🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



மூடன்... அறிவாளி... ஏமாளி...

ஆசை ஒரு நீரோட்டம் நில்லாம ஓடும்... உள்ளுக்குள்ளே ஏதேதோ சங்கீதம் பாடும்... ஒன்னாக கலந்த உறவுதான்... எந்நாளும் இன்பம் வரவுதான்... இது காதல் என்கிற கனவு... தினம் காண எண்ணுற மனசு... இது சேர துடிக்குற வயசுதான்... வாழ்க்கையே கொஞ்சக் காலம்தான்... இந்த வாழ்க்கையில வாலிபம் கொஞ்ச நேரம்தான்...

© பாலைவன ரோஜாக்கள் கங்கை அமரன் இளையராஜா 🎤 இளையராஜா @ 1986 ⟫



வர வர உன் புலம்பல் தாங்க முடியலே மனசாட்சி... போன பதிவுலே என்னடான்னா துறவியாகப் போகிறேன்னு பயமுறுத்துறே... இப்ப என்னடான்னா வாலிபம் கொஞ்ச நேரம்தாங்கிறே... கொஞ்சுகிற நேரம் கொஞ்சம் தான்... வாழ்க்கையிலே கெஞ்சுகிற நேரம் தான் இருக்கக்கூடாது... நான் சொல்வது நம்மகிட்டேயே... 20 வயது வரை சாப்பிடுவதற்காக வாழு... 20 வயதிற்குப் பின்னால் வாழ்வதற்காகச் சாப்பிடு... இல்லேன்னா நம்ம உடம்புகிட்டேயே நாம கெஞ்சணும்...! வயது பற்றி உன் அபிப்பிராயம்...?

'டக்'ன்னு பொய் சொல்ல வைக்கும் கேள்வி எல்லாம் கேட்கப்படாது... சரியா...? "வயசாயிடுச்சி" இந்த நினைப்பே தளர்ச்சியை ஏற்படுத்தும்... க்கும்... க்கும்... மனதிற்கு வயதில்லை...! அடப்பாவி...! 40 என்பதை 20 ஆக்கிட்டே...! ம்... அதுவும் சரி தான்... நீரழிவு குறைபாட்டில் உலகில் முதலிடம்; இப்போ மாநிலங்களுக்குள்ளே போட்டி...! ம்... விவசாயம் அப்படி...! சாப்பாடு அப்படி...!

இந்த அளவு அளவு என்பதை நாக்கிற்கு யாரும் சொல்லித் தருவதில்லை... உடம்பு ஒரு நாள் சொல்லித் தரும்... இன்றைய உணவைச் சாப்பிடும்... கவனி→படிப்பறிவே இல்லாத பெரியவங்க கூட இன்னைக்கும் சும்மா "கிண்"ன்னு இருக்காங்களே... ஏன்...? இருக்கும் வரை உழைப்பு...! அதனால் மனதும் "கிண்"...! அவர்களால் சும்மா இருக்க முடியாது... அழகான உலகை அற்புதமாக ரசிக்கிறார்கள் அதிகாலையிலிருந்து...! ஆமா உழைப்பு விடச் சிறந்த படிப்பு இருக்கா...?

நமக்குத் தூக்கமே சொர்க்கம்... பிறகு துக்கம்...! ஹிஹி... நேத்து பக்கத்து வீடு குறுகுறு-குறும்பு பையனிடம், "என்ன படிக்கிறாய்...?" என்று கேட்டேன்... L.K.G.ன்னு சொல்லிட்டு, "இன்னும் எதுவரை படித்தால் படிப்பு முடியும்...? படிப்பிலேயே உச்சமான படிப்பு எது...? அதைப் படிக்க இன்னும் எத்தனை வருசமாகும்...?" அப்படின்னு நான் கேட்ட ஒரு கேள்விக்கு, அவன் பல கேள்விகள் கேட்டுட்டான்... ஸ்... யப்பா... முடியலே...!

