பேசுங்கள் ! பேசுங்கள் ! ஆனால்...?


/// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///


அண்ணே... சாப்பிட்டியா...? உங்கள் → பதிவை (அருமையாச் சொன்னீங்க...!) ← படிச்சேன்... என்ன தான் நீங்க எழுதினாலும் மேடைப் பேச்சு என்றால், கொஞ்சம் பதட்டமா தான் இருக்கு...

வாம்மா... நல்ல பாட்டு... அதுக்காக நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்ன்னு சொல்ல மாட்டேன்... இன்னைக்கு தலைப்பை பார்த்தியா...? பெண்களுக்குச் சொல்லவா வேண்டும்...? மாப்ளே எப்படி இருக்கார்...?

ஏன் நீங்களெல்லாம் பேசவே மாட்டீங்களா...? நாங்க அரட்டை அடிச்சாலும் விசயம் இருக்கும்... சும்மா பேசின விசயத்தையே திரும்பத் திரும்பச் சொல்லி மத்தவங்களை வெறுப்பேத்த மாட்டோம்; பேச ஆரம்பிச்சோம்னா என்னென்ன பேசணும்கிறதை நல்லா யோசனை பண்ணிக்கிட்டு பேசுவோம்; க்கும்... என்ன பேசினாலும், மத்தவங்க எல்லாத்தையும் ஏத்துக் கொள்வாங்கன்னு எப்படி நீங்க எதிர்ப்பார்க்கலாம் ? ஸ்ஸு,டேய் அண்ணா!

ஹா... ஹா... அப்படிச் சொல்லு...! சுறுசுறுப்பான ஆரம்பம் தங்கச்சி... பெண்கள் நல்லா பேசுவாங்கன்னு சொல்ல வந்தேன்... என்னா கோபம்...! முதல்லே உட்காரு... சும்மா இங்கிட்டும் அங்கிட்டும் போய்கிட்டு இருக்கக் கூடாது; கொஞ்சம் அமைதியா, அவசரப்படாம, பதட்டமில்லாம பேசு... ரொம்பச் சந்தோசமா இருக்கியா...? இல்லை கவலையா இருக்கியா...? இந்த இரண்டுமே இருந்தா பேசாதே... யாராயிருந்தாலும் 'சாப்பிட்டியா'கிற கேள்வி, அம்மா தான் கேட்பாங்க ...ம்... அம்மா போல உன் பாசமான உண்மையான பேச்சை கேட்டதும் ரொம்பச் சந்தோசம்... ரொம்பப் படிச்சவ; பல மேடையிலே பேசின நீயே பயந்தா எப்படி ? (ஐ... ஐஸ் வச்சாச்சி...!)

படிப்புக்கும், பேச்சுக்கும் சம்பந்தமில்லேண்ணே... அவர் நல்லா இருக்கார், தொழில்லே தான் எல்லார்கிட்டேயும் நல்லவன்னு பெயர் எடுக்க முடியலே.

கோவிச்சுக்காதே... எல்லார்கிட்டேயும் ஒருத்தர் நல்லவர்னு பெயர் எடுத்தா அவர் தான் மிகப்பெரிய 'அயோக்கியன்'. ஏன்னா பல அயோக்கியங்க கிட்டே அவர் ஒன்னே ஒன்னு செய்யலேன்னா சாத்தியமே இல்லே... அது :
சமரசம்

வயிறு கொஞ்சம் சரியில்லை, அதான் டேய்...! வயிறு முட்ட சாப்பிட்டா எப்படிப் பேச முடியும்...? ஸாரி அண்ணே... எப்படி என் சமரசம்....! ஹா...ஹா...

அதானே பார்த்தேன்... தேவையில்லாத அபிநயத்தோடு பேச மாட்டியே... அண்ணி செய்த பலகாரம் ஏதும் சாப்பிட்டியா ? ரொம்ப நல்லாயிருக்குமே !

கூப்பிடவா...? பேச்சை அடிக்கடி மாத்தக்கூடாது... யாரையும் அவங்க இல்லாத போது சின்ன கிண்டலாக் கூட பேசக்கூடாது அண்ணே...!

சரிம்மா தாயே... இப்போ நான் எது பேசினாலும் தவறாகவே எடுத்துக்கிற நிலைமையிலே இருக்கே... பேச்சை சுவாரசியமாக மாத்தவும் தூக்கம் வராம பேசணுமில்லே... நல்லா வேற சாப்பிட்டிருக்கே...!

