🏠 வணக்கம் காப்பகம் நன்றி

தேடல் 🔎



புதிய பதிவுகளை பெற ✉



இது உடம்பா ? இல்லை விடுதியா ?

வணக்கம் நண்பர்களே... உயிர் - கடவுள் Two in one பதிவை இங்கே சொடுக்கி வாசிக்கலாம்... அந்தப் பதிவின் தொடர் சிந்தனை இதோ :-

பிறக்கின்ற போதே இறக்கின்ற செய்தி இருக்கின்றதென்பது மெய் தானே...? ஆசைகள் என்ன...? ஆணவம் என்ன...? உணர்வுகள் என்பது பொய் தானே...? உடம்பு என்பது உண்மையில் என்ன...? கனவுகள் வாங்கும் பை தானே...! (படம் : நீங்கள் கேட்டவை)


காலங்கள் மாறும்; கோலங்கள் மாறும்... வாலிபம் என்பது பொய் வேஷம்; தூக்கத்தில் பாதி, ஏக்கத்தில் பாதி, போனது போக எது மீதம்...? பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்...! முக்கிய வரியைச் சொல்ல வேண்டாமா மனசாட்சி...! காயமே இது பொய்யடா... வெறும் காற்றடைத்த பையடா... மாயனார் குயவன் செய்த மண்ணு பாண்டம் ஓடடா...! என்றார் சித்தர் ஒருவர்... இந்த உலகில் வியப்பான விசயம் எது தெரியுமா ? மனிதன் அன்றாடம் இறப்பைப் பற்றி அறிந்து கொள்கிறான், தெரிந்து கொள்கிறான்... ஆனாலும் புரிந்து கொள்ளாதது என்னவென்றால் தான் நிலையாக இருக்கப் போகிறவன் என்று நினைத்துக் கொண்டு அட்டூழியம் செய்து கொண்டு இருக்கிறானே...! ம்...! என்னத்த சொல்ல...? "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே"

அதுசரி...! இந்த உடம்பு வெறும் காலிப் பெருங்காய டப்பா - அதுல வாசனை பலமாத்தான் இருக்கு...! தேகம்-அது சந்தேகம்... இந்தக் காயம் - அது வெங்காயம்-ன்னு தான் தெரியும்... (படம் மந்திரப் புன்னகை) ஆனா, அடிக்கடி இந்தப் பேராசை, கோபம், பொறாமை, பிடிவாதம், துரோகம், வஞ்சகம், ஆணவம், - இப்படிப் பல பேய்கள் உடம்புக்குள்ளே வந்துடுதே...! கடவுள், பேய் மட்டுமில்லே, சிங்கம், புலி, கரடி, நாய், நரி, குதிரை என்று ஏகப்பட்ட மிருகங்கள் வேறே...! மனித உடம்புங்கிறது அப்பப்போ கடவுள், பேய், விலங்குகள்ன்னு ஒவ்வொருத்தரா தங்கி போறதுன்னா...

இது உடம்பா ? இல்லை விடுதியா ?

இந்த உடம்பை சத்திரம்ன்னு சொல்லலாம்... அந்தக்காலத்திலே சத்திரங்களிலே இலவசமாகச் சோறு போட்டாங்க... தங்கிக்கவும் செய்யலாம்... தங்குகிறவங்களாப் பார்த்துச் சத்திரத்திற்கு ஏதாவது கொடுத்திட்டுப் போவாங்க... அது போல இன்னைக்கு நமக்குக் கோபம் வந்தா நாய், சிங்கம், புலி வந்து தங்கிக்கிதுங்க... வஞ்சகம் வந்தா நரி, பாம்பு வந்து தங்கிக்கிதுங்க... இதுக எல்லாம் போறப்போ ஏகப்பட்ட டென்சன், நரம்பு நோய், அழுத்த நோய்ன்னு பலதரப்பட்ட நோய்களைத் தந்துட்டு போகுது...!