L.K.G. படிக்கத் தொடங்கும் போதே, வெவரமான + வெவகாரமான கேள்விகளை இன்றைய குழந்தைகள் கேட்பதில் வியப்பில்லை... படிப்புக்கு எல்லை உண்டு... இளங்கலை, முதுகலை பிறகு முனைவர் பட்ட ஆராய்ச்சி என்று படிப்புக்கு எல்லை உண்டு; ஆனால் கல்விற்கு எல்லை கிடையாது...

என்னது படிப்பு : கல்வி - இரண்டும் வேறு வேறா...?

பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று படிப்பதும் கல்வி தான்... ஆனால் அவை எல்லாம் எல்லைக்கு உட்பட்ட, ஒரு வட்டம் போட்டுப் படிக்கிற படிப்பு... இன்னும் இதற்குப் பாடத்திட்டம் உண்டு... பரிச்சை உண்டு... குழந்தைகளை... இல்லை இல்லை பெற்றோர்களைப் பாழாக்கும் Pass, Fail உண்டு... தேர்வானதுடன் படிப்பும் முடிந்து போகும்... கல்வி என்பது அப்படிப்பட்டது கிடையாது... அது பரந்து விரிந்தது... நம்முடைய ஆர்வமும் விருப்பமும் விரிவடைய விரிவடைய நமது கல்வியும், கற்கும் காலமும் விரிவடையும்... அதனால் தான் ஒரு தலைமுறையில் கற்ற கல்வியின் அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் உதவும் என்று சொன்ன ஐயன், "ஒவ்வொரு மனிதனும் சாகும்வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்..?" என்று கேட்கிறார் இங்கு :-
யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
(397)

G. M. பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் முந்தைய பதிவு கருத்துரையில் சொன்னது போல் திருக்குறளும், திரைப்படப் பாடல்களும்... அதாவது உன் ஸ்பெசாலிட்டி இல்லாமல் ஒரு பதிவு எழுதுவதென்பது கொஞ்சம் சிரமம் போலிருக்கே...! கதை எதுவும் சொல்லாமல் இருக்கே... இருக்கா...?

எத்தனை உடல் உபாதைகள் இருந்தாலும், ஒற்றை விரலால் பகிர்ந்து கொண்டிருக்கிறாரே... அவரின் ஆர்வத்தையும் முயற்சியையும் என்னவென்று சொல்வது...? வலைத்தள உலகம் பொருத்தமட்டில் தனது அனுபவ பகிர்வுகள் பிறர்க்குப் பாடங்களாக... வாழ்க்கைக்குப் பாதை காட்டும் வழிகாட்டிகளாக... கருத்துரையால் ஊக்குவிக்கும்... இவ்வளவு ஏன்...? தொழினுட்பத்திலும் பல முயற்சிகள் செய்கிறார்கள்... அப்புறம் குறளின் சிறப்பை சொல்வதோ, அதில் இல்லாதது எதுவுமில்லை என்று சொல்வதோ எனது நோக்கமல்ல... குறள்களின் படி வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்... ISO வகுப்பு எடுக்கும் போது உதவின குறள்கள்... அது வேறு கதை...(!) இப்போ ஒரு உண்மை நிகழ்வைச் சொல்லட்டுமா...?

