🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



கருத்துக்கணிப்பு தேவையா...?

ஹலோ DD, கில்லர்ஜி பேசுறேன்... என் பதிவுலே mp3 சேர்க்கணும்... எப்படி...?

இதோ நேயர் விருப்பம் ← பதிவை சொடுக்கினா உங்கள் விருப்பம் நிறைவேறும்...!



இந்தப் பதிவு புதுப்பிக்கப்பட்ட நாள் : 18.10.2019

சரி DD, இப்பவே அது போல் செய்கிறேன்... அப்புறம் உங்க தளத்திலே இந்த முன்னணி பிடித்த பத்து பதிவுகள்லே இந்த லிங்கா...? (!!!)

அதை ஏன் கேட்கிறீங்க...? லிங்கா...! எப்படி...?←ன்னு பதிவின் தலைப்பை மட்டும் கொஞ்சம் மாத்தினேன்... ரசிகர்கள் இருக்கலாம்... ஆனால் இந்த சொந்த வாழ்க்கையை மறந்த சில அற்ப வெறியர்களால், முன்னணி பிடித்த பத்து பதிவுகள்லே முதல் மூன்று இடங்களில் வந்து நிக்குது...! என்னத்த சொல்றது...?!

நானும் என்னவோ நினைச்சேன்...! ஹிட் ஹிட்...! பலர் தலையிலும் ஹிட்...! நீங்க பலரையும் யோசிக்க வைச்சிட்டீங்கன்னு சொல்ல வந்தேன்...! ஹா... ஹா... லிங்காவோட முடிஞ்சி போச்சா...? இல்லே, லேட்டஸ்டா... 'தல'யை அறிந்தால்...!ன்னு இந்தப் பதிவுக்கு வைச்சிருக்கலாம்... பிச்சிக்கும்...!

நீயென்ன ? நானென்ன ? நிஜம் என்ன ? பொய் என்ன ? சந்தர்ப்பம் பெரிதாமடி...! ஏதேதோ நடக்கட்டும்... எங்கேயோ கிடக்கட்டும்... எனக்கென்ன உனக்கென்னடி ? எல்லாமும் இருந்தாலும் நல்லோரை மதிப்பார்கள் உலகத்தில் கிடையாதடி...! இன்பங்கள் துன்பங்கள் சமமாக உருவாக இது போல ஆனேனடி...! நான் பொல்லாதவன்... பொய் சொல்லாதவன்... என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்... வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன்... கை கட்டி, வாய் மூடி, யார் முன்னும், நான் நின்று - ஆதாயம் தேடாதவன்...! அந்த ஆகாயம் போல் வாழ்பவன்...!

நம்மளை நாமே மதிச்சி, மிதிச்சி வாழ்ந்தாலே ஆகாயம் தான் DD... பதில் தேவை... இல்லே நான் பொல்லாதவனாகி விடுவேன்...! சிவசம்போ...!

பிச்சிக்கிற வேலை நிறைய இருக்கு ஜி...! என் வழி ஒரே வழி...! நிழல் தொடரட்டும்... நிஜத்தை மறந்து நாமும் ரசிப்போம் ஜி...!

அதே அதே... வலைத்தள உலகம் எப்படிங்கிறதை... புரிஞ்சிகிட்டதை சொல்ல வந்தேன்...! புதுக்கோட்டை வலைத்தளப் பயிற்சிக்கு வர முடியா விட்டாலும் பதிவர் சந்திப்பிற்கு வருவேன்... இப்போ இங்கே ஒரு பயிற்சி தேவை... போன பதிவிலே கருத்துக்கணிப்பை எப்படிப் பதிவுக்குள்ளே கொண்டு வந்தீங்க...?

Poll Widget இப்போது இல்லை.. அதனால் புதிய தொழிற்நுட்பம் என்பதிலிருந்து தொடர வேண்டுகிறேன்... SCROLL please...

