🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎புதிய பதிவுகளை பெற ✉லிங்கா...? எப்படி...!


© லிங்கா வைரமுத்து A.R.ரகுமான் 🎤 S.P.பாலசுப்ரமணியம், ஆர்யன் தினேஷ் கனகரத்தினம் @ 2014 ⟫

மண்ணில் இன்பம் - இயற்கை தானே...? துன்பம் செயற்கை தானே...? முள்ளில் நீ மெத்தை தைத்துத் தூங்காதே...! முன்பு இன்பம் கொடுத்ததெல்லாம் பின்னால் துன்பம் தரும்...! கண்ணா நீ - கட்டுப்பாடு தாண்டாதே... இதயம் பெரிதாக வாழ்ந்து பார் - இன்பம் பெரிதாகித் தீருமே... உன்னை எல்லாருக்கும் தந்து பார் - உலகம் உனதாகி போகுமே...! ஓ நண்பா நண்பா நண்பா நண்பா நண்பா வா கலக்கலாமா...?

கலக்கல் போதுமா ரசிகர்களே...?

நன்றி : 1) தமிழ்வாசி பிரகாஷ் 2) முரளிதரன் 3) Stalin Wesley 4) நீச்சல்காரன்

புதிய பதிவர்களே... நானும் "லிங்கா"வைப் பற்றி எழுதலாம் என்று நினைத்திருந்தால், நண்பர்கள் பலரும் ஏற்கனவே அட்டகாசமாக எழுதி உள்ளார்கள்... பயனுள்ள link-காக்களும், மற்றவைகளும் :-

1) பதிவில் லிங்க் இணைப்பது எப்படி ? நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் படங்களுடன் விளக்கியுள்ளார்... சொடுக்குக : இங்கே

2) அதே போல் பின்னூட்டத்தில் லிங்க் கொடுப்பது எப்படி? என்று நண்பர் முரளிதரன் அவர்களும்... சொடுக்குக : இங்கே

3) எனது குறளின் குரல் உட்படப் பல பதிவுகளில், எண்கள் மீது சுட்டியைக் கொண்டு சென்றால், மறைந்திருக்கும் பாடல் வரிகளை ரசித்திருப்பீர்கள்... அது போல் செய்ய நண்பர் Stalin Wesley அவர்களின் இணைப்புகள்... சொடுக்குக : இணைப்பு 1 இணைப்பு 2

4) இப்போது சொல்லப் போவது திண்டுக்கல் பூட்டு அல்ல... பதிவுத் திருட்டைத் தடுக்க நீச்சல்காரன் அவர்களின் பூட்டு... சொடுக்குக : இங்கே அவர் என்ன சொல்கிறார் என்பதையும், அந்தப் பதிவிற்கு வந்த கருத்துரைகளையும் முதலில் அறிந்து கொண்டு பிறகு இங்கே தொடருங்கள்... இது ஒரு தற்காலிக தடுப்பு முறை தான்... முந்தைய டொய்ங்... டொய்ங்... பதிவில் சொன்னது போல் 1) கருத்துரைப் பெட்டியைத் தேர்வு செய்வது முதற்கொண்டு... நிற்க... எந்த கருத்துரைப் பெட்டியைத் தேர்வு செய்தால் Show Original Post என்று வரும் என்பதை அறிக... 2) என்ன தான் பூட்டினாலும், பதிவு திறக்கும் சில நொடிகளில் திருடனாகலாம்... 3) அதை விட browser settings-ல் சின்ன டிக் மூலம் எளிதாக அபேஸ்...! இன்னும் பலரின் பல வழி(லி)கள் உள்ளன... முடிவாகத் திருடனாய் பார்த்துத் திருந்தாவிட்டால் ? அதே அதே... பதிவே பகிர்ந்து கொள்ளவில்லை என்றால், எவ்வித பிரச்சனையுமில்லை. ஹிஹி...