சுவாமி இராம தீர்த்தர் ஒருமுறை ஜப்பானுக்குக் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்த போது, ஒரு ஜப்பானிய முதியவர், கண்களில் ஒரு தடித்த கண்ணாடியைப் போட்டுக் கொண்டு, தட்டுத்தறுமாறி எதையோ படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார்... "என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்டார்... அதற்கு "சீன மொழி கற்றுக் கொள்ள வேண்டுமென்று நீண்ட நாட்களாக ஆசை... அதனால் தான் அந்த மொழியைத் திரும்பத் திரும்பப் படித்து, எழுதிப் பார்க்கும் முயற்சியை ஈடுபட்டுக் கொண்டிருக்கிறேன்" என்றார் முதியவர்.... "மற்ற எந்த மொழியை விடவும் சீன மொழியைக் கற்றுக் கொள்ளக் கடினம் என்கிறார்களே..." என்று கேட்டார் இராம தீர்த்தர்... "கடினமான மொழி என்பதற்காகக் கற்றுக் கொள்ளாமல் இருக்க முடியுமா...?" என்றார் முதியவர்... "சீன மொழியைக் கற்றுக் கொள்ளப் பல வருடங்களாகும் என்கிறார்கள்... மிகுந்த பலவீனமான உடல்நிலையில், கைகால்கள் எல்லாம் சொன்னபடி கேட்காத நிலையில் இருக்கிறீர்கள்... உங்களைப் பார்த்தால் வயது தொண்ணூறைத் தாண்டியவர் போலத் தோன்றுகிறீர்கள்... இந்த இறுதிக் காலத்திலும் இம்முயற்சி தேவையா...? என்று கேட்டார் இராம தீர்த்தர்... ஜப்பானிய முதியவர் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மடித்து வைத்துக் கொண்டு, கண்களை அகல விரித்து சுவாமி இராம தீர்த்தரைப் பார்த்து :-
"வாழ்க்கை என்பது தங்குதடையற்ற ஒரு பிரவாகம்... தொடர்ந்து நீரோட்டம் இருந்து கொண்டே இருக்க வேண்டும்... வாழ்க்கை நீரோட்டத்தில் ஓய்வு என்பதே இல்லை... நீரோட்டம் நின்று போனால், அது நதியாக இருக்க முடியாது... நமது வாழ்க்கை நீரோட்டத்தில் எப்போதும் புதிய புதிய முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்க வேண்டும்... அப்போது தான் வாழ்க்கையில் மகிழ்ச்சி குறையாமல் இருக்கும்... வயது ஏறுகிறதே என்று வருத்தப்படாமல், முயற்சியும் உழைப்பும் குறையாமல் இருக்கிறதே என்று மகிழ்ச்சிப்பட வேண்டும்... அப்போது தான் வாழ்க்கையும் இனிக்கும்... ஆயுளும் நீளும்"


ஒருவனுக்கு ஒருத்தியென்ற உயிர்மூச்சை உள்ளடக்கி...

அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை
அஃதும் பிறன்பழிப்ப தில்லாயின் நன்று


எனும் திருக்குறளை மறவாதே... விதி தவறிப் போகாதே... வாழ்க்கை என்னும் ஓடம் - வழங்குகின்ற பாடம் - மானிடரின் மனதினிலே மறக்கவொண்ணா வேதம்... வாலிபம் என்பது தணிகின்ற வேடம் - அதில் வந்தது வரட்டும் என்பவன் முழு மூடன்... வருமுன் காப்பவன் தான் அறிவாளி - புயல் வருமுன் காப்பவன் தான் அறிவாளி - அது வந்த பின்னே தவிப்பவன்தான் ஏமாளி...! துடுப்புகள் இல்லா படகு - அலைகள் அழைக்கின்ற திசையெல்லாம் போகும்... தீமையைத் தடுப்பவர் இல்லா வாழ்வும் - அந்தப் படகின் நிலைபோலே ஆகும்2 (படம் : பூம்புகார்)


© பூம்புகார் மு.கருணாநிதி R.சுதர்சனம் 🎤 K.B.சுந்தராம்பாள் @ 1964 ⟫

மகிழ்ச்சியும் ஆயுளும் ஆர்வமாகக் கற்றுக் கொள்வதின் மூலம் நீளும் என்றால், கற்றுக் கொள்வதை எல்லாத் துறைகளிலும் உருவாகிக் கொள்வோமே நண்பர்களே... தங்களின் கருத்து என்ன... ?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. வாழ்க்கை முழுசும் கல்விதான். அதான் கற்றது கைம்மண் அளவு. கல்லாதது உலகளவுன்னு சொல்லிவச்சுட்டுப் போயிருக்காங்க!