அது சரி... எவ்வளவு பெரிய திருவிழா கூட்டம் என்றாலும், தந்தையின் அல்லது தாயின் தோளிலோ இருக்கிற குழந்தைக்கு எந்தவித பயமும் இருக்கிறதில்லே... ஏன்னா அன்பு, அரவணைப்பு, பாதுகாப்பு, நம்பிக்கை எனப் பெற்றோர்களே கடவுள்... அதுக்கப்புறம் எப்படி இன வெறி, மத வெறி, ஜாதி வெறி - இப்படிப் பல வெறிகள் வேறு வந்து ஒட்டிக் கொள்(ல்)கிறது...? நமக்குள்ளே நிரந்தரமா அன்பு எனும் கடவுளை மட்டும் தங்க வைக்க முடியாதா...? கடவுள் பாதி, மிருகம் பாதி, கலந்து செய்த கலவை நான்...! வெளியே மிருகம், உள்ளே கடவுள், விளங்க முடியாக் கவிதை நான்...! மிருகம் கொன்று, மிருகம் கொன்று, கடவுள் வளர்க்கப் பார்க்கின்றேன் - ஆனால் கடவுள் கொன்று, உணவாய் தின்று, மிருகம் மட்டும் வளர்க்கிறதே...! நந்தகுமாரா... நந்தகுமாரா... நாளை மிருகம் கொல்வாயா...? மிருகம் தின்ற எச்சம் கொண்டு, மீண்டும் கடவுள் செய்வாயா...? குரங்கிலிருந்து மனிதன் என்றால், மீண்டும் இறையாய் ஜனிப்பானா...? மிருக ஜாதியில் பிறந்த மனிதா, தேவஜோதியில் கலப்பாயா...? (படம் : ஆளவந்தான்)

நம் மனதில் என்ன வளர்க்கிறோமோ, அது தான் வளரும் மனசாட்சி... அட...! ஊட்டச்சத்து வாங்குற களிமண்ணின் செயலும் அமைப்பும், நமது மூளையும் ஒன்று தான்... வாங்குதல், நிறுத்தி வைத்தல், மீண்டும் நினைவு கூர்தல், அதாவது பரிமாறுதல் - இவற்றை எல்லாம் களிமண் சரியாத் தான் வேலை செய்யுது...! நாம...? ஒருவேளை நமக்கு ஊட்டிய அல்லது ஊட்டிக்கொண்ட ஊட்டச்சத்து தவறோ...? ம்... சரி... நம்ம எல்லார் உடம்புக்குள்ளும் கடவுள் இருக்கிறார்... கடவுளை உணரும் மனிதம் இருக்கிறது... ஆனால், அதனை வெளிக்கொணரும் முயற்சியில் தான் நாம் இறங்குவதேயில்லை... நாம் எதிலும் தெளிவாக இருந்தால், எந்த வெறியும் அண்டாது; அடுத்தவர்களைச் சீண்டி வெறி கொள்ளச் செய்யும் சிந்தனையே வராது ! தாய்லாந்தில் நடந்த ஒரு உண்மையான களிமண் சம்பவம் :

தாய்லாந்திலிருந்த தொன்மையான ஒரு களிமண் புத்தர் சிலையை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குக் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது. மிகப்பெரிய களிமண் புத்தர் சிலை கொண்டு செல்லும் வழியில் உடைந்து விடக்கூடாது என்பதற்காக, ஒரு லாரியில் மிகக் கவனமாக ஏற்றினர். மெதுவாக லாரி புறப்பட்டது. பாதித் தூரம் சென்றவுடன், லேசாக மழைத்தூறல் விழத் தொடங்கியது. வண்டியை ஓரமாக நிறுத்தி ஏகப்பட்ட குடைகளைச் சிலையின் மேல் பிடித்தனர். அதற்குள் சிலர் தென்னங்கீற்றுகளைக் கொண்டு வந்து, லாரியில் மேல் கொட்டகை போல் வேயத் தொடங்கினர். எப்படியாவது பழமையான களிமண் புத்தர் சிலை, மழையில் கரையாமல் காக்க வேண்டுமே என்ற முயற்சி. அதற்குள் மழை கடும் சூறாவளிக் காற்றுடன் பெய்யத் தொடங்கியது. வேய்ந்த கொட்டகை பறந்து போய் விட்டது. கண் முன்னாலேயே புத்தர் சிலை கரைவதை, மக்கள் சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். கண், காது, மூக்கு, கை, கால் என அங்கங்கள் கரையக் கரைய, அழத் தொடக்கி விட்டனர் மக்கள். உடனே ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது ! களிமண் கரையக் கரைய, தங்கத்தால் ஆன புத்தர் சிலை வெளிப்படத் தொடங்கியது. தங்கப் புத்தர் "தகத் தக"வென்று வெளி வந்தார். முன்னொரு காலத்தில் எதிரிகளிடமிருந்து சிலையைக் காப்பதற்காக, யாரோ அதைக் களிமண்ணால் மூடி உள்ளார்கள்... இப்போது தாய்லாந்து சென்றால் அந்தத் தங்கப் புத்தர் சிலையைக் காணலாம்...