கருத்துக்கணிப்பு தேவையா...? Side-ல் இருந்தால் கவனத்தில் ஈர்க்காது... அதேசமயம் அரசியல், சமூகம், சமையல், சினிமா என நம்ம பதிவர்கள் அனைவருக்கும் உதவும்... இதோ : வழக்கமா Gadget சேர்க்கிற மாதிரி தான்... Layout-யை சொடுக்கி, வலதுபுறம் இருக்கும் Add a Gadget-யை சொடுக்கினால், திறக்கும் popup window-வில் Poll என்பதைத் தேடி விட்டுச் சொடுக்கினால்... கீழே இருக்கிறது போல ஒரு பக்கம் திறக்கும்... என்ன பேச்சே காணாம்... ம்... சரி...

அதில் கேள்வி, பதில்கள் மற்றும் நேரம் + எந்த நாள் வரை என்பதையெல்லாம் போட்டுட்டு, Save என்பதை கிளிக்கினால் முடிந்தது ! அடுத்து உங்க தளத்தை இன்னொரு tab-ல் திறங்க... அதில் நீங்கள் இணைத்த Gadget Side-ல் முதலில் இருக்கும்; எல்லாம் சரியா...? மாற்றமில்லையே...? அடுத்து Ctrl Key-யை அழுத்திக் கொண்டு U என்பதை அழுத்தவும்... (Source Code) அடுத்த tab-ல் கசமுசா கசமுசா-ன்னு ஒரு பக்கம் திறக்கும்... கவனிங்க ஜி: ஒரு தளத்தில் என்னென்ன சித்து வேலைகள் செஞ்சிருக்காங்க என்பதை அறியலாம்...! சிவ சம்போ....! ஹலோ... பிச்சிகிற மாதிரி ஏதும் சொல்லலையே, ஹலோ...

இப்போ பதிவில் இணைக்க வேண்டிய கருத்துக்கணிப்பு script-யை தேடுவோம்... Ctrl Key-யை அழுத்திக் கொண்டு F என்பதை அழுத்தினால் வலது ஓரத்தில் வரும் சின்ன பெட்டியில் "Poll" என்பதை டைப்பித்து என்டர் (↵) தட்டினால், பித்துப் பிடிக்காமல் அந்த இடத்தில் சென்று விடலாம்... ஐ மெர்சலாயிட்டேன்... மெர்சலாயிட்டேன்... <iframe allowtransparency என்று ஆரம்பித்து </iframe> என்று முடியும் script-யை copy செய்து கொண்டு, நமது பதிவில் paste செய்ய வேண்டியது தான்... முக்கியம் ஜி... வழக்கமாகப் பதிவு எழுதும் போது Compose பக்கத்தில் இருப்போம்... அது பக்கத்தில் இருக்கும் HTML என்பதைச் சொடுக்கி, அங்கு எந்த இடத்தில் "paste" செய்கிறோமோ, அந்த இடத்தில் பதிவில் தோன்றும்...! மறுபடியும் Compose பகுதிக்கு வந்து "labels" வகையறாக்களை இட்டு விட்டு "Publish" செய்வதற்கு முன், Side-ல் இருக்கும் கருத்துக்கணிப்பு தேவையில்லை... அதனால் மறுபடியும் Layout சென்று இணைத்த Gadget-ன் கீழுள்ள Edit என்பதைச் சொடுக்கி, Remove என்பதையும் கிளிக்கினால் போயிந்தே... Its gone... அவ்வளவு தான்...! Any Doubts Killerjee...?

ஹோஹோ... அதுக்குள்ளே செஞ்சிட்டோமில்லே... Side-ல் இருக்கிறதை மட்டும் பிறகு எடுக்கணும்... ஆனா, "Preview"வில் பார்த்தா கருத்துக் கணிப்பே காணாம்... அதே சமயம் ஒரு சின்ன மாற்றமும் செய்யணும்.. அதனாலே, Layout-சென்று அந்த Gadget-யை edit-செய்யலாம்ன்னு பார்த்தா, You cannot edit this poll because someone has already voted-ன்னு வருது...! என்ன செய்வது DD...?