    கற்போம் கற்போம் மூச்சு நிற்கும்வரை கற்போம்.

    பக்கத்துவீட்டுப் பொடியன் ரொம்பவே விவரமால்ல இருக்கான்:-))))

    பதிலளிநீக்கு
  2. படிப்புக்கு எல்லை உண்டு. ஆனால் கல்விக்கு எல்லை கிடையாது என்று சொல்வதை விட கற்பதற்கு எல்லை கிடையாது என்று சொல்வது இன்னமும் பொருத்தமாக இருக்குமோ?

    மறுபடியும் பாடல் மற்றும் குறளுடன் கலக்கிய பதிவு!

    பதிலளிநீக்கு
  3. சிறந்த எண்ணங்கள்
    சிந்திக்க வைக்கும் கருத்துகள்
    நல்ல வழிகாட்டல்
    தங்கள் கைவண்ணம்
    என்றும்
    நல்லெண்ணங்களைப் பகிரட்டும்!

    பதிலளிநீக்கு
  4. கல்விக்கு ஏது எல்லை
    உழைப்பும் முயற்சியும் தொடர்ந்தால்
    வாழ்வு இனிக்கும்
    அருமை ஐயா
    அனைவரும் உணர வேண்டிய உன்னத வரிகள்
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  5. வாவ் ! அட்டகாசமான பதிவு அண்ணா . கல்விக்கும் படிப்புக்குமான விளக்கம் அருமை .இம்முறை ஒரே குறளோடு நிறுத்திவிட்டீர்கள் ???

    தம+

    பதிலளிநீக்கு
  6. அடுத்தவங்களை அன்போடும் அக்கறையுடனும் பாராட்டுவது உதவி செய்வது

    பதிலளிநீக்கு
  7. LKG படிக்கும் குழந்தைகளுக்கு பதில் சொல்வதென்றால் நாம் ஒரு ஜீனியர்ஸ்ஸாகத்தான் இருக்கவேண்டும் அப்போதுகூட அவர்களின் கேள்விக்கு பதில் அளிக்க முடிவதில்லை...

    இன்றை கல்விக்கு ஆழமும் அகலமும் அதிகமாகிக்கேண்டே இருக்கிறது தாங்கள் சொன்னதுபோல் வேலைவாங்க படிப்புக்கு எல்லைகள் போதும் ஆனால் வாழ்க்கைக்கு தேவையான படிப்பினை பெற நாம் வாழ்நாள் முழுவதும் படித்துக்கொண்டேதான் இருக்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  8. சீனபெரியவர் கதை.. நல்லதொரு சிறுகதை....

    வாழ்க்கை என்பது ஒரு ஓட்டம் தான் எதற்காகவாது ஓடிக்கொண்டே இருக்குவேண்டும் அப்போதுதான் வாழ்க்கையும் ஓடிக்கொண்டிருக்கும் அப்படி நம்மால் முடியவில்லையென்று ஓட்டத்தை நிறுத்தினால் அங்கே வாழ்க்கையும் நின்று விடுகிறது...

    முயற்சிக்கும், பயற்சிக்கும் வயது வித்தியாசம் இல்லை வாழ்நாள் முழுவதும் இது இருக்குவேண்டும்

    நல்லதொரு பதிவு.... வாழ்த்துக்கள்... DD

    பதிலளிநீக்கு
  9. படிப்பதற்கோ, கற்றுக்கொள்வதற்கோ வயது தடையில்லை என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன். தவிரவும் பல நண்பர்கள் அவ்வாறு மேற்கொண்டு சாதனைகளைப் புரிந்துள்ளதையும் கண்டுள்ளேன். எங்களது பல்கலைக்கழகத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெரியவர் முனைவர் பட்ட ஆய்வு (PhD) மேற்கொண்டு பட்டம் பெற்றார். அவர் அந்த ஆய்வில் காட்டிய ஆர்வம் எங்களை பிரமிப்புக்குள்ளாக்கியது.