இதே போல் உலகத்திலுள்ள அனைவருக்கும் பொதுவான பேராசை, கோபம், பொறாமை, பிடிவாதம், துரோகம், சோம்பேறித்தனம், வஞ்சகம், ஆணவம், இன்னும் பல குப்பைகள் + பல வெறிகள் நம்மிடமிருந்து கரைய / கரைக்க ஆரம்பித்து விட்டால் நம் ஒவ்வொருக்குள்ளும் இருக்கும் தங்கப் புத்தர் தானாக "தகத் தக" வென்று வெளி வருவார்...!


© குணா வாலி இளையராஜா 🎤 இளையராஜா @ 1991 ⟫

அப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும் கொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு - ஞானப் பெண்ணே குப்பையாக வந்த உடம்பு - அது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும் ஆவதென்ன சக்கையாகப் போகும் கரும்பு - ஞானப் பெண்ணே சக்கையாகப் போகும் கரும்பு... பந்த பாசச் சேற்றில் வந்து விழுந்த தேகம் - எந்த கங்கை யாற்றில் இந்த அழுக்குப் போகும்...? // குத்தம் குறை ஏதுமற்ற ஜீவன் இங்கு யாரடா...? குத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தானடா... சிவனைக்கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா... புத்தி கெட்ட மூடர்க்கென்றும் ஞானப் பார்வை ஏதடா...? ஆதி முதல் அந்தம் உன் சொந்தம் உன் பந்தம் நீ உள்ளவரைதான்... வந்து வந்து கூடும் கூத்தாடும் விட்டோடும் ஓர் சந்தைக் கடைதான்... இதில் நீயென்ன நானென்ன... வந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத்தள்ளு... // கையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம் - ஆடித்தானே சேர்த்து வச்ச பாவம் யாவும் தீரனும்... ஆட ஆடப் பாவம் சேரும் ஆடி ஓடும் மானிடா - ஆட நானும் மாட்டேன் என்று ஓடிப் போன தாரடா...? // தட்டுக்கெட்டு ஓடும் தள்ளாடும் எந்நாளூம் உன் உள்ளக்குரங்கு... கட்டுப் படக்கூடும் எப்போதும் நீ போடு மெய்ஞான விலங்கு... மனம் ஆடாமல் வாடாமல் மெய்ஞானம் உண்டாக அஞ்ஞானம் அற்று விழும்...

தங்களின் கருத்து என்ன நண்பர்களே...?

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

  1. அருமையான சிந்தனை.....

    பல அழுக்ககளை மனதில் சுமந்து கொண்டு திரிகிறோம். அவற்றை களைந்து விட்டால் அத்தனையும் சிறப்பு தானே....

    த.ம. +1

    பதிலளிநீக்கு
  2. முதல் பாடல் இடம் பெற்ற படம் நீங்கள் கேட்டவை! வைரமுத்துவின் பாடல், பாலுமகேந்திரா இயக்கம்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பசியோடு சாப்பிடுபவர்களைப் பாருங்க. அவர்களிடம் அதிகமான கவலையிருக்காது. அப்படியே இருந்தாலும் அதை உள்ளே அனுப்ப மாட்டார்கள். எனக்கு எப்போதும் ரொம்ப பசிக்கும்(?)

    பதிலளிநீக்கு
  4. அருமையானா பதிவு, நன்றி தனபாலன் அவர்களே.. இதை படிக்கையில் எனக்கு முதலில் நினைவிற்கு வருவது...

    "மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும்".

    தொடர்ந்து எழுதவும்.

    பதிலளிநீக்கு
  5. அற்புதமான கருத்துக்கள் ஐயா. ஏற்கனவே அறிந்த பாடல்கள் தானென்றாலும், இவற்றுள் இவ்வளவு அர்த்தம் பொதிந்த வரிகள் இருக்கின்றன என்பதை தங்களது பதிவின் மூலமே அறிந்து கொண்டேன்.

