞ்சமின் அமைதி காத்தார்... மறுபடியும் வாடிக்கையாளர், "எந்த விலைக்குத் தருவீர்கள்...?" என்று கேட்க, "2 டாலர்" என்றார் பெஞ்சமின்... பதறிப் போன வாடிக்கையாளர், "போட்டிருக்கிற 1 டாலருக்கே இந்தப் புத்தகம் பெறுமானம் இல்லை என்று நான் சொல்லுகிறேன்... நீங்க என்ன, 2 டாலர் என்று சொல்லுகிறீர்கள்...?" "ஐயா, புத்தக விலை 1 டாலர் தான்... ஆனால் இப்போது நான் கூடுதலாக 1 டாலர் கேட்பது, எனது பொன்னான நேரத்தை வீணடித்ததற்கு" என்றார் பெஞ்சமின் பிராங்கிளின்... பார்த்தாயா மனமே...
ஒருவரின் ஆளுமைத்திறன் மேம்பட வேண்டுமென்றால், முதலில் நேர மேலாண்மையில் வித்தகனாக வேண்டும்... அத்துடன் மெனக்கெட தீர்மானித்து விட்டால் தேடுதலும் ஆர்வமும் அதிகமாகும்... நேரத்தை மதிக்காதவனை நேரமே மிதித்து கீழ் தள்ளி விட்டு போய்க்கொண்டே இருக்கும்... நேரத்தை நிர்வகிக்கத் தெரியாவிட்டால், கடிகார முட்கள் ஆயுள் தண்டனையாகவும், காலண்டர்கள் மரண தண்டனையாகவும் மாறி விடும்...! நேரம் என்பதைத் தங்கமாகவும், பணமாகவும் கருதுபவர்களே உலகின் உன்னத வெற்றியாளர்களாகும் தகுதி படைத்தவர்கள்... சரியா...?
தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?
புதிய பதிவுகளை பெறுதல் :
தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :
வணக்கம்
பதிலளிநீக்குஅண்ணா.
:
தலைப்பை பார்த்தவுடன் நான் மயங்கிவிட்டேன்படித்து வந்த போது இறுதியில்
சொல்லிய கருத்து அருமையாக உள்ளது.
பாடலும் புத்தக கதையும் அருமையைக உள்ளது.
பகிர்வுக்கு நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
த.ம2
பதிலளிநீக்குநல்ல பாடலோடு ஆரம்பித்தீர்கள். நேரத்தோடு முடித்தீர்கள். மிக நன்றாக உள்ளது.
பதிலளிநீக்குஅருமை. வாழ்த்துக்கள்.
மிகவும் அருமையான திரைப்படப் பாடலுடன் பதிவு ரொம்ப ஜோர். எல்லோருக்குமே ஒரு நாளைக்குக் கொடுக்கப்பட்டுள்ளது 24 மணி நேரங்களே. அதை எவ்வாறு நாம் திட்டமிட்டு பயன் படுத்துகிறோம் என்பதிலேயே அவரவர்களின் வெற்றியும் தோல்வியும் அடங்கியுள்ளன. பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குசோம்பலும் சலிப்பும் கீழே விழுவது அட்டகாசம்.
பதிலளிநீக்குஒரு நாளின் இறுதியில் யோசித்துப் பார்த்தல் எவ்வளவு நேரம் வீணாக்கி இருக்கிறோம் என்பதை உணரலாம்.
மிலியன் டாலர்கள் தரலாம் உங்கள் இந்தப் பதிவிற்கு
பதிலளிநீக்குதம +
நேரம் பற்றிய மனசாட்சியின் என்ன ஓட்டங்கள் அருமை.
பதிலளிநீக்குத ம 5
அன்புள்ள வலைச்சித்தரே,
பதிலளிநீக்குநேரத்தைப் பற்றி குறித்த நேரத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.
எல்லோருக்குமே 24 மணி நேரம்தானே உள்ளது?
இதில் நேரம் போதவில்லை... நேரமில்லை என்று சொல்வது எல்லாம் வீண்...! நேரத்தைத் திட்டமிடுதலே வெற்றிக்குக் காரணம்.
போனால் வராது காலம்...! நிகழ்காலத்தில் அனுபவித்து வாழ்ந்து காட்டுவோம்...!
நன்றி.
த.ம. 7.
உண்மைதான் ஐயா
பதிலளிநீக்குஎவ்வளவு நேரத்தை வீணடித்திருக்கிறோம்
நன்றி
தம +1
நான் கேட்ட குருவைத்தேடி பற்றி ஒரு பதிவு வேண்டும். நேயர் விருப்பமாக.