    பதிலளிநீக்கு
  10. மிக மிக அருமையான பதிவு டிடி! நாங்களும் இதை ஒரு பதிவில் சொல்லியிருந்தோம்...அதாவது படிப்பு என்பது வேறு கல்வி என்பது வேறு. தாங்கள் சொல்லி இருப்பது போல் படிப்பு என்பது எல்லைக்கு உட்பட்டது. ஆனால் கற்றல்/கல்வி என்பது நம் மரணம் வரை, நமது மூளைத்திறன் நன்றாக இருந்தால், தொடரும் ஒன்று. நம் அனுபவப் பாடங்கள் நமக்குக் கற்பிப்பது பல. ஆனால், நாம் பொதுவாக மனிதர்கள் ஏட்டுச் சுரைக்காய் போல பட்டங்கள் பெறுவதிலும், பணம் ஈட்டுவதிலும் முனைப்பாக இருக்கின்றோமே தவிர, கற்பதில் பின் தங்கித்தான் உள்ளோம். கல்விக்கு/கற்பதற்கு, பட்டங்கள் அவசியமில்லை. கற்பது எல்லையற்ற ஒன்று அது.

    பதிலளிநீக்கு
  11. படிப்பு என்பதும் கல்வி என்பதும் வேறு வேறு தான்!..

    பணம் சேர்ப்பதற்கான படிப்பினால் -
    கரையேறுவதற்கான கல்வியை கை விட்டோம்!..

    ஐயன் வள்ளுவர் கூறியதைப் போல -
    பல கற்றும் கல்லாதவராகவே இருக்கின்றோம்!..

    நல்ல கருத்தினை வலையேற்றியமைக்கு மகிழ்ச்சி!..
    வாழ்க நலம்!..

    பதிலளிநீக்கு
  12. மிகச் சரியான பதிவு.

    Learning is a continuous process என்பது மிக மிக உண்மையானதுதான். இது மட்டும் ஒருவனுக்கு இல்லாவிட்டால் காலமே அவனை அவனது இறப்பிற்கு முன்பே "இறப்பித்து" விடும். இருந்தும் இல்லாததற்குச் சமமாகி விடுவான்.

    இதுதான் தலைமுறைகளுக்கு தங்களது மூத்த தலைமுறையை ஒதுக்க ஒரு இலகுவான காரணமாகவும் அமைந்து விடுகிறது.

    "டக்குனு பொய்செல்ல வைக்கிற கேள்விகளாய் கேட்கப்படாது.." உண்மைதான். மனம் விட்டு சிரித்தேன்.

    God Bless You.

    பதிலளிநீக்கு
  13. வெகு அருமையான பதிவு.வரும்முன் காப்போம், ஆயிள் முழுவதும் ஏதாவது கற்றுக் கொண்டு இருப்போம்.
    நன்றி, வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. மிக அத்யாவசியமான பதிவு சகோ. மனச்சோர்வு ஏற்படும்போது இதை ரெஃபரென்ஸாக பார்த்துக்கலாம்.

    கற்பதற்கு வயது தடையில்லை என்றும் அதுதான் வாழ்க்கையை சுவாரசியமாக வைக்கிறது என்றும் கூறியதற்கு ஒரு சபாஷ். :)

    பதிலளிநீக்கு
  15. நல்ல பகிர்வு ...
    உண்மை சம்பவம் பிரமாதம் ..