அது சரி, எனக்கொரு சந்தேகம் அண்ணே; ஒருத்தருடைய கருத்து எவ்வளவு பலவீனமா இருந்தாலும், தன்னோட கருத்து தான் வலிமையானது, உயர்ந்ததுன்னு நினைக்கிறவர்களைத் தெளிய வைக்க முடியுமா...?

சந்தேகம் தான் தங்கச்சி... அதையெல்லாம் ஒப்புக்கொள்றதை பலவீனம், கவுரவக்குறைவுன்னு நினைப்பாங்க... 'தான்' என்ற எண்ணத்தை அவங்களாலே அவ்வளவு எளிதா விட்டுட மாட்டாங்க...'தான்' என்பதை மறந்து ஒருத்தர் நம்மகிட்டே பேசணும்னு எதிர்ப்பார்த்தா, ஒரு நண்பரும் நமக்குக் கிடைக்க மாட்டாங்க... ஏன்னா எந்த மனிசனும் தோல்வியடைய விரும்ப மாட்டாங்க..., தோல்விய ஒப்புக்கிற மனப்பக்குவம் ஒரு சிலருக்கு தானிருக்கும்...! நம் கருத்துக்கு மாற்றுக் கருத்து உண்டுன்னு மட்டும் உணர்ந்தாலே போதும்... தன்னை அறிந்தவங்க, அவங்களைக் காயப்படுத்தியவங்களை விட்டு மௌனமாக விலகிப் போயிடுவாங்க...

Be Careful ! நான் என்னைச் சொன்னேன்...! ஹிஹி... மேலே நீங்க சொன்ன சமரசம் இப்போ தெளிவா புரியுது அண்ணே... குழந்தைகளுக்கும் இதைப் புரிய வைச்சா நல்ல நண்பர்களைப் புரிஞ்சு தேர்ந்தெடுப்பாங்க... சுருக்கமா சொன்னாலும் மனதிலே பதியுற மாதிரி சொல்லிட்டீங்க... நன்றி அண்ணே... சாப்பிட தோசை கிடைச்சா, சாப்பிடணுமே தவிர, ஓட்டைகள் எத்தனை இருக்குங்கிற ஆராய்ச்சி தேவையில்லைன்னு சொல்ல வர்றீங்க...

நான் எதுவும் சொல்லை... இந்தா நட்பைப் பற்றிய ஐந்து அதிகாரத்தையும் படி... சொல்ல வந்ததே வேறே... மேடைப் பேச்சைப் பற்றிக் கொஞ்சம் எழுதி, மறைந்த நண்பர் கவிஞர் அம்ஜத் பாரதியின் அன்றும் இன்றும் என்றும் பேசும் வரிகளை இணைக்கலாம்ன்னு நினைச்சேன்... நீயே செஞ்சிட்டு மெதுவா வா... உன்னாலே எனக்குப் பசிக்குது ! ஹிஹி... முதல்லே நேரத்தோடு பேச்சை ஆரம்பிக்கவும், முடிக்கவும் நாம தெரிஞ்சிக்கணும்...!

அதானே...! குறளைப் பற்றிச் சொல்லாம இருக்கிறீங்களேன்னு நினைச்சேன்... செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை... ஞாபகம் இருக்கட்டும்... ஹிஹி... குழந்தைகளுக்கும் சின்ன வயதிலிருந்தே மேடைப் பேச்சு பயத்தை நீக்கிட்டோம்னா, வீட்லே பேசுற மாதிரி, அங்கேயும் நல்லா பேசுவாங்க... என்ன பேசற இடம் நல்ல காற்றோட்டமா, வெளிச்சமா, சுத்தமா இருந்தா நல்லா இருக்கும்... அதே சமயம் பேசற இடத்துக்கு ஏத்தபடி பேச்சிலும்... ஏன் உடையிலும் கூட அலங்காரம் இருக்கணும்னு என்னோட ஆலோசனை... இப்போ நாம பேசின பேச்சிலே ஓரளவு இருக்கு... அதை நான் ஹைலைட் செய்றேன்...


படங்களை தொட்டுப் பார்க்கவும்... (உதவி : → https://wesmob.blogspot.in-நன்றி) கவிஞரை பற்றி அறிய இங்கே ← சொடுக்கி தொடர்வதற்கு முன் இந்தப் பதிவைப் பற்றி...