நானே தான்...!
அப்புறம் படத் திருட்டு... நான் சொல்வது வலைத்தளத்தில் உள்ள படங்களை... பதிவின் ஆரம்பத்திலுள்ள படத்தைச் சொடுக்கினால், படத்தை மட்டும் தனியாகப் பார்க்கலாம்... பிறகு "Esc" என்பதைச் சொடுக்கி, பதிவை வாசிக்கலாம்... சரி பக்கத்திலுள்ள படத்தைச் சொடுக்கினால்... ம்ஹீம், எப்படிச் செய்வது...? அதற்கு முன், பதிவில் படத்தை இணைக்கக் கிட்டத்தட்ட அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்... தெரியாதவர்கள் சொடுக்குக : இங்கே

இப்போது நீங்கள் ஒரு புதிய பதிவில், உங்கள் கணினியில் உள்ள abc என்று ஒரு படத்தை மட்டும் இணைக்கிறீர்கள்... நீங்கள் இப்போது இருப்பது பதிவு எழுதும் பக்கத்தில் - compose view என்பதில்...! இடதுபுறம் மேலே முதல் Icon <> ▿ என்றிருக்கும்... அது Compose view மற்றும் HTML view பக்கங்களுக்கு மாறுவதற்கான Icon... அதைச் சொடுக்கி HTML view என்பதைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்... அதில் நீங்கள் பதிவேற்றம் செய்த படத்தின் இணைப்பு (url) இருக்கும்... https:// என்று ஆரம்பித்து abc.jpg என்று முடியும்... </div></div> இவற்றுக்கு முன் ஓரிரு தடவை enter தட்டி விட்டு, அதாவது "empty" வரிகளை உருவாக்கி, அங்கு <img src="இங்கே படத்தின் url இடவும்" />

பிற்சேர்க்கை : பல நண்பர்கள் கேட்டது : கருத்துரையில் சொற்களை அடர்த்தியாக்க (bold), சாய்வாக்க (italic) மற்றும் இணைப்பு (→link←) எவ்வாறு கொடுப்பது...?

அடர்த்தியாக்க : <b>அன்பு</b> :- அன்பு
சாய்வாக்க : <i>அன்பு</i> :- அன்பு
அடர்த்தியாக்க & சாய்வாக்க : <b><i>அன்பு</i></b> அன்பு

இணைப்பைக் கொடுக்க : →<a href=1>2</a>←
எடுத்துக்காட்டு :-
1 = இணைப்பின் முகவரி: (https://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-10.html)
2 = இணைப்பின் தலைப்பு: (லிங்கா...? எப்படி...!)
<a href=https://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Speed-Wisdom-10.html>லிங்கா...? எப்படி...!</a>

அவ்வளவு தான்... அப்புறம் பன்ச் இல்லேன்னா எப்படி...? தினம் தினம் வாழ்வில் நாம் நடிக்கும் நடிப்பு தான் எத்தனை வகை....! அதனை நமக்கு நாமே முதலில் ரசிகனாக இருக்க முடிந்தால் மட்டுமே, யாரையும் என்ன, எதையுமே ரசிக்க முடியும்... Lets Begin...! நீங்களும் லிங்காவை பார்க்க அவசரப்பட்டால்... கீழுள்ள வரிக்கு அருகே சுட்டியைக் கொண்டு வந்தால், மீண்டும் உங்கள் browser-ல் உள்ள "back (←)" பட்டனைச் சொடுக்க வேண்டி வரும்...! அதனால் கருத்துரை இட்டு விட்டு, கீழுள்ள வரிக்கு அருகே சுட்டியைக் கொண்டு வரவும்... நன்றி நண்பர்களே.... தங்களின் கருத்து என்ன...?

சும்மா அதிருதில்லே

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. உங்கள் லிங்கா விமர்சனம் நன்று.
  புத்தம் புதிதாக இராஜராஜேஸ்வரி அவர்களின் முதன்முதலாக சுடசுட சினிமா விமர்சனம் எழுதியுள்ளார்

  பதிலளிநீக்கு
 2. லிங்க்-காக்களைக் கொண்டு ஒரு பதிவு
  அருமை ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
 3. படத்திருட்டு தவிர்க்க... செஞ்சு பார்த்தேன். ஒர்க்கவுட் ஆகலை:(

  ஆமாம்.... ஒவ்வொரு படத்துக்கும் இப்படிப் பண்ணனுமா?

  பதிலளிநீக்கு
 4. ‘லிங்கா எப்படி?’எனத் தலைப்பிட்டு பதிவர்களுக்கு உதவும் தகவல்களை தந்தமைக்கு நன்றி! பதிவை இரசித்துப் படித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. தேவுடா..தேவுடா..
  படத் திருட்டு தேவுடா..