    பதிலளிநீக்கு
  16. படிப்பு, கல்வி நல்ல விளக்கம். நன்றி

    பதிலளிநீக்கு
  17. கற்றுக்கொள்வதற்கு எல்லா காலமும் உண்டு. நாம் தயாராக இருந்தால். நல்லதொரு பதிவு. அய்யன் வாக்கு படி நடப்பது முயற்சிபது நமக்கு நலமே.

    பதிலளிநீக்கு
  18. கற்பதற்கு வயதுமில்லை. எல்லையுமில்லை.கற்றது கைம்மணளவு என்பார்கள். நான் கடுகளவு என்பேன். ஒவ்வொருவருக்கு எழுதவென்றே ஒரு பாணி வைத்துக் கொண்டுள்ளார்கள். உங்கள் பாணியில் நீங்கள் கலக்குங்கள் டிடி.

    பதிலளிநீக்கு
  19. கற்றுக் கொள்வதற்கு வயது தடையில்லை. எத்தனை விஷயங்கள் இருக்கின்றன கற்க. ஒன்று மற்றொன்று என கற்க கற்க உற்சாகமும் தன்னம்பிக்கையும் வாழ்வில் தொடர்ந்து கொண்டே இருக்கும். வயது ஆகிவிட்டது என்பதை நினைக்காமல் இருத்தலே பலம். கதை அருமை.
    நல்ல பதிவு சகோ. கலக்குறீங்க.

    தம வை காணவில்லையே ?

    பதிலளிநீக்கு
  20. மன்னிக்கவும் அய்யா. தவறுதலாக தம குறிப்பிட்டுவிட்டேன்.

    பதிலளிநீக்கு
  21. கற்றுக்கொள்ள வயது தடையில்லை என்பதை அழகிய கதை வழியாக விளக்கியுள்ளீர்கள்...

    பதிலளிநீக்கு
  22. sir ,just great.Life is a continuos process of learning,knowing,experimenting.sharing and developing further.One has to feel the pleasure of this and any amount of explanation will not be sufficient.

    பதிலளிநீக்கு
  23. படிப்புக்கு எல்லை கிடையாது 80. 100/100 உண்மையே நண்பரே..
    வாழ்க்கை முழுவதும் எதையாவது படித்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஜப்பான் பெரியவரின் கொள்கையே என்னுடைதும் நானும் ஒரு பாலஸ்தீன நண்பனிடம் சீன மொழி படிப்பேன் எனச்சொல்லி 5 வருடங்கள் கடந்து விட்டது.

    நேரமின்மை காரணமாக இன்னும் தொடங்கவே இல்லை தங்களது பதிவை படித்ததும் எனக்கு அந்த நினைவுகள் வந்து விட்டது எனக்காக இல்லாவிட்டாலும் அவன் என்னை கேலி செய்வதை தடுப்பதற்காகவாவது இனியெனும் முயற்சி எடுப்பேன்.

    வழக்கம் போல வள்ளுவனின் குறளோடு குரல் கொடுத்து ஐயா திரு. ஜியெம்பி அவர்களையும் குறிப்பிட்டது பெருமைக்குறிய விடயம்.

    மனம் இளமையாக இருந்தாலே வயதும் இளமையாக இருக்கும் என்னைப்போல என்றும் 16 வயதாக...

    நன்றி.
    கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
  24. ஏட்டுக் கல்வி கறிக்கு உதவாதுன்னு சொல்வது்....???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படின்னா செயலுக்கு கொன்டு வா. நீ படித்தால் மட்டும் போதாது அதை செயல் படுத்து.

      நீக்கு
  25. கல்வி என்பது பள்ளியில் மட்டும் இல்லை அது அங்கும் எப்போதும் எல்லா இடத்திலும் உது அதனி உணரர்ந்தவன் சந்தர்ப்பம் வாய்க்குபோதேல்லாம் கல்வியை பெறுகிறான்.சிலர் பட்டம் பல பெற்றும் அறிவற்ற மூடராகவே வாழ்கின்றனர்.
    குரலும் குட்டிக்கதையும் அருமை

    பதிலளிநீக்கு
  26. சிறப்பான சிந்தனை.....