    பகிர்வுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. எங்களுக்குள் மறைந்திருக்கும் தங்கப் புத்தரை ஜெகஜெக என ஜொலிக்கும் வண்ணம் வெளி கொணர்வதற்கான வழியை அழகாகச் சொன்னீர்கள்

    பதிலளிநீக்கு
  7. புத்தர் சிலையை பற்றிய செய்தி புதியது,
    நிலையாமை உணர்த்தும் பாடல்கள் அருமை.
    வழக்கம் போல் ரசிக்கவைக்கும் DD டச்

    பதிலளிநீக்கு
  8. தாய்லாந்த் புத்தர் பற்றி சொல்லி, நம்மிடம் உள்ள குப்பைகள் கரைந்தால் நாம் ஒவ்வொரிடமிருந்தும் தங்க புத்தர் தானே வெளியே வருவார் என சொல்லியிருப்பது அருமையான கருத்து. இரசித்தேன். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. எப்பொழுதும்போல அருமையான ஒரு பதிவு..குப்பைகளை வெளியேற்றினால் தங்க புத்தர் வெளிவருவார் தான்..அருமையான சிந்தனை. பாடல்களும் நீங்கள் கருத்தோடு சேர்த்துப் பகிரும்பொழுது இன்னும் அர்த்தம் உள்ளவையாகத் தெரிகின்றன..நன்றி!

    பதிலளிநீக்கு
  10. உள்ளம் ஒரு சத்திரம் தான். பலரும் வருவார் போவார் . இல்லத்தைப் போல உள்ளத்தையும் அவ்வப்போது கூட்டிப்பெருக்கி குப்பைகளைக் கழித்து விட்டால் - ’’தகத் தக’’ - என்று , தங்க புத்தர் வருவார். அருமையான விஷயம். அழகிய நடை. வாழ்க.. வளமுடன்!..

    பதிலளிநீக்கு
  11. மிக அருமையான ஒரு பதிவு! பகிர்வு!

    காயமே அது பொய்யடா! அது காற்றடைத்த பையடா நினைவுக்கு வருகிறது!

    மனம் ஒரு குப்பைக் கிடங்கு1 அதைச் சுத்தப் படுத்தினாலே வாழ்வி மிளிரும்! புத்தரி விஷயம் அருமை!

    த.ம.

    பதிலளிநீக்கு
  12. வணக்கம்
    அண்ணா

    இந்தப் பதிவை ஒவ்வொருவரும் கட்டாயம் படிக்க வேண்டிய பதிவு
    நல்ல சிந்னை மிக்க கருத்துக்கள் ....சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் அண்ணா

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    பதிலளிநீக்கு
  13. தான் நிலையாக இருக்கப் போகிறவன். அழிக்க வேண்டிய நினைவு.

    அருமையான பதிவு. கீதையின் ஒரு பகுதி கண்முன் வந்து போகிறது.

    தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. அருமையான உங்கள் சிந்தனையைப் படித்ததும் என் நினைவுக்கு வந்த பாடல் ...யாரோ வருவார் யாரோ போவார் வருவதும் போவதும் தெரியாது ,ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை !

    நீங்கள் சொல்வதுபோல் குடியிருக்க வேண்டியவர் கடவுளாரா ,குரங்காரா என்பதை நாம்தான் தீர்மானிக்கணும் !

    பதிலளிநீக்கு
  15. தினம் உடல் அழுக்கை போக்கும் நாம் உள்ள அழுக்கை போக்காது விடுவதனால் எவ்வளவு இன்னல் வாழ்வில். எவ்வளவு அழகாக விடயங்கள் அடுக்கடுக்காய் எல்லாம் பொன் மொழிகள் போல் அருமை அருமை ...! தொடர வாழ்த்துக்கள் .....!
    வாழ்க வளமுடன்....!

    பதிலளிநீக்கு
  16. உடல் வளர்த்தோம். உயிர் வளர்த்தோம் இல்லை. அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் அண்ணார் அவர்களே !
    மிக அருமையான கருத்துக்கள்,பாடல்வரிகள் மிகப்பொருத்தம், வரிகளுடன் கவிஞர்களின் பெயர்களையும் இடுங்கள்.அறிந்துக்கொள்கிறோம்...வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  18. ஒருவன் மனது ஒன்பதடா அதில்
    ஒளிந்து கிடப்பது எண்பதடா
    உருவத்தைப் பார்ப்பவன் மனிதனடா அதில்
    உள்ளத்தைக் காண்பவன் இறைவனடா

    பதிலளிநீக்கு
  19. அனைவரிடத்தும் உள்ள குப்பைகளை அகற்றினாலே போதும் அவரவர் புத்தரே அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  20. இது
    உடம்பா?
    இல்லை
    விடுதியா?
    என்கிறீர்...
    உடம்பாயின்
    உள்ளமாயின்
    சரி
    நலமாகப் பேணாவிட்டால்
    நோய்கள் வந்து
    குந்தி இருக்கும்
    விடுதி தானே!
    சிறந்த பதிவு
    பறந்து வந்த பார்த்ததில்
    நிறைவு கண்டேன்!
    தொடருங்கள்
    அடிக்கடி வருவேன்!!