  எப்படி இன்னு தேவுடா..இன்னும்
  புரியும்படி சொல்லுடா..( ஹி ...சாரி...சொல்லு சார்.)

  வலைத் திருட்டு தேவுடா..
  புரிஞ்சு போனா இஸீ டா.

  வாலைக் குமரி லவ்வு போல (மனசுலே)
  ஒட்டிக் கிட்டா கஸ்டம் டா.

  களவும் கற்று மற ன்னு
  அன்னிலேந்து சொல்றாண்டா...

  வரவுக்கு மேலே செலவு வந்து
  வாழ்வைக் கெடுக்கும் உணரடா...

  தேவுடா.. தேவுடா..
  சுப்பு தாத்தா.

  பதிலளிநீக்கு
 6. மாலை வருகிறேன் நண்பரே... இதுவும் எனக்கு மிஸ்'ஸிங்கா ?

  பதிலளிநீக்கு
 7. லிங்(க்) கா(ய்) ஆகிவிடுமோ என்று நினைத்தால் எல்லாம் பழம்தான்!
  ரொம்ப நன்றி டிடி சார்!
  நல்ல வேளையாக உங்கள் தொலைபேசி எண் எனக்குக் கிடைக்கவில்லை.
  தப்பித்துக் கொண்டீர்கள்!
  இல்லையென்றால் இவனை எல்லாம் யார் வலையில் எழுதவில்லை என்று அழுதது என்று நினைத்திருப்பீர்கள்!
  பல தொழில்நுட்பச் செய்திகளைத் தொகுத்தளித்திருக்கிறீர்கள்!
  அய்யங்களைத் தீர்க்கிறீர்கள்!
  எங்களைப் போன்றவர்களுக்கு இது பேருதவி!
  த ம கூடுதல் 1
  நன்றி

  பதிலளிநீக்கு
 8. அன்பின் தனபாலன்.. பயனுள்ள தகவல்களுடன் இனிய பதிவு..
  வாழ்க நலம்!..

  பதிலளிநீக்கு
 9. திண்டுகல் ஐய்யா.. தம்மிடம் இருந்து மீண்டும் ஒரு நல்ல பதிவு. பின்னோட்டத்தில் என்ன என்ன விளையாட்டு என்பதை இன்று அறிந்தேன்.
  பதிவிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. லிங்கா விமர்சனம் தான் நீங்களும் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்து உள்ளே வந்தால், லிங்கா படத்தை விட மிகவும் பயனுள்ள லிங்காக்களை அளித்து விட்டீர்கள். மிக்க நன்றி டிடி

  பதிலளிநீக்கு
 11. அசத்தலான பாட்டுடன் வலைக்குள் இழுத்துவிட்டீர்களே.

  வழக்கம் போலவே உங்களது இந்தப் பதிவும் அருமை. பெட்டகத்தில் வைத்து அவ்வப்போது பார்த்துக் கொள்ளும்படிக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கிறது. I mean this blogs could be used as referral sites for understanding technical things.
  பலருக்கும் பயனுள்ள பதிவு.

  வாழ்க.

  God bless you

  பதிலளிநீக்கு
 12. பயனுள்ள தகவல்கள் பல அளித்ததற்கு நன்றி அண்ணா !!!

  பதிலளிநீக்கு
 13. ஹாஹா லிங்கா விமர்சனம் என்று நினைத்து வந்தால் லிங்க்ஸ் பத்தி பதிவு. அசடு வழிந்தேன். ஹிஹி

  அருமை சகோ

  பதிலளிநீக்கு
 14. ஹா..ஹா.. லிங்காவபத்தி எழுதியிருப்பீங்கன்னு பார்த்தா லிங்க் பத்தி எழுதியிருக்கீங்க tm-11

  பதிலளிநீக்கு
 15. லிங்க்குக்கு நீங்க. லிங்காவுக்கு ரஜினி . நல்ல விளையாட்டுதான்

  பதிலளிநீக்கு
 16. அன்பின் டிடி அத்தனை தகவல்களும் வாசித்து அறிந்தேன்.
  பயனுள்ளதை.
  மிக்க நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 17. லிங்காவைபற்றி நீங்க என்ன சொல்லவற்றீங்கன்னு பார்க்க வந்தா....லிங்க் பற்றி பயனுள்ள தகவ்ல்கள்களை பார்க்கவைத்து எங்களின் ப்ளாக்கை மேலும் வளர உதவுகிறீர்கள். நன்றி சகோ.