    கதை மிகவும் பொருத்தமாகவும் பிடித்ததாகவும் இருந்தது....

    பதிலளிநீக்கு
  27. வணக்கம்
    அண்ணா
    கல்விக்கு வயது தடைஏதேது... உயிர்இருக்கும் வரை கல்வி கற்க முடியும்... அருமையான கருத்துக்கள் மூலம் தெளிவாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி.த.ம16
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  28. கற்பதும் கற்பிப்பதும் தவறில்லை.
    அதற்கு வயதும் தேவையில்லை.
    டிடிக்கு அதுபற்றி கவலயில்லை.
    ஏனெனில் அவர் எங்க (இல்லையில்லை) நம்ம
    வீட்டு பிள்ளை.

    பதிலளிநீக்கு
  29. சிறப்பான தத்துவத்தை குறள் மற்றும் குட்டிக்கதை மூலம் அழகாக விளக்கிவிட்டீர்கள்! சிறந்த பதிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. உங்க பதிவில் இருந்தும் புதிய பாடம் படித்துக் கொண்டேதான் இருக்கிறேன் ,வாத்தியார் அய்யா :)
    த ம +1

    பதிலளிநீக்கு
  31. இறக்கும் வரை மனிதன் மாணவன் தான்!

    பதிலளிநீக்கு
  32. படிப்பிற்கு வயது தடை அல்ல...
    அந்தப் பெரியவர் சொன்ன வாழ்க்கை என்பது நீரோடை என்பது எவ்வளவு பொருத்தமான கருத்து...
    அருமை அண்ணா...

    பதிலளிநீக்கு
  33. புதிய புதிய முயற்ற்ச்சிகள் நல்லதுதான் கதைபோல ! அருமையான கருத்துக்கள்.

    பதிலளிநீக்கு
  34. வாலிபம் என்பது கலைகின்ற வேடம். என்றாலும் பட்டங்கள் பெறும் படிப்புக்கு வயது வரம்பு உண்டு: ஆனால் கல்விக்கு வயதில்லை என்பதனை அழகாகச் சொன்னீர்கள்.
    த.ம.18

    பதிலளிநீக்கு
  35. அருமையான பதிவு! கல்விக்கும் படிப்புக்குமான வித்தியாசத்தை அழகாக கூறியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  36. அருமையான பதிவு.. எடுத்துக் கொண்ட குறளும் அற்புதம் தம 19

    பதிலளிநீக்கு
  37. மிக சிறப்பான பதிவு. மிகவும் அருமையான கருத்துக்கள்.
    கற்றது கையளவு..

    பதிலளிநீக்கு
  38. Super words by the Japanese old man..... it keep ringing in my ears. As always, a good post sir !

    பதிலளிநீக்கு
  39. சீனபெரியவர் கதை.. நல்லதொரு சிறுகதை....

    அதே போல நானும் கன்னடம், ஹிந்தி படிக்கின்றேன் உங்கள் பதிவு நல்ல அனுபவத்தைத் தந்தது

    ಅ ಆ ಇ ಈ ಉ ಊ ಎ ಏ ಐ ಒ ಓ ಔ ಅಂ ಅಃ
    அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ அம் அஹ
    अ आ इ ई उ ऊ ए ऐ ओ औ अं अः

    இதை ஏன் டைப் பண்ணுகிறேன் என்றால் எல்லாரலும் எல்லாம் முடியும் முயற்சி செய்ந்தால். வெற்றி நிச்சயம்.

    பதிலளிநீக்கு
  40. நீரோடை கருத்து அருமை.
    ரசித்தேன் தனபாலன் அண்ணா.