    பதிலளிநீக்கு
  21. புத்தர் சிலை நிகழ்ச்சி அருமை. நாமும் ஒருவகையில் அப்படித்தான் என்று நீங்கள் கூறியுள்ளதும் உண்மை. நம்மில் பலரும் முகத்திரையுடந்தான் அலைகிறோம். உண்மையான நம்மை நமக்கும் நமக்கு நெருங்கியவர்களுக்கும் மட்டுமே காட்டுகிறோம். நம்மில் சிலர் அவர்களுக்கும் கூட நம்முடைய உண்மையான முகத்தைக் காட்டுவதில்லை. அருமையான சிந்தனையை வழக்கம் போலவே உங்கள் பாணியில் அளித்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  22. உண்மைதான்! மனம் கண்டதையும் அலைபாய்ந்து குப்பையாகி போகிறது! குப்பைகளை களைந்துவிட்டால் தங்கம் போல தகதகக்கும்! அருமையான குட்டிக்கதை மற்றும் அழகான பாடல்வரிகளுடன் சிறப்பான பதிவு! நன்றி!

    பதிலளிநீக்கு
  23. உள்ளத்தில் அதாவது எம் உடம்பிற்குள் குடி கொண்டிருக்கும் தீய
    எண்ணங்களைத் தவிர்த்து விட்டால் தங்கப் புத்தர் தக தாவென
    ஜொலிப்பது மட்டும் அல்ல உள்ளத்தில் அமைதியும் நின்மதியும்
    குடி கொள்ளும் என்பதே சத்தியம் ! அருமையான படைப்பிற்குப்
    பாராட்டுக்களும் என் அன்பு கலந்த வாழ்த்துக்களும் சகோதரா .

    பதிலளிநீக்கு
  24. அருமையான அலசல் / ஆராய்ச்சி.
    திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டியது உங்கள் எழுத்து.

    பதிலளிநீக்கு
  25. தாயாலே வந்தது... தீயாலே வெந்தது... மெய்யென்று மேனியை யார் சொன்னது..

    தாய்லாந்து தங்க புத்தர் சிலை நிகழ்ச்சி கேள்விப்பட்டிராதது. நன்றி.

    பதிலளிநீக்கு
  26. உங்கள் பதிவு எப்பொழுதும்போல் இப்பதிவும் சிறப்பு

    பதிலளிநீக்கு
  27. ஆஹா, அருமை, நம்முள்ளே இருக்கும் சிங்கம், புலி, கரடி, ஓநாய் போன்றவை போகும் நாள் எந்நாளோ!

    தாய்லாந்து தங்க புத்தர் பற்றிய தகவலுக்கு நன்றி. அதை நம்முடைய மனக்குப்பைகளோடு இணைத்துச் சொன்னது மிக அருமை. நம்மிடமிருந்து எத்தனை வெறிகள் கரைய வேண்டி இருக்கு, உள்ளீருக்கும் தங்க புத்தர் வெளிவர! எத்தனை பாடுபடணும்!

    பதிலளிநீக்கு
  28. ஒவ்வொரு பதிவும் ஒரு முத்து. அனைத்தையும் விரைவில் நூலாக வெளியிடுங்கள். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  29. பதிவு அருமை! உங்கள் சிறப்பே அனைவரும் முன்பே அறிந்த திரைப் பாடல் வரி உதாரணத்துடன் எழுதுவதே... நன்றி...

    பதிலளிநீக்கு
  30. அருமையான பதிவு.

    நம் குறைகளை பற்றி சிந்திக்காமல் ,பிறர் குறைகளை பேசிக் கொண்டு இருக்கிறோம்.

    நம்மிடம் உள்ள வேண்டாத குணங்களை களைந்து விட்டால் தங்க புத்தராக நாமும் ஜொலிக்கலாம்.