பதிலளிநீக்குநான்கூட நீங்கள் ஏதோ கோர்ட் விவகாரம், சட்டப்பிரச்னை பற்றி எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்து விட்டேன் சார்!
பதிலளிநீக்குஅப்படிச் சொல்லுங்க, நேர மேலாண்மை முக்கியம் என்று!! அருமையான பாடல்கள். கீழே விழும் சோம்பல் சலிப்பு சூப்பர். நேரம் போகலை, நேரம் போதவில்லை - அதுவும் தப்பு, இதுவும் தப்பு :)
பதிலளிநீக்குத.ம.+1
நான் படித்ததிலிருந்து,
அமெரிக்காவிற்குப் புதிதாக வந்த வெளிநாட்டுப் பெண்மணி அனைவரும், பிஸி,பிஸி என்று சொல்வதைக் கேட்டு அப்படிச் சொல்வது தான் முறை என்று நினைத்து, "ஹலோ, ஐ ஆம் பிஸி" என்று அறிமுகப்படுத்திக் கொள்ள ஆரம்பித்தாராம். :))
அருமையான பெஞ்சமின் அவர்களின் உதாரணத்தை வைத்து நேரத்தை பற்றியான பதிவு ... ஆடிக்கு ஒரு முறை எழுதினாலும் அட்டகாசமாக எழுதுவது தங்கள் பாணி . வாழ்த்துக்கள்.. "டைம் இஸ் மணி" என்று சும்மாவா சொன்னார்கள் ....
பதிலளிநீக்குநேரமேலாண்மை பற்றிய உங்கள் குரலோடு முடித்த குறளும் அருமை
பதிலளிநீக்குத ம கூடுதல் 1
வாழ்க்கையில் நேரத்தைக் கூட கணக்கு பண்ணி செலவு செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவர் பெஞ்சமின் ப்ராங்க்ளின். அவருடைய வாழ்நாளில் நிகழ்ந்த ஒரு நிகழ்வோடும், தத்துவ ரீதியான பாடல்களோடும் ஒரு பதிவினைத் தந்த சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குத.ம.13
நேர்த்தியாக அமைந்த நேரப்பகிர்வு. பாடல்கள் சிறப்பு.
பதிலளிநீக்குபொன்னையும் பொருளையும் மதிக்கத் தெரிந்த பலருக்கு நேரத்தின் மதிப்பு தெரிவதே இல்லை. அதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை மேன்மையுறும். மிக அருமையானதொரு கருத்தை பாடல், கதை, குறள் வழிகளில் எடுத்துரைத்தமை சிறப்பு. பாராட்டுகள் தனபாலன்.
பதிலளிநீக்குநேரத்தின் அருமை பற்றி அருமையாக...
பதிலளிநீக்குநேரத்தைப்பற்றி தெரியாதவர்களுக்கு தங்கள் பதிவு உதவட்டும்.
பதிலளிநீக்குசில நேரங்களில் பலர் பலரது நேரங்களை வீணடிப்பதை மிகவும் நயமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குஅது சரி .. இப்படி மிச்சப்படுத்திய நமது நேரத்தை நாம் பலரது நேரங்களை வீணடிப்பதில் செலவழிக்கிறோமோ..?
சொன்ன கருத்து நல்ல கருத்து.
வாழ்த்துக்கள். God Bless You
சோம்பல் ஆயுள் தண்டனை, சலிப்பு மரணதண்டனை என்று நச்சென்று விளக்கி உள்ளீர்கள் தனபாலன் சகோ. !!!!!!!!
பதிலளிநீக்குசோம்பலையும் சலிப்பையும் நிறுத்துவோம்.
நல்ல கருத்து. நன்றி
பதிலளிநீக்குநேரத்தை திட்டமிட தெரியாவிட்டால் கடிகார முட்கள் ஆயுள் தண்டனையாகவும்,காலண்டர்கள் மரணத்தண்டனையாகவும் தெரியும் என்ற தங்கள் கருத்து உண்மைதான்....நல்ல பதிவு...
பதிலளிநீக்குஇனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்....
வாழ்க வளமுடன்...
ஒரு டிபிகல் டிடி பதிவு. டைம் மேனேஜ்மென்ண்ட் மிக முக்கியம் என்பதை அறிவுறுத்தும் பதிவு.சோம்பலும் சலிப்பும் தனியே விழாது .பிடித்துத் தள்ளவேண்டும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநேரத்தின் அருமையையும் பெருமையையும் விவரித்த விதம் பாராட்டுக்குரியது..