நண்பர்களே... நீங்கள் கருத்துரை மூலம் பேசுங்க... நன்றி...! வாழ்த்துக்கள்...!

புதிய பதிவுகளை பெறுதல் :


தொடர்புடைய எண்ணங்களின் வண்ணங்கள் சில :


முகநூல் மூலம் கருத்துக்களை பகிர :

கருத்துகள்

 1. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை. விலையேதும் இல்லை.

  ஆரம்ப வரிகளும் படமும் அழகு.

  பதிவு அருமையோ அருமை.

  இறுதியில் நல்லதொரு அறிவுரை.

  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. பேசுவதற்க்கான மிக சிறப்பான பகிர்வு நன்றி ஐயா....!

  பதிலளிநீக்கு
 3. உறவுகளை தக்க வச்சுக்க ஐந்து அதிகாரங்களை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ! பட்ங்களோட ட்ரிக் நல்லா இருக்கு..,

  பதிலளிநீக்கு
 4. கருத்தும் சொல்லிச் செல்லும் விதமும்
  தொழிற் நுட்பமும் அசத்துகிறது
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. பேசுவதைப்பற்றி நல்ல கருத்துக்களை புதிய முறையில் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 6. பேச்சுப் போன்ற
  பேச்சைப் பற்றிய
  உங்கள் பதிவு
  பேசுவது எப்படி எங்கே எவ்வாறு எனப் பேச வைக்கிறது
  எமது மனதிற்குள்ளும்..........

  பதிலளிநீக்கு
 7. நல்லாயிருக்கு பாலண்ணா, உங்க பேச்சும் நடையும் (எழுத்து நடை)

  கணினியில் புதுப்புது உத்திகளை தெரிந்து கொண்டு பதிவுகளில் பயன்படுத்துவது அழகு. அவற்றையும் அப்பப்போ எங்களுக்கு சொல்லித் தரக் கூடாதா...? 'சமரசம்' கழன்று கழன்று விழுவது நிஜ வாழ்விலும் பொருத்தமானதாகவே தோன்றுகிறது.

  எதைச் சொன்னாலும் திருக்குறளைத் தொட்டுச் செல்வது 'தமிழ் மறை' என்பதை நிரூபிப்பதாய்.

  பதிலளிநீக்கு
 8. நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...ஆஹா அருமையான பாடல்.மேலும்அப்பா,அம்மா ஸ்தானத்தில் உறவுகளை விசாரிப்பதன் உண்மை இப்போதுதான் புரிகிறது தெளிவாக விளக்கியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு
 9. ஆண்டவனிடம் எப்படிப் பேச வேண்டுமென்பது மட்டும் மஞ்சள் நிறத்தின் அடர்வில் புரியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. சரிதான்... பேச்சுக் கலை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்று. படங்கள் அழகு. (தொட்டும் பார்த்தாச்! :) நன்றி!

  பதிலளிநீக்கு
 11. இனிமையாகப் பேசக் கற்றுக் கொண்டு விட்டால் எதனிடமும் - ஆடு மாடு அடுத்த வீட்டு மா மரம் உள்பட- பேசலாம்!.. நல்ல பதிவு!.. நல்ல வழிகாட்டுதலுக்கு நண்பருக்கு நன்றி!..

  பதிலளிநீக்கு
 12. பதிவு அருமை , அதைவிட படங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. பேசுவதில் இத்தனை பக்குவம் உள்ளதா...நன்றி

  பதிலளிநீக்கு
 13. ஒரு கதா காலாட்சேபம் கேட்ட மாதிரியே இருக்கு நண்பரே...

  ரசிக்கும்படியான நடை அழகு...

  பதிலளிநீக்கு
 14. அண்ணே உங்கள் கருத்தை நால்லாத்தான் சொல்றீங்க .
  கவிஞன் பிறக்கிறான் .பேச்சாளன் உருவாகிறான் தன முயற்சியால்
  எழுத்தாளன் சிந்தனையால் ,பெற்ற கல்வியால் தன்னை உருவாக்கிக் கொள்கிறான் அவனுக்குள்ளே அமைந்துள்ள உந்துதல் சக்தியால் ..அவன் மிளிர இக்காலத்தில் மற்றவர் அவனை உத்வேகப்படுத்துதல் அவசியமாகின்றது.