அவசரப்பட்டால் அவஸ்தையாகும்... அவஸ்தை நிதானமானால் தீர்வு கிடைக்கும்... எல்லாமே சரியானது ஒரு நாள் தவறாகும்... தவறானது ஒரு நாள் சரியாகும்... நாம் அன்னப்பறவையாக மாற நாளாகும்... அச்சச்சோ... இது தொழினுட்ப பதிவு அல்லவா...? மறந்துட்டேன்... ஹிஹி... மறுபடியும் முதலிலிருந்து செய்யுங்க கில்லர்ஜி... ஏக்) Preview-வில் மட்டுமல்ல... பதிவு எழுதும் பக்கத்திலும் (Compose) தெரியாது...! அதனால் பதிவு முழுவதையும் எழுதி விட்டு, கருத்துக் கணிப்பு முடிவிற்கு வாங்க... தோ) Vote-போட்டு விட்டு ஏதேனும் மாற்றம் செய்ய நினைத்தால் முடியாது... vice versa...! தீன்) Gadget-ல் Allow visitors to select multiple answers - இதற்கு முன்னுள்ள கட்டத்தில் "டிக்" செய்தால், வாசகர்கள் இரு வேறு அல்லது அனைத்து பதில்களையும் தேர்வு செய்யலாம்... ஸார்) கேள்வி பதில்களையே மாற்றும் குழப்பமும் இங்கே தான் தொடங்கும்...

புதிய தொழினுட்பம்

ஹலோ கில்லர்ஜி, இங்கே செல்லுங்கள் https://www.websitegoodies.com/tools/poll ← இங்கேயும் சொடுக்கலாம்...! அங்குக் கேள்வியையும், அதற்கான 10 பதில்களையும் இட்டு விட்டு, Create My Poll Widget என்பதைச் சொடுக்குங்கள்... Copy and paste this code into your website's code where you want the poll to appear: என்பதற்குக் கீழுள்ள script-யை நகல் எடுத்துச் சேமித்துக் கொள்ளவும்... வழக்கமாகப் பதிவு எழுதும் போது Compose view பக்கத்தில் இருப்போம்... அதாவது நாம் பதிவு எழுதும் பக்கத்தில் இடதுபுறம் மேலே முதல் Icon <> ▿ என்றிருக்கும்... அது Compose view மற்றும் HTML view பக்கங்களுக்கு மாறுவதற்கான Icon... அதைச் சொடுக்கி HTML view தேர்வு செய்துவிட்டு, சேமித்து வைத்த script-யை, பதிவில் எந்த இடத்தில் "paste" செய்கிறோமோ, அந்த இடத்தில் தோன்றும்...! மறுபடியும் Compose view-க்கு மாறிவிட்டு தொடர்ந்து பதிவை எழுதலாம்...



© நினைத்தாலே இனிக்கும் கண்ணதாசன் M.S.விஸ்வநாதன் 🎤 M.S.விஸ்வநாதன் @ 1979 ⟫

மனிதா உன் ஜென்மத்தில் எந்நாளும் நன்னாளாம்... மறுநாளை எண்ணாதே எந்நாளும் பொன்னாளாம்... பல்லாக்கைத் தூக்காதே பல்லாக்கில் நீயேரு... உன்னாயுள் தொண்ணூறு எந்நாளும் பதினாறு... டும் டும் ட டி டி ட டி டி... டும் டும் ட ட டி ட ட ட... டும் டிம் டும் டும்... ட ட டி... ஜகமே தந்திரம்... சுகமே மந்திரம்... மனிதன் எந்திரம்... சிவசம்போ...! நெஞ்சம் ஆலயம்... நினைவே தேவதை... தினமும் நாடகம்... சிவசம்போ...!

நினைத்தாலே இனிக்கிறது ஜி... நன்றி...
நண்பர்களே தங்களின் கருத்து என்ன... ?

மேலும் சந்தேகம் இருந்தால் தொடர்பு கொள்ளவும்...
dindiguldhanabalan@yahoo.com


நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. பதிவில் பல விசயத்தை கற்றுக்கொடுக்கிறீர்கள். மிக்க நன்றி..

    பதிலளிநீக்கு
  2. பாட்டோட சொல்லிக் கொடுக்கறது சூப்பர்தான். நமக்குத்தான் (எனக்கு....எனக்கு) இதை எல்லாம் செய்யப் பொறுமை இல்லையே...!!!!