  தம 12

  பதிலளிநீக்கு
 18. நான் லிங்கா விமர்சனம்னு ஓடோடி வந்தால் இப்படி எமாற்றிபுட்டிங்களே டி.டி சார்......லிங்க் விமர்சனம் ஹா..ஹா..

  பதிலளிநீக்கு
 19. லிங்கா சூப்பர்.....அருமை! பயனுள்ள விமர்சனம்!!!!

  பதிலளிநீக்கு
 20. பயனுள்ள பல தகவல்கள். புதிதாய் வலைப்பூ ஆரம்பிப்பவர்களுக்கும், என்னை போல தொழில்நுட்டம் அதிகம் தெரியாதவர்களுக்கும் மிக பயனுள்ள பதிவு. உங்களின் இந்த சேவைக்கு நன்றிகள் பல.

  உங்கள் பன்ச்... பலே பன்ச் !

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  பதிலளிநீக்கு
 21. முதலில் சினிமாவைப்பற்றி இவரு ஏன் ? எழுதுறாருனு நினைச்சேன் அதைப்பற்றி எழுதாமல் விட்டதால் தங்களின் மதிப்பு இன்னும் உயர்ந்து விட்டது.நன்றி

  பதிலளிநீக்கு
 22. லிங்காவைப்பற்றி பார்க்க வந்தால் லிங்குகொடுத்து வித்தியாசமான பகிர்வு.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  அண்ணா

  தலைப்பை பார்த்தவுடன் நான் நினைத்தேன் லிங்கா படம் என்று படித்த போதுதான் தெரிந்தது... நமக்கு பயனுள்ள பதிவு என்று பகிர்வுக்கு நன்றி. த.ம 13
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் சகோதரரே!

  என்னைப் போன்றோர்க்கு புரியும் படியாய் நல்ல பயனுள்ள பதிவு... .விரிவாக விளக்கமாக சொன்னவிதமும் புரிந்து கொள்ள ஏதுவாக இருந்தது.

  பகிர்ந்தமைக்கு நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 25. நீங்க சினிமா விமர்சனம் எழுத மாட்டீங்களே எப்படின்னு பதிவுக்குள் நுழைந்தால் லிங்க் பற்றி லிங்க் கொடுத்தும் விவரித்தும் கலக்கிவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! நீங்கள் கொடுத்த லிங்க் குகளுக்கு சென்று பார்க்க வேண்டும். பார்க்கிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 26. அட்சய பாத்திரம் போல் ஒவ்வொரு பதிலும் அள்ள அள்ளக் குறையாத அளவு புதியனவற்றை இடும் தங்களின் பணி பாராட்டிற்குரியது. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. அருமையான பதிவு.
  பயனுள்ள பதிவு.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 28. வலையுலக டிக்ஸ்னரி யாக இருக்கிறது தங்கள் பதிவுகள்:) சூப்பர் அண்ணா!

  பதிலளிநீக்கு
 29. உங்களின் “லிங்கா...?“ மிக மிக அருமை தனபாலன் அண்ணா.

  என்னமா யோசிக்கிறீங்க! சூப்பர்ர்ர்!

  பதிலளிநீக்கு
 30. சுவாரசியமான தகவல்கள்.
  இப்படி சிரமப்பட்டு பதிவுத் திருட்டை தடுக்க வேண்டுமா? ஏன்?

  பதிலளிநீக்கு
 31. சிறந்த தொழில்நுட்ப வழிகாட்டலும் மதியுரையும்
  பலருக்குப் பயன்படும் பதிவு.
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 32. நெஜமாகவே அதிருது
  பய்னுள்ள தகவலகள்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 33. வெளியூர் பயணம் காரணமாக தாமதமாக வர நேரிட்டுவிட்டது

  லிங்காவை link பண்ணி பதிவுகளில் link பற்றிய பாடம் அபாரம்.அதில் எனது பதிவையும் குறிப்பிட்டமைக்கு
  நன்றி.Stalin weSley அவர்களின் பதிவுகளை சமீபத்தில்தான் அறிந்தேன்.
  வழக்கம்போல் தங்கள் பாணியிலான அதிரடிப் பதிவு. தொடரட்டும்


  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.