  பதிலளிநீக்கு
 15. பேசுங்க ... பேசுங்க...புரிந்து,புரியும் படி பேசுங்கள் பேஸ் பேஸ் நன்னா சொன்னிங்க போங்க.pls see the nilamakal comment

  பதிலளிநீக்கு
 16. பேசுங்கள் பேசுங்கள் தனபால் நீங்கள் பேசுங்கள் பேசுங்கள், இனிமையாக இருக்கிறது...!

  பதிலளிநீக்கு
 17. (இன்று ஏதும் பரபரப்பில் இல்லையே... நன்றி...)


  என்று தாங்கள் கூறிய உள்அர்த்தக்தை புரிந்துக்கொண்டு பதிவை படித்தாயிற்று...

  நாம் பேசக்கூடிய ஒவ்வொறு வார்த்தைக்கும் நாம்தான் பொருப்பு...

  அப்படியிருக்கையில் நம்முடைய பேச்சு அனைவரையும் பண்படுத்துவதாக இருக்கவேண்டுமே தவிர புண்படுத்துவதாக இருக்ககூடாது...

  அழகிய அர்த்தமுள்ள பதிவு...
  நன்றி....

  பதிலளிநீக்கு
 18. நான் எப்போதும் பரபரப்புதான்... தற்போது பரபரப்பாக 9.00 மணிக்கு கையெழுத்து போட்டாக வேண்டும்...
  கிளம்பியாச்சி

  பதிலளிநீக்கு
 19. ஒருவருடைய பேச்சு பல விளைவுகளை அவருக்கும் மற்றவருக்கும் ஏற்படுத்துகிறது. எப்படி பேச வேண்டும் என்பதை உங்களுக்கே உரித்தான பாணியில் சொல்லிவிட்டீர்கள்.
  வலைப் பக்கத்தில் பல மாயா ஜாலங்கள் செய்கிறீர்கள். கண்ணையும் கருத்தையும் கவர்கிறது

  பதிலளிநீக்கு
 20. /// சொல்லென்றும் மொழியென்றும் பொருளென்றும் இல்லை... பொருளென்றும் இல்லை... சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை விலையேதும் இல்லை...///

  அருமையான கருத்தாழம் மிக்க பாடல் வரிகள். அருமையானதொரு பதிவு.வாழ்த்துகள் !!!

  பதிலளிநீக்கு
 21. அடுத்த பதிவுக்கு ஒன் லைன் கிடைச்சாச்சு

  பதிலளிநீக்கு
 22. பேசுங்க ... ... பேசுங்க ... ... பேசிக்கிட்டே இருங்க! திண்டுக்கல் தனபாலன் சொன்னது போல் புரிந்து பேசுங்கள். புரியும்படி பேசுங்கள்.

  பதிலளிநீக்கு
 23. உங்கள் பதிவு கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 24. பேச்சை பற்றி பதிவிட்ட உங்களின் திறமையை பற்றி பேச எனக்கு பேச்சே எழவில்லை

  சனங்களுக்கு புரியும் வகையில் வசனங்களை அமைத்திருப்பது அருமை.

  திருக்குறளின் நுட்பங்களை ஒவ்வொரு பதிவிலும்
  எளிமையாக,நகைச்சுவையாக தருவது உங்களுக்கு
  மட்டும் உள்ள தனித்திறமை

  கண்ணை கவரும் கண் சிமிட்டும் உயிரோட்டமான
  படங்கள் மென் மேலும் உங்கள் பதிவிற்கு பெருமை சேர்க்கின்றன

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 25. பேசுவது பற்றி நல்ல கருத்துக்களை மிகவும் அருமையாக எழுதி(பேசி)யிருக்கிறீங்க சார். உங்க வலைப்பக்கமும் அழகாக இருக்கு.
  வாழ்த்துக்கள்.நன்றி.

  பதிலளிநீக்கு
 26. பதிவில் ஜோடனைகள் அருமை. பதிவின் கருத்துகள் அதைவிட அருமை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 27. 'பேசுங்க, பேசுங்க...' என்று தலைப்பில் சொல்லிவிட்டு, பின் எங்கெங்கு எப்படியெப்படி பேச வேண்டும் என்று சொல்லியிருப்பது நன்றாக இருக்கிறது.
  சந்தோஷமாக இருக்கும்போதும், கவலையாக இருக்கும்போதும் பேசக்கூடாது என்பது நல்ல அறிவுரை.

  அதென்ன தனபாலன், புதுபுது உத்திகளால் எழுத்துக்களை ஓட, ஆட, கீழே விழ வைக்கிறீர்கள்!