    பாடல் பகிர்வு வெகு அருமை.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  31. தகதக்தகக்கும் தங்கப் புத்தராய் தளதளக்கும் பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு

  32. நமக்குள்வந்துபோகும் விலங்குகளை முதலில் அடையாளம் தெரியவேண்டும் பின் விரட்டுவது பற்றி சிந்த்க்கமுடிய்ம்.

    பதிலளிநீக்கு
  33. இதை மதவெறியர்கள் படித்தால் நல்லது நண்பரே ஆயினும் ஒருகவலை எனக்கு அவர்கள் இந்த ஏரியாவுக்கெல்லாம் வரமாட்டார்க(ல்)ள்.
    - KILLERGEE

    பதிலளிநீக்கு
  34. நல்லபல கருத்துகளை நயமுடனே சொல்லும் பதிவு.

    பதிலளிநீக்கு
  35. வணக்கம் சகோதரர்
    தங்களின் இந்த பதிவு நம்மை ஒருமுறை சுய பரிசோதனை செய்து கொள்ள உதவும். அழுக்குகளைக் களைந்து விட்டால் இந்த அகிலமும் அன்புமயம் தான். பகிர்வுக்கு நன்றீங்க..

    பதிலளிநீக்கு
  36. நாம நம்மை அண்ட வரும் மிருகங்களைத துரத்த பழகினால், கண்டிப்பாக நம்மை விட்டு வியாதிகள் பறந்தோடி விடும்.களிமண் சிலையிலிருந்து தங்கபுத்தர் வெளிப்பட்ட கதை மிகவும் ஸூப்பர்.

    பதிலளிநீக்கு
  37. சிந்தனைகள் நன்றாய் செதுக்கும் தனபாலன்
    விந்தைகள் கண்டே வியக்கின்றேன் - எந்நாளும்
    உள்ளத்தில் தூர்வாரும் உன்னதங்கள் நீஎழுதி
    மெள்ளத் தமிழினிக்க வை!

    வழமைபோல் பாட்டோடு பகிர்ந்த பதிவு நெஞ்சோடு நிற்கிறது என்னையும் செதுக்கியே !

    அருமை அருமை
    இனிய வாழ்த்து
    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  38. களிமண் கரைந்து தங்க புத்தர் வெளிவந்தாபோல நம் மனதில் இருக்கும் அழுக்குகளும் மறைந்தால் உண்மை மனிதம் வெளிவரும். ஆனால் மறுபடி மறுபடி அழுக்கு சேர்த்துக் கொள்ளுகிறோம், என்ன செய்வது?

    பதிலளிநீக்கு
  39. உண்மைதான். நம்மை சுத்தப்படுத்திக் கொண்டால் நாம் கடவுளைப் போன்றவர்கள். கடவுள் தம் சாயலில் மனிதனைப் படைத்தார் என பைபிளில் உள்ளதாம்.

    நல்ல கருத்து.

    நம்முள் இருக்கும் நாயையும் பேயையும் விரட்டி குறைந்தது மனிதனாகவாவது மாறுவோம்.

    God Bless You

    பதிலளிநீக்கு
  40. தங்க புத்தர் சிலை மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது, அதை களிமண்ணுக்குள் புதைத்து வைத்தவர் புத்தியை பாராட்டலாம் !

    பதிலளிநீக்கு
  41. அருமையான பதிவுங்க‌. தீயவைகளை வெளியே துரத்திவிட்டு நல்லவைகளை நிரந்தரமாகத் தங்கவைப்பது நம் கையில்தான் உள்ளது. தாய்லாந்து தங்க புத்தரின் கதை புதிது.

    பதிலளிநீக்கு
  42. அத்தனையும் அருமையான உண்மையான எழுத்துக்கள்! "காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!" என்றதை கேட்டதும் பட்டிணத்தார்க்கு வந்த ஞானம் நமங்கெங்கே வரப்போகிறது. நீங்கள் ௯றுவது போல் நாய், சிங்கம், புலி, பாம்பு மற்றும் ஏனைய மிருகங்கள் இந்த விடுதியில் தங்கி சென்ற பின் ஏகப்பட்ட விரிசல்கள் கண்டு இவ்விடுதி சிதைந்துதான் போகிறது. ஓவ்வாருவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய வரிகளை தொகுத்துள்ளீர்கள் இத்தகைய பகிர்விற்கும், ஆழமான சிந்தனைககும் என் மனமுவந்த பாராட்டினையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    வாழ்த்துகளுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. தங்க புத்தர் தகவ்ல் புதுமை பதிவு மிகவும் அருமை பிடித்த பாடல்கள் எல்லாம்!