    :)))))))))

    பதிலளிநீக்கு
  3. அவசரப் பட்டால் அவஸ்தையாகிவிடும் என்பது புரிகிறது
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. இணைந்தே இருப்பது பாடலுடன் பதிவு
    பயனுள்ள பிளாக்கர் தகவல்கள் அசத்தல் டிடி

    பதிலளிநீக்கு
  5. டி.டி சார். உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் எனப் பலமுறை நினைத்ததுண்டு.வீண் தொந்தரவாய்ப் போய்விடுமோ எனப் பலமுறை நினைத்துக் கொண்டு அமைதி ஆகிவிடுவேன்.
    என்ன ஆனாலும், தமிழ் வலையுலகத்திற்கு நீங்கள் ஆற்றும் உதவியும், என்னைப் போன்ற புதிய பதிவர்களுக்கு நீங்கள் கொடுக்கும் ஊக்கமும் மிகப்பெரிது.
    அதற்கு நன்றி என்பது சிறு வார்த்தைதான்.
    நன்றி
    த ம கூடுதல் 1

    பதிலளிநீக்கு
  6. பாட்டாலே புத்தி சொன்னார் என்பது போல - பாட்டாலே பதிவின் தன்மை சொன்னார்!.. திண்டுக்கல் (தேவ) கோட்டை என்றாலும் தேவ கோட்டை(திண்டு)க் கல் என்றாலும் ஒரே அர்த்தம் வருகின்றதே.. ஜீ!.. அது எப்பூடி!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா ஜி, தேவலோக ‘’கோட்டை’’ கட்டுவதற்க்கு ‘’முண்டு’’ க்கல்லுகள் திண்டுக்கலிலிருந்துதான் தேவகோட்டை வந்ததாக அரபு நாட்டு பாடப்புத்தகங்களில் பார்த்திருக்கிறேன்.... குவைத் நாட்டு பாடபுத்தகத்தில் இல்லையோ ?

      நீக்கு
  7. தொழில் நுட்பம் போரடிக்கிற சப்ஜெட் ,அதையும் இந்த மரமண்டையிலும் ஏறுகிற மாதிரி சொன்ன விதத்தை ரசித்தேன் :)
    த ம 1

    பதிலளிநீக்கு
  8. அருமையான பதிவு அண்ணே ! தொடருங்கள் தொடர்கிறோம் .
    தம+

    பதிலளிநீக்கு
  9. தெரியாததை தெரிந்து கொள்ளுமிடம்..அனைவருக்கும் ...வாழ்க! வளர்க!! வாழ்த்துக்கள்.!!!

    பதிலளிநீக்கு
  10. உங்கள் பதிவே பாட்டோட கலகலப்பாக எங்களுக்கு புரிய வைக்கும். இதுல ஜி வேற சேர்ந்த்து விட்டார்....கலகலப்பு...கூடி விட்டது.

    நல்ல பயனுள்ளதை பகிர்கிறீர்கள்....ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்து புரிந்து கொள்ளணும்....அப்புறம் செய்து பார்க்கிறேன். நன்றி

    தம 13

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கமாக ஜி in பதிவுகள் எல்லாமே சிறப்பாகவே இருக்கும், நான் வந்ததால் சிறப்பில்லை, அவர் என்னை இழுத்து விட்டதுதான் எனக்கு சிறப்பு நன்றி சகோ.

      நீக்கு
  11. பயனுள்ள பகிர்வு டிடி நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. ஸ்ரீராம் சொன்னதை வழி மொழிகிறேன்.

    அற்புதமாக வலைத்தளம் பற்றிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறீர்கள் சகோ. ஆனால் நேரமின்மை அல்லது பொறுமையின்மையால் அதை எல்லாம் செயல்படுத்துவதில்லை. ஆர அமர ஒரு நாள் உக்கார்ந்து இதையெல்லாம் ப்லாகில் போடணும்னு நினைக்கிறது

    உங்க அடுத்த பதிவு வரும்போதுதான் ஞாபகம் வரும். திரும்ப இதே தொடர்கிறது. என் எல்லா பதிவுகளையும் படித்துப் பின்னூட்டம் இடும் உங்களுக்கு மிக்க நன்றிகள் சகோ

    அதுவும் நேற்று இட்ட பின்னூட்டம் பார்த்து இன்னும் சிரித்துக் கொண்டே இருக்கிறேன். இரண்டாவது வந்த கவிதை என் தோழி உமா எழுதியது :)

    பதிலளிநீக்கு
  13. வழக்கம் போல் பாட்டோடு பாடம் (தொலை தூர தொழில் நுட்ப கல்வி!) நடத்தியுள்ளீர்கள். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Mr. D.D. தொலைதூர தொழில் நுற்ப கல்வி நடத்தியது தொலைவில் இருக்கும் எனக்குத்தான் நண்பரே...