  உங்கள் எழுத்துக்களுடன் கூட இவைகளையும் ரசிக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 28. சுவாரஸ்யமான கட்டுரை...

  குறிப்பாக எல்லோருக்கும் நல்லவராக வாழமுடியாது. அது நாடகமாகி விடும்.
  அதுபோல் தின்னக் கொடுத்த தோசையில் ஓட்டை எத்தனை என்று எண்ணிப்பார்க்கக் கூடாது.
  பஞ்ச் பேச்சு.... வாழ்க....

  பதிலளிநீக்கு
 29. பேசுவதற்கான மிக சிறப்பான பதிவு அண்ணா பாப்பா படம் ஸுப்பர்

  பதிலளிநீக்கு
 30. அருமையான பதிவு சார் ! பேச்சு என்பது உங்களது தலை எழுத்தையே மாற்றும், அதுவும் எவரிடத்தில் எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் சொன்னது நன்றாகவும், உபயோகமாகவும் இருந்தது. மிக்க நன்றி, தொடருங்கள் தொடர்கிறோம்....

  பதிலளிநீக்கு
 31. பேசினீர்களா தனபாலன் சார்!... அருமை!
  நான் கேட்டுக்கொண்டே......தான் இன்னும் இருக்கின்றேன்.

  பேசுங்கள் பேசுங்கள் இன்னும் பேசுங்கள்...:)

  நல்ல விடயங்கள், தொழில்நுட்ப அசத்தல்கள் அத்தனையும் பிரமாதம்.
  வாழ்த்துக்கள்!

  த ம.14

  பதிலளிநீக்கு
 32. அருமையான பயனுள்ள பகிர்வு!!. படங்களும் அழகு. எவ்வளவு அழகான ஜோடனைகள்!!. எழுத்துக்கள் விழுவதும் எழுவதும் அழகாக இருக்கிறது. எப்படிச் செய்தீர்கள் என்று சொல்லிக் கொடுங்க.

  பதிலளிநீக்கு
 33. படங்களை தொட்டுப்பார்த்தேன் அருமை.
  பேச்சுக்கலை தெரிந்து விட்டால் வாழ்க்கை ரதம் நன்கு ஓடும்.
  அருமையாக சொல்லிவிட்டீர்கள்.
  பேச்சை ஆரம்பிக்கவும், முடிக்கவும் தெரிந்து கொள்வது மிக மிக முக்கியம் அதை சொன்ன விதம் அருமை.
  நல்ல பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 34. பேச்சு சூப்பராக இருக்கு,தனபாலன் சார்.

  பதிலளிநீக்கு
 35. ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க.. அம்மாவிடம் எப்பிடி பேசணும். அப்பாவிடம் எப்பிடிப் பேசணும்னு சொன்னது ரொம்பப் பிடிச்சது சகோ.. நன்றி..:)

  பதிலளிநீக்கு
 36. சுவாரஷ்யமான பதிவு தனபாலன்...!
  அழகான பேச்சு!
  உங்களது வித்தியாசமான மொழிநடை அசத்தல்!

  பதிலளிநீக்கு
 37. "மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும்" என்று மனம் சந்தோஷமாக பாடச்சொல்கிறது நண்பரே உங்களின் இந்த பதிவு.
  பேசச்சொல்லிவிட்டு அதற்காக 'செவிச்செல்வத்தை' பயன்படுத்தச் சொன்ன விதம் மிகவும் அருமை.
  யாகாவாராயினும்... அப்படின்னும் தாடிக்கார புலவன் சொல்லியதும் குறிப்பிட்டு இருக்கலாமே நண்பரே?
  (முதல் படத்தை பார்த்ததும் அந்த விபத்தும் அதன் கோரமும்தான் மனதில் ஓடியது, ஏன் என்று தெரியவில்லை)

  பதிலளிநீக்கு
 38. மிக நல்ல பயனுள்ள கட்டுரை.

  கனியிருக்க காய் கவர்ந்தற்று என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள்.
  அதன் படி பேச நானும் முயற்சிக்கிறேன். (ரொம்ப கஷ்டம் தான்.)

  அருமையான பதிவுக்கு மிக்க நன்றி தனாபலன் அண்ணா.

  பதிலளிநீக்கு

 39. செய்வதை, சொல்வதைச் சிறப்பாக வெளிப்படுத்தும் உங்கள்திறமைக்கு ஒரு சபாஷ்.