பதிலளிநீக்குவிழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார் என்பதே மகத்துவம்!..
அருமையான கருத்துக்களை வழங்கியமைக்கு நன்றி..
அது எப்படி பாட்டும் கூத்தும்,சாரி,,,,,,,,,,, கருத்தும்,
பதிலளிநீக்குநேரம் எத்துனை அரிய பொக்கிஷம் என்பது பற்றிய அருமையான பதிவு.
நேரத்தை நாம் வினடிப்பது மடும் அல்லாமல், விறர் நேலத்தையும் வினடிப்பதை அழகாக குட்டியுள்ளீர். நன்றி.
வணக்கம் சகோதரரே.!
பதிலளிநீக்குதங்களின் நேரம் பற்றி குறித்த இந்த பதிவு உண்மையிலேயே பொன்னுக்கு சமம். நல்ல கருத்துள்ள பாடல்களுடன் ஆரம்பித்து, நேரத்தின் அருமையை கதையுடன் உணர்த்தி, தங்கம் மட்டுமல்லாது தண்ணீரின் மதிப்பையும் நேரத்திற்கு ஒப்பிட்டு குறளுடன் முடித்த விதம் சிறப்பாக இருந்தது. பாராட்டுக்கள்.
சோம்பலும், சலிப்பும் சட்டென்று அகன்று விழும் இடம் பிரமாதம்.
நேரத்தை மதிக்காவிடில், ஆயுள் தண்டனையும், மரண தண்டனையும் எப்படி வாழ்வில் இடம் பெறுகிறது என்பதை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. இனியாவது நேரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுப்போம் . எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
நேரம் பற்றியும் ,புத்தகவிலையும் அருமையான கருத்து.
பதிலளிநீக்குசோம்பல் ஒரு கொடியது.
பதிலளிநீக்குநல்ல கருத்து அருமை...
பதிலளிநீக்குகாலத்தின் அருமையை உணர்ந்து வாழாவிடில் மண்ணில் சுகமேது? காலம் பொன்னானது. கடமை கண்ணானது!
பதிலளிநீக்குகைபேசியில் மணிக்கணக்காக பேசுபவர்களுக்கும், ரிமோட்டைக் கையில் வைத்துக் கொண்டு அல்லாடுபவர்களுக்கும், அடுத்தவர்களின் நேரத்தை வீணடிப்பவர்களுக்கும் நச்சென்று சொல்லியிருக்கிறீர்கள். ஆயுள்தண்டனைக்கும், மரண தண்டனைக்கும் நல்ல அர்த்தம் சொல்லியிருக்கிறீர்கள்.
பதிலளிநீக்குநாமும் இனி பிராங்க்ளின் போல நம் நேரத்தை வீணடித்தவர்களிடம் பணம் கேட்கலாம்!
வணக்கம் ஜி
பதிலளிநீக்குகடந்த எனது பதிவு ‘’மரணதண்டனை’’க்கு நீங்கள் கொடுத்திருந்த கருத்துரையில்... மீண்டும் மீண்டும் வருவேன் அனைவரது கருத்துரையையும் படிப்பேன் என்று சொன்னபோதே இப்படியொரு பதிவு தயாராகப் போகிறது 80தை புரிந்து கொண்டேன் ஆனால் நான் எதிர்பார்த்து படிக்க ஆரம்பித்தது வேறு ரீதியாக கொண்டு வந்து தலைப்பை முடிச்சு போட்டு அழகாக முடித்து விட்டீர்கள்.
எனக்கு காலம் பொன் போன்றதே பிறருக்கு எப்படியோ...
டாலர் கதை அருமை சொல்லிச்சென்ற விதம் வழக்கம் போலவே அழகு, நல்ல பாடல்கள் வாழ்த்துகள்.
நேர மேலாண்மையை கடைபிடிக்கச் சொல்கிற
பதிலளிநீக்குமேன்மையான பதிவு!
நேரம் குறித்த பதிவு மிக அருமை. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!
பதிலளிநீக்குநேரம் பொன்னானது ,போனால் வராது....(மனசாட்சி )அதை பதிவர்கள் சொல்வதுதான் வேடிக்கையா இருக்கு :)
பதிலளிநீக்குநேர மேலாண்மை குறித்து மிகச்சிறப்பாக சொன்னது பதிவு! பெஞ்சமின் பிராங்க்ளின் கதை சுவையாக மட்டுமின்றி நீதியையும் சொன்னது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குநேர மேலாண்மை பற்றியப் பதிவு சுவாரஸ்யம். பெஞ்சமின் பிராங்க்ளின் கதை மிகவும் ரசித்தேன்.