      நீக்கு
  14. நாங்க இப்பத்தான் வந்து இருக்கோம். கொஞ்சம் மெதுவாகதான் போகனும். சரியா? ரொம்ப நன்றி.

    பதிலளிநீக்கு
  15. லிங்கா, தல என்று லேட்டஸ்ட் சினிமா, கருத்துக் கணிப்பு என்று அரசியல் ....! நீங்கள் சொல்லிக் கொடுப்பதை மிகவும் சுவாரஸ்யமாகப் பண்ணிவிடுகிறீர்கள், DD!
    பாராட்டுக்கள்!

    பதிலளிநீக்கு
  16. நகைச்சுவை,தொழில்நுட்பம், கருத்துரை,எல்லாம் கலந்த சிறந்தபதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஜி,
    பயனுள்ள நல்லதொரு பதிவுக்கு இந்த அப்பாவியையும் உபயோகப்படுத்தி இருக்கீங்க நன்றிகள் பல... 4 பேரு நல்லா இருக்கலாம்னா எதுவும் செய்யலாம் அதுல இதுவும் செய்யலாம்னு நிரூபிச்சுட்டீங்க... வழக்கம்போல பாடல்களும் அருமையான தேர்வு, புதுமையான முயற்சிக்கு வாழ்த்துகள்

    தமிழ் மணம் –அப்புறமாட்டிக்கி வாறேன்
    நன்றி.
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  18. ஜி இந்த சிறப்பான பதிவில் என்னையும் இணைத்தமைக்கு தமிழ் மணம் வாக்கு 100 போட ஆசையாக இருக்கு ஆனால் ? வடிவேலு பாணியிலே சொன்னால் முடியலே.... அதனாலே 2 வாரத்தை கணக்கு பண்ணி 14 போட்டேன். எப்பூடி ?

    பதிலளிநீக்கு
  19. பதிவர்கள் அனைவருக்கும் பயனுள்ள பதிவு. கூடவே பாடல்களும் அமர்க்களம்.

    பதிலளிநீக்கு
  20. கருத்து கணிப்பு வைக்க முயற்சித்துக்கொண்டு இருக்கிறேன் ஜி

    பதிலளிநீக்கு
  21. நுட்பமிகு நுண்ணறிவு பதிவு
    தெரியாததை தெளிவுற்றேன்!
    நன்றி DD (வார்த்தைச் சித்தர்)
    நட்புடன்,,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
  22. நண்பரே என்னைப்பொருத்தவரை கருத்துக்கணிப்பு அவசியம் வேண்டும் 80தே...
    காரணம் சில பதிவர்கள் அரசியல் பதிவு எழுதுகிறார்கள் அப்பொழுது சில விடயங்களுக்கு பதிவர்களிடமிருந்து வினாவிற்க்கு விடை கிடைக்க வழி வகுக்கும்.

    குறிப்பாக தங்களைப்போன்றவர்கள் கொடுக்கும் தொழில் நுற்ப பதிவுகளுக்கு இது பதிவர்களால் அங்கீகரிக்கப்படுகிறதா ? 80தை உடனுக்குடன் எலக்ஷன் ரிசல்ட் போல கிடைக்கிறது.

    கடந்த புத்தக வாசிப்பு 80
    இது நல்ல சஸ்பென்சாக இருந்தது மேலும் நான்
    (அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்க்காக....)
    இதில் வாக்களித்து விட்டு ரிடல்ட் வரும் அந்த இரண் நொடியும் ஆர்வமாக இருந்தது காரணம் நமது சிந்தனையும் மற்றவர்களைப்போல ஒத்துப்போகிறதா ? 80தை அறிய ஆவலாகவும் இருக்கிறது.