  பதிலளிநீக்கு
 40. பேச்சுத்திறமையும் பெரியோர்களிடம் எப்படி பேசவேண்டும் என்பதையும் பெருமையாக சிறப்பாக சிந்திக்க வைத்த பதிவு வாழ்த்துக்கள் தனபாலன் சார்!

  பதிலளிநீக்கு
 41. யார் யாரிடம் எப்படிப்பேசுவது என்பதான குறிப்பு ஒவ்வொருவரும் கடைபிடிக்கவேண்டியது.

  பதிலளிநீக்கு
 42. யார் யாரிடம் எப்படிப்பேசவேண்டும் என்பதான கருத்து அனைவரும் கடைபிடிக்கவேண்டியது.

  பதிலளிநீக்கு
 43. அருமையா பேச்சுக்கலை பற்றி அழகழகா எடுத்து சொன்னீங்க! இடையில் கொஞ்சம் தொழில்நுட்பத்திலும் புகுந்து விளையாடி இருக்கீங்க! சூப்பர் பதிவு !நன்றி!

  பதிலளிநீக்கு
 44. பேச்சுக் கலையை அருமையாக பகிர்ந்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 45. பேசுங்க சொல்லிட்டு இந்த சமரசம் எங்கே போகுது என்று பார்த்தேன் எப்படி பேசினால் சமரசம் வரும் என்பதை சரியாக சொல்லிச்சென்றீர்கள். சிறப்பான பகிர்வுங்க.

  பதிலளிநீக்கு
 46. வணக்கம்
  தனபால் (அண்ணா)

  அழகான மொழிநடையில் அனைவருக்கும் விளங்கும் வகையில் பதிவு அமைந்துள்ளது ஒரு மனிதன் யாருடன் எப்படி பேச வேண்டும் என்ற கருத்தையும் மிக அழகாக சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 47. நல்வ தொழில் நுட்பத்தில் பேச்சு பிரமாதம் டி டி.
  சிறந்த வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
 48. நான் கூட நினைத்தேன் என்னடா இவ்வளவு பெரிய பதிவாக இருக்கிறதே குற'ளை'க் காணோமே என்று :-)

  பதிலளிநீக்கு
 49. என்ன, எங்கு, எப்படிப் பேச வேண்டும் என்று சொல்லியிருப்பது அருமை. காலை முதல் இணையம் படுத்தல். ரஞ்சனி நாராயணன் சொல்லியிருக்கும் எழுத்துகள் ஆடும், கீழே விழும் புதுமையை அனுபவிக்க முடியவில்லை!

  பதிலளிநீக்கு
 50. //புரிந்து பேசுங்கள்;புரியும்படிப் பேசுங்கள்//

  ரத்தினச் சுருக்கமாக,புரிந்து,புரியும்படிச் சொல்லி விட்டீர்கள்

  பதிலளிநீக்கு
 51. விட்டலாச்சாரியாவின் உலகிற்குள் புகுந்த உணர்வு அய்யா.மகிழ்ச்சி நன்றி

  பதிலளிநீக்கு
 52. அடடா...அடடா.. பதிவைப் படிச்சு மீ எங்கேயோ போயிட்டேன்ன்ன்ன்... அதானே.. பேசுங்க.. பேசுங்க.. பின்னூட்டத்தில் பேசுங்க:))... தெளிவாப் பேசுங்க:)).. நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 53. அடிக்கடி அங்கின இங்கின பல போர்ட் பலகைகள்.. கழண்டு கழண்டு விழுகுது.. கொஞ்சம் பார்த்து இறுக்கமா கட்டி வையுங்கோ:).. நான்,,, விழுகுதே பிடிப்பமே என எண்ணுவதுக்குள் அது கீழ விழுந்து போயிடுது:).

  பதிலளிநீக்கு
 54. கருத்துக்களைச் சொல்லியிருக்கிற விதமும், பதிவின் தொழில்நுட்ப சிறப்பும் பாராட்டுக்குரியது.உங்களிடம் நிறைய கற்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 55. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை என்பது மட்டுமில்லை.விலையறிந்த சொற்களும் இங்கே நிறைந்து காணப்படுவதாக.சிலரது மேடைப்பேச்சு கட்டிப்போட்டுவிடும் நம்மை/

  பதிலளிநீக்கு
 56. சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பேசாற்றாலை ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்வது அவசியம் !