    பதிலளிநீக்கு
  44. மனம் என்னும் குப்பைத் தொட்டியை முதலில் சுத்தம் செய்ய வேண்டும்.
    அருமையான பதிவு ஐயா
    நன்றி

    பதிலளிநீக்கு

  45. நான் தாயலந்து சென்ற போது தங்க புத்தரை நேரில் கண்டேன்!

    பதிலளிநீக்கு
  46. நம் உள்ளும் வெளியிலும் உள்ள தேவையற்ற களிமண் குணங்கள் கரைந்தால் நம் உடலும் உள்ளமும் தங்கம் போல மின்னும்.

    பதிலளிநீக்கு
  47. அருமையான சிந்தனை, புத்தர் சிலை கதை எனக்கும் புதிது..

    பதிலளிநீக்கு
  48. ரொம்ப அருமையான, சிந்திக்க வைத்த பகிர்வு!.. இது போல் தொடர்ந்து எழுதுங்கள்!.. வாழ்த்துக்கள்!..

    பதிலளிநீக்கு
  49. உண்மை மன அழுக்குகள் நீங்கினால் தான் நல்ல விசயங்களை நினைக்க முடியும் ..மிகவும் நன்று.

    பதிலளிநீக்கு
  50. தங்க புத்தர் கதை சூப்பர்!
    நாளைக்கே வகுப்பில சொல்லப்போறேன்!
    நன்றி அண்ணா !

    பதிலளிநீக்கு
  51. தங்கமாய் ஜொலித்திடும் கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  52. வெகு அருமை தனபாலன். எல்லோர் மனதிலும் இருக்கும் தங்க புத்தர் வெளியே வரட்டும்.

    பதிலளிநீக்கு
  53. மனித மனது
    ஒரு செயலுக்கான முடிவு எடுக்கும் போது, நல்ல நாயும், கெட்ட நாயும் சண்டை போடும் அதில் எந்த நாய்க்கு அதிகமாக தீனி போடுகிறோமோ அது அதன் செயலை செய்யும் ...

    பாடல்களுடன் விளக்கம் அருமை .. குணா மற்றும் ஆளவந்தான் படப் பாடல்கள் எனக்கு மிகவும் பிடித்தவை கூட...

    பதிலளிநீக்கு
  54. தாய்லாந்து புத்தர் சிலை தகவல் புதிது...அதை முன் வைத்து தாங்கள் சொன்ன கருத்தும் அருமை

    பதிலளிநீக்கு
  55. அருமையான கட்டுரை. நம் மனதில் களிமண்ணாக மூடிக் கிடக்கும் தீய எண்ணங்கள் விலகும்போது நமக்குள் இருக்கும் தங்க புத்தர் வெளிவருவதோடு, கடவுளையும் நாம் உணர முடியும்.

    தாங்கள் எழுதியுள்ள தங்க புத்தரை நான் பாங்காக் சென்றபோது தரிசித்தேன். அதன் கதையை இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.

    Radha Balu

    பதிலளிநீக்கு
  56. உண்மை தான் அய்யா ....இப்படிலாம் கூப்பீட்டு உட்கார வைச்சி advice பண்ணா யாருமில்ல ...

    பதிலளிநீக்கு
  57. புத்தர் சிலை செய்தி ... ஆச்சர்யம் தந்தது.
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

  58. 'இது உடம்பா இல்லை விடுதியா'
    இது விவாதத்திற்கு உறிய தலைப்பு.
    புரிந்தவன் புத்திசாலி, புரியாதாவன் ஏமாளி!.

    பதிலளிநீக்கு
  59. புத்தர் கதை அருமை...!

    த.ம. ஓட்டுப் பட்டையைக் காணவில்லையே...?

    பதிலளிநீக்கு
  60. புத்தர் கதை வாசித்துள்ளேன். நீங்கள் பாடல்களுடன் சொன்னவிதம் அருமை.களிமண் பூச்சே நிஜம் எனத்தான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். தங்க புத்தர் உள் இருப்பது தெரியாமல்...நன்றி ஐய்யா.