    அட... சும்மா... பொழுதுபோக்கிற்காக... 1 (2%)

    இரவில் தூக்கம் வர உதவும் தூக்க மாத்திரையாக... 1 (2%)

    அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்காக... 32 (72%)

    மன இறுக்கத்தை நீக்கி எழுச்சி பெறும் எண்ணத்திற்காக...

    இது தங்களது பதிவுக்கு அவசியமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் (அறிவை மேம்படுத்தும் தேடுதலின் ஆர்வத்திற்காக....)
      இதில் வாக்களித்து விட்டு
      ஓட்டு போட்டுவிட்டு அந்த ரகசியத்தை வெளியில் சொல்லிவிட்டார் அதனால் தேர்தல் செல்லாது செல்லாது.

      நீக்கு
  23. கணினி பற்றி உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

    நன்றி தனபாலன்.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம்
    அண்ணா.
    நிச்சயம் முயற்சித்து பார்க்கிறேன்... நல்ல தகவலை தொகுத்து வழங்கியமைக்கு நன்றி.
    த.ம12
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  25. பயன் உள்ள தகவல். இதை என் தளத்தில் நிறுவுவது என்றால் மிகவும் கடினம்போல முயற்ச்சிப்போம் அண்ணாச்சி.கில்லர் ஜீ மூலம் நானும் தெளிவு பெற்றேன்.

    பதிலளிநீக்கு
  26. நிறைய சொல்லித் தருகிறீர்கள்.
    நன்றி
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  27. கருத்து சொல்லவே வழியில்ல
    இதுல எங்க இருந்து கருத்து கணிப்பு சொல்றது.
    அப்படியே நாங்க கருத்து சொன்னாலும் அடுத்து 5வது நிமிசமே ஆட்டோ வந்துடுமே. (தமாசு)
    நன்றி அய்யா

    பதிலளிநீக்கு
  28. நிறய நல்ல தொழில்நுட்ப தகவல்கள்... நன்றி .. சிரித்துக்கொண்டே படித்தேன் .. தம+

    பதிலளிநீக்கு
  29. நல்ல பாட்டுக்கள் பகிர்வோடு பய்னுள்ள தகவல்.
    வாழ்த்துக்கள்.
    நீங்கள் அனைவருக்கும் கற்றுத்தருகிறீர்கள். என்னை போன்றவர்களுக்கு பயனுள்ளது.

    பதிலளிநீக்கு
  30. கற்றுக்கொடுப்பது என்பது உயர்ந்த பணி உன்னத சேவை.. பயனுள்ள தகவல்கள் டிடி நன்றி

    பதிலளிநீக்கு
  31. பயனுள்ள பகிர்வு.பாடல்களுடன் பகிர்வு அருமை.

    பதிலளிநீக்கு
  32. கணனி பற்றி நிறைய தாங்கள் பகிர்ந்தாலும்.“ எனக்கு போதும் என்ற மனமே பொன் போன்ற மருந்து.”..என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  33. இந்த பதிவையும் கொஞ்சம் அவசரப்படாமல் பொறுமையா படிக்கணும்னு நினைக்கிறேன்! சிறப்பான தொழில்நுட்ப பதிவு! அனைவருக்கும் புரியும் படி சொல்லுவதில் உங்கள் சிறப்புத்தன்மை இருக்கிறது! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு
  34. அட...தங்கள் இருவருக்கும் பின்னால் நானு....!!! இப்பத்தான் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு

  35. கருத்துக் கணிப்பு பற்றிய விளக்கம் அருமை... நானும் ட்ரை பண்றேன்.

    பதிலளிநீக்கு
  36. கருத்துக் கணிப்பு தேவையா..??? முடிவு என்னவென்று தெரியலையே...

    பதிலளிநீக்கு
  37. நூறாண்டு சாதனை மாதிரி.. தங்கள் பதிவும் அடுத்த பதிவு வரும்வரை சாதனை படைத்துக் கொண்டே இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  38. நல்ல பகிர்வு. சில சமயங்களில் கருத்துக் கணிப்பு வலையில் இணைத்ததுண்டு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.