  நல்லதொரு விழிப்புணர்வு பதிவு


  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 57. ஓவ்வொருவரிடமும் எப்படி பேச வேண்டும் என்று மிக அழகாக சொல்லிட்டீங்க
  கடைசியில் ஆண்டவனிடம் பக்கத்த்தில் உள்ள மஞ்சள் எழுத்து சரியாக படிக்க முடியல கலரை மாற்றுங்கள்.

  பதிலளிநீக்கு
 58. அருமையான பதிவு,..உண்மைதான் ஒரு சிலரை தெளிய வைக்கவே இயலாது... கருத்து வேறுபாடுகள் எவ்வளவு இருந்தாலும் பல நேரங்களில் அனுசரித்தே செல்ல வேண்டி உள்ளது..

  பதிலளிநீக்கு
 59. படங்களையும்,எப்படி ஒருத்தரிடம் பேசவேண்டும் என்பதையும் ரசித்தேன் சகோ...

  பதிலளிநீக்கு
 60. வணக்கம் பாலாண்ணா... எப்படிப் பேச வேண்டும் என்று மிகவும் அழகாக சொல்லியிருக்கிறீங்க... செல்வத்துள் செல்வம்... அருமையான ஞாபகமூட்டல்.... இது மனதுக்குள் ஒர் புதிய பதிவுக்கு விதை போட்டது. பகிர்வுக்கு மிக்க நன்றி...

  பதிலளிநீக்கு
 61. பேசுவது நமக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இனிமையா இருக்கணும்னு அழகா சொல்லியிருக்கீங்க..


  அந்த "சமரசம்" தொப்புன்னு விழுற ஐடியா சூப்பர்..

  பதிலளிநீக்கு
 62. பதிவு அருமையான பகிர்வு என்னைப்போல் லொட லொட என பேசுபவர்களுக்கு நல்ல அறிவுரை ஜோடனைகள் வெகு ஜோர் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 63. நவரசங்களும் கலந்து நயமாக வழங்கி வருகிறீர்கள்...பேச்சு என்பது வாழ்க்கைக்கு ஒரு முக்கியமான ஆயுதம்தான்..

  பதிலளிநீக்கு
 64. வாய்ப் பேச்சுக்கு
  அழகான வேலி
  தங்கள் கைவண்ணத்தில்
  நான் கண்டேன்!
  நம்மாளுகள்
  பேச்சுக்கு
  முதன்மை இடம் தருவார்களே!

  பதிலளிநீக்கு
 65. தமிழ் உறவுகளுக்கு வணக்கம்!

  பேசுங்கள் எனும்பதிவைப் படித்துப் பார்த்தேன்!
  பெருமைதரும் வழிவகைகள் மணக்கக் கண்டேன்!
  மாதுங்கள் மனத்துள்ளே ஒட்டா வண்ணம்
  மதச்செருக்கை தலைச்செருக்கை அகற்றி வாழ்க!
  வீசுங்கள் தென்றலென! பூக்கள் பூத்து
  விளைக்கின்ற இன்பமென! சொற்கள் வெல்லும்!
  பூசுங்கள் மனிதத்தை! பூமி பந்து
  புல்லரித்துப் புகழ்பாடும்! மொழியைக் காப்பீா்!

  தமிழா்களே! தமிழ் மொழியைக் காப்பீா்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

  பதிலளிநீக்கு
 66. உரிமையோடு பேசறேன் , இது அருமையான பதிவு.

  பதிலளிநீக்கு
 67. யாரோடு எப்படிப் பேசணும்ங்கற விளக்கம் அருமை தனா சார்! உங்கள் ப்ளாக்கில் காணப்படும் தொழில்நுட்ப விஷயங்கள் வியக்க வைக்குது!!

  பதிலளிநீக்கு
 68. அருமையான பகிர்வு !..பேசப் பேச மனதில் இன்பம் பொங்கும் எம்போல்
  அகதி வாழ்க்கை வாழ்பவர்கள் தான் அதிகம் இதன் வலி உணர்ந்தவர்களாக
  இருக்க முடியும் என நான் நினைக்கின்றேன் .எமது பேச்சைக் கேட்பதற்கே எம் குழந்தைகள் தவமிருக்கும் இக்கலாம் முடிவதெப்போ !!!!....துணிச்சலான பேச்சை வீட்டில் வரவழைத்தால் மேடைக் கூச்சம் தன்னால் தெளியும்
  என்ற இந்த உண்மையை அனைவரும் அறிதல் நன்று .வாழ்த்துக்கள் சகோ //