    பதிலளிநீக்கு
  41. கல்வி பயில வயது ஒரு தடையல்ல என்ற கருத்தை தங்கள் பாணியில் தந்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  42. உழைப்பதே ஒரு பெரிய கல்வி என்ற கருத்து அற்புதம். சிறப்பான பதிவு. பகிர்வுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  43. உங்கள் திருக்குறள் ஆளுமை வியக்க வைக்கிறது. பாராட்டுக்கள்.

    இளமையில் கல் என்கிறதே ஆத்திசூடி்?

    பதிலளிநீக்கு
  44. மூத்தவர்களின் ஆரோக்கியத்திற்கு அவர்களின் உடல் உழைப்பு மட்டுமின்றி உணவு பழக்கமும் ஒரு காரணம்... இப்போதைய நோய்களில் பாதி உணவால் வருபவையே..... சரியாகத்தான் சொன்னீர்கள் சாகும் வரை கற்றுக் கொண்டே இருப்பதுதான் வாழ்வதற்கான அடையாளமே

    பதிலளிநீக்கு
  45. தனபாலன் சார்

    சினிமா பாடல்களில் வாழ்க்கைத் தத்துவம் அவ்வளவு கொட்டிக் கிடக்கிறது என்பதை அவ்வப்போது நீங்களும் சுட்டிக் காட்டிக் கொண்டே வருகிறீர்கள் . வாசிக்கவும் யோசிக்கவும் நன்றாக இருக்கிறது . மனித வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் கலைந்து கொண்டே செல்வதை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்.

    தமிழ் மணத்திற்குள் நுழைய முயற்சித்தும் முடியவில்லை . எவ்வாறு அதில் என் பதிவுகளை இடுவது என்று தெரியவில்லை . யோசனை தாருங்கள் .

    பதிலளிநீக்கு
  46. உலகமே இணையத்தால் சுருங்கிவிட்டது. இன்னுமா...கல்லாதது உலகளவு ???

    பதிலளிநீக்கு
  47. வணக்கம் சகோதரரே!

    வயது உழைப்பைப் பற்றிய உணமையை அருமையாக நீங்கள் சொல்லிய விதம் சிறப்பாக இருந்தது, அந்த காலத்தில் எந்த வயதிலும் உழைத்தார்கள். ஆனால் இப்போது நீங்கள் குறிப்பட்டபடி,இருபது வயதுக்கு மேல் வாழ்வதற்கு மட்டுமே சாப்பிடும் இந்த கால கட்டத்தில் உழைப்புப்பென்பது ஏது.?

    கதையோடு, கல்விக்கு வயதென்பது இல்லை என சொன்ன விதமும் அருமை.!புதிது புதிதாக,கற்கும் திறனையும், கற்றுக்கொள்ள நீடிக்கும் ஆயுளையும் தந்த இறைவனுக்கு நன்றிக் ௬றிக்கொண்டே வயதை ஒரு பொருட்டாக்காமல் இருக்கும் வரை கற்கலாம்.தங்கள் எண்ணங்களை இனிதாக பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  48. பெயிலா போனால் அம்புட்டுதான் முடிந்தது கல்வி.... இதில. எப்படி வாழ்க்கை முழுவதும் கல்வி ....????

    பதிலளிநீக்கு
  49. கற்பதற்கு நேரம் காலமோ, வயதோ கணக்கில் இல்லை. அருமையான கருத்தைப் பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  50. அருமையான பகிர்வு. கற்போம் கற்போம் ... தினமும் ஏதாவது ஒரு புதிய விஷயத்தினைக் கற்போம். வயது ஒரு தடையே இல்லை. ஆர்வமும் விடா முயற்சிகளும் ஈடுபாடும் இருந்தால் போதும்.

    படிப்பறிவினை விட வாழ்க்கைக்கல்வியான பட்டறிவினை எங்கும் எப்போதும் எந்த வயதிலும் அனுபவித்துக்கற்றுக்கொள்ளலாம் தான்.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.