பதிலளிநீக்குபாராட்டுக்கள் தனபாலன் சார்.
ஆஹா அருமை அருமை !
பதிலளிநீக்குபதறாத காரியம் சிதறாது என்பது போல.
நேரத்தை திட்டமிடாவிட்டல் நிம்மதி போய் விடும் என்பதை அழகாக விபரித்துள்ளீர்கள் . பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
இனியா புத்தாண்டு வாழ்த்துக்கள் ...!
பொன்னான நேரத்தைப் பற்றிய அதன் மேலண்மை பற்றிய அருமையான பதிவிற்கு எத்தனை பொன் கொடுத்தாலும் மிகையல்ல.....
பதிலளிநீக்குகதை அருமை! நிச்சயமாக நேர மேலாண்மை மிக மிக அவசியம்...அதுவும் இன்றைய தலைமுறையினர் கடைபிடிக்க வேண்டிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் என்று சொன்னது அனுபவம் தான் .....சோமல், சலிப்பு உதைத்துத் தள்ளிட வேண்டும்.....அருமையாகச் சொல்லி உள்ளீர்கள் டிடி.....
நேர நிர்வாகம் சரியானால் பல நோய்களிலிருந்தம் தப்பலாம்.
பதிலளிநீக்குசிறப்பப் பதிவு. நன்றி
// ஒருவரின் ஆளுமைத்திறன் மேம்படவேண்டுமென்றால் முதலில் நேர மேலாண்மையில் வித்தகனாகவேண்டும்.//
பதிலளிநீக்குசரியாய் சொன்னீர்கள். வாழ்த்துக்கள்!
நேரத்தை வீணாக்கியமைக்காக ஒரு டாலர் கூடுதல். வரவேற்கத்தக்கவேண்டியதே.
பதிலளிநீக்குநேரம் கிடைத்த போது பயன்படுத்த தெரியவில்லை..பயன்படுத்த தெரிந்தபோது நேரம் கிடைக்கவில்லை.. இதற்கு என்ன செய்வது...???
பதிலளிநீக்குகாலம் பொன்போன்றது் அற்புதமான பதிவு...
பதிலளிநீக்குநேர மேலாணமைக்கு உதாரணமாய் எடுத்துக்காட்டிய பாடல்கள் நன்று,வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநேரத்தின் அவசியம் புரியும்படி சொன்ன விதம் அழகு
பதிலளிநீக்குபாடல்களும் பெஞ்சமின் கதையும் சும்மா நச்சுன்னு மண்டையில் ஏறிவிட்டது நன்றி தனபாலன் ஐயா வாழ்த்துக்கள்
கதையும் கருத்தும் அருமை. பக்க வாத்தியமாக குறளும் திரைப் பாடல் வரிகளுமாக எப்போதும்போல் பதிவு அழகு.
பதிலளிநீக்குதண்டனைக் காலமா - அது
பதிலளிநீக்குவேண்டாம் - ஆனால்
வாழும் காலத்தில்
பருவத்திலே பயிர் செய்வோம் - அதற்கு
நேரமேலாண்மை தேவை தான்
சிறந்த வழிகாட்டல்
தொடருங்கள்
கிடைத்த நேரத்தில் ஆற்றலும் அறிவும் மிக்க பாடல் விழிப்புணர்வு தந்தது முடித்த நேரத்தில் நேரம் போகிதில்லையே என்று சொன்னவன் வாய் அடைக்கப்பட்டது சிக்கனம் தேவை வாழ்வில் செலவு செய்ய இருபத்திநான்கு மணித்தியாலங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது ஒரு நாளில். தேவையின்றித் தொலைக்கும் நேரத்தில் தேடல் இருந்தால் மண்ணையும் பொன்னாக்கலாம் என்பதே நியம் - அருமையான கருத்தூட்டம் மிக்க பகிர்வு சபாஷ்.. தனபாலன் எனக்கு வேண்டாம் தண்டனை....
பதிலளிநீக்குநன்று... Good One..
பதிலளிநீக்குடி டி..
பதிலளிநீக்குலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருறீங்க..
கலக்குங்க நீங்க
:-) அருமை தனபாலன்.
பதிலளிநீக்குநேரத்தை நிர்வகிக்கத் தெரியாவிட்டால் கடிகார முட்கள் ஆயுட்தண்டனைதான். உண்மை.
மீண்டும் படித்தேன் இன்று.
பதிலளிநீக்கு