  மன்னிக்க வேண்டும் சகோதரா அவ்வப் பொழுது தங்கள் ஆக்கங்களையும்
  நான் படித்துக்கொண்டே தான் வருகின்றேன் மிகுந்த நெருக்கடிகளுக்கு
  மத்தியில் என் எழுத்துப் பயணம் நகருவதாலே உங்களுக்கு மட்டும் அல்ல என் வலைத்தள உறவுகள் பலருக்கும் என்னால் கருத்துரை இட முடியவில்லை என்பதும் எனக்கும் மனதிற்கு வருத்தமானதொரு விடயமாக உள்ளது .தயவு
  கூர்ந்து எனது சூழ்நிலையைப் புரிந்து கொள்ளுங்கள் விரைவில் என்னால்
  முடிந்தவரை முன்போல் அனைவருக்கும் கருத்திடுவேன் .மிக்க நன்றி சகோ மனதில் பட்டதைத் தெரிவித்த தங்கள் அன்பிற்கு !

  பதிலளிநீக்கு
 69. விழும் வார்த்தைகள் - நுட்பம் அட்டகாசம்.

  பேசும் விதம் - bookmark செய்திருக்கிறேன். கட்/பேஸ்ட் செய்ய முடியவில்லையே?

  பதிலளிநீக்கு
 70. அரசியல்வாதி சகோதரராகவோ சகோதரியாகவோ நண்பராகவோ இருந்தால் எப்படிப் பேசுவது?

  பதிலளிநீக்கு
 71. பேசும் கலையை அழகாகக் கற்றுத்தந்த பதிவுக்கு நன்றி தனபாலன். யாரிடம் எப்படி எந்த மனநிலையில் எந்தமாதிரி பேசவேண்டும் என்று தெரியாமல்தான் வாழ்க்கையில் பல பிரச்சனைகள் உருவாகின்றன. பல சூழல்கள் சிக்கலாகின்றன. அதை நேர்த்தியாய் உரைத்தவிதம் நன்று. பாராட்டுகள் தனபாலன்.

  பதிலளிநீக்கு
 72. Hai Rajeswari. Today its just happened to see your blog. Awesome.

  I would like to talk with you a lot.
  If possible
  call me at 9965927772

  If time permits just give look at
  www.atchayapaathiram.com

  பதிலளிநீக்கு
 73. Hai Mr.Thiudukkal Thanapalan Sir. T

  I would like to talk with you a lot.
  If possible
  call me at 9965927772

  from
  www.atchayapaathiram.com

  பதிலளிநீக்கு
 74. கருத்துள்ள அருமையான
  பகிர்வுகளும் படங்களும் ரசிக்கவைத்தன..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு
 75. வாழ்த்துக்கள் தனபாலன். வலைச்சரத்தில் உங்களைப்பற்றி அழகாய் குறிபிட்டு இருக்கிறார் வெற்றிவேல்.

  பதிலளிநீக்கு
 76. பேசுவதற்கும் ஒருஇலக்கு இலக்கணம் வேண்டும். நன்னூல் இலக்கணம் இல்லை. உங்கள் பதிவு அருமையான இலக்கணத்தைத் தாங்கி நிற்பதுபோலத் தோன்றுகிறது. மனதில்த் தோன்றினாலும்
  இவ்வளவு செவ்வனே எழுதுவது உங்களைத்தான் மிகவும் பாராட்ட வேண்டும். தெரியலே.சிலஸமயம் ப்ளாகிற்கு கமென்ட் எழுதினால் ஏதேதோ இடையூறு வந்து விடுகிரது.
  அனுபவம் போதவில்லை. ஸரியாகத் தமிழில் யார் சொல்லிக் கொடுப்பார்கள்.
  பதிவு அருமை. அன்புடன்

  பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தற் பொருட்டு. (குறள் 784)

நட்புச் செய்துகொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அல்ல. மிகுதியாகத் தவறு செய்யும்போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

 


சுய விவரம் | தொடர்பு படிவம் | பிரபலமான 10 பதிவுகள் | குறளின் குரல் மற்றும் வலைப்பூ உருவாக்கம் பற்றிய பதிவுகள் | அனைத்திற்குமான இணைப்பு :-

வணக்கம்

பக்கக்காட்சிகள் 18/10/2011 முதல் :வாருங்கள் நண்பர்களாவோம் :


சமூக வலைத்தளங்கள் மூலம் இணைந்து தொடர :