    பதிலளிநீக்கு
  61. அருமையான எல்லோருமே படித்து பயன்பெறக்கூடிய அற்புதமான பதிவு இது.
    இறைவன் தந்த இந்த உடலை உள்ளத்தை எப்படி வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை மிக அருமையாக புத்தரின் சிலையை உதாரணம் காட்டி சொன்னது மிக சிறப்பு...
    நல்லவராக இருக்கும் ஒருவர் கூட சூழ்நிலையால் தவறு செய்ய முனைந்து விடுகின்றார். எத்தகைய சூழலும் நம்மை பாதித்துவிடாமல் நம்மை வழி மாறி தீயவழியில் நடத்தி விடாமல் கவனமாக இருக்க நம் மனோபலம் ஆத்மபலம் பெருக்கிக்கொள்ளவேண்டும் என்றும்...
    ஒருவர் நமக்கு தீங்கிழைத்தால் பதிலுக்கு அவருக்கு கெடுதல் செய்து பழி வாங்கி தான் பட்ட துன்பம் அனைத்தும் அவர் படும்போது தான் நாம் பட்ட துன்பத்தின் வலி உணர்வார் என்று சொல்லி பழி வாங்க ஆரம்பித்தால் உலகில் மிஞ்சுவது தீயவை மட்டுமாகவே இருக்கும் என்று சொல்லவைத்த பதிவு..
    நம்மிடம் இல்லாத நல்லவை பிறரிடம் இருந்தால் பாராட்டும் குணம் வேண்டும்.. பொறாமைக்கொண்டு அதை அழிக்கும் குணம் இருக்கக்கூடாது என்றும்...
    நமக்கு தெரியாததை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.. நம்மிடம் இல்லாததை நியாயமாக கேட்டுப்பெறுவோம் என்றும்...
    துர்குணங்களை வளர்க்கும் இடமாக நம் உள்ளத்தை வைக்காமல் நல்ல சிந்தனைகளை வளர்த்து உடல்நலத்தை காக்கும்படி சொல்லவைத்த அற்புதமான பதிவுப்பா...
    கோபம், துரோகம், வஞ்சித்தல், பொறாமை, வெறுப்பு எல்லாவற்றையும் ஒதுக்கி, அன்பு, கனிவு, கருணை இப்படி நல்லவைகளை சேர்க்கும் விடுதியாக உடலை வைத்துக்கொள்ளச்சொல்லுவது சிறப்பு...
    மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா நல்லவை பகிரும் பதிவுக்கு...

    பதிலளிநீக்கு
  62. புத்தர் சிலை செய்தி மிக அருமை! சிறப்பான பகிர்வு!

    பதிலளிநீக்கு
  63. ‘உடம்பு என்பது.....கனவுகள் வாங்கும் பை’
    அற்புதமாக உருவகம்!

    பதிலளிநீக்கு
  64. தாய்லாந்து தங்கபுத்தர் சிலை புதிய செய்தி.
    இந்த புத்தர் சிலையைக்கொண்டு அருமையான ஒரு தத்துவத்தை சொல்லிவிட்டீர்கள்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  65. நல்ல கருத்து அண்ணா... அதிலையும் மிருகங்கள் வந்து தங்கி செல்லும் வரிகள் அற்புதம்.....

    பதிலளிநீக்கு
  66. புத்தர் சிலை பற்றிய செய்தியினையும் பின்னணியைம் படித்தேன். மனம் நிறைவானது. பல இடங்களில் வெறும் கல் என்று எண்ணிக் கொண்டு அருகில் சென்று புத்தர சிலைகளைக் கண்டுபிடித்த அனுபவம் எனக்கு நினைவிற்கு வந்தது. அவருடய போதனைகள் என்றென்றுக்கும் பொருந்துவனவாகும். நன்றி.

    பதிலளிநீக்கு
  67. சகோதரா தாய்லாந்து புத்தர் சிலைக்கதை எனது பயணக் கதையில் நான் எழுதியுள்ளேன்.
    மிக மகிழ்வாக இருந்தது. அதை இங்கு வாசித்த போது.
    நமது மன அழுக்குகள் அழிந்தால் தங்கப்
    புத்தர் வெளிவருவார். உண்மையே.
    பதிவிற்கு இனிய நன்றி.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
  68. அருமையான பதிவு. மீண்டும் புதிதாக படிப்பது போல் படித்தேன்.நல்ல கருத்துக்கள் கடைபிடித்தால் நல்லது.
    உடல் எனும் சத்திரத்தில் தங்கி செல்லும் மிருங்கள் கொடுத்து செல்லும் வியாதிகள் !
    சத்திரத்தில் மிருங்களை தங்க விடாமல் காக்க வேண்டும்.
    தங்க புத்தரை காண முயற்சிப்போம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.